• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! -24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அதில் மனம் மகிழ்ந்த அன்பு அவளைப் பார்த்து கண்ணடித்து கொட்டும் மழையில் அவளின் இதழ்களில் தேங்கி நின்ற மழை துளியைப் பார்த்தவன் கண்களில் இருந்த மாற்றத்தைப் புரிந்து அவளின் விழிகள் தனது இமைகளால் மூடிக்கொள்ள அவளின் கன்னங்கள் இரண்டும் வெக்கத்தில் சிவந்து விட்டது..

அவனின் கையணைப்பில் இருந்தவளுக்கு தன்னை பாம்பு தீண்டியது கூட மறந்தே போக பின்னாடி இருந்த வேப்பமரத்தின் மீது சாய்ந்தவளின் இதழோடு தனது இதழைப் பொருத்தினான் அன்பு..

அவளும் அவனின் கழுத்தோடு தனது கரங்கள் இரண்டையும் போட்டு அவனை வளைத்தாள் எழில்.. அவளின் இடையோடு கை கொடுத்து, அவளின் இதழ் தேனை அவளின் விழிகளைப் பார்த்த வண்ணம் பருக அவளின் உயிரை கொஞ்ச கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தது பாம்பு தீண்டியதில் இருந்த விஷம்..!

அவன் அவளின் இதழில் இருந்து இதழைப் பிரிக்க அவனின் மீதே மயங்கிச் சரிய ஆரமித்தாள் எழில்.. அதுவரை இருந்த மகிழ்ச்சி விடைபெற்றுச் செல்ல அவளைப் பார்த்து பயத்துடன், “எழில்.. எழில்..” என்று அவளின் கன்னம் தட்டினான் அன்பு..

அதில் கொஞ்சம் நினைவிற்கு வந்த எழில், “அன்பு.. அன்பு.. என்னைப் பாம்பு கொத்திவிட்டது.. நான் உன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்ட்டு இருக்கிறேன்..” என்று கண்ணீரோடு சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்துதான் போனான் அன்பு..

“ஏய் எழில் விளையாடாதே.. நிஜமாகவே உன்னை பாம்பு கொத்திவிட்டதா..?!” என்று பதட்டத்துடன் கேட்டதும், “உன்னிடம் நான் காதலைச் சொன்னது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு நான் இப்பொழுது செத்துக் கொண்டிருப்பதும் உண்மை அன்பு..” என்று சொல்ல அவனின் உயிர் அவனின் கையில் இல்லை..

உடனே அவளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று படுக்கையில் படுக்க வைத்து வெளிச்சத்தில் அவளின் காலை ஆராய்ந்தான் அன்பு.. அதில் பாம்பு தீண்டிய தடம் இருக்க பக்கத்தில் இருந்த துணியைக் கிழித்து அவளின் கால்களின் இறுக்கமாக கட்டியவன், “ஏண்டி என்னிடம் வந்ததும் சொல்லவில்லை..?!” என்று கண்ணீரோடு கேட்டான் அன்பு..

“அந்த பாம்பு கடிகளை என்றாலும் நானே சாகலாம் என்று தான் வந்தேன்.. உன்னை தவிர யாரையும் என்னால் மனதால் நினைக்க முடியாது.. நான் இருந்தால் தானே இந்த கல்யாணம் நடக்கும் அதுதான் சாகலாம் என்று நினைத்தேன்.. அதற்கு தகுந்தாற்போல் பாம்புக் கடித்துவிட்டது..” என்று இதழ்களை விரித்து அழகாக சிரித்தாள் எழில்..

அவளைத் தூக்கிச் சென்று காரில் முன்னாடி அமர வைத்து காரை ஸ்டார்ட் செய்தவன், “உனக்கு பார்த்த மாப்பிள்ளையே நான்தாண்டி .. உனக்கு திருமணமே என்னோடுதான்.. இந்த உண்மையைப் பாட்டி உன்னிடம் சொல்லக் கூடாது என்று சொன்னாதால் தான் அவங்களிடம் சண்டை போட்டுவிட்டு உன்னைப் பார்க்க வந்தேன்..” என்று கூறியவன்,

அவளின் விழிகளைப் பார்த்து, “அதற்குள் எல்லாத்தையும் முடித்துவிட்டாயே எழில்.. கொஞ்சமாவது என்னோட நினைவு உனக்கு இருந்ததா..?” என்று கேட்டான்..

அவன் அப்படி கேட்டதும், “அன்பு நிஜமாவா சொல்கிறாய்..?! உன்னோடு தான் எனக்கு திருமணம் என்று தெரிந்திருந்தால் நான் வந்ததும் உன்னிடம் உண்மையைச் சொல்லியிருப்பேன்..” என்று அவள் சொல்ல, அப்பொழுதுதான் அவளின் விழிகளை நன்றாக கவனிக்க அது அவளை மயக்கத்திற்கு அழைத்துச் செல்வது அவனுக்கு புரிந்தது..

அவன் காரை வேகமாகச் செலுத்த, அவனின் தோள்களில் சாய்ந்தவள், “ஓ இருந்ததே உன்னிடம் என்னோட காதலைச் சொல்லாமல் சாகக்கூடாது என்ற வேண்டுதல் நிறைய இருந்தது..” என்று கூறியதும் அவனுக்கு மனம் வலித்தது..

‘தனது மௌனம் அவளை எந்த நிலைக்கு அழைத்து வைத்திருக்கிறது..’ என்று அவனின் மனம் கதற, அவளோ அவனின் விழிகளில் வழிந்த கண்ணீர் தனது கைகளால் துடைத்து,

“என்னோட அன்பு எதுக்கும் கலங்க கூடாது..” என்று அவள் உயிர் போகும் நிலையில் சொல்ல, “சத்தியமா முடியலடி.. உன்னை நல்ல பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் நான் படித்தேன்.. உன்னை நினைத்து தான் இதுவரையில் இருந்தேன் இருக்கிறேன்..” என்று அவன் மனது மனதின் பாரத்தைக் கண்ணீரோடு சொல்ல,

“இப்பொழுதும் என்னை நினைத்தே இருக்கும் நீ எப்பொழுதும் என்னை நினைத்தே இருடா..” என்று அவள் சொல்ல, “அது என்னால் முடியாது.. நீ எனக்கு வேண்டும் நான் உன்னைக் காப்பாற்றியே தீருவேன்..” என்று அவன் சொல்லிய வண்ணம் வண்டியைச் செலுத்தினான்..

“இதுவரை நாம் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டிற்கு விதி கொடுத்த பரிசு அன்பு இது.. இப்ப என்னைக் கூட்டிட்டுப் போய் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறாயா அன்பு..?!” என்று அவள் அவனைப் பார்த்து கேட்டதும் அவளைத் திரும்பிப் பார்த்த அன்பு,

“நீ இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது எழில்.. உன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னையும் சேர்த்து உன்னோடு அழைத்துப்போய்விடு..” என்று அவளின் வலது கையோடு தனது இடது கையைக் கோர்த்துக் கொண்டவன் மின்னல் வேகத்தில் வண்டியைச் செலுத்தினான்..

அவனின் கையைப் பற்றிக் கொண்டவள் அவனின் தோளில் சாய்ந்து கொள்ள அவள் கொஞ்ச கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.. அது இரவு நேரம் என்பதால் சாலையில் அதிகமாக எந்தவிதமான வண்டியும் இல்லாமல் இருக்க அரைமணி நேரத்தில் அவளை மருத்துவமனையில் சேர்த்தான் அன்பு..

அவளைப் பார்த்த மருத்துவரிடம் உண்மையைச் சொல்ல, அவளை பரிசோதித்த டாக்டர், “பாம்பின் விஷத்தின் அளவு அவர்கள் உடலில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.. பாம்பு கொஞ்சம் ஆழமாகவே அவர்களைக் கடித்திருக்கிறது.. எதுவாக இருந்தாலும் அந்த பெண்ணைக் காப்பாற்றுவது கொஞ்சம் கடினம்.. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம்..” என்று சொல்ல அன்புவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

அவன் அப்படியே அங்கிருந்த சேரில் அமர, அவனின் நினைவுகள் அனைத்தும் அவளைத் தேடியே பயணித்தது.. முதல் முதலாக நித்தியமல்லி செடியுடன் பேசியபடி நின்ற எழில்.. தன்னிடம் வந்து தயக்கத்துடன் வகுப்பிற்கு செல்ல வழி கேட்ட எழில்.. ஆஷாவிற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்ட எழில்.. அவனை நன்றாக படிக்க சொல்லிய எழில் என்று அவனை சுற்றிலும் எழில் நினைவுகள்..

‘எழில்.. எழில்.. எழில்..’ அவன் கண்மூடி அமர்ந்தான்.. அவனுக்கு மற்ற யாரின் நினைவுகளும் அவனின் உயிர் காதலி கண்திறந்தால் அதுவே போதும் அவனுக்கு..!

வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தகவல் சொல்ல வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் அமர்ந்திருந்தான் அன்பு.. அவளுக்கு உள்ளே ட்ரீட்மெண்ட் நடக்க இவன் அறைக்கு வெளியே தனக்கு முன்னாடி ஒரு உலகம் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அமர்ந்திருந்தான்..

அன்பு சென்று வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்று ஜெயந்திம்மா அவனையும், எழிலையும் விழிகளால் தேடிய வண்ணம் வாசலில் அமர்ந்திருக்க மழை பொழிய ஆரமித்தது..

‘சரி மழை நின்ற பின் இருவரும் வருவார்கள்’ என்று தன்னை தேற்றிக்கொண்டு தனது வேலையைக் கவனிக்க ஆரமிக்க மணி இரவு பத்து ஆனது.. பதினொன்று ஆனது.. பண்ணிரண்டும் ஆனது.. ஆனால் எழில் எழில் – அன்பு இருவரும் வரவே இல்லை.. மழை நிற்காமல் பொழிந்தது..

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த பாட்டியைப் பார்த்துவிட்டு மணியைப் பார்க்க அது பத்து என்று காட்டியது அவர்கள் இருவரும் சென்ற நேரத்தில் இருந்து கணித்தவன் எழில் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று கிளம்பி தனது பைக்கை எடுத்து எழில் வீட்டை நோக்கிச் செல்ல, அவனைக் கடந்து சென்றது அன்புவின் கார்..

அந்த காரைப் பார்த்த அறிவு, ‘இது அண்ணனின் கார்..?!’ என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு அந்த காரைப் பின்தொடர அது மருத்துவமனையில் நின்றதும் அறிவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது..

அதுவும் அன்பு எழிலை இரு கைகளில் தாங்கிய வண்ணம் தூக்கிச் செல்வதைத் தொலைவிலிருந்து பார்த்தவன் மருத்துவமனைக்குள் விரைந்து செல்ல அங்கே அன்புவிடம் மருத்துவர் பேசிய அனைத்தையும் கேட்டவன் அன்பைப் பார்க்க அவன் உலகம் என்ற ஒன்றை மறந்து அமர்ந்திருப்பது பார்த்து அறிவின் கண்களும் கலங்கியது..

உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அப்பாவிற்கு அழைத்தான்.. யாரும் எடுக்கவே இல்லை என்றதும் கோபத்தில் கால்களைத் தரையில் உதைத்த வண்ணம், மீண்டும் சென்று வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..

மற்றவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அங்கே அன்பு – எழில் இருவரையும் யாரும் தேடவே இல்லை.. ஆனால் நேரம் ஆக ஆக அன்பு – எழில் இருவரையும் தேட ஆரமித்தனர் அனைவரும்..

அவர்கள் ஜெயந்திம்மாவிடம் கேட்டதும், “அன்பு எழிலை அழைத்துவர எழில் வீட்டிற்கு சென்றான்..” என்று சொல்ல அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் அவர்களை நினைத்து சந்தோசம் அடைய,

அப்பொழுது அங்கே வந்த அறிவு, “பாட்டி எழிலுக்கு பாம்பு கடித்துவிட்டது.. அவள் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர் சொல்றாங்க..” என்று கண்ணீரோடு கூறியதும் அங்கிருந்த அனைவரின் தலையிலும் இடி விழுந்தது போல ஆனது..

“அன்பு..” என்று அனைவரும் கேட்டதும், “அண்ணா பித்துப்பிடித்தவன் போல இருக்கிறான்..” என்று சொல்ல அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.. எல்லோரையும் கண்ணீர் கடலில் மூழ்கடிக்கும் எழில் கண்விழிப்பாளா..? அன்புவின் அன்பும், எழிலின் காதலும் கை கூடுமா..?! அவர்களின் பாசம் விதியை வெல்லுமா..?!
Omg enapa ipd panitengalepa ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top