• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ Episode - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.... இதோ அடுத்த எபி போடுறேன்.. படிக்குறவங்க லைக், கமெண்ட் பண்ணுங்கப்பா... இதுவரை படித்தவர்களுக்கும், லைக், கமெண்ட் போட்டவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. சாரி நேத்தே போடணும் என்று இருந்தேன்.. கொஞ்சம் வேலை... சோ சாரி.. இன்னைக்கு எபி படிங்க, எப்படி இருக்கு என்று கொஞ்சம் சொல்லுங்க..

உயிர் – 12

இரவில் வெகு நேரம் உறக்கம் வராமல் இருந்தார் சத்ரியன்.. காரணமே இல்லாமல் அவருக்கு ஏதோ நடக்க போகிறது என்று உணர்த்திக் கொண்டே இருந்தது. அது நல்ல விசயமா இல்லை கெட்ட விசயமா என்று சத்ரியன் அறியாமல் குழம்பிக் கொண்டு இருந்தார். அப்பொழுது தான் யாரோ பேசும் சத்தம் கேட்டு வெளியில் வந்தார் சத்ரியன்..

இரவு சியோரா ஏன் இன்னும் கெளதம் அழைக்கவே இல்லை என்று எண்ணி அவனுக்கு அழைப்பு விடுத்தார் என்னே அதிசயம் கெளதம் மொபைல் ரிங் அடிக்கவும் ஆச்சரியத்துடன் போனை எடுத்துக் கொண்டு அவன் டெண்ட் விட்டு வெளியில் வந்தான் கெளதம்.. வெளியில் வந்து இங்கு நடப்பதை எல்லாம் கூறினான் கெளதம் அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட சியோரா “டேய் அதுக்கு எல்லாம் பயபடாதடா கோட்டை உன்னோட கொள்ளு பூட்டிக்கு பூட்டிடா அதனால நீ எதுக்கும் பயபடாத இப்போ நான் சொல்லுறதை ஒழுங்கா கவனி” என்றுக் கூறி அவனிடம் RK இறந்த விசயத்தை கூறினார்...

அவர் சொல்வதை கேட்ட அவனுக்கு நம்பமுடியவில்லை.. RKஇறந்துவிட்டானா? அதுவும் யாரோ தெரியாமல் ஆக்ஸிடென்ட் செய்துவிட்டார்களா? “எப்படி எப்படி” என்று அவரிடம் கேட்டான். ஆனால் “ அவரோ தெரியலடா... அதை விடு அந்த பொண்ணை பார்த்தியா” என்று கேட்டார் சியோரா... அதே நேரம் அவருக்கு பழைய நியாபகம் மனதில் ஓடின...

“ கெளதம் வர்ஷிக் திருமணம் பற்றி கூறியதும் முதலில் அதிர்ந்த சியோரா அதை கௌதம்க்கு காட்டாமல் அடக்கி கொண்டார். காரணம் கௌசிக் ஷதாஷியை திருமணம் செய்ததை அறிந்துக் கொண்டதும், RK மகளை வர்ஷிக்கு திருமணம் செய்ய எண்ணினார். ஆனால் அதையும் நடக்க விடாமல் வர்ஷிக் செய்துட்டான். என்ன செய்வது என்று எண்ணி கெளதம் மேலும் கூறியதை கேட்டார் சியோரா. அப்படி தான் அறிந்துக் கொண்டார்..

அதன் பிறகு ஒரு டிடெக்டிவ் வைத்து தான் அங்கு கோட்டைநல்லூரில் யார் எல்லாம்
இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டார். அப்படிதான் அன்று கௌதமை போலீஸ்
அரெஸ்ட் செய்ய வருகிறார்கள் என்று அறிந்ததும், அவனை அங்கு பாதுகாப்புக்காய் அனுப்பின மாதிரியும் இருக்கும், அவர்களை இங்கு அழைக்க ஒரு முயற்சி எடுத்த மாதிரியும் இருக்கும் என்று எண்ணி தான் அங்கு ஒரு பொண்ணு இருக்கிறாள் அது மையூரி தங்கையாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கூறி அனுப்பினார் சியோரா... “


அவர் பொண்ணு என்று கேட்கவும் அவனுக்கு முதலில் புரியவில்லை புரியாமல் “ எந்த பொண்ணு டாட். எனக்கு தெரியாமலே எனக்கு ஏதாவது பொண்ணு பாக்குறீங்களா? டாட்” என்று கேலியாக கேட்டான் கெளதம்.

அவன் அப்படி கேட்கவும் பல்லை கடித்த சியோரா “ டேய் நான் சொல்லுறது மையூரி தங்கச்சி என்று யாராவது ஒரு பொண்ணை பார்த்தியான்னு கேட்குறேன்.இங்க உன் அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்கா.. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல தான” என்றுகேட்டார். மெதுவாக நடந்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்த கெளதம் அப்படியே கோட்டை சுவர் பக்கமாய் வந்து நின்றான்.. அந்த சத்தத்தில் தான் சத்ரியன் வெளியில் வந்து பார்த்தார்..

“அப்பா அவங்களுக்கு ஒண்ணும் ஆகல எனக்கு தான் இங்க ஏதோ ஆகும் போல இருக்கு
சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு அந்த பொண்ணை அழைச்சுட்டு சீக்கிரமே வாறேன்” என்றுக்கூறி அழைப்பை நிறுத்தினான்...


அவனிடம் பேசி முடித்ததும் தான் சியோராவுக்கு நிம்மதியாக இருந்தது.. கௌதமும் அப்பாவிடம்பேசிய நிம்மதியுடன் உறங்க சென்றான்...

அவன் பேசியதை கேட்டதும் சத்ரியன் ஒரு நிமிடம் ஆடி தான் போனார்.. இவனும் மற்றவனைபோல தானா? என்று எண்ணி நமது குடும்பத்துக்கு தான் இப்படி அடிமேல் அடி விழுகிறது...இவன் கண்ணில் மைத்ரேயி நாளை காலை படும் முன் இவளை அங்கு மும்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் எண்ணி விட்டார். அதே நேரம் அவருக்கு அந்த கோட்டைத்தாயின் மேல் கோபமும் வந்தது.. அவளை பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும் என்று கதவை திறக்கும் நேரம் மிக பெரிய காற்று வந்து அவர் கோட்டை கதவையும், அதே நேரம் கோவில் கதவையும் ஒரே நேரத்தில் அறைந்து சாற்றியது..

இதில் அதிர்ந்த சத்ரியன் “ மைத்ரேயியைஉடனே அந்த இரவு நேரம் அழைத்துக் கொண்டு
கிளம்பி விட்டார்... கோட்டைத்தாய் அவர்களை எவ்வளவோ நிறுத்த முயற்சித்தும் அவளால்முடியவில்லை.. சத்ரியன் காரை வாகாய் ஓட்டிக் கொண்டு சென்று விட்டார்......


ஏமாற்றத்துடன் கோட்டைத்தாய் தன் முன் நிற்பவர்களை பார்த்து முறைத்து நின்றாள்..

மைத்ரேயிக்கு இப்படி அவளை இரவு நேரம் அழைத்து வந்தது பிடிக்கவே இல்ல, தாத்தாவிடம் எத்தனையோ முறை கெஞ்சிவிட்டாள்“ தாத்தா காலையில் போவோம் இப்போவே ஏன் இப்படி என்னை அழைச்சுட்டு போறீங்க ” என்று அழுகையுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அவள் மாமாவிடம் கூறாமல் செல்கிறோமே என்ற எண்ணம்...

ஆனால்அவள் கூறியது எதையுமே தாத்தா காதில் வாங்கவில்லை நேராக தூத்துக்குடி சென்று அங்கு ஹோட்டலில்அறை எடுத்து தங்கி கொண்டார்... அவளிடம் ஏதும் பேசாமல் இண்டர்காம் அழைத்து அறையில் பால் கொண்டு வர செய்து அதில் பாதி தூக்க மாத்திரை கலந்து அவளுக்கு கொடுத்து விட்டு அவர் யோசனையில் ஆழ்ந்தார்...

ஊர் விட்டு வெளியில் வரும்பொழுது நடந்ததே அவருக்கு யோசனையில் வந்து இம்சித்தது.. இன்று தான் சத்ரியன் கோட்டையின் ஆக்ரோசத்தை கண்ணார கண்டார்.. கொஞ்சம் விட்டால் பயத்தில் அவர் உயிரே போய் இருக்கும்...

அத்தனை ஆக்ரோசமாக கோட்டை அவருக்கு காட்சியளித்தாள்... அப்பொழுது தான் அவர்
அறிந்துக் கொண்டார் கோட்டை பழிவாங்கல் செயல் இன்னும் நிற்கவில்லை.. இத்தனை
வருடங்கள் கழிந்தும் அவள் இன்னும் அதே ஆக்ரோசத்துடன் தான் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டார்...


அப்பொழுதே முடிவெடுத்து விட்டார். இன்று இவளை காப்பாற்றவில்லை என்றால் இனி என்றும் இவளை காப்பாற்ற முடியாது என்று எண்ணி தான் அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பி இதோ இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.....

கெளதம் அவன் அப்பாவிடம் பேசிவிட்டு அவன் டெண்ட் நோக்கி செல்லவும்,சத்ரியன் வெளியில் வர கதவை திறக்கவும் பெரும் காற்று வீசி அவர் வீட்டு கதவையும், கோட்டைத்தாயின் கோவில் கதவையும் அடித்து சாற்றியது அதில் அதிர்ந்து விழித்த சத்ரியன் ஓடி சென்று ஜன்னலை திறந்துப் பார்த்தார்...

அங்கு இருந்த பூவரசம் அதன் கிளைகளை தரை நோக்கி கீழே வீழ்த்தியும், அதன் கிளைகள் ஒடிந்து விழுவது போலும் பலமாக ஆடியது.. கோட்டைத்தாயின் கோவில் ஜன்னல்கள் பலமாக அங்கும் இங்கும் சுவற்றில் மோதியது அந்த சத்தம் ஏதோ நடப்பதை தடுக்க முயற்சி எடுத்தது போல் அவருக்கு தெரிந்தது....

இதை பார்த்த சத்ரியன் மெதுவாக நகண்டு வந்து கதவை திறந்துப் பார்த்தால் அவன் முன்னே ஒரு உருவம் அதன் அகோர முகத்தை காட்டி அவரைபயமுறுத்தியது. அதில் நிலை தடுமாறி விழுந்துவிட்டார் சத்ரியன்... இன்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை... ஒரு நாளும் இல்லாத நாளாய் இன்று கோட்டை செயல் பயங்கரமாக இருந்தது... என்ன நடக்க போகிறதோ என்று எண்ணி சமாளித்து மெதுவாக எழும்பி வெளியில் வந்தால் மண் எல்லாம் சுழன்று அவர் தலைக்கு மேலே எழும்பி நின்றுஅப்படியே அவரை வாரி சுருட்டி விடுவது போல் அவரை நோக்கி வந்தது...

இதில் கதவை அறைந்து சாற்றிய சத்ரியன் ஏதும் யோசிக்காமல் மைத்ரேயியை மட்டும்
காப்பாற்றும் எண்ணமாகமைத்ரேயிக்காகவாங்கி வைத்திருந்த பேக்கையும், அவள்அங்கு காலேஜ் செல்ல என்று எடுத்து வைத்திருந்த பேகையும் எடுத்துக் கொண்டு காரில் வைத்துக் கொண்டு அவளை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும் என்று எண்ணி கோட்டையின் வலதுபக்க வாசல் வழியாக வெளியில் வரவும் அவரை வெளியில் வரவிடாமல் யாரோ அவரின் இடது கையையும், இடது காலையும் பிடித்து இழுத்த உணர்வு திரும்பிப் பார்த்தால், பூவரசம் மரத்தின் வேர்கள் தான் வெளி எங்கும் பரவி இருந்து இவரின் காலையும், கையையும் இறுக்கி பிடித்திருந்தது.... சுற்றிலும் எங்கும் மணல் புழுதிகள் அவரால் கண்ணை திறக்க கூட முடியவில்லை...


அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... அதிலும் இன்று ஏனோ தெரியாமல் கோட்டை மிக மிக உக்கிரமாக இருந்தாள் என்றுஅவர்எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு என்றோ எதிலோ படித்த வரிகள் நியாபகம் வந்தது..

ஆனால் அவருக்கு தெரியவில்லை கோட்டை உக்கிரமாக இல்லை. பூவரசம் மரம் தான்
உக்கிரமாக இருக்கிறது என்று.. கோட்டை சிறை பட்ட விசயமும் அவருக்கு தெரியாதே???


ஆபத்தில் இருக்கும் நேரம் எந்த கடவுளையும் மனதார வேண்டினாலோ,
வணங்கினாலோ நினைத்தது அவர்கள் முன் நடக்கும் என்று படித்த நியாபகம் அவருக்கு வரவும் கூடவே துர்க்கா தேவி ஆபத்தில் இருந்து காப்பாள் என்ற வரிகளும் கூடவே வரவும் மனதார ஒரு நிமிடம் தேவியை மனதில் நினைத்து “ எங்களை இந்த இக்கட்டில் இருந்து இன்று காப்பாற்றி விடு தாயே ” என்று அண்ணாந்து பார்த்து ஒரு நிமிடம் வணங்கினார் சத்ரியன்...


அவருக்கு எப்படியாவது இவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்.. அதனால் என்ன
பிரச்சனைகள் வந்தாலும் தாங்கும் மனதை அவர் தனக்கு தானே வளர்த்துக் கொண்டார். அது தான் இந்த நேரத்திலும் நிதானமாக யோசித்து தேவியை அழைத்தார்...


அதே நேரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கோட்டைத்தாய்கோவில் கதவுகள் திறந்து மூடியது, அதே நேரம் பூவரசம் மரமும் அதன் வேர்களை தனக்குள் சுருட்டிக் கொண்டது... அதன் பிறகு தான் சத்ரியன் நிம்மதியாக இருந்தார் அதன் பிறகு மைத்ரேயியை அழைத்துக் கொண்டு இதோ இங்கு வந்து விட்டார்..

காலைஅவர்களுக்கு மும்பைக்கு பிளைட்... அங்கு இவர்களுக்கு தங்க வீடு அவர்
நண்பர் மூலமாக ரெடி செய்து விட்டார்.. மைத்ரேயிக்கும்ஹாஸ்டல் ரூம் எல்லாம் ரெடி அவள் இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் சேர வேண்டும்... இப்படி யோசனை செய்துக் கொண்டு இருந்ததில் அவரையும் அறியாமல் உறங்கி விட்டார் சத்ரியன்...


அங்கு கோட்டைநல்லூர், கோட்டைத்தாய் கோவில்

கோட்டைத்தாய்க்கு1௦௦ வருடங்களுக்கு முன் உதவி செய்தது முழுக்க முழுக்க துர்க்கா
தேவியே.... அன்று அவளின் கணவரை கொன்றதும் அவள் கணவர் எப்பொழுதும் வழிபடும்
கடவுளான துர்க்கா தேவியே பெரும் துணை என்று அத்தனை பக்தியாக இருந்தாள்.. அவளின் பக்தியை பார்த்து தான் அவள் கனவில் தோன்றி அவளுக்கு ஒவ்வொரு காரியத்தை உணர்த்தினாள்...


அப்படி தான் மீண்டும் கோட்டை முழு பக்தியாக இந்த ஊரில் காலெடுத்து வைத்தாள். அதாவது கோட்டை இங்கு மீண்டும் வந்ததே அவர்களை அழிக்கவே..

அப்பொழுது தான் அவள் மரணம் நெருங்கும் போதே தேவி அவளிடம் கூறி இருந்தாள் குறிப்பிட்ட வருடத்தில் அவளின் பழிவாங்கல் செயலை செய்து விட்டு இந்த பெட்டியில் இருந்து கிளம்பி செல்ல வேண்டும் என்றும், அதே நேரம் அந்த குறிப்பிட்ட வருடத்தில் இவளால் அவர்களை அழிக்க முடியவில்லை என்றால் அவர்கள் இவளை வந்து வணங்கினாலோ, அல்லது தேடினாலோ அவர்கள் வேண்டியதை இவள் ஒரு காவல் தெய்வமாக அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று தேவி அவளுக்கு உதவி செய்வேன் என்று கூறும் பொழுதே இந்த கட்டளைகளையும் இட்டிருந்தாள்.....
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஆனால் கோட்டைக்குதேவி குறித்த வருடங்கள் முடிந்து பல மாதங்கள் கழிந்தும் அவள் இன்னும் அந்த பெட்டி விட்டு அகலவில்லை... அது தான் இன்றே கோட்டையை அந்த பெட்டியில் இருந்து போகசெல்லவே இங்கு வந்தாள் தேவி...

ஆனால் கோட்டை அவளின் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை.. கோட்டைக்கு அவளை
அழித்தவர்கள் எல்லாரையும் அழிக்க வேண்டும், மையூரியை அழிக்காமல் அவளுக்கு அவள் வம்சம் வளராத படி அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்க வழி செய்து அவள் விதியில் எழுதி விட்டாள்...

சத்ரியா உயிருடன் இல்லை என்றால் கோட்டை வம்சமான சியோரா உயிருடன் இருக்க
மாட்டார். அது தான் அவளை இன்னும் விட்டு வைத்திருக்கிறாள்... இன்று தேவி வருகை
தெரியவும் எப்படியாவது சத்ரியனையும், மைத்ரேயியையும் அழிக்க வேண்டும் என்று அவள் நினைக்கும் நேரம் சத்ரியன் தேவியை அழைத்து எல்லாம் கெடுத்து விட்டான்... இது எல்லாம் சேர கோபமான கோட்டை தேவி அன்று செய்த உதவியையும் மறந்து கோட்டை அவளை எதிர்த்து நின்றாள்..

அதில் கோபமான தேவி அவளை எங்கும் செல்லாதபடி சிறை செய்து வைத்துவிட்டாள்...
கோட்டை இனி இந்த பெட்டியில் இராதபடி... கோட்டை பெட்டியை சுற்றி தீசுவாலையை எரிய விட்டாள் தேவி... அந்த தீ சுவாலை மத்தியில் கோட்டை இருந்தாளே தவிர அதை விட்டு வெளியில் வர கொஞ்சம் எண்ணவில்லை...
இன்றே கோட்டை அந்த பெட்டி விட்டு வெளியில் வந்து அந்த சிலையில் குடியேற வேண்டும் இல்லையென்றால் அந்த பெட்டியுடன் சேர்ந்து அழியவேண்டும் என்று கூறி தேவி அங்கேயே அமர்ந்து விட்டாள்.... இதை கோட்டை சற்றும் எதிர் பார்க்கவில்லை... தேவி இங்கையே இப்படி இருப்பாள் என்று எண்ணவில்லை..

விடிய விடிய அவர்கள் போராட்டம் நடந்தது... கோட்டைஇறங்கி வரவே இல்லை.தேவியும்
இறங்கி வரவில்லை.. கோட்டையேஇப்படி இருந்தாள்என்றால்அவளுக்கு தெய்வமான தேவி எப்படி இருப்பாள் அவளுக்கு மேலே இருந்தாள்....

அடுத்த நாள் அழகாக விடிந்தது... தேவி மனசு மாறிவிட்டாளா என்று ஒரு எதிர் பார்ப்புடன்
கோட்டை அவள் முகத்தைப் பார்த்தாள். ஆனால் அவள் எப்பொழுதும் பார்க்கும் சாந்த முகம் இன்று விகாரமாக மாறி இருந்தது...

கெளதம்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... கோவிலை சுற்றியும், கோட்டையை
சுற்றியும் அந்த ஊர் மக்களே நின்றனர்... கெளதம் மற்றும் அவன் கார்ட்ஸ் எவ்வளவோ கதவை திறக்க முயற்சித்தனர் ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை...

அப்பொழுது தான் ஒருவர் கோட்டையில் சத்ரியன் கார் நிற்கிறதா என்று பார்க்க சென்றார்... அங்கு அவர் கார் இல்லை என்றதும் அவர் எங்கோ வெளியே சென்று இருப்பார் போல என்று கூறி ஒருவரை ஒருவர் கூறிக் கொண்டனர்...


ஆனால் இப்பொழுது கோவில் ஏன் திறக்கவில்லை அவர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது தான் கெளதம் அவன் கார்ட்ஸ் நோக்கி “ டேய் பக்கத்துக்கு ஊர் போலீஸ்ஸ்டேஷன் போய் அவங்களை அழைச்சுட்டு வாங்கடா கோவில் கதவை உடைப்போம்” என்று கூறினான்...

அவன் போலீஸ் என்று கூறவும் ஊர் மக்கள் எல்லாரும் ஓன்று சேர்ந்து “ இந்த ஊருக்கு போலீஸ் வரவே கூடாது... இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட போலீஸ் இங்க கால் வைக்கல.. இப்போ பெரியய்யா இல்லாத நேரம் போலீஸ் வரவே கூடாது” என்று கூறி ஊர் கதவை அடைத்து சாவியை அவர்கள் வசம் வைத்துக் கொண்டனர்...

அவர்கள் அப்படி செய்யவும் கௌதம்க்கு கோபமாக வந்தது “ முட்டபயலுக சரியான பட்டிக்காடா இருக்கும் போல எல்லாம் காட்டுவாசி மாதிரி இருந்துகிட்டு சொல்லுறதை ஒண்ணும் கேட்க மாட்டுக்கு ” என்று வாயில் வந்த மாதிரி சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டு அவர்களை பார்த்து “ இது உங்க ஊரு எதுனாலும் பண்ணி தொலையுங்க” என்று கோபமாக அவன் டெண்ட் நோக்கி சென்று அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்...

சிறிது நேரத்தில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த கௌதம்க்கு வந்த
கோபத்துக்கு அளவே இல்லை “ முட்டாபயலுக மறுபடியும் காட்டுவாசினு காட்டுதுங்க பாரு” என்று அவனின்மனதில் கூறி அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டு நின்றான் கெளதம்...

எல்லாரும் குளித்து நெற்றி நிறைய திருநீரு பூசிக் கொண்டு நின்றிருந்தனர்.. இதில் அந்த பூசாரி வேற வந்து கெளதம் நெத்தியில் ஒரு பட்டையை போட்டு விட்டு சென்றார்... அது மட்டும் இல்லாமல் அவனின் அழகான வழு வழு கன்னத்தில் இரு புறமும் சந்தனம் பூசி மேலும் அவனை கடுப்பாகிட்டு அவர் பாட்டுக்கு சென்றார்... இதில் கடுப்பான கெளதம் அவரை பார்த்து முறைக்கவும், அவனின் கார்ட்ஸ் இவனை பார்த்து சிரித்தனர்.


அவர்கள் சிரிக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்த கெளதம் அவர்களுக்கு தான் பரவாஇல்லை என்று மனதை தேற்றிக் கொண்டான்.. காரணம் அவர்களுக்கும் முகம் முழுவதும் சந்தனமும், திருநீரும், குங்குமமும் பூசி விட்டிருந்தார் பூசாரி.. அவர்களும் மும்பை ஆட்கள் இது வித்தியாசமாக இருக்கவும் முகத்தை கொடுத்துக் கொண்டு இருந்தனர் அந்த பூசாரி அவர்கள் முகத்தில் கோலம் வரைந்து இருந்தார்...

அவர்களை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை அவர்கள் பக்கம் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தான்... அந்த பூவரசம் மரத்திற்கு பூஜைகள் வெகு ஜோராக நடந்துக் கொண்டு இருந்தது.. மரத்தில் உள்ள பெரிய மணியை இருவர் அடிக்க முடியாமல் அடித்துக் கொண்டு இருந்தனர்.. அப்பொழுது தான் கெளதம் மனதில் “ இந்த மணி இங்க எதுக்கு வச்சிருக்கிறாங்க? யார் மேலையும் விழுந்தாலும்
அந்த ஆள் அந்த இடத்திலையே காலி ” என்று மனதில் எண்ணி கோவிலில் வேலை செய்யும் பொழுது இந்த மணியை கோவில் உள் எங்கையாவது மாற்றி வைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு இருந்தான்...

அதற்குள் அவர்கள் பூஜை முடியவும், எல்லாரும் ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு அந்த அருவி நோக்கி சென்றனர்.. இப்பொழுது கெளதம் மனதில் “ இவங்க இப்போ எங்க போறாங்க “ என்ற யோசனையுடன் அவர்களுக்கு பின்னே சென்றான்.. அங்கு அவர்கள் செய்வதை பார்த்து விட்டு கெளதம் தலையில் அடித்துக் கொண்டான்...


இதில் இன்னொரு கூத்து என்ன என்றால் அவனின் கார்ட்ஸ் அவர்கள் கூடவே பக்தி பழமாக மாறியதைதான் கௌதமால் தாங்க முடியவில்லை...

அருவிக் கரையில் வந்த மக்கள் அங்கிருந்த அருவில் இருந்து ஆண்கள் தண்ணீர் பிடித்துக்
கொடுக்க பெண்கள் அந்த குடத்தை தலையில் சுமந்து அந்த வெயிலில் வெறும் காலில் நடந்து வந்த ஊர் மத்தியில் இருந்த பூவரசம் மரத்துக்கு தண்ணீர் ஊற்றி இந்த மரத்தை குளிர்விப்பத்தின் மூலம் கோட்டையின் கோபத்தை குறைக்க எண்ணினார்கள்..


அவர்களும் கோட்டை தங்கள் மேல் கோபமாக இருக்கிறாள் என்றே எண்ணினர்....
இதில் கெளதம் கார்ட்ஸ் அவர்களும் அவர்கள் சார்பாக தண்ணீரை சுமந்து வந்து அந்த பூவரசம் மரத்துக்கு ஊத்தினார்கள்... வயதானவர்கள் சார்பாகவும் தண்ணீரை சுமந்து வந்து ஊற்றினர்...

இதை பார்த்த கெளதம் மைத்ரேயி எங்கு சென்று இருப்பாள்.. அவர்கள் சென்றதினால் தான்
கோவில் கதவுகள் திறக்க வில்லையா என்று அவன் வேறு விதமாக எண்ணிக் கொண்டு அவனின் டெண்ட் நோக்கி நடந்து வந்தான்...

அவன் பார்வை அந்த பூவரசம் மரத்தையே வெறித்துப் பார்த்தது.. அந்த ஊர் மக்கள் கிட்ட தட்ட 5௦ குடம் நீர் ஊற்றி இருப்பார்கள். ஆனால் அந்த மரத்தின் அடிபாகத்தில் தண்ணீர் ஊற்றிய தடமே இல்லை... அதிர்ச்சியுடனும், யோசனையாகவும் அந்த மரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.. அவன் என்ன செய்யவேண்டும் என்பதே அவன் அறியாமல், ஏதும் யோசிக்க முடியாமல் இருந்தான்..

ஓன்று மட்டும் அறிந்துக் கொண்டான் கெளதம், மைத்ரேயியை காப்பாற்ற அந்த கோட்டையால் மட்டுமே முடியும் என்று எண்ணி..அதிலும் அவள் செய்வதை, செய்ய இருப்பதை யாராலும் தடுக்க முடியாது.. எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் கெளதம்....

அங்கு மும்பையில் கௌசிக் மிக மிக சந்தோசத்துடன் அவன் அப்பாவிடம் வந்து சேர்ந்தான் அவன் மனைவியுடன்... கௌசிக் கூறியதை கேட்ட ஷதாஷிக்கு வருத்தமாகவும் இருந்தது அதே நேரம் சந்தோசமாகவும் இருந்தது...


அவளும் சியோராவை தவறாக தான் எண்ணினாள். ஆனால் அவள் கௌதமை ஒருநாளும்தவறாக எண்ணவில்லை அது தான் அவனிடம் எப்பொழுதும் கூறுவாள் அவன் தவறு செய்திருக்கமாட்டன் என்று.இன்று எல்லாம் சரியாகி அவர்கள் ஒண்ணு சேர்ந்துவிட்டனர்.. கூடவே அவளின்அப்பாவை கொன்றவர்களும் இல்லாமல் போய் விட்டனர். அப்பொழுதுகூட அவள் அந்த RK மகன் பற்றி அவனிடம் கூறவில்லை, அவனும் அவளிடம் கேட்கவில்லை...

அவன் தான் உயிருடன் இல்லையே என்று எண்ணி தான் அவளும் கூறாமல் இருந்தான்... அவனும் அதனால் தான் அவளிடம் கேட்காமல் இருந்தான்... சத்ரியாவுக்கு தான் பெரும் மகிழ்ச்சி எல்லாரும் அவள் கூடவே வந்துவிட்டனர். இனி அவளின்
அப்பா வந்தாலே போதும், அதையும் சியோரா கட்டாயம் செய்வார் என்று நம்பினார்...

இதற்கிடையில் மையூரி அவள் தங்கைக்கும், அவள் தாத்தாவுக்கும் பல முறை அழைத்து
விட்டாள்... ஆனால் அவள் தாத்தா செய்தது அவளுக்கு தெரியாதே.. மையூரி வீட்டை விட்டு
செல்லவும் வீட்டு போன் லைன் கட் செய்து விட்டார் சத்ரியன். அதே போல மைத்ரெயிக்கும் புது நம்பர் வாங்கி கொடுத்து விட்டார்.. மும்பைக்கு செல்லும் போது அடிக்கடி அவளும், தாத்தாவும் ப்ரீ காலில் பேசுவது போல் ஆபர் சிம் என்று இருவருக்கும் ஒரே போல வாங்கிக் கொண்டு வந்தார் சத்ரியன்..


இது ஏதும் தெரியாமல் அவளும், சத்ரியாவும் இவர்களுக்கு முயற்சித்துக் கொண்டு
இருகின்றனர்... எழுந்ததில் இருந்து மைத்ரேயி மிக மிக கவலையாக இருக்கிறாள் கேட்டதற்கும் ஓன்று இல்லை என்றுக் கூறி கொண்டு சாப்ட்டு முடித்துவிட்டு இதோ ஏர்போர்ட் வந்துவிட்டனர்...

தன்னை விட்டு பிரிந்துப் போறதில் தான் இவள் இப்படி சோகமாக இருக்கிறாள் என்று சத்ரியன் எண்ணிக் கொண்டு இருந்தார்.. அதிலும் அவளிடம் கண்டிப்பாக கூறி விட்டார் படிப்பு முடிந்து தான் கோட்டைநல்லூர் வர வேண்டும் என்று.. அதற்கு முன் அந்த ஊரில் கால்வைக்க கூடாது என்ற நிபந்தனையுடன்...4 வருடம்கழித்து தான் இனி மைத்ரேயி இங்கு வருவாள்அதற்குள்ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் சத்ரியன்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
தாத்தாவின் பயம் தான் இதற்கு காரணம் என்று எண்ணிக் கொண்டும், இனி எப்படி கௌதமை பார்ப்பது என்ற யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் மைத்ரேயி....
அதே நேரம் கோட்டைநல்லூரில்கோவில் கதவுகள் திடிரென திறந்துக் கொண்டது... அதே போல்அந்த ஊர் மக்கள் பக்தியாக எடுத்து ஊற்றிய நீர்கள் எல்லாம் கோட்டை கதவுகள் திறக்கவும் அந்த பூவரசம் மரத்தின் அடியில் இருந்து தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வெளியில் வழிந்து ஓடியது...


இத்தனை நேரம் வறண்ட இடமாக இருந்த பூவரசம் மரத்தின் அடிப்பகுதி இப்பொழுது
மிக மிக செழிப்பாக மாறி தண்ணீர் வெளியில் ஓடியது.. இதை பார்த்த மக்கள் தாயின் கோபம் குறைந்து விட்டது என்று எண்ணி அந்த மரத்தின் கீழ்
விழுந்து வணங்கி கொண்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்... அந்த ஓர் மக்களுக்கு அளவுக்கு அதிகமான நம்பிக்கை. அதனால்தான் இந்த விசயத்தை எல்லாம் அவர்கள் சாதரணமாக எண்ணினார்கள்...

அவனின் கார்ட்ஸ் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்... ஆனால் கௌதமால் அப்படி பார்க்கமுடியவில்லை. அவனுக்குதோணியதும், அவன் அப்பா கூறியதை வைத்து பார்க்கும் பொழுது கோட்டை அவளின் வம்சத்தை அழிக்காமல் விடமாட்டாள்.. என்னையும் அவளை காப்பாற்ற விடமாட்டாள். இப்பொழுது அவர்களையும் காணவில்லை...

கோவில் கதவையும் இவ்ளோ நேரம் அடைத்து வைத்திருந்தாள்... என்ன தான் அவள் செய்ய போகிறாளோ தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டு இருந்தான்..
கூடவே மீண்டும் ஒரு முடிவு எடுத்தான் கெளதம் கோட்டை விஷயத்தில் தலையிடவே கூடாது என்று... அவள் சித்தம் எதுவோ அதுவே நடக்கட்டும் என்று எண்ணி அவனின் வேலையை பார்க்க கிளம்பினான்...

அவர்கள் எல்லாரும் கிளம்பிய சிறிது நேரத்தில் சடசடவென பெரும் சத்தம் கேட்கவும் எல்லாரும் வெளியில் வந்து பார்த்தனர், கௌதமும் என்ன இப்படி பயங்கரமா சத்தம் கேட்கிறது என்ற யோசனையுடன் வெளியில் வந்தான். அப்பொழுதுஅந்த ஊரில்1௦௦ வருடங்களுக்கு முன் கோட்டைத்தாய் கூறி கட்டிய கோட்டை மதில் இடது பக்கமாக உள்ள மதில் சுவர் இடிந்து அதன் கற்கள் சரிந்து விழுந்து கொண்டு இருந்தது.....



கோட்டைத்தாய் கதவுகள் எப்படி திறந்துக் கொண்டது??கோட்டை மதில் சுவர் ஏன் விழுந்தது? இதனால் ஊரில் அடுத்து என்ன நடக்கும்? கோட்டை அந்த பெட்டி விட்டு வெளியில் வந்து விட்டாளா?? இனி மைத்ரேயிக்கு ஆபத்து இல்லையா?? மீண்டும் கௌதமை மைத்ரேயி சந்திப்பாளா?? இப்படி பல கேள்விகளுடன் நானும் உங்களுடன்...

உயிர் எடுப்பாள்...
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Uir edupa nu thane solirukenga
Durga idaila vandadala aval pilaika vaipiruko
Gowtham kottaitaya edirka poradila
Apram epdi
Durga va meeri seiya matangalo
ena Dan nadakappdu
Aavaludan waiting
 




viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
ஒய் சீக்கிரம் சீக்கிரம் எபி போடுமா..
செமயா இருக்கு...
தேவி வந்ததுனால மைத்ரேயிக்கு ஆபத்து இல்லையா??
கோட்டை அந்த பெட்டியை விட்டு போய்ட்டாளா? இல்ல அதுலையே அழிஞ்சுட்டாளா??
எப்படி எப்படி இப்படி எல்லாரையும் யோசிக்க வைக்குற நீ..
 




viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
மைத்ரேயி அங்க மும்பைக்கு தான் போய் இருக்காள்..
அங்க தான் இனி கெளதம் போவான்?
இருவரும் பார்க்க வாய்ப்பு இருக்கா இல்லையா..
இப்போ எதுக்கு மறுபடியும் சுவர் இடிந்து விழுது..
ஆக மொத்தம் நீ என்ன தான் சொல்ல வாரா...
மைத்ரேயி வாழ்வாளா? வாழமாட்டாளா...
 




viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
கேட்க மறந்துட்டேன் பாரு.. டைட்டில் அர்த்தம் என்ன..
உன் உயிர் தா. நாம் வாழ சொல்லிருக்க..
யாரு யார் உயிரை கேட்குறா??
இல்லனா யாராவது உயிரை குடுத்து யாரையாவது வாழ வைக்க போறாங்களா??
பதில் சொல்லு சரியா..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
so kottai durga devikku kattu pattaval :):):)athu than maithreyi oorai vittu chendru vittale...... kottai mathil en udainthathu,......... gowtham pavam meundutan....... nice epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top