• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அவன் தோளில் கை வைத்த உத்தம் ,"என்ன .....அப்படி பார்க்கறீங்க .....இப்படி அடிச்சிகிறாங்க என்றா .....அது அப்படி தான் ....ரெண்டும் சரியான லாரல் ஹாடி ,டாம் அண்ட் ஜெர்ரி .....உள்ளே நாம போனோம் நாம் காலி .....ரெண்டும் சேர்ந்து நம்மை குதறி வைப்பாங்க .....இது சகஜம் ...கண்டுக்காதீங்க ...."என்றான் .

"அது இல்லை ப்ரோ ...சார் ....பாஸ் ....எவ்ளவோ பெரிய பிசினெஸ் மக்னெட் ...நீங்க இவளுக்கு சரிக்கு சமமாய் ....."என்று இழுத்தான் கார்த்திக் கண்ணால் காண்பதை நம்ப முடியாமல் .

"ரிலாக்ஸ் கார்த்திக் .....எதுக்கு இவ்வளவூ டென்ஷன் ???ஜஸ்ட் கால் மீ ப்ரோ ....சார் ,பாஸ் எல்லாம் வேண்டாமே .......எவ்வளவூ பெருசு கார்த்திக் ???ஒரு ஏழு எட்டு அடி இருப்பேனா ????...நீங்க வேற .....இவ friendடா கிடைத்ததற்கு நான் தான் கடவுளுக்கு நன்றி சொல்லணும் .....அன்றும் இன்றும் மதுராவின் பார்வையில் நான் அவளின் சின்ன தம்பி பிரபு தான் .....என் பணத்திற்கோ எனக்கு என்று இருக்கும் பெயருக்கோ அவள் மதிப்பு தரவில்லை ..... அவளே டென்ஷன் ஆகாம இருக்கா ...நீங்க தான் ரொம்ப குழம்பறீங்க ....ரிலாக்ஸ் கார்த்திக் ...."என்றான் சூர்யா .


"சரி ப்ரோ ....எப்படி இந்த பிசாசு கிட்டே மாட்டினீங்க .........பிளாஷ்பேக் என்ன ஆச்சு ?"என்றான் கார்த்திக்

பிரபுவும் ,மதுராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தங்களின் காலேஜ் வாழ்க்கை ,மோதல் ,நட்பு பற்றி சொல்ல ஆரம்பித்தனர் .

(ஒரு tortoise கொசுவத்தி சுருள் சுத்தவிடுங்க பா .....)

இடம் :---குன்னூர் -----ஐந்து வருடங்களுக்கு முன்

டைம் மெஷின் ஏறி நாம் இறங்க வேண்டிய இடம் குன்னூரில் உள்ள " குறிஞ்சி கலை கல்லூரி .".புது அட்மிஷன்,வருட விடுமுறை முடிந்து அந்த கல்வியாண்டுக்கான முதல் நாள் கல்லூரி அன்று தான் திறக்க பட்டு இருந்தது .கோ education .(ஐ ஜாலி ).

பல ஏக்கருக்கு பறந்து விரிந்து ,இயற்கை அன்னையின் மடியில் அமைந்து இருந்தது அந்த காலேஜ் .மாணவ மாணவிகளுடன் நாமும் உள்ளே நுழைந்தால் ஒரு மரத்திற்கு சுத்தி நிறைய பேர் நின்று கொண்டு இருந்தனர் .பார்த்தாலே தெரிகிறது அவர்களில் பெரும்பாலானோர் அந்த வருடம் சேர்ந்த புது மாணவ மாணவியர் .ஒஹ்ஹஹ் ராக்கிங் நடக்கிறதோ ....சரி சென்று பார்ப்போம் .

"ஹலோ நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் ....இங்கே என்ன நடக்குது ???ராக்கிங்கா????"என்றாள் புது மாணவி ஒருத்தி தன் அருகில் இருந்த மற்றொரு சக மாணவியிடம் .

"ராக்கிங் இல்லை என்று தான் மாணவ மாணவியர் ரெப்ரெசென்டடிவ் வார்னிங் கொடுத்துட்டு ,ஒவ்வொருவரும் எது எதில் டாலேண்ட் இருக்குன்னு விசாரித்து cultural டீம் ஹெட் கிட்டே நேம் கொடுக்க சொல்லி இருக்காங்க .....தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட எங்கு எந்த வித காம்பெடிஷன் நடந்தாலும் காலேஜ் சார்பில் அனுப்பி வைப்பாங்க ....சீனியர்ஸ் கிட்டே நோட்ஸ் ,புக்ஸ் வாங்கி கொள்ளவும் ,ஹாஸ்டல் நடைமுறை ,ஏதாவது குறை ,தேவை என்றால் யாரை அணுகுவது ,இங்கு நடக்கும் volunteer ப்ரொக்ராம்ஸ் -ரத்ததான முகாம் ,ஏழை மாணவர்களுக்கு சனி ஞாயிற்றில் வகுப்பு எடுப்பது ,கிளீனிங் ,NCC ,ரெட் கிராஸ்,எல்டர்ஸ் விசிட் ,ஒய்ய்வு பெற்ற ராணுவ வீரர்களின் மறுவாழ்வூ ,மகளிர் சிறுதொழில் பயிற்சி ,மாணவ மாணவியரின் கை பொருட்கள் விற்பனை என்று பல தொண்டு செய்யும் விளக்கமும் கொடுத்தாங்க பா .....ஒவ்வொன்றுக்கும் ஒரு டீம் ஹெட் இருக்காங்களாம் .அவங்க யார் யார் என்று இன்ட்ரோ செய்தாங்க ....."என்றாள் அவள் .

(என்னப்பா இது ....அநியாயத்திற்கு நல்லவங்களா ,வல்லவங்கள இருக்காங்க இந்த காலேஜ் பசங்க .....)

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த கூட்டம் களைந்து விட ,அந்த மரத்தடியில் ரெப்ரெசென்டடிவ் ,டீம் ஹெட் மட்டும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் .அந்த சமயம் "தல ...தல "என்று கத்தி கொண்டு ஒருவன் ஓடி வந்தான் .

"டேய் !....எத்தனை தடவை சொல்வது இப்படி தலைன்னு கூப்பிடாதே .....மக்கள் டென்ஷன் ஆகிடுவாங்க ....பான்ஸ் கொலைவெறி ஆகிடுவாங்க ..."

"அப்போ பாஸ் ஒகேவா ?"

"இல்லை ...இல்லை ...லீடர் ....இது எப்படி ?

"அடங்குங்க பா ......நாம என்ன கொள்ளை கூட்டமா நடத்தறோம் ...பாஸ் ,லீடேர்னு built up கொடுக்க ????நீ சொல்ல வந்த மேட்டரை சொல்லு ...."

"நம்ம சிவா மேட்டர் தான் பா .....ராதா கிட்டே போய் லவ் சொன்னதற்கு ,ராதாவின் friendஸ் முக்கியமா நம்ம காலேஜ் chairman தூரத்து ரிலேட்டிவ் ரொம்ப பேசி அவமானம் படுத்தி திருப்பி அனுப்பியிருக்காங்க ."என்றான் அவன் .

"அடச்சே இதுங்களுக்கு இதுவே வேலையா போச்சு .........எப்ப பார்த்தாலும் அடிச்சிக்க வேண்டியது ... லவ்ன்னு நம்ம உயிரை வாங்க வேண்டியது ....மீண்டும் முடிக்க வேண்டியது .....இதுங்களுக்கு நாட்டாமை வேலை பார்த்தே நம்ம ஆயுசு முடிஞ்சுடும் போல் இருக்கு ."என்று அலுத்து கொண்டது ரெப்ரெசென்டடிவ் .

"அது சரி லீடர் ....முறைக்காதே ....வாய் தவறி வந்துடுச்சு .....chairman உறவுனா அதுக்குன்னு எது வேண்டும் என்றாலும் பேசி விடலாமா என்ன .....இதை விட கூடாது ......"என்றான் ஒருவன் .

"தேவை இல்லாத வேலை ....சிவா ,ராதா ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்கட்டும் ...நாம் இதில் நுழைய வேண்டாம் ....."

"போ பாஸ் .....மாணவர்களுக்கு நடுவே chairman ,அட்மின் என்று உறவு கொண்டாடிட்டு பிரச்சனை கிளப்புவாங்க ..நாம அமைதியா இருக்கணுமா என்ன .....'குறிஞ்சி தண்டெர்ஸ் 'கேங் என்றால் சும்மாவா ???நம்ம பவர் காட்டணும் .....இனி யாருக்காவது சீன் போட நினைச்சாலே அல்லு உட்டுரனும் ....."என்றான் ஒருவன் .

"தோ ...அது தான் chairman உறவு ......"என்றான் கம்பளைண்ட் செய்தவன் .

"எதை வைத்து டா சொல்றே ????"என்றாள் ஒருத்தி .

"நம்ம பசங்க இல்லை பொண்ணுங்க ல யாரு காரில் வந்து இறங்க போறாங்க ????....சீன் பார்ட்டி ...chairman ரிலேட்டிவ்ன்னு பந்தா ......பாரு பார்க்கவே திமிர் ,பந்தா ,அலட்டல் எல்லாம் தெரியுது ."என்றவன் கை காட்ட chairman ரிலேட்டிவ் என்று குறிப்பிடப்பட்டவர் போனில் யாருடனோ பேசி கொண்டே வந்து கொண்டு இருந்தார் .

ரெப்ரெசென்டடிவ் விசில் மூன்று முறை விசில் அடித்தும் ,போனிலேயே வந்தவரின் கவனம் இருந்தது .கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

"அடங .....போய் டோல்ல்கேட் போட்டு ராஜமரியாதையோடு கூட்டி வாங்க ...."என்று ரெப்ரெசென்டடிவ் சொல்ல நான்கு பேர் புது நபரை நோக்கி சென்றனர் .

முன்னே சென்று கை நீட்டி தடுக்க ,போனில் பேசியவர் ,"பிறகு பேசறேன் அப்பா ....பை "என்று அழைப்பை துண்டித்து ,"யெஸ் வாட் கேன் ஐ டூ போர் யு ஆல் ?"

"தோ டா ராபர்ட் கிளைவ் ......எலிசபெத் ராணியோடு வாரிசு ....வாயை திறந்தா இங்கிலிஷ் தான் வரும் போலெ .....உலகத்தில் எங்களுக்கு பிடிக்காதது இங்கிலிஷ் .....தமிழ் தெரியும் தானே ....தமிழில் பேசு ....தமிழ்நாட்டில் தானே இருக்கே ....."

"எங்க லீடர் வர சொன்னாங்க .....வந்து மரியாதையையா பேசிட்டு ...நீ செஞ்சு வச்சு இருக்குற வேலைக்கு மன்னிப்பு கேட்டுட்டு பொழைச்சி போ ...வந்தோமா ,படிச்சோமான்னு இல்லாமா இது எல்லாம் என்ன வேலை ?????"என்றாள் ஒருத்தி

"யார் உங்க லீடர் ?"

"அதோ அங்க மரத்துக்கு கீழே இருக்காங்க ....வா "என்று இழுக்காத குறையாய் இழுத்து சென்று அவர்களின் லீடர் முன் நிறுத்தினார் .

"லீடர் நீங்க சொன்னா மாதிரி கூட்டிட்டு வந்துட்டோம் ...."என்று அறிவிக்க லீடர் நிதானமாக திரும்ப ,திரும்பிய லீடர் ரை கண்டு இழுத்து வரப்பட்டவர் அதிர்ந்து ,திகைத்து ,ஸ்தம்பித்து நின்றார் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
லீடர் என்றதும் ,"யாரோ ஒரு ரவுடி ,காலேஜ் படிக்கச் என்று வந்து விட்டு சீட் தேய்ப்பவன் ' என்று நினைக்க ,திரும்பியதோ ஒரு இளம் பெண் .....அதுவும் மிகவும் அழகான இளம் பெண் .அந்த பெண்ணின் பார்த்த மறுநொடி மின்சாரத்தால் தாக்கபட்டவன் போல் நின்றான் சூர்யா .

(அட ராக்கிங் செய்ய போவது சூர்யா என்று பார்த்தால் ,சூர்யாவை கூப்பிட்டு ராக்கிங் செய்வது மதுராவா ?????)

அனுமதி பெறாமலே அந்த பெண் அவன் இதயத்தை ஆக்ரமித்து கொண்டாள் .லவ் அட் 1ஸ்ட் சைட் என்பதில் நம்பிக்கை இல்லாதவனை அடிமை படுத்தி இருந்தது காதல் .யெஸ் சூர்யா இஸ் இன் லவ் .

1942 லவ் ஸ்டோரியில் அனில் கபூர் மனிஷா கொய்ராலாவை பார்த்ததும் பாடும் பாடல் இவன் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது .


இந்த பெண்ணை பார்த்த போது ,இந்த பெண் எனக்கு
மலரும் புது ரோஜாவை போல்
ஒரு கவிஞ்சனின் கற்பனை போல்
சூரியனின் அதிகாலை ஒளியை போல்
காட்டினில் ஓடும் மான் போல்
இரவு நிலவு ஒளியை போல்
மென்மையான வார்த்தை போல்
கோயிலில் சுடர்விடும் தீபம் போல் -----எனக்கு தோன்றுகிறாள்

காலையின் அழகினை போல்
பனிக்கால சூரிய ஒளி போல்
புல்லாங்குழலின் இன்னிசை போல்
வண்ணங்களின் மொத்த கலவை போல்
திராட்சை கொடியினை போல்
அலைகளின் அசைவு போல்
குளிர்ச்சியான பனி காற்றினை போல் ----எனக்கு தோன்றுகிறாள்

காற்றில் ஆடும் இறகு போல்
பட்டு நூல் போல்
தேவதையின் மெல்லிசை போல்
சந்தனத்தின் நறுமணத்தை போல்
பதினாறு விதமான அணிகலன்கள் போல்
புத்துணர்ச்சி தரும் மழை போல்
மென்மையாக பரவும் போதை போல்----எனக்கு இவள் தோன்றுகிறாள்.


என்று பாடி முடிக்க ஷாருக் கான் போல் காதல் கொண்ட மனம் ஊட்டி ட்ரெயின் மீது மனம் ஏறி ,"

ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....


என்று பாடி கொண்டு இருந்தது .

"ஹலோ .....மிஸ்டர் ....ஹலோ ...."என்று பலமுறை அழைத்தாள் மதுரா .

பதில் வந்தால் தானே ....அவன் தான் சிறகு இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறானே .

"சார் "என்று மதுரா கத்தியே விட ,"யெஸ் "என்றான் சுயநினைவுக்கு வந்து அவன் .

"நீங்க ஒகே தானே ....உடம்பு ஏதாவது முடியலையா என்ன ...ஏதாவது உதவி வேண்டுமா ?"என்றாள் மதுரா .

'யெஸ் நீ தான் இனி என் மூச்சின் கடைசி காலம் வரை வேண்டும் '

"சார் ...ஏதாவது பேசுங்க ..."

'ஐ லவ் யு '

"பாஸ் ...கொஞ்சம் உட்காருங்கோ ....என்ன ஆச்சி உங்களுக்கு ?....ஏய் என்ன செய்து வைத்தீங்க .....அடிச்சிடீங்களா என்ன ?"என்றாள் மதுரா தான் தோழர் ,தோழியரிடம் .

"ஏய் இல்லவே இல்லை பா ....கை எல்லாம் வைக்கலை ....கிண்டல் தான் செய்தோம் ....."

"ஒருவேளை பேய் பிடிச்சிகிச்சோ ?"என்றாள் ஒருத்தி பயந்தவளாய் .

"இல்லைன்னா ஒரு வேலை மெண்டல் ஹாஸ்பிடல் கேஸ் சா ?"என்றாள் மற்றொருத்தி .

அவனுக்கு பேய் தான் பிடித்து இருந்தது ,அழகான மோஹினி பேய்----- மதுரா என்ற பெயர் கொண்ட பேய் .அவனுக்கு மூளை குழம்பி தான் போனது ,மதுரா என்ற பெண்ணை பார்த்த அன்று .
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
அனிதா டியர்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
உனக்கு தெரியுமா கார்த்திக் ....இவன் இருந்த நிலையை கண்டு இவன் பைத்தியம் என்றே என் கேங் முடிவு செஞ்சுட்டாங்க ."என்றாள் மதுரா கார்த்திக்கிடம் இன்று .

கார்த்திக் சூர்யாவை அதிர்ந்து பார்க்க ,அவனோ புன்னகையுடன் மதுராவையே கண்களால் ரசித்து கொண்டு இருந்தான் .கார்த்திக்கின் மூளையில் அபாய மணி அடித்தது .அன்று போல் இன்றும் சூர்யாவின் நிலையை அறியாதவளாய் நடந்ததை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் மதுரா .

"சார் ......என்ன ஆச்சு சார் உங்களுக்கு ?"அவனின் ஆடை ,அவன் கம்பீரம் தானாகவே மரியாதையாக பேச வைத்தது மதுராவை .

"நத்திங் ...."

"உங்க பெயர் பிரபு தானே ? நீங்க chairman ரிலேட்டிவ் வா ?"என்ற மதுராவின் கேள்விக்கு பூம் பூம் மாடாக தலை ஆட்டினான் சூர்யா .அவன் எங்கே இவள் பேசுவதை கவனித்தான் ???அவன் கவனம் எல்லாமுமே அவளின் அழகில் அல்லவா லயித்து கிடந்தது ....அந்நேரம் மதுரா எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுது என்று கூறி இருந்தால் கூட ஆமாம் சூப்பர்ரா ஓடுதுன்னு ஜால்ரா அடித்து இருப்பான் .

மதுராவிடம் சிவா ராதா விஷயத்தை கூறிய நண்பனும் பெயரை தவறுதலாக மாற்றி தான் கூறி இருந்தான் . அதனால் சூர்யா --பிரபுவாக தான் மதுராவுக்கு பரிச்சயம் ஆனான் .பிரபு என்றதும் அடைமொழியாக "சின்ன தம்பி "இணைந்து விட்டது .சூர்யாவும் மதுரா கேட்பதை கவனிக்காமலே அதை ஒத்து கொண்டு இருந்தான் .

"சார் ....நீங்க சிவா ராதா விஷயத்தில் இன்வோல்வ் ஆகாதீங்க .....அவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை தான் .இன்று சண்டை போடுவாங்க ...நாளை சேர்ந்துப்பாங்க .....இன்வோல்வ் அகறவங்க தான் லூஸாகி நிற்பாங்க ....அதை சொல்ல தான் கூப்பிட்டோம் ...."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"சரி ....நீங்க சொல்லிட்டா அப்பீல் ஏது ???/கண்டிப்பா இன்வோல்வ் ஆக மாட்டேன் ....ஆமா உங்க பெயர் ?"என்றான் சூர்யா .

"ஐம் மதுராக்ஷி சங்கரன் ....பி .எஸ் .சி .கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் வருடம் ?நீங்க ?"என்றாள் மதுரா .

அவன் பதில் சொல்வதற்குள் சிவா ராதாவுடன் அங்கு வந்து சேர்ந்து ,"ஏய் ...என்னவோ ராதா friend படுத்தி எடுக்கறீங்க என்று நியூஸ் வந்துச்சு .....நீ ஏண்டீ இதில் இன்வோல்வ் ஆகறே "என்றாள் சிவா என்கிற சிவசங்கரி .

"பாருங்க ...நான் சொன்னேனா இல்லையா ......நீங்களே உங்க friend கிட்டே சொல்லுங்க நாங்க உங்களை படுத்தியா எடுத்தோம் .?"என்றாள் மதுரா .

"ஏய் யாருடீ இது ....இவரை ஏன் என் friend என்கிறாய் ?"என்றான் ராதா என்கிற ராதாகிருஷ்ணன் .

(ஏய் ஹனி ...போதும் கடிக்காதே .....)

"இவர் தானே உங்க friend ?.....chairman ரிலேட்டிவ் ?"என்றாள் மதுரா .

"ஐயோ லூசு மதுரா .....இவர் யாருனே எனக்கு தெரியாது ...இப்போ தான் பார்க்கிறேன் ."என்றான் ராதாகிருஷ்ணன்

"டேய் நீ தானேடா இவர் தான் ராதாவின் நண்பன் என்று கை காட்டினே ?"என்று முதன் முதலில் கம்பளைண்ட் செய்தவனை கேட்டாள் மதுரா .

"ஹி ஹி ஹி ....மதுரா அது வந்து சார் காரில் வந்து இறங்கினாரா ....பார்க்க அப்படியே பெரிய இடத்து பையன் போல் இருந்தாரா .....அதான் இவர் தான் chairman ரிலேட்டிவ்வாக இருப்பார் என்று நினைத்து ...."என்று தலையை சொரிந்து நின்றான் அவன் .

"போடாங் .....உன் நினைப்பில் அனகோண்டா வந்து கொத்த ....சாரி ஜி ...உங்களை இவன் தோஸ்து என்று நினைத்து தான் .....ஆமா நீங்க யாரு ?"என்றாள் மதுரா .

மீண்டும் சூர்யா பதில் சொல்வதற்குள் ,"ஏய் அதான் பா நார்த் இந்தியன் ஒருவர் MBA சேர போவதாக நம்ம கிரி சொல்லிட்டு இருந்தானே ...அந்த MBA ஆள் இவர் தான் போல் இருக்கு ...."என்றான் ராதாகிருஷ்ணன் .

"வெல்கம் டு அவர் காலேஜ் சீனியர் ....."என்ற மதுரா கை நீட்ட அவளின் கை பிடித்து குலுக்கினான் அந்த கல்லூரியை விலைக்கு வாங்க வந்த தொழிலதிபர் சூர்யா பிரதாப் ரத்தன் சிங் .

(எவ்வளவூ காலத்திற்கு தான் சீனியர் ,ப்ரோபஸ்ஸோர் ,சேர்மன் ரிலேட்டிவ் என்று படிப்பது ???அதான் புதுசா காலேஜ் வாங்க வந்ததாக BUILT UP .ஹி ஹி நோ அழுகின முட்டை .)

காலேஜ் வாங்க வந்தவனை வாங்கி விட்டாள் அந்த பெண்பாவை.கல்லூரியை விலைக்கு வாங்க வந்தவனை மாணவன் ஆக்கி விட்டது அவன் மதுராவின் மேல் கொண்ட காதல் .அடுத்த ஆறு மாதத்திற்கு மதுராவிற்காகவே தான் வாங்க வந்த கல்லூரியில் மாணவனாகி மதுராவின் சிறந்த நண்பன் ஆனான் .இவனுக்கு காவலாக வந்து சேர்ந்த உத்தம் ,இவனின் நண்பனாக வந்து மதுராவின் சகோதரன் ஆகி போனான் .

"இது தான் பா எங்க பிலாஷுபாக் .....சீனியர் இவன் .....அது தெரியாமல் குழப்பத்தில் இன்ட்ரோ ஆகி சிறந்த நண்பன் ஆகிட்டான் ."என்றாள் மதுரா .

"இது எப்போ நடந்தது ?"என்றான் கார்த்திக் .

"ஒரு ஐந்து ஆறு வருஷம் இருக்கும் ....நான் bsc மூன்றாம் ஆண்டு படிக்கும் போது....ஏண்டா கேட்கிறே ?"என்றாள் மதுரா .

"நீ எந்த அளவூ லூசா இருக்கே என்பதை தெரிஞ்சுக்க தான் ...."என்றான் கார்த்திக் .

"ஏய் என்னடா ....."என்றாள் மதுரா ஒன்றும் புரியாமல் .

PENANCE WILL CONTINUE.......
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top