• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Anbu ve ippa than Ezhil ah pakka polam nu mudivu eduthu irukan.. akulla nee enna pannivacha aasha..
thanks sis.. theriyala pa..
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
காலையில் எழுந்தவன் ஒரு கேஸ் பைலைப் புரட்டியபடி ஹாலில் அமர்ந்திருந்த பெரிய மகனின் அருகில் வந்து அமர்ந்த சுமத்ரா, “அன்பு உன்னிடம் கொஞ்சம் பேசணும் கண்ணா..” என்று சொல்ல,

அண்ணனின் அருகில் வந்து அமர்ந்த அறிவு, “அண்ணா அம்மா எதுக்கோ நல்ல அடிபோறாங்க.. நீ மாட்டிக்காதே..” என்று சொல்ல, அவனின் முதுகில் ஒன்று வைத்தவன்,

“இவ்வளவு பெரிய பிசினஸ்மேன் ஆகியும் உன்னோட விளையாட்டுத்தனம் குறையவே இல்லை..” என்று கூறியவர் அன்னையின் பக்கம் திரும்பி,

“என்ன விஷயம் சொல்லுங்க அம்மா..” என்று கேட்டதும், “உன்னோட அம்மா என்ன சொல்ல போகிறாள் கண்ணா உனக்கு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல போகிறாள் இல்லையா சுமித்ரா..” என்று கேட்டுக் கொண்டே மனைவியின் அருகில் வந்து அமர்ந்தார் தியாகு..

அவர் சொன்னதைக் கேட்டு, “அப்பா எனக்கு இப்பொழுதே எதற்கு திருமணம்..? நான் இன்னும் கொஞ்ச நாள் கழிந்து திருமணம் செய்துக் கொள்கிறேனே..” என்று சொல்ல,

“என்னடா எப்பொழுது கேட்டாலும் இதே பதிலையே சொல்கிறார்..” என்று சுமித்ரா சலித்துக் கொள்ள, “அண்ணா அம்மா நீங்க ஒரே பதிலை சொல்வதாக சலித்துக் கொள்கிறார்கள்.. அதனால் பதிலை மாற்றி சொல்லு..” என்று அவன் அதற்கும் கிண்டல் செய்ய,

“டேய் அறிவு அவனுக்கு திருமணம் முடிந்தால் தான் உனக்கு திருமணம் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு..” என்று மிரட்டினார் சுமித்ரா..

“என்ன அண்ணா அம்மா இப்படி குண்டை தூக்கிப் போறாங்க..” என்று அதிர்ச்சியில் உறைந்தவன் கொஞ்ச நேரத்தில், “அம்மா எனக்கு திருமணத்தை முடித்துவிட்டு அண்ணனுக்கு அப்புறம் திருமணம் செய்ங்க..” என்று அவன் அன்னையிடம் விளையாட அன்பு அமைதியாக எழுந்து செல்வதை மூவரும் அமைதியாகப் பார்த்தனர்..

அவனின் மனதில் இருப்பதை அவன் மட்டும் அறிந்து வைத்திருந்தான்.. மாற்றவர்கள் யாரும் அவனது மனதை அறிய முடியவில்லை.. அவனின் மனதை முழுவதும் புரிந்து வந்திருப்பவள் அங்கே என்ன செய்கிறாளோ..?!

இப்படி நாட்கள் சென்று மறைய பெற்றோர்கள் திருமணத்தைப் பற்றி பேசுவதைக் கைவிட, அன்புவிற்கு அதிகம் தொல்லை கொடுத்தது ஜெயந்திம்மா மட்டுமே..! இனியாவைக் கூட சமாளித்த அவனால் அவனின் பாட்டியை மட்டும் சமாளிக்கவே முடியவில்லை..

அன்றும் அது போல அலுவலகம் சென்றவனுக்கு அழைப்பு வர அலைபேசியை எடுத்துப் பார்க்க அதன் திரையில் ஒலித்த எண்ணைப் பார்த்துவிட்டு, “ஹையோ இந்த பாட்டி தொல்லை தாங்கலையே..” செல்லை கையில் வைத்துக் கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அன்பரசன்..

அப்பொழுதுதான் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பியவள், ஏதோ பாடலை ஹம்மிங் செய்தவண்ணம் உள்ளே வந்த ஆஷா அன்பு தலைமேல் கை வைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்தது,

“என்ன அன்பு எந்த கப்பல் கவுந்து போனது..?” என்று அவள் கேலியாகக் கேட்டுக் கொண்டே அவனின் எதிரில் வந்து அமர்ந்தாள்..

அவளைப் பார்த்தவன், “உனக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு தானா..? நானே என்னோட பாட்டி தொல்லை தாங்க முடியவில்லை என்று இருக்கிறேன்..” என்று அன்பு புலம்பினான்..

“எந்த கேஸையும் கண்டு பயப்படாத மிஸ்டர் அன்பரசன், சென்னையின் முன்னணி வக்கீல் பாட்டி தொல்லை தாங்காமல் அமர்ந்திருப்பதை வந்து பாருங்கள்.. பாருங்கள்.. பாருங்கள்..” என்று அந்த அறையைச் சுற்றிலும் எக்கோ கொடுத்தாள் ஆஷா..

அங்கு நடந்த எதுவும் அறியாமல் அவளைப் பார்த்து சிரித்த வண்ணம் வந்த ஆதி, “என்ன ஆதி காலையிலேயே இந்த பிசாசு ஆரமித்துவிட்டதா அன்பு..?” என்று கேட்டான்.. அவனின் பேச்சை தடை செய்வது போல அன்புவின் அலைபேசி மீண்டும் மீண்டும் ஒலிக்க,

“முக்கியமான கிளைண்ட் கிட்ட இருந்து போன் வருது போல எடுத்து பேசு அன்பு..” என்று ஆதி அங்கே நடப்பது எதையும் அறியாமல் சொல்ல ஆஷா கலகவென்று சிரிக்க அன்பு ஆதியை முறைத்தான்..

“எதுக்குடா இப்படி முறைக்கிறாய்..” என்று கேட்டதும், “என்னோட பாட்டி உனக்கு முக்கியமான கிளைண்டா..?” என்று அன்பு பல்லைக் கடித்து கொண்டு கேட்டதும் ஆஷா சிரிப்பை அடக்க முடியாமல் ஆதியைப் பார்த்து சிரிக்க,

“உன்னோட பாட்டியா..?! இது எனக்கு தெரியாதுடா.. சத்தியமாக எனக்கு தெரியாது அன்பு..” என்று ஆதி உண்மையான வருத்ததுடன் சொல்ல, அவனைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ஆஷா..

அவள் சிரிப்பதைப் பார்த்து, “லூசு நீயாவது என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டியது தானே.. இப்பொழுது பார் இவன் என்னைப் பார்த்து முறைக்கிறான்..” என்று அவளின் பின்னதலையில் தட்டினான் ஆதி..

“அதுக்கு எதுக்குடா தலையில் அடிக்கிறாய்..?” என்று கேட்டாள் ஆஷா.. “உன்னை அடித்தால் நீ என்னை டா சொல்லுவியா..?” என்று அவர்கள் தங்களுக்குள் சண்டை போடா ஆரமிக்க அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க ஒரு நிமிடம் நின்று யோசித்தவன்,

ஒரு பெருமூச்சை இழுத்து வெளியிட்டு அலைபேசியை எடுத்து, “ஹாய் பாட்டி என்ன பண்றீங்க..?!” என்று சிரிப்புடன் கேட்டான்.. அவனைப் பார்த்த ஆதியும் ஆஷாவும், “கொஞ்ச நேரத்திற்கு முன் என்னை முறைத்த அன்புவா இது..?” என்று கேட்டது ஆஷா உதட்டை பிதுக்கினாள்

“நல்ல இருக்கேன் அன்பு.. நீ என்னடா பண்ற..?” என்று அதட்டினார் ஜெயந்திம்மா..

“நான் ஆபீஸ்ல இருக்கிறேன்.. இனியா எங்கே காலேஜ் போயிட்டாளா..?” என்று அவன் தங்கையைப் பற்றி விசாரிக்க, “பேச்சை மாற்றாதே அன்பு.. உனக்கு எத்தனை வயது ஆகிறது..” என்று கேட்டதும்,

“இருபத்தி ஆறு முடிந்து இருபத்தி ஏழு தொடங்கிவிட்டது..” என்று அவன் சொல்ல, “இருபத்தி நான்கு வயது வரையில் படித்தாய் என்று நான் உன்னோட திருமணத்தைப் பற்றி பேசல.. அதன்பிறகு ஆபீஸ் போடுகிறேன் என்றாய் அப்பொழுது நான் உன்னோட திருமணம் பற்றி பேசல.. சென்னையில் பெரிய வக்கீலாக வர வேண்டும் என்று கூறினாய்.. அப்பொழுதும் நான் அமைதியாக இருந்தேன்..” என்று சொல்ல,

“இப்பொழுது அமைதியாக இருங்க பாட்டி..” என்று அவன் சொல்ல, “இப்பொழுது உனக்கு திருமண வயது வந்துவிட்டது.. நான் சொல்வதை கேளுடா உனக்கு மிகவும் அழகான பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன் திருமணம் செய்து கொள்” என்று அவனை பேசவிடாமல் பேசிக்கொண்டிருந்தார் ஜெயந்திம்மா..

“எனக்கு இப்பொழுது திருமணத்தில் இஷ்டம் இல்லை..” என்று அவன் சொல்லவும், “இரண்டும் எப்படித்தான் ஒரே மாதிரி பதில் சொல்ல கத்து வைத்திருக்கின்றனர்..” என்று ஜெயந்திம்மாயும், ஆஷாவும் ஒரே மாதிரி கோரஸ் பாடினர்..

“எந்த இரண்டும்..?” என்று கேட்டதும், “ஒன்றும் இல்லடா பேராண்டி..” என்று கூறியவர் அவனை மனதிற்குள் வருத்தேடுத்துக்கு கொண்டிருந்தார்.. இங்கே ஆஷா வாயை மூடிக் கொண்டாள்..

“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா..” என்று ஜெயந்திம்மா என்று அவர் பேச பேச அவனின் மனதில் அவளின் விழிகளை கொண்டு வந்த அன்பு,

‘என்னை அவளின் விழிகளில் தொலைத்து பலவருடம் ஆகிவிட்டது.. தொலைத்த பொருளை நானே இன்னும் தேடாமல் இருக்கிறேன்.. என் மனதைப் பாதுகாக்க என்னை விட அதிகம் அக்கறை உள்ள ஒருத்தி இருக்கிறாள்..’ என்று அவன் கனவுலகத்தில் சஞ்சரிக்க,

“அன்பு முதலில் பாட்டி பதில் பேசிட்டு அப்புறம் கனவு காணுடா.. ஹையோ எல்லாம் என்னோட தலை எழுத்து..” என்று புலம்பிய வண்ணம் எழுந்து வெளியே சென்றான் ஆதி..

அவனின் பின்னோடு வெளியே வந்த ஆஷா அன்புவை பார்த்துக் கொண்டிருக்க அவளின் அருகில் வந்து நின்ற ஆதியும், “இவன் என்ன ஆஷா இப்படி ப்ரீஸ் ஆகிறான்..? பாட்டி திருமணத்தைப் பற்றி பேசி இருப்பாங்களோ..?” என்று கேட்டதும்,

“இருக்கும் ஆதி..” என்று அவர்கள் வேலையை செய்ய ஆரமித்தனர் இருவரும்..

அதன்பிறகு அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவன், அவனின் மனதில், ‘இன்னும் உன்னைப் பார்க்காமல் இருந்தேன் என்றால் அது என்னோட முட்டாள்தனம் எழில்விழி.. உன்னைப் பார்க்க இன்னும் ஒரே வாரத்தில் வருகிறேன்..’ என்று நினைத்து முடிவெடுக்க, ஆதியும் ஆஷாவும் அன்புவைக் கண்களால் காட்டி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்..

இவன் எழிலைப் பார்க்க செல்வது ஆஷா அறியாத காரணத்தால் அவளும் ஒரு வேலை செய்துவிட்டு வந்திருந்தாள்.. இந்த விஷயத்தால் அன்புவின் சந்திப்பு தடைபடுமா..?!
Enathu marupadium 2 perum pathuka matangala kadavule antha ponna en ipd pa2thura????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top