• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 13

எழில் வாழ்க்கையில் அப்பாவின் இறப்பு இடியாக இறங்கினாலும், அதுவே அவளின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைத்தது.. அதுவும் தனது மனதில் இருக்கும் காதலை அறிந்தவளின் வாழ்க்கை இன்னும் வண்ண மயமாக மாறியது..

தனது தந்தை சொல்லித்தந்த தொழில் அவளை வழிநடத்த, அவள் விவசாயத்தில் இறங்கினாள். இயற்கையும் அவளுக்கு ஒத்துழைப்பு வழங்க தங்களின் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்தாள் எழில்விழி..

தனது தெரியாத விஷயத்தை ஜெயந்தியம்மாவிடம் கேட்டதும் அவளுக்கு இயற்கை வழியில் விவசாயத்தை செய்வது எப்படி மற்றும் அதிக விளைச்சல் பெறுவது பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுக்க அதை படிக்க ஆரமித்து அந்த முறைகளை பயன்படுத்தி விளைச்சல் செய்தாள்..

அவளின் திறமையும், அவளின் அறிவும், பருவமழையும் சேர்த்து அவளுக்கு பலனைக் கொடுக்க, நல்ல ஒரு மாற்றம் வந்தது அவளின் வாழ்க்கையில்..!

விவசாயத்திலும் நல்ல வெற்றியை அடைய முடியும் என்ற பெயரை நிலை நாட்டினாள் எழில்விழி.. தனம் எழிலை அடிக்கடி வந்து பார்த்து செல்வது உண்டு என்றாலும் அது முத்துகுமார் ஊரில் இல்லாத பொழுதே நிகழும்..

எழிலுக்கு வாழ்க்கை தந்த ஒரு வாய்ப்பு விவசாயம். அதில் முன்னணியில் இருக்க நல்ல காய்கறிகளை விளைவித்து வெளியூரில் இருக்கும் இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்ய அவள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை பெற்றாள்..

எல்லோரும் கண்ணை மூடி கல்யாண கனவு காணும் வேளையில் இவள் இவள் விவசாயத்தில் முன்னணிக்கு சென்று கொண்டிருந்தாள்..

அவளின் கடுமையான உழைப்பும், தொழில் இருக்கும் நேர்மையும் அவளை நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல, பத்தொன்பது வயதில் உழைக்க ஆரமித்தவள் இருபத்தி நான்கு வயது என்ற பொழுது அவள் அந்த ஊரில் அனைவரும் மதிக்கும் ஒரு பெண்மணியாக மாறியிருந்தாள்..

அவளின் வளர்ச்சி கண்டு தனம் சந்தோசம் அடித்தால் என்றால் அதற்க்கு மாறாக தங்கையின் வளர்ச்சி கண்டு பொறாமை தீயில் வேந்தான் முத்துகுமார்..

அவளின் அப்பா விட்டுச்சென்ற ஐந்து ஏக்கர் நிலம் இவளின் முயற்சியில் பதினைத்து ஏக்கராக மாறியது.. மஞ்சரி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..

காலையில் எழுந்ததும் தனது தாய் தந்தை முகத்தில் விழித்தவள், “அப்பா, அம்மா நீங்கதான் தெய்வமாக இருந்து எங்களைப் பாதுகாக்கணும்..” என்று கூறினாள்..

அவள் படுக்கையை விட்டு எழுந்து, “மஞ்சு எழுந்திரி! ஸ்கூலிற்கு டைம் ஆகிறது பாரு..” என்று தங்கையை எழுப்பினாள்..

அவளோ, “அக்கா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக்கிறேன்..” என்று செல்லம் கொஞ்சினாள்..

“இந்த வேலையே ஆகாது.. முதலில் எழுந்து குளித்துவிட்டு மற்ற வேலைகளை கவனி.. நான் போய் உனக்கு சமையல் செய்கிறேன்..” என்று கூறியவள் பம்பரமாக சுழன்று வேலைகளை முடித்தவள்,

“மஞ்சும்மா நீ ரெடி ஆகிவிட்டாயா..?” என்று கேட்டதும், “அக்கா நான் ரெடி..” என்று கூறியவள், தனது தமக்கை வந்து கட்டிக் கொள்ள அவளை சமையல் மேடையில் அமரவைத்து சாப்பாடு ஊட்டிவிட சாப்பிட்டவள்,

“அக்கா இன்னைக்கு நம்ம நித்ய நிறைய மொட்டு விட்டிருக்கிறாள்.. ரோஜாவும் புதிதாக நாலு மொட்டு விட்டிருக்கிறாள்.. மாமரத்தில் மாங்காய் நன்றாக பழுக்கும் நிலையில் இருக்கிறது..” என்று சொல்ல,

“ம்ம் சரிடா.. லிஸ்டில் யாரையாவது விட்டுவிட்டாயா..?!” என்று யோசிப்பது போல பாவனை செய்தாள் எழில்விழி..

“ம்ம் நம்ம இனியா அக்க கொடுத்த பன்னீர் ரோஜா இன்னைக்கு இரண்டு பூ பூத்திருக்கிறது..” என்று பேசிக்கொண்டே அக்கா கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தாள் மஞ்சு..

“சரிம்மா செல்லம் பார்த்து பத்திரமாக ஸ்கூல் போகணும்.. யாரிடமும் வம்பு வளர்க்காதே..” என்று சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றாள் மஞ்சு..

அப்பொழுதுதான் ஞாபகம் வர, “ஐயோ ஜெயந்திம்மா எதுக்கோ என்னை வரச்சொல்லி மஞ்சுவிடம் சொல்லி விட்டிருந்தாங்களே..” என்று வேலைகளை முடித்தவள், வீட்டைப் பூட்டிவிட்டு ஜெயந்திம்மாவைப் பார்க்க சென்றாள்..

தங்கையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இப்பொழுது ஜெயந்திம்மா வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் எழில்விழி..

இப்பொழுது எழில்விழிக்கு வயது இருபத்தி நான்கு வயது. சேலையில் ஒரு சோலையா..? என்று வியக்கும் அளவிற்கு அவள் அழகு இன்னும் கூடி அடுத்தவர்கள் பார்வைக்கு அவளை எடுத்துக் காட்டியது..

அவளின் அப்பா, அம்மா இருந்த வீட்டில் தான் இன்னும் இருக்கின்றனர்.. இத்தனை வசதிகள் இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த வீட்டை மட்டும் எதுவும் செய்யாமல் அமைதியாக தங்கையையும் அந்த இயற்கையோடு இணைத்தபடியே வளர்ந்தாள்..

ஒரு மரம் உருவாக எத்தனை வருடம் ஆகிறது அதற்கு பாதுகாப்புக்கு நாம் எல்லாம் செய்வது போல தங்கையையும் ஒரு ரோஜா செடியை வளர்ப்பது போல வளர்ந்தாள்.. அவளின் முகம் வாடினாலும் இவளின் மனம் தாங்காது..

அவள் அன்று இருந்தது போலதான் இன்றும் இருக்கிறாள்.. யாரையும் நிமிர்ந்து பார்ப்பது கிடையாது.. தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறாள்..

மெல்ல தென்றலின் காற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தோப்பின் வழியாக ஜெயந்திம்மாவின் வீட்டிற்கு சென்றவளின் பார்வை அந்த வயல்வெளிகளை சுற்றி வந்தது.. இயற்கையை அளிக்க நினைக்கும் காலத்தில் இயற்கையை நேசித்து வாழும் எழில்விழி வாழ்க்கையில் இன்று பெரிய மாற்றத்தை கொடுத்தது இதே இயற்கை..

அப்படியே வேடிக்கைப் பார்த்தவண்ணம் ஜெயந்திம்மாவின் வீட்டிற்குள் சென்றவள், “ஜெயந்திம்மா...?!” என்று அழைத்தவளுக்கு பதிலாக கேட்டது ஜெயந்தியம்மா குரல் மாடியில் இருந்த அறையில் இருந்து கேட்டது..

உடனே மேலே வந்தவள்,“என்னை எதற்கோ வரசொல்லி சொல்லிருந்தீங்க ஜெயந்திம்மா...” என்று அவரைப் பார்த்துக் கேட்டதும், அவளை நிமிர்ந்து பார்த்தவர்,

“நீ எப்பொழுதுதான் திருமணம் செய்ய போகிறாய்..?” என்று நேரடியாகக் கேட்டதும், “எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் ஜெயந்திம்மா..” என்று தலைக் குனித்துக் கொண்டு கூறினாள்..

அவளின் முகத்தை பார்த்தவர், “அப்புறம் எப்பொழுது திருமணம் செய்யலாம் என்று இருக்கிறாய்..?” என்று கேட்டுக் கொண்டே அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தார்..

“இன்னும் கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்துக் கொள்கிறேனே..” என்று மெல்லிய குரலில் கூறினாள் எழில்விழி..

அவளைப் பார்த்த ஜெயந்திம்மா, “அந்த கொஞ்ச நாள் என்பது உன்னோட தங்கையின் திருமணம் செய்வது வரையிலுமா எழில்..” என்று கேட்டதும் அமைதியாக அவளைப் பார்த்தவர்,

“உனக்கு இந்த வயது சரியானது எழில்.. நீ திருமணத்திற்கு ஒத்துக்கொள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “நான் கொஞ்சம் யோசித்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறியவள், அந்த இடத்தைவிட்டு அகன்றாள். அவள் செல்வதை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தார்

ஜெயந்திம்மாவை சந்தித்துவிட்டு வயலுக்கு வந்தவள் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு எழுந்து சென்று பம்பு செட்டைத் திறந்துவிட்டு அதன் அருகில் அமர்ந்தாள்..

காற்று அவளை அழகாக வருடிச்செல்ல பம்பு செட்டின் வழியாக தண்ணீர் வெள்ளம் போல பெருகி ஓட அதைப் பார்த்தவள் விழிகள் மட்டும் கலங்கி இருந்தது..

அந்த தண்ணீரில் கைகளை வைத்து விளையாடியவளின் மனதிற்குள், ‘அன்பு நான் என்ன தவறு செய்தேன்.. உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்கும் தெரியும்.. ஆனால் உன்னைத் திருமணம் செய்யும் அளவிற்கு நான் தகுதியானவளா..?’ என்ற சந்தேகம் வந்ததும், அவனைப் பற்றி நினைத்து தனது மனத்தைக் குழப்பிக் கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை கவனிக்க சென்றாள்..

மாலை வீட்டிற்கு வந்தவள் தனது தங்கைக்கு சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று யோசிக்கும் பொழுதே வாசலில் இருந்து ஓரி ஆணின் குரல் கேட்டதும்,

“யாராக இருக்கும்..?” என்று வாசலுக்கு வந்தாள் எஎழில்விழி..

அவள் வாசலில் நின்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தவன் வேறு யாரும் இல்லங்க, சாட்சாத் நம்ம வில்லன் ஸாரி ஸாரி முத்துக்குமார் தான்..

அவன் தான் என்றதும் அவள் எதுவும் பேசாமல் நிற்க, “ஏண்டி நீ மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அவனை வெட்டியது..

“இப்பொழுது எதற்கு வந்திருக்கிறாய் அதுக்கு மட்டும் பதில் சொல்லு.. இந்த வீட்டின் வாசப்படி மிதிக்க கூடாது என்று என்னோட அண்ணியை அடித்து இழுத்துச் சென்றாயே இப்பொழுது எதற்கு வந்தாய்..?” என்று முதல் முதலாக மனதில் இருந்த பயத்தை கைவிட்டு அவனைப் பார்த்து கேள்விக் கேட்டாள் எழில்விழி..

“ஏய் அதெல்லாம் இப்பொழுது எதற்கு இழுக்கிறாய்..? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவன் கத்தினான்.. அவன் ஒருத்தன் உயிர் போக கத்திக்கொண்டு இருக்க இவளோ அவனை கவனிக்காதது போல வேலையைத் தொடர்ந்தாள்..!

அதில் முத்துவுக்கு கோபம் தலைக்கு ஏற, “எனக்கு சொத்துகள் அனைத்தையும் எழுதிக்கொடு.. இல்ல நான் உன்னை சும்மா விடமாட்டேன்..” என்று மிரட்டவும், “சொத்தா..?! யாரோட சொத்து..?” என்று அலட்சியமாகக் கேட்டாள் எழில்விழி..

“என்னோட அப்பனின் ஐந்து ஏக்கர்.. அதை வைத்து நீ சம்பாரித்த பத்து ஏக்கர் மொத்த சொத்தையும் எழுதித்தா..” என்று கேட்டதும், ஏற்கனவே அவள் மனதில் இருந்த கனலுக்கு இவன் விசிறி விட தீபற்றி எரிய, அவன் மொத்த சொத்தையும் கேட்டதும் அவள் அவளின் நிதானத்தைக் கைவிட்டாள்..

“உனக்கு எதுக்குடா நான் சம்பாரித்த சொத்தைக் கொடுக்கணும்.. உனக்கு நான் இரண்டு தங்கைகள் இருக்கிறோமே எங்கள் இருவருக்கும் நீ என்ன செஞ்ச..? அப்படியே பாசத்தில் மனம் பூரிக்க உனக்கு சொத்தை எழுதிக் கொடுப்பார்க்கு..?” என்று கேட்டாள்..

அவள் கத்தியதும் அந்த ஊர் மக்கள் அனைவரும் எழில்விழி வீட்டின் முன்னே வந்து நின்று வேடிக்கைப் பார்க்க வந்த வழியாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்த ஜெயந்திம்மா எழிலின் குரல் கேட்டு,

“எதுக்கு இவள் இந்த கத்து கத்துகிறாள்..?” என்று அவள் வீட்டிற்கு வந்தவள் அவள் முத்துவைக் கேள்வி கேட்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்றவர்,

“எழில் இது என்ன புது பழக்கம்.. இப்படி வீட்டின் முன்னே நின்று கத்தாதே.. நீ பொண்ணுடா இப்படி வெளியே நின்று கத்தினால் அவனுக்கு எந்த கேவலமும் கிடையாது.. உனக்கு தான் அசிங்கம்..” என்று சொல்ல,

“எத்தனை நாளுக்கு ஜெயந்திம்மா பொண்ணுன்னு பொறுத்துப் பொறுத்துப் போவது..?” என்று கேட்டவளின் அருகே பயத்துடன் வந்து நின்றாள் மஞ்சு.. அவளை ஒரு கையால் அனைத்துக் கொண்டு நின்றிருந்த எழில்விழியிடம்,
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“உன்னிடம் என்ன கேட்டான் இவன்..?” என்று கேட்டதும், “என்னோட சொத்து பத்து ஏக்கரையும் சேர்த்து இவனுக்கு எழுதிக் கொடுக்கணும் என்று மிரட்டுகிறான்.. இவனோட சுயநலத்தால் என்னோட வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்று இதோ இவளுக்காக எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறேன்.. இவளை நான் பெரியவளாக கொண்டுவர நான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.. இவன் என்ன எங்களுக்கு செய்தான்.. நான் பெருந்தன்மையாக இவனுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் அளவிற்கு..? இதை கேட்டது தப்பா ஜெயந்திம்மா..” என்று சொல்ல முத்துகுமார் பக்கம் திரும்பினார் அவனோ அவளை கொன்று புதைக்கும் கொலைவெறியில் நின்றிருந்தான்..

அவனைப் பார்த்தவர், “ஏன் முத்து உன்னோட அப்பா விட்டுசென்ற ஐந்து ஏக்கர் நிலத்தில் பங்குக் கேட்டால் அதில் தப்பில்லை.. ஆனால் அதிலும் பங்குதான் கேட்க உரிமை இருக்கிறது.. உனக்கு எப்படி அந்த சொத்தில் பங்கு இருக்கிறதோ, இவர்கள் இருவருக்கும் அதில் பங்கிருக்கு அந்த பங்கைக் கொடுக்க சொல்லி கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது.. ஆனால் நீ அவள் கஷ்டப்பட்டு சம்பாரித்த சொத்தை எதுக்கு நீ கேட்கிறாய்..? அதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல.. சட்டத்திலும் இடமில்லை..” என்று சொல்ல அவனுக்கு கோபம் எகிறியது..

“ஏய் உன்னோட வயதிற்கு நீயெல்லாம் ரூல்ஸ் பேச வந்துவிட்டாய்.. இந்த வயதிலும் இன்னமும் எல்லாவிதமான புக்கையும் படித்துக் கொண்டிருக்கிறாய்.. இதுவரை உனக்கு கொடுத்த மரியாதை எல்லாம் போய் விட்டது.. இது எங்களின் குடும்ப விஷயம் நீ வெளியே போ..” என்று ஜெயந்தியம்மாவை மரியாதை இல்லாமல் பேசினான் முத்துக்குமார்..

அவன் அப்படி கேட்பான் என்று ஜெயந்திம்மா நினைக்கவே இல்லை.. அவன் அப்படி கேட்டது அவருக்கு தலை குனிவாகிவிட அமைதியாக வாசலை நோக்கி திரும்ப, அவரின் கைகளை அழுத்ததுடன் பற்றியவள்,

“இப்பொழுதும் நான் தைரியமா வெளியே போய்ட்டு வீட்டுக்கு வருகிறேன் என்றால் அது இந்த அம்மா இருப்பதால் தான்.. எனக்கும் என்னோட தங்கைக்கும் இவங்க அம்மா மாதிரி.. அவங்களுக்கு தெரியாமல் ஒரு துரும்பு கூட அசையாது அவங்களைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய்..?” என்று கேட்டதும் ஜெயந்திம்மா அவளை நிமிர்ந்துப் பார்த்தார்...

அவளோ சரிக்கு சரி சண்டை காட்டிக் கொண்டிருந்தாள், “அவங்களை நீ பேசுகிறாயே.. நீயெல்லாம் இன்னமும் சீட்டாடிட்டு ஊதாரியா திரிகிறாயே உன்னைவிட இவங்க எதில் தாழ்ந்து போய்ட்டாங்க..? இரண்டு மகனை பெற்று வளர்த்தி அவங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் பார்த்து, அவங்களின் பேரப்பிள்ளைகளையும் வளர்த்து வராங்க.. அதுமட்டும் இல்லாமல் இன்னும் தனியாக நின்று நிர்வாகம் அனைத்தையும் பார்க்கிறாங்க.. நீயென்ன செய்தாய்..?” என்று கேட்டதும் அவன் பேயைப் பார்ப்பது போல முழித்தான் முத்துகுமார்..

“அவங்களின் அனுபவத்திற்கு தகுமா உன்னோட வயது..? எப்படியோ சீட்டாடி எல்லாவற்றையும் தொலைத்துவிட்டாய்.. இப்பொழுது நான் சம்பாரிந்த நிலம் உன்னோட கண்ணை உறுத்துதா..?” என்று கேட்டவளின் பார்வை வாசலுக்கு செல்ல அங்கே கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தாள் தனம்,

அவர்களைப் பார்த்தவள், “என்னோட அண்ணன் என்ற முறையில் நீ எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் அதோ நிற்கிறான்களே என்னோட அண்ணி அவங்க எனக்கு எவ்வளவோ பண்ணிருக்காங்க.. அவங்களுக்கும் அவங்களின் பிள்ளைக்கு மட்டும் தான் பாட்டன் சொத்தில் பங்கு கொடுப்பேன்.. உனக்கு சல்லி பைசா கூட கொடுக்க மாட்டேன்..” என்றவள்,

“நான் சம்பாரித்த நிலம் மட்டும் இல்ல அப்பா சொத்திலும் உனக்கு சல்லிக்காசு கொடுக்க மாட்டேன்.. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்க..” என்று கூறியவள் தங்கையையும், ஜெயந்திம்மாவையும் அழைத்துக் கொண்டு திரும்பியவள்,

“அண்ணி இவனுக்கெல்லாம் பயப்படாதீங்க.. இவனை மாதிரி இருக்கும் ஆளுங்களுக்கு பொண்டாட்டியின் பயம் அவங்களுக்கு சாதகமாக மாத்திக்கிட்டு என்ன வேண்டுமாலும் செய்வாங்க..” என்று கூறியவள்,

அங்கே நின்று வேடிக்கைப் பார்த்த ஊர் மக்களைப் பார்த்து, “என்ன இங்கே வேடிக்கை.. எல்லோரும் போங்க..” என்று சொல்ல, அந்த ஊர்மக்களில் ஒருத்தி,

“இவள் என்னடி பேயாட்டம் ஆடிட்டு போகிறாள்..?” என்று கேட்டதும் மற்றொருத்தி, “சாது மிரண்டால் காடு கொள்ளாது அக்கா.. இவளும் இத்தனை நாள் வரை பொறுமையாக இருந்தாள்.. இப்பொழுது அவளின் பொறுமைக்கும் சேர்த்து ஆடிவிட்டு போகிறாள்..” என்று கூறியவர்கள் அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்..

முத்துகுமார் எழில்விழி பேசியதைக் கேட்டு சிலையென்று நின்றுகொண்டிருந்தான்.. அவனைப் பற்றிய உண்மை அவளுக்கு எப்படி தெரிந்தது என்று!

அப்பா விட்டுச்சென்ற சொத்தை அடைய முடியவில்லை என்று இருந்தவனுக்கு தங்கையின் வளர்ச்சி இன்னும் எரிச்சலைக் தூண்ட தன்னுடைய சுயநலம் வெற்றி அடைய சீட்டாட்டத்தில் இறங்கினான்.

அவனின் சீட்டாட்டத்தில் ஊர் முழுக்க கடனாளியாக மாறியதுதான் மிச்சம்.. அதிலும் தங்கை அடைத்த வளர்ச்சியில் நேற்று ஒருவன், “உன்னோட தங்கை இன்னும் பத்து ஏக்கர் வாங்கி இருக்கிறாள் இது உனக்கு தெரியுமா..?” என்று கேட்டதும் முத்துகுமாருக்கு அவமானாக போய்விட்டது..

அதுதான் அவளின் வளர்ச்சிக்கு காரணம் தனது அப்பாவின் சொத்து.. அது இல்லை என்றால் அவள் இந்த நிலத்தை வாங்க முடியாது என்று நினைத்தவன் அனைத்தையும் அவளிடமின்று மிரட்டி வாங்க நினைத்தான்..

ஆனால் இவன் சீட்டாட்டத்தில் விளையாடுவதை கண்டவள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்ததன் பலன் தான் இந்த பேச்சு! தனம் வீட்டை நோக்கி செல்ல, ஜெயந்திம்மா எழில்விழி நெற்றியில் முத்தமிட்டு, “என்னோட மானத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாய்..” என்று கூறியவர் அவரின் வீடு நோக்கிச் சென்றார்..

இவற்றை எல்லாம் அங்கே வந்த ஆஷா கவனித்துவிட்டு, “நம்ம எழிலுக்கு கூட கோபம் வருமா..?” என்று கேட்டவள் வீட்டின் உள்ளே செல்ல அவள் பயத்தில் அமர்ந்திருப்பது பார்த்து,

“ஏய் என்னடி இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறாய்..? இதுதான் நான் பார்த்த எழிலா..?” என்று சந்தேகமாகக் கேட்டதும்,

“வா ஆஷா..? நீ எப்பொழுது வந்தாய்..?” என்று கேட்டாள், “நான் வந்தது இருக்கட்டும் நீ எவ்வளவு தைரியமாக பேசினாய்..? இப்பொழுது என்ன இப்படி பயப்படுகிறாய்..?” என்று கேட்டதும்,

“அண்ணனைப் பற்றி உனக்கு தெரியாது ஆஷா அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான்..” என்று கூறியவள் அடுத்த வேலைகளை கவனிக்க அடுத்த இரண்டு நாளில் அவளைத் தேடி வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருந்தான் முத்துக்குமார்..

அதைப் பார்த்தும் பயந்தவள் விழியைப் பார்த்து அதை வாங்கிய ஆஷா, படித்துப் பார்த்துவிட்டு, “இதுக்காக பயப்படுகிறாய்.. இனி ஆகவேண்டியதைப் பாரு.. நான் உனக்கு உதவியாக இருக்கிறேன்.. நான் ஒரு பெரிய வக்கீல் இடம் ஜூனியராக இருக்கிறேன்.. நீ சென்னை வா எழில்.. அங்கே வந்துவிட்டு எனக்கு போன் பண்ணு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்லிவிட்டு சென்னை வந்துவிட்டாள் ஆஷா..

அந்த வக்கீல் அன்பு என்று எழில் இடம் சொல்லாமல் வந்துவிட்டாள்.. இப்பொழுது எழில் அண்ணியிடம் தங்கையை ஒப்படைத்துவிட்டு சென்னை வருகிறாள்.. அன்பு என்ன செய்ய போகிறான்.. தன்னை காணவருவது தனது காதலி என்பதை அறிவானா..? இவர்கள் சந்திப்பு எப்படி நிகழும்..?!
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
வாவ்.வாவ்....சூப்பர்....அன்புகிட்ட எழில் கேஸ் போச்சுனா அவன்தான் பேர் ஊர் எல்லாம் கண்டுபிடிச்சிருவானே.....வக்கீலுக்கு படிச்சிட்டு அந்த அளவுக்கு அறிவில்லாம இருக்கமாட்டான்...சூப்பர் எப்பி சிஸ்....
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
எழில் சூப்பர் கலக்கிட்ட நீ பயப்படாம சண்டை போடு ஒரு கை பாக்கலாம் அப்புறம் நான் தான் முதல் கமெண்ட்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top