• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. சாரி.. அடுத்த எபி போடுறேன்..படிச்சு சொல்லுங்க..

கதை எழுத எனக்கு தடைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.. ஓன்று வீட்டில் வேலை, இல்லை என்றால் ஆபீஸ் வேலை என்று வீட்டுக்கு போகவே வெகு நேரம் ஆகிறது. அடிக்கடி லேப் ரிப்பேர் என்று சேவை போகிறது.. நானும் சீக்கிரம் முடித்து விடவேண்டு என்று படாத பாடு படுறேன்..முடியலியே.. நேற்று இரவு லேப் சார்ஜ்ர் போட்டு வைக்கவும் சார்ஜ்ர் வயர் தானாக தீ பற்றி எரிகிறது...
சரி செல்லுல ட்ரை பண்ணலாம் என்றால் எனக்கு செல்லில் டைப் செய்ய தெரியமாட்டுக்கு.. சோ சேட்... இன்னும் ஒரு 4 இல்லை 5 எபியில் கதை முடிந்து விடும் என்று எண்ணுகிறேன்.அதுக்குள்ள இப்படி சதி நடக்குது... சார்ஜ்ர் வர ஒன்னு வீக் ஆகுமாம்... அதிலும் எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு..
எழுத நினைத்த ஆசையின் பலன்.. ஹா ஹா
:LOL::LOL::LOL:..
தொடர்ந்து படிச்சு ஆதரவு தருகிற உங்க எல்லாருக்கும் நன்றி!! என்று சொன்னால் அது சரி இல்லை. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் நன்றி!!!:love::love:


உயிர்– 2௦

முதல் முறை கெளதம் கோட்டைநல்லூர் வரும்பொழுது முகம் முழுவதும் கோபத்துடன் வந்தான்.. இரண்டாம் முறை வரும்பொழுது மனம் முழுவதும் தேடலுடன் வந்தான்.. இப்பொழுது மூன்றாம் முறை வரும் பொழுது பெரும் குழப்பத்துடன் இங்கு வந்திருக்கிறான் கெளதம்...

ஒரு முறையேனும் சந்தோசத்துடன் அவனின் முன்னோரை சந்திக்க வரவில்லை கெளதம்.. அந்த குடுப்பினை அவனுக்கு கிட்டவில்லை இதுவரை... இதுக்கு எல்லாம் காரணம் சத்ரியன் முன்னோர் செய்த பாவமே... ஆனால் இனிமேல்??

அங்கு கோட்டைநல்லூர் மதில் சுவர் தாண்டி அவன் உள்ளே வரவும் இவனை எதிர் நோக்கி அந்த பூவரசம் மரத்தின் அருகில் புன்னகை முகமாக நின்றிருந்தாள்மைத்ரேயி...

மும்பையில் இருந்து தனியாளாக கார் ஓட்டிக் கொண்டு வருவது கௌதம்க்கு பெரும் சிரமமாக இருந்தது, ஆனால் மனதின் ஓலதுக்கும், அவனின் கேள்விக்கும் விடை இங்கு உள்ளது என்று அறிந்த பின்னால் அவனின் சிரமத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டு வழியில் தங்கி என்று ஒருவழியாக பெரும் குழப்பத்துடன் கோட்டைநல்லூர் வந்து சேர்ந்தான் கெளதம்...

அவன் வந்து காரை விட்டு இறங்கி, ஊரை சுற்றிப் பார்த்தான் கெளதம், முன்பு எங்கும் பச்சை பசேலென இருந்த இடங்கள் இப்பொழுது காய்ந்து போன இடங்களாக மாறின.. இதற்க்கு என்ன காரணம் என்றும் அவனுக்கு தெரியவில்லை...

கூடவே“நான் மட்டும் இங்கு இருந்திருந்தால், இந்த இடத்தை அப்படியே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன்” என்று எண்ணிக் கொண்டு இருந்தான்...

இவனின் எண்ணத்தை பார்த்து கோட்டைத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அதிலும், அவன்இங்கு இருந்திருந்தால் இந்த இடத்தையே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன் என்று கூறியதில் தான் அவள் பெரிதும் மகிழ்ந்திருந்தாள், அவளின் ஆசையும் இது தானே அவளின் வாரிசு இங்கு வந்து இந்த இடத்தை ஆளவேண்டும் என்பதே அவளின் இந்தனை வருட ஆசை.. இதை இன்று அவன் வாயாலையே கேட்டுக் கொண்டு விட்டாள்....

ஆனாலும் அவள் அடுத்து மைத்ரேயிக்கு கொடுத்த வாக்கு நியாபகம் வந்து அவள் மனத்தை வருத்த செய்தது, ஆனாலும் அவள் இவளுக்காய் செய்யும் பொழுது, இவளும் செய்வது தானே சரியாக இருக்கும் என்று எண்ணி, அவள் அடுத்து செய்ய போகிறதை நினைத்து கவலையாக பார்த்துக் கொண்டு இருந்தாள்...

எங்கும் சுற்றி பார்த்துவிட்டு மெதுவாக அவன் கண்கள் அந்த பூவரசம் மரத்தின் அருகில் சென்றது.. அங்கு பார்த்து அப்படியே சிலையாக நின்று விட்டான் கெளதம்...

ஆம், மைத்ரேயிபுன்னகை முகமாக நின்றிருந்தாள்... மைத்ரேயி எண்ணம் எல்லாம் அன்று எங்கள் கோட்டைக்கு வரமால் இருந்த மாமாவை இன்று எப்படியேனும் இந்த கோட்டையில் கால் வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவனை பார்த்து ” மாமா “ என்று அழைத்தாள்...
அந்த அழைப்பில் கௌதமின் மனம் எத்தனை நிம்மதி அடைந்தது என்று யாராலும் கூறமுடியாது... அத்தனை உணர்ச்சி பிரவாகத்தில் இருந்தான் கெளதம்... அவளை பார்த்ததும் அவனுக்கு மற்றது எல்லாம் மறந்து விட்டது என்று தான் கூறவேண்டும்...


அவன் அருகில் வந்த மைத்ரேயி அவனின் கையை பிடித்தாள், அவள் செயலில் கெளதம் மனதில் அப்படியே வானத்தில் பறந்தான்... அவள் அருகில் அவன் உலகம் மட்டுமில்லை அவனையே மறந்தான்.. ஏதோ ஒரு மாய உலகில் பயணித்தான்.. அவன் உடல் முழுவதும் குளிர்ச்சி பார்த்துபரவியது.. அப்படியேமிதந்துக் கொண்டே அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான்......

அவன் அந்த மயக்கத்தை விட்டு வெளியில் வந்திருக்கும் பொழுது அவன் கோட்டையின் உள் நின்றிருந்தான்.. மைத்ரேயி அவனை அவள் வசபடுத்தி இருந்தாள்....

அவனுக்கு பழையது எல்லாம் நினைவில் இல்லை, ஏன் இங்கு எதற்கு வந்தான் என்பது கூட நினைவில் இல்லை.. அந்த அளவு அவனை அவள் கட்டுபாட்டின் கீழ் வைத்திருந்தாள் மைத்ரேயி...
சிறிது சிறிதாக அவனின் மயக்கத்தை குறைத்த மைத்ரேயி, அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்...


அவள் மனதில் எப்படி இவனை தன்வசபடுத்துவது என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது...
ஆனால் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் அவளால் ஒண்ணும் செய்யமுடியாது, ஆனாலும் கோட்டைத்தாய் அவளுக்கு உதவுவேன் என்று கூறி இருக்கிறாள்...


அந்த நம்பிக்கையோடு அவனின் மயக்கத்தை முற்றிலுமாக உதற செய்தாள் மைத்ரேயி...
அதன் பிறகு தான் கௌதம்க்கு சுற்று புறம் உறைக்கவும் தான் அவன் அருகில் நின்ற மைத்ரேயியை பார்த்தான் ஆனால் அவன் கண்களுக்கு அவள் தெரியவே இல்லை...


யோசனையாக கையைப் பார்த்தான். அவள் பிடித்திருந்த இடம் இன்னும் அவனுக்கு குறுகுறுவென இருந்தது, அப்பொழுது அருகில் சத்தம் கேட்கவே நிமிர்ந்துபார்த்த கெளதம் அதிர்ந்து விட்டான்...
வீல் சேரில் சத்ரியனை அமர வைத்து அழைத்துக் கொண்டு வந்தான் ஒருவன்... அவன் அருகில் மைத்ரேயி கண்களில் நீர் வழியமெதுவாக நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்....


அதிர்ந்த கெளதம் அப்படியே சிலையாக நின்றுவிட்டான்,அவன் எதிர் பார்க்காத விஷயம் இது, அவனில் நடக்கும் குழப்பத்துக்கு விடை காணவே இங்கு வந்தான், ஆனால் இங்கு உள்ளதை பார்த்தால் நிறைய மர்மம் உள்ளதே என்ற யோசனையுடன் அவரை பார்த்துக் கொண்டு இருந்தான்...
அதே நேரம் சத்ரியன் பின்னால் நின்றவனை பார்த்து ஏதோ கூறினார் அவன் வீட்டின் உள்ளே சென்றான்.. அவர் சொல்வது கெளதம்க்கு புரியவே இல்லை..


காரணம் அவருக்கு வாய் கோணி, ஒரு கையும், ஒரு காலும் சரிவர இயங்காமல், கையை நெஞ்சின் அருகில் மடக்கி வைத்திருந்தார்.. அவர் வாய் கோணியதில் தான் அவர் பேசுவது அவனுக்கு புரியவில்லை, ஆனால்அவர் அருகில் நின்ற அவனுக்கு புரிந்தது எல்லாம். கெளதம் மனதில் “ இவனை பிடித்தால் எல்லாம் தெரியும் “ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,

மீண்டும் அவன் வந்தான், வந்தவன் ஒரு கத்தை பேப்பர் சத்ரியனிடம் கொண்டு வந்து அவர் முன் நின்றான், நிற்கவும் அவர் அவனுக்கு கண்ணை கெளதம் பக்கம் திருப்பியும், கையை இவன் நோக்கி கொஞ்சம் அசைத்தும் “இ....இழ... அ..அவ...அவன்...கை..கையி..ழ..கொ...கொ.. கொழு (கொடு)“ என்று கூறவும்,

அவன் கெளதம் பக்கம் நகர்ந்து அந்த கத்தை பேப்பரை இவன் கையில் திணித்தான்.... யோசனையாக சத்ரியனை பார்த்தான் கெளதம். அப்பொழுது கண்களில் நீர் வழிய சத்ரியன் இவனை பார்த்துக் கொண்டு இருந்தார்.. கூடவே“ என்.. என்னை.. மன்னி. மன்னிசுழு... “ என்று நா தழுதழுக்க கூறினார்,
அவர் கூறுவது அவனுக்கு புரியவே இல்லை,யோசனையாக அவனை கெளதம், பார்த்து“ இவர் என்ன சொல்லுறார் எனக்கு புரியலை” என்றுக் கூறினான்


அதற்கு கெளதம் அருகில் வந்த அவன் “ நான் கணேஷ், இவங்கள 1 வருசமா பாத்துட்டு இருக்கேன், இப்போ இவங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க “ என்றுக் கூறினான்...

அந்த கணேஷ் அப்படி கூறவும் கௌதம்க்கு பெரும் யோசனை “ இவர் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் “ என்று யோசனையாகவும், கூடவே“ மைத்ரேயி அங்கு இருக்கிறாள் இங்க இவன் பாத்துகிறான் என்றால் நான் இப்பொழுது வரும் பொழுது இங்கு இருந்தது மைத்ரேயி என்றால், அங்கு இருப்பது யார்? அதிலும் அங்கு இருக்கும் அம்மா, மையூரி எப்படி இவரிடம் பேசினார்கள் என்ற யோசனையோடு அவன் இருக்கவும் கணேஷ் மொபைல் போன் ஒலிக்கவே,

சத்ரியனை அவர் அறைக்கு அழைத்து சென்று விட்டு வந்து இவனை இங்கு விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றான், “ நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க” என்று கூறி சென்றான்...

இவன் யோசனையாக வந்து கட்டிலில் அமர்ந்தான், இவன் அமர்ந்த சிறிது நேரத்தில் கணேஷ் வந்து இவனுக்கு சாப்பாடு வைத்து சென்றான்...

அவன் செல்லவும் தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்த கெளதம், சாப்பாட்டைஒரு வாய் எடுத்து வைக்கவும் அவன் அருகே மைத்ரேயி வந்து அமர்ந்தாள், அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்,
இவள் அருகில் வருகிற நேரம் எல்லாம் ஒரு மாய உலகத்தில் பயணித்தான்... அவள் முகம் முன்னே விட பிரகாசத்துடன் ஒரு தேவதை போல் இருந்தாள், அவளை பார்த்ததும் அவனுக்கு பசி என்பதே இல்லை..அப்படியே அந்த சாப்பாடுலையே கையே கழுவிக் கொண்டான்...


இவன் கையை கழுவவும் கணேஷ் வந்தான், அப்பொழுதும் கெளதம் அருகில் மைத்ரேயி அமர்ந்து இருந்தாள், கெளதம் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து கணேஷ் “ என்ன சார் சாப்டாம கையை கழுவிட்டு சிரிச்சுகிட்டு இருக்கீங்க “ என்று கேட்டான்..

அவன் அப்படி கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்த கெளதம் “ இதோ இவங்க கிட்ட பேசிகிட்டு இருந்தேன்” என்று தன் அருகில் கையை காட்டினான்....
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவன் காட்டிய திசையை பார்த்த கணேஷ் “ ஒ கோட்டைத்தாய் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்களா? “ என்று கேட்டுக் கொண்டே இவன் தட்டை எடுத்துக் கொண்டு அவன் சென்று விட்டான்...

கணேஷ் அப்படி சொல்லவும் “ என்ன நான் மைத்ரேயி கிட்ட தானே பேசிகிட்டு இருந்தேன், இவன் இப்படி சொல்லிக்கிட்டு போறான் “ என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது

மைத்ரேயி “ மாமா“ என்று அழைத்து அவனின் யோசனையை உதறசெய்து “ பிறகு வருகிறேன் மாமா நீங்க தூங்குங்க “ என்று கூறி சென்று விட்டாள்....

அவள் செல்லவும் தான் கணேஷ் தந்த பேப்பர் நினைவு வரவும் அதை எடுத்து பார்த்தான் அத்தனையும் “ நில பத்திரம் “ எல்லாத்தையும் பார்த்த கெளதம் அதிர்ந்து விட்டான்...

காரணம்“ இந்த கோட்டைநல்லூர் முழுவதும் இப்பொழுது கெளதம் சியோரா பெயரில் உயில் எழுதி இருந்தது, அவனுக்கு கோட்டை வாழ்க்கை எல்லாம் தெரியும், காலம் காலமாக இவர்கள் தான் பாதுகாத்து வருகிறார்கள், இடத்தை எதுக்கு என் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என் தொழில் எல்லாமே அங்கு இருக்கும் பட்சத்தில் நான் ஏன் இங்கு வர வேண்டும் என்று எண்ணி, சத்ரியனை காண வேண்டும் என்று அவரின் அறைக்கு சென்றான் கெளதம்,

அங்கு அவனுக்கு இருக்கும் அதிர்ச்சி தெரியாமல் அவர் அறைக்கு சொத்து பத்திரம் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றான்...,

அதே நேரம் கணேஷ் இவன் இங்கு வந்திருக்கும் விசயத்தை அங்கு மும்பைக்கு அழைத்து கூறிக் கொண்டு இருந்தான்...

இவனுக்காகவே வெளியில் காத்திருந்த கணேஷ் இவன் அருகில் வந்து “ அய்யா 1 வருசத்துக்கு முன்னாடி வரை நல்லாத்தான் இருந்தாங்க, அவங்க பேத்தி போகவும், அய்யாவுக்கு இப்படி ஆகிட்டு” என்று கூறி சென்றான்...

கணேஷ்க்கு மனதுக்கு வருத்தமாகவே இருந்தது, பணத்துக்குக்காக இப்படி செய்திருக்க கூடாது என்ற எண்ணமே அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.. இருந்தாலும் பணம் வாங்கியவரிடம் உண்மையாக இருக்க வேண்டுமே என்று எண்ணி அவர்களுக்கு அழைத்து “ இவன் இங்கு வந்திருக்கும் ”செய்தியை கூறி அழைப்பை நிறுத்தினான்...

கணேஷ் கூறியதை கேட்ட கெளதம் அதிர்ந்து விட்டான்.. என்ன மைத்ரேயி இறந்து விட்டாளா? கூடவே நோ அவள் இறந்திருக்க மாட்டாள், அவள் அங்கு மும்பையில் இருக்கிறாள் என்று மனதை தேற்றிக் கொண்டான்...

அதே நேரம் யோசனை “அப்போ அங்க இருக்குறது யாரு?? என் கூட பேசுறது எல்லாம் அப்போ மைத்ரேயியா?? “ இப்பொழுது அங்கு இருப்பது யார் என்ற யோசனை அவனுக்கு.
இவளை பார்த்ததும் அவனுக்கு தெரிந்து விட்டது,


“ இங்கு இருப்பது மைத்ரேயி என்றும், அங்கு இருப்பது மைத்ரேயி உருவில் உள்ள வேற யாரோ என்று.. முதலில் இங்கு உள்ள எல்லாம் அறிந்துக் கொண்ட பிறகு அங்கு பார்ப்போம் “ என்று எண்ணி இருக்கிறான்.

இப்படி யோசனையாக சத்ரியன் அறை நோக்கி செல்லவும்,மைத்ரேயி அவன் முன் “ மாமா“ என்று வந்து நின்றாள்....

இப்பொழுது மீண்டும் குழம்புவது அவன் முறையாகிற்று, அவளை நோக்கி “ நீ.... நீ“ என்று ஆரம்பித்து தயக்கத்துடன் “ இது உண்மையா.. நீ இப்போ உண்மையா என் முன்னாடி நிக்கிறியா “ என்று தயக்கத்துடனும், அவள்“ ஆம் “என்று சொல்ல வேண்டும் என்று மனதில் அந்த தாய்க்கு ஒரு வேண்டுதலை வைத்துக் கொண்டு அவள் முகம் நோக்கி நின்றான்...

அவனின் தயக்கத்தையும், அவனின் வேண்டுதலையும் கண்டுக் கொண்ட மைத்ரேயி சிரித்துக் கொண்டே“ மாமா இது உண்மை தான், என் கூட வாங்க“ என்று கூறி அவனை கை பிடித்து அழைத்துக் கொண்டு சத்ரியன் ரூம் நோக்கி சென்றாள்..

சத்ரியன் அறைக்கு செல்லவும் மைத்ரேயி அவனை விட்டு விலகி சென்றாள், அவள் செல்லவும் அவனுக்கு மீண்டும் கணேஷ் கூறியதே மனதில் ஓடிக் கொண்டு இருந்தது, அவள் உண்மையா? பொய்யா? என்று யோசனையாக கையில் வைத்திருந்த பத்திரத்தை இறுக்க பற்றிக் கொண்டு பல குழப்பத்துடன் அவர் ரூம் உள் பிரவேசித்தான்...

அவன் உள் செல்லவும் சத்ரியன் கண்களில் நீர் வழிய படுத்திருந்தார், அவரை பார்க்க கௌதம்க்கு வருத்தமாக இருந்தது, “ இந்த ஊரையே கட்டியாளும் இவர் இப்படி சொத்தை என் பெயருக்கு எழுதி வைத்துக் கொண்டு இப்படி இருக்க காரணம் என்ன? அந்தகணேஷ் கூறியது போல் அவள் இறந்து இருப்பாளோ? அவள் தான் என் அறையிலும் தங்கி இருக்கிறாளோ என்ற யோசனை இப்பொழுது அவனுக்கு வந்தது,

இந்த யோசனை கௌதம்க்கு வரவும், மைத்ரேயியும், கோட்டைத்தாயும்“ இவன் உண்மையை அறிய வேண்டிய நேரம் வந்து விட்டதை அறிந்துக் கொண்டு அவனுக்கு எல்லாம் விளக்க எண்ணினார்கள்...

அதே நேரம் கெளதம், சத்ரியன் அருகில் வந்து அவரின் கையை பிடித்தான், இவன் கையை பிடிக்கவும் எழுந்த சத்ரியன் இவனை பார்த்து விட்டு அப்படியே சுவற்றைப் பார்த்தார்..
அவர் பார்வையை தொடர்ந்து கெளதம் பார்க்கவும் மீண்டும் அதிர்ந்து விட்டான்,


அவனுக்கு தலை சுற்றும் உணர்வு “ இத்தனை நேரம் அவனிடம் சிரிக்க பேசிக் கொண்டு இருந்த மைத்ரேயி பிரேம் போட்டு மாலை போட்ட போட்டோவில் அமைதியாக சிரித்துக் கொண்டு இருந்தாள் “ ஆம் மைத்ரேயி 1 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டாள்....

அவனுக்கு பூமி அப்படியே இரண்டாக பிளவு பட்ட வேதனை, அதிலும் மனதுக்கு பிடித்தவளுக்கும், மற்றவளுக்கும் அடையாளம் தெரியாமல் அல்லவா? வீட்டில் உள்ள அவளிடம் பேசிக் கொண்டும்,குழைந்துக் கொண்டும் அல்லவா இருந்திருக்கிறான்... அவனுக்கு அவனை நினைத்தே கேவலமாக இருந்ததுஅவன் இப்படி எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,

மைத்ரேயி அவன் அருகில் வந்து “ மாமா ” என்று அழைத்து அவனின் வேதனையை குறைக்க எண்ணினாள், ஆனால் வழக்கத்துக்கு மாறாக எப்பொழுதும் அவனை அமைதிபடுத்தும் அந்த குரல் இன்று வேதனை அளித்தது,

அதே வேதனை முகத்தோடு அவளை நோக்கி, மிக மிக வேதனையான குரலில், “ என்னை நீ இப்படி ஏமாற்றியதற்கு, ஒரேடியாக கொன்றிருக்கலாமே மைத்ரேயி “ என்று உயிர் உருக்கும் குரலில் கேட்டான் அவளின் மாமா...

அவனின் இந்த வேதனை முகத்தை கண்ட மைத்ரேயி அவனிடமும், கோட்டைத்தாயிடமும் ஏதும் கூறாமல் அவனுக்கு தன் நிலையை விளக்கிடும் விதமாக அப்படியே சுழன்று அவளின் போட்டோவில் தஞ்சம் புகுந்தாள்,

அவள் புகும் நேரம் அந்த போட்டோ வேகமாக ஆடி அவளை தன்னில் ஏற்றுக் கொண்டது, அது மட்டும் இல்லாமல் முன்னால் நடந்ததை அப்படியே நிழல் படமாக அதில் ஓட ஆரம்பித்தது....

ஒரு வருடங்களுக்கு முன்பு,

கணேஷிடம் வந்த அழைப்பை ஏற்று அங்கு கிளம்பினாள் மைத்ரேயி, ஆனால் அவள் தாத்தாவுக்கு ஒன்றுமே ஆகவில்லை, இங்கு ஜிக்கியின் சொல்படி கணேஷ் அவளிடம் பொய் கூறி அவளை அங்கு அழைத்திருந்தான்,

அதே நேரம் சத்ரியன் வீட்டை விட்டு வெளியில் வரும் பொழுது எப்படியோ கால் தட்டி உண்மையாகவே சத்ரியன் கீழே விழுந்துவிட்டார்.அதில் அவருக்கு பலமாக அடி பட்டுவிட்டது.. அதனால் தான் கணேஷ் கூறிய பொய்யை அவளால் அறிந்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது,

வந்த உடனே கெளதம் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டாள், தாத்தாவிடமும் கூறினாள் அங்கு நடந்த எல்லாவற்றையும், அவர் ஒன்றும் கூறாமல் அமைதியாக கேட்டு கொண்டாரே தவிர ஏதும் கூறவில்லை.. அந்த நேரம் தான் கணேஷ் மீண்டும் மும்பை சென்றான். ஆனால் தான் சொல்லிய பொய் உண்மையாகிய விசயத்தை ஜிக்கியிடம் ஏனோ கூறவில்லை, அவளும் இங்கு நடப்பதை கேட்கவில்லை என்றதும் அப்படியே விட்டுவிட்டார்,

இப்படி இருக்கையில் அன்று கோட்டைத்தாய் கோவில் முன் இருந்த பூவரசம் அருகில் வந்து அமரவும் அந்த மரத்துக்கு சந்தோசம் தாளவில்லை, அந்த மரத்தின் எண்ணம், கோட்டையின் எண்ணாம் எல்லாம் இன்று நிறைவேற்ற வேண்டும் என்று அந்த மரம் வேண்டிக் கொண்டு இருந்தது, மேலும் அவள் அந்த இடத்தைவிட்டு எழும்ப கூடாது என்ற வேண்டுதலுடன், அவளுக்கும் ஏனோ அந்த மரத்தை விட்டு, அந்த குளிர்ச்சியை விட்டு எழ மனமில்லை..

அப்படியே அமர்ந்து இருந்து கோட்டைத்தாய்க்கு வேண்டுதலை வைத்துக் கொண்டு இருந்தாள், அவளின் வேண்டுதலை கேட்ட அவளுக்கும், இவளுக்கு இவள் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் கண்ணை திறந்தாள் கோட்டை,

திறந்து கோட்டையையும், நாளை என்ற காலத்தையும் கணித்து வந்த பதிலில் அதிர்ந்த கோட்டை அந்த மரத்தையும், அவளையும் மாறி பார்த்து ஏதோ தடுக்கும் முன் வேகமாக வீசிய காற்றில் பூவரசம் மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகள் அப்படியே கோட்டை சிலையை மறைத்தது,

அந்த நிமிடம் கோட்டை கண்கள் கட்டப்பட்டது, அந்த ஒரு வினாடியில், மரம் தன் காரியத்தை செய்து முடித்திருந்தது..

வேகமாக வீசிய காற்றில் மரத்தில் கட்டி இருந்த அந்த 5௦ கிலோ எடைக் கொண்ட அந்த மணி அவள் தலையில் விழுந்து அந்த நிமிடமே அவள் உயிரை எடுத்து விட்டிருந்தது...

அதே நேரம் கோட்டைத்தாய் சிலையை முழுவதும் மூடிய இலையும் அவளை விட்டு விலகி அந்த மரத்தில் மீண்டும் குடிவந்து இருந்தது ஏதும் நடவாத மாதிரி....

உயிர் எடுப்பாள்….

வீட்டில் இருப்பது யார் என்று அடுத்த எபியில் கண்டிப்பா சொல்லிடுறேன்.. சாரி..
 




Last edited:

shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai
hai super epi... inka iruka maithreyi aaviya? anka irukathu? sathriyanuku etho payankarama nadanthiruku.. appo gowtham roomla irunthathu maithreyiya?? waiting
 




Gashini

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
281
Reaction score
230
Location
Srilanka
Nice ud mam, kottai thai maiyithrajiya kappatha pathawa? Puvarasam en mayuva kondathu?
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Chellam manichimavutrukalam la ipa Kootai thai vaarisu kalangude iduku என்ன seivanga
Maithreyee apdi enna varam ketanga kottai thaidam
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Wow interesting....
Maithreyiku ipdi oru thandanaya.... Pavam aval.....
Gowthamku evlo adhirchikal .... Meayu aavithan gowtham kooda irukkunna, avan veetla irukkarathu yaru?
Pls post next ud asap
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top