• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 34(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Samantha380.jpg

மூலவரையும் ,உற்சவரையும் தரிசித்து விட்டு வெளி பிரகாரத்தில் வந்து சேர்ந்தனர் அவர்கள் .அங்கு ஓங்கி வளர்ந்து படர்ந்து இருந்தது ஆலமரம் .அதன் கீழ் ராமராஜு முன்னோர்களால் பிரதிஷ்டை செய்ய பட்டு இருந்த அம்மன் மங்களகரமாய் சிவ சக்தி சமதேராய் மனதை அள்ளும் புன்னகையுடன் அமர்ந்து இருந்தார் .பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் ,பூஜை செய்யும் படி ராமராஜு குடும்பம் அந்த சிறு கோயிலினை நிர்மானித்து இருந்தார்கள் .பூஜை செய்து முடித்து அந்த அம்மனின் முன்னாலே மதுரா அமர்ந்து விட ,தோழியின் கண்ணீரை காண சகியாதவனாக விலகி சென்றான் ஹர்ஷா .
BELLS.jpg


கைகள் கூப்பிய படி இருக்க ,மூடி இருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய மனதிற்குள் ஆத்மார்தமாய் அந்த தாயிடம் பேசி கொண்டு இருந்தாள் மதுரா .

amman_3.jpg

"நடந்தது எல்லாம் உன் லீலை என்கிறார் ராஜு அப்பா ...........ஆனால் எதற்காக இந்த சோதனை தாயே ....காதலில் ஜெயித்து வாழ்வில் தோற்று நிற்கும் நான் .......ஒரு நாள் வாழ்வில் இரு பிள்ளைகளை பெற்று காதலில் தோற்று நிற்கும் மேக்னா ......திருமணம் என்பதையே கேலி கூத்தாக்கி நிற்கும் சோனா .............காதல் ,வாழ்வூ ரெண்டையும் தொலைத்து நிற்கும் ரூபிணி ......வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பது இல்லை என்கிறார்கள் .....ஆனால் எங்கள் வாழ்க்கை எல்லாம் ஆரம்பிக்கும் போதே கருகி அல்லவா போய் இருக்கிறது .....பலரின் வாழ்வூ இங்கு வந்து தான் தடம் மாறி போனது .............அதை சரி செய்ய இனியாவது எனக்கு சக்தி கொடு .......எங்கு என் வாழ்க்கை தொலைந்ததோ அதே இடத்திற்க்கு வாழ்வை மீட்டு எடுத்து வர துணை இரு .......என் காதல் என்னை விட்டு போகவில்லை ............அது என்றுமே அழிந்தது இல்லை என்று எனக்கு தெரியும் ......அந்த காதலை பணயம் வைத்து தான் வாழ்வை மீட்டு எடுக்க போகிறேன் .............திரும்ப உன் சன்னிதானத்திற்கு வரும் போது என் வாழ்வோடு தான் தாயே வருவேன் .........ஒருவேளை எங்கள் இருவரின் வாழ்வூ மீட்க பட முடியாமல் போனாலும் அந்த பிள்ளைகளுக்காகவாது மேக்னா வாழ்வை மலர செய் அம்மா .....'என்று வேண்டியவள் ----பலரின் வாழ்வை திசை மாற்ற சென்னை நோக்கி பயணப்பட்டாள் .மதுரா சென்னை வந்து அடையும் போது இரவூ மணி 2

ரெண்டு .அவள் பயணம் சென்னையை நோக்கி ஆரம்பமான சமயம் சென்னையில் "இந்தர் இண்டஸ்ட்ரி "குள் புயல் என நுழைந்தது கஜாவின் கார் .கஜா புயலால் சேதம் விஜய்கா இல்லை விஜய்யால் அந்த புயலுக்கேவா ??????

அதில் இருந்து கஜாவும் ,அவர் ஆசை பேத்தி சோனாவும் இறங்கினார்கள் .ஆள் பாதி ஆடை பாதி என்பதை தவறாக புரிந்து கொண்டு இருந்தது அந்த ஜந்து .....microscope வைத்து தேடினால் கூட சோனா அணிந்து இருக்கும் ஆடையை கண்டு பிடிப்பது கஷ்டம் .வந்து இருக்கும் இடம் அலுவலகம் ....பப்போ ,நைட் கிளப்போ இல்லை என்று யார் தான் சொல்லி புரிய வைப்பது . செய்யும் தொழிலே தெய்வம் என்பது எல்லாம் இந்த பேய் கூட்டத்திற்கு புரியவா போகிறது ??????
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Hamsa-Nandini_18042.jpg

ரெண்டு பாதுகாவலர்கள் வேறு .உடன் வக்கீல் வேறு......சோனா போதை மருந்து வழக்கில் கைதான போது அந்த தியாகசெம்மலை வெளி கொண்டு வர உயிர் கொடுத்து போராடினாரே அதே குள்ளநரி .உடன் சோனாவின் ஜால்ரா பெண் ஒருத்தி

"கருணா !.....அவங்க ரெண்டு பேரும் வந்துட்டு இருக்காங்க என்று கீழே இருந்து receptionist தகவல் சொன்னாங்க ............"என்று பதறியவாறு ஓடி வந்தார் சேது .

தனது லேப்டாப் ஓடு இணைக்க பட்டு இருந்த cctv வீடியோவை பார்த்து கொண்டு இருந்த விஜய் முகம் உணர்ச்சி முற்றிலும் துடைக்க பட்டு இருக்க ,"கேம் ஸ்டார்ட்ஸ் "என்றான் கண்ணில் விபரீத ஒளியோடு .
rU1andIc_400x400.jpg

"அப்படி என்றால் ..............."என்றார் சேது .

"இன்று முதல் உங்களுக்கும் ,அம்மாவிற்கும், பாட்டிக்கும் விடுதலை ............"என்று தன் சுழற்நாற்காலியில் ஆடியவாறு சொன்னவன் டக்கென்று எழுந்து ஜன்னலை பார்த்தவாறு அறை வாயிலுக்கு முதுகு காட்டி நின்றான் .சேது ஏதோ சொல்வதற்குள் கதவை படார் என்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் கஜாவும் ,சோனாவும்

.உடன் தாத்தா இருக்கிறார் ,பெற்ற தகப்பன் அங்கு இருக்கிறார் என்று எதுவும் இல்லாமல் அப்பொழுதும் விஜயயை நோக்கி உடம்பை ,வளைத்து நெளித்து போஸ் என்ற பெயரில் ஒரு கேவலத்தை அரங்கேற்றி கொண்டு இருந்தாள் sona.
(விளக்கமாத்து இருந்தா எடு விஜய் .....)

"அப்பறம் அப்பா .....காலையில் இரும்பிட்டு இருந்தீங்களே ..........டாக்டர் கிட்டே போகலாமா ..........?"என்றான் விஜய் வந்தவர்களை அலட்சியம் செய்தவாறு .

"அது ஒன்றும் இல்லை கருணா ....சீசன் மாறுது இல்லை அதான் ......கனகா கஷாயம் வைத்து கொடுத்தா ...இப்போ பரவாயில்லை ......"என்றார் அவர் .

"என்ன அப்பா பண்றது குளோபல் வார்மிங் ....போன தடவை விட இந்த தடவை சென்னை குளிர் ரொம்பவே தான் அதிகம் .....காலை பத்து மணிக்கு கூட உஸ் என்று காத்து அடிக்குது இல்லையா அப்பா ?"என்றான் விஜய்

"கருணாகரா ............"என்று இரைந்தார் கஜா .

புருவத்தை மட்டும் "என்ன "என்பது போல் ஏற்றி இறக்கினான் விஜய் .

"நாங்க வந்து எவ்வளவூ நேரம் ஆகுது ...இப்போ தான் உலகத்தை பத்தி ஆராய்ச்சி தேவையா உனக்கு ?"என்றார் அவர் .

"உங்களை நானா வர சொன்னேன் .....சொல்லுங்க ...நானா வர சொன்னேன் ????இல்லை ...........நீங்களா வந்து இருக்கீங்க .............நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் ????வந்த ஆள் நீங்க தான் ....எதுக்கு வந்து இருக்கீங்க என்று நீங்க தான் சொல்லணும் .....இது சுதந்திர நாடு மிஸ்டர் கஜா ...யார் வேண்டும் என்றாலும் எதை பத்தி வேண்டும் என்றாலும் பேசலாம் ...."என்றான் விஜய்

"இந்த திமிர் தானே சூர்யாவின் லாரி எரிச்சு இருக்கு .............அவன் என்னவோ பிரஸ் மீட் வைத்து வார்னிங் தறான் .......ஹாஸ்பிடலில் வேறு சண்டை போட்டு இருக்கே ......தெரு நாயை குளிப்பாட்டி நடு மாளிகையில் வைத்தாலும் அது சாக்கடை நோக்கி தான் ஓடுமாம் ......இது நான் கஷ்ட பட்டு வளர்த்த தொழில் .....உன் திமிர் ,ஆணவத்திற்கு எல்லாம் இதை பலி கொடுக்க மாட்டேன் ...ஒழுங்கு மரியாதையாய் சூர்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு .....நீ செய்த தப்புக்கு அவன் கொடுக்கும் தண்டனையை வாங்கு ....."என்றார் கஜா

"செய்யா விட்டால் ...............என்ன நீங்க செய்வீங்க ....இல்லை அந்த பூரியா ....சூரியா அவன் என்ன புடிங்கிடுவான் ?"என்றான் விஜய்

"நீ பேசும் விதம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் மேனேஜிங் டைரக்டர் போல் இல்லை ..........பக்கா ரவுடி ,லோக்கல் தாதா,பொறுக்கி மாதிரி இருக்கு ..........."என்றார் கஜா .

(இதை யார் சொல்வது என்று விவஸ்தை இல்லையா ?)

"ஆமா நான் ரவுடி தான் ...பொறுக்கி தான் ..........தாதா தான் ..............ஆமா நான் தான் சூர்யாவின் லாரியை கொளுத்தினேன் ....இப்போ என்ன அதற்கு கஜா ....?"என்றான் விஜய் அசால்ட்டாய் .

அவன் ஒப்பு கொள்வான் என்று அவர்கள் எதிர் பார்க்கவில்லை போல் இருக்கிறது .ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .பின்னே இவர்கள் கொளுத்தியதற்கு விஜய் பொறுப்பு ஏற்று கொள்ள அவனுக்கு என்ன பைத்தியமா என்று தான் நினைத்து இருந்தார்கள் .....ஆனால் அவன் ஒப்பு கொள்ளவே ,பைத்தியம் தான் போல் இருக்கு என்று முடிவூ செய்து கொண்டனர் .பின் அவர்கள் வந்த வேலை இவ்வளவூ சுலபமாக முடியும் என்றால் திகைப்பு வராதா என்ன ?
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"ச்சே ச்சே இவ்வளவூ கேவலமாக நடந்து கொள்வாய் என்று எதிர்பார்க்கவே இல்லை கருணாகரன் ......எனக்கு என்று ஒரு பெயர் இருக்கு ......இந்த கம்பெனிக்கு என்று ஒரு பிரெஸ்டிஜ் இருக்கு .......இந்த மாதிரி கீழ்த்தரமாக நடக்கும் உன்னை இனி மேலும் நம்பி இந்த கம்பெனியை விட்டு வைக்க முடியாது .....கார்மெண்ட்ஸ் கிரௌண்ட் ல மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் .....கம்பெனி பஸ் இங்கிருந்து கிளம்பும் .......வந்து சேரு ........அன்னாடம் காய்ச்சிக்கு கார் ஒன்று தான் குறைச்சல் .............முன்னே பஸ் ,ஆட்டோன்னு போனவன் தானே .......... அங்கே shareholders ,வேலையாட்கள் முன் உன்னை வேலை விட்டு தூக்கறேன் ............அப்போ தான் உன்னை இனி எவனுமே வேலைக்கு எடுக்க மாட்டான் .....நாலு நாள் பட்டினியா இருந்தே என்றால் அப்போ இந்த திமிர் ,ஆணவம் எல்லாம் காணாம போய்டும் ......."என்றவர் மற்றவர்களுடன் வெளியேறி கார்மெண்ட்ஸ் நோக்கி கிளம்பினார் .

"என்ன கருணா இது ?அந்த ஆள் ஏதோ பிளான் போட்டு உன்னை கார்னெர் செய்யறான் போல் இருக்கே பா ..."என்றார் சேது கவலையுடன் .
12107021_947393571965808_5621779444867314741_n.jpg

"இது எல்லாம் நேத்தே எனக்கு தெரியும் அப்பா .......அங்கே கார்மெண்ட்ஸ் கிரௌண்ட் டில் கம்பெனி ஷேர் ஹோல்டேர்ஸ் ,அங்கு வேலை செய்பவர்கள் ,மீடியா முன் அவர் நல்லவர் ,சூர்யாவின் கண்டைனர் எரிந்ததற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை .....அதன் முழு காரணம் நான் என்று மீடியா முன்னிலையில் என்னை குற்றவாளி ஆக்கி விட பார்க்கிறார் ......சூர்யா சாதாரணமாக பேசினாலே எதிரிக்கு ஆப்பு ரெடி என்று அர்த்தம் ......அவன் வார்னிங்கே கொடுத்து விட்டான் இல்லையா அதான் நரி பம்முது ........ஊர் அறிய உலகம் அறிய என் மீது பழி போட்டு சூர்யாவிற்கு என்னை விரோதி மாதிரி காட்டி ,அவனை போட்டு தள்ள பிளான் ......அவன் இறந்து போனால் கோபத்தில் நான் தான் செய்ததாக எவிடென்ஸ் காட்டணும் இல்லை அதற்கு தான் இந்த மீட்டிங்.எவிடென்ஸ் தயார் செய்கிறார் அப்பா ..........தவிர இப்படி ஊர் அறிய என்னை வேலை விட்டு தூக்கினால் ,இவரை மீறி ,சூர்யாவை பகைத்து கொண்டு எனக்கு எவனும் வேலையே தர மாட்டான்.வேலை இல்லை என்றதும் அவரின் பேத்தி உயர் திரு சோனா தேவியாரின் காலில் சென்று தான் விழுவேன் ,அப்படி விழ வைக்க வேண்டும் என்பது தான் அடுத்த பிளான் ......அதான் கார் எல்லாம் எடுத்து கொண்டு பஸ்சில் வர சொல்லறார் .........இந்த வசதி ,வாய்ப்புக்காக நான் ஏங்க வேண்டுமாம் ........அப்படி ஏங்கி ...........சோனாவின் படுக்கை அறைக்கு செல்வேன் என்று கணக்கு போட்டு ..........என்னை அனுப்ப முயல்கிறார் உங்க மாமா "என்றான் விஜய் அலட்டி கொள்ளாமல் "மாமா "என்ற வார்த்தையை அழுத்தி கூறி .

அவன் சொன்னதை கேட்டு சேதுவின் கோபம் ஏற ஆரம்பித்தது .

"என்னப்பா இது .............எவ்வளவூ பெரிய விஷயம் ...........எவ்வளவூ கூலா சொல்றே .................கேட்கும் எனக்கே உள்ளே பதறுது ............இதை எல்லாம் எப்படி பா சமாளிப்பே .............மனுசனா அந்த ஆளு ..........."என்றார் சேது தலையை பிடித்து கொண்டு .

"உங்களுக்கு இத்தனை வருடம் கழித்து இப்போ தான் பல்பு எரியுதா என்ன ??????அப்போ இத்தனை வருஷம் அந்த ஆள் மனுஷன் என்றா நினைத்து இருக்கீங்க ...........சோ sad அப்பா ...."என்றான் விஜய் புன்னகையுடன் .

"போடா போக்கிரி ..............எந்த மாதிரி நேரத்தில் காமெடி செய்து இருக்கே நீ .............."என்றார் சேது .

"ஆமா இதற்கு எல்லாம் நேரம் காலமா fix செய்துட்டு இருக்க முடியும் .....உங்க மாமா இன்னும் அடிக்க போகும் கூத்து நிறைய இருக்கு ............மெயின் ஷோவே அங்கே கார்மெண்ட்சில் தான் இருக்கு ........கஜாவின் ட்ராமா என்றால் சும்மா அதிரும் இல்லே .............வாங்க அப்பா .....................ஷோ ஆரம்பிச்சுட போறாங்க............எனக்கும் ரொம்ப போர்ரா இருக்கு அப்பா .......சினிமாவிற்கு போய் ரொம்ப நாள் ஆகுது ....ஒரு நல்ல காமெடி ஷோ மிஸ் செய்துட போறோம் .......இந்த ஆபீஸ் உள்ளவர்களை அங்கே கூட்டி போக இருப்பதே ஒரு பஸ் ......சீக்கிரம் போகவில்லை என்றால் என்னை விட்டு கிளம்ப கூட ஏற்ப்பாடு செய்து இருப்பார் .......அதுவும் இல்லை என்றால் நடராஜா சர்வீஸ் தான் ......"என்றான் விஜய் .
tt_tct_kc_vietluanfactory_pc.jpg

இருவரும் அங்கு காத்திருந்த பஸ்ஸில் ஏற ,பஸ் இந்தர் கார்மெண்ட்ஸ் நோக்கி பயணப்பட்டது .அதே சமயம் இந்தியா முழுவதும் நியூஸ் சேனல் பிளாஷ் நியூஸ் .......இந்த மீட்டிங் பத்தி தான் ஓடி கொண்டு இருந்தது .விஜய் பற்றிய நியூஸ் என்றதும் அவனின் வரலாறே trp ரேட்டிங் காக அக்கு வேறு அணி வேறாக அலச பட்டது .

காரில் வந்து கொண்டு இருந்த மதுரா வந்த மொபைல் அழைப்பை ஏற்றவள் ,"வாட் ...............கம் அகைன் .............என்ன சொன்னே "என்றாள் திகைத்து போனவளாய் .
maxresdefault.jpg

இவள் அலறிய அலறலில் ஹர்ஷா பதறி போய் காரினை ஓரம் கட்டி நிறுத்தியே விட்டான் .....

"என்னடி என்ன ஆச்சு ......எதற்கு இப்படி பேய் மாதிரி அலறி வைக்கிறே ....."என்றான் ஹர்ஷா

"அந்த கஜா விஜயயை கார்னெர் செய்ய பிளான் போட்டு ஏதோ மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கானாம் .....எல்லா சேனல்லிலும் விஜய் பத்தி தான் நியூஸ் ஓடுதாம் .....மேக்னா தான் அதை பார்த்து டென்ஷன் ஆகி போன் செய்து விஷயத்தை சொன்ன இப்போ ........லைவ் மீட்டிங் ரிலே ஆகிறதாம் ...."என்றவள் தன் போனில் பிரபல நியூஸ் சேனல் ஒன்றின் லைவ் டெலிகாஸ்ட் ஒன்றை ஆன் செய்தாள் .
bangladesh-to-set-up-sez-for-chinese-investors_191348.jpg

பேக்டரி கிரௌண்டில் 5000 பேருக்கும் குறையாமல் தொழிலாளர்கள் கூடி இருந்தனர் .ஒரு புறம் ஹெட் ஆபீஸ் பணியாட்கள் .மறுபுறம் மீடியா என்று கூட்டம் அலை மோதியது .மேடை மீது சோனா ,கஜா,லாயர் ,உடன் வந்த பெண்ணிற்கு மட்டுமே சேர் போட பட்டு இருக்க ,விஜய் மேடைக்கு அழைக்க படவும் இல்லை .அவன் அமர நாற்காலியும் தர படவில்லை .

ராவணனின் அரசவையில் அன்று ஆஞ்சநேயருக்கு தான் இருக்கை தர பட வில்லை .....அங்கு இராவணன் ...இங்கு கஜேந்திரன் ராவணனையே மிஞ்சும் ஆள் இல்லையா .....விட்டால் ஸ்ரீராம சக்ரவர்த்திகே அமர ஆசனம் இல்லை என்று சொல்லும் நபர் .....சாதாரண மனுஷன் விஜய்கா இருக்கை தந்து விட போகிறார் . அதாவது அவனை டம்மி என்று உலகத்திற்கு சொல்லாமல் சொல்லும் செயல் .அப்படி செய்வதால் தன் தரம் தான் தாழ்ந்து போவதை கஜா உணரவில்லை. .....அது மட்டும் அல்ல அரசல்புரசலாக விஷயம் கசிந்து இருக்க அங்கு கூடி இருந்த தொழிலாளர்களின் கோபமும் மெல்ல ஏறி கொண்டு தான் இருந்தது .

ஆழம் தெரியாமல் காலை விடுவது என்பதற்கு எடுத்து காட்டாய் இருந்தது கஜாவின் செயல் .யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ள ஆரம்பித்தது .

மைக் முன் சென்ற கஜா ,"என் கவனத்திற்கு வந்த விஷயம் ....அதனை பத்தி முடிவூ எடுக்கவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் ...."என்று ஆரம்பித்தவர் அங்கு இருந்த யாருக்கும் வணக்கத்தையோ ,வருகைக்கு நன்றியோ சொல்லி ஆரம்பிக்கவே இல்லை .அதாவது அங்கு குழுமி உள்ள 5000க்கும் குறையாத தொழிலாளர்கள் அவர்க்கு வேலைகாரர்கள் அவ்வளவூ தான் .....அவர்களுக்கு எதற்கு மரியாதை,வணக்கம் எல்லாம் ??????


penance will continue.......
 




Last edited:

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Madhura payanam avalukku nallathe nadakkanum....
Vijay planning panna madhiri Gaja mobe pandraru.........ine meeting epdi nadakkum evlo swarasyama mudiyummm:unsure::unsure::unsure::unsure::unsure:.....
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
superb update , and ivlo seikiram epi potathuku thanks.

eppo paru problem create pandrathey gaja group ku velaiya pochu, vijay ah pathi innum purinchikalaye
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top