Unathu Vizhiyil Tholainthen Penne! - 26 (Final - 2)

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் – 26 [பாகம் – 2]

அன்பு – எழில், ஆதி – ஆஷா, இளா – இனியா மூன்று காதல் பறவைகளும் சேர்ந்து இன்னொரு காதல் பறவைகளான அறிவு – மதியழகி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து நான்கு ஜோடிகளும் சென்னையை செல்ல அவர்களை அனந்த கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர் ஜெயந்திம்மா, தனலட்சுமி, மஞ்சு மூவரும்..

எழில் மட்டும் தான் ரொம்பவே அழுதாள்.. அவளின் இரண்டு அம்மாவையும், உயிர் தங்கையையும் பிரிவது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுக்க அவளை அரவணைத்து சமாதானம் செய்து அன்போடு அவளை வழியனுப்பி வைக்க தியாகு – சுமித்ரா கண்கள் கூட கலங்கியது.. சென்னை வந்ததும் அவரவர் வேலையில் அனைவரும் ஈடுபட, அன்புவின் வீட்டில் அழகாக பொருந்திப் போயினர் எழில் மற்றும் மதியும்...!

மதிக்கு எழில் இடம் இருந்த பொறுமையும், அமைதியும் பிடித்துப் போக, ‘அக்கா.. அக்கா..’ என்று அவள் பின்னோடு சுற்றிவர வீட்டில் யாரை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் எதை எப்படி செய்ய வேண்டும் என்று அனைத்தையும் அவளுக்கு ஒரு அக்காவாக இருந்து கற்றுக் கொடுத்தாள் எழில்..

ஜெயந்திம்மா, தனம் இருவரும் அடிக்கடி போன் செய்து அவளை விசாரிக்க, மாலை வேலை முடிந்து அன்பு வரும் பொழுது அவனுடன் இணைந்து வரும் ஆதி – ஆஷா இருவரும் வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டு தான் செல்வார்கள்.. தியாகு – சுமித்ரா இவர்கள் செய்யும் சேட்டைக் கண்டு மனம் விட்டு சிரித்து சந்தோசத்தில் திளைப்பர்..

சிலநாளில் இனியாவும் தனது கணவனுடன் வந்து அந்த பூஞ்சோலை கிளிகளுடன் சேர்ந்து சந்தோசமாக இருப்பாள்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், ஆஷா இப்பொழுது சூப்பராக சமைப்பாள்..

அவளின் சமையல் சாப்பிடவே அங்கே அனைவரும் தவம் இருக்கும் அளவிற்கு அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடுத்தாள் எழில்.. அன்பு இப்பொழுது எல்லாம் மௌனமொழி, விழிமொழி எல்லாம் பேசுவது கிடையாது.. அவன் மனதில் நினைப்பதை முதலில் எழிலிடம் சொல்லிவிட தன்னோட காதலை ஒவ்வொரு இடத்திலும் நிலை நாட்டினான்..!

அவளும் அவனுக்கு சளைக்காமல் பதில் கொடுத்து அனைவரையும் காதல் மொழியை இப்படி தான் பேச வேண்டும் அழகாக கற்றுக் கொடுக்க அதை கற்றுக் கொண்டனர் அனைவரும்..!

நாட்கள் அழகாக அதே அளவு ஆனந்தமாகச் செல்ல அன்று மருமகள் இருவருடன் சேர்ந்து சமையல் செய்துக் கொண்டிருந்த சுமித்ரா,

“எழில், மதி..” என்று இருவரையும் அழைக்க காலையிலேயே குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இருவரும், “இதோ வருகிறோம் அம்மா..” என்று குரல் கொடுக்க, அவர்கள் இருவரையும் செல்லமாக முறைத்தார் சுமித்ரா..

அவர் பார்வை கண்டு இருவரும் முழிக்க, “நான் உன்னிடம் என்ன சொல்லி இருக்கிறேன்.. என்னை அத்தை என்று கூப்பிடு என்று சொல்லிருக்கிறேனா...? இல்லையா..?” என்று எழிலைப் பார்த்து கேட்டதும், “ஸ்ஸ்ஸ்..” என்று நாக்கைக் கடித்த எழில்,

“இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் அத்தை..” என்று சொல்ல, “சரிம்மா உங்கள் இருவரிடமும் நானும், மாமாவும் ஒரு விஷயம் பேசணும்.. அதுக்கு முன்னாடி என்னோட மகன்கள் இருவரையும் இங்கே அழைத்து வாருங்கள்..” என்று சொல்ல இருவரும் தங்களின் அறைக்கு சென்றனர்..

தங்கள் அறைக்கு சென்ற எழில் படுக்கையைப் பார்க்க அதில் நன்றாகத் தூக்கிக் கொண்டிருந்தான் அன்பரசன்.. அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.. அவனின் அருகில் சென்றவள்,

“அன்பு இன்னும் என்ன தூக்கம் எழுந்திரிங்க..” என்று அவனைத் தட்டி எழுப்ப, அவளின் கையைப் பிடித்து இழுத்து அவளைத் தனது மார்போடுப் போட்டுக் கொண்டவன், அவளின் இதழில் இதழ் பதித்து நிமிர்ந்து, “குட் மார்னிங்..” என்று சொல்ல,

“எருமை காலையில் எழுந்ததும் குளிக்காமல் என்ன சேட்டை செய்கிறாய்..” என்று அவனின் மார்பில் அவள் பொய்யாக அடிக்க, “சும்மா நடிக்காதே எழில்.. நீயும் ரசித்தாய் என்று எனக்கு தெரியும்..” என்று அவன் குறும்பாகச் சொல்ல, அதுக்கும் சேர்த்து அவளிடம் வாங்கிக் கொண்டான்..

அப்பொழுது தான் அவளுக்கே ஞாபகம் வந்து, “ஐயோ அத்தை உங்களை அழைத்துவர சொன்னாங்க.. எழுந்திரிங்க..” என்று அவள் சொல்ல, “ம்ம் சரிடி இன்னும் ஒன்னு தா..” என்று அவன் படுத்துக் கொண்டு அவளிடம் பேரம் பேச, “மாமா விளையாடாதே.. எழுந்திரி..” என்று அவள் சொல்ல,

அந்த வார்த்தைக் கேட்டு, “இந்த வார்த்தை சொல்லியே என்னை ஒரு வழி பண்ணு..” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், “நான் குளித்துவிட்டு வருகிறேன்..” என்று பாத்ரூம் உள்ளே சென்றான்..

எழிலுக்கு இது ஒரு வசதி.. அன்பிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால், ‘மாமா..’ என்று அழைத்தாலே போதும், அந்த காரியம் ஜெயம் தான்..

அவன் சென்றதும் தனது அறையைவிட்டு கீழே வர, மதியும் சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.. இருவரும் கீழே இறங்கிச்சென்று தங்களின் வேலையைக் கவனிக்க, “அவங்க இருவரும் எங்கே..?” என்று கேட்டார் தியாகு..

“வருவாங்க மாமா..” என்று குரல் கொடுத்தவர்கள் காலையில் செய்ய வேண்டிய சமையல் வேலையில் ஈடுபட, அன்பு, அறிவு இருவரும் கீழே வந்து சோபாவில் அமர, மருமகள் இருவரையும் அழைத்தார் சுமித்ரா..

தங்களின் வேலையை முடித்துவிட்டு இருவரும் ஹாலிற்கு வந்து நிற்க, நால்வரையும் பொதுவாகப் பார்த்த தியாகு, “நானும், அம்மாவும் கொஞ்ச நாள் கிராமத்தில் போய் இருக்கலாம் என்று இருக்கிறோம் அன்பு..” என்று சொல்ல மற்ற நால்வரும் அதிர்ந்தனர்..

“என்னப்பா திடீரென்று இப்படி சொல்றீங்க..?!” என்று அறிவு கேட்டதும், “எனக்கும், உன்னோட அம்மாவிற்கும் கொஞ்ச நாள் பாட்டி கூட இருக்கணும் என்று நினைக்கிறோம்..” என்று அவர் நிறுத்த, “எனக்கும் என்னோட அத்தையுடன் இருக்கணும் போல இருக்குடா..” என்று வாக்கியத்தை முடித்தார் சுமித்ரா..

அதற்கு அவர்களைப் பார்த்து அன்பும், அறிவும் சிந்திக்க, “அத்தை நாங்க இருவரும் ஏதாவது தப்பு செய்துவிட்டோமா..?” என்று கேட்டாள் மதி..

அதைக்கேட்டு நிமிர்ந்த சுமித்ரா, “எனக்கு அமைந்த மருமகள் இருவரும் தங்கம்.. அவங்க எதிலும் தப்பு செய்ய மாட்டார்கள்..” என்று சொல்ல, “அப்புறம் ஏன் அம்மா திடீரென்று இந்த முடிவு..?” என்று கேட்டான் அன்பு..

“இது நாள் வரையில் நான் இங்கே இருந்தது உங்கள் இருவரின் படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் நினைத்துதான்.. அதுதான் இப்பொழுது வீட்டைப் பார்த்துக் கொள்ள இருவர் வந்துவிட்டார்கள்.. எனக்கு எந்த வேலையும் இல்லை.. அதுதான் நான் கொஞ்ச நாள் என்னோட அத்தை வீட்டில் அதுவும் எனக்கு பிடித்த கிராமத்தில் கொஞ்சநாள் இருக்கலாம் என்று இருக்கிறோம்..” என்று சொல்ல அதுவரை நடப்பதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எழில்,

“அத்தை நீங்களும் மாமாவும் கிராமத்துக் போறீங்க என்றால் என்னையும் அங்கே கூட்டிட்டு போங்க..” என்று சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டு மற்ற நால்வரும் அதிர, அன்பு கொஞ்சம் அதிகமாகவே அதிர்ந்தான்..

இந்த வார்த்தையை எழிலிடம் இருந்து அவன் சுத்தமாக எதிர்பார்க்காததால், அவளை அதிகமான அதிர்வுடன் பார்த்தான் அன்பு.. அவளோ தன்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையில் நிற்க, “நீ எதுக்குமா அங்கே..?” என்று கேட்டார் தியாகு..

“மாமா உங்களிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் அதை சொல்லும் தருணம் எனக்கு சரிவர அமையவில்லை..” என்று சொல்ல, “என்ன விஷயம் எழில்..?” என்று கேட்டார் தியாகு..

“மாமா இதை உங்களிடம் பேசக்கூடாது தான் இருந்தாலும் என்னோட நிலையை நீங்க அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்..” என்று சொல்ல அவள் என்ன சொல்ல போகிறாள் என்று கவனித்தனர் அனைவரும்..

“மாமா நான் இங்கே வருவதற்கு முன்னாடி விவசாயம் தான் செய்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.. இப்பொழுது அந்த வேலையை விட்டுவிட்டு உங்களின் பின்னோடு வந்தது எனக்கு மனதிற்கு வருத்தமாக இருக்கிறது..” என்று சொல்ல அவளை இழுத்து சோபாவில் அமர வைத்த அன்பு,

“நீ எதுக்கும் தயங்காமல் சொல்ல வேண்டிய விஷயத்தை தயங்காமல் சொல்லு..” என்று சொல்லவும் அதில் சந்தோசம் அடைந்தவள் தனது மனதில் இருப்பதை சொல்ல ஆரமித்தாள்..

“மாமா எனக்கு இங்கே இருக்கவே விருப்பம் இல்லை..” என்று நேரடியாக அவள் சொல்லவும், “ஏன் எழில்..” என்று மற்றவர்கள் அதிர அன்புவோ அவளின் கண்களைப் பார்த்தான்..

“அங்கே என்னோட செடிகள் ஒவ்வொன்றையும் குழந்தை போல வளர்ந்துவிட்டு இங்கே வந்ததும், அதற்கு சரியான நேரத்தில் தண்ணி விடுக்கின்றனரா..?! அவை செழிப்புடன் இருக்கிறதா..?! என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள்..” என்று சொல்ல அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க அன்பு அவளை அமைதியோடு பார்த்தான்..

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “என்னடா இதுக்கு எல்லாம் வருந்துகிறாள்.. அதுக்கு தனியாக ஆள் வைத்துவிட்டாள் வேலை முடிந்தது..” என்று எளிமையாகத் தீர்வு சொல்ல,

“அப்பா அவள் சொல்ல வந்த விஷயத்தை அவள் இன்னும் முழுவதும் சொல்லவில்லை..” என்று தந்தையிடம் சொன்னவன், “ம்ம் நீ சொல்லு எழில்..” என்று அவள் சொல்ல வருவதை ஊக்கிவிக்கும் அளவில் சல்ல கணவனைப் பார்த்தவள்,

“என்னால் விவசாயத்தை விட முடியாது.. எனக்கு விவசாயம் என்னோட உயிர் மூச்சு மாதிரி.. என்னை நம்பி அங்கே பல குடும்பங்கள் இருக்கிறது.. அதனால் நான் ஊருக்கு சென்று விவசாயம் செய்ய போகிறேன்..” என்று தைரியமாகக் கூறினாள் எழில்.. அவள் இப்படி சொல்வாள் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை அன்பைத் தவிர..!
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அதைக் கேட்ட சுமித்ரா, “அதில் நீ சம்பாரித்து இங்கே சாப்பிடும் நிலையில் யாரும் இல்லடா..” என்று சாதாரணமாக சொல்லவும், “ஆனால் என்னோட இயற்கை காய்கறிகளை நம்பி பல குடும்பம் இருக்கிறது அத்தை..” என்று கூறினாள் எழில்..

இதுவரை சுமித்ராவின் பேச்சிற்கு மறு பேச்சு பேசமாட்டாள் எழில்.. அவளா இப்படி பேசுவது என்று மதியே யோசிக்க, “நாம் எல்லோரும் கைநிறைய சம்பாரித்தாலும் நாம் அனைவரும் விவசாயின் பின்னோடு தான் போகிறோம்..” என்று சொல்ல அனைவரும் அவளையே பார்த்தனர்..

“என்னோட இத்தனை வருட உழைப்பு வீணாவதை என்னால் பார்க்க முடியாது..” என்று அவள் சொல்ல, அதுவரை அமைதியாக இருந்த அறிவு, “அண்ணி நீங்க சொல்வது உண்மை தான் இல்லையென்று நான் சொல்லவில்லை.. ஆனால் இப்பொழுது சரிவர பருவமழையும் வருவதில்லையே..?!” என்று கேட்டதும், “பருவமழை எல்லாம் சரியாக பொழிகிறது வழக்கத்தை விடவும் அதிகமாக பொழிகிறது.. ஆனால் அதை பயன்படுத்ததான் இப்பொழுது யாரும் தயாராக இல்லை..” என்று சொல்ல,

“இப்பொழுது நீ என்னம்மா சொல்ல வருகிறாய்..?!” என்று கேட்டார் தியாகு.. அவரைப் பார்த்த எழில், “மாமா நான் கிராமத்தில் பிறந்து கிராமத்தில் இயற்கை சூழலில் வளர்ந்தே பழகிவிட்டேன்.. எனக்கு இந்த நகரத்தில் கிடைத்தாலும் அந்த பசுமையை இங்கே பார்க்கவும், உணரவும் முடியவில்லை..” என்று கூறியவள்,

“நான் அதிகம் படிக்கவில்லை.. ஆனால் விவசாயத்தில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்று நான் நல்ல படித்திருக்கிறேன்.. எனக்கு அதில் கிடைக்கும் வருமானம் முக்கியம் இல்லை.. என்னோட கணவர் சம்பாரிக்கும் வருமானத்தைவிட அதில் வரும் வருமானம் குறைவு தான் நான் ஒத்துக் கொள்கிறேன்.. அதற்காக என்னை நம்பி இருக்கும் பல விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க எனக்கு மனம் இல்லை..” என்று சொல்ல அனைவரும் திகைக்க, அன்பு அவளை புரிதலோடு பார்த்தான்..

“இப்பொழுது விவசாயம் அழியும் கடைசி கட்டத்தில் இருக்கிறது.. அதேபோல பெண்கள் யாரும் விவசாயம் செய்வது கிடையாது.. அதே ஒரு பெண் விவசாயி ஆன நானும் அப்படியே இருக்க முடியாது.. எனக்கு என்னோட மண் ரொம்ப முக்கியம்.. இப்பொழுதே விவசாயிகள் தங்களின் நிலத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு வர ஆரமித்துவிட்டார்கள்..” என்றவள் ஒருநிமிடம் நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,

“அதே தப்பை நானும் செய்ய தயாராக இல்லை.. என்னோட முடிவு இதுதான் நான் கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய போகிறேன்..” என்று தனது இறுதி முடிவை மிகவும் தெளிவாகக் கூறினாள் எழில்..

அவள் கூறியது கேட்டு அனைவரும் திகைப்பில் ஆழ்ந்திருக்க, “எனக்கு பிறகு என்னோட குழந்தைகளுக்கு நான் அதைக் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன்..” என்று கூறியவளை பார்த்த அறிவு கடைசியாக ஒன்றை மட்டும் கேட்டான்..

“அண்ணி நீங்க சொல்வதில் இருக்கும் உண்மை எங்கள் எல்லோருக்கும் புரிகிறது.. ஆனால் இதற்கு இயற்கை எப்படி ஒத்துழைக்கும்..?” என்று கேட்டதும் அவனைப் பார்த்து சிரித்த எழில்,

“இயற்கையாக வலியெடுத்து குழந்தை பிறப்பதே இப்பொழுது ஆப்ரேஷன் என்று ஆகிவிட்டது.. இதில் இயற்கை எப்படி எனக்கு ஒத்துழைக்கும் என்று கேட்கிறாயா அறிவு..?” என்று கேட்டவள்,

“நானும் இயற்கையைப் பற்றி படித்திதிருக்கிறேன் என்று சொன்னேன் இல்லை.. அதில் ஒரு முக்கியமான விஷயம் மரங்கள்.. மரங்கள் நமக்கு நிழல் மட்டும் தருவது கிடையாது.. அது காற்றை சுத்தம் செய்து கார்மேகங்களையும் அதுதான் உருவாக்குகிறது.. அதிகம் மழை பொழியும் இடத்தை நீ பார்த்தால் அங்கே மரங்கள் தான் இருக்கும்..” என்று கூறியவள்,

“மரங்கள் இயற்கை அன்னையின் செல்ல குழந்தைகள் அவங்களைத் தான் நாம் இன்று கொன்று கொண்டிருக்கிறோம்.. எந்த அன்னையாவது தன்னோட குழந்தைக்கு பசி என்றால் மனம் இறங்காமல் இருப்பாளா..? அதேபோல மரத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று நினைத்து தனது கிளைகளை அசைத்தாலே போதும் கார்மேகம் ஒன்று கூடி மலையைக் கொடுக்கும்..” என்றவள் அனைவரும் வாயடைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்து,

“குழந்தைகளையே கொன்றுவிட்டு இயற்கை அன்னை சதி செய்கிறாள் என்று சொன்னால் நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்.. என்னால் இயற்கையை விட்டு இங்கே என்னை தொலைத்து ஒரு ஜடமாக இருக்க முடியாது..” என்றவள் அனைவரையும் பார்த்து,

“எனக்கு எப்பொழுது என்னை சுற்றி இயற்கை எழில் இருக்க வேண்டும்.. காலையில் எழுப்புவதே குயிலின் ஓசையாக இருக்க வேண்டும்.. பார்க்கும் இடம் எல்லாம் மலர்களாக பூத்து குலுங்க வேண்டும்.. கொய்யா பழத்திற்கு சண்டை போடும் அணில்களின் கூட்டம் இருக்க வேண்டும்..” என்று தனது மனதில் உள்ளது அனைத்தையும் அருவியாக கொட்டித் தீர்த்தாள் எழில்..

அதில் எல்லோரும் வாயடைத்து அமர்ந்திருக்க அன்பு மட்டும் கைதட்டினான்.. அவன் கை தட்டுவதைப் பார்த்தவள், அன்பின் பக்கம் திரும்பி, “அன்பு என்னால் உங்களை பிரிந்திருக்க முடியாது.. நீங்க எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்..” என்று அமைதியாகக் கூறினாள் எழில்..

அவளின் அருகில் வந்தவன் அவளின் விழிகளைப் பார்த்து, “நாம் கிராமத்திற்கு போகலாமா..?!” என்று தனது மொத்த நேசத்தையும் கண்களில் தேக்கிக் கேட்டான் கணவன்..

அவனின் விழிகளை நம்பாமல் அவள் பார்க்க அவனின் கண்களில் தெரிந்த உண்மை கண்டு, “அன்பு..” என்று அவனின் தோளில் சாய்ந்து ஆனந்த கண்ணீர் விட்டாள் எழில்..

அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டவன், “நீ எதுக்கும்மா அழுகிறாய்..? நான் இருக்கும் பொழுது நீ எதுக்கும் கலங்க கூடாதுடி..” என்று கூறியவன்,

தனது தாய் – தந்தை பக்கம் திரும்பி, “என்னோட மனைவி விருப்பம் தான் எனது விருப்பமும்..! அவளுக்கு விவசாயம் பிடித்திருக்கிறது என்றால் அதை செய்ய நான் தடை சொல்லவே மாட்டேன்..” என்றவன், “ஒருவர் தனது சுயத்தை இழந்து மற்றவருக்காக வாழ்வது என்பது யாராலும் முடியாத காரியம்..” என்று மனைவியின் மனதைப் புரிந்துக் கொண்டு கூறினான் அன்பரசன்..

“எதுக்காகவும் யாருக்காகவும் அவள் தனது சுயத்தை இழந்து நிற்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. அவள் பணத்திற்கு ஆசைபடவில்லையே..! இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும் என்று தானே கேட்கிறாள் இதற்கு யாரும் தடை சொல்ல கூடாது..” என்று சொன்னவன்,

எழில் முகத்தை தனது மார்பில் இருந்து பிரித்து அவளின் கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டவன், “அம்மாடியோ என்ன பேச்சு பேசுகிறாய்.. வக்கீல் பொண்டாட்டி என்று நிரூபித்துவிட்டாய் செல்லம்..” என்று சொன்னவன்,

“வீட்டையே நீதிமன்றமாக மாற்றி இயற்கைக்காக நீதிபதிகளான அப்பா, அம்மாவிடம் வாதாடுகிறாய்.. இதில் எதிர் கட்சி வக்கீலுக்கு நல்ல மூக்குடைப்பு.. ம்ம் சூப்பர் செல்லம்! நல்லவேளை நான் உன்னை கேள்வி கேட்கவில்லை கேட்டிருந்தால் என்னையும் சேர்ந்தது புலம்ப வைத்திருப்பாய்..” என்று சந்தோசமாகச் சொல்லி அவளின் முகத்தைப் பார்த்தவன், அவள் கண்கள் கலங்கி இருந்தாலும் அவன் கூறியதைக் கேட்டு அவள் இதழ்கள் புன்னகையில் விரிய, அவனையே பார்த்தாள் எழில்..

அவளின் விழிகளைக் கண்டவன், “இவனுக்கு அங்கே என்ன வேலைக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறாயா..?” என்று கேட்டதும், “இல்ல நீங்க அங்கே வந்து எப்படி வக்கீல் தொழில் செய்ய முடியும் என்று யோசிக்கிறேன்..” என்று அவள் கேட்டதும், “நீ இப்பொழுது தானே உன்னோட விருப்பத்தை சொல்லி இருக்கிறாய் இன்னும் ஒரு வாரத்தில் இதற்கு நான் பதில் சொல்கிறேன்..” என்று அவன் கூற,

அப்பா, அம்மாவின் பக்கம் திரும்பிய அறிவு, “அம்மா இவன் சரியான ஆளும்மா.. அண்ணி இந்த அளவிற்கு பேசுவாங்க என்று எனக்கு தெரியவே தெரியாது.. இப்படி வக்கீல் மனைவி என்பதை எப்படி நிரூபித்து விட்டார்கள் பாருங்கள்.. இவன்களுக்காக அண்ணன் துடிப்பதில் தப்பே இல்ல..” என்று கூறவும்,

அன்புவையும், எழிலையும் பார்த்த தியாகு, “உன்னோட விருப்பம் நீ எதை வேண்டுமாலும் செய்.. நாங்கள் உனக்கு துணை இருக்கிறோம்..” என்று சொல்ல, அவர் சொல்வதைக் கேட்டு எழில் பக்கம் திரும்பிய அன்பு, “தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வந்திருக்கிறது..” என்று சிரிக்க அவளும் சிரித்தாள்..

எழில் அருகில் வந்த மதி, “அக்கா நீங்க பெயரில் தான் எழில் என்று வைத்திருக்கீங்க என்று நினைத்தேன்.. இல்ல அக்கா இயற்கை என்னும் எழில் மீது உயிரையே வைத்திருக்கீங்க என்று இப்பொழுது உங்களைப் பார்த்தும் புரிகிறது..” என்று அவளைக் கட்டிக்கொண்டாள்..

கடைசியில் தியாகு – சுமித்ரா, அன்பு – எழில் இவர்கள் கிராமத்திற்கு செல்வதாக முடிவை மற்ற இருவரும் ஏற்றுகொள்ள ஆஷா, ஆதி இருவரிடமும் தங்களின் முடிவைக் கூறினார் அன்பும், எழிலும்..!

அன்பு சொல்லிய ஒரு வாரம் ஒரு நொடி போல் சென்று மறைய, ஆதி ஆஷாவை வீட்டிற்கு வர செய்த அன்பு அவர்கள் இருவரும் வந்ததும், “இனிமேல் ஆபீஸை நீங்க இருவரும் பார்த்துக் கொள்ளுங்கள்.. முக்கியமான கேஸில் நான் வாதாட வேண்டும் என்று என்று சொன்னால் எனக்கு தகவல் கொடுங்க.. இனிமேல் ஆபீஸ் உங்களின் பொறுப்பு..” என்றவன் அறிவிடம், “நீ எப்பொழுது போல தொழிலைப் பார்த்துக்கொண்டு இங்கே இரு அறிவு.. மதி நீதான் இந்த வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று மற்ற பொறுப்புகளை அறிவு, மதி இருவரின் கையிலும் ஒப்படைத்தான்..

தன்னோட தொழிலை திருச்சிக்கு மாற்றிக் கொண்டான் அன்பு.. வக்கீல் எங்கு சென்றாலும் கவலை இல்லை.. அவர்கள் வாதாடும் ஊர் மட்டும் வேறுபடும்..! அவர்கள் எல்லோரும் அன்று ஊருக்கு கிளம்ப, அவர்களை வழியனுப்ப வந்தனர் இளாவும் இனியாவும்..!

அவர்கள் எல்லோரும் கிளம்ப சுமித்ரா அருகில் வந்த ஆஷா, “அம்மா இங்கே ஒரு மகள் இருக்கிறேன் என்பதை மறக்காதீங்க.. எதுவாக இருந்தாலும் எனக்கு தகவல் வரணும்.. நானும் அங்கே அடிக்கடி வருகிறேன்..” என்று சொல்ல,

“நீ எப்பொழுது வேண்டுமாலும் அங்கே வா.. உன்னை யார் வேண்டாம் என்று சொல்வது..” என்று கூறியவர், மதியின் அருகில் வந்தவர், “அறிவை பத்திரமாகப் பார்த்துக்கொள்.. உனக்கு எங்களைப் பார்க்க வேண்டும் என்றால் போன் பண்ணுடா..” என்று சொல்ல “சரிங்க அத்தை..” என்று கூறியவள்,

எழில் அருகில் சென்று, “அக்கா நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.. என்னோட செல்ல அக்கா..” என்று எழில் கன்னத்தில் முத்தம் பதித்தவள் நொடிபொழுதில் அழுதுவிட, அவளை சமாதானம் செய்தாள் எழில்..!

அந்தபிறகு அனைவரும் கிளம்ப எப்பொழுதும் போல தனது வழக்கமான குறும்புடன், “எல்லோரும் ஊருக்கு போறீங்க.. இனிமேல் நாம் எப்படி சந்திக்க போகிறோமோ..? வாங்க எல்லோரும் ஹோட்டல் போய் சாப்பிட்டுவிட்டு போகலாம்..” என்று அவள் சொல்ல, ‘என்னோட பர்ஸ்க்கு வெட்டு வைக்கிறாள்..’ என்று அவளை முறைத்தான் ஆதி..

அதைப்பார்த்து அனைவரும் சிரிக்க, ‘சும்மா விளையாடினேன்..’ என்று அவனைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் ஆஷா.. அதன்பிறகு அவர்கள் கிராமத்திற்கு கிளம்பிச் சென்றனர்..

அவளின் விழியில் தொலைந்தவன் அவளின் மனதில் இருக்கும் நியமான ஆசையை நிறைவேற்ற தன்னோட இடத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு, விழியால் காதல் மொழியைப் பேசும் பெண்ணுக்குள் தன்னை தொலைத்து அவளின் ஆசையை நிறைவேற்ற கிராமத்தை நோக்கி பயணிக்கிறான் அவளின் காதல் கணவன் அன்பரசன்..

காதல் என்பது மற்றவரிடம் மனதை தொலைப்பது மட்டும் அல்ல.. மற்றவரின் விருப்பம் உணர்ந்து தன்னையே அவர்களுக்காக மாற்றிக் கொள்வது.. அன்பு அவளின் காதலை உணர்ந்து தன்னையே நம்பி வந்த எழிலுக்காக அவளின் பின்னோடு அன்போடும் காதலோடும் செல்கிறான்..!

நாமும் அவர்கள் காதலை வாழ்த்தி சந்தோசமாக விடைபெறுவோம்..!
 

Aparna

Author
Author
#5
வாழ்த்துகள் சந்தியா இரண்டு நல்ல கதையை கொடுத்தீங்க.. மேலும் மேலும் நிறைய கதை எழுதி சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துகள்
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top