• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 41

என் மனதோடு மழையாக

வந்து துளியென விழுந்து

துளிர்விட்ட காதல் பெண்ணே..

நான் வைத்த நேசத்தில் உன்னிலே

உருவானதடி ஒரு உறவு!

உன்னை நினைக்கும் பொழுது

எல்லாம் சிலிர்கிறதடி எனதுள்ளம்!

அவள் போனை பேசிவிட்டு வைத்தும் ராகவி ஷீலாவை நெருங்கும் முன்னே ஷீலாவின் முன்னே வந்து நின்றான் மகிழன்.. அவன் அங்கே வருவான் என்று எதிர்பார்க்காத ராகவி திகைப்புடன் என்ன செய்வது என்று அறியாமல் அவள் நின்ற இடத்திலேயே படபடப்புடன் நின்றிருக்க தன்முன்னே நிழலாட கண்டு நிமிர்ந்த ஷீலா மகிழனைப் பார்த்தும் திடுக்கிட்டு, “மகிழா நீ எப்போ வந்த..” என்று நடுக்கத்துடனே கேட்டாள்.. அவனோ அவளை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றான்..

அவனின் பார்வை அவளின் கையில் இருந்த போனைப் பார்த்துவிட்டு மீண்டும் ஷீலாவின் மீது தன்னுடைய பார்வையைத் திருப்பியதும், “மகிழா உன்னோட ஒய்ப் போன் பண்ணினாங்க..” என்றவள் போனை அவனிடம் நீட்ட அதை வெடுக்கென்று பிடுங்கிய மகிழன், “என்ன உரிமையில் என்னோட ஒய்ப் என்று என்னோட துளிர்கிட்ட சொன்ன..” என்று கேட்டவனின் கண்கள் இரண்டும் செந்தணலாக மாறியது.. அவனின் கண்ணைப் பார்த்தும் ஷீலா விக்கித்து நின்றாள்..

அவளின் அமைதி அவனின் கோபத்தை தூண்டிவிட, “ஷீலா அமைதியாக இருக்கேன்னு பார்க்காத என்னோட கோபம் எல்லை மீறும் முன்னாடி உண்மையைச் சொல்லு..” என்றவன் மிரட்டவும் அதில் அதிகம் அதிர்ந்த ஷீலா, “இல்ல சும்மா விளையாட்டுக்கு..” என்றவள் இழுக்கவும், “என்னது விளையாட்டுக்கு பேசினேன்னு ரொம்ப கூலாக பதில் சொல்ற.. ஒரு பொண்ணு கடல் கடந்து தன்னுடைய புருஷனை பிரிஞ்சி இருக்கும் போது அவங்களோட தவிப்பு எப்படி இருக்குன்னு உனக்கு தெரியுமா..” என்று கொலைவெறியுடன் கேட்டான்..

அவனின் கேள்விக்கு அவள் திருதிருவென விழிக்க, “உனக்கு எல்லாம் எதுக்கு இப்படியொரு புத்தி..?” என்று அவன் கேட்டுவிட, “உன்னை உன்னோட மனைவி சந்தேகமே படல.. அப்புறம் எதுக்கு என்னை இந்த அளவுக்கு கதற..” என்றவள் கேட்ட மறுநொடி அவனோ அவளை அடிக்க கையோங்கிவிட, “மகிழ்..” என்று அழைத்தாள் ராகவி.. அவளின் அழைப்பில் ஷீலாவை அடிக்க கையோங்கியவன் கையை உதறிவிட்டான்.. ஷீலாவோ பயத்தில் நடுங்கியே விட்டாள்..

அவளின் கண்களில் பயத்தைப் பார்த்த மகிழன், “பயம் என்றால் என்னன்னு இப்போ புரியுதா..? நீ சொன்ன விஷயத்தில் அவ ஏதாவது பண்ணிக்கிட்டா என்னோட நிலைமை.. இவ்வளவு தூரத்தில் இருக்கேன்.. நான் அவளை போய் காப்பாற்ற முடியுமா.. என்னைக்கும் ஒருத்தங்களோட நம்பிக்கையை அழிக்க நினைக்காதே ஷீலா.. அதைவிட கொடுமையான ஒன்று இந்த உலகத்தில் இல்ல..” என்று கூறியவனின் கையில் இருந்த செல் அடித்தது.. அதில் வந்த அழைப்பை பார்த்தும் மகிழன், “இனிமேலாவது திருந்து..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான்..

அவன் நகர்ந்தும் ஷீலாவின் அருகில் சென்ற ராகவி அவளின் தோளில் கைவைக்க ராகவியை நிமிர்ந்து பார்த்த ஷீலா, “நிலா ரொம்ப நல்ல பொண்ணு ராகவி.. மகிழனுக்கு ஏற்ற ஜோடி..” என்று கூறியவளின் குரலில் பதட்டம் மட்டும் குறையவே இல்லை.. அதை கவனித்த ராகவி, “நீ அவங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்க போறீயா ஷீலா..” என்று சந்தேகமாகக் கேட்டதும் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஷீலா..

“அவளோட நம்பிக்கையை நான் உடைக்க மாட்டேன்.. அதை உடைக்க எண்ணம் கூட எனக்கு இல்ல.. அவளோட பேசியதில் எனக்குள் ஒரு மாற்றம்.. நானும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்க போறேன் ராகவி.. இந்த கம்பெனி வேலையை நான் ரிஸைன் பண்ணிட்டு போக போறேன்..” என்று மனதில் இருப்பதை மறைக்காமல் ராகவியிடம் கூறிவிட்டு கண்களைத் துடைத்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே சென்றாள்.. அவளின் இந்த மாற்றம் ராகவியை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது..

மகிழனிடம் பேச முடியாமல் போனை வைத்த வளர்மதி படுக்கையில் அமர்ந்து அழுதுகொண்டே இருக்க அவளைத் தேடிக்கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்த பானுமா அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மறுநொடியே, “வளரு என்னடா எதுக்கு அழுதுட்டு இருக்கிற..” என்று பதட்டத்துடன் கேட்டபடியே அவளை நெருங்கிய பானுமாவைப் பார்த்தவள், “அம்மா..” என்று அழைத்துவிட்டு காரணமே சொல்லாமல் அழுக ஆரம்பித்தாள்..

அவளின் அழுகையைப் பார்த்த பானுமா, “உனக்கு என்னடி ஆச்சு காரணத்தைச் சொல்லிட்டு அழு..” என்று ஒரு அதட்டல் போடவும் அழுகையை நிறுத்துவிட்டு அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வளர்மதி, “அம்மா எனக்கு தலை கீர்ன்னு சுத்து.. வயிற்றை எல்லாம் பிரட்டுது பானுமா..” என்று குழந்தை போல கூறிய மகளின் முகம் பார்த்தும், “இதுக்கு எல்லாம் அழுவாங்களா..? வா நம்ம முதலில் ஹாஸ்பிடல் போலாம்..” கூறியதும் அவளும் சரியே தலையசைத்து அவருடன் கிளம்பினாள்..

“நீ முகம் கழுவிட்டு தலையை சீவுடா.. நான் போய் உன்னோட அத்தையை கிளம்பு சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையைவிட்டு வெளியே சென்றதும் பானுமாவின் சிந்தனையில் மின்னடிக்க, ‘ஒரு வேளை..’ என்று யோசித்துக் கொண்டே சமையலறைக்கு சென்ற பானுமா, “லட்சுமி..” என்று அழைக்க, “அத்தை..” என்று திரும்பினார் லட்சுமி.. அவரின் முகம் பார்த்தும், “வளருக்கு தலை சுத்துன்னு சொன்னா.. நீ கிளம்பு அவளை ஹோஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வரலாம்..” என்று கூறினார்..

அவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென நினைத்த லட்சுமி வேகமாக கிளம்பி வெளியே வர சங்கரனை அழைத்து காரை எடுத்துவரச் சொல்ல அவரும் காருடன் தயாராக இருக்க வளர்மதி அறையைவிட்டு வெளியே வந்ததும், “வாடாம்மா சீக்கிரம் போயிட்டு வரலாம்..” என்று வளர்மதியின் கையைபிடித்து அழைத்து சென்ற பானுமாவின் பின்னோடு நடந்தார் லட்சுமி.. மூவரும் காரில் ஏறியதும், “காரை மெதுவாக ஓட்டுங்க..” என்று டிரைவரிடம் கூறினார் பானுமா..

ஷீலா போனை கொடுத்ததில் இருந்தே வளர்மதிக்கு என்னவோ ஏதோ என்று அவனின் மனம் கலங்க, ‘இவள் எதுக்கு போன் பண்ணிருப்பா..?’ என்றவன் யோசிக்கும் பொழுதே நேற்று அவளை அவன் திட்டியது நினைவு வர, ‘நேற்று நான் திட்டியதில் கோபம் வந்து என்னோட பேசமாட்டேன்னு சொல்லிட்டு போனை வெச்சுட்டா.. அதன் என்னோட பேசனுன்னு கூப்பிட்டு இருப்பாள்..’ என்றவன் நினைத்துவிட்டு திரும்பியதும் அவனின் எதிரே வந்து நின்றாள் ஷீலா..

அவளின் முகம் பார்த்த ஷீலா, “அவங்க ரொம்பவே ரொம்பவே படபடப்பாக இருந்தாங்க.. உன்னிடம் ஏதோவொரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொன்னாங்க.. நீ அவங்களுக்கு போன் பண்ணி பேசு..” என்று சொல்லிவிட்டு, “இந்த இது என்னோட ரிஸைனிங் லெட்டர்..” என்று அவனிடம் லெட்டர் கொடுத்தவள், “ஐ எம் சாரி..” என்று சொல்லிவிட்டு அவனைவிட்டு விலகி நடந்தாள் ஷீலா..

அவள் செல்வதைப் பார்த்த மகிழன் அவள் சொன்ன விஷயம் நினைவுக்கு வர, ‘ஊரில் யாருக்கு என்ன ஆச்சோ தெரியல..’ என்று நினைத்தவன் உடனே வளர்மதிக்கு அழைக்க அவளின் போன் அடித்தே தவிர யாருமே எடுக்கவில்லை.. அவள் எடுக்கவில்லை என்றதும் அப்பாவின் நினைவு வர அவருக்கு அழைத்தான் மகிழன்.. அவரோ வளர்மதியை காரில் அனுப்பி வைத்துவிட்டு போன் அடிக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்..

அது மகிழனின் அழைப்பு என்றதும், “ஹலோ மகிழா.. என்னப்பா இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்க..” என்று கேட்டதும், “அப்பா வளர்மதி எங்கே..?” என்று கேட்ட மகிழனின் குரலில் இருந்த தவிப்பை உணர்ந்தவருக்கு என்னவோ போல இருந்தது.. அது மட்டும் இல்லாமல் வளர்மதி என்றும் இல்லாமல் இன்று அதிகநேரம் அழுதது மட்டும் இல்லாமல் அவளின் முகம் சரியில்லை என்று உணர்ந்த சங்கரன், “என்ன மகிழா ஒரு மாதிரி பேசற..? உனக்கு என்னடா ஆச்சு..? உனக்கும் வளருக்கும் ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டதுமே அவனுக்கு மனம் வலித்தது..

‘இவரிடம் என்ன சொல்றது..?’ என்று யோசித்தவன், “இல்ல அப்பா வளர்மதி பக்கத்தில் இருந்தா போனை கொடுங்க..” என்று கூறியதும் “வளரு.. வளரு.. பாட்டி கூட சேர்ந்து ஹாஸ்..” என்று ஆரம்பித்த்தவர் நிறுத்துவிட்டு, “அவ உன்னோட பாட்டியுடன் சேர்ந்து கோவில் வரையில் போயிருக்கப்பா.. அவங்க வந்ததும் நானே உனக்கு போன் பண்றேன்..” என்றவனை சமாளிப்பது போல கூறியதும், “ம்ம் சரிங்கப்பா..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் மகிழன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவனின் போனை வந்ததும் கையில் இருந்த ரிஸைன் லெட்டர் பார்த்து, ‘ஒரு நிமிசத்தில் எத்தனை மாற்றம் வருது..’ என்று நினைத்தவனின் அருகில் வந்த ராகவி, “என்ன மகிழா நிலா போனை எடுத்தாளா..” என்று கேட்டதும் அவளின் நினைவில் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல ராகவி.. சரி நீ வீட்டுக்கு கிளம்பு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு கிளம்பறேன்..” என்று சொல்ல சரியென தலையசைத்தவள், “அவளை சமாதானம் பண்ணு மகிழா..” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்..

அவனின் நினைவு முழுவதும் வளர்மதியின் நினைவே நிறைந்திருக்க, ‘எதுக்காக அவ்வளவு அவசரமாக போன் பண்ணிருப்பா..’ என்றவன் அங்கே யோசிக்க இங்கே வளர்மதியோ வாயைத் திறக்காமல் அமைதியாக அமர்ந்திருக்க கார் சீரான வேகத்தில் ஹாஸ்பிடல் சென்றடைய காரைவிட்டு இறங்கிய லட்சுமி அந்த மருத்துவமனையின் பெயரைப் படித்தும் அதிலிருக்கும் அர்த்தம் புரிந்துவிட, “அத்தை..” என்றவர் சந்தேகமாகக் கேட்டதும், “அப்படி இருக்குமோன்னு ஒரு சந்தேகம்.. வா..” என்று அழைத்துச் சென்றார் பானுமா.. அது அந்த ஊரிலேயே இருந்த பெரிய மகப்பேறு மருத்துவமனையில் ஒன்று..

அதன் உள்ளே பானுமா நுழைவதைப் பார்த்த டாக்டர் ஒருவர், “அம்மா நீங்க எங்கே இங்கே..?” என்று கேட்டபடியே அவர்களை நெருங்கினர்.. “வாம்மா ராதிகா உன்னைத்தான் எதிர்பார்த்துட்டே வந்தேன்..” என்று சொல்ல அவரின் அருகில் இருந்த வளர்மதியின் முகம் பார்த்த ராதிகா, “சரி வாங்க..” மூவரையும் அழைத்துக்கொண்டு சென்று, “உட்காருங்க அம்மா.. என்ன விஷயம்.. என்ன இந்த பொண்ணு வந்ததில் இருந்து அமைதியாகவே இருக்காங்க..” என்று கேட்டதும், “இவள செக் பண்ணு ராதிகா..” என்று சொல்ல வளர்மதியோ அமைதியாக இருப்பதைப் பார்த்தாள்..

“உங்களோட பேத்தியா பானுமா..” என்று கேட்டதும், “என்னோட மகள் ராதிகா..” என்று சொல்ல வளர்மதியின் முகம் பார்த்த ராதிகா அவளை அழைத்துச்சென்று செக் பண்ணிட்டு வெளியே வரும் வரையில் பானுமாவின் மனமும், லட்சுமியின் மனமும் ஆயிரம் தெய்வங்களை வேண்டியதுகொள்ள தனியறையில் இருந்து வெளியே வந்த வளர்மதியின் முகம் செந்தாமரை மலரென மலர்ந்திருந்தது..

“அம்மா நீங்க பாட்டி ஆகிட்டீங்க..” என்று சந்தோசமான விஷயத்தை பானுமாவிடம் கூறிய ராதிகா, “ரொம்பவே மெலிஞ்சு இருக்காங்க.. நான் டேபிலட்ஸ் எழுது தரேன் அதை அவங்களுக்கு கொண்டுங்க..” என்று சொல்ல மருமகளின் முகம் பார்த்த லட்சுமி, “ஐயோ என்னோட கட்டித்தங்கம்..” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட, “இனிமேல் அவன் எப்படி வெளிநாட்டில் இருப்பான்னு நானும் பார்க்கிறேன்..” என்று கம்பீரமாக கூறியவர் வளர்மதிக்கு திஷ்டி கழித்தார்..

அங்கிருந்து வெளியே வந்த பானுமா, “இந்த பையன் ரொம்ப கெட்டிக்காரன்.. ஆமா இதுக்கு அந்த அழுகை அழுதியா..?” என்று புன்னகையுடன் கேட்ட பானுமாவின் முகம் பார்த்து சிரித்தாள் வளர்மதி.. மூவரும் காரில் வீட்டு வந்ததும் லட்சுமி சென்று கேசரி கிளற, “சங்கரா..” என்று அழைத்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த அம்மாவின் முகம் பார்த்த சங்கரன், “என்னம்மா..?” என்று கேட்டவர் வளர்மதியைப் பார்த்தார்..

அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வளரின் முகம் மெல்ல கனிந்திருக்க, “என்ன கண்ணு நைட் எல்லாம் அழுதுட்டே இருந்தியா..? உன்னோட உடம்புக்கு ஒன்னும் இல்லைதானே..?” என்றவர் கேட்டதும் புன்னகையுடன் இல்லையென தலையசைத்த வளர்மதியைப் பார்த்த பானுமா, “அதை அவளிடம் ஏண்டா கேட்கிற..?” என்று அவரை இடைமறிக்க பானுமாவின் முகத்தைப் புரியாமல் பார்த்த சங்கரனின் பார்வையை புரிந்துகொண்ட பானுமா, “டேய் நான் கொள்ளு பாட்டி ஆகிட்டேனே..” என்று சந்தோஷத்தை மகனிடம் பகிர்ந்தார்..

அவர் அந்த விஷயத்தை சொன்னதும் சங்கரனின் கவனம் எல்லாம் மாறிவிட, “அப்போ நான் தாத்தா ஆகிட்டேனா..?” என்று பூரிப்புடன் கேட்ட சங்கரனின் முகம் பார்த்த பானுமா, “நீ போய் அப்பா எங்கிருந்தாலும் இங்கே அழச்சுட்டு வா..” என்று சொல்ல அவரும் சந்தோஷத்தில் வேகமாக அப்பாவை அழைத்துவர சென்றதும் வளர்மதியின் முகம் பார்த்த பானுமா, “நீ போய் ரெஸ்ட் எடு செல்லம்..” என்று வளர்மதியை அவளின் அறைக்குள் அனுப்பி வைத்தார்..

தன்னுடைய அறையின் உள்ளே நுழைந்த வளர்மதிக்கு மகிழனின் நினைவு அதிகரித்தது.. அப்பொழுது அவளின் போன் அடிக்க வேகமாகச் சென்று அதை எடுக்கும் முன்னாடியே போன் கட்டாகிவிட அதிலிருந்த அழைப்பைப் பார்த்த வளர்மதி அதிர்ந்தாள்.. அதிலிருந்த அழைப்பு அனைத்தும் மகிழனின் அழைப்பாக இருக்க உடனே அவனுக்கு அழைத்தவள் அவனின் குரலைக் கேட்க அழைப்பில் காத்திருந்தாள்.. அந்தநேரம் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.. அவன் போனை எடுக்கவில்லை என்றதும் வளர்மதி போனை கட் பண்ணிட்டு படுக்கையில் அமர்ந்தாள்..

அன்றைய பொழுது எப்படி சென்றதே என்று தெரியாத வண்ணம் சென்று மறைய இரவு அத்தை கொடுத்த மாத்திரையை போட்டுக்கொண்டு மகிழனுக்கு ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டு களைப்பில் தூங்கிவிட்டாள்.. மறுநாள் காலையில் கண்விழித்த மகிழனுக்கு அவனின் தவிப்பு அதிகரிக்க, ‘அப்பா இன்னும் போன் பண்ணவே இல்ல..?’ என்று நினைத்துக்கொண்டே போனைக் கையில் எடுத்துப் பார்க்க அதில் ஒரு வாய்ஸ் மெசேஜ் பார்த்து அதைக் கேட்க ஆரம்பித்தான்..

“தாய்மடி உன் உறைவிடம்

வான்மதி பொன் திருமுகம்

தாய்மடி உன் உறைவிடம்

வான்மதி பொன் திருமுகம்



கனவுகள் நீ தரும் நாளில்

தனிமையிலே மனம் பாடும்

ஆயிரம் பொன்மணி தீபம் தருமோ

தாயின் மனமே...” என்று தான் தாயான விஷயத்தை அந்த பாடலின் மூலம் அவனிடம் மறைமுகமாக கூறினாள் வளர்மதி.. முதலில் அந்த பாடல் அவளின் குரலில் ஒலிப்பதைக் கேட்ட மகிழனின் விழிகள் தானாக மூடிக்கொள்ள அதிலிருந்த ஒவ்வொரு வரியும் இருவரின் பிரிவின் துயர் மட்டுமின்றி வேறு ஒறு பொருள் அந்த பாட்டில் இருப்பதை உணர்ந்தான் மகிழன்.. அந்த பாடலை மீண்டும் கேட்ட மகிழனுக்கு அவள் மறைமுகமாக கூறிய செய்தி புரிந்துவிட அவனின் உள்ளம் பூரித்துபோக, “ஐயோ துளிரு.. இதில் இருக்கும் விஷயம் உண்மையா.. என்னோட துளிரின் வயிற்றில் இன்னொரு தங்க தளிர் துளிர்விட்டு இருக்கா..” என்று சந்தோஷத்தில் தன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறினான்..

அந்த சந்தோசத்தில் அவனின் கண்கள் இரண்டும் கலங்க முகமோ பிரகாசமாக மாறிவிட, ‘இந்த விஷயம் சொல்லத்தான் எனக்கு போன் பண்ணிட்டே இருந்தாளா..?’ என்று யோசித்தவனுக்கு மனம் வலிக்க, ‘அது தெரியாமல் அவளைத் திட்டிடேன்.. இந்த நேரத்தில நான் அவளோட பக்கத்தில் இல்லையே..’ என்று வருத்தபட்ட மகிழனுக்கு துளிரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது.. அவளிடம் பேசுவது போலவே அவளுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்ட மகிழன் தன்னை முழுவதுமாக வேளையில் மூழ்கடித்துக் கொண்டான்..

தன்னுடைய வேலையில் கவனத்தைத் திருப்பிய மகிழன் வளரிடம் பேசவே இல்லை.. அவனின் அழைப்பை எதிர்பார்த்த வளர்மதி மெல்ல மெல்ல சோர்ந்து போக ஆரம்பித்தாள்.. சரியாக இரண்டே வாரத்தில் எல்லா வேலைகளையும் முடித்தவன் இந்தியா வருவதற்கு தயாராகினான்.. ஆனால் அந்த இரண்டு வாரத்தில் வீட்டில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியாமலே போனது.. இந்த இரண்டு வாரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்க அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

அது என்ன அதிர்ச்சியாக இருக்கும்..???

நேசம் துளிர்விடும்....

சிலர் பாடல் வரிகளை கவிதை என்று நினைச்சுட்டு இருக்கீங்க.. அத்தியாயம் கீழே இருப்பது என்னோட கவிதை.. அடுத்து இருப்பது பாடல் வரிகள்.. இதுவரை இந்த பாடல் கேட்காமல் இருந்தால் கேட்டு ரசிக்கவும்...
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஓவர் அதிர்ச்சி வைச்சீங்க-ன்னா
உடம்புக்கு ஆவாதுங்கோ,
சந்தியா செல்லம்
சரிங்க அம்மா....
பானுமா, “டேய் நான் கொள்ளு பாட்டி ஆகிட்டேனே..” என்று சந்தோஷத்தை மகனிடம் பகிர்ந்தார்.
நீங்க இந்த அளவுக்கு ஹாப்பி ah பானுமா ....????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சரிங்க அம்மா....
நீங்க இந்த அளவுக்கு ஹாப்பி ah பானுமா ....????
ஏற்கனவே நானு டபுள்
ட்ரிபுள் ஹேப்பியோ
ஹேப்பி, சந்தியா டியர்
என்னாண்டயே கேள்வியா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top