• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha thevathaiye-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

அத்தியாயம்-3

“அன்பு.., நீங்களும், மதரும் வாங்க. உள்ளே போயி பார்க்கலாம்” என்ற சௌமியாவின் குரல் கேட்டு அவளைப் பார்த்தாள்.

சௌமியா கதவைத் திறந்து செல்ல பின்னாலேயே அன்பு செல்வியும் மதரும் உள்ளே சென்றனர்.

இந்துமதி ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க அவளின் முகத்தைப் பார்த்த அன்புசெல்வி தன் கரங்களால் தோழியின் தலையையும், கன்னங்களையும் வருடிவிட்டு நின்றாள். மதர் பிரார்த்தனை செய்துவிட்டு ஆசீர்வாதம் செய்தார்.

சில நிமிடங்களில் வெளிவந்த பின்னர் “மதர் அவங்களை நல்லா குணமாக்கி பழைய இந்துமதியாக உங்கள் ஹோமுக்கு சீக்கிரமே அனுப்பிடறேன்” என்றாள் சௌமியா.

“சரிம்மா” என்று அவர்கள் தலையசைக்க “ஆமாம் மதர். நானும் அவள் கூடவே இருந்து அவளைப் பார்த்து கொள்கிறேன்” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு.., உன்னோட துணி, பொருட்கள் அப்புறம் இந்துவுக்கு தேவையான பொருட்களை எல்லாம் நான் கொடுத்து அனுப்புகிறேன்” என்றார் மதர்.

“அதுக்கு அவசியமில்லை மதர். நானே இன்னிக்கு வரதாக இருந்தேன். நானும் அண்ணாவும் அன்போட ஹோமுக்கு வர்றோம். அவங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் அன்பு எடுத்துக்கட்டும்” என்றாள் சௌமியா.

“சரிம்மா… அப்ப நான் கிளம்புகிறேன்” என்று மதர் கிளம்பிச் சென்றார்கள்.

“மேடம்… நீங்க ஹோமுக்கு போகும்பொழுது சொல்லுங்க. நான் உங்களோட ஜாயின் பன்னிக்கிறேன்” என்றாள். அன்புசெல்வி.

“நாம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே அங்கே போகப் போகிறோம். இப்ப நான் வீட்டுக்கு போயி டிரஸ் மாத்திட்டு வர்றேன் உடனே நாம் கிளம்பறோம்” என்றாள் சௌமியா.

சௌமியாவின் புது பர்த்டே டிரஸ் முழுவதும் ரத்தக் கறை இருந்ததை அன்புசெல்வி கவனித்தாள்

“சாரி மேடம். உங்க பர்த்டே டிரஸ் வீணாகப் போயிடுச்சு” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு… இந்த பர்த்டே டிரஸ் என் அண்ணா எனக்கு எடுத்து கொடுத்தது அதனால் எனக்கு இம்பார்டன்ட்தான் ஆனால் அதைவிட முக்கியம் உங்க பிரண்டு உயிரு” என்றாள் சௌமியா.

“ஆமா. இதேமாதிரி இன்னொரு டிரஸ் வாங்கிக்கலாங்க அதைப் பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாங்க.” என்றான் ஆதிரையன்.

“உங்க ரெண்டு பேருக்கும் தங்கமான மனசுங்க” என்றாள் அன்புசெல்வி.

“சௌமியா… டாடி கால் பன்னினாரு. எங்கே வர்றீங்கன்னு கேட்டாரு?” என்று கேட்டபடி ஜெயகாந்தன் வந்தான்.

“நான் வீட்டுக்கு போயி டிரஸ் மாத்திட்டு உடனே வர்றேன். இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடறேன்னு சொல்லு” என்றாள் சௌமியா.

“சரி சௌமியா… நான் கிளம்பறேன். நீ மறக்காமல் வந்துடு. இந்த விருந்தே உனக்காகத்தான்” என்றபடி அவன் கிளம்பிச் சென்றான்.

“மேடம்… நீங்கள் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுங்க. நான் அதுவரைக்கும் இங்கேயே நான் வெயிட் பன்றேன். அதுவுமில்லாமல் இந்துவை இங்கே பார்த்துக்க என்னைத் தவிர யாருமில்லை” என்று அன்புசெல்வி சொன்னாள்.

“சரி அன்பு… நான் வீட்டுக்கு போயிட்டு டிரஸ் சேஞ்ச் பன்னிட்டு அவங்களின் வீட்டுக்கு போயிட்டு வந்திடறேன். நான் வந்ததும் ஹோமுக்கு நாம் போயிட்டு வருகிறோம்” என்றாள்.
சௌமியா அண்ணனுக்கு கால் செய்து “அண்ணா… நீ எங்கே இருக்கிறாய்? நீ எங்கே இருந்தாலும் ஹாஸ்பிடல் முன்னால் வந்திடு” என்று சொல்லிக் கொண்டேச் சென்றாள்.

அன்பு செல்வி மறுபடியும் சென்று கண்ணாடித் துவாரம் வழியே தன் தோழியைப் பார்த்துவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். அவள் அணிந்திருந்த சிலுவையை கையில் எடுத்துப் பார்த்தவள் ஆண்டவனிடம் வேண்டியபடியே அமர்ந்திருந்தாள்.

********

மீனா எஸ்டேட்டில் மிகப்பெரிய அரண்மணை போன்ற வீட்டின் முன் கார் வந்து நின்றது. ஆதிரையன் காரைக் கண்ட வாட்ச்மேன் கேட் கதவைத் திறக்க கார் உள்ளே சென்று காரிடரில் நின்றது.

காரை விட்டு சௌமியா பச்சை வண்ண சுடிதாரில் இறங்க அவனைப் பின் தொடர்ந்து ஆதிரையனும் இறங்கினான்.

“வாம்மா சௌமியா… வாப்பா எல்லோரும் உள்ளே வாங்க” என்று அர்ச்சுனனும், ஜெயகாந்தனும் அவன் நண்பன் இளந்திரையனும் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

வீட்டிற்கு உள்ளே சென்ற சௌமியா “அங்கிள் என்னை ஆசீர்வாதம் பன்னுங்க” என்று காலில் விழ “நல்லா இரும்மா” என்று ஆசீர்வாதம் செய்தார் அர்ச்சுனன்.

அர்ச்சுனனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். கம்பீரமான முகத் தோற்றம் கொண்ட அவரின் கண்களில் கனிவு தெரிந்தது. நரைத்த முடி, கூர்மையான பார்வை, எடுப்பான நாசி, உழைத்த கரங்களும், தோள்களும் இன்னும் வலுவாக இருந்தன.

“வாம்மா… உனக்காகதான் வெயிட்டிங். சாப்பாடு எல்லாம் எப்பவோ ரெடி.” என்று டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார் அர்ச்சுனன்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
டைனிங் டேபிளில் அவர்கள் அமர விதவிதமான சாப்பாடு பரிமாறப்பட்டது. சௌமியா உட்பட எல்லோரும் சாப்பிட்டு முடிக்க ஆப்பிள் துண்டுகளை சாப்பிட்டு விருந்தை நிறைவு செய்தனர். சௌமியா உட்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தனர்.

“சௌமியா… இன்னும் ஏதாச்சும் வேண்டுமா?” என்று அர்ச்சுனன் கேட்க “அய்யோ! அங்கிள் இது செரிக்கவே நைட் ஆகும். இன்னுமா?” என்றாள்.

“சௌமியா... கோயிலுக்கு போயிட்டு வருகிற வழியில் ஏதோ ஆக்சிடென்ட் கேசாமே. ஜெயா சொன்னான்” என்று விசாரித்தார் அர்ச்சுனன்.

“ஆமா அங்கிள்… அதான் அங்கிள் வர லேட்டாயிடுச்சு. அவங்க கருணை மலர் இல்லத்தை சேர்ந்தவங்கள். அவங்க கூட வந்தவங்களுக்கு லேசான அடிதான். இந்துமதிக்குதான் பலமான அடிப்பா. அவங்க நிலைமைதான் கொஞ்சம் சீரியஸ். அவங்க கண்ணு முழிச்சால்தான் நிலைமை தெரியும். பாவம் அந்த பொண்ணு” என்று பரிதாபப்பட்டாள்.

“உங்கிட்ட வந்துட்டாங்க இல்லை, அவங்களுக்கு இனி எதுவும் ஆகாதும்மா” என்று அர்ச்சுனன் சொல்ல “உங்கள் வாக்கு பலிக்கட்டும் அப்பா” என்றாள்.

“சௌமி… அந்த பொண்ணு கண்ணு முழிச்சிட்டாங்களா?” என்றான் ஜெயகாந்தன்

“நம்ம வீட்டுக்கு வர வரைக்கும் கேட்டுட்டேன். அவங்க இன்னும் கண்ணு முழிக்கல.”

“சரி அப்ப நான் கிளம்பறேன். அன்பை கூட்டிட்டு ஹோமுக்கு போகிறதாக சொல்லி இருந்தேன். ஹாஸ்பிடலுக்கு போயி இந்துவை பற்றி விசாரிச்சுட்டு அன்பை பிக் பன்னிட்டு ஹோமுக்கு கிளம்பறேன்” என்றாள் சௌமியா.

“சரிம்மா சௌமியா.., ஒரு நிமிசம்” என்று சொல்லி பக்கத்து அறைக்குச் சென்றார்.

தட்டில் புதுத்துணி, வாழைப்பழம், வெற்றிலை பழம், சிறு நகை பெட்டி, மல்லிகைச் சரம் சகிதம் கூடியத் தட்டுடன் வந்தார் அர்ச்சுனன்.

“அம்மாடி சௌமியா… உன் பிறந்தநாளுக்கு என்னோட சின்ன பரிசு. நீ மறுக்காமல் வாங்கிக்கனும்” என்றார்.

“சரிப்பா” என்று அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு தட்டைப் பெற்றுக் கொண்டவள் அண்ணனிடம் தட்டை தந்து விட்டு மல்லிகைப்பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள்.

“சரிப்பா நான் போயிட்டு வர்றேன்” என்று அவள் விடைப்பெற்றுக் கிளம்ப ஆதிரையனும் தட்டுடன் அவள் கூட வந்தான்.

“அண்ணா அதைக் கொடுங்க” என்று தட்டை வாங்கிக் கொண்டு வந்தவளை வீட்டின் முன் வரை வந்து டாட்டா காண்பித்து வழி அனுப்பினார்கள்.

“சௌமி… நீ அந்தப் பொண்ணுக்கு எதுன்னாலும் கால் பன்னு உடனே வந்திடறேன்” என்று ஜெயகாந்தன் சொல்ல “சரி” என்று காரில் ஏறிக் கொண்டாள்.

சௌமியாவின் அண்ணன் காரை ஸ்டார்ட் செய்ய அவள் எல்லாருக்கும் டாட்டா காண்பித்து விட கார் சென்றது.

“சௌமியாவ இப்பதான் சின்னப் பொண்ணா அவங்க அப்பா கூடப் பார்த்த மாதிரி இருக்குப்பா.” என்று ஜெயகாந்தன் தந்தை சொல்ல “ஆமாப்பா” என்று தலையசைத்தான் அவன்.

“அவ அப்பா என் கூடத்தான் வேலைக்கு வந்தாரு. எங்க ரெண்டு பேரோட கடின உழைப்புதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம். நாங்க அப்ப எல்லாம் நேரம் காலம் இல்லாம உழைப்போம். வறுமையிலயும், கஷ்டத்துலயும் எங்க கூட இருந்தவன் எஸ்டேட், பாக்டரின்னு வந்தப்பிறகு அவன் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கல” என்று தன் நண்பனை நினைத்து வருந்தினார்.

“சௌமியாவ அவ அண்ணன் கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்கிறாருப்பா. அவள விட்டு பிரியாம அவளோட சின்ன சின்ன ஆசைய கூட நிறைவேற்றி வைக்கிறாரு. அவருக்கு ஒரு மனைவி வந்தா அவள எப்படி பாத்துப்போங்களோன்னு நினைச்சி அவரு கல்யாணத்தயும் வேண்டாங்கறாரு.” என்றான் இளந்திரையன்.

“நானும் பாத்துட்டு வர்றேன். அவன் மேல தர்மலிங்கத்துக்கு அபார நம்பிக்கை உண்டு. ஆதிரையன் மேல இருக்கற நம்பிக்கையிலதானே அவன வெறும் கார்டியனா போடாம மொத்த சொத்தையும் அவன் பேருல எழுதி வைச்சுட்டு போயிருக்கான்” என்றார் அர்ச்சுனன்.

“அப்படியாப்பா! அப்ப சௌமியா பேருல” என்றான் ஜெயகாந்தன்.

“அவ பேருல அவ அப்பா சொத்தும் எதுவும் இல்லைப்பா. ஆதிரையன் பார்த்து ஏதாவது கொடுத்தாதான் அவளுக்கு” என்றார்.

“ஆனா எனக்கு தெரிஞ்சு அவ பேருல பேங்க்ல நிறைய டிபாசிட் போட்டிருக்காரு. நிறைய லேண்ட் வாங்கி போட்டிருக்காரு. நகைகளும் வாங்கி தந்திருக்காரு” என்றான் இளந்திரையன்.

“ம். எனக்கும் தெரியும். நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். இந்த நிமிசம் வரைக்கும் நல்லாதான் பாத்துகிட்டு இருக்கான். அவனும் தங்கமான பையன்தான் ஆனா எதிர்காலத்துலயும் அப்படியே இருந்தா சரி”

“அப்பா! அவ மேஜர் ஆனதும் அவரு அப்பா சொத்தை அவளுக்கு திருப்பி எழுதி தரலையா?” என்று அவர் மகன் சந்தேகத்தை எழுப்பினான்.

“இல்லப்பா. அவ மேஜர் ஆனதும் அவ பர்த்டே அன்னிக்கு திருப்பி எழுதி தர டாகுமெண்ட் எல்லாம் எழுதினான் ஆனா சௌமியாதான் எல்லாவற்றையும் கிழிச்சு போட்டுட்டு அண்ணா… இந்த சொத்து உங்ககிட்டயே இருக்கட்டும். எனக்கு கல்யாணம் ஆனப்பிறகு நீ சீதனமாக ஏதாவது தா. அப்ப நான் சந்தோசமாக வாங்கிகிறேன்னுட்டா” என்றார் தந்தை.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“அதுக்கப்புறம்தான் அவளுக்கு தெரியாமல் அவள் பேருல பல சொத்துகள், நகை, டிபாசிட் என்று வாங்கி தர ஆரம்பிச்சிட்டாரு. அவளுக்கு அதை அன்பு பரிசா தந்ததால தட்டாம வாங்கிட்டா.” என்று தந்தை சொல்லும் பொழுது “நல்ல மனுசன் இல்ல அங்கிள்” என்றான் இளந்திரையன்.

“ஆமாம்பா” என்று முடித்துக் கொண்ட தந்தையிடம் “சரிப்பா நானும் வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் கிளம்பறேன்” என்று இளந்திரையன் கிளம்பினான்.

*****

சௌமியா அங்கிருந்து கிளம்பி காரில் வரும் பொழுது “அண்ணா… அர்ச்சுனன் அங்கிளுக்கு என் மேலயும் சரி, உங்க மேலயும் சரி எப்பவும் தனி பிரியம்” என்றாள்.

“ஆமாம்மா… உன் சின்ன வயசிலிருந்தே அப்பா உன் பிறந்தநாள் அன்னிக்கு அவர் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. தீபாவளி, பொங்கலுன்னு நல்லா நாளில் எல்லாம் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவாரு. உன் வாழ்க்கையில எது நடந்தாலும் அவரக் கேட்டுதான் முடிவு செய்வாரு.அந்த பழக்கம்தான் நானும் உன்ன எல்லா நல்ல நாளிலும் சரி, முக்கிய தருணங்களிலும் சரி இங்க கூட்டிட்டு வர்றேன்டா”

“ஆமாண்ணா… அதுமட்டுமில்ல சின்ன வயசிலிருந்தே நான் இங்க வந்தா சாக்லேட்,புக்ஸ்,பென்சில், பேனான்னு ஏதோ கிப்ட் தந்திடுவாரு அதனாலயே நான் சின்ன வயசுல இங்க வந்திடுவேண்ணா. நான் வளர்ந்த பின்னாடி அதுவும் நீ வந்த பின்னாடி அதுக்கு அவசியமில்லாம, நான் கேட்காமலேயே எல்லாத்தையும் நீ வாங்கி தந்திடற அண்ணா.” என்றாள் சௌமியா.

“சௌமி… வைச்சுக்கோடா. ஒரு கிப்ட்டுக்கு ரெண்டு கிப்டா வைச்சுக்கோடா.” என்றான் அவள் அண்ணன்.

“அதுதான் இப்ப என் பிரச்சனையே அண்ணா. ரெண்டு டிரஸ், ரெண்டு நகைப்பெட்டின்னு ரெண்டும் பேரும் கொடுக்கிறிங்க. உனக்கு சின்ன லாபமோ, சின்ன சந்தோசமா வந்தாலும் சரி நீ உடனே கிப்டா தரேண்ணா. நீங்களும் சரி, அங்கிளும் சரி கிப்டா தந்த நகை,சொத்து, டிபாசிட்களயே என்னால கணக்கு வைச்சிக்க முடியல” என்றாள் சௌமியா.

“செல்லம்… இதுக்கே நீ மலைச்சுப் போயிட்டா இந்த எஸ்டேட், பாக்டரி மிச்ச சொத்தெல்லாம்”

“அண்ணா… சௌமியா பாவம். இந்த சொத்து பிரச்சனை, அதோட தலைவலி எல்லாம் என்னால தாங்க முடியாதுன்னுதான் அதெல்லாம் வேண்டாமுன்னு நீயே வைச்சுக்கோன்னு உங்கிட்ட விட்டுட்டு நான் பிரீயா இருக்கேன். நான் இப்பவும் சொல்றேன் அண்ணா. என் கல்யாணம் முடிஞ்சபின்னாடி நீ தர சொத்த ஏத்துக்குவேன் அதுமட்டுமில்லாம அண்ணா… நான் அன்னிக்கு எதை தந்தாலும் கண்டிப்பா அன்னிக்கு நீ மறுக்காம ஏத்துக்கனும்”

“சரிடா… அத அப்ப பாக்கலாம். ஹாஸ்பிடல் வருதுடா செல்லம்” என்று அண்ணன் சொல்லும்போது கார் மருத்துவமனையின் காரிடரில் வந்து நின்றது.

“அண்ணா, நாம இப்ப என்ன செய்யறோமுன்னா இந்த கிப்ட் எல்லாவற்றையும் என் ரூமுல வைச்சிட்டு வந்து அன்ப கூட்டிட்டு நாம ஹோமுக்கு போயி அவங்க திங்க்ஸ் எடுத்துட்டு அப்படியே ஹோமுல இருக்கறவங்களுக்கு சாக்லேட், கிப்ட் எல்லாம் தந்துட்டு வரனும் அண்ணா” என்றாள் சௌமியா.

“சரிம்மா உன் ஆசைப்படியே செய்யலாம்” என்றதும் சௌமியா காரை விட்டு இறங்கி அர்ச்சுனன் அங்கிள் தந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு விரைந்து சென்றாள்.

அவள் அண்ணனும் தங்கைக்கு துணையாக சில பொருட்களை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

சௌமியா தன் பொருட்களை எல்லாம் அறையில் வைத்துவிட்டு அன்புசெல்வி இருக்குமிடம் நோக்கிச் சென்றாள். அன்புசெல்வியோ ஐ.சி.யூவின் முன்னாலே தவம் கிடப்பது போல் கிடந்தாள்.

சௌமியாவின் வருகையைப் பார்த்து எழுந்து அவள் நிற்க “அன்பு என் கூட வாங்க” என்றபடி ஐ.சி.யூவுக்குள் செல்ல அன்புசெல்வியும் உள்ளே சென்றாள்.

நர்ஸ் மாலதி உடனே அவர்கள் அருகில் வர “நர்ஸ்… பேசண்ட் கண் விழிச்சாங்களா? ஏதாவது அசைவு தெரிஞ்சுதா?” என்றாள் சௌமியா.

“இல்ல மேடம்” என்று அவள் பதில் சொன்னாள்.

“ஒகே, கவனமா பாத்துக்கோங்க. எதுன்னாலும் உடனே இன்பார்ம் பன்னுங்க. நானும் அன்பும் கொஞ்சம் வெளில போக வேண்டியிருக்கு அதனால சில மணி நேரங்களுக்கு எதுன்னாலும் ஜெயகாந்தன் சாருக்கு இன்பார்ம் பன்னுங்க.” என்றாள்

“சரிங்க மேடம்” என்று அவள் தலையசைத்தாள்.

“மாலதி… உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே. இப்ப பரவாயில்லையா?” என்று அக்கறையுடன் விசாரித்தாள் சௌமியா.

“அம்மாவுக்கு சரி ஆயிடுச்சு மேடம். நீங்களும், சாரும் இருக்கறவரைக்கும் எங்களுக்கு என்ன குறை மேடம்” என்று சிரித்தபடி சொன்னாள் மாலதி.

“நம்மகிட்ட வேலை பன்றவங்கள நாமதான் நல்லா பாத்துக்கனுமுன்னு அப்பா சொல்லுவாரு” என்று சொன்ன சௌமியாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அன்புசெல்வி.

“சரி நான் வர்றேன். நீ எதுன்னாலும் உடனே இன்பார்ம் செய்” என்று அவள் வெளியே வர அன்புசெல்வியும் உடன் வந்து விட்டாள்.

“அன்பு… நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் செளமியா
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“சாப்பிட்டேன் மேடம். நர்ஸ் விமலா வந்து கூட்டிட்டு போயி கேண்டீனில் சாப்பாடு வாங்கி தந்தாங்க மேடம்” என்றாள் அன்பு செல்வி.

“சரி அன்பு… நாம இப்ப உங்க ஹோமுக்கு போயி உங்கள் திங்க்ஸ், உங்கள் பிரண்டு திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு அப்படியே ஹோம்ல இருக்கறவங்களுக்கு கிப்ட் தந்துட்டு வருகிறோம். என்ன?” என்றாள்

“மேடம் ஆனால் இந்துவை…” என்று அவள் தயங்கினாள்.

“அன்பு… உங்க பிரண்டை பற்றி நீங்கள் கவலைபட வேண்டாம். நாம் வர வரைக்கும் இங்கே இருக்கறவங்கள் அவளை பார்த்துக்குவாங்க.” என்றாள் சௌமியா.

“சரி மேடம்… நாம அப்ப கிளம்பலாம்” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு… என்ன இப்படியேவா? இந்த ரத்தக் கறை படிஞ்ச சுடிதாரோட போனா அவங்க என்ன நினைப்பாங்க?”

“எங்கிட்ட வேற டிரஸ் இல்லையே. பராவாயில்லை மேடம். ஹோம் போகிற வரைக்கும்தானே நான் அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்” என்றாள் அன்பு செல்வி

“அன்பு… அதெல்லாம் வேண்டாம். நீங்க என் கூட வாங்க” என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றவள் ஒரு பையை நீட்ட அதில் ஒரு அழகிய புது சுடிதார் இருந்தது.

“மேடம்… இது… இது…” என்று அவள் திகைத்தபடி கேட்டாள்.

“உங்களுக்குதான். இதை போட்டுட்டு வாங்க. நான் வெயிட் பன்றேன்” என்று சிரித்தபடி சொன்னாள்.

சௌமியாவின் அன்பில தடுமாறி நின்றவளைப் பார்த்து “அன்பு… என்னைப் பாக்காம போயி ரெடியாயிட்டு வாங்க” என்று அதட்டினாள்.

“சரிங்க மேடம்” என்று அவள் சென்றாள்.

அன்புசெல்வி சில நிமிடங்களில் சௌமியா கொடுத்த லைட் நீல நிற வண்ண சுடிதாரில் வந்து விட்டாள். அன்பு செல்வி முகம் கழுவி, தலை முடியை சற்றே வாரி தளர்வாக விட்டு கிளிப் போட்டு, பொட்டினை சரி செய்திருந்தாள். அன்பு செல்வியை அதுவே மிக அழகாக காட்டியது.

“அன்பு… இந்த சுடியில சூப்பரா இருக்கீங்க” என்று சௌமியா சொல்ல அவள் எதுவும் சொல்லாமல் தன் சோகத்தை மறைத்து மெல்லியதாகச் சிரித்தாள்.

“சரி வாங்க. நாம ஹோமுக்கு போகலாம்” என்றவள் போன் செய்து “அண்ணா… நான் ரெடி. நீங்க எங்க இருக்கீங்க?” என்றாள் சௌமியா,

“சௌமி நீ முன்னாடி நீ வந்துடும்மா. நான் கார்ல இருக்கேன்” என்று பதில் சொல்ல “வாங்க… அண்ணா நமக்காக முன்னால வெயிட் பன்றாரு” என்று அழைத்துச் சென்றாள்.

சௌமியாவும் அன்புசெல்வியும் முன்னே வந்த பொழுது அண்ணன் காத்திருக்க “அன்பு நீங்க பின்னாடி ஏறிக்கோங்க” என்று கதவை திறந்து விட்டுவிட்டு அவள் முன்னே அண்ணனுடன் ஏறிக் கொண்டாள்.

“அண்ணா போலாம்” என்றவுடன் கார் கிளம்பிச் சென்றது.

“அண்ணா கிப்ட்ஸ் எல்லாம் வழியில வாங்கிக்கலாமா?” என்று சௌமியா கேட்க “அதெல்லாம் பின்சீட்ல இருக்குது பாரு” என்றான் அண்ணன்.

“எங்க அண்ணா? “என்று கேட்டபடி திரும்பியவளிடம் “மேடம்… எல்லா கிப்ட் இங்க இருக்குது பாருங்க” என்று அன்புசெல்வி காண்பித்தாள்.

அவள் ஆச்சரியத்தில் “எப்படி அண்ணா இது? நீ எப்ப வாங்குன இத?” என்றாள்.

“நீ எப்படியும் இன்னிக்கு அங்க போவேன்னு தெரியும் அதனா நான் கிப்ட் எல்லாம் நேத்தே வாங்கி வைச்சிட்டேன். கேக்,சாக்லேட் எல்லாம் இப்ப ஏற்பாடு செஞ்சேன்” என்றவுடன் அவள் “அண்ணான்னா அண்ணாதான்” என்றாள்,

காலை முதல் அவர்களை பார்த்து வரும் அன்புசெல்வியை அவள் பார்த்தாள். அன்பு செல்வியின் அடர்ந்த கருங்கூந்தல் காற்றில் சற்றே அலை பாய அதை சரி செய்துக் கொண்டாள்.

பெரிய நீள் வடிவ முகத்தில் சிறிய ஸ்டிக்கர் பொட்டும், காதில் சிறிய கம்மலும் அணிந்திருந்தாள். கூர்மையான அனைத்தையும் நிதானமாக நோக்கும் கண்களும், பெரிய நாசியும், சிறிய இதழ்களும் உடைய அவள் கழுத்தில் சிலுவையுடன் கூடிய செயினும், இடது கையில் வாட்சும், வலது கையில் பிளாஸ்டிக் வளையலும் அணிந்திடுந்தாள்.

“அன்பு… நான் ஒண்ணு சொல்லவா? நீங்க சூப்பரா இருக்கீங்க” என்று அவள் சௌமியா பாராட்ட “நன்றி மேடம்” என்று பதிலுக்கு புன்னகைத்தாள்.

“அன்பு… நான் உங்கள் விட சின்ன பொண்ணுதான். நீங்க என்ன சௌமியான்னே கூப்பிடலாம். மேடம் எல்லாம் வேண்டாம்” என்றாள்.

“அது உங்க பெருந்தன்மை மேடம் ஆனா இப்போதைக்கு நான் உங்கள மேடமுன்னுதான் கூப்பிடனும்.”

“சரி நான் உங்கள் கட்டாயப்படுத்த விரும்பல” என்றாள் சௌமியா.

“அன்பு… நான் உங்ககிட்ட ஒன்று கேட்க வேண்டும். உங்க ஹஸ்பென்ட் என்ன பன்றாரு? அவரு எங்கே இருக்காரு? இத்தனை நாளில் நான் அவரை பார்க்கவே இல்லையே.” என்று அடுத்து அடுத்து கேள்விகளை கேட்டாள் சௌமியா.

“மேடம்… அவரு இப்ப உயிருடன் இல்லை.” என்று அன்புசெல்வியிடம் பதில் வரத் திகைத்தாள் சௌமியா.
 




Last edited:

mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
“சாரி மேடம். உங்க பர்த்டே டிரஸ் வீணாகப் போயிடுச்சு” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு… இந்து டிரஸ் எனக்கு இம்பார்டன்ட்தான் ஆனா அதைவிட முக்கியம் உங்க பிரண்டு உயிரு” என்றாள் சௌமியா.
this is a identification of a good hearted and dedicated doctor. hats of soumiya ur a good dcotor
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
இல்லப்பா. அவ மேஜர் ஆனதும் அவ பர்த்டே அன்னிக்கு திருப்பி எழுதி தர டாகுமெண்ட் எல்லாம் எழுதினான் ஆனா சௌமியாதான் எல்லாவற்றையும் கிழிச்சு போட்டுட்டு அண்ணா… இந்த சொத்து உங்ககிட்டயே இருக்கட்டும். எனக்கு கல்யாணம் ஆனப்பிறகு நீ சீதனமாக ஏதாவது தா. அப்ப நான் சந்தோசமாக வாங்கிகிறேன்னுட்டா” என்றார் த
good soumiya. i like Ur characte.r you believe your brother without any doubt. it is a noble relationship i like it
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
அதுக்கப்புறம்தான் அவளுக்கு தெரியாமல் அவள் பேருல பல சொத்துகள், நகை, டிபாசிட் என்று வாங்கி தர ஆரம்பிச்சிட்டாரு. அவளுக்கு அதை அன்பு பரிசா தந்ததால தட்டாம வாங்கிட்டா.” என்று தந்தை சொல்லும் பொழுது “நல்ல மனுசன் இல்ல அங்கிள்” என்றான் இளந்திரையன்.
hats off athirayyan
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
anbu selvi than athiyin paira sis........ nice epi si:):):):):)
ஆமாம் ஸ்ரீதேவி ஏன்னா வயசுலயும் சரி அனுபவத்திலயும் சரி அவங்கதான் சீனியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top