• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha devathiye_05 part 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“இந்து… ஸ்டெரயின் பன்னாதே. உனக்கு ஒண்ணுமில்லடா. மீதியை அப்புறமாக பேசிக்கலாம். அக்கா நான் இங்கேதான் இருக்கேன்” என்று சொல்ல சரி என்று அமைதியானாள் இந்துமதி.

அன்பு செல்வியும், இந்துமதியும் தன் கண்களால் பேசி முடித்தனர். அன்பு செல்வி அவள் கைகளை பற்றி அவள் தலை வருடி கன்னங்களில் முத்தமிட்டு சென்றாள்.

“அன்பு… சாப்பிட்டுட்டு வாங்க” என்று சரிகா சொல்ல அவள் தோழியிடம் வந்து “நான் சாப்பிட்டு வந்து வர்றேன்” என்று சொல்ல சரி என்று தலையசைத்தாள்.

அன்பு செல்வி சாப்பிட்டு வர பின் வந்து சரிகா சாப்பிடச் சென்றாள்.

“இந்து… தூங்குடா…” என்று சொல்லி வருட அவள் கண்மூடி தூங்கினாள். அன்பு செல்வி தன் தோழி கண் விழித்த மகிழ்ச்சியில் தூங்காமல் இருந்தாள்.

“அன்பு மேடம்… உங்க அக்கா தங்கை பாசத்தைப் பார்த்து எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லியேன்னு ஏக்கமாக இருக்கு” என்றாள் சரிகா.

“நீயும் என் தங்கை மாதிரிதான் சரிகா. நீ என்னை அக்கான்னு கூப்பிடலாம்” .

“தாங்க்ஸ் அன்பு… சாரி அக்கா” என்றதும் “சரிகா உங்கள் மேடத்துக்கு மட்டுமில்லை எனக்கும் நெருக்கமானவங்கள் தாங்க்ஸ் சொன்னால் பிடிக்காது.” என்றாள் அன்புசெல்வி.

மறுநாள் காலை உறக்கம் கலைந்து கண்விழித்த இந்துமதி நேராக பார்க்க “குட்மார்னிங்” என்றபடி அருகில் வந்தாள். அன்பு செல்வி.

“அக்கா… குட்மார்னிங்” என்று பதிலுக்கு சொல்லிவிட்டு “அக்கா… நாம எங்கே இருக்கோம்? எனக்கு என்ன ஆச்சுக்கா? ஏன் நான் ஐ.சி.யூவுல இருக்கேன்? ” என்றாள்.

“இந்து… அது ஒண்ணுமில்லைடா… உனக்கு சின்னதாக ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுடா. அதான் இங்கே இருக்கோம்” என்று பதமாகச் சொன்னாள்.

“ஆக்சிடென்டா? எனக்கா? எப்படிக்கா?” என்று அவள் பதறி கேட்க “இந்து… அதை பற்றி எல்லாம் அக்கா அப்புறமாக உனக்கு சொல்லறேன்டா.” என்றாள்.

“சரிக்கா. அக்கா இது நம்ம மிஷன் ஹாஸ்பிடல் மாதிரி இல்லையே அக்கா.”

“இந்து… இது நம்ம மிஷன் ஹாஸ்பிடல் இல்ல. வேற ஹாஸ்பிடல்” என்றாள்.

“சரிக்கா. நான் எத்தனை நாளாக இருக்கேன்?” என்று கேட்க “இந்து… நீ இங்க மூணு நாளாகத்தான் இருக்கீங்க” என்றாள் சரிகா.

“அக்கா… நான் அவ்வளவு நாளாக இருக்கேனா? எனக்கு எதுவும் தெரியலையே” என்று இந்துமதி சொல்ல “நீங்க ரெண்டு நாளாக மயக்கத்தில் இருந்தீங்க அதான் உங்களுக்கு தெரியலை” என்றாள் சரிகா.

“நான் ரொம்ப கஷ்டம் தந்துட்டேனா அக்கா?” என்று கேட்டாள்.

“இந்து… நீ எனக்கு எந்த தொந்தரவும் தரலடா. நீ அமைதியாக தூங்கினாய் அவ்வளவுதான்”

“அக்கா... “ என்று அவள் வாயெடுக்க “என்ன அன்பு? இந்து என்ன சொல்றாங்க?” என்று கேட்டபடி வந்தாள் சௌமியா.

“குட் மார்னிங் மேடம்” என்று அவளும், சரிகாவும் சொல்ல “வெரி குட்மார்னிங்” என்றபடி இந்துவின் அருகில் வந்தாள்.

“இந்து… வெரி குட்மார்னிங்…” என்று சொல்லியபடி இந்துமதியை பரிசோதிக்க ஆரம்பிக்க “குட்மார்னிங்” என்று சிரித்தாள்.

“டாக்டர்… என் வலது கையை அசைக்க முடியலை டாக்டர். என் வலது கால்லேயும் கொஞ்சம் பெயின் இருக்கு டாக்டர்” என்றாள் இந்துமதி. அன்புசெல்வியும் உடனே சௌமியாவை பார்த்தாள்.

“அது ஒண்ணுமில்லை. நீங்க கிழே விழுந்தப்ப உங்க ரைட் ஹேண்டலயும், ரைட் லெக்கலயும் கொஞ்சம் பலமாக அடிபட்டுருச்சு. அதான் கொஞ்சம் பெயினாக பீல் பன்றிங்க. அவ்வளவுதான்” என்றாள்

“டாக்டர்… ஏதாவது பிராக்சர் எனக்கு…” என்று இந்துமதி தயங்கி கேட்க “நோ… நோ... அப்படியெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமில்லை” என்றாள் சௌமியா.

“சரி டாக்டர்” என்று அவள் சொல்லும் போது நர்ஸ் மாலதி வந்து நின்றாள்.

“அன்பு… மாலதி வந்துட்டாங்க. நீங்க கிளம்பற நேரம் வந்தாச்சு.” என்ற சௌமியாவிடம் “மேடம் இந்து கூட இன்னும் கொஞ்ச நேரம்” என்று கேட்டாள்.

“அன்பு… மத்தியானம் வந்து எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருங்க. இப்ப நீங்க கிளம்புங்க” என்றவள் உடனே இந்துவைப் பார்த்து “என்ன நான் சொல்கிறது சரிதானே?” என்றாள் சௌமியா.

“சரிதான் டாக்டர்” என்றவள் அன்புசெல்வியிடம் “அக்கா… நீ போயிட்டு மதியம் வாக்கா” என்றாள் இந்துமதி.

“அதான் இந்துவே சொல்லிட்டாங்க இல்லை நீங்க கிளம்பலாம்” என்றாள் மாலதி.

“இந்து… நான் போயிட்டு மதியம் வர்றேன்டா” என்று சொல்லிவிட்டு கன்னத்தில் தட்டி விட்டு செல்ல “சரிக்கா” என்றாள் இந்துமதி.

“சரிம்மா நானும் போயிட்டு வர்றேன்” என்று சௌமியா கிளம்பிச் சென்றாள்.

அன்புசெல்வி சென்றபின் இந்துமதி தன் அருகில் வந்த மாலதியிடம் “டாக்டர், ரொம்ப நல்ல டைப்பாக இருக்காங்க” என்றாள்.

“ஆமா, சௌமியா மேடம் எப்பவும் அப்படித்தான். “

“இவங்களை மாதிரி ஹாஸ்பிடலுக்கு ரெண்டு டாக்டர் இருந்தால் போதும். பேஷண்ட்களுக்கு நல்ல வைத்தியம் சரியாக நடக்கும். ஹாஸ்பிடலுக்கும் நல்ல பேர் கிடைக்கும். என்ன இவங்களை மாதிரி டாக்டர்களை மேனேஜ்மென்ட் ரொம்ப நாள் வைச்சுக்காது”

“இங்கே அவங்களை யாராலயும் எதுவும் பன்ன முடியாது ஏன்னா இந்த ஹாஸ்பிடலே அவங்களுடையதுதான்” என்றாள் மாலதி.

“அப்ப சரி. இந்த ஹாஸ்பிடல் பேர் என்ன? மதுரையில இது எங்கே இருக்குது?” என்று இந்துமதி கேட்டாள்.

“தர்மலிங்கம் நினைவு மருத்துவமனை. இது மதுரையில் இல்லை. ஊட்டில இருக்குங்க” என்றாள் மாலதி.

“ஒ… அப்படியா… நாங்க ரொம்பநாள் மதுரையில இருந்தோம். அந்த ஞாபகத்துல கேட்டுட்டேன்” என்று சமாளித்தாள் இந்துமதி.

மாலதி சென்றபிறகு நான் ஊட்டியில் இருக்கேனா? அன்பு அக்கா ஏன் ஊட்டி வந்தாள்? நான் ஏன் ஊட்டி வந்தேன்? எனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? அக்கா நர்ஸ் டிரஸ்ல இருந்தாளே, ஒரு வேளை இங்கே வேலையில சேர்ந்துட்டாளா? அப்புறம் அக்கா கர்ப்பமாக இருந்தாளே? அவ குழந்தையை பெத்துக் கொடுத்துட்டாளா? நம்ம மிஷன் ஹாஸ்பிடலுன்னா பரவாயில்லை இந்த ஹாஸ்பிடலுக்கு எப்படி அக்கா பணம் கட்டப் போகிறாள்? என்று அடுக்கடுக்காக கேள்வி எழ சரி எல்லாவற்றையும் அக்கா வந்த பின்னாடி கேட்போம் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
nide epi sis:):):):):).anbu surrogate mothera..... induka ellam maranthitucha:unsure::unsure::unsure::unsure:waiting eagerly sis:):):):)
ஆமா அன்பு ஒரு குழந்தைக்கு அம்மாதான் இந்துவுக்கு எல்லாம் மறக்கல ஆனா மறதி ஏற்பட்டிருக்குதான் அது எந்த அளவுக்கு என்பது வரும் அத்தியாங்களில் தெரியும
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Nice sakthi indhu ku ninaivu vandhu doocha super Anbu oru kuladhai ku tthaiya?
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Nice sakthi indhu ku ninaivu vandhu doocha super Anbu oru kuladhai ku tthaiyaí ¾í´
நன்றி மகா இந்து விழித்து விட்டாள் அன்பு ஒரு குழந்தைக்கு தாய்தான்
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
“அன்பு மேடம்… உங்க அக்கா தங்கை பாசத்தப் பாத்து எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லியேன்னு ஏக்கமா இருக்கு” என்றாள் சரிகா.

“நீயும் என் தங்கை மாதிரிதான் சரிகா. நீ என்ன அக்கான்னு கூப்பிடலாம்” என்றாள்.

“தாங்க்ஸ் அன்பு… சாரி அக்கா” என்றதும் “சரிகா உங்க மேடத்துக்கு மட்டுமில்ல எனக்கும் நெருக்கமானவங்க தாங்க்ஸ் சொன்னா பிடிக்காது.” என்றாள் அன்புசெல்வி.
very nice episode
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top