• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Today's Special - 5 GOLD

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
*தங்கம் பற்றி மக்களுக்கு
போதுமான விழிப்புணர்வு
இல்லை...!
சில விளம்பரங்கள் சேதாரம்
இத்தனை % என்றும் செய்கூலி
இல்லை என்றும் கூறுகின்றது
உண்மை என்ன ?*

ஒரு பவுன் தங்கச் செயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால்
மட்டுமே நகை செய்ய முடியும்...!

இது அனைவருக்கும் தெரிந்தது
ஆனால் 8 கிராம் தங்கத்தில்
1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம்தான் நகை
செய்யப்படுகின்றது...!

ஆனால் சாமானியன் நகை வாங்கும்
பொழுது 6.5 தங்கம் + 1.5 செம்பு
இரண்டுக்கும் சேர்ந்து 8 கிராம்
தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்
அது மட்டுமின்றி அதற்கு மேலாக
சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம்
செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாகக்
கூறி செம்பையும் தங்கத்தின் விலைக்கு
விற்கின்றார்கள்...!

இதில் நான் சொல்லுவது
என்னவென்றால் 6.5 தங்கம் + 1.5 செம்பு
(தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள்
வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும்
இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து
விட்டு தங்கத்தின் விலையை போட்டு
விடுகின்றார்கள்...!

ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு
9.5 கிராமுக்கு நாம் பணம்
கட்டுகின்றோம்
யாரை ஏமாற்றுகின்றார்கள்
நகைக்கடைகாரர்கள்?
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின்
இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக
உறிஞ்சி எடுத்துக் கொண்டு
இருக்கின்றார்கள்...!

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை
திறக்கின்றார் என்றால் ஒரு
சில வருடத்தில் பல மாடிகளும்
பல ப்ளாட்டுகளையும் வாங்கி
குவிக்கின்றார்கள் என்றால்
பணம் எப்படி வந்தது?
நான் மேலே சொன்ன
கணக்குத்தான் உண்மை...!

இன்று ஒரு கிராம் தங்கத்தின்
விலை என்ன?
பவுனுக்கு 3 கிராம் என்று
வசூல் செய்யும்போது ஒரு
கிராம் செம்பின் விலை
என்ன?
கணக்குப் போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 452/-
1.5 கிராம் செம்பு - 678/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்க விலை -18993+678=19671
1 பவுனுக்கு தங்கத்தில்
லாபம் - 23376-19671= 3615/-
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 3615+4383=7998.00
என்ன தலை சுத்துதா?
எனக்குள் ஒரு ஆதங்கம்
ஆனால் இந்த விழிப்புணர்வை
மக்கள் எப்போது உணர்கின்றார்களோ,
அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக
குறையும்...!

தங்கம் வாங்க ஆசையுள்ள நல்ல
உள்ளங்களே !
நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள்
மக்களால் எதுவும் முடியும்...!
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Super dear, சேதாரம் னா நகைச் செய்யும் போது waste ஆகுற தங்கம் தானே:unsure:, சேதாரம் ஆன தங்கத்தை நம்மட்ட என்ன திருப்பியாத் தாராங்க ஆன அதுக்கும் சேர்த்து விலையப் போட்டு நம்மட்ட வாங்குராங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Super dear, சேதாரம் னா நகைச் செய்யும் போது waste ஆகுற தங்கம் தானே:unsure:, சேதாரம் ஆன தங்கத்தை நம்மட்ட என்ன திருப்பியாத் தாராங்க ஆன அதுக்கும் சேர்த்து விலையப் போட்டு நம்மட்ட வாங்குராங்க
ஆமாம்ப்பா, ஈஸ்வரி டியர்
நம்மக்கிட்ட இப்படி கொள்ளையடிச்சுத்தான்
அவங்க சொத்து சேர்க்குறாங்கப்பா
 




Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
உண்மை தான் பானும்மா .
இந்த ஆதங்கம் எனக்குமுண்டு...
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
U tube ல் முல்லை மற்றும் கோதண்டம் இருவரின் தங்க நகை கடைக்காரர் உரையாடல் இருக்கும். அதில் அருமையாக நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . அதை பாருங்கள் சகோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top