Unathu Vizhiyil Tholainthen penne! - 9

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் – 9

மறுநாள் காலை எழுந்த இனியா தனது அன்னைக்கு போன் செய்து, “அம்மா அண்ணா இங்கே ஒரு வாரம் இருக்கட்டும்..” என்று சொல்ல,

“இனியா அண்ணனுக்கு கவுன்சிலிங் லெட்டர் வந்ததும் அவனை ‘லா’ காலேஜ் சேரனும் கண்ணா.. அன்புவை இங்கே அனுப்பிவிடும்மா..” என்று அவர் சொல்ல,

“இந்த வருடம் ஊர் திருவிழாவிற்கு அண்ணா வந்திருக்கிறான்.. இன்னும் இரண்டு நாள் கழித்து அனுப்புகிறேன் அம்மா..” என்று அவளும் செல்லம் கொஞ்சினாள்..

அன்னையிடம் இருந்து போனை வாங்கிய அறிவு, “உனக்கு சின்ன அண்ணா முக்கியம் அல்ல.. பெரிய அண்ணாவை மட்டும் அங்கே வரச்சொல்லி விட்டு இப்பொழுது செல்லம் கொஞ்சுகிறாயா..?” என்று கோபம் போல கேட்டது அவனின் அருகில் வந்து அமர்ந்த தியாகராஜன்,

“டேய் அவளை திட்டாதே.. உனக்கு இது பன்னிரண்டாம் வகுப்பு அதில் கவனம் செலுத்து மற்றதை அப்புறம் பார்க்கலாம்..” என்று கூறியவர், அலைபேசியை அவனிடம் இருந்து வாங்கினார்..

“இனிய செல்லம் உன்னோட அண்ணா அங்கே இருக்கட்டும்.. ஆனால் கவுன்சில் லெட்டர் வந்ததும் அவனை இங்கே அனுப்பனும்..” என்று சொல்ல,

“என்னோட ஸ்வீட் டாடி.. தேங்க்ஸ் அப்பா.. கவுன்சில் லெட்டர் வந்தும் சொல்லுங்க அண்ணாவை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியவள்,

“அப்பா சின்ன அண்ணா பாவம் அவனை திட்டாதீங்க.. அவனும் அன்பு அண்ணா போல என்மேல் பாசம் அதிகம் வைத்திருக்கிறான்.. அண்ணா கோபத்தில் சொல்லியிருக்காது.. அண்ணாவிற்கு என்னை பார்க்க வர முடியவில்லை என்று வருத்தம் அதுதான்..” என்று சொல்ல அவள் சொல்வதை கேட்ட அறிவுமதி,

“இனியா செல்லம் அண்ணா விளையாட்டு அப்படி சொன்னேன்.. உன்மேல் எனக்கு என்னம்மா கோபம்..?” என்று பாசத்துடன் கேட்ட மகனைப் பார்த்த பெற்றோர் முகமும் மனமும் நிறைந்தது..

தங்களின் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் இருப்பதை நினைத்து அவர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.. பிறகு பாட்டியிடம் பேசியவன் போனை வைக்க பெரியவர்கள் தங்களின் வேலையை கவனித்தனர்..

இனியா தான் சொன்னது படியே அவளின் அன்னையிடம் பேசி கோவில் திருவிழாவிற்கு அண்ணனை அங்கேயே இருக்க வைத்தாள்..

ஆஷா அன்று ஒருநாள் மட்டும் எழில்விழி வீட்டில் தாங்கியவள் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு கிளம்பியவள்,

“ஆஷா கிளம்புகிறாயா..?” என்று வருத்ததுடன் கேட்டவளின் அருகில் வந்த ஆஷா, “எழில் வருத்தபடாமல் இரு.. நான் இங்கே கோயம்புத்தூர் ‘லா’ காலேஜில் தான் சேரப் போகிறேன்.. முடிந்த வரை உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன்..” என்று சொல்லி அவளை தேற்றியவள்,

“இது என்னோட மொபைல் நம்பர்.. என்னிடம் நீ எப்பொழுது வேண்டுமாலும் பேசு சரியா..?” என்று கூற அவளும் மலர்ந்த முகத்தோடு தலையசைக்க,

“சரி எழில் நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவள் தனது பையைத் திறந்து ஒரு பரிசு பொருளை கொடுத்தாள் அதை வாங்கியவள்,

“இதில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டதும், “பிரித்துப் பார் உனக்கே தெரியும்..” என்று சொல்ல, அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு மொபைல் போன் இருக்க,

“இது எதுக்கு எனக்கு..?” என்று கேட்டவளின் தலையில் கொட்டியவள், “இது உனக்கு கண்டிப்பாகத் தேவை.. நீ இதைப் பத்திரமாக வைத்துக் கொள் எழில்.. உனக்கு நான் பேசணும் என்றால் இதில் தான் பேசுவேன்.. இதை உன்னோட அண்ணன் கையில் மட்டும் கொடுத்துவிடாதே..” என்று எச்சரித்தவள், தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு சென்றுவிட்டாள்..

காலையிலேயே மாரியம்மன் கோவிலில் திருவிழா சாட்டப்பட்டு அடுத்தடுத்து கோவிலில் வேலைகள் நடக்க அந்த ஊரில் பெரிய குடும்பம் என்ற சார்பில் ஜெயந்தியம்மாவும் கோவிலில் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்..

மூன்று நாள் கழித்து கோவில் திருவிழா நாளும் அழகாக விடிந்தது.. அன்புவிற்கு எழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் இன்னும் அங்குதான் இருக்கிறாளா..? இல்லை வேறு ஊரில் படிகிறாளா..? என்று மனதில் ஆயிரம் குழப்பங்களை சுமந்த வண்ணம் இருந்தான்..

இனியா மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தாள்.. அன்பு பட்டு வேஷ்டி, சிவப்பு கலர் சர்ட்டி பார்க்க மாப்பிள்ளை போல இருந்தான்.. இனியா கேட்கவே வேண்டாம் பட்டுப்பாவாடை தாவணியில் அழகு தேவதை போல இருந்தாள்..

ஜெயந்தியம்மா தனது பேரன் பேத்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.. அங்கே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட, எல்லோரும் குழவை இட்டு பொங்கல் வைக்க எல்லா மாமன் முறை பசங்களும் அத்தை பொண்ணை சைட் அடிக்கவே திருவிழாக்கு வந்திருந்திருந்தனர்..

காலையில் கோவில் திருவிழாவிற்கு கிளம்பிய எழில்விழி, அண்ணனின் வீட்டிற்கு சென்று, “அண்ணி நீங்க கோவிலுக்கு வரீங்களா..?” என்று கேட்டதும் வெளியே வந்த தனம்,

“இல்லடா அண்ணி வரலடா.. நீ போயிட்டு வா..” என்று சொல்லியவள், “மஞ்சுவை என்னிடம் கொடுத்துவிட்டு போடா..” என்று சொல்ல,

“இல்லங்க அண்ணி அண்ணா வந்த இவளையும் அடித்தாலும் அடிப்பான்.. நானே அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “மாமா எங்கே எழில்..?” என்று கேட்டாள் தனம்..

“அப்பா உரம் வாங்க போயிருக்கிறார் அண்ணி..” என்று கூறியவள், “சரிங்க அண்ணி கோவிலில் பொங்கல் வைக்க நேரம் ஆச்சு.. நான் போயிட்டு வருகிறேன் அண்ணி..” என்று கூறியவள்

மஞ்சுவை அழைத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்க அவளைப் பார்த்த தனம் அவளின் தலையில் பூவில்லாது கண்டு வீட்டின் உள்ளே சென்று கட்டிவைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து வந்து, “எழில் கொஞ்சம் நில்லும்மா..” என்று கூற அண்ணியின் குரல் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள் எழில்விழி..

அவளின் பின்னோடு ஓடிவந்த தனம், “இந்த கோவிலுக்கு போற பிள்ளை தலைக்கு பூ வைக்காமல் போகிறாயே..” என்று அவளின் தலையில் மல்லிகை பூவை வைத்துவிட்டு அவளை திருப்பி நிறுத்து அழகு பார்த்தவள்,

“ஐயோ என்னோட கண்ணே பட்டுவிடும் போல..” என்று அவளுக்கு தனம் அவளுக்கு திஷ்டிப் போட்டு வைத்துவிட்டு மஞ்சுவின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளும் தனத்திற்கு முத்தம் பதித்துவிட்டு,

“எழில் கொஞ்சம் பார்த்து சூதனாக இருக்கணும்.. அடுப்பு எரியும் பொழுது முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிட்டு வேலையைப் பாரு.. சாமியை நல்ல வேண்டிக்க, மஞ்சுவையும் பத்திரமாக பார்த்துக் கொள்.. நீ வீடு வரும் வரையில் எனக்கு பதட்டமாக இருக்கும் பார்த்து பத்திரமாக போயிட்டு வரணும்.. மஞ்சு பத்திரம்.. நீயும் பத்திரமாக இருடா..” என்று எழிலுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள் தனம்..

அவளிடம் அறிவுரை கேட்டவள், “சரிங்க அண்ணி நானும், பாப்பாவும் பத்திரமாகப் போயிட்டு வருகிறோம்..” என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்றாள்..

எழில்விழி ஆரஞ்சு கலர் நிறத்தில் சேலை கட்டி, தலைமுடி இடையோடு இசைந்தாட அந்த கூந்தலில் மல்லிகை பூயும் மலர்ந்து மனம் வீச, கண்ணுக்கு மையிட்டு எழில் அழகிய ஓவியம் போல வர கிராமத்து மனங்கள் அனைத்தும் அவளின் காலடியில் விழுந்தது.. அந்த அளவான ஒப்பனைக்கே இளவட்டங்களின் கண்கள் அவளை வட்டமிட, அந்த விழியலகியோ அவர்கள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை..

அவளும் பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று அவளின் அருகில் மஞ்சுவை அமர வைத்தவள், “மஞ்சு குட்டி சமத்த உட்காத்திருப்பாங்கலாம்.. அக்கா பொங்கல் வைத்து முடித்ததும் இருவரும் சாமி கும்பிட போகலாம் என்று சொல்ல அரிசிப்பல் தெரிய சிரித்தவள்,

“ததி இக்க..” என்று சொல்ல அவளின் கன்னத்தில் முத்தம் இட்டவள் அவளின் அருகில் அமர்ந்து பொங்கல் வைக்க எல்லாம் எடுத்து வைத்தாள்.. அவளின் பின்னோடு வந்த இனியா எழிலைப் பார்த்து,

“எழில் செல்லம் இவ்வளவு அழகாக இருக்கிறாயே..” என்று அவள் பேரு மூச்சு ஒன்றை வெளியிட, அவளை நிமிர்ந்து பார்த்த எழில்,

“எதுக்கும்மா இந்த அளவிற்கு மூச்சை விடுகிறாய்..?” என்று கேட்டுகொண்டே பொங்கல் பானையையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தாள்..

“பெருமூச்சு விடாமல் என்ன செய்ய..? என்னால் அது மட்டும் தான் செய்ய முடியும்.. இப்பொழுது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கிறது..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..

“நான் ஏன் ஆணாகப் பிறக்கவில்லை என்று..” என்று அவள் குறும்பாகக் கண்சிமிட்டிக் கூற, “அடியே இது கோவில்..” என்று எழில் இனியாவின் முதுகில் ஒன்று போட கலகலவென்று சிரித்த இனியா அவளிடம் வம்பிழுத்துக் கொண்டு பொங்கல் வைத்தனர்..

அன்பு நடப்பதை கவனிக்காமல் ஏதோ வந்தோம் கோவிலில் சாமி கும்பிட்டோம் போவோம் என்ற நிலையில் இருந்தான். இனியா பொங்கல் வைக்க நமக்கு இங்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டிருக்க அவனின் அருகில் வந்த ஜெயந்திம்மா,

“என்ன கண்ணா தனியாக நிற்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இங்கே எந்த நட்பு வட்டாரமும் இல்லையே.. அதுதான் பாட்டி வேற ஒன்றும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க,

“இருங்க பாட்டி அப்பா கூப்பிடுகிறார் என்ன என்று கேட்டு வருகிறேன்..” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.. தனது பேரனைப் பார்த்தவர் முகம் அவனுடன் எழிலை ஒப்பிட்டுப் பார்த்தது..
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
எழிலன்பு இருவரும் சேர வேண்டும் என்பது அவரின் மனதில் இருக்கும் நெடுநாள் ஆசை.. அவர்களுக்கு திருமணம் செய்யும் அளவிற்கு வயது இன்னமும் ஆகவில்லை.. அதேபோல சுமித்ராவைப் போல எழிலும் ரொம்ப நல்லபெண்..

இவரின் மனதில் இருக்கும் ஆசை வட்டமிட, முதலில் பேரன் படிப்பை முடிக்கட்டும் அதன்பிறகு அவனிடம் பேசலாம் என்று அமைதியாக இருந்தார்..

“அப்பா திடீரென்று போன் பண்ணிருக்கீங்க..? என்ன விஷயம் அப்பா..?” என்று கேட்டான்

“அன்பு உனக்கு வக்கீலுக்கு சேர கவுன்சிலிங் லெட்டர் வந்திருக்கிறது.. நாளைக்கு கவுன்சிலிங் என்ன பண்ண போகிறாய்..?” என்று கேட்டார்..

“நாளையே கவுன்சிலிங்கா..?” என்று யோசித்தவன், “அப்பா நான் காலையில் சென்னை வந்து விடுகிறேன்.. நீங்க நேர யுனிவர்சிட்டிக்கு வந்துவிடுங்க..” என்று அவன் தந்தையிடம் பேசிவிட்டு வேறு சில விஷயங்கள் பேசிவிட்டு அலைபேசியை வைக்கவும்,

‘நாளை ஊருக்கு போகிறோம்’ என்று அவன் நினைக்க அவனின் மனதில் அவளின் முகமே வந்து நின்றது.. அவனின் மனம் முழுவதும் எழில் முகமே வட்டமிட இனியா பொங்கல் வைத்து முடித்ததும்,

“அண்ணா வா சாமி கும்பிட போலாம்..” என்று அழைக்க அவளுடன் சென்றான் அன்பரசன்..

அனைவரும் சாமி கும்பிட கோவிலுக்குள் சென்று அம்மன் சந்நிதியில் நின்றவன் மனதில், ‘சாமி நாளை நான் ஊருக்கு போகிறேன்.. அதன்பிறகு படிப்பு முடித்து விட்டு தான் இங்கே வருவேன்.. என்னோட எழிலை ஒரே முறை நான் பார்க்க வேண்டும்..’ என்று அவன் வேண்டிக்கொள்ள,

இனியா மனதில், ‘சாமி என்னோட அண்ணாவிற்கு திருமணம் சென்று ஒன்று நடந்தால் அது எழில் அண்ணியுடன் தான் நடக்க வேண்டும்.. அதை நடத்தி வைப்பது உன்னோட பொறுப்பு..’ என்று வேண்டிக்கொண்டாள்..

ஜெயந்திம்மா அவரின் மனதில், ‘தெய்வமே எதுவாக இருந்தாலும் உன்னோட அருள் இன்றி எதுவும் நடக்காது.. இவர்கள் தான் வாழ்க்கையில் சேர வேண்டும் என்றால் இருவரையும் சந்திக்க வை..’ என்று வேண்டிக் கொண்டார்..

அவரவர் மனதில் இருப்பதை வேண்டிக் கொண்டு வெளியே வந்தனர்.. ஆனால் மூவரும் ஒற்றுமையாக வேண்டிக் கொண்டதைப் பார்த்து அந்த தெய்வம் இவர்களைப் பார்த்து சிரித்தது..

சாமி கும்பிட்டுவிட்டு முதலில் வெளியே வந்த இனியா எழில் முகத்தில் இருந்த பதட்டம் பார்த்து, “என்ன எழில்..? ஏன் பதட்டமாக இருக்கிறாய்..” என்று கேட்டதும்,

“பொங்கல் வைக்கும் வரையில் அருகில் இருந்த மஞ்சு இப்பொழுது ஆளையே காணவில்லை.. இங்கே தான் இருந்தால் நான் பூஜைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துவைத்துவிட்டு திரும்பிப் பார்க்கிறேன் அவளைக் காணவில்லை..” என்று அழுவது போல கூறினாள்..

“எழில் பதட்டபடதே இங்கே தான் இருப்பாள்..” என்று இனியாவும் மஞ்சுவைத் தேட, மஞ்சு இருவரின் கண்ணிலும் சிக்கவில்லை..

“அண்ணி அப்பொழுதே சொன்னாங்க மஞ்சுவைப் பத்திரமாகப் பார்த்துக்க சொன்னாங்க.. நான் தான் கவனக்குறைவால் அவளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்..” என்று அவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியது..

“இரு நான் பாட்டியிடம் சொல்லி அனைவரையும் தேட சொல்கிறேன்..” என்று கூறியவள் ஜெயந்தியம்மாவிடம் சென்று மஞ்சு காணாத விஷயத்தை சொல்ல, அவருக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள தங்களின் ஆட்களை விட்டு நாலாபக்கமும் தேட சொன்னார்..

அவளை எங்கு தேடியும் காணவில்லை என்றதும், “நான் எதற்கும் ஒருமுறை கோவிலின் உள்ளே சென்று பார்க்கிறேன்..” என்று கோவிலுக்குள் சென்றாள்.

“எழில் பதட்டபடாமல் போ.. நான் இங்கே மஞ்சுவைத் தேடுகிறேன்..” என்று சொல்லி அவளை கோவிலுக்கு அனுப்பி வைத்தாள் இனியா..

அன்பரசன் கோவிலை விட்டு வெளியே வர கூட்டத்தின் நெரிசல் அதிகமாக இருக்க சாலையும் ஒரே குண்டும் குழியுமாக இருக்க கொஞ்சம் தவறினாலும் கீழே விழுகும் நிலைதான்.. அதிலும் மக்கள் அனைவரும் இங்கும் அங்கும் அவரவர் அவசரத்திற்கு தகுந்தார் போல கோவிலுக்குள் செல்லவதும் வெளியே வரவுவதுமாக இருந்தனர்.

மஞ்சுவை தவறவிட்ட எழில்விழி அவளைத் தேடிக்கொண்டு மீண்டும் கோவிலுக்குள் வரவும், அன்பரசன் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரவும் சரியாக இருக்க அந்த நெரிசலில் ஏதோ கல்லில் அவளின் பெருவிரல் இடித்துவிட,

அதில் தவறியவள் ‘கீழே விழப்போகிறோம்..’ என்று உணர அவளின் எதிரே வந்த அன்பரசன் எழிலை கீழே விழுகாமல் அவளின் இடையோடு கைகொடுத்து அவளைத் தாங்கிப் பிடித்தான்..

அவன் அவளின் இடையோடு கைகொடுத்து அவளைத் தாங்கிப் பிடித்தும், ‘கீழே விழப்போகிறோம்..’ என்று அதிர்ச்சியில் இருந்தவள் மெல்ல கண்திறந்து அவனின் முகத்தை மிகவும் அருகில் பார்த்தாள்..

அவளின் விழியைப் பார்த்தும் அவனின் உள் மனம் என்னமோ செய்ய அந்தநொடி இரண்டாவது முறையாக அவளின் மையிட்ட விழிகளில் தொலைந்து தான் போனான் அன்பரசன்..

அப்பொழுது அதிர்ச்சியில் அவளின் விழிகள் அங்கும் இங்கும் செல்ல அதில் அவளின் இமைகளைப் பார்த்தால் படபடக்கும் பட்டாம்பூச்சி போலவும், இன்னும் அங்கும் செல்லும் அவளின் கருவிழிகளைப் பார்த்தால் தண்ணீரில் ஏற்படும் அதிர்வில் அங்கும் இங்கும் ஓடும் மீன்கள் போலவும் அவளின் விழிகள் அவனுக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கியது இவை எல்லாம் நொடிபொழுதில் நடந்து முடிந்தது..

அவளின் விழியைப் பார்த்துக் கொண்டிருக்க, ஏற்கனவே மஞ்சுவைக் காணவில்லை என்ற பதட்டத்துடன் இதுவும் சேர்ந்து கொள்ள அவர்களை சுற்றி நடந்து செல்லும் ஊர் மக்களைப் பார்த்துவிட்டு அவனிடமிருந்து பதட்டத்துடன் விலகி நினைக்க,,

இப்பொழுதும் அவளின் முகத்தைப் பார்க்காமல் அவளின் விழியில் தன்னை தொலைத்தபடியே அவளை நேராக நிறுத்த இருந்த பதட்டத்தில் அவனின் முகம் மட்டும் அவளின் நினைவில் பதியாமல் போனது என்னவோ காலத்தின் கொடுமைதான்..

அவன் அவளின் முகம் காணும் முன்னரே அந்த கூட்டத்திற்கு சென்று மறந்தாள்.. அவள் தன்னை விட்டு விலகியதும் விழிகளை மூடியவன், அவளின் விழிகளை மட்டும் நினைவில் நிறுத்த அவனின் மனம்,

‘அன்பு அது எழில்.. நீ இப்பொழுது பார்த்தது உன்னோட எழில்..’ என்று ஆனந்த கூச்சலிட்டது.. அது சொன்ன செய்தியைக் கேட்டு அவளை அழைக்க திரும்பியவனின் கண்களில் இருந்து மாயமாக மறந்திருந்தாள் எழில்விழி..

‘ஐயோ இப்பொழுதும் அவளின் முகத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டேனே..’ என்று தன்னை தானே திட்டியவன், அவளின் விழிகளை மனதில் பதியவைத்து தனது நின்னொரு கோரிக்கையையும் தெய்வத்திடம் வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் அன்பரசன்..

எழில்விழி கோவிலுக்குள் சென்று மஞ்சுவைத் தேடவே, வெளியே வந்த அன்புவின் பார்வையைத் தங்கையை நோக்கிச் செல்ல அவளோ யாரையோ தேடுவது கண்டு அவளின் அருகில் சென்றவன், “இனியா யாரை தேடுகிறாய்..?” என்று கேட்டான்..

“அண்ணா ஒரு குட்டி பாப்பாவைக் காணவில்லை அதுதான் அவளித் தேடுகிறேன்..” என்று அவள் பதட்டத்துடன் சொல்ல, “என்ன கலர் என்ன..?” என்று கேட்டதும் அவள் அணிதிருந்த உடையின் நிறத்தை கூறினாள் இனியா..

அவனும் சேர்ந்து குழந்தையைத் தேட அங்கே இருந்த ஒரு மரத்தின் அருகில் நின்று, ‘இக்கா.. இக்கா..’ என்று அழுத மஞ்சுவைப் பார்த்தவன்,

அவளின் அருகில் சென்று அவளைத் தூக்கி அவளின் கண்களைத் துடைத்துவிட்டு, “என்னோட குட்டி செல்லம் எதுக்கு அழுகிறீங்க..? அக்காவைத் தேடுகிறாயா..?” என்று கேட்டதும் மஞ்சு ஆமாம் என்று தலையசைத்தாள்,

“உன்னோட அக்கா கோவிலில் சாமி கும்பிடுகிறாள்.. உன்னைப் பார்த்துக் கொள்ளாமல் உன்னோட அக்காவிற்கு என்ன வேலை வா அவளை மிரட்டலாம்..” என்று மஞ்சுவிடம் பேசியவன் அவளைத் தூக்கி வந்து இனியாவிடம் கொடுக்க,

“அண்ணா இவளை எங்கே கண்டுபிடித்தாய்..? இவளை காணாமல் இவளின் வீட்டில் இருப்பவர்கள் துடித்துப் போயிட்டாங்க..” என்று சொல்ல,

“சரி இனியா கொண்டு போய் அவர்களிடம் கொடு பாவம்.. ரொம்பவே பயந்துவிட்டால் போல..” என்று கூறியவன், “நான் வீட்டிற்கு போகிறேன் நீயும் பாட்டியும் இந்த குட்டியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வாங்க..” என்று வீட்டிற்கு செல்லவும், கோவிலை விட்டு எழில் வெளியே வரவும் சரியாக இருந்தது..

அவளின் கையில் மஞ்சுவைக் கொடுக்கவும், அவளைத் தூக்கி முத்தமிட்டவள், “போன உயிர் திரும்பி வந்தது போல இருக்கிறது..” என்று அழுதவளைப் பார்த்த ஜெயந்திம்மா,

“இதுக்கெல்லாம் அழுகாதே எழில் ஏதோ பெரியாக நடக்க இருந்தது இதோட முடிந்தது என்று நினை..” என்று கூறி அவளை அவளின் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள் இனியாவும், ஜெயந்திம்மாயும்..

வீட்டிற்கு வந்தவன், ‘எழில் நீ இன்னும் இங்கே தான் இருக்கிறாயா..? இங்கிருந்து போவதற்குள் ஒருமுறை உன்னைப் பார்க்கணும் என்று நினைத்தேன்.. ஆனால் உன்னோட அந்த விழிகளின் தரிசனம் மட்டும் எனக்கு கிடைத்தது..’ என்று நினைத்தவன்,

‘நான் ஊருக்கு சென்றால் திரும்பி வர எப்படியும் மூன்று வருடம் ஆகும்.. என்னோட காதலை இப்பொழுது எனக்குள் வைத்துக் கொள்கிறேன்.. உன்னோட விழியில் தொலைந்த என்னை மீட்டெடுக்க மீண்டும் வருவேன் பெண்ணே..!’ என்று நினைத்தவன் அன்று மாலையே சென்னை கிளம்பிச் சென்றான்..

அன்பு அவளின் மீதான காதலை தன் மனதிற்குள்ளேயே வளர்த்தான்.. எழில் அடுத்து என்ன செய்ய போகிறாள்..?! எழில் அன்புவைக் காதலிப்பாளா..?! அன்பு மீண்டும் அவளை சந்திப்பானா..?!

அவனை அவளின் விழியில் தொலைத்துவிட்டு செல்ல மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்பிச் சென்றான் அன்பரசன்..!
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top