• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவளை அந்த நிலையில் இருந்து வெளியே கொண்டுவர தனத்தை விடவும் அதிகம் போராடியது ஜெயந்திம்மாவும், இனியாவும் தான்.. அவள் சாப்பிடாமல் அமர்ந்திருந்தால் அவளை அழைத்து வந்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவார் ஜெயந்திம்மா..

ஒருநாள் எழிலைப் பார்க்க வந்த ஆஷா அவர்கள் செய்கை இதெல்லாம் பார்த்த அவரைப் பிடித்துப் போனது.. இனியாவின் குறும்பும் ஆஷாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.. எனவே அடிக்கடி சென்று இவர்களைப் பார்த்து வருவதை தனது வழக்கமாக மாற்றிக் கொண்டாள் ஆஷா..

எழிலை எப்படி இந்த மனநிலையில் இருந்து வெளியே அழைத்து வருவது என்று யோசிக்க ஆரமித்த ஜெயந்திம்மாவிற்கு, அவளுக்கு இயற்கை மீது உள்ள ஈடுபாட்டை உணர்ந்து அவளை விவசாயத்தில் மெல்ல மெல்ல ஈடுபடுத்தினார்.. அவளும் அந்த இயற்கையோடு ஒன்றிப் போக மெல்ல மெல்ல தனது அப்பாவின் இழப்பை மறக்க ஆரமித்தாள்..

இந்த போராட்டத்திலேயே ஒரு வருடம் கடந்து சென்றது.. அப்படி ஒரு நாளில் தான் எழில் மனதை அவளே அறிந்துக் கொண்டாள்..

இவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வரும் பொழுது தனம் அவளையும், மஞ்சுவையும் விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை வந்தது..

அப்பா இறந்ததும் அவளை ஏமாற்றி அந்த நிலத்தை அவனின் பெயரில் மாற்றிக் கொள்ள அவன் நினைக்க மைனர் சொத்துகளை மாற்ற முடியாது என்றும் அது செல்லாது என்றும் சட்டம் கூறியதும் அவனும் அமைதியாக இருந்தான்..

இந்த நிலையில் அவளே அந்த நிலத்தை ஆள்விட்டு உழுது விவசாயம் செய்யும் அளவிற்கு அவளை அதில் ஈடுபடுத்திவிட்டார் ஜெயந்திம்மா.. அது பார்த்து கொஞ்சம் மன நிம்மதியை பெற்றார் தனம்.. மஞ்சரி நன்றாக நடைபழ, அவளும் நன்றாக பேச ஆரமித்தாள்..

அவளின் வளர்ச்சி கண்டு முத்துகுமார் மீண்டும் தனது முகத்தை வெளிகாட்ட, அதில் இருந்து எழிலைப் பாதுக்காப்பதை தனது வேலையாக மாற்றிக் கொண்டார் தனம்..

அவளின் அண்ணி அவளை முத்துக்குமாரிடம் இருந்து அவளைப் பாதுக்காக்க அவளுக்கு திருமண செய்ய ஏற்பாடு செய்தார்.. இதில் இனியாவும், ஜெயந்திம்மாவும் தலையிடவில்லை..

அன்று காலை எழில் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டை அழைத்து வந்தார் தனலக்ஷ்மி.. “எழில் உன்னைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருக்காங்க..” என்று சொல்லவும் அவளின் மனதில் என்றும் போல அன்றும் உதயமாகியது அன்புவின் முகம்..

“அவனின் முகம் தனது மனதில் ஏன் தோன்றுகிறது..?” என்று தனக்கு தானே கேட்ட எழிலைப் பார்த்த தனம், “யாரோட முகம்..?” என்று கேட்டதும், “ஒன்றும் இல்லை அண்ணி..” என்று சொல்லிவிட்டு சேலையை மாறி தயாராகினாள் எழில்விழி..

மீண்டும் அவனின் முகம் அவளின் மனதில் தோன்ற பின்னாடி தோட்டத்திற்கு சென்றாள்.. அங்கே இயற்கையை பார்த்தவளின் மனம் அவனின் சந்திப்புகளை நினைவில் கொண்டுவந்தது..

அந்த நிகழ்வுகள் நடந்து வருடங்கள் சென்றுவிட்ட பொழுதிலும் கூட அவளின் நினைவில் துளியும் மாற்றம இல்லாமல் அவனின் நினைவுகள் அவளின் மனதை ஆக்கிரமித்தது..

அவனை முதல் நாள் சந்தித்தது.. அதன்பிறகு ஆஷா மூலம் அவன் மூன்று வருடம் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்ததும் அவனுக்காக தான் துடித்தும், ஆஷாவிற்கும் சேர்த்து அவள் சாப்பாடு எடுத்துவர சொன்னதும், அதற்கு அண்ணிடம் அடி வாங்கியதும், அதை அவனிடம் சொல்ல அந்த நிகழ்வுக்கு தான் காரணம் என்று மனம் வருந்தி அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டது என்று அவளின் மனதில் அன்புவை பற்றிய நினைவுகள் மட்டுமே!

“என்னோட மனதில் நீ எப்பொழுது வந்தாய் அன்பு.. உன்னிடம் என்னை ஈர்த்தது என்ன..? இப்பொழுது நீ எங்கே இருக்கிறாய்..?” என்று அவளே கேள்விகேட்டுக் கொண்டே தனது மனதை அறிந்த சந்தோசத்தில் நின்றாள்..

அவளை அழைத்துச் செல்ல வந்த தனம், அவள் தனியாக நின்று சிரிப்பதைப் பார்த்து அவளின் அருகில் வந்தவர்,

“உனக்கு பிடித்த மாதிரியே இருப்பார் மாப்பிள்ளை.. இப்படியே சிரித்த முகத்துடன் வந்து வந்தவர்களுக்கு டீயைக் கொடும்மா..” என்று கூறியதும் தான் அவளுக்கு தனத்தின் தீவிரம் புரிய,

அண்ணியை நிமிர்ந்து பார்த்தவள், “அண்ணி நீங்க முன்னாடி போங்க நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு,

தனது மனதிற்குள், “அன்பு உன்னை மனதில் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யட்டும்..?! இந்த நிலையில் தான் நான் உன்மேல் இருக்கும் காதலை அறிய வேண்டுமா..?” என்று புலம்ப வீட்டிற்கு சண்டை நடக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது..

அந்த சத்தத்தில் வீட்டிற்கு செல்ல அங்கே அவளின் அண்ணன், “என்னோட தங்கைக்கு நான் பத்துபைசா செய்ய மாட்டேன்.. அதனால் நீங்கள் அனைவரும் கிளம்புங்க..” என்று சொல்ல,

“இப்படி ஒரு புருஷனை வைத்துக்கொண்டு எங்களைப் பெண் பார்க்க அழைத்து வந்திருக்கிறாள் பாரு..” என்று தனத்தைத் திட்டிவிட்டு செல்ல,

“அவளுக்கு மாப்பிள்ளை அழைத்து வருகிறாயே.. அவளுக்கு யார் எல்லா செலவையும் செய்வது...? இனிமேல் நீ இந்த வசப்படிக்கு வராவே கூடாது.. அவள் என்னோட பிறந்தவள் அவளைப் பற்றி எனக்கே கவலை இல்லை உனக்கு என்ன அவளின் மீது கரிசனம்..” என்று தனத்தை அடித்தே அடிபணிய வைத்தான் முத்துக்குமார்..

அவனுக்கு தேவை அந்த ஐந்து ஏக்கர் நிலம்.. மற்றதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவே இல்லை. அவனைத் தடுத்து நிறுத்த நினைத்தாள் எழில்..

தனது அண்ணியை அண்ணன் அடிப்பதைப் பார்க்க முடியாமல், “அண்ணா என்னோட வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன் உன்னோட மனைவியை அழைத்துக் கொண்டு போ..” என்று கூறியதும் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் முத்துக்குமார்

அவர்கள செல்லும் பொழுது வாசலுக்கு ‘அண்ணி என்னை மன்னித்துவிடுங்கள் எனக்கு வேற வழி தெரியல..’ என்று கண்களால் கெஞ்சினாள் எழில்விழி.. அதில் முத்துக்குமார் செய்த ஒரே நல்ல விஷயம் அவளின் திருமண ஏற்பாட்டை நிறுத்தியது மட்டுமே!

அந்த விசயத்தில் அண்ணனுக்கு கோவில் கட்டிக் கும்பிடுவாள் எழில்விழி.. அவளின் மனதில் இருக்கும் காதலை எப்பொழுது உணர்தாலோ அப்பொழுது இருந்து திருமணம் பற்றி அவள் யோசிப்பதே இல்லை..

அவனை சந்திக்கும் நாள் இன்னும் வெகு தூரம் இல்லை என்று தனது வாழ்க்கையை வாழ ஆரமித்தாள் அவனின் நினைவுகளை சுமந்த வண்ணம்..

அதுதான் தனம் அவர்களை விட்டு தனித்திருக்க காரணம்.. இதெல்லாம் எழிலுக்கு புரிந்துதான் இருந்தது.. ஆனாலும் அவளால் வாய் திறந்து பேச முடியாத நிலை.. அவளுக்கு அடுத்து இருக்கும் மஞ்சரியின் வாழ்க்கை திசை மாறாமல் இருக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தாள்.

இருவரின் மனதில் காதல் இருந்து அவர்கள் சந்திக்காமலும், தங்களின் காதலை சொல்லாமல் மனதில் வைத்து பாதுகாத்தனர்.. தனது விழியில் தொலைந்தவனை உயிருக்குள் வைத்து பாதுக் காத்தாள் எழில்விழி..!
Enna oru kodumai aanathika varkkam en manasachiye ilama iruku?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top