• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedi vantha devathiye_04 part 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
View attachment 507

அத்தியாயம்-4

அன்புசெல்வியின் கண்கள் கலங்கி இருந்தததை பார்த்தவுடன் “சாரி… அன்பு” என்றாள் சௌமியா,

“இட்ஸ் ஒகே மேடம்” என்று அன்புசெல்வி சொன்னதும் மேலும் அதை நினைவுப்படுத்த விரும்பாமல் “அன்பு… நாம் வாங்கிட்டு போகிற கிப்ட்ஸ் எல்லாம் போதுமா?” என்றாள் சௌமியா.

“போதும் மேடம்” என்று அன்பு செல்வி சொல்ல “சரிங்க அன்பு. நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்றாள்.

“அண்ணா… நாம ஹோமுக்கு போயிட்டு வந்ததும், எவ்வளவு நாளுன்னாலும் சரி அவங்கள் பிரண்டு கூடவே இருந்து பார்த்துக்கிற பொறுப்பை அன்புக்கே தரலாமுன்னு இருக்கேன். என்ன நான் சொல்றது சரியா?” என்று அபிப்ராயம் கேட்டாள்.

“நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்று ஆதிரையன் சொன்னதும் அவள் அன்புசெல்வியிடம் “அன்பு... உங்களுக்கும் ஒகேதானா?” என்றாள்.

“மேடம். இதைப்பத்தி நானே கேட்கலாமுன்னு இருந்தேன். ரொம்ப நன்றி மேடம்” என்று சொல்லி புன்னகைதாள்.

“எல்லாம் ஓகேதான் ஆனா அடிக்கடி மேடமுன்னு சொல்லாதீங்க” என்றதும் சரிங்க என்று அன்பு செல்வி சம்மதிக்க “இப்படி கூட கூப்பிடுங்க” என்றாள்.

கருணை மலர்கள் இல்லத்தை கார் அடைந்துவிட ஹாரன் அடித்தான் ஆதிரையன்.

காவாளி கேட்டைத் திறக்க கார் உள்ளே சென்று நின்றது.

காரை உள்ளே சென்று ஆதிரையன் நிறுத்த சௌமியா காரை விட்டு வெளியே வந்து நின்றபொழுது பின் சீட் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அன்புசெல்வி யாரையோ அழைத்துக் கொண்டு இருந்தாள்.

“அன்பு… நீ வந்திட்டியா? உங்களுக்கு ஏதோ ஆக்சிடென்ட்ன்னு மதர் சொன்னாங்க. இந்து எப்படி இருக்காள்?”‘என்று கேட்டபடி அவள் தோழிகள் ரஞ்சனியும், மேரியும் வர அவர்களுடன் சில சின்ன பெண்களும் வந்தாள்.

“எனக்கு ஒன்றும் ஆகலைப்பா. நம்ம இந்துவுக்குதான் கொஞ்சம் அடிபட்டிருக்கு, அதைப் பத்தி நான் அப்புறமாக சொல்றேன். இவங்கள நம்ம ஹோமுக்கு கிப்ட், சாக்லேட் தர வந்திருக்காங்க அதனால் நீ ஹோமுல இருக்கறவங்களை பிரேயர் ஹால்ல அசம்பிள் செய்” என்றாள்

“சரிக்கா நான் அப்படியே செய்கிறேன்” என்று ரஞ்சனி சென்றுவிட்டாள்.

“ஏய்… வள்ளி… ஏய்… பிள்ளைகளா… இங்க வாங்க இந்த கிப்ட்டை எல்லாம் எடுத்துட்டு போயி ஹால்ல வைங்க” என்று கட்டளையிட்டாள் அன்புசெல்வி.

“சரிக்கா” என்று அவர்கள் கிப்ட்களை எடுத்துச் செல்ல “மேரி… நீ ஹாலுக்கு போயிடு. நான் இவங்களை மதர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு அப்படியே நான் அங்கிருந்து வந்திடறேன்” என்றாள்.

சரி என்று “வாங்க புள்ளைகளா நாம போகலாம்” என்று அழைத்துக் கொண்டு சென்றாள் மேரி.

“சௌமியா மேடம்… வாங்க போகலாம். சார் நீங்களும்தான்” என்று அவள் அழைக்க அவள் பின்னே சென்றனர்.

மதரின் அறைக்குள் செல்ல “வாங்க சார்… வாம்மா சௌமியா… நானே உங்களை அழைக்க வரலாமுன்னு கிளம்பிட்டுதான் இருந்தேன். நீங்களே வந்துட்டிங்க” என்றார் மதர்.

“மதர் உங்களை தேடி நாங்கதான் வரனும்” என்றாள் சௌமியா.

“மதர்… இவங்க நம்ம ஹோமுல இருக்கறவங்களுக்கு கிப்ட் கொண்டு வந்திருக்காங்க. ரஞ்சனியையும், மேரியையும் எல்லாரையும் ஹால்ல அசம்பிள் பன்னச் சொல்லியிருக்கேன். கிப்ட்களை ஹாலுக்கே கொண்டு போக சொல்லிட்டேன். ஹாலுக்கு வரமுடியாதவங்களுக்கு அப்புறமாக அவங்க இடத்திலேயே கொண்டு போயி தந்திடலாம் மதர்.” என்றாள் அன்புசெல்வி.

“சரிம்மா… அப்படியே செய்யலாம். நீங்க வேற திரும்பி ஊருக்கு போகனும். எல்லாரும் அசம்பிள் ஆயிருப்பாங்க. வாங்க ஹாலுக்கு போகலாம்” என்றார் மதர்.

மதர் முன்னே செல்ல அவர்களுடன் சௌமியா, ஆதிரையன் உடன் செல்ல அன்பு செல்வியும் பின்னே வந்துக் கொண்டிருந்தாள்.

பிரேயர் ஹாலை அவர்கள் அடைந்த பொழுது இருபது வயதுக்குட்பட்ட பல்வேறு வயதில் பெண் குழந்தைகள், சிறுவர்கள், வயதான முதியவர்கள், பாட்டிகள் எல்லோருமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே இருந்தனர்.

மதரைப் பார்த்து அவர்கள் எழுந்து நிற்க அவர்கள் நடுவே சௌமியா, ஆதிரையன் உடன் செல்ல அன்பு செல்வியும் சென்று மையப்பகுதியை அடைந்தார்கள்.

சௌமியா, ஆதிரையன் இருவரையும் முன்னே நிறுத்தினார்.

“இன்னிக்கு செல்வி.சௌமியா அவர்களுக்கு பிறந்தநாள் அதனால நமக்கு எல்லாம் கிப்ட் தர அவரும், அவர் அண்ணன் திரு.ஆதிரையன் சாரும் வந்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கனுமுன்னு ஆண்டவனை பிரார்த்தனை செய்யலாம்” என்றார் மதர்.

மதர் சொன்னவுடன் அனைவரும் சில நிமிடங்கள் கண்மூடியப்டி அவர்கள் கைகளை கூப்பி கும்பிட்டனர்.

“கண்களை திறங்க” என்றதும் அனைவரும் கண்களை திறந்தவுடன் மதர் “சௌமியா… ஆரம்பிச்சு வைம்மா” என்றார் மதர்.

அவள் கொடுக்க ஆரம்பிக்க மற்றவர்களும் வந்து உதவி செய்ய அனைவருக்கும் எல்லாம் சில நிமிடங்களில் சேர்ந்தது.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
புதுத்துணிகள், சாக்லேட், கேக் என்று அவர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டவர்கள் அதைச் சாப்பிடாமல் கையில் வைத்து காத்திருக்க மதர் “நமக்கு பரிசுப் பொருட்கள் தந்த சௌமியா, ஆதிரையன் நன்றாக வாழ நாம் வாழ்த்துவோம்.” என்றார்.

“உலகத்தில் வாழ உயிர் கொடுத்து எங்களை வாழ வைத்து கொண்டிருக்கும் ஆண்டவனே! உமது கருணைக்கு என் நன்றி. எங்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்துக் கொண்டிருக்கும் ஆண்டவனே! உமது கருணைக்கு நன்றி. இன்று பிறந்தநாள் காணும் சௌமியாவும், அவள் அண்ணன் ஆதிரையனும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க!” என்று அனைவரும் ஒன்று சேர எல்லாரும் வாழ்த்திவிட்டு அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்,

சௌமியா அதைக் கண்டு ஆனந்த பரவசத்தில் இருந்தபொழுது அவள் அண்ணன் கேக்கை அவளுக்கு ஊட்ட சந்தோஷமாக அதை சாப்பிட்டாள்.

“இப்பவே நீங்க வந்து ரொம்ப நேரமாச்சு. ராத்திரி இருட்டறதுக்குள்ளே நீங்கள் உங்களின் வீட்டுக்கு வேறு போகனும். ஹோமுல இருக்கறவங்க மீதியை பார்த்துக்குவாங்க. வாங்க நாம் போகலாம்” என்று மதர் அழைக்க மதருடன் சௌமியா, ஆதிரையன், அன்புசெல்வி ஆகியோர் அங்கிருந்து அகன்று சென்றனர்.

“அன்பு... நீ போயி உனக்கும், இந்துவுக்கும் ரெண்டு வாரம் அங்கே தங்கறதுக்கு தேவையான பொருட்களை பேக் செஞ்சிட்டு வந்துவிடு. நான் அதுவரைக்கும் இவங்கள் கூடப் பேசிட்டு இருக்கிறேன்” என்றார் மதர்.

“சரிங்க மதர்” என்று அவள் சென்றாள்.

“அன்பு வரவரைக்கும் நாம நம்ம ரூமில் வெயிட் செய்வோம்.” என்று அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் மதர்.

அன்பு செல்வி சில நிமிடங்களில் தனக்கும், தன் தோழிக்கும் தேவையான பொருட்களை ஒரு பெரிய பேக்கில் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

“அன்பு… எல்லா பொருட்களையும் எடுத்திட்டியாம்மா? எதையும் மறக்கலையே?” என்று மதர் கேட்டாள்.

“இல்லை மதர் ரெண்டு வாரம் அங்கே தங்கறதுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டேன். எங்களோட மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் எங்க சூட்கேஸ்ல வைச்சிருக்கேன். எங்க சூட்கேஸ் சாவி இந்தாங்க மதர்” என்று சில சாவிகளை மதரிடம் தந்தாள் அன்புசெல்வி.

“சரி… அன்பு…” என்று வாங்கிக் கொண்ட மதர் “சரி சௌமியா… அன்பும் வந்துட்டாள். வானம் வேற இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி மேலே போக போக குளிரும் அதிகமாகும். அதனால் நீங்க இப்பவே கிளம்புங்க. மத்தவற்றை நாம் போனில் பேசிக்கலாம்.” என்று மதர் சொல்ல சரி என்று மூவரும் தலையசைத்தனர்.

“சரிங்க மதர்… நாங்க வர்றோம்” என்று ஆதிரையன் சொல்ல “சரிப்பா” என்ற மதர் “அன்பு… இந்துவை பத்திரமாக பார்த்துக் கொள்” என்றார்.

சௌமியாவும், ஆதிரையனும் சென்றுக் காரில் ஏறி முன்சீட்டில் அமர்ந்துக் கொள்ள பின்னே அன்பு ஏறும்பொழுது அவளது தோழிகள் வந்தனர்,

“அன்பு… கிளம்பிட்டியா? நாங்க இந்துவுக்கு நல்லா குணமாகுமுன்னு நாங்க இங்கே ஆண்டவனை வேண்டிக்கிறோம். நீ அவளை நல்லா பாத்துக்குவேன்னு எங்களுக்கு தெரியும். அவள் கண் முழிச்சதும் போன் செய்.” என்றார்கள்.

“சரிங்கடி. நான் அப்ப அப்ப போன் செய்யறேன். நான் சீக்கிரமாக இந்துவோட வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு காரில் இருந்தபடி டாட்டா காண்பித்து விடைப் பெற்றாள் அன்பு செல்வி.

கார் அவர்கள் ஊரான சௌமியா எஸ்டேட்டை நோக்கி சென்றது. மாலை முடிந்து இரவு வர ஆரம்பித்ததால் குளிர் அதிகமாக கார் கண்ணாடியை அன்பு முழுவதுமாக மூடி விட்டாள். சௌமியாவும் மூடிக் கொள்ள ஆதிரையன் மட்டும் அரை சன்னலை திறந்து வைத்திருந்தான்.

“சௌமியா உனக்கு குளிருதாம்மா? அண்ணா சன்னலை மூடிடவா?” என்று கேட்க “இல்லை அண்ணா. உனக்கு குளிருதாண்ணா?” என்றாள் தங்கை.

“நான் ஸ்வெட்டர் போட்டு இருக்கேம்மா.” என்றதும் “சரி அண்ணா” என்றாள்.

ஆதிரையன் காரின் டேப்பை ஆன் செய்ய அதில் மென்மையான மனதை வருடும் பாடல்கள் ஒலிக்க, சௌமியா அதை கேட்டபடியும் அமைதியாக ரசித்தபடியும் வந்தாள். “அண்ணா… அண்ணா…” என்று எப்பொழுதும் எதையோ பேசிக் கொண்டு இருக்கும் அவள் அமைதியாக வந்தது அன்பு செல்விக்கு ஆச்சரியமளித்தது.

“என்ன சௌமியா அமைதியாக வராளேன்னு பார்க்கறீங்களா அன்பு?” என்று ஆதிரையன் கேட்க அவள் ஆம் என்பது போல் பார்த்தாள்.

“அன்பு… நான் நைட்டில் டிரைவ் செய்யும்பொழுது என் கவனம் தவறக் கூடாதுன்னு அவள் என் கூட பேச மாட்டாள்.” என்றான் அண்ணன்.

“அதுவும் நல்லதுதானே. இந்த மாதிரி ஆபத்தான வளைவுகள் இருக்கும் இடத்துல உங்க கவனம் சிதறக்கூடாதுன்னு நினைக்கிறாங்க அவங்க. இதுக்கு உங்க மேலே அவங்களுக்கு இருக்கிற அக்கறைதான் காரணம்” என்றாள் அன்பு செல்வி.

“சரியா சொன்னீங்க அன்பு. என் அண்ணன் மலைப்பாதையில டிரைவிங் செய்யறப்ப கவனமாக இருக்கனும் நினைக்கிறேன் அவ்வளவுதான். நானில்லை இந்த மாதிரி ஆபத்தான பாதையில் அதுவும் இரவு வேளைகளில் பயணம் செய்யறப்ப டிரைவ் செய்யறவங்க கவனத்தை அவங்க கூட பயணிக்கறவங்க சிதற விடாமல் பார்த்துக்கனும். அனாவசிய விபத்து இதனால் குறையும்” என்றாள் சௌமியா.

சில நிமிடங்களில் கார் ஹாஸ்பிடலை நெருங்கியது.
 




Last edited:

mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
ல்லாம் ஓகேதான் ஆனா அடிக்கடி மேடமுன்னு சொல்லாதீங்க” என்றதும் சரிங்க என்று அன்பு செல்வி சம்மதிக்க “இப்படி கூட கூப்பிடுங்க” என்றாள்.
nice character hats off soumiya
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
“உலகத்தில் வாழ உயிர் கொடுத்து எங்களை வாழ வைத்து கொண்டிருக்கும் ஆண்டவனே! உமது கருணைக்கு என் நன்றி. எங்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்துக் கொண்டிருக்கும் ஆண்டவனே! உமது கருணைக்கு நன்றி. இன்று பிறந்தநாள் காணும் சௌமியாவும், அவள் அண்ணன் ஆதிரையனும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க!” என்று அனைவரும் ஒன்று சேர எல்லாரும் வாழ்த்திவிட்டு அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்,
nice words and quotes
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
அன்பு… நான் நைட்ல டிரைவ் செய்யும்பொழுது என கவனம் தவறக் கூடாதுன்னு அவ என் கூட பேச மாட்டா.” என்றான் அண்ணன்.

“அதுவும் நல்லதுதானே. இந்த மாதிரி ஆபத்தான வளைவுகள் இருக்கும் இடத்துல உங்க கவனம் சிதறக்கூடாதுன்னு நினைக்கிறாங்க அவங்க. இதுக்கு உங்க மேல அவங்களுக்கு இருக்கிற அக்கறைதான் காரணம்” என்றாள் அன்பு செல்வி.
nice
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
“சரியா சொன்னீங்க அன்பு. என் அண்ணன் மலைப்பாதையில டிரைவிங் செய்யறப்ப கவனமா இருக்கனும் நினைக்கிறேன் அவ்வளவுதான். நானில்ல இந்த மாதிரி ஆபத்தான பாதையில் அதுவும் இரவு வேளைகளில் பயணம் செய்யறப்ப டிரைவ் செய்யறவங்க கவனத்தை அவங்க கூட பயணிக்கறவங்க சிதற விடாம பார்த்துக்கனும். அனாவசிய விபத்து இதனால குறையும்” என்றாள் சௌமியா
all must follow
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top