• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.

தொடர் வேலையின் காரணமாக பதிவு போட லேட் ஆகிட்டு..
சாரி டியர்ஸ்... லாங் கேப் விட்ட மாதிரி இருக்கு..
ஸ்டோரி எப்படி இருக்கு... படிக்குறிங்க பட் கருத்தை சொல்ல மாட்டுகிறீங்க
why?? இந்த எபி படிங்க படித்து சொல்லுங்க… உங்கள் கருத்து மட்டுமே கதையை
மேம்படுத்தும்... உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்…
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உயிர் – 16

இந்த 2 வருடத்தில் நடந்ததை சத்ரியன் மைத்ரேயியுடன் கூற எண்ணினார்... அதே போல்
அவர்கள் வாழ்வில் நடந்த, நடந்துக் கொண்டு இருக்கிற எல்லாம் கூற எண்ணினார் சத்ரியன்...

இங்கு சத்ரியன் வரும்பொழுது எல்லாம் மையூரி அவரிடம் ஊருக்கு வருவேன் என்று அழும்போது எல்லாம் அவருக்கு மிக மிக வருத்தமாக இருக்கும். அவளிடம் சொல்லலாமா என்று எண்ணுவார், ஆனால் அப்படி கூறி இவள் ஏதாவது செய்துவிட்டாள் என்றால், இவர் இத்தனை பாடுபடுவதே அந்த சொத்தை பாதுகாக்கவும், இவளை பாதுகாத்து சொத்தை இவள் கையில் ஒப்படைப்பதும் தான்...


சொத்தை இவள் பெயருக்கு எழுதியாச்சு, இனி இவளை நலபடியாக வளர்க்க வேண்டும்
அந்த சொத்தை நிர்வகிக்கும் திறமை வரவேண்டும் என்று தான் அவளை இங்கு படிக்க
அனுப்பியதே. ஆனால் இவளிடம் முன்பே கூறி இருந்தால் கண்டிப்பாக “ நாம யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது தாத்தா.. அவங்க சொத்து என்று தெரிந்த பிறகு நாம வைத்துக் கொள்ளவே கூடாது...

அவர்கள் வாரிசை நாம் கண்டு பிடித்து அவர்களுக்கு அளிக்க வேண்டும், அவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை என்றால் நாம் வைத்துக் கொள்ளலாம்” என்று உடனே கிளம்பி விடுவாள் என்று தெரிந்து தான் அவர் இவ்வளவு நாளும் அவளிடம் கூறாமல் இருந்தார்...

ஆனால்இனியும் தாமதிக்க வேண்டாம்.. “ எத்தனை காலம் இன்னும் உயிருடன் இருப்பேன் என்று எனக்கு தெரியாது, அதற்கு முன் இவளிடம் எல்லாம் கூறி ஒப்படைக்க வேண்டும், அதை அவள்பாது காப்பதும், அவர்களுக்கு குடுப்பதும் இவள் கையில் தான் இருக்கிறது..


அந்த சித்தர் கூறியது போல் அவளின் 2௦ வது வயது வரை இவளை அங்கு அழைக்காமல் இருக்க வேண்டும், அந்த வயது வரை இவளை பாதுகாத்தால் போதும் அதன் பிறகு இவளுக்கு ஆபத்து இல்லை ” என்று எண்ணி தான் சத்ரியன் இந்த முறை இங்கு மும்பை வரும்பொழுது எல்லாம் யோசித்து தான் வந்தார்....

இனி மைத்ரேயி 3 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்க போகிறாள், வயது 19 ஆக போகிறது...
இன்னும் 1 வருடம் இவளை பாதுகாக்க வேண்டும், சும்மா ஊருக்கு வர வேண்டாம் என்று
கூறினால் அவள் சொல்வது போல் என்றாவது ஒரு நாள் எதிர்பாரத நேரம் ஊரில் வந்து நிற்பாள் என்று எண்ணி இதோ சொல்ல ஆயத்தம் ஆகி இருக்கிறார் சத்ரியன்...

மைத்ரேயி, ஜிக்கி இருவரும் அவரிடம் கதை கேட்க ஆர்வமாக இருந்தனர்... “ 1௦௦
வருடங்களுக்கு முன் நடந்த எல்லாம் கூறினார் சத்ரியன், அதே போல் சத்ரியா திருமணம், மையூரி திருமணம் எல்லாம் கோட்டைத்தாய் வேலை தான் என்றும், நிலம் அவர்கள் இடம் தான் இப்போ அவங்க எங்க இருக்காங்க என்று தெரியாது, அதே போல அவங்க வாரிசு இருக்கா என்று தெரியாது என்றும் கூறினார்..


அதே போல் சத்ரியா போட்டோவும் காட்டினார். அதை பார்த்ததும் மைத்ரேயிக்கு நியாபகம் வந்தது, அன்று அவள் போனில் வைத்திருந்த போட்டோவும் ஒரே போட்டோ அதுலேயே கண்டுக்கொண்டாள். ஆனால் அவரிடம் கூறாமல் மீண்டும் அவர் கூறியதை எல்லாம் அமைதியாக இருந்து கேட்டனர் இருவரும்...

கூடவே அவர்கள் செய்தது மிக பெரிய தவறு.. என் வாழ்நாளில் உன் அக்காவையும், உன்
அத்தையையும் மன்னிக்கமாட்டேன் என்றுக் கூறினார்..

அந்த போட்டோவை பார்த்ததும் ஜிக்கி கண்டுக் கொண்டாள் இது கெளதம் அம்மாவே என்று.. இது தெரியாமல் தான் இவர்கள் இருகிறார்களா என்றும் மனதில் எண்ணிக் கொண்டாள்..

அவளுக்கு தான் கெளதம் வீட்டு மனிதர்கள் எல்லாரும் அத்துபடியே.. அதன் படி இந்த மைக்
வைத்து காய் நகர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் ஜிக்னஷா விதார்த்....
அந்த நிலம் இபொழுது நமக்கு தான், அதன் உழைப்பு எல்லாம் நம்மளோடது என்று கூறினார்..

அவர் அப்படி கூறவும் “ தாத்தா உழைப்பு நம்மளோடது தான், ஆனால் கோட்டை, கோவில்
எல்லாம் அவங்களோடது தான.. அவங்க கேட்டால் நாம் கண்டிப்பாக குடுக்கணும்” என்று
கூறினாள்...

அவள் கூறுவதும் அவருக்கு சரி என்று பட்டது, அதே போல அவளுக்கு வரும் ஆபத்தையும்
கூறினார் அவர் அதை ஜிக்கி மிக மிக கவனமாக கேட்டாள்...

மைத்ரேயி பெரிதாக எண்ணவில்லை.. அவளுக்கு தெரியும் கோட்டைத்தாயை மனதார
வேண்டினால் அவள் உதவி செய்வாள், அவளை நான் என்றும் மனதார வேண்டுகிறேன் அவள் என்னை காப்பாற்றுவாள் என்றே எண்ணி தாத்தா சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள்....


அதே போல், அவள் சாமியாக மாறியதை கூறவில்லை, அப்படி கூறினால் அவள் ஒருவேளை அங்கு வந்துவிடுவாள் என்று எண்ணி கூறவில்லை,, அதே போல கெளதம் இவளை தேடி வந்ததையும் கூறவில்லை.... கூறி இருந்தால் பின்னாளில் வருவதை தடுத்திருக்கலாம்.... விதி யாரை விட்டது...

அதன் பிறகு இப்பொழுது இந்த 2 வருடமாக நடந்ததை கூற ஆரம்பித்தார் சத்ரியன்...

அன்று கோவில் திருவிழா முடிந்ததும் கௌதமை அழைத்து வர ஆட்களை அனுப்பினார் சத்ரியன். ஆனால் இவர் எதிர்பாரத வசமாக அவன் கிளம்பிவிட்டான்... அவன் யார் என்று அறிந்துக் கொள்ளவே சத்ரியன் அவனை அழைத்து வரக் கூறினார். ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது என்று எண்ணிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தார் சத்ரியன்..

அன்றைய சம்பவத்துக்கு பிறகு தேவி கோட்டைநல்லூர் ஊரில் கால் வைக்கவே இல்லை, ஆனால் கோட்டை அப்படி இல்லாமல் தினமும் “ அந்த பாவிகளை அழிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என்று வேண்டி கொண்டு இருக்கிறாள், இதில் அவள் ஊரை சரியாக கவனிக்க முடியவில்லை...

யாராக இருந்தாலும், ஒரே நாளில் எல்லாம் மறந்து, மன்னித்து விட மாட்டார்கள்.. செய்த தவறின் பலனை அனுபவித்து ஆக வேண்டும், அப்படிதான் கோட்டையும் எண்ணிக் கொண்டு இருந்தாள், மனதில் அவர்களை அழிக்க வேண்டும் என்ற வன்மம் இருப்பதால் இப்பொழுது எல்லாம் மக்களின் வேண்டுதலை அவளை செவி கொண்டு கேட்டும் அவர்களுக்கு அருள் அளிக்காமல் இருந்தாள்...

தேவி வருவதற்கு முன் என்றால் அவளின் பழிவாங்கும் ஆவி அப்படியே பெட்டியில் இருந்தது, அவளுக்கு சாமியின் வரம் இருந்ததில் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் இருந்தாள், அதிலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனமும் இருந்தது...


ஆனால் இப்பொழுது அவளால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யமுடியும், கெடுதல் செய்ய முடியாது.. அது தான் அவர்களை அழிக்கும் முன் நல்லது செய்ய மனது வராமல் அப்படியே செவி இருந்தும் செவிடியாக இருந்தாள் கோட்டையம்மாள்....

அதிலும் கோட்டைநல்லூர் எல்லா ஊரையும் விட சற்று உயர்ந்த பகுதி, அதனால் தான் அந்த அருவி இன்னும் வற்றாமல் நீரை ஊற்றிக் கொண்டு இருக்கிறது.. ஒரு மதில் விழுந்த பிறகு பக்கத்துக்கு ஊர் மக்கள் வந்து இந்த அருவியில் இருந்து அவர்கள் ஊருக்கு தண்ணீர் வசதி செய்துக் கொண்டு சென்றனர்.. இதையும் கோட்டை பார்த்துக் கொண்டு இருந்தாள் என்றாவது ஒரு நாள் அவளின் வாரிசு வந்து இந்த நிலத்தை பயன்படுத்துவார்கள் அப்பொழுது இவர்களுக்கு தண்ணீர் பஞ்சம் வர கூடாது என்று எண்ணி தான் இங்கு அருவியில் தண்ணீர் வர வைத்தாள்...

ஆனால் இப்பொழுது யார் எல்லாமோ அந்த நீரை அனுபவிகின்றனர் என்று பார்த்துக் கொண்டு இருந்தாள், ஆனால் அவளின் பார்வையை கண்ட யாவரும் எண்ணுவர் அந்த அருவியையும் அவள் நிறுத்துவாள் என்று....

அருவி நீர் ஓடுவது எப்பொழுதும் கோட்டைநல்லூர் ஊரை தாண்டி பின் பக்க மதில் சுவர் பக்கம் பெரிய வாய்கால் ஓன்று உண்டு, அதன் வழியாக வெளியில் சென்று சிறிது தூரம் ஓடி அப்படியே காட்டு வழியாக செல்லும் அருவி நீர்....

கோட்டைநல்லூர் ஊர் பின்னாடி ஊர் கிடையாது, பெரும் காடு தான் உண்டு... மீதி பக்கம் ஊர்.. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த காட்டை அழித்து வருகின்றனர்... மிகவும் செழிப்பான பகுதி என்று...

அதன் பிறகு ஊர் எந்த மாற்றமும் இல்லாமல் தான் சென்றது... இப்படி இருக்க அன்று அப்படி தான் எல்லாரும் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது என்றும் இல்லாத திருநாளாக ஊரில் பெரும் மழையும், புயல் காற்றும் அடித்து ஊரையை கதி கலங்க வைத்துக் கொண்டு இருந்தது...

கிட்ட தட்ட 3 நாள் தொடர் மழை... ஊர் மக்கள் எல்லாம் அடைக்கலம் புகுந்தது சத்ரியன்
கோட்டையிலும், கோட்டைத்தாய் கோவிலிலும், அதிலும் அந்த பூவரசம் மரம் பாதி அளவு நீர் நிறைந்து நின்றது....

கோவிலும், கோட்டையும் சற்று உயரமான பகுதி, அதனால் பெரும் அளவு தண்ணீர் கட்டி
நிற்கவில்லை... அப்பொழுது தான் ஊரின் வலது பக்க மதில் சுவரும் இடிந்து விழுந்தது.. இதை யாரும் எதிர் பார்க்காதது.. இப்பொழுது அந்த சுவரும் இடிந்து விழுந்ததில் இரண்டு பக்கமும் இருந்து நீர் பீரிட்டு வெளியேறியது...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
இதில் பக்கத்துக்கு ஊர் நிறைந்து அடுத்த ஊர் என்று எங்கும் தண்ணீர் மயம் தான் இத்தனையும் முதல் நாள் மழையில் நடந்தது... கோட்டையே எண்ணிவிட்டாள் போலும் இந்த ஊருக்கு இனி பாதுகாப்பு வேண்டாம் என்று...

அதிலும் இனி அவள் இந்த ஊரை பாதுகாத்து என்ன தான் செய்ய போகிறாள்.. இத்தனை நாளும் அவள் பெட்டியில் இருந்தாள் அவளுக்கு நம்பிக்கை இருந்தது எப்படியும் நிலத்தை அவள் வாரிசு வந்து ஆளுவான். ஆளவைப்பேன் என்று...

ஆனால் இன்றோ எல்லாம் மாறியது அது தான் இந்த கோட்டைநல்லூரையும் அவள் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க எண்ணி தான் இதை எல்லாம் சத்தமில்லாமல் செய்கிறாள்..

ஆனால் இவள் செயலில் அந்த ஊர் மக்கள் தான் மிகவும் கதிகலங்கி போயினர்...

இரண்டாம் நாளும் மழை நிற்கவில்லை... கோட்டை மாடியில் ஊர் மக்களுக்கு என்று சமையல்நடந்துக் கொண்டு இருந்தது.. கோட்டைத்தாய் கோவிலில் இருந்தவர்கள் கஷ்ட பட்டுஇப்பொழுது தான் சத்ரியன் கோட்டையை வந்து சேர்ந்தனர்...

எல்லாரும் மாடியில் இருந்து வேலையை செய்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் மீண்டும் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது... இப்பொழுது கோட்டையின் கட்டுபாடுகள், அவளின் காவல் கட்டுகள் எல்லாம் அவிழ்ந்தது.... முன்பக்க மதில் சுவர் மட்டும் நின்றிருந்தது. அந்த ஊரில் பெயர்பலகையை தாங்கி கொண்டு அதுவும் எப்பொழுது விழ போகிறதோ என்று எல்லாரும் எண்ணிக் கொண்டு இருந்தனர்...

இச்செயலில் சத்ரியன் தான் மிகவும் தளர்ந்துப் போனார்.. அவர் குடும்பம் செய்த பாவ செயலை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மிகவும் தளர்ந்துவிட்டார்.. அவருக்கு நிச்சயமாக தெரியும் கோட்டை இப்பொழுது சாமியாக விட்டாள் என்று ஆனால் சாமி ஆகி விட்டு அவள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள் என்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.. மீண்டும் அந்த சித்தரை பார்க்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.. இப்படியாக 2 ஆம் நாள் சென்றது....

3 – ம் நாள் என்ன நடக்க போகிறதோ என்றே எல்லாரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்... மதியம் வரை எதுவும் நடக்கவில்லை. தண்ணீர் தான் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக் கொண்டு இருந்தது... கொஞ்சம்தண்ணீர் வற்றவும் மீண்டும் மழை பெருக்கெடுத்தது.. எப்பொழுது தான் தண்ணீர் வற்றுமோ எப்பொழுது தான் தொழிலை பார்க்க போகமுடியுமோ என்று எண்ணிக் கொண்டு இருந்தனர் அந்த ஊர் மக்கள்..

இதில் சத்ரியன் அவர் நிலத்தில் நெல் விதைத்திருந்தார் அது கண்டிப்பாக அழிந்திருக்கும் என்ற எண்ணம் அவருக்கு... தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும் கோவிலில் இருந்து நேற்றே எல்லாரும் கோட்டைக்கு வந்துவிட்டனர்...

நேற்றிலிருந்து இன்று மதியம் வரை கதவு தண்ணீர் உள்ளேயே நிற்காமல் வெளியில் வரவேண்டும் என்று கதவை கொஞ்சம் திறந்து வைத்திருந்தனர்....

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது... கோவில் கதவு வேகமாக திறந்துக் கொண்டது அந்த சத்தத்தில் எல்லாரும் கோட்டை மாடியில் வந்து மாடி பால்கனிவழியாக கோவில் நோக்கி பார்த்தனர்..

சுமார் 1௦௦ வருடமாக கோவில் உள் இருந்த கோட்டையம்மாள் பெட்டி, அவள் இறக்கும்
பொழுது அவளை பூவும், இலையும் போட்டு வைத்திருந்த பெட்டி, 7 நாட்களுக்கு பிறகும்
அப்படியே அவளை வைத்து பாதுகாத்த பெட்டி, அவளை தெய்வமாக மக்களுக்கு காட்டிய
பெட்டி, மக்கள் பூஜை செய்து இத்தனை வருடமாக பாதுகாத்து வந்த பெட்டி இப்படி எல்லாமுமாக இருந்த பெட்டி மெதுவாக அந்த தண்ணீரில் அடித்து வெளியில் வந்தது....


எப்பொழுதும் அந்த பெட்டியின் மேல் மல்லிபூ சரமும், பிச்சிபூ சரமும் தொங்க
போட்டிருப்பார்கள்... தினமும் பூ மாற்றுவார்கள்.. இந்த 3 நாள் தொடர் மழையின் காரணமாக அந்த பெட்டிக்கு பூ போடவும் இல்ல, பழைய பூவை மாற்றவும் இல்லை... ஆனால் 3 நாட்களுக்கு முன்பு போட்ட பூசரம் பூ அப்படியே வாடாமல் இப்பொழுதும் அந்த பெட்டி மீது இருந்தது...


ஆனால் அந்த பூவரசம் மரம் மட்டும் அந்த பெட்டிக்கு எப்படியும் தினமும் ஒரு பூவை மரத்தில் இருந்து உதிர்த்து காற்றில் பறக்க செய்து அந்த பெட்டியின் மேல் வைத்து விடும்...
ஆனால் தேவி வந்து போன பிறகு அந்த பூ கூட போட மறுத்து விட்டது அந்த மரம்..
மறுத்துவிட்டது என்று கிடையாது பூவே பூக்கவில்லை அந்த மரத்தில் என்று தான் சொல்ல வேண்டும்...


பெட்டி வெளியில் வரவும் பெய்த மழை அப்படியே நின்றது... தண்ணீர் அதிகமாக இருந்தது... அந்த தண்ணீரில் மிதந்து வெளியில் வந்த பெட்டி ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அந்த பூவரசம் மரத்தின் முன் நின்றது...

அதன் பிறகு நீரின் போக்கில் செல்லவும் தான், அந்த மரம் தனது கிளைகளை அசைத்து அந்த பெட்டியை போக விடாமல் செய்ய முயற்சிகள் எடுத்தது... ஆனால் அந்த மரத்தால் அதன் கிளைகளை அந்த பெட்டி நோக்கி நகர்த்தவே முடியவில்லை...

தண்ணீரின் போக்கு அதிகரிக்க அதிகரிக்க மரத்தால் அந்த மண்ணில் நிலையாக நிற்க
முடியவில்லை.. அதன் வேர்கள் பலன் இழந்துக் கொண்டே இருந்தது...


இதில் அந்த மரத்தின் தலையில் சுமார் 5௦ கிலே எடை கொண்ட அந்த மணியை சுமந்துக்
கொண்டு நின்றிருந்தது... அதன் பாரத்தை பூவரசம் மரத்தால் தாங்கி கொள்ளவே முடியவில்லை...


இதோ இப்பொழுதே உடைந்து விடுவோம் என்று எண்ணி மனதில் அந்த கோட்டைத்தாயை வேண்டிக் கொண்டு இருந்தது... அதிலும் 3 நாட்களாக அதன் அடியில் நீர் தேங்கி நிற்கிறது அதில் அதன் வேர்பகுதி கொஞ்சம் அழுக ஆரம்பித்து விட்டது..

1௦௦ வருடமாக கம்பீரமாக நின்ற மரம் தன் உயிரை பிடித்து வைக்க போராடிக் கொண்டு
நிற்கிறது.. அதற்குள் கோட்டை பெட்டி நீரில் வெகு தூரம் சென்று விட்டது... பெட்டி கோவில்
விட்டு வெளியில் வரவுமே மக்கள் அதை தடுத்து நிறுத்த போராடினர் தான் ஆனால் அவர்களால் நீரின் போக்குக்கு செல்ல முடியவில்லை...


இதோ இப்பொழுது அந்த அருவியை அடைந்து விட்டது கோட்டை பெட்டி... அருவில் நீர்
பெருக்கெடுத்து ஓடியது... அருவியில் பெட்டி இறங்கவும் ஒரே ஒரு முறை அப்படியே வேகமாக சுற்றியது...


சுற்றி அதன் பிறகு நிற்காமல், கோட்டைநல்லூரை எட்டிக் கூட பார்க்காமல், அந்த பூவரசம் மரத்தின் வேதனையை பார்க்காமல், அது தன்னை காத்துக்கொள்ள படும் வேதனை பார்க்காமல் அப்படியே அந்த அருவியின் நீர் போக்கில் சென்று விட்டது..

அதோ அங்கே செல்கிறது, சென்றுக் கொண்டே இருக்கிறது.. கண்ணில் சிறு புள்ளியாக தெரிகிறது பெட்டி...

அதோ .. அதோ… அச்சோ…! போயே விட்டது..!!!. கண்ணுக்கே தெரியாமல், அந்த காட்டுக்குள் எங்கோ சென்று மறைந்து விட்டது, மறைந்தே விட்டது....

பெட்டி செல்லவும் ஊரில் இருந்த தண்ணீர் அப்படியே வற்றியது...பூவரசம் மரமும் தன்னை
காத்துக் கொண்டது... ஆனாலும் கொஞ்சம் சோகமாகவே இருந்தது...


ஆனாலும் மரம் ரொம்ப கவலையாக அது எதிர் பார்க்கும் நாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது....

நீர் வற்றியதும் மக்கள் அவரவர் வீட்டுக்கு சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மீதி
இருக்கும் உடமைகளை எடுத்துக் கொண்டு ஊரை காலி செய்தனர்..


நிறைய இடம் கோவில் பெயரில் தான் இருந்தது.. கோட்டை மைத்ரேயி பெயரில் இருந்தது.. அவரவர் பெயரில் இருக்கும் இடத்தை கொஞ்ச நாளில் நாங்கள் மீண்டும் வருவோம், அப்படி இல்லை என்றால் இந்த ஊருக்கு யாராவது புதிதாக வந்தால் அவர்களுக்கு எழுதி கொடுக்கிறோம் என்று பாதி பேர் கிளம்பிவிட்டனர்...

இருக்கவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு என்ற பழமொழிக்கு ஏற்ப வேற வீடு பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பி விட்டனர்..

அதன் பிறகு கோட்டைநல்லூரில் சத்ரியன் சேர்த்து ஒரு 25 குடும்பம் மட்டுமே இருந்தது..
அவர்களுக்கு எண்ணம் “ இந்த வயசான சத்ரியன் மறைவுக்கு பிறகு இங்கு நிரந்தரமாக இருக்கும் எங்களுக்கு அந்த நிலத்தை பங்குப் போட்டு கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டனர்....


ஊரை காலி செய்த எல்லாருக்கு ஒரே எண்ணம் தான் “ கோட்டை மதில் இடிந்து விழுந்ததும், கோட்டை பெட்டி வெளியில் சென்றதும் இனி ஊரில் இருக்கும் யாருக்கும் நல்லது இல்லை “ என்று எண்ணி தான் அவர்கள் ஊரை காலி செய்தனர்....

இதை எல்லாம் கோட்டை அவளின் ஒரு விரக்தியில் செய்தாள், தன் வாரிசு இங்கே மீண்டும் வர முடியாது என்ற எண்ணத்தில் செய்தாள், அதிலும் கோட்டை தனது பழிவாங்கும் செயலை கொஞ்சம் நிறுத்தி வைத்து இந்த ஊர் மக்களுக்காக செய்து, பின்னால் வரும் நாளை கொஞ்சம் கணித்திருந்தால்.. அவள் இப்படி செய்ய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்..

ஆனால் கோட்டையே ஒரு நிமிடம் தடுமாறி முடிவெடுத்துவிட்டாள்... எடுத்த முடிவின் விளைவு தான் இந்த ஊர் அடையாளம் இல்லாமல் போக போகிறது என்று நினைக்கிறேன்...

ஆனால் அதற்குள் மைத்ரேயி ஏதாவது செய்வாளா ? கோட்டை எண்ணியது நிறைவேற
செய்வாளா என்பது காலத்தின் கையில். இதை எல்லாம் கூறிய சத்ரியன் அவளை நோக்கி “ இதுக்கு தான் கண்ணு உன்னை நான் அங்க வரவேண்டாம் என்று சொல்லுறேன்” என்றுக் கூறி அவளிடம் ஆயிரம் பத்திரம் கூறிக் கொண்டு மீண்டும் கோட்டைநல்லூர் செல்ல கிளம்பவும்,...


அவரை தடுத்து நிறுத்திய ஜிக்கி “ தாத்தா எனக்கு தெரிஞ்ச ஒரு தாத்தாவை உங்க கூட ஊருக்கு அழைச்சுட்டு போங்க... உங்க ஊர் பத்தி இவ்ளோ விஷயம் சொல்லிருகிங்க மைக் உங்களை பத்தி நினைச்சுட்டே இருப்பாள், அதுக்கு எங்க திருப்திக்காக அவங்களை அழைச்சுட்டு போங்க “ என்று கூறி “ கணேசன்” என்பவரை அவர் கூடவே அனுப்பினாள் ஜிக்கி..

ஜிக்கி கூறுவதும் மைக் - க்கு சரி என்று படவே அவளின் யோசனைக்கு “ சரி “ என்று கூறி அவர் கூட இவரையும் அனுப்பினாள்..

சத்ரியன், கணேசன் இருவரும் கோட்டைநல்லூர் நோக்கி சென்றனர்..

( ஹாய்மக்களே... அந்த பெட்டியை நான் கதையில் மட்டுமே அந்த கோவில் விட்டு போகிற
மாதிரி எழுதியிருக்கிறேன்.. ஆனால் உண்மையில் அந்த பெட்டி இன்னும் அந்த கோவிலில் தான் இருக்கிறது... எங்கள் பாட்டி கோவிலின் நினைவு அது... கதைக்காக மட்டும் பெட்டியை கோவில் விட்டு வெளியில் எடுத்துவிட்டேன்...)


உயிர் எடுப்பாள்...
 




Last edited:

shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai
hai shanthini ...super super epi... petti oor vittu veliyil poitta? appo eppadi kottai sabatham niraiverum? seekiram next epi tha?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Super ud mam, ethula vara kottai unmaya?
தேங்க்ஸ் சிஸ் .. ஆமா சிஸ்.. உண்மை தான்... அவங்க கதை வேற... நான் இங்கு கொண்டு வந்திருக்கிற கதை வேற... ஆனால் அவளின் இறப்பு, 7 நாள் கழித்தும் அப்படியே அந்த பெட்டியில் இருப்பது எல்லா உண்மை..இன்னும் அந்த பெட்டி எங்க பாட்டி ஊர்ல ( அம்மா ஊர் ) இருக்கு... அந்த கோவில் உள்ளே..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
hai shanthini ...super super epi... petti oor vittu veliyil poitta? appo eppadi kottai sabatham niraiverum? seekiram next epi tha?
தேங்க்ஸ் ஷாலு எஸ் பெட்டி ஊரை விட்டு வெளியில் சென்று விட்டது... அவளின் சபதம் நிறைவேறும்... கூடிய சீக்கிரமே..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
hai shanthi..superb epi... ini ena aagum :unsure::unsure::unsure::unsure:waiting for next epi.
தேங்க்ஸ் suryas, நல்லதே நடக்கும் ;);).. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
 




suryas

நாட்டாமை
Joined
Mar 3, 2018
Messages
85
Reaction score
84
Location
chennai
தேங்க்ஸ் சிஸ் .. ஆமா சிஸ்.. உண்மை தான்... அவங்க கதை வேற... நான் இங்கு கொண்டு வந்திருக்கிற கதை வேற... ஆனால் அவளின் இறப்பு, 7 நாள் கழித்தும் அப்படியே அந்த பெட்டியில் இருப்பது எல்லா உண்மை..இன்னும் அந்த பெட்டி எங்க பாட்டி ஊர்ல ( அம்மா ஊர் ) இருக்கு... அந்த கோவில் உள்ளே..
:oops::oops::oops: unmai storya?? super.. antha god name ennathu?? veraiya ila..ithe peyar thana??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top