• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
கோட்டைநல்லூர் வந்த மைத்ரேயிக்கு அவளின் ஊரை பார்த்து மனதில் பெரும் ஏமாற்றம் பரவியது... அவள் இங்கு மும்பை வருவதற்கு முன் நல்ல செழிப்பாக இருந்த ஊர் இப்பொழுது செழிப்பற்று இருந்தது...

அவர்களின் வயல் எல்லாம் அழிந்து விட்டது.. அருவியில் முன்பு மலை போல் விழுந்த தண்ணீர் இப்பொழுது ஒரு நூல் அளவு விழுந்துக் கொண்டு இருந்தது... அந்த தண்ணீர் எதற்கும் பயனற்று இருந்தது... ஆனாலும் அந்த தண்ணீரை சத்ரியன் அவரின் தென்னை மரங்களுக்கு பாயட்டும் என்று எண்ணி தென்னை தோப்புக்கு பாய விட்டிருந்தார்.. ஆனாலும் அந்த தண்ணீர் அந்த மரங்களுக்கு தேவையான அளவு இல்லை.. ஏதோ சமாளித்துக் கொண்டு இருக்கிறார்...

ஊரில் மொத்தம் 25 குடும்பம் மட்டுமே இருந்தது... மைத்ரேயி அன்று தாத்தா கூறியதை கேட்டும் ஊர் இந்த அளவு மாறும் என்று எண்ணவில்லை... வந்த 2 நாளில் மைத்ரேயி அவளின் சொத்தை எல்லாம் கெளதம் பெயரில் மாற்றி இருந்தாள்.. மும்பை சென்று சர்பிரைஸ் செய்யவேண்டும் எண்ணிக் கொண்டு இருந்தாள்... அதே நேரம் அவளுக்கு கௌதமின் பாரா முகமும் நினைவில் வந்தது..

அவர் என்னை விரும்பவே இல்லை.. நான் தான் லூசு மாதிரி அவர் பின்னாடி நாய்குட்டியாக சென்றிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டு கோட்டைத்தாய் கோவில்முன் அந்த மரத்தின் அருகில் அமர்ந்து இருந்து “ என் மாமாவை எப்படியாவது என் கூடவே சேர்த்து வை, என் தாத்தாவையும் சீக்கிரம் கண் முழிக்க வை. நான் நீ ஆசை பட்ட படியே சொத்தை உன் வாரிசுக்கு எழுதி வைத்து விட்டேன்...

என் ஆசையை இபொழுது நீ நிறைவேற்று.. என் மாமாவை எனக்கு தா, நானும் என் மாமாவும் சேர்ந்து உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். அவர் இந்த மண்ணை, இந்த கோட்டையை ஆள்வார்.. எனக்கு உதவி செய்“ என்று கண்ணீர் மல்க மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தாள்....

அப்பொழுது தான் இத்தனை நாட்களாக கண் இருந்தும் குருடியாகவும், காது இருந்தும் செவிடியாக இருந்த கோட்டை கண்ணை திறந்தாள்...அவளின் ஆசையை, “ யாரை அழிக்க வேண்டும் என்று எண்ணினாளோ அவளே முன் வந்து உதவி செய்யவும், கோட்டையும் அவளுக்கு உதவி செய்ய எண்ணி “ கண்ணை திறந்தாள்...

அவள் கண் திறக்கவே காத்துக் கொண்டு இருந்த பூவரசம் மரமும் தன் கிளைகளை அசைத்து அதன் மகிழ்ச்சியை அளவுக்கு அதிகமாக வெளிபடுத்தியது...

அப்பொழுது தான் கோட்டை நேரத்தையும், நாளை என்ற காலத்தையும் கணித்தாள், கணித்து வந்த பதிலில் அவள் அதிர்ந்து மைத்ரேயியையும், அந்தமரத்தையும் பார்த்தாள்...

பார்த்து அவள் ஏதோ தடுக்கும் முன் வேகமாக வீசிய காற்றில் பூவரசம் மரத்தில் இருந்த இலைகள் எல்லாம் உதிர்ந்து அப்படியே சுழன்று கோட்டை சிலையை முழுமையாக மறைத்தது...

####################

அதே நேரம் இங்கு மும்பையில் அரண்மனையை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்த ஜிக்கிக்கு அழைத்த கணேஷ் அவளிடம் ஏதோ பேசவும் ஒரு நிமிடம் அதிர்ந்த ஜிக்கி அவனிடம் “ ஓகே கணேஷ், நீங்க அங்க இருந்து எல்லாம் பாத்துகோங்க.. நான் இங்க பாத்துகிறேன் “ என்று கூறி அழைப்பை நிறுத்தினாள்...

அவளில் பெரும் யோசனை அது எப்படி சாத்தியம், உண்மையா, பொய்யா என்று பல நேரம் யோசித்து ஒரு முடிவு எடுத்தவளாக அவளின் கிளாசை நிறுத்திவிட்டு கிளம்பி விட்டாள் ஜிக்கி....

3 மாதம் கழித்து மைத்ரேயி மீண்டும் மும்பை வந்தாள்..

முற்றிலும்வேறுபட்டவளாகமாறுபட்டவளாக... அவளின் முகத்தில் பல மாற்றம்.. அவளின் குரல் கூடவே மாறிவிட்டது.. கேட்டதற்கு அங்கு அரண்மனையில்உள்ள தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை அக்கா... மேலும் கொஞ்ச நாளுக்கு முன் அலர்ஜி வந்து முகம் ஒரு மாதிரி மாறி விட்டதில் ஒரு சின்ன அறுவைசிகிச்சை செய்தேன் என்று கூறி சிரித்தாள் மைத்ரேயி....

3 மாதம் கழித்து வந்த மைத்ரேயியை பார்த்து கௌதம்க்கு யோசனையே.. அவனின் யோசனையை பார்த்து பழையதை மறந்து அன்று கண்டும் காணமல் இருந்த செயலை மறந்து“ மாமா“ என்று அழைத்தாள்.. அந்த அழைப்பில் கெளதம் மயங்கினானோ இல்லை அந்த முகத்தை பார்த்து மயங்கினானோ தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்றில் மயங்கி விட்டான்...

அவளை பார்த்து ஒரு மயக்கும் புன்னகை ஒன்றை சிந்திவிட்டு சென்றான் அவன்.. அவன் செயலில் அவள் முகம் வெட்கத்தை பூசிக் கொண்டது... காரணமே இல்லாமல் தன் வந்த காரியத்தையும் மறந்து மைத்ரேயி அவன் புன்னகையில் மயங்கினாள்...

ஆனாலும் கௌதம்கு யோசனை, இவளின் மாமா என்ற அழைப்பில் ஏதோ மாற்றம், அன்று மைத்ரேயி இங்கு வந்த நாள் அவள் அழைத்த மாமா என்ற அழைப்பில் ஏதோ ஓன்று இருந்ததே இன்னைக்கு அதை காணும் என்று யோசித்துக் கொண்டே அவன் ஆபிஸ் நோக்கி சென்றான் கெளதம்...

மயூரியின்சிரிப்பில் கலைந்த மைத்ரேயி அவர்களை பார்த்து அசடு வழிந்து விட்டு, பின் முகத்தை சீரியசாக மாற்றி விட்டு அவர்களை பார்த்து, உணர்சிகளை தொலைத்த குரலில் கண்களில் கண்ணீர் வழிய அவர்களை பார்த்து “ ஜிக்கியை காணவில்லை... ஜிக்கி அவங்க வீட்டுக்கு போனா இன்னும் வரவே இல்லை.. நானும் தேடிகிட்டே இருக்கேன்..

அரண்மனைகிளாஸ்ல இருக்கும் போது, அவள் மாமாவுக்கு உடம்பு சரி இல்லை என்று லீவ் எடுத்துட்டு போனா, அதுக்கு பிறகு நான் போன் போட்டேன் அவள் எடுக்கவே இல்லை... இப்பொழுது அவளை காணும் “ என்று கூறி சியோராவை அழைத்துக் கொண்டு அவளின் வீடு நோக்கி சென்றாள் மைத்ரேயி...

அவள் கூறியதை கேட்ட எல்லாருமே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டனர்... தினமும் மகள் போலவே பேசும் ஜிக்கியை காணவில்லை என்று இவள் கூறவும் அவர்களுக்கும் கவலையாகவே இருந்தது...

அதை எல்லாம் விடுத்து மைத்ரேயியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்றனர்...அங்கு அவர்களை வரவேற்றது மாலைகள் போட்ட ஜிக்கியில் புகைப்படமே.. இதை இருவருமே எதிர் பார்க்கவில்லை... வீட்டில் விசாரித்ததில் “ போன மாதம் வீட்டுக்கு வரும்பொழுது கடைக்கு செல்கிறேன் என்று சென்றவள் வரும்பொழுது பிணமாக தான் வந்தாள் ” என்று கூறி அழுதார் அவளின் மாமா...

சியோராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, மைத்ரேயி அப்படியே அவர் கையில் மயங்கி சரிந்தாள்...

அவளை மீண்டும் எழுப்பி இங்கு அழைத்து வருவதில் சியோரா பெரிதும் திண்டாடி விட்டார்.. அதன் பிறகு சியோரா வீட்டில் இருந்தே படிப்பை தொடர்ந்தாள் மைத்ரேயி... அதன் பிறகு மைக் ரொம்பவே மாறி விட்டாள், அவளை மாற்றுவது பெரும் பாடாக இருந்தது.. கெளதம் தான் கொஞ்சமாக பேசி பேசி அவளை மாற்றினான்...

அவளை காலேஜ் அழைத்து செல்வது எல்லாம் கௌதமே... இப்படியாக அவர்களுள் மெல்ல மெல்ல காதலும் வளர்ந்தது..

மைத்ரேயி அருகில் கெளதம் உலகத்தை மறந்தான்என்றுமைத்ரேயி எண்ணினாள்...
ஆனால் அவளுக்கு எங்கே தெரிகிறது இவள் அருகில் வந்தால் கெளதம் சிந்தனை எங்கோ செல்கிறது.. எங்கே செல்லும் அவனின் மைத்ரேயி பக்கம் செல்லும்... அந்த மைத்ரேயி இவள் என்று எண்ணி மனம் இவள் பின்னால் செல்கிறது இத்தனை நாளாக....


நிறைய காதலை வழங்கினாள் மைத்ரேயி... அடிக்கடி அவளின் தாத்தாவிடமும் பேசினாள்.. இங்கு இருந்த மையூரியையும், சத்ரியாவையும் பேச வைத்தாள்..
சத்ரியனிடம் கூறி சமாதான படுத்தி விட்டேன்... ஆனால் தாத்தா உங்களை இப்பொழுது பார்க்கும் நிலையில் இல்லை... அதனால் ஒரு நாள் அழைத்து செல்கிறேன் அதுவரை போனில் பேசுங்கள் என்று கூறினாள்....


இப்படியாக 1 வருடம் கடந்தது.. அந்த ஒருவருடத்தில் ஷதாஷி அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தாள்.. இன்னும் மையூரிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவே இல்லை...

வேண்டாத கோவில் இல்ல, ஏறாத ஹாஸ்பிடல் இல்லை. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.. கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று தான் எல்லா மருத்துவரும் கூறினார்கள்...
வர்ஷிக் – மையூரிக்கு இன்னும் குழந்தை இல்லை என்பதை எண்ணி வர்ஷிக் கோட்டைத்தாயையே வெறுத்து விட்டான் என்று தான் சொல்லவேண்டும்.. அது மட்டும் இல்லாம் அவனுக்கு இவளை திருமணம் செய்து வைத்து விட்டாள்..


ஆனால் உயிரை விட மிக பெரிய வேதனையை குடுத்துவிட்டாளே என்று அவனுக்கு அவள் மேல் வெறுப்பு வளர்ந்து இருக்கிறது.. குழந்தை இல்லாததை எண்ணி தினமும் மையூரி வருந்துவதை காணும் பொழுது எல்லாம் கோட்டைத்தாயையும், கோட்டைநல்லூரையும் அறவே வெறுத்தான் வர்ஷிக்...

இந்த ஒரு வருடத்தில் கெளதம் எப்பொழுதும் மைத்ரேயி ஜெபம் தான்.. இரவு ஆனதும் இருவரும் கிளம்பிவிடுவார்கள் மொட்டை மாடிக்கு.. இது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும், இருவரின் மேல் உள்ள நம்பிக்கையில் அவர்கள் எதுவும் கூறாமல் இருந்தனர்.
வீட்டில் எல்லாருக்கும் தெரியும் அவர்களின் காதல் விஷயம்,மைத்ரேயி தான் கூறி இருந்தாள் “ இந்த வருடத்தில் என் படிப்பு முடிந்து விடும் அதன் பிறகு தாத்தாவிடம் கூறுங்கள் ” என்று கூறி இருந்தாள்...


இந்த ஒரு வருடத்தில் சத்ரியன் இங்கு மும்பை வரவில்லை.. அவர் உடல் நிலை சரி இல்லை என்று மைத்ரேயி தான் கூறி இருந்தாள்..

ஒரு வருடமாக மைத்ரேயி – கெளதம் உறவு நன்றாக வளர்ந்தது, இப்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பு தான் காதல் என்று உணர்ந்துக் கொண்டனர்... தினமும் இரவு வெகு நேரம் மாடியில் இருந்து சிரிக்க, ரசிக்க, இனிக்க பேசிக் கொள்வார்கள்.. அது ஒரு அழகான நேரம், இருவரும் அந்த இனிய மாலை நேரத்தை ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள்...

காதலை உணர்ந்த தருணத்தில் இருந்து கெளதம் மனதில் ஏதோ இனம் புரியாத பயம், தவறு செய்வதாக தோணியது, அதிலும் இங்கு மாடியில் இருந்து இவளிடம் ரசிக்க...

இனிக்க... சிரிக்க.. பேசிக் கொண்டு அவன் அறைக்கு வந்தாலே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு, அதிலும் இந்த ஒரு மாதமாக அவன் அறையில் இவனுடன் யாரோ இருக்கும் உணர்வு, அவன் அமர்ந்து இருந்தால், அவன் அருகில் யாரோ அமரும் உணர்வு, தலை வலி என்று படுத்தால் இதமாக தடவி விடும் உணர்வு, சாப்பிடும் பொழுது அவன் அருகில் அவனை யாரோ பார்க்கும் உணர்வு,இரவு கட்டிலில் படுத்தால் அம்மா மடியில் படுத்த திருப்தி, இதமான உணர்வு, ஆனால் எழும்பி பார்த்தால் எதுவுமே இல்லை ஆனால் ஏதோ இருக்கு நிலை தான் கெளதம் நிலை..

எல்லாமே ஒரு உணர்வு மட்டுமே,, இல்லை என்று இருப்பதான உணர்வு, அந்த உணர்வு ஏன் என்று தெரியவில்லை... ஆனால்இந்த உணர்வை அவன் மனம் நிரம்பவே எதிர் பார்க்கிறது...

என்ன தான் மனதை சமநிலை படுத்திமைத்ரேயிடம் பேசினாலும், அவனால் முன்னால் மாதிரி மனதை அவள் பேச்சில் லயிக்க முடியவில்லை, ஆனாலும் அவளுக்காக அவளிடம் பேசினான் சிரிக்க... ரசிக்க.. ஆனால் அவன் ரசிக்கவில்லை அவளுக்காக ரசித்ததாக நடித்தான்....

அவன் தூக்கம் என்பதையே மறந்து பல நாட்கள் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. அவனின் அப்பா சியோரா அவனிடம் கேட்டார். “ என்னடா கெளதம் ஏதோ பறிக் கொடுத்த மாதிரி இருக்க என்ன ஆச்சு” என்று கேட்டார்..

அதற்க்கு“ ஒன்றும் இல்லை டாட் “ என்று கூறிக் கொண்டு இருக்கிறான் கெளதம். ஆனால் அவன் மனதின் கேள்விக்கு பதில் தான் இல்லை...

இரவுநேரம் ஆனால் அவனால் தூங்கவே முடியவில்லை “ இவனை யாரோ அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் படி அவர்கள் பின்னாடியே சென்றால் அழகான ஒரு கிராமத்துக்கு இவனை அழைத்து செல்கிறது அது... எது என்று கேட்டால் அவனுக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஓன்று அவனை துரத்திக் கொண்டு வருகிறது...

அது என்ன என்று அவனால் அறிந்துக் கொள்ளமுடியவில்லை அதை அறிய தான் இன்று மைத்ரேயியை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்திருக்கிறான் கெளதம்...

உயிர் எடுப்பாள்........
omg mike ku enna aachu i think bell ava thalaila vizhunthutu nenaiken indha jicki than mike mari nadikura pola
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top