• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
முதல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நானும் வருத்தப்பட்டேன். என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுபவர்களில் யார் முதல் மதிப்பெண் பெற்றவரோ அதுதான் அந்த ஆண்டுக்கான முதல்வர் இல்லையா? நீங்கள் முதல் பரிசு வழங்காததன் மூலம் இனி வருங்காலத்தில் இதைவிட சிறந்ததை எழுத்தாளர்கள் கொடுக்க வேண்டும் என்ற கருத்து அவர்களுக்கு வலியுறுத்தும் நோக்கம்தான். சிவசங்கரியின் நண்டு கதையின் தாக்கம் நான் அதை படித்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆன பின்பும் அந்த இரயில் நிலைய சம்பவம் , அவள் குளிக்கும் போது புற்றுநோய் கட்டியை உணருவது எல்லாம் மறக்க முடியாத தருணங்கள்தான் ஆனால் எல்லா கதைகளையும் கனமான கதைகளாக படிக்க முடியாது. அவரின் பாலங்கள் மனிதனின் கதையும் , திரிவேணி சங்கமமும் ரசிக்கத்தான் வேண்டும். பொதுவாக நமது பெண்கள் சந்திக்காத துயரமோ சவால்களோ எழுத்தாளர்கள் கூட எழுத முடியாத அளவு அனுபவித்தவர்கள்,/அனுபவிப்பவர்கள் . அதனால் தான் நாம் படிக்கும் கதையின் நாயகி நல்ல அனுபவம் பெற நமது மனம் விரும்புகிறது. யாரோ சொல்வது போல குடும்ப கதை என்ற பெயரில் மேட்டரைத்தான் எழுதுகிறீர்கள் என்பது ஒரு intellectual ஆக உள்ள எழுத்தாளர் அல்லது நபர் சொல்லலாம் எங்கள் சோக அல்லது சோதனை அனுபவத்தை மறுபடியும் படித்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்றுதான் மென்மையான காதல் கதை, சந்தோசமான குடும்ப கதையை படிப்பது . ஒரு துலாபாரம் படம் பார்க்கலாம் எப்பொழுதும் அது மாதிரியே ரசிக்க வேண்டும் என்பது எப்படி ? எங்களின் ரசிப்பு தன்மையை தீர்மானிப்பது உங்களை மாதிரி எழுத்தாளர்கள் மட்டுமே யாரோ ஒரு சேனல்காரர் இல்லை . கலைமகள் பத்திரிகையில் முதல் பரிசு பெற்ற கதவு காதல் கதை இல்லையா ஆனந்த விகடனில் பொன்விழா ஆண்டில் பரிசு பெற்ற சிறை கதையை விடுங்கள் வேர்கள் கதை மெல்லிய காதல் கதை இல்லையா ஏன் சிவசங்கரி, வாஸந்தி போன்ற எழுத்தாளர்களும. காதல் கதைகள் எழுதியவர்கள்தான் . ஒரு திரைப்படம் காதல் கதை வெற்றி அடைவது என்பது பெரிய மேதைகளால் அல்ல சாதாரண மக்களால்தான் . சாதாரண மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகளே நல்ல கதை. படிப்பவர்கள் அனைவரும் மேதாவிகளாக இருக்க வேண்டியது இல்லை . ப்ரியா நான் தெரிவித்து உள்ள கருத்துக்கள் உங்கள் கருத்துக்கு எதிரானது அல்ல நீங்கள் சொல்லி இருக்கும் அந்த யாரோ ஒருவரின் கருத்து என்னால் ஒப்புக் கொள்ள முடியாத காரணத்தால் இந்த விமர்சனம் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன் என்னுடைய இந்தக் கருத்தினை விமர்சனம் செய்தாலும் தலைவணங்கி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
முதல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நானும் வருத்தப்பட்டேன். என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுபவர்களில் யார் முதல் மதிப்பெண் பெற்றவரோ அதுதான் அந்த ஆண்டுக்கான முதல்வர் இல்லையா? நீங்கள் முதல் பரிசு வழங்காததன் மூலம் இனி வருங்காலத்தில் இதைவிட சிறந்ததை எழுத்தாளர்கள் கொடுக்க வேண்டும் என்ற கருத்து அவர்களுக்கு வலியுறுத்தும் நோக்கம்தான். சிவசங்கரியின் நண்டு கதையின் தாக்கம் நான் அதை படித்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆன பின்பும் அந்த இரயில் நிலைய சம்பவம் , அவள் குளிக்கும் போது புற்றுநோய் கட்டியை உணருவது எல்லாம் மறக்க முடியாத தருணங்கள்தான் ஆனால் எல்லா கதைகளையும் கனமான கதைகளாக படிக்க முடியாது. அவரின் பாலங்கள் மனிதனின் கதையும் , திரிவேணி சங்கமமும் ரசிக்கத்தான் வேண்டும். பொதுவாக நமது பெண்கள் சந்திக்காத துயரமோ சவால்களோ எழுத்தாளர்கள் கூட எழுத முடியாத அளவு அனுபவித்தவர்கள்,/அனுபவிப்பவர்கள் . அதனால் தான் நாம் படிக்கும் கதையின் நாயகி நல்ல அனுபவம் பெற நமது மனம் விரும்புகிறது. யாரோ சொல்வது போல குடும்ப கதை என்ற பெயரில் மேட்டரைத்தான் எழுதுகிறீர்கள் என்பது ஒரு intellectual ஆக உள்ள எழுத்தாளர் அல்லது நபர் சொல்லலாம் எங்கள் சோக அல்லது சோதனை அனுபவத்தை மறுபடியும் படித்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்றுதான் மென்மையான காதல் கதை, சந்தோசமான குடும்ப கதையை படிப்பது . ஒரு துலாபாரம் படம் பார்க்கலாம் எப்பொழுதும் அது மாதிரியே ரசிக்க வேண்டும் என்பது எப்படி ? எங்களின் ரசிப்பு தன்மையை தீர்மானிப்பது உங்களை மாதிரி எழுத்தாளர்கள் மட்டுமே யாரோ ஒரு சேனல்காரர் இல்லை . கலைமகள் பத்திரிகையில் முதல் பரிசு பெற்ற கதவு காதல் கதை இல்லையா ஆனந்த விகடனில் பொன்விழா ஆண்டில் பரிசு பெற்ற சிறை கதையை விடுங்கள் வேர்கள் கதை மெல்லிய காதல் கதை இல்லையா ஏன் சிவசங்கரி, வாஸந்தி போன்ற எழுத்தாளர்களும. காதல் கதைகள் எழுதியவர்கள்தான் . ஒரு திரைப்படம் காதல் கதை வெற்றி அடைவது என்பது பெரிய மேதைகளால் அல்ல சாதாரண மக்களால்தான் . சாதாரண மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகளே நல்ல கதை. படிப்பவர்கள் அனைவரும் மேதாவிகளாக இருக்க வேண்டியது இல்லை . ப்ரியா நான் தெரிவித்து உள்ள கருத்துக்கள் உங்கள் கருத்துக்கு எதிரானது அல்ல நீங்கள் சொல்லி இருக்கும் அந்த யாரோ ஒருவரின் கருத்து என்னால் ஒப்புக் கொள்ள முடியாத காரணத்தால் இந்த விமர்சனம் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன் என்னுடைய இந்தக் கருத்தினை விமர்சனம் செய்தாலும் தலைவணங்கி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்
கனமான கதைன்னு இல்ல... அவங்க இன்னும் ஆழமா அழுத்தமா எதிர்பார்த்திருக்காங்க சித்ரா... இந்த விஷயத்தில் ஒரு முக்கிய புள்ளி இன்னைக்கு கதைகள் படிக்கிற ஜென்ரஷன் எதிர்பார்ப்பு முற்றிலும் வேறு!
வாசகர்கள் க்ரிட்டிக்ஸ் இரண்டு பேரையும் பூர்த்தி செய்யனும்னா எக்ஸ்டிராடினரி டேலன்டா இருக்கனும்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
கனமான கதைன்னு இல்ல... அவங்க இன்னும் ஆழமா அழுத்தமா எதிர்பார்த்திருக்காங்க சித்ரா... இந்த விஷயத்தில் ஒரு முக்கிய புள்ளி இன்னைக்கு கதைகள் படிக்கிற ஜென்ரஷன் எதிர்பார்ப்பு முற்றிலும் வேறு!
வாசகர்கள் க்ரிட்டிக்ஸ் இரண்டு பேரையும் பூர்த்தி செய்யனும்னா எக்ஸ்டிராடினரி டேலன்டா இருக்கனும்.
உண்மைதான் மோனி உங்கள் தலைமுறை வேறு இன்றைய நவீன தலைமுறை வேறு எதிர்பார்ப்பு வேறுதான் இப்பொழுது உங்கள் சஷி, மற்றும் உங்கள் விளக்கம் புரிந்தது இந்த clarification மனமார ஏற்றுக். கொள்கிறேன்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
உண்மைதான் மோனி உங்கள் தலைமுறை வேறு இன்றைய நவீன தலைமுறை வேறு எதிர்பார்ப்பு வேறுதான் இப்பொழுது உங்கள் சஷி, மற்றும் உங்கள் விளக்கம் புரிந்தது இந்த clarification மனமார ஏற்றுக். கொள்கிறேன்
நான் young and youth ma, நான் சொன்னது வேற
தலைமுறைக்கு தலைமுறை ரசனை வேறுபடுதுன்னு சொன்னேன். யூ மிஸ்டேக் மீ
images (50).jpeg
 




A

Anna Sweety

Guest
ஹாய் ப்ரியங்கா,

பொதுவாக போட்டி என வந்துவிட்டால் அதோட முடிவுகளை குடைவது சரி என்றே எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் சொன்னது போல் ஒருவருக்கும் ஒரு ஒரு பார்வை. அதனால் முடிவு நாம நினைப்பது போல் வராது என தெரிந்தேதான் போட்டிக்குள் வரவே செய்ய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

போட்டி மேடையில் வைக்கப் படும் கதைக்கு ரீச் அதிகம் என்ற விஷயம்தான் காதலாம் பைங்கிளியை என்னை இங்கு கொண்டு வர வைத்தது. அதில் சொல்லப்பட்ட பார்வை பலருக்கு சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.

நான் ஆசைப்பட்டது கிடைத்துவிட்டதாகத்தான் எனக்குப் படுகிறது.

அதற்காக தேடல் 2018க்கும் உங்களுக்கும் முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எழுதி முடிந்த பின் ஒரு சிறு எதிர்பார்ப்பு எழும்பியதும் உண்மை. ஜெயித்த கதை என பெயர் வரும் போது அதற்காக அதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் கூடுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு.

அப்படி இல்லை என்றாலும் அது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை.

<<<<<<எழுதிய ஒவ்வொருவரின் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் அவர்களது வட்டத்தை வெறும் நான்கு ரொமான்ஸ் சீனுக்குள் அடக்கிக் கொண்ட போது மனம் வருத்தப்படுகிறது.>>>>>>>

ஆனாலும் இந்த வார்த்தைகள் ....

இப்ப காதலாம் பைங்கிளி வெறும் ரொமான்ஸ் சீனுக்குள் அடங்கிப் போய்ட்டுன்னு நான் எடுத்துக்கணுமா? இல்லை அந்த திறமையான எழுத்து என்ற கேட்டகரிக்குள்ளயே இந்தக் கதை வரலைனு நான் யோசிக்கணுமா?:unsure::rolleyes:o_O

ஏதோ கோபமாவோ வருத்தமாவோ சொல்றேன்னா இல்ல, சிரித்துக் கொண்டுதான் என்றாலும் இப்படித்தான் இருக்கிறது மனதுக்குள் கேள்வி.

ரொமான்ஸ் சீனுக்குள்ள முடிஞ்சு போய்ட்டுன்னா நிச்சயமா அது ஒத்துக் கொள்ள வாய்ப்பே இல்ல, 500+பக்க கதையில் மூனு இடத்தில் ரொமான்ஸ் சீன் இருக்குது. அதுவும் இரண்டிலிருந்து மூனு வரிக்குள்ள கடந்து போற அளவுக்கு.

அப்படின்னா நாம திறமையா எழுதல போல அப்படின்னு யோசிச்சுக்க வேண்டி இருக்கு.

திறமை... அதில் இங்கு எதிர்பார்க்கப் பட்டதாக தெரிவிக்கப்படும் அழுத்த கதைகளுக்கும் நாங்கள் எழுத்தாளர்கள் பரவலாக எழுதி இருக்கும் லைட்டர் ட்ராக் கதைகளுக்கும் கண்டிப்பாக ஒவ்வொருத்தர் பார்வைக்கும் கோணத்துக்கும் வித்யாசம் இருக்கும்.

கர்நாடக இசைதான் மேலான இசை என்றும் சினிமா பாடல்களுக்குத்தான் ரீச் அதிகம் என்றும் பார்த்துக் கொள்வது போன்றது அது.

அப்படின்னு பார்த்தாலும் இரண்டு மூன்றாம் பரிசு வாங்கிய கதைகளும் நண்டு போன்ற கதை ஜெனர்ல இருந்தது போலவும் இல்லை.

அதற்கு வெறும் votes எண்ணிக்கையில் மட்டுமே இந்த முடிவுன்றது காரணமாய் வருகிறது.

நம்ம (office, friends, relatives) மக்கள ஓட்டு போடச் சொல்லி இருந்தா இந்நேரம் 700 வோட்டாவது extra விழுந்துருக்கும், என்ன கதைய புள்ளி அளவு கூட வாசிச்சுருக்க மாட்டாங்க... ஆனாலும் நீ திறமையான எழுத்தாளரா select ஆகி இருப்ப அப்படின்னு கமென்ட் விழுது காதில்...

இங்கு வோட் என்பது அடிப்படையில் நம்ம கான்டாக்ட்ஸ் & familiarity எவ்ளவுன்றதுதானே reality, இதை எப்படி திறமைக்கு அளவுகோலா எடுத்துக்கிறதுன்னு புரியல.

kp க்கு விழுந்த வோட்டுகள் அத்தனையும் வாசகர்களால் மட்டுமே பதிவானவை. அதில் நான்கு வருடங்களாக என் கதைகளை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மையோர். எனக்கும் அவர்களுக்கும் இது புது தளம் என்றாலும் தேடி வந்து பதிவு செய்து வாக்களித்தவர்கள். (I Thank you all who voted for KP)

(என் family & friendsக்கு நான் கதை எழுதுவதையே தெரிவித்துக் கொண்டதில்லை, ஆக ஒரு வோட்டு கூட அந்த வகையில் பதிவானது இல்லை. )

கேரள வெள்ளத்திற்கு நிவாரண பணிக்கு சென்றிருந்ததால் அங்கு சிக்னல் இல்லாத பிரச்சனையால் ஒரு க்ரூப் ஆஃப் KP ரீடர்ஸுக்கு வாக்குப் பதியும் வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று என்றும் சொல்லி இருந்தேன்.

இதுவே இது எனது முதல் கதையாக இருந்தால் எனக்கு 10+ வோட்டு விழுந்திருக்குமா என்று கூட சொல்வதற்கில்லை.
அப்பொழுது கதை இன்னும் திறமை குறைந்த கதையாக மாறிப் போகுமே இங்குள்ள அளவீட்டு முறையின் படி.

எனக்கென்று இல்லை இந்த போட்டியில் முதல் கதை எழுதியோர் மற்றும் இத்தளத்தில் முதன் முறை எழுதியோர் அனைவருக்கும் இந்த வித நிலை நிச்சயம் இருக்கும்.

இவ்வளவு ஏன் நண்டுக்கு இங்கு நம் வாசகர்களை வாக்கு பதிய சொன்னாலும் வாக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தானே!
சினிமா பாடல்களை விரும்புவோரிடம் கர்நாடக இசைக்கு வாக்கு வாங்குவது போலல்லவா அது?

எதையும் குறையாக சொல்லவோ இல்லை ஜட்ஜ்மென்ட்டை விமர்சிக்கவோ இதை சொல்லவில்லை. Result is from the Lordனு சொல்வாங்க. so I agree with it wholeheartedly. ஆனால் அதே நேரம் திறமையற்ற ரொமான்ஸ் சீனுக்குள் முடிந்து போன கதை என்ற ஒரு முத்திரை காதலாம் பைங்கிளி மேல் விழுவதை ஒப்பவில்லை. அவ்வளவே!

It did not meet Thedal 2018s' expectation since I was not aware of what it really expected அப்படின்னு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

எனக்குன்னு மட்டுமில்ல தேடலில் கலந்து கொண்ட பல கதைகளையும் அப்படியே காண்கிறேன்.

Authors you guys Rocked(y)(y)(y)

தேடல் போன்ற ஒரு பெரும் நிகழ்வை அசாதாரணமாய் நடத்திக் காட்டியதற்காக மீண்டும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வரும் தேடல் நிகழ்வுகள் இன்னும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி

My Best wishes to the groom and the bride
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
நான் young and youth ma, நான் சொன்னது வேற
தலைமுறைக்கு தலைமுறை ரசனை வேறுபடுதுன்னு சொன்னேன். யூ மிஸ்டேக் மீ
View attachment 4531
நான் எங்கள் தலைமுறை என்று டைப் செய்தது உங்கள் என்று தவறி வந்துவிட்டது நீங்கள் யூத் என்பது தெரியும்பா தவறுதலாக வந்த தவறுக்கு sorry
 




Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
நானும் 2-3 novels தான் படிச்சேன்......... எல்லாமே படிக்காமல் vote-ம் போட்டேன்.......... Vote போட்டது prize-ம் வாங்கிவிட்டது...........
but எனக்கும் doubts சஷி போஸ்ட் பார்த்ததும்......... இது என்னோட கருத்து மட்டுமே.....

Voting Distribution.........
Results நடுவர்களுடைய தீர்ப்பும் Voting-ம் சேர்த்து முடிவெடுக்கப்பட்டதுனு சொன்னீங்க....... ஆனால் Results பார்க்கும் போது vote பார்த்து மட்டுமே வந்திருக்கு என்பது என்னோட கருத்து......
மொத்த Voters 710 பேர்... அதில்
வனிஷா 394, மோனிஷா 257, தென்றல் 191, வத்சலா 174, அன்னா ஸ்வீட்டி 162, மதுமதி பரத் 143
தேடல் 2018 results-ம் இதே line தான்..........
2nd prize Vanisha, 3rd prize Monisha
Consolation prize by Critics Srija Venkatesh
Consolation prizes to Thendral, ***********, Vathsalaa Raghvan, Madhumathi Bharath.........

எல்லா readers-ம் எல்லா கதைகளையும் படிக்கலைனு சொல்லும் போது வெறும் voting மட்டும் எப்படி winner-ஐ decide பண்ணுதுனு எனக்கு புரியல......
Criteria போட்டி துவங்குவதற்கு முன்னே கொடுதிருக்கலாம்...... Result announce பண்ணும் போது சொல்வது என்னோட பார்வையில் சரினு படல......
anyway, அது முடிஞ்சி போனது........ But in future, இதை தவிர்க்கலாம்...........
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நான் எங்கள் தலைமுறை என்று டைப் செய்தது உங்கள் என்று தவறி வந்துவிட்டது நீங்கள் யூத் என்பது தெரியும்பா தவறுதலாக வந்த தவறுக்கு sorry
சே! அதுக்குள்ள நான் ரொம்ப பொங்கிட்டேன். சாரி சித்ரா. இதுக்கு பேர்தான் ஆர்வகோளாறு
 




A

Anna Sweety

Guest
Criteria போட்டி துவங்குவதற்கு முன்னே கொடுதிருக்கலாம்...... Result announce பண்ணும் போது சொல்வது என்னோட பார்வையில் சரினு படல......
anyway, அது முடிஞ்சி போனது........ But in future, இதை தவிர்க்கலாம்...........
100% I agree with you.
நானெல்லாம் ரொமாண்டிக் த்ரில்லர் எழுதும் நபர். போட்டி துவக்கத்திலேயே என் ஜெனர் எல்லாம் இதுக்கு செட் ஆகுமா என கேட்கவும் செய்தேன். அதனாலென்னா எழுதுங்க என்றுதான் பதில் கொடுக்கப் பட்டது. 6 மாத வேலை. கடைசியில் நண்டு போன்ற அழுத்த கதையை தேடினோம் என க்ரிட்டீரியா சொல்லப்படும் போது ....

anyway, அது முடிஞ்சி போனது........ But in future, இதை தவிர்க்கலாம்........ என்று சொல்லிக் கொள்கிறேன்.
 




Last edited:

Aruna Kathir

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,030
Reaction score
4,650
Location
Palani
ஹாய் மக்களே

ஒரு வழியா தேடல் போட்டி முடிஞ்சாச்சு. முடிவுகளை அறிவிச்சாச்சு. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச உணர்வு. வெகுவாக திருப்தியாக இருக்கிறது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே உங்களது அதீத உழைப்பை கொடுத்து இருக்கிறீர்கள். ஆறு மாத பயணம். அதன் பின் எழுத்தாளர்களில் வேண்டுகோளுக்காக ஒரு மாத எக்ஸ்டென்ஷன். அதன் பின் முடிவுகளுக்காக இரண்டு மாத காத்திருப்பு. முடிவுகளில் எந்தவிதமான காம்ப்ரமைஸும் இருக்கக் கூடாது என கருதி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, ஓடி, களைத்து அமர்ந்து இருந்தாலும், ஒரு மிக பெரிய செயலை செய்து முடித்த திருப்தி எங்களுக்குள்.
நடுவர்களினால் ஒரு நாளைக்கு ஒரு நாவலை தான் படிக்க முடியும். அதுவும் கூட மிகப் பெரிய நாவல்களை எல்லாம் படிக்க ஒரு வாரம் கூட ஆனது.(நேமிராவின் நாவல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்களுக்கும் மேல்... இது போல தான் ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களின் அகத்திய ரகசியமும்... இன்னும் இது போல நிறைய உண்டு) இந்த இரண்டு மாத கால அவகாசம் போதவில்லை என்பது தான் உண்மை.

முடிவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இந்த முடிவுகள் நடுவர்களுடைய தீர்ப்பும், வோடிங் ஆக இரண்டுமாக சேர்ந்து முடிவெடுக்கப்பட்ட ஒன்று.
முதல் பரிசுக்கு எந்த படைப்பும் தகுதியாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்வது எங்களை நாங்களே குறைத்து சொல்வது போலத்தான். இப்படிப்பட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எழுத்தாளர்களை காயப்படுத்தும். ஆனால் இன்னும் அழுத்தமாக எதிர்பார்த்தோம். ஆரம்பம் முதலே கூறி வந்திருக்கிறேன், இது விளையாட்டு போட்டியல்ல. இணைய வரலாற்றில், இந்த ஜெனரில் யாருமே கொடுக்க முடியாத வாய்ப்பு ப்ளஸ் பரிசு இது என்று. அப்படி நாங்கள் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம் என்றால் எங்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகம் என்பதை எழுத்தாளர்கள் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது.

ஒரு கதையை பொறுத்தவரை வாசிப்பாளரின் பார்வை என்பது வேறு, எழுத்தாளரின் பார்வை என்பது வேறு, அதே கதையை ஒரு க்ரிடிக் பார்க்கும் பார்வை என்பது நிச்சயமாக வேறு தான். அதனால் தான் தங்களுக்கு பிடித்த கதை முதலிடத்தில் வரவில்லை என்றதும் சிலர் தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீகள். ஆனால் ஒருவருக்கு பிடித்த கதையை கிரிட்டிக்கும் நடுவர்களும் அலசி ஆராயும் போது கிடைக்கும் முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை வாசிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எழுதிய ஒவ்வொருவரின் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் அவர்களது வட்டத்தை வெறும் நான்கு ரொமான்ஸ் சீனுக்குள் அடக்கிக் கொண்ட போது மனம் வருத்தப்படுகிறது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இலக்கண பிழை, எழுத்து பிழை, கருத்து பிழை என்று நடுவர்கள் பட்டியலிடும் போது எங்கள் மனம் தவித்தது.

இரண்டு நாவல்கள், அவர்கள் உபயோகப்படுத்திய நேர்மையற்ற முறைகளுக்காக தேர்வில் சேர்த்து கொள்ளப்படவில்லை. ஒரே IP யில் இருந்து பல்வேறு பெயரில் மெயில் செய்வது, ஓட்டெடுப்பின் தன்மையை மாற்றி அமைக்க முயல்வது, ஒருவரே வேறு பெயர்களில் கமென்ட் செய்வது போன்றவைகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

முதல் பரிசை ரிசர்வ் செய்தால் கேள்விகள் வரும் என்று தெரியாதவர்களா நாங்கள்? இல்லை, அறுபதாயிரத்திற்கான பரிசை அறிவிக்க முடிந்தவர்களுக்கு இன்னும் நாற்பதாயிரம் ஒரு பிரச்சனையா என்ன? ஆனால் நாங்கள் சொல்ல வந்தது வேறு.

இன்னும் வெகு அழுத்தமாக, அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் கதையாக இருக்க வேண்டும் என்று இத்தனை பெரிய பரிசுத் தொகையை அறிவித்து திறமையை தேடியதில் என்ன தவறு இருக்கப் போகிறது?

அடுத்த சிவசங்கரியையும், வாஸந்தியையும், எண்டமூரி வீரேந்திரநாத்தையும் தேடியதில் எங்கள் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது தான் உண்மை.

குடும்ப நாவல் என்ற வட்டத்தை மிகக் குறுகிய வட்டத்திற்குள் எடுத்து சென்ற பெருமை நிறைய பேருக்கு உண்டு. என்னிடமே, ‘குடும்ப நாவல் என்ற பெயரில் மேட்டரை தான மா எழுதறீங்க..?’ என்று கேள்வி வந்ததும் உண்டு. அந்த வட்டத்தை உடைக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தேடல்.

இது ஒரு முன்னெடுப்பு. அதற்காக பொழுதுபோக்கு தளத்தை மாற்றியமைப்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் வட்டத்தை பெரிதாக்குவதுதான் எங்கள் நோக்கம். வாசிப்பவர்கள் பரந்துபட்ட எழுத்துக்களை வாசித்து உணர வேண்டும்.

ஆனால் இங்கு நடந்தது என்ன?
வித்தியாசமான எழுத்துக்களை நிறைய பேர் வாசிக்கவே இல்லை. அந்த வருத்தம் மிகவுண்டு. வோட்டிங் மிக முக்கியமாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்து இருந்தபோதும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
மொத்தம் 710 பேர் கலந்து கொண்டனர் இந்த ஓட்டெடுப்பில்! ஒருவருக்கு மூன்று ஓட்டுக்கள்.

Vanisha - 394
Monisha - 257
Thendral -191
Vathsala Raghavan -174
*********** -162
Madhumathi Bharath -143

நல்ல கதைளை படித்து வாக்களிக்கவில்லையே என்று இப்போது வருத்தப்படுகிறார்கள் சிலர்.
தாங்கள் நினைத்த கதை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அந்த கதைகளுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும். தங்களது நண்பர்கள் வட்டத்துக்கும் அந்த கதைகளை அறிமுகப்படுத்தி படிக்க செய்திருக்க வேண்டும். நல்ல கதைகளுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ‘என்னோட ப்ரெண்ட்ஸ் மூணு பேர் எழுதறாங்க... அவங்களுக்கு வோட் போட்டேன் மேம்...’ என்று என்னிடம் கூறியவர்கள் ஏராளம்.

இவ்வளவு சீரியசான ஒரு போட்டியில், அதிலும் அடுத்த தேடலுக்கு மீடியா கை கோர்க்க தயாராக உள்ள ஒரு போட்டியில், வாசிப்பாளர்களின் கருத்துக்களுக்கும் ஓட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தில், உங்களது கருத்துக்களையும் இருப்பையும் நாங்கள் மதிக்கிறோம் என்று சொல்லும் போது வாசிப்பாளர்களின் பொறுப்பும் தேவையும் மிக அதிகமானதாகிறது.

நியுஸ் செவன் சேனல் எம்டி என்னிடம் சொன்னது ஒன்றுதான். எக்ஸ்ட்ராடினரி டாலேண்ட்சை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்க... மீதியை நாங்க பார்த்துக்கறோம் என்பதுதான்.
அந்த எக்ஸ்ட்ராடினரி திறமைகளை தேடும் போது இயற்கையாகவே, எங்களது எதிர்பார்ப்பின் ஸ்கேல் ஆப் ரெபரென்ஸ் மிக அதிகம்.

சிவசங்கரியின் நண்டோ, அல்லது நமது மைதிலியின் உயிரானாய் உணர்வானாய் போன்ற ஒரு கதைகள் நிச்சயம் மைல்கல்கள். அதை போன்றதொரு மைல் கல்லை படைக்க முடியாதவர்கள் அல்ல நம் தோழிகள். இது முதல் களம்... பயிற்சி களமாகட்டும். எங்களுக்கும் சரி... உங்களுக்கும் சரி...

அடுத்த களத்தில் நிச்சயம் இன்னும் பெரிய எதிர்பார்ப்போடு சந்திப்போம். சரித்திரம் படைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக எங்களோடு கைகோர்த்து கொள்ளலாம்.

அதுவரை இதில் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களும் செய்யலாம். ஏனென்றால் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. முடிந்தால் இதே போன்றதொரு போட்டியை எப்போதும் போல காப்பியடித்து எங்களை விட இன்னும் நேர்மையாக எருமையாக கருமையாகவும் நடத்தலாம். அவர்கள் இஷ்டம். இந்த பாரா அரசியல் செய்ய நினைக்கும் சிலருக்கு மட்டுமே.

ஆனால் இந்த போட்டியை நடத்தி முடித்ததில் எங்களுக்கு வெகுவான மகிழ்ச்சி ப்ளஸ் திருப்தி. தேடலில் முடிவு எப்படி வந்திருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகித்தான் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனென்றால் வாசித்த ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக வாசித்தீர்கள் என்பதும் தெரியும், எழுத்தாளர்களின் உழைப்பும் மிக அதிகம். இது போன்ற போட்டிகளுக்கு பழகாத இந்த ஜனரஞ்சகமான எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் மக்களே!

வாருங்கள் பயணிப்போம்!

டிஸ்கி1 :

அடுத்த பத்து நாட்களுக்கு என்னால் சைட் பக்கம் கூட வர முடியாது மக்களே. எதுவாக இருந்தாலும் கேட்டு வைங்க. வந்து பதில் சொல்றேன். தம்பியின் திருமணத்திற்கு ரெடி ஆகிட்டு இருக்கோம். அம்மாவும் தங்கையும் இல்லாததால் நான் ஒருத்தி மட்டுமே அத்தனை வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன். சோ இப்போதைக்கு கண்ணை கட்டிட்டு இருக்கு வேலையெல்லாம்.

டிஸ்கி2:
அக்டோபர் 20 & 21 என் உடன்பிறப்புக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருமணம். இதையே அழைப்பாக எண்ணி தோழிகள் (தோழர்களும் வரலாம் ;) ) அனைவரும் வந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் மக்களே :)

Hi akka...
First a big congrats and a big thanks for this bold attempt.
Regarding my story in thedal, i think I have given my best in writing. So , i don't have jealousy. This site has given me more readers.. has introduced my writing to many ppl. That itself is a big task. As , i have planned to write till i can. So, considering the long run, i think I have gained readers who'll remember my story.
Regarding the result, i have no comments. I had some to n fro thoughts but it got cleared after your post.

It's partly my mistake, to not market my story to a wide range of audience...And many ppl tend to support ,vote authors whom they are quiet familiar with.And, not everyone would have studied every story and voted. So, no worries there.

On seeing the transparency of thedal, I naturally expected this split up vote list result during the result announcement itself. That would have reduced all doubts ka...

Anyway this is a big venture..And u have successfully completed it...
Let's see what thedal 2019 holds for us.. happy to have been a part. And will for sure participate in next thedal with yet another diff theme...
Bye ka...Thanks for the opportunity... @smteam, @Thendral for giving prompt links for the word files...

Ennoda thu ore oru doubt than, voting base panni mattumae than result ah because in the 710 votes, the counts show the prize categories..So what happened to lena sirs and ashokan sirs vote and judgement. Illa verum votes base panni mattum thannu neenga sonna, i have no questions at all. I totally agree.
Just a confusing thought.

Because ithellam manasula irukarappo, aduthu aduthu ezhutha oru chinna nerudal irukku. Eppadiyum voting base than na, marketing skill neraya theva padum enakku future la....As mine is not a romance story i truly thought those who like diff writing will like my story nu...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top