• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கஜேந்திரனால் ஏமாற்ற பட்டு ,நடுத்தெருவில் ஜீவனாம்சமோ ,இருக்க இடமோ இல்லாமல் தொரத்தி அனுப்ப பட்ட சிவகாமியை காப்பாற்றி ,வெற்றிக்கு 10 வயது ஆகும் வரை துணை இருந்தது பவானியின் குடும்பம் தான் .பவானிக்கு இன்னொரு அன்னையாய் மாறியது சிவகாமி.வெற்றி மாறனை தூக்கி வளர்த்தது பவானி .சிவகாமியின் வாழ்வு அதிகேசவனோடு தொடங்கவும் ஏற்பாடு செய்தது பவானியின் குடும்பம் .

பாட்ஷா படத்தில் வரும் டயலொக் ,"கடவுள் நல்லவர்களை ரொம்ப சோதிப்பான் ,ஆனா கை விட மாட்டான் ."அது சிவகாமியின் வாழ்வில் நடந்தது .கஜாவிடம் சிக்கி வாழ்வை இழந்தவருக்கு ஆதிகேசவன் என்ற உண்மையான ஆண்மகன் கணவனாய் வந்து வாழ்வை வசந்தமாக்கினார் .கடவுள் சோதித்தார் ஆனால் கை விடவில்லை .

"வா ...உட்காரு ....இவர் தெரியும் தானே ....ஞாபகம் இருக்கா ...வெற்றியின் அப்பா ஆதி என் கணவர் ."என்றவரை கண்டு ஆதியும் ,வெற்றியும் புன்னகை புரிந்தனர் .

வெற்றிக்கு உயிர் கொடுத்தது வேண்டும் என்றால் கஜாவாக இருக்கலாம் ஆனால் அவர் தந்தை யார் என்று கேட்டால் அடுத்த நொடி அந்த குடும்பத்தின் பதில் ஆதி என்பது தான் .சில சொந்தங்களை ரத்த சம்பந்தம் நிர்ணயிப்பது இல்லை .

"சொல்லு எல்லோரும் எப்படி இருக்கீங்க ......."என்றார் சிவகாமி உபசரிப்புகளுக்கு பின் .

"நல்லா இருந்தா உங்க உதவி தேடி ஏன் அத்தை வர போறேன் ?"என்றார் பவானி .

"எதை சொல்றே ...சோனா வெறி பிடித்து உன் மகளை torture செய்ததை சொல்றியா ...இல்லை அக்ரீமெண்ட் விஷயமா ....இல்லை சுமனா ...இதில் எது ?"என்றார் சிவகாமி அலட்டி கொள்ளாமல்

அதிர்ந்து தான் போனார்கள் பவானியும் ,ரகுவும் ."உங்களுக்கு எப்படி ....."என்றார் பவானி திகைப்பு நீங்காதவளாக .

"அநியாயத்தை எதிர்க்க எப்பொழுதுமே கடவுள் நேரில் வர மாட்டார் பவா ....சில மனிதர்கள் தெய்வமாய் இருந்து தான் இந்த வேலையை செய்வார்கள் .....உன் குடும்பம் என்னை மனதளவில் உடையாமல் ,வாழ்க்கை வெறுத்த சமயத்தில் அடைக்கலம் கொடுத்து ,மறுவாழ்வினை கொடுத்தது போல் ,மரகதம் அக்கா தேவையான பணஉதவியினை ,பக்க பலமாக அவர்கள் பேரன் விஜய் எங்களுக்கு மறைமுகமாக உதவி கொண்டு தான் இருக்கிறார்கள் .....உன் மகளையும் ஒரு வருடமாய் காப்பாற்றுவது விஜய்யும் அவன் நண்பர்களும் தான் ....அவர்களையும் எங்களையும் மீறி தான் உன் மகளை யாருமே நெருங்க முடியும் .....அவளுக்கே தெரியாமல் அவளை சுற்றி பல அடுக்கு காவல் இருக்கும் போது எதற்கு பவானி எப்படி கவலை படுறே .....நாங்க எல்லோரும் இருக்கோம் ...."என்றார் சிவகாமி பவானியின் கைகளை தட்டி கொடுத்தவாறு .

பெருமூச்சு விட்ட பவானி ,"முழு விஷயம் தெரியாது தான் என்றாலும் விஜய் தம்பி ,அவர் நண்பர்கள் ,சூர்யா எல்லோரும் காப்பாற்றுவது இப்போ தான் தெரிய வந்தது .இந்த சோனா ஏன் இப்படி எல்லாம் ....பெண்ணாய் இருந்து இன்னொரு பெண்ணின் வாழ்வை ..........."என்று முகத்தை மூடி அழுதார் .

"ச்சூ ...என்ன பவானி நீ .....அவளை எல்லாம் பெண் என்று சொல்லி பெண்ணினத்தை கேவல படுத்தாதே .....அவ ஒரு psycho ......தானும் வாழாது ,மற்றவர்களையும் வாழவிடாதவள் ....இல்லை என்றால் விஜய் போன்ற உயர்ந்த மனிதன் கிடைத்தும் கண்டவனோடு அலைவளா ????....மதுராவிற்கு எதுவும் ஆக விடமாட்டான் விஜய் அதை மட்டும் மனதில் வை ......."என்றார் ஆதி .

"பிரச்சனையே அது தான் ....சோனாவிடம் இருந்து மதுராவை விஜய்யும் ,சூர்யாவும் காப்பாற்றி விடுவார்கள் .ஆனால் இந்த இருவரிடம் இருந்து என் மகளை எப்படி காப்பாற்றுவேன் ???/கெட்டவர்களாய் இருந்தால் மோதலாம் ....ஆனால் இருவருமே என் மகளின் உயிரை ,மானத்தை காப்பாற்றும் கடவுள் ....."என்றார் பவானி வேதனையுடன் .

"இதில் என்ன இருக்கு ????அவங்க கிட்டே இருந்து மதுராவை காக்கும் அவசியம் என்ன ஏற்பட்டது இப்போ .....எதற்கு இப்படி எல்லாம் பேசறே ?"என்றார் சிவகாமி

"மகளை காப்பாற்றினால் நன்றி கூறலாம் ....வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கலாம் ....தெய்வமாய் கூட வணங்கலாம் ...ஆனால் இதற்காக எல்லாம் மகளையே தூக்கி கொடுக்க முடியுமா என்ன ?????விஜய்யும் ,சூர்யாவும் மதுராவை விரும்பறாங்க .....விஜய் குழப்பத்தில் இருப்பது போல் இருக்கு ....சோனா மனைவியாக ஊர் உலகத்திற்கு முன் இருக்கிறாள் .....சூர்யாவிற்கு அப்படி எல்லாம் தடை இல்லை ....அவனை தடுக்க எங்களால் முடியவில்லை என்பதற்கு பதில் தடுக்கும் எந்த ஒரு வழியையும் அவன் வைக்கவில்லை ...."என்றவர் சூர்யா செய்த ட்ரான்ஸபெர்,மகளுக்கு வேலை போன்றவற்றை சொல்லி முடித்தார் .

"நீ தேவை இல்லாம குழம்பறே என்று தோன்றுகிறது பவா ....ரெண்டு பேரையும் எனக்கு மிக நன்றாகவே தெரியும் .....ரெண்டு பேரும் ஜெம் ஆப் எ பெர்சொன்ஸ் .....ரொம்ப நல்லவங்க .....பெண்களை மதிப்பவங்க ....."என்ற ஆதிதியை நிறுத்தினார் பவானி .

"அவங்க ரொம்ப நல்லவங்க .....எப்படியோ இருந்துட்டு போகட்டும் ....ஆனால் என் மகளுக்கு ரெண்டு பேருமே வேண்டாம் ....."என்றார் பவானி உறுதியாக .

"பவானி !......என்னமா .....இவர்கள் ரெண்டு பேருக்கும் என்ன குறை ????"என்றார் சிவகாமி பவானியின் போக்கு அறியாதவராக .

"குறை எல்லாம் இல்லை ....ஆனால் ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது .....ஒருத்தருக்கு மனைவி உயிரோடு இல்லை ...இன்னொருத்தருக்கு மனைவி என்றே சொல்ல தகுதி இல்லாதவள் மனைவி ......"என்றார் பவானி .

"இதில் இவர்கள் தவறு என்ன இருக்கு ?"என்றார் சிவகாமி
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"தவறு இவர்கள் மேல் இல்லை ....சமுதாயத்தின் மேல் .....ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் இவர்களுக்கு எந்த பட்டபெயரும் வருவது இல்லை ....".ரெண்டாம் தாரம்" என்ற பெயர் பெண்ணிற்கு மட்டும் தான் .....உங்களுக்கு ஏற்பட்ட குத்தல் பேச்சுக்களை பார்த்து வளர்ந்தவள் அத்தை நான் .....ஆதி மாமாவை யாரும் விரல் நீட்டி அப்படி சொன்னது இல்லை ...அப்படி சொன்னதை கேட்டு நீங்க எத்தனை முறை கண் கலங்கி நின்று இருந்தீர்கள் என்று கூட இருந்து பார்த்தவள் நான் ....மேடை போட்டு பெண் சுதந்திரம் ,பெண்ணியம் பேசிடலாம் ...ஆனால் இது போன்ற பட்டப்பெயர்கள் என்றும் நீங்குவதில்லை .....இப்போ ஒரு திருமணத்திற்கு சென்றேன் ...மணமகளின் அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து விட்டு இருக்க ,மனைவியின் தங்கையையே மணந்து இருந்தார் .இதற்கும் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் ,மனமகளை விட 5-6 வயது மட்டுமே அதிகம் ....ஆனால் அங்கு இருந்தவர்கள் அந்த மனைவியை எப்படி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா ?????இவங்க தான் உயர்திரு ------ரெண்டாம் மனைவி .....மனைவியை இழந்தது அந்த ஆண் ....ஆனால் ரெண்டாம் தாரமாய் மணந்த அந்த பெண்ணுக்கு தான் பட்ட பெயர் ......நீங்க எல்லாம் பட்ட கஷ்டத்தை என் மகள் பட ,அதை பார்க்க நான் தயாராய் இல்லை .....என் மகளுக்கு இவர்களில் இருவரில் யாரை மணந்தும் தியாகம் செய்ய வேண்டிய கடமை இல்லை .....இதனால் என் மகளுக்கு யாரும் சிலையும் வைக்க போவது இல்லை ......"என்றார் பவானி ரௌத்திரமாக .

இதற்கு பதிலை அவர்களால் சொல்ல முடியவில்லை .சமுதாயத்தின் நிதர்சனம் இது தானே ....சமுதாயமும் மக்களும் சில விஷயங்களை தவிர்த்து தேவை அற்ற ஒன்றுக்காகவே போராடுகின்றனர் என்பது தான் உண்மை .

சபரிமலைக்கு 18-60 வயது வரை போகலாம் என்று வாதிடுபவர்கள் ,பெண்களின் மாதவிடாய் காலத்தில் அனைத்து அலுவலங்ககளிலும் ஊதியதோடு கட்டயா விடுமுறை என்று போராடுவதே இல்லை ....இதற்கும் அனைத்து வீட்டுலயும் பெண்கள் இருக்கிறார்கள் ....அவர்கள் அந்த மாத நாட்களில் படும் துன்பத்தை "ஜஸ்ட் லைக் தட் "என்று ஒன்றும் இல்லாததாக ஊதி தள்ளி விடுகிறார்கள் .அனைத்து போது இடங்களிலும் இலவச நாப்கின் என்று போராட வில்லை .பல்வேறு போட்டி தேர்வுகளில் பெண்களுக்கு வயது வரம்பு சலுகை என்று போராடவில்லை .வெளிநாடுகளில் கற்பழிப்பு போன்ற குற்றங்களை விசாரிக்க "ஸ்பெஷல் victims யூனிட் "என்ற போலீஸ் டிபார்ட்மென்ட் ஒவ்வொரு நகரத்திலும் செயல் படும்.அது இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும் தேவை என்று போராடவில்லை .ஒவ்வொரு நகரத்திலும் pedhophiles ,sexual offenders லிஸ்ட் கொண்ட வெப்சைட் ,அந்த அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் தொடர்பான குற்றவாளிகளின் டீடைல் பிரசுரிக்க படுவதில்லை .ஜாதி ,மதம் பார்த்து தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சில இடங்களில் பதிவு செய்ய படுகிறது .இந்தியாவில் இப்படி கொண்டு வந்து குடும்பங்களை வக்கிரம் பிடித்த மனித மிருகங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று போராடவில்லை
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கணவன்மார்கள் கட்டாயமாக தங்கள் மனைவிக்கு மாதம்தோறும் கை செலவுக்கு பணம் தர வேண்டும் .அப்படி இல்லை என்றால் மனைவி புகார் கொடுத்தால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க படும் .ஆனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் இந்த சுதந்திரத்தை பெறுவது இல்லை .மனதிற்குள் மூடி மறைத்து ,வெளியே சொல்ல முடியாமல் புழுங்கி கொண்டு இருக்கும் பெண்கள் தான் அதிகம் .

இது எல்லாம் எவ்வளவூ இன்றியமையாதது என்று புரியாமல் போராடாமல் இருக்கும் இவர்கள் தான் "பேச்சுவாக்கில் "சொல்ல படும் இது போன்ற வார்த்தைகளுக்காக போராட போகிறார்கள் ?? விதவை ,கைம்பெண் ,ரெண்டாம் தாரம் ,மலடி போன்ற சொற்கள் ,குழந்தை இல்லை என்றால் இந்த விரதம் ,அந்த கோயில் என்று பெண்களை மட்டும் அலைக்கழிக்கும் நிலை தான் உள்ளது .சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் என்ற மனப்பாண்மை அனைவர்க்கும் வந்து விடாது .ஒரு சொல் வெல்லும் ,ஒரு சொல் கொல்லும் என்பது இது தான் .

இதில் பவானியின் குமுறல் நியாயமானது தான் .60 வயதான பின்னும் இது போன்ற அடைமொழிகள் தொடரும் வயதான பெண்களை ,அவர்கள் அறிமுகம் செய்ய படும் விதத்தை இன்றும் கண்கூடாக பார்க்க முடியும் .சிவகாமியும் இதனை தாண்டி வந்தவர் என்னும் போது ஒரு அன்னையின் குமுறலை எதிர்த்து அவரால் பேச முடியவில்லை .

"புரியுது பவா .....மக்கள் மனம் மாற வேண்டும் .....அதற்கு இன்னும் எவ்வளவூ காலம் ஆகுமோ ...."என்றார் சிவகாமி

"சமுதாயம் எப்படியாவது போகட்டும் ....எனக்கு என் மகள் தான் முக்கியம் அத்தை ..."என்றார் பவானி .

"சரி பவா இதற்கு என்ன செய்ய போகிறாய் ?"என்றார் சிவகாமி .

"அத்தை ...என்னால் எப்போ ,எப்படி ,யாரால் என் மகளுக்கு ஆபத்து வரும் என்று என்னால் ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ முடியாது .......இந்த மாதத்திலேயே மதுராவிற்கு திருமணம் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன் .........அதற்கு உங்கள் உதவி வேண்டும் ...அதற்காக தான் வந்து இருக்கிறேன் ."என்றார் பவானி .

"உதவி என்று எல்லாம் ஏன் சொல்கிறாய் .....என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு ...."என்றார் ஆதி .

"என் அப்பாவுக்கு நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்க ....என்னையும் என் குடும்பத்தையும் கடைசி வரை பார்த்து கொள்வதாக .....அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா அத்தை ."என்றார் பவானி

"மறக்கும் உதவியையா உன் அப்பா செய்து இருக்கார் ....போடி பைத்தியக்காரி .....உங்க அப்பா கிட்டே பேசிய எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு ...."என்றார் சிவகாமி .

"நான் கேட்க போவது நியாயமா என்று கூட தெரியாது அத்தை ...என் அப்பா செய்த உதவிக்கு உங்கள் பதில் உபகாரத்தை நான் கேட்பது தவறு தான் ....ஆனால் நியாயம் ,நீதி ,நேர்மை இது எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை ......இதற்கு எனக்கு மன்னிப்பும் கிடையாது தான் ...."என்றவரை இடை மறித்த ருத்ரமாறன் ,"அத்தை .....என்ன கேட்கணுமோ கேளுங்க ...எதற்கு தயங்கறீங்க ....நாங்களும் உங்க குடும்பத்தினர் தான் ."என்றான் .

பெருமூச்சை வெளியிட்ட பவானி ,"அத்தை !.....என் மக மதுராவை உங்க வீட்டு மருமகளாக ஏற்று கொள்வீர்களா .....உங்க பேரன் ருத்ரமாறனுக்கு என் மகளை திருமணம் செய்து வைப்பீர்களா ....இது தான் என் அப்பாவுக்கு நீங்க பட்டு இருக்கும் நன்றி கடனுக்கு உபகாரம் ......என் மகளின் மானத்தையும் ,உயிரையும் காப்பாற்றி கொடுங்க அத்தை ."என்றார் பவானி சிவகாமியின் காலடியில் அமர்ந்து , மடியில் தலை வைத்து .

"பவானி ""அத்தை ","அம்மா "---என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன .


PENANCE WILL CONTINUE...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
HI FRIENDS I GAVE UPDATE TODAY.

sorry to inform that my family members daughter and hubby are not well.esp my daughter is down with viral fever for the past few days.she is very cringy and want me to be with her whole time.

for the past 3 days im awake beacuse she is vomiting and coughing in night.so im not getting enough sleep.

diwali time .so taking care of relatives and daughter is taking toll on me.unable to concentrate.

if possible i give update by wednesday.

wish you happy diwali to all.may this day of light bring joy,happiness and all the good things in your life.

this diwali is so special for me beacuse i got such good and wonderful friends like you all.thanks you all for your support and kindness

thanks friends.keep on reading and reviewing.
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
சகோதரி குடும்பத்தை பாருங்கள் பொறுமையாக அப்டேட் தாருங்கள் ஒன்றும் அவசரமில்லை அப்படியே நீங்களும் உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
HI FRIENDS I GAVE UPDATE TODAY.

sorry to inform that my family members daughter and hubby are not well.esp my daughter is down with viral fever for the past few days.she is very cringy and want me to be with her whole time.

for the past 3 days im awake beacuse she is vomiting and coughing in night.so im not getting enough sleep.

diwali time .so taking care of relatives and daughter is taking toll on me.unable to concentrate.

if possible i give update by wednesday.

wish you happy diwali to all.may this day of light bring joy,happiness and all the good things in your life.

this diwali is so special for me beacuse i got such good and wonderful friends like you all.thanks you all for your support and kindness

thanks friends.keep on reading and reviewing.
No problem, அனிதா டியர்
First take care of yourself and your
family and then come with lovely
updates ASAP, அனிதா டியர்
பொறுமையாகவே வாங்க
ஒண்ணும் அவசரமில்லைப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உடம்பு சரியில்லாத குழந்தை அம்மாவைத்தான் தேடும்
That is nature
So, பாப்பாவை நல்லா
பார்த்துக்கோங்க,
அனிதா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top