• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 7

இயற்கையும் ஒரு தோழிதான் நமக்கு என்ன வேண்டும் என்பதை நம்மைவிட அதிகம் அறிந்து வைத்திருக்கும்.. தென்னை மரத்தின் சலசலக்கும் ஓசை கூட இல்லை.. அந்த இடம் பசுமையாக இருந்தாலும் இவளுக்காக அமைதியாக இருக்கிறது..

தென்னந்தோப்பின் வழியாக மெல்ல வீட்டை நோக்கி நடந்தவள் மனம் மௌனம் கொள்ள அங்கிருந்த இயற்கை அவளின் மனதின் நிலை அறிந்து பெரிய அமைதியை பரிசாக அளித்தது..

எழில்விழி காலிலும், கையிலும் இருக்கும் வளையலும் கொலுசும் மட்டும் இசைபாட சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தவண்ணம் வர, எங்கிருந்த கூவிய குயிலின் ஓசையில் மனதை தொலைத்தவள்,

குயிலே கவிக்குயிலே

யார் வரவை தேடுக்கிறாய்..?

மனசுக்குள் ஆசை வைத்த

மன்னன் வந்தானா..?

குயிலே கவிக்குயிலே

யாரை எண்ணிப் பாடுகிறாய்..?

உறவுக்கு அர்த்தம் சொல்ல

கண்ணன் வந்தானா..?

என்ற பாடலைப் பாடிய வண்ணம் வந்தவள் அவளுக்கு பத்தடி தூரத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணைப் பார்க்க அவளோ இவளை கவனிக்காமல் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்க அந்த பெண்ணைப் பார்த்தும் இவங்க வெளியூர் என்பதை உணர்ந்தவள் அவளின் அருகில் சென்றாள்..

அவளின் அருகில் சென்றவள் அவளின் உடையை அளவெடுத்தாள். பிளக் கலர் லேகீன்சும், யெல்லோ கலர் டாபும் அணிந்திருந்தாள் அந்த பெண்.. முடியை மட்டும் ஸ்டைலாக ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.. இவள் அருகில் செல்ல செல்ல அவளோ தனக்குள் பேசுவது குரல் எழில் காதில் நன்றாகவே விழுந்தது..

“அப்பா அப்போவே சொன்னாரு.. தனியாக போகாதே ஊர் எல்லாம் மாறி போய்விட்டது உனக்கு வழி தெரியாது என்று சொல்லும் பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..” என்று தனக்குள் புலம்பியவள் அருகில் கொலுசு சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் தனக்குள் புலம்புவதைக் கேட்ட எழில் சிரிப்புடன், “நீங்க யார் வீட்டுக்கு செல்ல வேண்டும்..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டதும் அவளைப் பார்த்து ஒரு மர்ம புன்னகையை உதிர்த்தாள் அந்தபெண்..

அவளின் புன்னகையைக் கண்டதும் எழில் மனதிற்குள், ‘இந்த புன்னகை எனக்கு ரொம்பவே பழக்கப்பட்ட ஒருவரின் புன்னகை போல தெரிகிறது..’ என்று நினைத்தவள் அவளின் முகத்தை உற்றுப்பார்த்தாள்.. ஆனாலும்கூட அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும், ‘யார் என்று தெரியல..’ என்று நினைத்தவள்,

அவளைப் பார்க்க அவளோ, “இங்கே எனக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு இருக்கு.. இதுவரை நான் இங்கே வந்தது இல்லை.. என்னை அவங்க வீடுக்கு கூட்டிட்டு போக முடியுமா..?” என்று எழில் இடம் உதவி கேட்டாள் அந்தப்பெண்..

“ம்ம் உங்களிடம் முகவரி இருந்த கொடுங்க..” என்று கேட்டாள் எழில்விழி.. அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்த அந்த பெண்ணைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..

“வாங்க நடந்துக் கொண்டே பேசலாம்..” என்று அழைத்த அந்த பெண்ணுடன் நடக்க ஆரமித்தவள், “எதுக்கு தெரியாத ஊருக்கு தனியாக வரீங்க..” என்று கேட்டாள் எழில்விழி..

“தெரிந்தவங்களைப் பார்க்க தெரியாத ஊருக்கு வரவேண்டி இருக்கிறதே.. நான் என்ன பண்ணறது..?” என்று எதிர் கேள்வி கேட்டவளின் கேள்வியில் இருந்த குறும்பை உணர்ந்தவள்,

“நீங்க முகவரியை சொல்லுங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று சொல்ல அவளைப் பார்த்து சிரித்த அந்தப்பெண்,

“முகவரி எல்லாம் எனக்கு தெரியாதுங்க.. என்னோட தோழி சொன்ன முகவரி இதுதான்..” என்று சொன்னவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த எழில்விழி

அவளின் மனதிற்குள், ‘இந்த விளையாட்டு தனம் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரே நபர் ஆஷா.. இவள் ஆஷாவாக இருப்பாளோ..?’ என்று யோசித்தவள் அந்த இடத்தில் நின்றுவிட, அவள் நின்றதை கவனிக்காத அந்தப்பெண்,

“அயலூரில் வந்த இறங்கி சுந்தரத்தின் மகள் எழில்விழி அல்லது முத்துகுமாரின் தங்கை எழில் என்று யாரை கேட்டாலும் சொல்வாங்க என்று சொன்னாள்..” என்று கூறியவள் இவளின் கொலுசின் ஓசை கேட்காது நின்று திரும்பிப் பார்த்தாள்

அவள் நின்ற இடத்திலேயே கண்கள் கலங்க உதடுகள் துடிக்க அவளைப் பார்த்தவள், “ஆ..ஷா..” என்று அழைக்க, அவளும் புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைக்க மகிழ்ச்சியில் சிலையென நின்றுவிட்டாள்..

தனது பிறந்தநாள் அன்று பிரிந்து சென்ற உயிர் தோழியை சந்திப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. அதுவும் ஆஷா அவளிடமே வந்து அவளின் முகவரியைக் கேட்டது அவளுக்கு இன்னமும் ஆனந்தத்தை வாரி வழங்க அப்படியே நின்றுவிட்டாள்..

உடனே அவளின் அருகில் சென்ற ஆஷா, “ஏய் எழில்.. என்னடா இதுக்கு எல்லாம் கண்ணு கலங்குகிறாய்..” என்று அவளின் கண்ணீரைத் துடைத்துவிட கையில் இருந்த கட்டபையை கீழே தவறவிட்டவள், ஆஷாவின் தோளில் சாய்ந்து அழுதே விட்டாள்..

அவளின் கண்ணீரைப் பார்த்து ஆஷாவின் விழிகளும் கலங்க தலையை மெல்ல வருடிக் கொடுத்தவள், “என்ன எழில் என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை தானே..?” என்று சிரிப்புடன் கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டு, அவள் ஆமாம் என்று தலையசைந்தாள்..

அவள் கண்கள் இருந்தும் கண்ணீரில் மிதக்க, உதட்டில் புன்னகை பூவாக மலர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவளை பழையபடியே மாற்ற நினைத்தவள்,

“எழில் வரும் பொழுது என்ன பாட்டு பாடிட்டு வந்த..? குயிலே கவிக்குயிலே வா..? அது யார் நீ மனதிற்குள் ஆசை வந்த மன்னன்..?” என்று குறும்பாகக்கேட்டு கண்ணடித்தவளைப் பார்த்து,

“ஏய் எரும எப்போ எதில் விளையாடுவது என்று உனக்கு தெரிய வேண்டாமா..? இப்படி தீடிரென வந்து நின்று என்னைப்பற்றி என்னிடமே விசாரித்து விளையாடுகிறாய்..” என்று அவள் காலுக்கு அடியில் இருந்த குச்சியை எடுக்க குனிந்த எழில்விழியின் தலைக்கு மேல் கரத்தை குவித்து சிலைபோல நின்ற ஆஷா,

“என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுது உண்டு மகளே..” என்று ஆசிர்வாதம் செய்ய, “எனக்கு ஆசிர்வாதமா செய்கிறாய் இருடி உனக்கு இருக்கிறது..” என்று குச்சியை எடுத்தவள்,

அவளை அடிக்க துரத்த, “ஐயோ என்னோட எழில் ரொம்ப அமைதியான பொண்ணு என்று ஊர் முழுக்க சொன்னது அனைத்தும் பொய்யா..? இப்படி பத்திரகாளி மாதிரி அடிக்க துரத்துகிறாள்.. இதை கேட்க யாரும் இல்லையா..? என்னை காப்பாற்ற யாரும் இல்லையா..?” என்று தோப்பிற்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடினாள்..

“உன்ன காப்பாற்ற யார் வராங்க என்று நானும் பார்க்கிறேன்..” என்று அவளைத் துரத்திக்கொண்டு அவளின் பின்னோடு ஓடியவள் அந்த வழியே வந்த யாரோ மீது பலமாக மோதி கீழே விழப்போனவள் கொஞ்சம் சுதாரித்து நின்றவள்,

அவள் இடித்த வேகத்தில் கீழே விழப்போனவன் விழாமல் சரியாக நின்று அவளைப் பார்க்க அவளின் தாவணியோ அவனின் முகத்தை வருடிவிட்டு அவன் அவளின் முகத்தைப் பார்ப்பதற்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் அந்த தோப்பை விட்டே சென்றுவிட்டிருந்தாள்.. இவை அனைத்தும் நொடிபொழுதில் நடந்து முடிந்தது.. இருவருமே மற்றவர் முகத்தைக் காணவில்லை..

காலையில் சென்னையில் அன்னையுடன் ஷாப்பிங் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் அன்புவிற்கு அழைப்பு வர, அழைப்பது யார் என்று தெரிந்ததும் அவனின் முகம் தானாக மறந்தது..

“இனியா என்னடா காலையில் கால் பண்ணி இருக்கிறாய்..? இன்னைக்கு ஸ்கூல் போகல..?” என்று கேட்டதும் அவனின் முகத்தைப் பார்த்த சுமித்ரா,

“அண்ணனுக்கும் தங்கைக்கும் வேற வேலையே இல்லையா..?” என்று கேட்டதும், அன்பு சிரிக்க

அவரின் குரலை எதிர்புறம் இருந்து அவர் சொன்னதைக் கேட்ட இனியா, “அம்மா எங்க மேல கண்ணு வைக்காதீங்க.. நான் என்னோட அண்ணனுடன் பேசுகிறேன்..” என்று சொல்லவும், சுமித்ரா கையில் போனை கொடுத்தான் அன்பரசன்..

“ம்ம் பேசு.. பேசு..” என்று சுமித்ரா அன்புவிடம் சொல்ல, நீங்க பேசுங்க என்று சைகை செய்தவன் காரை ஓட்ட ஆரமித்தான்..

அவனிடம் இருந்து போனை வாங்கிய சுமித்ரா, அம்மா, அப்பா, பற்றியெல்லாம் கவலையில்லை அண்ணா தான் எல்லாம் இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு எல்லோரையும் பிடிக்கும் அம்மா..” என்று இனியா சொல்ல சுமித்ரா சிரித்தார்..

“ஹப்பா அம்மா சிரிச்சிட்டாங்க..” என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக கூறியவள்,
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அம்மா அண்ணா கையில் போனை கொடுங்க..” என்று கூறியதும் மகனிடம் போனை கொடுத்த சுமித்ரா,

“இந்த உன்னிடம் தான் பேசணுமாம்..” என்று கொடுக்க காரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன்,

“சொல்லு இனியா என்ன விஷயம்..?” என்றான்..

அவன் அப்படி கேட்டதும், “அண்ணா உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது..” என்று சொல்லவும் அன்னையுடன் ஷாப்பிங் செய்து முடிந்த கையோடு அவர்களை வீட்டில் விட்டவன்,

“அம்மா நான் தங்கையைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, “அன்பு இப்பொழுது எப்படி முடியும்..?” என்று கேட்ட சுமித்ராவிற்கு புன்னகையைப் பதிலென கொடுத்தவன்,

“ம்ம் முடியும் அம்மா.. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல இனியாவிற்காக எடுத்த புதுத்துணியை அவனின் கையில் கொடுத்து,

“இது இனியாவிற்கு எடுத்தது கண்ணா அவளிடம் கொடுத்துவிடு..” என்று சொல்லவும் அன்னையைப் பார்த்து சிரித்தவன்,

“ம்ம் சரிம்மா..” என்று வாங்கிக் கொண்டவனைப் பார்த்து சிரித்த சுமித்ரா, “உன்னோட தம்பிக்கு என்ன பதில் சொல்லட்டும்..?!” என்று கேட்டதும்,

“நான் தங்கையைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.. இன்னொரு முறை இனியாவைப் பார்க்க போகும் பொழுது அவனையும் கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லுங்க.. அப்பாவிடமும் சொல்லிவிடுங்க..” என்று கூறியவன் தங்கையைப் பார்க்க கிளம்பி சென்னை ஏர்போர்ட் வந்தவன் திருச்சிக்கு பிளாட்டில் சென்றான்.

அங்கிருந்து காரில் சென்றவன் அயலூர் வந்ததும் தங்கள் வீட்டிற்கு செல்லும் இடம் வந்ததும், காருக்கு காசைக் கொடுத்து அனுப்பியவன், மெல்ல இறங்கித் தோப்பிற்குள் நடக்க ஆரமித்தான்..

அவனின் சிந்தனை எங்கோ இருக்க அவன் அந்த வழியை வேடிக்கைப் பார்த்தவண்ணம் வந்துக் கொண்டிருக்க, “என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க..” என்று குரல்கேட்டு தனது பார்வையை சுழற்றினான்..

அவன் வரும் திசையில் ஓடிவந்த ஆஷா அவனைக் கடந்து சிரிப்புடன் ஓட அவளைப் பார்த்தவன், “இவள் என்ன இப்படி சிரித்துக் கொண்டே ஓடுகிறாள்..? இவளா காப்பாத்துங்க என்று குரல் கொடுத்தது..?” என்று ஆஷா சென்ற திசையைப் பார்த்து தனக்குதானே கேட்டுக்கொண்டே திரும்பியவன் மீது வந்து பலமாக மோதினாள் எழில்விழி..

அவள் இடித்ததில் கொஞ்சம் தடுமாறிய அன்பரசன் சுதார்த்து நிற்கும் முன்னே, அவரின் முகத்தைப் பார்க்காது, “நான் தான் கவனிக்காமல் வந்து உங்களை இடித்துவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள்..” என்று கத்திக் கொண்டே ஆஷாவைத் துரத்திக்கொண்டு சென்றுவிட்டாள் எழில்விழி..

எழில் இருந்த சந்தோஷத்தில் தான் யாரை இடித்தோம் என்பதைக் கூட கவனிக்காமல் போக அவளின் முகத்தைப் பார்க்க நினைத்தவன்,

அவள் சென்ற திசையைப் பார்த்து, “இந்த பொண்ணு ரொம்ப சந்தோசமாக இருக்கிறாள் போல அதுதான் இடித்து நின்று ஸாரி கேட்க கூட நேரம் இல்லாமல் யாரையோ துரத்திக் கொண்டு ஓடுகிறாள்..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட அன்பரசன் தனது பாட்டியையும் தங்கையையும் பார்க்க தோப்பிற்குள் புகுந்து நடக்க ஆரமித்தான்..

[ஐயோ அன்பு நீ சரியான லூசு.. உன்னை இடித்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடுபவள் தான் உன்னோட எழில் என்பது உனக்கே தெரியல..?! எல்லாம் காலத்தின் கொடுமை]

கொஞ்சம் தூரம் சென்றதும் அவனின் கண்ணில் அந்த கட்டப்பை படவே, ‘இது யாரோடது..’ என்று மனதில் நினைத்தவன், அதில் இருந்த துணியை பார்த்தும்,

“இது அந்த பொண்ணோட பை போல.. இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்..” என்று நினைத்தவன், அதை உடன் எடுத்துக் கொண்டு அவனின் பாட்டியின் வீட்டை நோக்கி நடக்க ஆரமித்தான்..

எதுக்கோ வாசலுக்கு வந்த இனியா அன்பரசன் வருவதைப் பார்த்து, “பாட்டி அண்ணா வந்துவிட்டான்..” என்று வீட்டிற்குள் குரலைக் கொடுத்துவிட்டு அண்ணனை நோக்கி ஓடினாள்.. இனியா தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து, “இன்னைக்கு என்ன எல்லோரும் ஓட்டிடே இருக்கிறீங்க..?” என்று கேட்ட அண்ணனை வேற்று கிரகவாசியைப் பார்ப்பது போல பார்த்தாள்.

“யார் ஓடியதைப் பார்த்தீங்க சார்..” என்று இடுப்பில் கையூன்றி அவனை முறைத்துப் பார்த்தாள் இனியா. அவளைப் பார்த்த

“ம்ம் இப்போதான் இந்த தோப்பில் இரண்டும் பெண்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள்..” என்று அவன் சொல்லவும் அவனின் முகத்தைப் பார்த்த இனியா,

“அது யாரு அண்ணா நம்ம தோப்பில் ஓட்டப்பந்தயம் வைத்தது..?” என்று கேட்டவள் அவனின் கையில் இருந்த கட்டபையைப் பார்த்துவிட்டு, “அண்ணா இந்த பை உன்னிடம்..?” என்று சந்தேகம் கேட்டாள் இனியா..

“ம்ம் வரும் பொழுது சொன்னேன் இல்லை இரண்டு பெண்கள் ஓடியதைப் பார்த்தேன் என்று அதில் இருந்த இருவரின் ஒருவரின் பைதான் என்று நினைக்கிறேன்..” என்று அவளின் கையில் கொடுக்க அப்பொழுது வெளியே வந்த ஜெயந்திம்மா

“டேய் அன்பு என்னடா தீடிரென்று வந்து நிற்கிறாய்..?” என்று கேட்டவர் அவனின் கையில் இருந்த பையைப் பார்த்து, “இதை யார் உன்னிடம் கொடுத்தது..?” என்று கேட்டதும்,

“நீங்க இருவரும் இந்த பையில் தான் கவனமாக இருக்கிறீங்க.. வரும் வழியில் கீழே கிடந்தது..அதுதான் எடுத்துட்டு வந்தேன்.. எப்படியும் இந்த பையைத் தேடி அவர்கள் இங்கே தான் வர வேண்டும்.. அப்படி வந்தாள் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்..” என்று இனியா கையில் கொடுத்தவன் வீட்டிற்குள் சென்றான்..

அவன் உள்ளே செல்லவும், “பாட்டி இது எழிலுக்கு நாம் கொடுத்தது.. இதை எப்படி மறந்தாள்.. கையில் வைத்திருக்கும் பொருள் தவறியது கூட தெரியாமல் ஓடி இருக்கிறாள் என்றால் அவளுக்கு ஏதாவது பிரச்சனையா..?” என்று பாட்டியைப் பார்த்து கேட்டாள்..

“தெரியல கண்ணம்மா.. ஆனால் இந்த பையைத் தேடி அவள் வருவாள்..” என்று ஜெயந்திம்மா வீட்டிற்குள் செல்லும் முன்னரே,

“ஜெயந்திம்மா..” என்று மூச்சிரைக்க ஓடி வந்தாள் எழில்விழி.. அவளின் முகத்தைப் பார்த்த இருவருக்கும் அவளின் முகத்தில் இருந்த சந்தோசம் அவர்களுக்கு வியப்பைக் கொடுத்தது..

அவளைப் பார்த்தும் முகம் மலர்ந்த இனியா, “என்ன எழில் உனக்கு கொடுத்த புதுத்துணியைக் காணவில்லையா..?!” என்று சிரிப்புடன் கேட்டதும்,

“ம்ம் அதை இங்கேயே விட்டுட்டு போயிட்டேன் போல வீடுவரை போய்விட்டு மறுபடியும் வருகிறேன்..” என்று சொல்ல அவளின் சந்தோசம் கண்டு,

“என்னம்மா இன்னைக்கு இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்..?” என்று பாசத்துடன் கேட்டார் ஜெயந்திம்மா..

“என்னோட தோழி என்னைப் பார்க்க வந்திருக்கிறாள் ஜெயந்திம்மா.. நான் அப்புறம் வந்து நடந்ததைச் சொல்கிறேன்..” என்று இனியாவிடம் பையை வாங்கியவள் ஓடிவிட்டாள்..

அவள் சென்றதும் ஜெயந்திம்மாவைப் பார்த்த இனியா, “ஆகமொத்தம் அன்புவும் எழிலும் சந்திக்கவே இல்லை.. அண்ணா கையில் பையைப் பார்த்தும் நான் தான் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தேன்.. கடைசியில் இரண்டும் சந்திக்கவே இல்லையா..?!” என்று ஏமாற்றத்துடன் கூறியவள் வீட்டிற்குள் சென்றாள்..

“நாம் என்னதான் அவர்களை சந்திக்க வைக்க நினைத்தாலும் அது நாம் நினைக்கும் பொழுது நடக்காது.. அது நாம் எதிர்பாராத தருணத்தில் அது தானாகவே நடக்கும்..” என்று சொல்லிவிட்டு அவளின் பின்னோடு வீட்டிற்கு நுழைந்த ஜெயந்திம்மா,

“அன்பு வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்று கேட்டதும், “ம்ம் எல்லோரும் நல்ல இருக்காங்க பாட்டி..” என்று கூறியவன்,

“இனியா எதுக்கு அண்ணாவைப் பார்க்கணும் என்று கூறினாய்..?” என்று கேட்டான்.. அவனை அழைத்தான் காரணம் சொல்லாமல், “இந்த வாரம் ஊரில் திருவிழா.. அதுதான் உன்னைப் பார்க்கணும் என்று வர வைத்தேன்..” என்று கூறினாள்

“அம்மாவிடம் நான் சாயந்திரம் வருகிறேன் என்று சொல்லிட்டு வந்திருக்கிறேன்..” என்று சொல்ல, “நான் அம்மாவிடம் சொல்கிறேன்.. இந்த வாரம் நீ இங்குதான் இருக்கிறாய்..” என்று சொல்ல

“என்னமோ பண்ணுங்க..” என்று கூறியவன், “பாட்டி இந்தாங்க” என்று அவர்கள் கையில் ஒரு பார்சலைக் கொடுக்க, “என்ன அன்பு இது..?” என்று கேட்டார்..

“நீங்க கேட்ட நாவல் தான் எல்லாம் இருக்கு பாட்டி..” என்று கூறியவன் அவனது அறைக்கு செல்ல, இனியாவும் அவளின் அறைக்கு செல்ல ஜெயந்திம்மா அமைதியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றார்..
 




Last edited:

GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai sis,

Romba arumaiyannae Pathivu Sis. ...:):D:)
Anbu ,Ezhillin eyesah parthirruintha kandupidithirpaenno?...
waiting for ur nxt update sis. ..(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top