You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Un Manaiviyagiya Naan - 14

#1
அத்தியாயம் 14

என்னதான் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் என்று பதவிகள் அவர்களை வெவ்வேறாக காட்சிப்படுத்தினாலும் தோழமையால் நாங்கள் ஒன்றானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வண்ணம் அன்பை பொழிந்து தள்ளுவதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல..

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கலையும் ஆசிமாவும் வழக்கம் போல ஊர் சுற்ற சென்றிருக்கையில் ஓரித்தில் கூட்டம் ஒன்று அதிகமாய் இருப்பதை கண்டனர். ஏதோ அசம்பாவிதம் என்பதை மட்டும் அங்கிருந்தவர்களின் முகங்கள் காட்டிக் கொடுத்தது. இருவரும் அருகில் சென்று கண்டனர்.

இரு சிறு பிஞ்சு குழந்தைகள் லாரியால் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த வண்ணம் கிடந்தனர். அருகில் இருந்த ஒருவர்

“ பாவம் இந்த சின்ன பையன் அப்பா அம்மா இல்லாம இந்த வயசுலை அவன் தங்கச்சிய தூக்கிக்கிட்டே அங்கும் இங்குமா அலையுவான்.. போறவங்க வாறவங்க எல்லார்கிட்டயும் ஐஞ்சோ பத்தோ கேப்பான்..’ இன்னைக்கு பாருங்க.. இறைவா.. உனக்கு கண் இல்லையா..?? என்றார்.

அதை பார்த்த அடுத்த நொடி கத்தி அலறி மயங்கியே போனாள் அசிமா.

“ அசிமா.. அசிமா… என்னாச்சு..? “ என தாங்கி பிடித்த கலை தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி அவள் வீட்டிற்கு அலைத்து சென்றாள்.

வீட்டினுள் நுழைந்ததும் ஓடி சென்று அம்மாவிடம் நடந்ததை கூறி அழுகத் தொடங்கினாள் அசிமா. அவளை சமாதான படுத்தி அவள் அறையில் படுக்க வைத்த அசிமாவின் அம்மா கலையிடம் வந்தார்.

முதல் முதல்ல வீட்டுக்கு வந்துருக்க.. சாப்பாடு எல்லாம் முடிச்சிட்டு பொறுமையா போனா போதும் என்றார்.

“ இல்லை மா.. இன்னொரு நாள் சாப்பிடுறேன்.. அசிமா இப்படி இருக்கையில எப்படி….” என்றாள் கலை.

“ அதனால என்ன மா.. அவ கொஞ்சம் நேரத்தில சரியாகிடுவா.. நீ வா வந்து உட்காரு..” என அமர வைத்தார் அசிமாவின் அம்மா.

“ அவளுக்கு என்ன ஆச்சு மா..? இப்படி தான் விபத்து எதுவும் பார்த்தா மயங்கிடுவாளா..? “ என கலை கேட்டாள்.

“ அப்படியெல்லாம் இல்லை மா.. அவளுக்கு அண்ணா பாசம் அதிகம்.. அது அவளோட பலவீனம்னு கூட சொல்லலாம்.. ” என்றார் அசிமாவின் அம்மா.

“ என்ன அசிமாவுக்கு அண்ணா இருக்கிறாரா..? “ அதிர்ச்சித்தாள் கலை.

“ ஆமா மா.. “ மிகவும் சாதுவாக கூறினார் அசிமாவின் அம்மா.

“ என்ன மா இப்படி சொல்லுறீங்க..? இதுவரை அவ அவளோட அண்ணா பத்தி என்கிட்ட பேசினதே இல்லையே..?! “ வினவினாள் கலை.

“ பேசினது இல்லையா..? “ இது அம்மாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“ ஆமா மா.. ஏன் என்கிட்ட சொல்ல்ல அவ..? இப்போ எதுவும் சண்டையா ரெண்டு பேருக்கும்..? “ என கேட்டாள் கலை.

“ சண்டையா..? அதுவும் அவளோட அண்ணா கூடவா..? “ அம்மா புன்முறுவலை காட்டினாள்.

“ பின்ன எதுக்கு மா என்கிட்ட சொல்ல்ல அவ..? “ கலையின் வேகம் அதிகரித்தது.

“ அதுதான் எனக்கும் புரியலை மா.. அவ மூச்சுக்கு 100 தடவ அண்ணா அண்ணானு தான் ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பா வீட்டுல..” என்றார் அசிமாவின் அம்மா.

“ அவ்வளவு பாசமா அவளுக்கு அவ அண்ணா மேல..? “ ஆச்சரியத்தோடு கேட்டாள் கலை.

“ பாசமா.. அவளுக்கு உயிரே அவளோட அண்ணா தான்.. அம்மா அப்பா எல்லாரும் அடுத்தது தான்..” என்ற அசிமாவின் அம்மாவிடம்

“ அப்படியா… so sweet… இவங்க ரெண்டு பேர பத்தி ஏதாவது interesting –ஆன விஷயம் சொல்லுங்க மா.. “ ஆதித ஆர்வத்தில் புத்துணர்வு கொண்டு கேட்ட கலையை சில வருங்கள் முன்னோக்கி கூட்டிச் சென்றார் அசிமாவின் அம்மா. (வேரென்ன.. அசிமாவோட flashback தான்)

அசிமா-வின் கல்லூரி பருவத்தில்

என்றும் இல்லாதவாறு வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் கண்களால் தூண்டில் போட்டுக்கொண்டே இருந்திருந்தாள் நம்ம அசிமா. அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. நிறைந்த அன்பும் குறும்புப் பேச்சும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் குணமும் கொண்டவள் இவள் எந்நேரமும் கலகலப்பான பேச்சால் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருப்பாள். இன்று அவளது நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதாய் உணர்ந்தாள் அம்மா. அவனை தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்று மனம் கூற அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,

” என்ன டி காலேஜ் க்கு கிளம்புற உத்தேசம் இல்லையா..? “ என்றார்.

காதில் விழாதவளாய் வழிமேல் விழி வைத்து அவனது கற்பனையில் திளைத்திருந்தாள். சிறு வயதில் கட்டிய மணல் வீட்டை உடைத்ததும் வாங்கிய மிட்டாயை பிடுங்கி உண்டதும் அன்று முதல் இன்று வரை அவன் உடையை இவள் அணிந்து மகிழ்வதும், அவன் அதை கண்டு நகைப்பதும் முத்தான நினைவுகளாய் அவள் கண்களில் வடிய, அவனது சட்டை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டவளாய் மெல்ல நகர்ந்து நாட்காட்டியின் அருகில் சென்றாள். தீபாவளிக்கு எத்தனை நாட்கள் உள்ளதென எண்ணிக்கொண்டிருந்தாள்.

” எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்கேன்...? நான் சமையல் கூட முடிச்சிடேன்.. நீ இன்னும் குளிக்கக்கூட போகாம என்ன நின்னுக்கிடே இருக்க..?? “ என்றது அம்மாவின் கனீர் குரல்.

இன்னும் பதில் ஏதும் வராததால் வேகமாக வந்து நாட்காட்டியை தடவிக்கொண்டிருந்தவளை வலது தோள்பட்டையை பிடித்து தன்னை பார்க்கத் திருப்பினாள் அம்மா. கண்களில் கண்ணீர் கட்டி நிற்பதைக் கண்ட அம்மா,

” அடியேய்! நான் உன்ன இப்ப என்ன சொன்னனு இப்படி உக்காந்து அழுதுகிட்டு இருக்க..?? “ காலேஜ்க்கு நேரமாகுதுனு சொன்னது ஒரு குத்தமா..? என கேட்டார்.

“ ஒன்னும் இல்ல மா.. “

என ஸ்ருதி குறைந்த குரலுடன் கூறியவள் உள்ளே சென்று காலேஜ்க்கு கிளம்ப தொடங்கினாள். அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. இன்று ரக்‌ஷாபந்தன். வெளியூருக்கு வேலை விஷயமாய் சென்றிருக்கும் அவள் அண்ணனை விடுப்பு எடுத்து வரும்படி முந்தைய நாள் கைபேசியில் நான்காம் உலகப்போர் நடத்தியது நினைவுக்கு வந்தது.குளித்து முடித்து வெளியே வந்தவளிடம் அம்மா,

” கண்ணே! அண்ணன் தான் விடுப்பு கிடைக்கல தீபாவளிக்கு வரேன்னு சொன்னான்ல.. அப்புறம் எதுக்குடிமா இப்படி குழந்தமாதிரி அழுதுகிட்டு இருக்க..?? “ என கேட்டார்.

” நீ உன் பையனுக்கு சப்போர்ட் பண்ணாத..! ரக்‌ஷாபந்தன் அதுவுமா எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நேத்து வரலனு சொல்லிட்டு வந்திடுவான்னு நினைச்ச.. “ என்று அழு குறலில் கூறியிருக்கிறாள் நம்ம ஆசிமா.
” நீயா ஏதாவது யோசிச்சிக்கிட்டு அழுதுகிட்டு உட்காந்திருந்தா நாங்களா பொறுப்பு..? “ சிறிது காட்டமாகவே கூறினார் அம்மா.

” உன்ன நான் ஏதாவது சொன்னனா..?? நானா கத்திக்கிட்டு இருக்கேன் விடு.. “

என்றவள் இமையோரம் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்தவாறு நகர்ந்தாள்.

அம்மாவிற்கோ அவளது பாசத்தை எண்ணி மகிழ்வதா இல்லை அவள் அழுவதைக் கண்டு வருந்துவதா என புரியவில்லை.சமாதானம் சொல்ல வருவதற்குள் விரு விருவென வாசல் படி தாண்டிவிட்டால் அன்பு மகள்.

கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்பொழுது அவளுக்கு பிடித்த பலகாரம் செய்து சமாதானப்படுத்த முடிவு செய்தாள் அம்மா. அண்ணனின் நினைவலைகளை நெஞ்சில் சுமந்தவாறு கல்லூரிக்குச் சென்றாள் அசிமா. வகுப்பறையில் சகமாணவர்களோடு எப்போதும் உற்சாகமாக இருப்பவள் இன்று ஆழ்கடல் போல் அமைதியாய் காட்சியளித்தது அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

மருதாணி என்றாள் கொள்ளை பிரியம் அவளுக்கு. பண்டிகை நாட்களுக்கெல்லாம் தவறாமல் மருதாணியிட்டுக் கொள்பவள் சாதாரண நாட்களில் மருதாணி ஆசை வந்தால் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி அந்நாளை விஷேச நாளாக மாற்றி மருதாணியிட்டுக் கொள்வாள். முந்தைய நாள் கல்லூரி நண்பர்களுடன் இருக்கையில் ரக்‌ஷாபந்தன் பற்றியும் தன் அண்ணன் பற்றியும் ஆசை மொழிப் பேசிக்கொண்டே மருதாணி இட்டிருந்தாள் அவள். இன்று கைகளின் மருதாணிக்குப் போட்டியாக அவள் கண்கள் சிவந்திருந்தது. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துக்கொண்ட நண்பர்கள் என்னவென்று விசாரிக்கத் தொடங்கினர்.
“ ஏய், ஏண்டி இப்படி வந்து நிக்குற..?? கண்ணுலா சிவந்துபோய் இருக்கு..?? “

எதுவும் பேசாமல் வாடிய பூ தலைகுனிந்தாற் போல தலையை தொங்கப்போட்டவாறு அமைதியாக தன் இடத்தில் அமர்ந்துக்கொண்டாள் அசிமா. என்றும் சுறுசுறுப்புடனும் நகைச்சுவை வாயாடிக் கொண்டும் துள்ளித்திரியும் இவளை பிடிக்காதவர் அவள் வகுப்பில் யாரும் இல்லை.தேனைத் தேடும் பட்டாம்பூச்சியாய் வளம்வந்தவள் இன்று நெருப்பிலிடப்பட்ட விட்டில் பூச்சியாய் காட்சியளிப்பது அனைவரது மனதையும் உருக்கியது.நண்பர்கள் அவள் அருகில் சென்றனர்.

“ என்னடி ஆச்சு..? என்ன பிரச்சனை..?? “ கூட்ட்த்தில் ஒருத்தி கேட்க

“ ஒன்னுமில்லை டி... “
என வலியில் வழிந்தோடும் விழிநீரைத் துடைத்தவாறு கூறினாள் அசிமா.

“ உன்ன எங்களுக்கு தெரியாதா..?? இத்தன வாட்டமா இருக்கிறவளா நீ..?? என்ன ஆச்சு சொல்லு.. “ விடாப்பிடியாக கேட்டனர் தோழமை கூட்டம்.

“ அண்ணா இன்னைக்கு ஊருக்கு வரல.. “
அழுகை தொண்டையை அடைக்க நடுங்கிய குரலுடன் கூறினாள் .அவள் அவளது அண்ணன் மீது கொண்ட பிரியம் அவளை தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவள் வாயை திறந்தால் உச்சரிக்கும் பத்து வார்த்தைகளில் எட்டு வார்த்தைகள் அண்ணனை பற்றியதாய் தான் இருக்கும். அதனால் அவளது வலியினை நன்கு உண்ர்ந்துக் கொண்டனர் அவளது நண்பர்கள்.

” சரி அழாத.. சீக்கிரம் உன்ன பார்க்க அண்ணன் வருவாங்க...”
ஒரு தோழி கூற இன்னொரு தோழியோ,

” போன் செய்து பேசினியா..? ஒரு தடவ பேசு கொஞ்சம் அமைதியா உணருவ..” என்றாள்.

” இல்ல இப்ப வேணாம் நான் அப்புறமா பேசிக்கிற..” என்றாள் அசிமா.

” ஹேய்.., உனக்கு ஒன்னு தெரியுமா.. நேத்து நம்ம ராமு வண்டியில சீன் போட்டு கீழே விழுந்து செமயா பல்பு வாங்கினான்... “
அவளை சிரிக்க வைக்க சகதோழர்கள் ஏதேதோ பேச கொஞ்சம் சாந்தமானாள் அசிமா.(சந்திப்போம்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top