• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha devathiye_06 part 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

அத்தியாயம்-6

மாலதி திரும்பி வந்ததும் அவள் “சிஸ்டர்… இங்க பீஸ் எப்படி வாங்குவாங்க? கம்மியாகவா அல்லது அதிகமாகவா?” என்றாள்.

“சௌமியா மேடம் காசுக்காக இந்த ஹாஸ்பிடலை ரன் பன்னலை. ஏழைகளுக்கும் நல்ல வைத்தியம் கிடைக்கதான் இதை நடத்துறாங்க. நீங்க பில்லை பற்றி கவலைப் பட வேண்டாம்.” என்று சொல்ல சமாதானமானாள் இந்துமதி.

மதியவேளையில் அன்புசெல்வி சீக்கீரமாகவே வந்துவிட்டாள்.

“அக்கா குட் ஆப்டர்நுன்” என்ற தன் தோழியைப் பார்த்து “குட் ஆப்டர்நுன் இந்து” என்று சொல்லியவண்ணம் வந்து அமர்ந்தாள்.

“என்ன இந்து… அக்கா இல்லாமல் போரடிச்சிடுச்சா?” என்று அன்பு செல்வி தோழியைப் பார்த்து கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லை அக்கா. நான் மாலதி அக்கா கூட பேசிட்டு இங்கே இருக்கறதை பார்த்துட்டு உன்னை பற்றி நினைச்சிட்டு இருந்தேன். டைம் போனதே தெரியல். சரி நீ சாப்பிட்டியா அக்கா?” என்றாள்.

“ம்… நான் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா?” என்று கேட்டவள் நாக்கை கடித்துக் கொண்டு “உனக்குதான் டிரிப்ஸ் ஏறுதுல்ல” என்றாள்.

ஐ.சி.யூ வார்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

கருணை மலர்கள் இல்ல தலைவி மதர் நிர்மலா மேரியும் உடன் அவர்கள் தோழி ரஞ்சனியும் கதவைத் திறந்துக் கொண்டு வந்தார்கள்.

“வாங்க மதர்… வா ரஞ்சனி…” என்று அன்புசெல்வி கூப்பிட்டபடி வந்தவள் அருகில் வந்த மதர் “காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று வாழ்த்தினார்.

மாலதியும் அவர்கள் அருகில் வந்து நிற்க காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று அவளையும் வாழ்த்தினார்.

இந்துமதியின் அருகில் மதர் வர அவள் எழுந்து அமர முயல “நோ… நோ… எந்திரிக்காதே.
படும்மா இந்து.” என்று அவள் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார்கள்.

“இந்து இப்ப எப்படிம்மா இருக்குது? பரவாயில்லையா?” என்று மதர் கேட்டார்.

“எனக்கு என்ன மதர் ஆண்டவன் கிருபையாலும்.உங்களின் ஆசீர்வாதத்தாலும் நான் நல்லா இருக்கேன் மதர்” என்றாள் இந்துமதி.

“சரிம்மா உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்று மதர் சொல்ல “தாங்க்ஸ் மதர்” என்றாள்.

“இந்து… நம்ம ஹோமில் இருக்கற எல்லோரும் வரதாக சொன்னாங்க. மதர்தான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் குணமாகட்டும். ஒருநாள் எல்லாரும் போயி பாக்கலாமுன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் ரஞ்சனி.

“ஆமாம்மா எல்லாரும் உன்னை பார்க்கனுமுன்னாங்க. நீ வேற ஐ.சி.யூவுல் இருக்கியா அதான் இன்னிக்கு வேண்டாமுன்னு சொல்லிட்டேன்” என்றார் மதர்.

சௌமியா ஐ.சி.யூ வார்டுக்குள் உள்ளே வந்தவள் “இப்பதான் ஹாஸ்பிடலுக்கு வந்தேன். நீங்க வந்திருக்கறதாக சொன்னாங்க. என்னை ஆசீர்வாதம் பன்னுங்க மதர்” என்றாள்.

“காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று அவர் கைகளை வைத்து வாழ்த்த “தாங்க்ஸ் மதர்: என்றாள் சௌமியா.

“அப்புறம் மதர் உங்க இந்துவை பூரணமாக சரி பன்னிட்டுதான் உங்க ஹோமுக்கு அனுப்புவேன்” என்றாள்.

“நன்றிம்மா” என்று மதர் சொல்ல “மதர் இதுக்கெல்லாம் நீங்க எனக்கு நன்றி சொல்லக் கூடாது இது என் கடமை. சரிங்க மதர், நான் ரவுண்ட்ஸ் போகனும். நான் இப்ப கிளம்பறேன்” என்று சொல்லி சென்றாள் சௌமியா.

“சரிம்மா. ஆண்டவன் உனக்கு துணையிருக்கட்டும்” என்று வாழ்த்த சௌமியா கிளம்பி சென்றார்.
“ஆண்டவன் உங்க நல்ல மனசுக்கு நல்ல இடத்துலதான் சேர்த்திருக்கிறார்” என்று சொல்ல “ஆமா சௌமியாவுக்கு தங்கமான மனசு” என்றாள் அன்புசெல்வி.

சிறிதுநேரம் மதரும், ரஞ்சனியும் பேசியபின் அவர்கள் “சரிம்மா, நாங்க கிளம்பறோம்.” என்று கிளம்ப “சரிங்க மதர்” என்றாள் இந்துமதி.

“இந்து… நானும் கிளம்பறேன்டி” என்று ரஞ்சனி சொல்ல “சரிடி, ஹோமுல இருக்கற எல்லோரையும் நான் கேட்டதாக சொல்லு” என்றாள்.

“சரிம்மா அன்பு… நாங்க போயிட்டு வர்றோம்” என்று மதர் சொல்ல “சரிங்க மதர்” என்ற அன்புசெல்வி உடனே இந்துமதி பக்கம் திரும்பினாள்.

“இந்து…. நான் மதர் கூட போயிட்டு வர்றேன்” என்று அன்புசெல்வி சொல்ல “சரிக்கா” என்றாள் இந்துமதி.

மதர் கூட சென்று விட்டு திரும்பிய அன்புசெல்வி “மதர் ரொம்ப நல்லவங்க இல்லை” என்று சொல்ல “ஆமாக்கா” என்றாள் இந்துமதி.

“சரிக்கா, நீ எப்ப இங்கே வந்து வேலையில சேர்ந்தே?” என்றாள் இந்துமதி.

“ஏய்…! நான் இங்கே வேலையில சேரலடி. நீ இங்கே இருக்கறவரைக்கும் நர்சாக இருங்கன்னு சௌமியா மேடம் கேட்டாங்கடி. அவங்களும் நம்மகிட்ட ஒரு பைசா வாங்காமல் வைத்தியம் செய்யறாங்க. உன்னையும் பார்த்துக்கிற வேலையும் அதிகம் இல்லையே அதான் நானும் அதுக்கு சரின்னு சொல்லி செய்யறேன்” என்றாள்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“அதானே பார்த்தேன். நீதான் மிஷன் ஹாஸ்பிடல்ல மட்டும் வேலை செய்யற ஆளாச்சே. நீ இங்கேயும் வேலை செய்யலாம் அக்கா இதுவும் மிஷன் ஹாஸ்பிடல் மாதிரிதான்”

“அப்புறம் எனக்கு எப்ப, எப்படிக்கா ஆக்சிடென்ட் ஆச்சு?” என்றாள் அன்புசெல்வி.

“இப்ப உனக்கு எதுக்குடி அது எல்லாம். நானே அதை மறக்கனுமுன்னு நினைக்கிறேன். அப்பா…! இப்ப அதை நினைச்சாலும் என் கை, கால் எல்லாம் நடுங்குது. சௌமியா மட்டும் கடவுள் மாதிரி அங்க வரலைன்னா உன்னை அந்த நிலையில வைச்சுகிட்டு நான் என்ன செஞ்சிருபேன்னு எனக்கே தெரியலைடி” என்றாள் அன்பு செல்வி.

“ஆமாக்கா… சௌமியா மேடம் ரொம்ப நல்ல டைப்தான் சரி நீ என் கேள்விக்கு பதில் சொல்லலையே. எனக்கு எப்ப, எப்படிக்கா ஆக்சிடென்ட் ஆச்சுக்கா?

இந்துமதியின் இந்த கேள்விகள் அன்புசெல்வியை நிலை குலைய வைத்தன.

“இந்து… உனக்கு சரி ஆகட்டும். நான் அப்புறமாக சொல்கிறேன்” என்று சமாளித்தாள்.

“சரிக்கா, நாம மதுரையிலதானே இருந்தோம். நாம ஏன் ஊட்டிக்கு வந்தோம்?”

“ஏய்…! இந்து… நீ என்ன கேட்கிறே? நாம ஊட்டிக்கு வந்துதான் ஒரு வருசத்துக்கு மேல ஆச்சேடி.”

“என்னக்கா நீ சொல்ற? நாம இங்க ஊட்டிக்கு வந்து ஒரு வருசத்துக்கு மேல ஆச்சா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் இந்துமதி.

“இந்து…” என்று அவள் அருகில் வந்த அன்புசெல்வி “உனக்கு எதுவும் ஞாபகம் இல்லியாடி. எனக்கு இங்கே இருக்கிற ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சுது. உனக்கும் மிஷன் ஸ்கூல்ல கிடைச்சுது. நாம் இங்க வந்து சேர்ந்துட்டு ஹோமுல தங்கி வேலை செய்யறோம்” என்றாள் அன்புசெல்வி.

“அக்கா… எனக்கு ஏதுவும் ஞாபகம் வரலைக்கா. நீ சொல்கிறாய் அது சரியாகத்தான் இருக்கும்” என்று சொன்னாள்.

இந்துமதியின் இயல்பான குணமே அதான். அவள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு ஜோவியல் டைப். அவளுக்கு சோகம் என்பதே இல்லை. “இந்த சின்ன வாழ்க்கையில கவலைபட்டுட்டு இருக்க எனக்கு நேரமில்லை” என்று எப்பொழுது சொல்வாள். எவ்வளவு பெரிய கடினமான விஷயம் என்றாலும் “இவ்வளவுதானே அக்கா” என்று சொல்லிவிடும் டைப். அவள் இதை ஏற்றுக் கொண்டதில் ஆச்சரியமில்லை.

“அப்ப நம்ம ஹோம் மதரும், ரஞ்சனியும் வந்தப்ப தெரிஞ்சவங்க மாதிரி பேசினியே?” என்று கேட்டாள் அன்புசெல்வி.

“அக்கா… இதென்ன கேள்வி? நாம் மதுரையில இருந்தப்பவே ஊட்டி கருணை இல்ல மதர் நிர்மலா மேரியை நமக்கு தெரியுமே. அப்புறம் ரஞ்சனி என்ன தெரிஞ்சவள் மாதிரி பேசினா நானும் அப்படியே பேசினேன் அவ்வளவுதான்” என்று சொல்ல சொல்ல அன்புசெல்விக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருந்தது.

“சரிக்கா, உனக்கு என்ன குழந்தை பிறந்தது? பொண்னா? பையனா? “

“பையன்தான் பொறந்தான். அதை நீதான்டி எடுத்து அவர்களுக்கு கொடுத்தேடி. நான் அவனை பார்க்கக் கூட இல்லையே. நீதான்டி அவன் சூப்பராக இருந்தான் அக்கா. எனக்கு கொடுக்கவே மனசில்லைன்னாய். நான் பார்க்கனுமுன்னு நீ அவனை போட்டோ எடுத்து வைச்சிருக்கறதாக எங்கிட்ட காட்டினாய். நான் பார்த்த பின்னாடி சரிக்கா நீ பார்த்துட்டே இல்லக்கா, இனி இது வேண்டாம் ஏன்னா இதை பார்த்து பார்த்து அழுவேன்னு அழிச்சியே” என்றாள் அன்பு செல்வி.

“எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையக்கா. நான் அந்த பிரகாஷ் என்னே ஏமாத்துன சோகத்துல வந்தேன். அந்த பணக்காரங்களுக்கு குழந்தையை பெத்து தர ஏற்கனவே சம்மதிச்சு இருந்த நீ அதுக்காக ஹாஸ்பிடலுக்கு போக தயராயிட்டு இருந்தாய். நான் என் காதல்தான் போச்சு அந்த குழந்தையை நீ பெத்துக்கற வரைக்கும் உனக்கு துணையாக இருக்கலாமுன்னு முடிவெடுத்து உன்கூட ஹாஸ்பிடலுக்கு வந்தேன். அவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு” என்றாள் இந்துமதி.

அடக்கடவுளே! நீ மூணு வருச நினைவுகளே இழந்து நிற்கிறியாடி என்று நினைத்த அன்புசெல்வி “அதுக்கு அப்புறம் நிறைய நடந்துருச்சு. அதை எல்லாம் அப்புறமாக நான் உனக்கு சொல்கிறேன்” என்றாள்.

“சரிக்கா. நீ அப்புறமாக என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்று சர்வசாதரணமாய் சொல்ல “இந்து… உனக்கு இது அதிர்ச்சியாய் இல்லை?” என்று கேட்டாள் அன்புசெல்வி.

“எதுக்கா?” என்று அவள் கேட்டாள் அன்புசெல்வி.

“உனக்கு மூணு வருச நினைவே இல்லையே. இந்த மாதிரி யாருக்காகவது ஆயிருந்தால் இந்நேரம் கத்தி கூப்பாடு போட்டிருப்பாங்க. நீ என்னடான்னா நீ அப்புறமாக என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்று சர்வசாதரணமாய் சொல்கிறாய்” என்றாள் அன்புசெல்வி.

“அக்கா… இப்ப அதை நினைச்சி கவலைப்பட்டு என்னாக போகுது? இப்ப எனக்கு என்ன எல்லாமா மறந்து போச்சு? ஒரு மூணு வருசம்தானே. நீ என்கூட இருக்கறவரைக்கும் நான் எல்லாத்தையும் மறந்தாலும் எனக்கு கவலையில்லை. “ என்று சொல்லி சிரித்தாள்.

“சரி…சரி… உனக்கு ஒகேன்னா எனக்கும் ஒகேதான்” என்று தன் தோழியிடம் சொல்லி விட்டாலும் இது ஏன் நடந்ததுன்னு சௌமியாகிட்ட கேட்கனும் என்று நினைத்துக் கொண்டாள் அன்புசெல்வி.

சௌமியாவும், ஜெயகாந்தனும் இருவரும் ஒன்றாக ஐ.சி.யூ வார்டுக்குள் வந்தனர்.

“குட்மார்னிங் மேடம்… குட்மார்னிங் சார்…”என்று அன்புசெல்வி சொல்ல அவர்களும் “குட்மார்னிங்” என்றனர்.

“என்ன அன்பு… இந்து என்ன சொல்றாங்க?” என்று கேட்டாள்.
 




Last edited:

Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice update.. Indu moondru varuda ninaivugal maranthuvitatha.. Indu ku love failure a.. Anbu Oda vazhalkaiyil enna nadanthathu..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Write your reply...
Nice update.. Indu moondru varuda ninaivugal maranthuvitatha.. Indu ku love failure a.. Anbu Oda vazhalkaiyil enna nadanthathu..
ஆம் இந்துவுக்கு மூன்று வரூட நினனவுகள் இல்லை காதல் தோல்வியும் உண்டு அன்பின் வாழ்க்கை சம்பவங்கள் வரும் அத்தியாயங்களில் தெரியும்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Nice sakthi???? ippo dhan khadhai oru point tu varuthu ? Indhu ku 3 varuda ma nadatha ellam marandhu phocha ?adhai konjam kuda mandaila eythe kama evalo cool a erukura??‍♀ romba brave girl dhan ?ennavo suspence eruku eni khadhai jet Veygum dhan?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top