• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 28 (penultimate)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : மாலி கிரகம்..

சிஷ்டிரா ஆறு மாத பயிற்சிக்காக மாலி கிரகம் வந்து மாதங்கள் மூன்றைக் கடந்து நான்கைத் தொட்டிருந்தது..

காப்பு அணிந்த இரண்டாம் நாளே மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அங்கு வந்துவிட்டாள் வசீ ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக..

மாலி கிரகத்திற்கு வந்தவள் துலாதரக் குடும்பம் பற்றி மேலும் சிலப் பல செய்திகள் கற்றுக்கொண்டவள் அங்கிருக்கும் தொழில்நுட்பத்தையும் ஓரளவிற்குக் கற்றுக்கொண்டாள் என்றே சொல்லவேண்டும்..

கூடவே புதிதாக மண் பாத்திரங்கள் செய்வது கூடை பின்னுவது சமையல் செய்வது என்று புதிய புதிய வேலைகளையும்..

பூமியில் இதுபோலெல்லாம் அவள் பார்த்ததில்லை என்பதால் ஆர்வமாக அதையும் கற்றுக்கொண்டாள்..

எல்லாம் விஷ்வேஷ்வர் கொடுத்த அட்வைஸின் அபெக்ட் தான்.. கற்றுக்கொள்ள வயதில்லை ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும் என்பதை காதில் வாங்கிக்கொண்டு தன்னால் முடிந்த புதிய புதிய விஷயங்களைக் கற்றுகொண்டாள் வசீ..

சிறு வயதில் மழலை வனம் செல்ல முடியவில்லையே என்ற ஆதங்கமும் கூடவே சேர்ந்து அவளை அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தூண்டியது..

வசியின் ஒவ்வொரு செயலும் அவளின் பெற்றோருக்கு பெருமையே..

துலாதரன் உச்சியில் ஆட்சி செய்யத் துவங்கியிருக்க அழகாக புலர்ந்தது அந்தக் காலைப் பொழுது..

வழக்கம் போல் வாசல் படியில் அமர்ந்தவண்ணம் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசிஷ்டரா..

“வசீ.. இன்னைக்கு பேச்சுத்துணைக்கு யாரும் கிடைக்கல போல..??”, கண்களில் சிரிப்பைத் தேக்கியபடி எதிர்வீட்டு வாசப்படியில் அமர்ந்தவண்ணம் கேட்ட மயூரனைக் கண்டு ஒரு நிமிடம் கண்ணை விரித்தவள் கொஞ்சமே கொஞ்சம் அவன் தன்னைக் கிண்டல் செய்ததில் முறைத்தபடியே, “எப்போ வந்த மயூரன்..??”, என்று கேட்டாள்..

“துலாதரன் வணக்கம் சொல்லும் முன்னே.. அதாவது நீ சயனத்தில் இருக்கும் பொழுது..”, அவளை வெறுப்பேற்றியபடியே பதில் வந்தது மயூரனிடமிருந்து..

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கையில் கிடைத்த ஒரு கல்லை அவனை நோக்கி எறிந்தாள் வசீ..

அதை அழகாக கேட்ச் பிடித்தவன், “வன்முறை ஆபாத்தானது.. சமாதானம்..”, என்றான் கண்களைச் சுருக்கி..

உதட்டைச் சுழித்து அவனைப் பார்த்து பழிப்புக் காட்டியவள், “நிருமலி எல்லோன்னும் அரண் எல்லோன்னும் வந்திருக்கிறார்களா..??”, என்றுக் கேட்டாள் ஆர்வமாக..

“எல்லாரும் வந்திருக்கோம் வசீ..”, என்ற மயூரன், “எங்கள் அனைவருக்கும் பீது வனத்தைக் காவல் காக்கும் பணி ஒரு நாள் முன்பொடு முடிந்துவிட்டது.. தெரியுமா உனக்கு..??”, கேள்வியாக..

“ஹ்ம்.. தெரியும் எல்லோன்.. நேற்று விபு அண்ணா சொன்னான்.. எனக்கு இந்த செய்தியைக் கேட்ட பிறகு தான் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.. என்னால் தானே உங்களுக்கு எல்லாம் இந்த நிலைமை..”, வருத்தமாக..

“இல்லை வசீ.. எங்கள் நிலைமைக்குக் காரணம் நாங்களே.. அன்று உன்னை நாங்கள் சரியாக கவனித்திருக்க வேண்டும்.. எங்கள் தவறு தான் அது..”, என்றவன் வசியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, “பழயதை விட்டுத்தள்ளு வசிஷ்டரா.. நடந்ததை யாராலும் மாற்ற முடியாது.. இனி நடக்கப்போவது நல்லதாகவே அமையட்டும்..”, ஒரு விரிந்த புன்னகையுடன்..

“சரிதான் எல்லோன்.. இனி நடப்பவை அனைத்தும் நல்லதாகவே அமையட்டும்..”, என்றவள், “ஆமாம்.. கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. இந்த திடீர் பிரவேசம் ஏனோ..??”, என்று கேள்வி எழுப்பினாள்..

“நமது பொழிலில் பாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்களாம்.. அதற்கான கூட்டம் இன்று இங்கே.. உன் தமையனும் வருவான்..”

“அப்படியா..??!!”

“ஏன் உனக்கு இன்னும் இந்த விஷயம் வந்துசேரவில்லையா..??”

இல்லை என்பதுபோல் தலையசைப்பு வசியிடமிருந்து..

“நேற்று இரவுதான் கூட்டத்தைப் பற்றி முடிவு செய்தார்கள் போல் வசீ.. பொழிலில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் என நேற்றே செய்தி சென்றடைந்துவிட்டது.. இங்கிருப்பவர்களுக்கு அனேகமாக இனிமேல் தான் உனக்கு அறிவிப்பு வரும் என்று நினைக்கிறேன்..”, என்றான் மயூரன்..

ஓவென்றவள், “எதற்காக இப்பொழுது திடீரென்று இந்த பலப்படுத்தும் ஏற்பாடு..?? ஏதாவது பிரச்சனையா..??”

“பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை வசீ.. ஆனால் இந்த திடீர் கூட்டம் எதற்கு என்று எனக்கும் சரியாகத் தெரியவில்லை.. இன்று இரவு வரை காத்திருந்தால் என்னவென்று சரியாகத் தெரிந்துகொள்ளலாம்..”, என்று சோம்பல் முறித்தபடி சொன்னவன், “உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா.. பீது வனத்தை நிரந்தரமாக மூடப்போகிறார்கள்..”

“எப்பொழுது..?? ஏன்..??”, கொஞ்சம் அவசரமாக விழுந்ததோ அவள் கேள்வி..

“அடுத்த மாதத்திற்குள் என்று செய்தி..”

“அப்போ அங்கிருக்கும் விண்வெளிக் கப்பல்கள்..??”

“மாலி கிரகத்திற்கு இடமாற்றப்படும்..”

“ஓ.. அப்போ அதுவரை பீது வனக் காவலுக்கு..??”

“யாரும் இருக்கமாட்டார்கள் வசீ.. அங்கு சொல்லப்போனால் காவலும் தேவையில்லை.. பூமிக்கு சென்றவர்களிடம் வரும் செய்திக்காகத்தான் அங்கு பாதுகாப்பு ஆட்குவிப்பு எல்லாம்.. இப்பொழுது நீ இங்கு வந்துவிட்டாய் அல்லவா.. பிறகு எதற்கு அங்கு இந்தப் பாதுகாப்பு எல்லாம்..??”

*****************************************************************************

ரவு நேர வாடைக்காற்று உடலைத் தழுவிச்செல்ல ஒருவர் பின் ஒருவராய் மாலி கிரகத்திற்கு வந்து சேர்ந்தனர் இரவு நடக்கும் கூட்டத்திற்கு..

திருவிழாக்கோலம் போலவே காட்சியளித்தது மாலி கிரகம் அன்று..

எல்லாம் பாதுகாப்புக் கூட்டத்திற்காக திரண்ட மக்கள் கூட்டம் தான்..

விபுவும் திருஷ்டியும் மாலையே வந்திருக்க அவர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் வசீ..

அவளுக்கு அதெல்லாம் ரொம்பவும் புதிதாகத் தோன்றியது..

“திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் என்ன வேடிக்கை வசீ..??”,
அவள் குழந்தைப்போல் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு கேட்டான் விபு..

“இல்லண்ணா பூமியில் இதுபோல் எல்லாம் கூட்டம் கூடி நான் பார்த்ததில்லை.. எல்லாம் முடிவுகளும் வீடியோ கால் மூலம் தான் அங்கு..”, என்றவள் சடனாக,

“வீடியோ கால் என்றால் ஒரு கருவியில் மூலமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வது..”, என்றாள்..

“கூட்டங்கள் ஏன் கூட்டுவதில்லை என்று இதுவரை யாரும் கேட்டதில்லையா..??”, இது திருஷ்டி..

“கேட்டால் பெரிதாக என்னம்மா சொல்லிவிடப்போகிறார்கள்..”, என்று சலித்துக்கொண்ட வசீ, “கூட்டம் கூட்டினால் நேர விரையமாம்..”, என்றாள் சலிப்பாக..

“சரி பரவாயில்லை விடு.. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் நீ எதிர்பார்த்ததைவிட பெரிய கூட்டத்தைப் பார்க்கப்போகிறாய்..”, என்றார் திருஷ்டி அவள் தலையைத் தடவியபடியே..

மயூரன் வந்து இவர்கள் மூவரையும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்..

அனைவரும் அவரவர் இருக்கையில் அமர யாரையோத் தேடி அலைந்தது வசியின் கண்கள்..

அதைக்கண்டுகொண்ட மயூரன், “யாரைத் தேடுகிறாய் வசிஷ்டரா..??”, என்றுக் கேட்டான்..

“விலாசி எல்லோன்னையும் மிளிர் அண்ணாவையும் தான் எல்லோன்.. அவங்க வரலையா கூட்டத்திற்கு..??”, தேடலை நிறுத்தாமலே..

“இல்லை வசீ வரவில்லை.. அவருக்கும் மிளிருக்கும் பரிதி வனத்தில் வேலை இருக்கிறதாம் இன்று.. கிரீசன் எல்லோன் மட்டும் வருவார்..”, என்றான் விபு..
“பரிதி வனத்தில் வேலையா இன்று இருவருக்கும்..??”, எச்சில் விழுங்கியபடியே தான் கேட்டது சரியா என்று தெரிந்துகொள்ளக் கேட்டாள் வசீ..

“ஆமாம் வசீ.. பரிதி வனத்தில் தான் இன்று அவர்களுக்கு வேலை..”, இது மயூரன்..
ஓவென்றவளுக்கு ஏனோ படபடவென்று வந்தது..

“ஏன் வசீ..?? ஏதாவது பிரச்சனையா..??”, ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்டான் விபு..
வேர்வைத் துளிகள் முத்துமுத்தாய் முகத்தில் படர்ந்திருக்க விபுவை முறைத்துவைத்தாள் வசிஷ்டரா..

அவளது தினறலையும் தடுமாற்றத்தையும் கண்டு, “எல்லாம் சரியாக நடக்கும் வசீ.. கவலைப்படாதே..”, என்றான் விபு அவளது கைகளைத் தட்டிக்கொடுத்தபடி..

(சரியாக நடக்கப்போகிறதா..?? என்ன நடக்கப்போகிறது..??)

*****************************************************
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பரிதி வனம், பொழில் கிரகம்..

ரிதி வனம் அன்று ஏனோ மிகவும் அமைதியாகவே காட்சியளித்தது..

அமாவாசையோ..??

மிகிரன் வழக்கம் போல் துலாதரனின் அஸ்தமனத்திற்கு பிறகு அவனது குடிலுக்கு சென்றிருக்க பூமிவாசிகள் அனைவரும் ஒரு திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்..

“நாம் எடுத்திருக்கும் முடிவு சரிதானே..??”, மௌனத்தைக் கலைத்தபடி கேட்டான் அபித்..

“எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று நினைத்துக்கொள்வோம் அபித்..”, என்றான் சாய்..

“இந்தப் ப்ளான் சக்சஸ் ஆகவில்லை என்றால்..??”, இது ஆத்யா..

“தினக் பாஸிட்டீவ் டாக்.. நீங்க தான் இந்நேரம் தைரியமா எல்லாவற்றையும் ஹாண்டில் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்..”, இது அத்வைத்..

“உயிர் பயம் வரும்வரை அனைவரும் தைரியசாலிகளே அத்..”, என்றாள் ஆத்யா சிறிது பயத்துடன்..

“அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது ஆத்யா.. அப்படியே நடந்தாலும் பரவாயில்லை.. கைதியாக யாரும் அறியா ஒரு வேற்று கிரகத்தில் உயிருடன் இருப்பதைவிட இறப்பதே மேல்..”, என்றான் அபித்..

“அபித்.. என்ன பேச்சு இது..?? அப்படி எதுவும் நடக்காது..”, முடிந்தளவு அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றான் சாய்..

“எதுவும் நெகிடிவ்வாக நடக்காமல் இருந்தால் சரிதான்..”, முனுமுனுக்க மட்டுமே முடிந்தது அனைவராலும்..
இது சாய் எடுத்த முடிவு..

அனைவருக்கும் அனைத்திற்கும் பொறுப்பேற்றிருந்தான் அவன்..

(அவன் எடுத்த முடிவு நன்மையில் முடியுமா..??)

“இரவு உணவு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டுமா சாய்..??”, இது அத்வைத்..

“கண்டிப்பாக அத்.. உணவு கொண்டுவருபவன் நாம் இங்கில்லை என்று அறிந்துகொண்டால் நாம் பிடிபட்டுவிடுவோம்.. அதன் பிறகு நமக்கு இங்கிருந்து தப்பிப்பது என்பது பகல் கனவு தான்..”

வெளியே அதுவரை நின்றுகொண்டிருந்த ஆத்யா உள்ளே நுழைந்து, “உணவு கொண்டுவருபவன் வருகிறான்..”, என்றாள் அறிவிப்பாகவும் கிசுகிசுப்பாகவும்..

ஆத்யா அவசர அவசரமாக உள்ளே நுழைந்த ஆத்யாவைக் கண்டதும் அலெர்ட்டான பூமிவாசிகள் எப்பொழுதும் போல் இருக்க முயன்றனர்..

பதற்றம் இருந்தபோதிலும் ஓரளவிற்கு நன்றாகவே நடிப்பு வந்தது அனைவருக்கும்..

உணவு கொடுப்பவனும் எப்பொழுதும் போல் அவர்களுக்கான உணவை எடுத்து குடிலின் திண்ணையில் வைத்துவிட்டு சென்றுவிட்டான்..

அவன் இடத்தைவிட்டு மறைந்தவுடன் அடுத்து என்னவென்பது போல் மூவரும் சாய்யைப் பார்த்தனர்..

அவனோ ஒன்றும் நடக்காததுபோல் வாங்க சாப்பிடலாம் என்றான்..

ஆத்யாவிற்கு அவன் மேல் கடுப்பு பொங்கியது இப்பொழுது சோறு ரொம்ப முக்கியமா என்பது போல்.. அதை சாயிடம் கேட்டும்விட்டாள்..

“நடக்கத் தெம்பு வேண்டாமா டாக்..”, என்று ஆத்யாவைப் பார்த்து சொன்னவன் மீண்டும் பொதுவாக, “வாங்க சாப்பிடலாம்..”, என்றான்..

நால்வருக்கும் தொண்டையில் உனவு இறங்கவில்லை என்றாலும் தங்களால் முடிந்தளவு உண்டனர் நடக்க தெம்பு வேண்டும் என்பதற்காக..

**************************

ருள் முழுதும் சூழ்ந்து அருகில் இருக்கும் நபர் கூட சரியாக அடையாளம் தெரியா நேரம்..

குடிலை விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தனர் பூமிவாசிகள்..

கைகளைக் கெட்டியாகப் பிடித்தபடி குடிசைகள் இருக்கும் இடம் தாண்டும் வரை அடிமேல் அடிவைத்தனர்..

குடில்கள் இல்லா சிறு வெட்டவெளியை அடைந்ததும் ஒரே ஓட்டம் காடு போன்ற இடம் வரும்வரை..

மூச்சிரைத்தது அனைவருக்கும்..

தப்பினால் போதும் என்ற மனநிலையில் அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை அனைவருக்கும்..

இப்பொழுது சாய்யும் அத்வைத்தும் முன்னே செல்ல அவன் பின்னே அடிமேல் அடிவைத்தனர் ஆத்யாவும் அபித்தும்..

மின்மினிகள் அங்கும் இங்கும் வழிகாட்டிகளாய் வந்து சேர்ந்திருந்தது அங்கு அவர்களுக்குத் துணையாக..

காய்ந்த இலைகள் சரக் சரக்கென்று ஒலியெழுப்ப சற்றே பின் தங்கினான் சாய்..

“என்னாச்சு சாய்..?? ஏன் நின்னுட்ட..??”, மெதுவாகவே ஒலித்தது அபித்தின் குரல்..

“நம்மை யாரோ பின் தொடர்வது போல் தோன்றுகிறது..”, என்றான் சாய்யும் அபித்தைப் போலவே..

“இப்போ என்ன பண்றது..?? அப்படியே திரும்பிப் போயிடலாமா..??”, பயத்தில் உளறினாள் ஆத்யா..

“லூசு மாதிரி பேசாத ஆத்யா.. எங்கயாவது மறைந்துகொள்ளலாம்..”, என்றான் அத்வைத் சுற்றியும் பார்த்தப்படியே....

“சீ தேர்.. அந்த மரம் பெருசா இருக்கு..”, என்றபடி அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்தின் பின்னே மறைந்தான் சாய்..

மீண்டும் சருகுகளின் யாரோ மிதிக்கும் சத்தம்..

பயத்தில் சாய்யின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டது ஆத்யாவின் கைகள்..

“சாய் யாரிடமாவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது..??”, இது அபித்..

“யாரும் வசிஷ்ட்ராவின் பெயரை மட்டும் சொல்லக்கூடாது..”, பின்னால் இருந்து கேட்டக் குரலால் அதிர்ச்சி அடைந்தனர் அனைவரும்..

பதில் சொல்ல நா எழவில்லை நால்வருக்கும்..

“என்ன பதிலையே காணோம்.. சொல்லு சாய்.. அப்படித்தானே..??”, அழுத்தமாக் கேட்டான் மிகிரன்..

“ஆமாம் மிகிரா அப்படித்தான்..”, திடமாக பதில் வந்தது ஆத்யாவிடமிருந்து..

******************************************************************

இடம் : பரிதி வனத்தின் தலைமைச் செயலகம், பொழில் கிரகம்..


இரவின் மடியில் ஏகாந்தமாக யாரையோ எதிர்பார்த்தவராக அமர்ந்திருந்தார் விலாசி..

“அம்மா.. அவர்கள் கிளம்பிவிட்டார்கள்..”, என்றபடியே தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தான் மிளிர்..

-தேடலாம்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi sis.bhoomi vasikal thappika vilasiye help panrara. I mean kandum kanamanal irukara. aanal plan vasiyodatha ..interesting sis space shipla erituvangala .

Mihiran ivangalathapika vitamatano .
.
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
Nice epi sis.bhoomi vasikal thappika vilasiye help panrara. I mean kandum kanamanal irukara. aanal plan vasiyodatha ..interesting sis space shipla erituvangala .

Mihiran ivangalathapika vitamatano .
.
thank u sissy for ur comments.. final epi la ellam theriyum..:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top