Thuli Thee Neeyaavaai Episode 1

#1
துளி தீ நீயாவாய் 1
151662304075497060.png


ப்பொழுதுதான் தூக்கம் கலையத் துவங்க, மெல்ல கண்விழித்த பவித்ராவுக்கு அவள் வழக்கத்தின் படி பிறண்டு எழும்ப முடியாமல் கால் தட்டியது. அதன் விளைவாக அன்னிசையாய் அவள் கவனம் காலின் மேல் செல்லவும்தான்…. தான் புடவை கட்டி இருப்பதே அவளுக்கு கண்ணில் படுகிறது.

‘ஹான்! சேலை கட்டிட்டு தூங்கினேனா?’ என அவள் புரியாமல் யோசிக்க துவங்கிய நொடி.. அதற்கான காரணமும் கூடவே சாரை சாரையாய் அதை சார்ந்த நினைவுகள் அனைத்தும் வந்து நிற்க,

ஆழ்ந்த தூக்கத்தின் விளைவாய் அது வரைக்கும் மறந்திருந்த அத்தனையும் இம்மி குறையாமல் இவள் இதயத்தில் இப்போது ஏறி இடம் பிடிக்கிறது.

இவளையும் அவனையும் தனிக்குடித்தனம் வைக்கவென வந்திருந்த எல்லோரும் நேற்று இரவே திரும்பிச் சென்றுவிட்டனர் என்பதே இப்போதைக்கு இவளுக்கு நினைக்க இருக்கும் ஒரே நல்ல விஷயம்.

கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் சேலையின் ஃப்ளீட்ஸை விர் விர் என இரண்டு விரல்களால் விமான வேகத்தில் இரண்டு இழு. அந்தப் பகுதி மட்டும் இப்போது ஆர்மி ஆஃபீசர் போல அட்டென்ஷனுக்கு வந்துவிட்டாலும்,

கரும் பச்சையும் அதில் சின்ன அளவு பிங்க் நிறமுமாய் இருந்த அந்த புத்தம் புது காட்டான் சேலை நெய் ரோஸ்ட் தோசை ரேஞ்சில் வெட வெட என அங்கும் இங்குமாய் எழுந்தும் மடங்கியும் அவளை சுற்றி அரையடி தூரத்துக்கு ஆக்ரமித்து நின்றது.

‘காட்டன் புடவைய இவ்ளவு தூரம் கட்ட தெரிஞ்சிருப்பதே பெரிய விஷயம்’ என அதை அப்படியேவிட்டவள், அவளிருந்த அறைக் கதவின் உட் தாழ்பாளை திறக்க முயன்ற நேரம் எதேச்சையாய் கண்ணில் படுகிறது அருகிலிருந்த சின்ன மேசையிலிருந்த இவளது கல்யாணப் பத்திரிக்கை.

பவித்ரா பரிசுத்தன் என பெரிய பெரிய எழுத்துக்களும் நான்கு நாளுக்கு முந்திய தேதியுமாயும் அது. பத்திரப் படுத்தி வைக்க இவள் ஆசைப்படுவாள் என கருண் கொண்டு வந்திருப்பானாக இருக்கும்.

‘இந்தப் ப்ரவியோட அஃபீஷியல் நேம் பரிசுத்தன்தானே…’ அவன் மீது கொழுந்துவிட்டெரியும் கொடூர கோபம், இயலாமை, ஏமாற்றம் எல்லாம் தாண்டி, அடிப்படை காரணம் ஏதுமின்றி, அதுவாக மனம் அவளை மணந்திருப்பவனின் பெயர் ஆராய்ச்சியில் ஒரு கணம் ஓடுகிறது.

அவனை ப்ரவி என மட்டும்தான் வீட்டில் எல்லோரும் அழைப்பதால், என்ன பெயரை என்னதாக கூப்டுறாங்கன்னே மறந்து போய் இவளும் கூப்பிட்டுக் கொண்டிருந்த விஷயம் இப்போது,

‘அவனப் பத்தி என்னதான் தெரிஞ்சிருந்திருக்குது எனக்கு? எல்லாம் தெரியும்னு லூசு மாதிரி ஏமாந்துருக்கேன்…’ என இன்னொரு வகையில் தாக்குகிறது.

அதற்கு மேல் அவனைப் பற்றி எதை நினைக்கவும் இதயத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்தவள் கதவை திறந்து கொண்டு விடு விடுவென வெளியே வந்தாள்.

என்னதான் சமையலறையை மட்டும் நோக்கியபடி பார்வையை வைத்துக் கொண்டாலும்… இவள் கடந்து செல்ல வேண்டிய அந்த வரவேற்பறையின் இடப்புறம் அந்த ப்ரவி நின்று எதையோ செய்து கொண்டிருப்பது ஓரக் கண்ணில் விழத்தான் செய்கிறது.

இவளைப் பார்க்கவும் அவன் உடல் மொழியில் விலுக்கென வந்து விழுந்த ஆர்வமும் கூட இவள் கவனத்தில் படாமல் இல்லை.

இவளுக்காகத்தான் காத்திருந்திருக்கிறான் போலும்.

முழு யூனிஃபார்மில் இருக்கிறான் அவன். இன்றுதான் அவனை முதன் முதலாக யூனிஃபார்மில் பார்க்கிறாளோ?

இன்னுமே இவள் முகம் இறுகிக் கொண்டு போக, அரை டிகிரி கூட திரும்பாமல் அப்படியே சமயலறைக்குள் நுழைந்தாள். இவளைப் பின்பற்றி அவனும் இப்போது அங்கு வர, அவன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் புறம் திரும்பாமலே உணர்ந்தாள் பவித்ரா.

கேஸ் அடுப்பின் மேல் ஏற்கனவே பால் காய்ச்சி வைக்கப் பட்டிருக்க, காஃபி போட அதை மீண்டும் சூடு செய்யும் வண்ணமாய் இவள் அடுப்பை ஏற்ற,

இப்போது “பவிமா… பால் காய்ச்சிதான் வச்சுருக்கேன்…” என சொல்லத் துவங்கியவன், அடுத்து அவசரமாக “ஹேய்… சாரிமா…சே… சாரி… இத்தன வருஷம் கூப்ட்ட பழக்கத்துல வந்துட்டு பவி” என சொல்லி முடிக்கும் போது… வெகு நிதானமாக அந்த பாலிருந்த பாத்திரத்தை தூக்கிப் போய் பின் வாசலிலிருந்த ஒரு தட்டில் ஊத்தி இருந்தாள் பவித்ரா. இவர்களது நாய் மிர்ச்சிக்கானது அது.

அறை வாங்கிய பாவத்தில் நின்றிருக்க வேண்டிய அவனோ, அத்தனை அளவுக்கு இல்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

எதுவுமே நடவாதது போல் இவளோ இப்போது வெகு சவாதானமாக தோசைக் கல்லை எடுத்து அடுப்பின் மீது வைத்தவள், அந்நேரம்தான் அங்கு அவன் வாங்கி வைத்திருந்த சாப்பாடு பார்சல்களை பார்த்ததும், அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் திரும்ப வெளி வரும் போது, குளித்து விட்டதன் அடையாளமாக அவள் முடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, சாப்பிட்டு முடித்ததன் அடையாளமாக அந்த சாப்பாட்டு பார்சல் காகிதம் கசக்கப்பட்டு அவள் கையில் இருந்தது.

இப்போதும் இன்னுமொரு காட்டன் புடவையில் இவள் ஒரு புறமும் புடவை இன்னொரு புறமுமாகத்தான் இருந்தாள் அவள்.

குடும்ப விழா தவிர எதற்காகவும் அவள் புடவை கட்டமாட்டாள், அதிலும் வெட வெட என நிற்கும் புடவை என்றால் அவளுக்கு சுத்தமாய் பிடிக்காது என்பது இவனுக்குத் தெரியும்.

ஒரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்ட அவனோ, “சரி பவி, இன்னைக்கு நான் ட்யூட்டில ஜாய்ன் செய்தாகணும், கிளம்புறேன்… மதியம் வர்றப்ப லஞ்ச் வாங்கிட்டு வந்துடுவேன், இன்னும் ஒன் ஆர் டு டேஸ்குள்ள சர்வென்ட் மெய்ட்க்கு ஏற்பாடு செய்துடலாம்” என்றபடி கிளம்பியவன்,

“கதவை பூட்டிக்கோ” என்ற தனது அடுத்த வார்த்தைகளுக்கு அப்படி ஒரு பின் விளைவை எதிர்பார்க்கவே இல்லை.

அதுவரைக்கும் அவன் சொல்வது காதிலேயே விழவில்லை என்பது போல் சமயலறைக்குள் போய் குப்பை தொட்டியில் காகிதத்தை போடும் வேலையை செய்து கொண்டிருந்தவள், அந்த நொடியே விறு விறுவென தன் அறைக்குள் போய்,

இவன் என்ன என ஊகித்து முடிக்கும் முன், கன கச்சிதமாய் அத்தனை லயமாய் கட்டிய ஒரு பிங்க் நிற வாட்டர் ஷிஃபான் புடவையில் வெளியே வந்திருந்தாள்.

படு வேகமும் பாய்ண்ட் பெர்ஃபெக்க்ஷனும் எப்போதுமே பவியின் அடையாளம். இவன் வகையில் காணாமல் போயிருந்த அதை மீண்டுமாக இந்த நொடியில் உணர்ந்தவன், அத்தனை சூழலிலும் சின்னதாய் மனதுக்குள் அவளை ரம்யபட்டுக் கொள்ள,

அவளோ மேஜையிலிருந்த வீட்டு சாவியை எடுத்து கட கடவென கதவை நோக்கிச் சென்றாள்.

அதாவது இவன் சொன்ன கதவ பூட்டிக்கோவை, ‘பத்ரமா வீட்ல இரு’ என அர்த்தத்தில் எடுத்து அதற்கு நேர் எதிரா வீட்டை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள் அவள் என அப்போதுதான் புரிகிறது அவனுக்கு.

கூடவே “வீட்ல இருக்கப்ப சேரி கட்டணும்னு எந்த அவசியமும் இல்ல பவிமா… இப்ப கொஞ்ச நாள் அப்ப அப்ப தெரிஞ்சவங்க யாரும் வந்து போகலாம்… அதனால கொஞ்சம் நீட்டா சல்வார் மாதிரி எதாவது போட்டுக்கோ… அப்றம் உன் வசதிப்படி கேஷுவல் வேர் எதுனாலும் போட்டுக்கலாம்” என அவன் சொன்ன வார்த்தைகளின் பின் விளைவுதான் இதுவரை அவள் கட்டி இருந்த கட முடா முறுக்கு காட்டன் புடவைக்கு காரணம் என்றும் இந்த நொடி புரிகிறது.

எப்போதாவது இவனிடம் அவள் இதற்கு முன் கோபபட்டதுண்டா என ஞாபக அடுக்குகளில் தேடித் தேய்கிறது இவன் நெஞ்சில் நினைவு ஒன்று.

“பவி ப்ளீஸ் பவி” சற்று அழுத்தமாக சொல்லியபடி அவளுக்கு குறுக்காக சென்று நின்றான்.

“சொல்றத கேளு பவி…” இவன் சொல்ல வந்ததை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

“நீங்க எனக்கு வாங்கி வந்து வைக்கீங்களே சாப்பாடு, அதுக்கு பணம் கொடுக்கவாவது நான் சம்பாதிக்கணும். அதுக்கு வேலைக்கு போறேன்” என வந்து விழுகின்றன அவளது வார்த்தைகள்.

இவனையும் மீறி ஏறுகிறது இவன் முகத்தில் கண்டனம்.

ஆனாலும் அவள் இருக்கும் நிலையில் அவள் மீது கோபப்பட அவனுக்கு துளியுமே சம்மதம் இல்லை. ஆக “நாம கல்யாணம் செய்துருக்கோம் பவி…” என ஒருவித சாந்த அழுத்தத்தில் சொன்னவன் “உனக்குன்னு…” என அடுத்தும் எதையோ இதமான குரலில் சொல்லவே முயன்றான்.

அவளோ அவனை பேசவிட்டால்தானே?! “ஓ… மேரேஜ்னா பொண்ண அடச்சு வச்சு சாப்பாடு போடுறதுன்னுதான் அர்த்தமா?” என அப்பாவி போல் ஒரு ஆக்க்ஷனோடு நாடியில் ஒற்றைவிரல் தட்டி யோசித்தாள் அவள். “நான்தான் வேற என்னமோன்னு நினச்சுட்டனா?”

முன்பு எப்போது அவள் இப்படி நாடி தட்டினாலும் இவனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். எதோ பாற்சிலை பதத்தில் பால் மழலை பாந்தத்தில் பார்க்கவே சுகசுகந்தமாய் இருப்பாள் அந்நேரங்களில்.

இப்போதோ கழுவி வைத்த அக்னி கொழுந்து போல் இருக்கிறாள்.

இவளிடம் வாதாடுவதால் இவள் இன்னும் வாடிப் போவாளே தவிர நடக்கப் போகும் நல்லது என எதுவும் இருக்காது என்பது இவனுக்கு நன்றாகவே தெரிகிறதுதானே! ஆக,

“நீ வேலைக்கு போகாதன்னு எல்லாம் நான் சொல்லல பவி… ஆனா நீ சொல்ற காரணம்தான் சரியா இல்லன்றேன்…” என்றவன், அடுத்து அவள் எதுவும் சொல்ல இடமே கொடாமல் “இன்னைக்கு ஒரு நாள் டைம் கொடு… இங்க பக்கத்தில் உன் க்வாலிஃபிகேஷன்க்கு செட் ஆகுற மாதிரி என்ன ஓப்பனிங்ஸ் இருக்குதுன்னு பார்ப்போம்… அதில் உனக்கு பிடிச்சத ட்ரைப் பண்ணு” என விஷயத்தை முடித்தான்.

இதுவும் அவளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் என அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிய வைத்தாள் அவன் மனைவி.

“இல்ல…” முழு மொட்டையாய் வந்தது அவள் மறுப்பு. “இங்க பக்கத்தில என் அம்மாவோட லேண்ட் இருக்குதுல்ல, அதுல வேலை செய்யப் போறேன்” என வந்து விழுகிறது அவள் வார்த்தைகள்.

“வாட்??!!” அவளுக்கு இப்படி எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாய் யோசிக்க வரும் என்று கூட இவ்வளவு நாளும் இவனுக்கு தெரியாதே!

“ஏன் பவி…?” இதை கேட்கும் போதே என்ன பதில் அவளிடமிருந்து வரப் போகிறது என தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று இவனுக்கு வலிக்க வலிக்க வரப் போகிறது என்று மட்டும் ஏனோ புரிந்துவிட்டது.

இந்த விஷயத்தில் மட்டும் துளியும் ஏமாற்றம் தராமல் பதில் தந்தாள் அவனது பாரியாள்.

“என் படிப்பு என்னது இல்ல” ஆணித்தரமாய் வந்தது அவள் அறிவிப்பு.

அவள் சொல்வதன் அர்த்தம் புரிய புரிய இப்போது இவனுக்குள் குத்தி எழும்பிய சுயம் ரத்த நாளங்களில் ரௌத்திரம் பாய்ச்சி சுர் என முகம் நோக்கி சுட சுட துள்ளி ஏறுகிறதுதான். ஆனால் அதையும் தாண்டி நொடிக்கு நூறாயிரம் கன அடி வீதத்தில் வந்து விழுகிறதே ‘இப்படியெல்லாம் யோசித்துக் கொள்ளும் போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை வலித்திருந்தால் இப்படியெல்லாம் இவளால் பேச முடியும்?’ என்ற கேள்வி நிலை.

எதைச் சொல்லியாவது என்ன வேண்டுமானாலும் செய்தாவது அவளை நடந்துவிட்ட காரியங்களிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்துவிட இவனுக்கு வெறியே இருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய வேண்டும் இவன்?

அதற்குள் இவர்கள் வீட்டு கேட்டை யாரோ திறக்கும் சத்தம். மெல்லியதாய்தான் எனினும் துல்லியமாய் காதில் விழுகிறது அவனுக்கு.

வீட்டிற்கு முன் ஓரளவு வெகு அதிகமாகவே காலி இடம் இருக்க…அதற்கும் முன்புறம் இருக்கிறது அந்த கேட் என்பதால் பவி அந்த சத்தத்தை கவனித்திருக்கவில்லை.

ஆக குறுக்கே வந்தவன் எதுவும் சொல்லாமல் நிற்கவும், அவனை தாண்டிக் கொண்டு வீட்டின் கதவை நோக்கிப் போனாள்.

இப்போது பவிக்கும் கேட்கும் வண்ணம் இவர்களது வீட்டு கதவிலேயே கேட்கிறது சாவியின் சத்தம். வீடு உள்பக்கமாய் இவர்களால் பூட்டப் பட்டு இருக்க… வீட்டின் இரண்டு சாவியுமே இவர்களிடமே இருக்க… யார் அது இப்படி பட்டப் பகலில் வந்து கதவை திறக்க முயல்வது?

இதற்குள் பவியின் கையிலிருந்த சாவியை வார்த்தையின்றி கேட்டிருந்தான் அவன். கதவின் மேல் சென்றிருந்த கவனத்தில் மறுப்பின்றி கொடுத்திருந்தாள் அவளும்.

நேராக சென்று கதவை திறந்தான் அவன்.

சாவியும் கையுமாக அதிர்ந்து போய் அங்கே நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பதினேழு பதினெட்டு வயது இருக்குமாயிருக்கும்.

தொடரும்...

ஃப்ரென்ட்ஸ்... முதல் எப்பி படித்திருப்பீர்கள். வெறும் குடும்பம் பிரிவு சேர்வு என்றெல்லாம் கதை நகராது என இங்கு சொல்லிக் கொள்ள அவசியமாகிறது. அடுத்த எப்பிசோட் வரும் போதே தெரிந்துவிடும், எனது வழக்கமான சஃஸ்பென்ஃஸ்.. இன்ன பல எல்லாம் சேர்ந்துவிடும் என. இந்த எப்பிக்கு உங்களது கமென்ட் எனக்கு நிச்சயமா தேவை... கதையை ட்யூன் செய்ய அது நிச்சயம் பயன்படும். அதனால தயங்காம சொல்லுங்க. காத்திருக்கிறேன். நன்றி!!!!
 
Last edited:
#3
Super epi Ka.:love::love:but y she s this much doing to pravee:mad:.pavam coffee kudikama mirchi ta pota..some misunderstanding s:oops: ur description of the saree scene was gud.padipe enodathu ilanu solrana how much she is hurt:cry: but chella per solralee:love::love:takunu next uddd Venum.urs paviponu:love:
 

Sivaranjani

Well-known member
#4
Sweetyy,
Wowwww nu iruku.apdi enna nadanthucho therilaye.romba naal pazhakam pola iruku.oruvelai pravithan ivala padika vachaano???...entha ball pottaamlum ball ai kaanaama panraale,paavam pravi,iva epdilaam paavam aanaalo.ippo renduperukkuma kavalaippattu oruthane yosichu problem theerkanuma.unga heros mela irakam illa ungaluku???.mozhi.....chance illa pinni pedal eduthing..,.
 

Sivaranjani

Well-known member
#5
"Paarsilai pathathil paal mazhalai paanthaththila". ,acho ithai paarthu naane ipdi aaiduven polaye.thulluthe manam.viruviru nu izhuthathula pudavai army officer pola attention ku vanthucha....enna oru varnanai.nei thosa pola anga inga madangi ezhunthu arai adaiku suthi viyaabithu irunthuchu.??kazhuvi vaitha akni kozhunthu.. Enna oru usage.vaathaadinaalum vaaduvaale......enna oru care.marriage na ponnai adaichu vachu saapaadu podratho......what a sarcasm....sonna muzhu epiyum solven than.... ????ithellaam padikum bothe thulli kudhika vaichathu.sooo interesting.....waiting for the love war.....
 
#6
Padippuku help seythathe pravi family thaano? nalla friends aga irunthu epadi jerry aagitalo pavi :unsure::unsure: cotton saree vivarippu pramatham antha ponnu yaaru :geek: kuzhapama irukke next epi eppo seekiram podunga sweety
 
#8
Woooow sweeetyyy
Ana Ena tan nadakuduuu:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
Pavima solapadatha
Per portham super
Poota veetuku la epadi:sleep::sleep::sleep::sleep::sleep:
Mhooom onnum puriyala
Coootan sarreee pathi inda alavu varnanai simply superrrr
Waiting aavaludan
 

Advertisements

Latest updates

Top