• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 21

இளா – இனியா இருவரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தாலும் அவர்களின் திருமணம் அயலூரில் தான் என்று பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.. இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு துணியெடுக்க செல்ல, அன்பு மட்டும் வர மறுத்துவிட்டான்..

“அம்மா நீங்க எல்லோரும் போய் எடுத்துட்டு வாங்க.. எனக்கு ஒரு கேஸ் விஷயமா கோயம்புத்தூர் வரை போகணும் அம்மா அதனால் நீங்க எல்லோரும் போய் கல்யாணத்திற்கு ஜவுளி எடுத்துட்டு வாங்க..” என்று சொல்லிவிட அவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் கிளம்பிச் சென்றனர்..

அவர்களிடம் சொன்னது போலவே அடுத்த ஒரு மணி இரண்டு மணி நேரத்தில் கோயம்பத்தூர் வந்தவன் அந்த கிளைண்ட் இடம் பேசிவிட்டு அவன் வெளியே வரும் பொழுது மதியம் மணி ஒன்று.

அவன் அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைக்கும் பொழுது, ‘எழில் கேஸை ஃபைல் பண்ண வேண்டிய முக்கியமான ஆதாரங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது..’ என்று தோன்றவே ஒரு நிமிடம் நின்று யோசித்தவன் அடுத்த நொடியே ஒரு நல்ல முடிவையும் எடுத்தான்..

‘எழிலைப் பார்த்துவிட்டு செல்வது தான் சரி..’ என்று அவனின் மனம் அவனிடம் கூற அடுத்த நொடியே அயலூர் நோக்கி புறப்பட, அந்த கிளைண்ட் தனது காரைக் கொடுத்து, “நீங்க போக வேண்டிய இடத்திருக்கு போயிட்டு வந்து எனக்கு இந்த காரைக் கொடுங்கள்..” என்று சொல்ல அவரின் காரில் அயலூர் நோக்கி சென்றான் அன்பரசன்..

உடனே காரை எடுத்தவன், ‘திடீரென்று அவளின் முன்னாடி போய் நின்றால் அவளின் முகம் எப்படி மாறும்..’ என்று மனதில் நினைத்தவன் அவளின் முகத்தை கற்பனை செய்து பார்க்க அவனையும் மீறி அவனின் இதழ்கள் விரிந்து புன்னகையாக மலர்ந்தது..

‘அவளை காண செல்கிறோம்..’ என்று மனதில் நினைக்கும் பொழுதே அவனின் மனம் துள்ளிக்குதித்தது.. அந்த அளவிற்கு அவளைப் பார்க்க நினைத்து அவனின் காதல் கொண்ட மனது..!

ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்கிறான்.. அவன் அந்த ஊரை விட்டு வரும் பொழுது இந்த அளவிற்கு சந்தோசம் படவில்லை என்றாலும் கூட அந்த ஊருக்கு சென்று திரும்பும் பொழுது எல்லாம் ஒரு நல்லது நடக்கும்.. இப்பொழுது என்ன நல்லது நடக்க போகிறதோ..?!

அவனின் மனம், ‘இன்னைக்கு உன்னிடம் உண்மையை வாங்காமல் வருவதில்லை எழில் தங்கம்.. அன்னைக்கு என்ன சொல்லிட்டு வந்தாய் கடைசி வரையில் பயணம் செய்ய முடியாதா..?! நான் தான் உன்னோடு கடைசி வரை பயணிக்க போகிறேன்.. என்னிடம் நீ அந்த மாதிரி சொல்லிட்டு வருகிறாய்..’ என்று மனதால் அவளிடம் பேசியவண்ணம் வந்தான்..

காற்றின் வேகத்தைவிட அவனின் காரின் வேகம் அதிகமாக இருந்தது.. அந்த அளவிற்கு அவனின் மனம் அவளை சீக்கிரம் பார்க்க நினைத்தது..!

உனது விழியசைவில் என்னை

விழ வைத்த விழியழகியோ நீ..?

உனது விழியழகில் என்னை

உன்னுள் தொலைத்தேன் பெண்ணே!

உனக்குள் தொலைந்த என்னை

நானே தேடிய தேடலின்

முடிவில் கண்டேன் பெண்ணே!

உனது விழியில் எனது மனதை

தொலைத்தேன் என்று! மீண்டும்

உன்னை சந்திக்க வருகிறேன்

உனக்குள் என்னை தொலைக்க அல்ல

உனக்குள் என்னை தேட...!

என்று மனதில் கவிதை வரைந்த அன்பின் கார் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தது..

மாலை கோவிலுக்கு செல்ல தங்கள் வீட்டின் தோட்டத்தில் அரளியை பறித்துக் கொண்டிருந்தாள் எழில்.. தென்றல் அவளின் தோழியாக மாறி அவளை வருடி அவளின் கூந்தலைக் கலைத்தது..

காற்றில் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கியவள் கண்களில் தங்கை விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் கண்ணில் பட, பூக்களைப் பறிப்பதை நிறுத்திவிட்டு தங்கையின் அருகில் சென்றவள்,

“மஞ்சும்மா அக்கா இந்த ஊஞ்சலில் ஆடுகிறேன்.. நீ அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று சொல்ல தமக்கை முகத்தை பார்த்த அந்த வாண்டு,

“என்ன அக்கா இன்னைக்கு ஊஞ்சலில் ஆட நீயே வருகிறாய்.. நான் விளையாட அழைத்தாலும் எனக்கு என்ன சின்ன வயதா..? உன்னோட விளையாட..? என்று கேட்பாய்..” என்று அவள் சந்தேகமாகப் பார்த்தாலே தவிர ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை..

அவள் இறங்காதது கண்டு, “மஞ்சு அக்காவுக்கு ஊஞ்சலில் ஆடணும் போல இருக்கும்மா.. நீ எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று தன்மையாக சொல்ல அவளும் ஊஞ்சலை விட்டு இறங்கி மற்றொரு ஊஞ்சலில் அமர்ந்தாள்..

வேப்பமரம், மாமரம் இரண்டிலும் ஊஞ்சல் கட்டி விடப்பட்டிருந்தது.. அந்த இரு ஊஞ்சலிலும் அமர்ந்தனர் அக்கா, தங்கை இருவரும்..! காட்டு வேலைக்கு சென்றால் சேலையும், வீட்டில் இருந்தால் பாவாடை தாவணியும் அணிவது அவளின் வழக்கம்..

இன்று வீட்டில் இருப்பதால் கருப்பு கலரில் பாவாடை மற்றும் அதே நிறத்தில் ரவிக்கையும், வெள்ளை தாவணியும் அணிந்திருந்தாள்.. அவள் தனது தாவணியை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்..

காலை தரையில் ஊன்றி ஆட ஆரமித்தாள்.. அவளின் ஊஞ்சல் வேகமாகப் போக, அந்த வேகத்திற்கு ஏற்றது போல அவளின் கூந்தலும் காற்றில் காற்றில் ஆடியது..

இன்னொரு ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஞ்சு, “அக்கா எனக்காக ஒரு பாட்டு பாடு..” என்று சொல்லிவிட்டு அக்காவிற்கு நிகரான வேகத்தில் ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்.. அவள் பாட சொல்லி கேட்டதும், “இல்ல மஞ்சு நான் இப்பொழுது பாடும் நிலையில் இல்லை..” என்று ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்..

மாலை நேரம் மேற்கே தனது பணியை முடித்துவிட்டு ஒய்வு எடுக்க செல்ல மேற்கு வானம் சிவந்து போக மாலை நேர தென்றல் காற்று அந்த தோட்டத்தில் உள்ள மலர்களின் மணங்களைத் திருடி வந்து ஊஞ்சலில் ஆடும் அழகு பதுமையின் மனதை கொள்ளையடித்துச் சென்றது..இந்த இயற்கை அவளின் மனதை கொள்ளை அடிக்கவே இப்படி செய்ததோ..?!

அவளின் மனம் என்று இல்லாத அளவு மகிழ்ச்சியில் தன்னை மறந்து புன்னகைத்த வண்ணம் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க, அவன் வருவது அவளுக்கு தெரிந்ததோ என்னவோ தெரியவில்லை அவளின் மனம் ரொம்ப சந்தோசமாக இருந்தது..

அந்த சந்தோசம் கண்டு அவளின் தங்கை மஞ்சு, “அக்கா இன்னைக்கு என்ன அக்கா.. நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறீங்க..?” என்று கேட்டாள்..

அவளின் முகம் நோக்கிய எழில், “என்னவென்று தெரியல ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. காரணம் இது என்று சொல்ல முடியாத ஒரு விதமான சந்தோசம் மஞ்சு.. இதை உன்னோட வயதிற்கு புரிந்து கொள்ள முடியாது..” என்று கூறினாள்..

“ஓஓ! இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா..? சரி அக்கா அண்ணி ஊருக்கு போறாங்க.. நானும் அவங்களோட ஊருக்கு போகவா..?!” என்று கேட்டு அவளின் அனுமதிக்காக காத்திருந்தாள் அவளின் அன்பு தங்கை..!

அவளின் முகத்தைப் பார்த்தவளின் உள்ளம், ‘எனக்கு தான் சொந்தம், பந்தம் வீட்டிற்கு சென்று பழக்கம் இல்லை.. அதுக்காக ஏங்கி நிற்கும் இவளின் ஆசையையும் கெடுக்க எனக்கு மனம் இல்லை..’ என்று நினைத்தாள்

“எழில்.. எழில்..” என்று தனத்தின் குரல் கேட்டதும், “அண்ணி நான் பின்னாடி இருக்கும் தோட்டத்தில் இருக்கிறேன்..” என்று குரல் கொடுத்தவள் ஊஞ்சலில் இருந்து இறங்கினாள்..

அவள் சென்று பூக்களைப் பறிக்க, அவளைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் வந்த தனம், “எழில் நான் ஊருக்கு போகிறேன் மா.. மஞ்சுவையும் என்னுடன் அனுப்பி வைடா..” என்று தயக்கத்துடன் கேட்டதும்,

தங்கை இப்பொழுது கேட்டது ஞாபகம் வரவே, “ம்ம் கூட்டிட்டுப் போங்க அண்ணி..” என்று சந்தோசமாகக் கூறினாள்.. அவள் ஊருக்கு செல்ல அனுமதி கொடுத்தும் அண்ணியுடன் கிளம்பிச் சென்றாள் மஞ்சு..

அவள் செல்லும் பொழுது மணியைப் பார்க்க அது ஐந்து என்று காட்ட கோவிலுக்கு போக வேண்டும் என்பது ஞாபகம் வர தனது தலையில் தட்டிக் கொண்டவள் கோவிலுக்குச் செல்ல தயாராக கண்ணாடி முன்னாடி நின்றாள்..

பன்னீர் ரோஜா நிறத்தில் சேலை அணிந்துக் கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று எப்பொழுது பேசும் விழிகளுக்கு மை போட்டு தலை பின்னலிட்டு மல்லிகை பூ சூடினாள்..

அவள் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துவிட்டு திருப்திகரமாக இருக்கவும், கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பூவை கையில் எடுத்துக் கொண்டவள், கதவை சாத்திவிட்டு பூட்டவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.. காரின் சத்தம் கேட்டு எழில் திரும்பிப் பார்க்க அவளை கண்டு இவள் சிலையாக நிற்க, இவளைக் கண்டு அவன் மெய்மறந்து நின்றான் அன்பு..!

ஐந்தரை அடியில் அழகிய சிற்பமொன்று ரோஜா நிறத்தில் சேலை கட்டி, பின்னலிட்ட கூந்தல் அவளின் இடையோடு உறவாட.. மாலை நேரத்தில் அவள் வைத்திருந்த மல்லிகை மணமும்.. வில்லென வளைந்த புருவமும்.. மையிட்ட மீன் விழிகள் இரண்டும் இவனைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்க.. அவளின் நிறமோ பாலாடையில் சந்தனம் குழைத்தது போல மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் ஒளிவிச.. அவளின் ரோஜா இதழ்கள் இரண்டும் கோவை பலமாக சிவந்திருக்க.. வெள்ளை பாசி மாலை அவளின் கழுத்தை அலங்கரிக்க அதிர்ச்சியில் நின்றிருந்த எழிலின் எழில் அழகை விழியால் அளந்தான் அன்பரசன்..

அவன் இவளை விழியால் அளக்க இவளின் மனமோ, ‘இதுதான் என்னோட மனதின் இனம்புரியாத சந்தோசத்திற்கு காரணமா..?’ என்று நினைத்தவள் அவனை விழியால் அளந்தாள்.. ஆறடிக்கும் குறையாத உயரமும், காற்றில் கலந்த அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவமும், தன்னை பார்ப்பவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வை வைத்தே படிக்கும் அளவிற்கு அவர்களின் மனதை ஊடுருவும் பார்வையும்.. கூர்மையான நாசியும்.. அளவான மீசையும்.. அதன் கீழ் செதுக்கப்பட்ட உதடுகள்.. அவன் அணிதிருக்கும் சட்டையை மீறி வெளிப்பட்ட அவனின் திரண்ட தோள்களும்..!

இருவரும் ஒருவரை ஒருவர் விழியால் அளந்தவண்ணம் எவ்வளவு நேரம் நின்றனரோ..? இருவரின் சிந்தையைக் கலைக்கவே, “கூக்கூ.. கூ..கூ..” என்று கூவியது மாமரத்தில் எங்கோ ஒரு கிளையில் அமர்ந்திருந்த குயில்..!
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அந்த குயில் சத்தத்தில் தன்னை முதலில் மீட்டெடுத்து வெளி வந்த அன்பு, அவள் விழிகளை அசைக்காமல் தன்னை ரசிப்பதைக் கவனித்த கண்டு அவளைப் பார்த்து கேள்வியாக தனது இடது புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்வையால் கேட்டதும், நொடிபொழுதில் அவனின் பார்வை கண்டு வெக்கத்தில் கன்னங்கள் இரண்டு சிவக்க தலை குனிந்தாள்..

அது கூட அழகாக இருக்க அவளை விழியால் ரசித்த வண்ணம் காரில் சாய்த்து நின்றான் அன்பரசன்.. அப்பொழுது தான் வெக்கத்தில் தலைகுனிந்த எழில் மனம், ‘இப்பொழுது என்னைப் பார்க்க ஏன் வந்திருக்கிறார்..?!” என்ற கேள்வி எழுந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அந்த வழியே வந்த வீரம்மா அன்பைப் பார்த்துவிட்டு எழில் பக்கம் திரும்பி, “என்னம்மா எழில் இவர் யாரு..?” என்று சத்தமாகக் கேட்டதும் அன்பு அவளைக் கேள்வியாகப் பார்க்க, அந்த கேள்விக்கு தனக்குள் புன்னகைத்த எழில், “அவர் வக்கீல் வீரம்மா.. கேஸ் விஷயமாக ஏதோ கேட்க வந்திருக்கிறார்..” என்று சொல்லவும்,

“சரிம்மா தம்பி உட்கார வைத்து என்ன என்று கேளு..” என்று காற்று வாக்கில் சொல்லிவிட்டுச் செல்ல, “சரி வீரம்மா..” என்றவள், “வாங்க அன்பு என்ன திடீரென்று வந்து அதிர்ச்சி எல்லாம் கொடுக்கிறீங்க..?!” என்று அழைத்தவள்,

அவளின் அழைப்பில் இருந்த சந்தோசத்தைக் கண்ட அன்பு, “இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. அதுதான் உன்னோட கேஸ்க்கு வேண்டிய ஆதரங்களை வாங்கிவிட்டு போகலாம் என்று வந்தேன்..” என்று சொல்ல, “இதில் உட்காருங்க வருகிறேன்..” என்று வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்..

அந்த கட்டிலில் அமர்ந்தவன் கண்களுக்கு வீட்டின் முன்னாடி இருந்த செண்பக மரத்தின் பூத்திருந்த செண்பகப்பூவின் வாசனை அவனின் நாசியைத் தீண்டியது.. மாலை நேர தேன்றலும் மஞ்சள் வெயில் வானமும், கானம் பாடும் குயில் குயில்களும் பறந்து செல்லும் பறவைகளும் என்று இயற்கை எழிலை அவனது கண்கள் சுற்றி வந்தது..

அவனின் மனம், ‘கிராமத்தில் மட்டும் இயற்கையை நேரில் பார்த்து ரசிக்க முடிகிறது... இந்த எழிலோடு பொருந்தியவர்கள் மனம் நகர வாழ்க்கையை ரசிக்காது..’ என்று நினைக்க, அவனுக்கு குடிக்க காபியும், கேஸ்க்கு தேவையான ஆதாரங்களின் நகல்களையும் எடுத்து வந்தாள் எழில்..

“அன்பு இந்தாங்க காபி..” என்று அவளின் கையில் கொடுத்தவள், “இதில் எல்லாம் நீங்க கேட்ட ஆதாரம் அனைத்தும் இருக்கிறது.. இது மட்டும் போதுமா..? இல்ல வேற ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா..?” என்று கேட்டாள்..

அவளிடம் இருந்து காபியை வாங்கிய அன்பரசன், “அதெல்லாம் இருக்கட்டும்.. நீ இப்பொழுது எங்கே செல்கிறாய்..?” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிறிது தயக்கத்துடன் நிற்க அவள் சாமிக்கு என்று கட்டிய அரளி பூக்களைப் பார்த்தவன்,

“ம்ம் என்னிடம் என்ன தயக்கம் சொல்லு எழில்.. எங்கே கிளம்பிவிட்டாய்..?!” என்று கேட்டபடியே காபியைப் பருகினான்..

“எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் அன்பு.. ஒவ்வொரு வருடமும், ஜெயந்திம்மா, இனியா இருவரும் இங்கே இருப்பாங்க.. எனக்கு வாழ்த்து சொல்வாங்க..” என்று சொன்னதும், ‘ஓ என்னோட பாட்டியும், என்னோட தங்கையும் தான் உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்பவர்களா..?!’ என்று நினைத்தவன்,

“உனக்கு இன்னைக்கு பிறந்த நாளா..?! விஷ் யூ ஹாப்பி பர்த்டே..” என்று கூறியவன், “இந்த வருடம் ஜெயந்திம்மா, இனியா இருவரும் எங்கே போயிருக்காங்க..?!” என்று தெரியாது போல கேட்டான்..

“இனியாவின் திருமண விஷயமாக அவளை சென்னைக்கு அழைத்து சென்றிருக்கிறார் ஜெயந்திம்மா.. அதனால் தான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என்று கிளம்பினேன்..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள் எழில்..

“இன்னொரு முக்கியமான நபர் கணக்கில் வரவில்லை..” என்று புன்னகையுடன் கேட்டவன் அவளின் கையில் காபி டம்ளாரைக் கொடுத்துவிட்டு அவளைக் கேள்வியாக நோக்கினான்..

“முக்கியமான நபரா..?” என்று யோசித்தவள் அவன் சிரிப்பதைக் கண்டு, “ஆஷாவா..?! ஆஷா காலையிலேயே மறக்காமல் விஷ் பண்ணிட்டா..” என்று கூறினாள்..

எழில் கோவிலுக்கு செல்ல கதவைப் பூட்ட, அவள் கொடுத்த ஆதாரங்களை சரிபார்த்தவன், “ம்ம் எல்லாம் சரியாக இருக்கிறது..” என்று சொல்லிவிட்டு அதை காரில் வைத்துவிட்டு காரை லாக் செய்தவன்,

“கோவிலுக்கு தானே போகிறாய்..?” என்று சந்தேகமாக கேட்டதும், “ம்ம் கோவிலுக்கு தான் போகிறேன்..” என்று சொல்லவும், “சரி வா நாம் இருவரும் கோவிலுக்கு போவோம்..” என்று சொல்ல இருவரும் இணைத்தே கோவிலுக்கு சென்றனர்.. மாலை நேரத்தில் மறையும் சூரியனை வேடிக்கை பார்த்த வண்ணம், கோவிலுக்கு சென்றனர் எழிலும், அன்பும்..!

கோவிலுக்கு சென்று சாமி சந்நிதானத்தின் முன்பு நின்று சாமியை தரிசித்த இருவரும் கோவில் பிராகாரத்தில் அமர, அவளை பார்த்த படியே அமர்ந்தான் அன்பரசன்..

இருவரின் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்ல.. ஆனால் அழகான அமைதி அவர்கள் இடையே குடிகொள்ள, அந்த ஏகாந்த நிலைய இருவருமே ரசித்தனர்.. அந்த அமைதியை முதலில் கலைத்தான் அன்பரசன்..!

“உன்னோட பிறந்தநாள் அன்று ஆஷா இங்கே வந்திருக்கிறாளா..?” என்று கேட்டதும், “அவள் ஊருக்கு வந்து செய்த சேட்டையை மறக்க முடியுமா..?!” என்று கேட்டதும், அவனும் ஆர்வமாக, “என்ன பண்ணினாள்..? என்று கேட்டான்..

“என்னிடமே வந்து எங்களின் வீட்டு முகவரியைக் கேட்டு எனக்கு கொடுத்தாலே ஒரு அதிர்ச்சி.. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது அன்பு..” என்று தன்னை மறந்து சிரிக்க ஆரமித்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குமே சிரிப்பு வந்தது..

அவளின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்தவன், “நீ அவளை சும்மாவா விட்டா..?!” என்று அவன் சிரிப்புடன் கேட்டதும், “தென்னந்தோப்பில் விட்டு துரத்தினால் யார் கேட்பா..? அன்னைக்கு ஓடிய ஓட்டத்தில் ஒருவர் மீது மோதிவிட்டேன்.. ஏதோ மனுஷன் நல்லவன் போல என்னை திட்டாமல் சும்மா விட்டான்..” என்று அன்று நடந்ததைக் கூறினாள்..

அவள் கூறியதைக் கேட்டதும், ‘ஓ அன்னைக்கு என்னை வந்து மோதியது நீ தானா..?! என்னடி இன்னைக்கு எல்லாமே சந்தோசமான விஷயமாக இருக்கிறது..’ என்று மனதில் நினைத்தவன்,

“எழில் இந்த கேஸ் முடிந்தால் அடுத்து என்ன செய்ய போகிறாய்..?” என்று அவன் பேச்சை மாற்றவே, அதுவரை விரலை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள்,

அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து, “எனக்கு என்ன அன்பு.. இந்த கேஸ் முடிந்தால் அடுத்து தங்கையை நல்ல படிக்க வைக்க வேண்டும்..” என்று கூறினாள்..

அவள் வேற ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த அன்புவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.. “இது மட்டும் தானா..?” என்று சாதாரணமாகக் கேட்டதும்,

“ம்ம் இவ்வளவு தான் இதுக்கு மேல் என்ன இருக்கு..?” என்று அவளும் தனது மனதை வெளிகாட்டாமல் மறைத்தாள் எழில்..

“நீங்க அடுத்து என்ன செய்ய போறீங்க..?” என்று சிரிப்புடன் கேட்டாள் எழில்..

“நானா..?! எங்கள் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன்..” என்று விளையாட்டாக சொல்லவும் அவளின் மலர்ந்த முகம் நொடியில் மாறிப்போனது..

அவளின் முகத்தைப் பார்த்தவன், “என்ன திடீரென்று அமைதியாக மாறிவிட்டாய்..?!” என்று கேட்டான்.. அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்..

அவள் அமைதியாக அமர்ந்திருப்பது பார்த்து, “என்ன எழில்..?” என்று கேட்டான் அன்பு.. அடுத்த நொடியே அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் விழிகள் அவனிடம் ஏதோ சொல்ல சொல்ல நினைத்து படபடவென்று அடிக்க, அதை சொல்ல வேண்டிய உதடுகளோ வார்த்தைகளை மறந்து மவுனமானது..

அவளின் விழிகளைப் பார்த்தவன், ‘இந்த விழியில் தானே என்னை நான் தொலைத்தேன்.. எதுவும் பேசாமல் விழியால் பேசியே என்னை களவாடிச் செல்கிறாள்..’ என்று அவனின் மனம் புலம்பியது.. அவன் இமைக்காமல் அவளையே பார்க்க அவனின் செல்போன் இசைத்தது.. அவனின் மனதில் இருப்பது பாடக் வரிகளாக மாறி வெளிப்பட்டது..

வேணா வேணா விழுந்துடுவேனா

கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

ஒரு முறை சிரிக்கிறாய்..

என் உயிரினை பறிக்கிறாய்..

கண்கள் இரண்டும் அணுகுண்டா

கத்தி கொண்ட பூச்செண்டா

இன்பமான சிறை உண்டா..?

ஈர விழியில் இடம் உண்டா..?

கடவுள் பூமி வந்தால்

உன் கண்ணைப் பார்க்க வேண்டும்..

மனிதன் பாவம் என்று

அவன் மறந்து போக வேண்டும்..” என்று பாடலின் வரிகள் கேட்டு அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.. அந்த புன்னகையில் அவளைப் பார்த்தவன், ‘பாடல் புரியுது இல்ல பதில் சொல்லு..’ என்று கேட்டதும் அவளின் விழிகள் தரையைப் பார்த்தது..

மீண்டும் நிமிர்ந்தவள் இருண்ட வானத்தைப் பார்த்து, “உங்களின் மனதில் உள்ள கேள்விக்கு நீங்க தான் பதிலையும், வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.. எனக்கு பதில் தெரியும்.. ஆனால் நான் சொல்ல மாட்டேன்..” என்று எழுந்து செல்ல அவளின் பின்னோடு எழுந்து சென்றான் அன்பு..

அதன்பிறகு அவளோடு வீட்டிற்கு வந்தவன், “எழில்..” என்று அழைத்தவன், காரின் கதவுகளைத் திறந்து, “உனக்கு என்றே வாங்கியது..” என்று அவளின் கையில் கிப்டைக் கொடுத்தான்..

அவளும் அதை வாங்கிக் கொள்ள, அவளிடம் பார்வையால் விடைபெற்றுக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றான்.. அவன் சென்ற பிறகு அவன் சென்ற வழி பார்த்து தனித்து நின்றாள் எழில்..!
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
பாருடா இதுக இரண்டும் பன்றத....ஹ்ம்....அது என்ன பரிசோ....இதுக என்னைக்கு காதலை சொல்லி எப்ப கல்யாணம் பன்னி எப்ப .......பாப்போம்...இருவரும் வாயால் பரிமாறும் காதலுக்காக வெயிட்டிங்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வாவ் செம செம... கவிதை சூப்பர்... வேணா வேணா விழுந்திடுவேணான்னு சொல்லியே விழுந்துட்டியே அன்பு ????.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top