• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Sashi ji...Neengal sonna miga sari...Not all stories were read and voted..Niraya vithyasam ana kadhaigal pottiyil writers koduthaargal..Participant, audience and judges way of selecting will always vary as u said..This we can see in many shows..We would have thought great but the judge would give a different opinion..So participation is what is very important and also taking the victory or the comments is the stride is equally important for anyone who would like to achieve success... Yes many read stories but only very few voted that was like our voting method for our political leaders.. i too was a silent reader but after seeing one of our writers feeling saying too many views but so very little comments i too started to add up positive comments and likes to every read i click on...So all in our group can atleast try doing that...It's my sincere request on behalf of all the writers here..Thank u
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
தம்பியின் திருமணத்துக்கு வாழ்த்துகள் சஷிஜி.
 




Kaaviyahesham

இணை அமைச்சர்
Joined
Mar 17, 2018
Messages
858
Reaction score
4,385
Location
Chennai
@smteam Sorry if offended sashi. Jus wanted a clarification. No one knows better than you. We r jus readers.
Ivlo busy schedule la intha tension Vera kuduthutom Pola.. Sorry. ?

Marriage 21st trichy la ya.naa 25th than varen trichy ku.. Jus miss ? Neenga trichy ah.. illa kalyaana ponnu ooru trichy ah..
anyways have a great time ahead with the marriage celebrations.. heartiest congrations to the couple ???
 




Kaaviyahesham

இணை அமைச்சர்
Joined
Mar 17, 2018
Messages
858
Reaction score
4,385
Location
Chennai
Congratulations to your little brother....
Wish him a very very happy married life ... convey our wishes to him....
Please share pic after wedding... would love to see your little bro...
Does he also looks like a ‘Snow White’ ???

Big sister endra chumma va...
Big sister is a second mom ...
your mom n sister will be with you and give you extra energy n confident. I am sure you will rock darling ??

Come back with update ??
Sashi kita update ketu thollai panni evlo naal aachu?

@smteam sashi don miss premi ka's shyama wedding theme golu.. ?? sooper ah iruku
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
ஹாய் மக்களே

ஒரு வழியா தேடல் போட்டி முடிஞ்சாச்சு. முடிவுகளை அறிவிச்சாச்சு. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச உணர்வு. வெகுவாக திருப்தியாக இருக்கிறது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே உங்களது அதீத உழைப்பை கொடுத்து இருக்கிறீர்கள். ஆறு மாத பயணம். அதன் பின் எழுத்தாளர்களில் வேண்டுகோளுக்காக ஒரு மாத எக்ஸ்டென்ஷன். அதன் பின் முடிவுகளுக்காக இரண்டு மாத காத்திருப்பு. முடிவுகளில் எந்தவிதமான காம்ப்ரமைஸும் இருக்கக் கூடாது என கருதி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, ஓடி, களைத்து அமர்ந்து இருந்தாலும், ஒரு மிக பெரிய செயலை செய்து முடித்த திருப்தி எங்களுக்குள்.
நடுவர்களினால் ஒரு நாளைக்கு ஒரு நாவலை தான் படிக்க முடியும். அதுவும் கூட மிகப் பெரிய நாவல்களை எல்லாம் படிக்க ஒரு வாரம் கூட ஆனது.(நேமிராவின் நாவல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்களுக்கும் மேல்... இது போல தான் ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களின் அகத்திய ரகசியமும்... இன்னும் இது போல நிறைய உண்டு) இந்த இரண்டு மாத கால அவகாசம் போதவில்லை என்பது தான் உண்மை.

முடிவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இந்த முடிவுகள் நடுவர்களுடைய தீர்ப்பும், வோடிங் ஆக இரண்டுமாக சேர்ந்து முடிவெடுக்கப்பட்ட ஒன்று.
முதல் பரிசுக்கு எந்த படைப்பும் தகுதியாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்வது எங்களை நாங்களே குறைத்து சொல்வது போலத்தான். இப்படிப்பட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எழுத்தாளர்களை காயப்படுத்தும். ஆனால் இன்னும் அழுத்தமாக எதிர்பார்த்தோம். ஆரம்பம் முதலே கூறி வந்திருக்கிறேன், இது விளையாட்டு போட்டியல்ல. இணைய வரலாற்றில், இந்த ஜெனரில் யாருமே கொடுக்க முடியாத வாய்ப்பு ப்ளஸ் பரிசு இது என்று. அப்படி நாங்கள் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம் என்றால் எங்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகம் என்பதை எழுத்தாளர்கள் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது.

ஒரு கதையை பொறுத்தவரை வாசிப்பாளரின் பார்வை என்பது வேறு, எழுத்தாளரின் பார்வை என்பது வேறு, அதே கதையை ஒரு க்ரிடிக் பார்க்கும் பார்வை என்பது நிச்சயமாக வேறு தான். அதனால் தான் தங்களுக்கு பிடித்த கதை முதலிடத்தில் வரவில்லை என்றதும் சிலர் தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீகள். ஆனால் ஒருவருக்கு பிடித்த கதையை கிரிட்டிக்கும் நடுவர்களும் அலசி ஆராயும் போது கிடைக்கும் முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை வாசிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எழுதிய ஒவ்வொருவரின் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் அவர்களது வட்டத்தை வெறும் நான்கு ரொமான்ஸ் சீனுக்குள் அடக்கிக் கொண்ட போது மனம் வருத்தப்படுகிறது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இலக்கண பிழை, எழுத்து பிழை, கருத்து பிழை என்று நடுவர்கள் பட்டியலிடும் போது எங்கள் மனம் தவித்தது.

இரண்டு நாவல்கள், அவர்கள் உபயோகப்படுத்திய நேர்மையற்ற முறைகளுக்காக தேர்வில் சேர்த்து கொள்ளப்படவில்லை. ஒரே IP யில் இருந்து பல்வேறு பெயரில் மெயில் செய்வது, ஓட்டெடுப்பின் தன்மையை மாற்றி அமைக்க முயல்வது, ஒருவரே வேறு பெயர்களில் கமென்ட் செய்வது போன்றவைகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

முதல் பரிசை ரிசர்வ் செய்தால் கேள்விகள் வரும் என்று தெரியாதவர்களா நாங்கள்? இல்லை, அறுபதாயிரத்திற்கான பரிசை அறிவிக்க முடிந்தவர்களுக்கு இன்னும் நாற்பதாயிரம் ஒரு பிரச்சனையா என்ன? ஆனால் நாங்கள் சொல்ல வந்தது வேறு.

இன்னும் வெகு அழுத்தமாக, அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் கதையாக இருக்க வேண்டும் என்று இத்தனை பெரிய பரிசுத் தொகையை அறிவித்து திறமையை தேடியதில் என்ன தவறு இருக்கப் போகிறது?

அடுத்த சிவசங்கரியையும், வாஸந்தியையும், எண்டமூரி வீரேந்திரநாத்தையும் தேடியதில் எங்கள் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது தான் உண்மை.

குடும்ப நாவல் என்ற வட்டத்தை மிகக் குறுகிய வட்டத்திற்குள் எடுத்து சென்ற பெருமை நிறைய பேருக்கு உண்டு. என்னிடமே, ‘குடும்ப நாவல் என்ற பெயரில் மேட்டரை தான மா எழுதறீங்க..?’ என்று கேள்வி வந்ததும் உண்டு. அந்த வட்டத்தை உடைக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தேடல்.

இது ஒரு முன்னெடுப்பு. அதற்காக பொழுதுபோக்கு தளத்தை மாற்றியமைப்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் வட்டத்தை பெரிதாக்குவதுதான் எங்கள் நோக்கம். வாசிப்பவர்கள் பரந்துபட்ட எழுத்துக்களை வாசித்து உணர வேண்டும்.

ஆனால் இங்கு நடந்தது என்ன?
வித்தியாசமான எழுத்துக்களை நிறைய பேர் வாசிக்கவே இல்லை. அந்த வருத்தம் மிகவுண்டு. வோட்டிங் மிக முக்கியமாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்து இருந்தபோதும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
மொத்தம் 710 பேர் கலந்து கொண்டனர் இந்த ஓட்டெடுப்பில்! ஒருவருக்கு மூன்று ஓட்டுக்கள்.

Vanisha - 394
Monisha - 257
Thendral -191
Vathsala Raghavan -174
*********** -162
Madhumathi Bharath -143

நல்ல கதைளை படித்து வாக்களிக்கவில்லையே என்று இப்போது வருத்தப்படுகிறார்கள் சிலர்.
தாங்கள் நினைத்த கதை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அந்த கதைகளுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும். தங்களது நண்பர்கள் வட்டத்துக்கும் அந்த கதைகளை அறிமுகப்படுத்தி படிக்க செய்திருக்க வேண்டும். நல்ல கதைகளுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ‘என்னோட ப்ரெண்ட்ஸ் மூணு பேர் எழுதறாங்க... அவங்களுக்கு வோட் போட்டேன் மேம்...’ என்று என்னிடம் கூறியவர்கள் ஏராளம்.

இவ்வளவு சீரியசான ஒரு போட்டியில், அதிலும் அடுத்த தேடலுக்கு மீடியா கை கோர்க்க தயாராக உள்ள ஒரு போட்டியில், வாசிப்பாளர்களின் கருத்துக்களுக்கும் ஓட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தில், உங்களது கருத்துக்களையும் இருப்பையும் நாங்கள் மதிக்கிறோம் என்று சொல்லும் போது வாசிப்பாளர்களின் பொறுப்பும் தேவையும் மிக அதிகமானதாகிறது.

நியுஸ் செவன் சேனல் எம்டி என்னிடம் சொன்னது ஒன்றுதான். எக்ஸ்ட்ராடினரி டாலேண்ட்சை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்க... மீதியை நாங்க பார்த்துக்கறோம் என்பதுதான்.
அந்த எக்ஸ்ட்ராடினரி திறமைகளை தேடும் போது இயற்கையாகவே, எங்களது எதிர்பார்ப்பின் ஸ்கேல் ஆப் ரெபரென்ஸ் மிக அதிகம்.

சிவசங்கரியின் நண்டோ, அல்லது நமது மைதிலியின் உயிரானாய் உணர்வானாய் போன்ற ஒரு கதைகள் நிச்சயம் மைல்கல்கள். அதை போன்றதொரு மைல் கல்லை படைக்க முடியாதவர்கள் அல்ல நம் தோழிகள். இது முதல் களம்... பயிற்சி களமாகட்டும். எங்களுக்கும் சரி... உங்களுக்கும் சரி...

அடுத்த களத்தில் நிச்சயம் இன்னும் பெரிய எதிர்பார்ப்போடு சந்திப்போம். சரித்திரம் படைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக எங்களோடு கைகோர்த்து கொள்ளலாம்.

அதுவரை இதில் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களும் செய்யலாம். ஏனென்றால் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. முடிந்தால் இதே போன்றதொரு போட்டியை எப்போதும் போல காப்பியடித்து எங்களை விட இன்னும் நேர்மையாக எருமையாக கருமையாகவும் நடத்தலாம். அவர்கள் இஷ்டம். இந்த பாரா அரசியல் செய்ய நினைக்கும் சிலருக்கு மட்டுமே.

ஆனால் இந்த போட்டியை நடத்தி முடித்ததில் எங்களுக்கு வெகுவான மகிழ்ச்சி ப்ளஸ் திருப்தி. தேடலில் முடிவு எப்படி வந்திருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகித்தான் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனென்றால் வாசித்த ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக வாசித்தீர்கள் என்பதும் தெரியும், எழுத்தாளர்களின் உழைப்பும் மிக அதிகம். இது போன்ற போட்டிகளுக்கு பழகாத இந்த ஜனரஞ்சகமான எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் மக்களே!

வாருங்கள் பயணிப்போம்!

டிஸ்கி1 :

அடுத்த பத்து நாட்களுக்கு என்னால் சைட் பக்கம் கூட வர முடியாது மக்களே. எதுவாக இருந்தாலும் கேட்டு வைங்க. வந்து பதில் சொல்றேன். தம்பியின் திருமணத்திற்கு ரெடி ஆகிட்டு இருக்கோம். அம்மாவும் தங்கையும் இல்லாததால் நான் ஒருத்தி மட்டுமே அத்தனை வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன். சோ இப்போதைக்கு கண்ணை கட்டிட்டு இருக்கு வேலையெல்லாம்.

டிஸ்கி2:
அக்டோபர் 20 & 21 என் உடன்பிறப்புக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருமணம். இதையே அழைப்பாக எண்ணி தோழிகள் (தோழர்களும் வரலாம் ;) ) அனைவரும் வந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் மக்களே :)
நன்றி சஷி மேடம்! இவ்வளவு தெளிவான விளக்கம்!

உண்மையில் நீங்கள் எந்த விளக்கமுமே தர வேண்டியதில்லை! ஆனாலும் வாசகர்களின் எழுத்தாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நீங்கள் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்!

மிக்க நன்றி! உங்களின் எதிர்பார்ப்புகள் நியாயமானவையே!

இதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டு அடுத்த தேடலில் எங்களின் திறமைகளை நிரூபிக்க முயற்சிக்கிறோம்!

இந்த தேடல் எனும் பெருந்திருவிழாவில் என்னாலும் பங்கெடுத்துக் கொள்ள முடிந்தது என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது! இதில் கலந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி மேம்!

தங்களின் தம்பிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

???????????
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் க்கா,
உங்களின் நேரமின்மை பிஸி ஷெட்யூல் இடையில் எங்களை மதித்து நீங்கள் விளக்கம் தந்ததிற்கு பெரிய பெரிய நன்றி!

எழுத்தாளன் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. அது ரொம்ப பெரிய களம். ஆழமான விஷயம். நிறைய உழைப்பு புத்திசாலித்தனம் புதுமை மொழியாளுமை வேண்டும்னு சும்மா நச்சுன்னு புரிய வைச்சீங்க...

இந்த தேடல் ரொம்ப ஆழமான அழுத்தமான தேடல். இன்னும் நம்ம(நான்) அதற்கு தகுதியாகல. நிறைய நிறைய செய்ய வேண்டியிருக்குன்னு மண்டையில உறைக்கிற மாறி சொல்லிட்டீங்க க்கா.

கடலில் விழுகிற துளிகள் எல்லாம் முத்தாகிவிடுமா? அதுவும் இந்த பரந்து விரிந்த கடலில் முத்தாக இன்னும் ஆழமா பயணிக்கனும். அதுவும் அடி ஆழத்திலன்னு புரிய வைச்சிட்டீங்க.

தேங்க்ஸ் க்கா.

ஸ்டில் ஒரு சின்ன வருத்தம். கிரிட்டிக்ஸ் இந்த க்ரைட்டிரியாவை எல்லாம் பார்ப்பாங்கன்னு கொஞ்ச முன்னாடியே சொல்லி இருக்கலாம். இன்னும் ஆழமா பிழையில்லாத படைப்பை கொடுக்க முயற்சி செஞ்சிருப்போம். பிகாஸ் நாங்க (நான்) எல்லாமே நேற்று முளைத்த காளன்ங்கள்தானே! கத்துகுட்டி பாருங்க! இப்படியெல்லாம் பார்ப்பாங்கன்னு தெரியாது. தட்ஸ் ஒய்!

அடுத்த தடவை நிச்சயம் க்ரிட்டிக்ஸ் அசந்து போறளவுக்கான படைப்பை கொடுக்கிறோம். பாருங்க! அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்றோம்.

மத்தபடி உங்க முடிவு மேல உங்க மேல எனக்கு ஸ்டிராங்கான நம்பிக்கை உண்டு.

யூ ஆர் மை குரூ! என் கனவுகளை அடையாள படுத்தி என் எழுத்துக்கு அங்கிகாரம் கொடுத்த குரு! நிறைய விஷயங்களை நுணுக்கங்களை கற்று தந்த குரு! எப்பவுமே உங்க பின்னாடி உங்க கூட நான் இருப்பேன்.

என் மனசில இருந்து சொல்றேன் இந்த காம்படீஷன் என்னோட பாதையை மாற்றிய ஒன்று! எனக்குள்ள இருந்து என்னையே தேட வைச்ச தேடல்! ஸ்ரீய்ஸ்லி இந்த தேடல் இல்லன்னா இத்தனை வாசகர்களை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க முடியாது. அதுக்கு பெரிய பெரிய நன்றி க்கா!

அன் எனக்கு கிடைச்சிருக்கிற பரிசு மற்றும் இந்த ஓட்டு என் அருமையான வாசகர்களாலயும் உங்களாலயும்.

தம்பியோட கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க க்கா! எல்லா சந்தோஷங்களும் அவர் வாழ்வில் குடியேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் உங்க சிஷ்யை உங்களோட (குருவோட) வாழ்த்துக்காகவும் திட்டுக்காகவும் காத்திட்டிருக்கேன்!

மோனிஷா
 




Last edited:

banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Convey my happy wishesh to ur brother and her wife sis....
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
yes, இதைத்தான் எதிர்பார்த்தோம்.
விளக்கத்தை விளக்கமாக விளக்கிவிட்டீர்கள்.

நன்றி சஷிஜி,

எழுத்தாளர்களுக்கு தாங்கள் செய்த பிழைகள் தெரிந்திருக்கும். இனி அவைகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறோம்.

வாசகர்களாகிய நாங்கள் இனி எங்களுக்கான உரிமையை சரியான முறையில் பயன்படுத்துவோம். அடுத்த தேடலில் பிடித்த படைப்பாளர்களுக்கு அல்ல , தகுதியான சிறந்த படைப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறிவிட்டீர்கள். அதை மறக்க மாட்டோம்.

இப்போது விளக்கம் கேட்டதற்காக வருந்தவில்லை.....தவறு செய்தால் சுட்டாக்காட்வும், புரியாததற்க்கு விளக்கம் கேட்கவும் எங்களுக்கு உரிமையளித்துள்ளீர்கள்.

அதற்காக எதிரில் நின்று வாள்வீசுபவர்கள் அல்ல நாங்கள், அர்ஜூனனைப்போல் மண்டியிட்டு விளக்கம் கேட்பவர்கள். இது புரியாதவர்களுக்காக பரிதாபம்தான் பட முடியும்.

என்ன ஒரு வருத்தமென்றால் உங்கள் busy டைம்ல தொந்தரவு கொடுத்துவிட்டோம்.

திருமணத்தை முடித்துவிட்டு பொறுமையாக வாருங்கள்......

நம் விவாதங்களும் முற்றுபெற போவதில்லை. நம் உறவும் முடியப்போவதில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top