• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholaithen Penne! - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 5

எழில்விழி பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தாள்.. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது.. பள்ளிக்கூடம் சென்ற இரண்டு நாளில் ஆஷாவின் பிரிவு எத்தகையது என்பதை அறிந்துக் கொண்டாள்..

ஆஷாவின் நினைவு அவளை சூழ்ந்து இருக்க அவளின் நட்பு நிலைக்கு என்று அவளின் உள்மனம் சொல்ல, அதன்பிறகு அவள் யாருடனும் அந்த அளவிற்கு நெருங்கிப் பழகவே இல்லை..

பள்ளிக்கூடம் விட்டால் வீடு.. வீடு விட்டால் பள்ளிக்கூடம் இரண்டும் விட்டால் வயல்காடு என்று அவளுக்கு நாட்கள் செல்ல சரியாக இருந்தது..

இதற்கிடையில்... சென்னை சென்ற தியாகராஜனுக்கு தொழில் செய்ய நல்ல ஒரு இடம் கிடைக்க அவரின் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்தது.. அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு இடம் வீட்டை வாங்கினார்கள்..

அறிவுமதி எப்பொழுதும் போல பள்ளிக்கூடம் போகவே, அன்பரசன் நல்ல கல்லூரியில் (B.A.History) சேர்க்கப்பட்டான்.. சுமித்ரா எப்பொழுது போல வீட்டின் வேலைகளை கவனிக்க கணவன், பிள்ளைகளைப் பார்க்க அவருக்கு பொழுது சரியாக இருந்தது..

இனியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனது மகனுக்கு போன் செய்தார் ஜெயந்தி.. “என்னப்பா ஊரு எல்லாம் எப்படி இருக்கிறது..?! உனக்கு தொழிலுக்கு இடம் எல்லாம் அமைந்துவிட்டதா..?” என்று கேட்டார்..

“.........................” என்று எதிர்புறம் இருந்து பதில் வந்தது..

“அதெல்லாம் சரிப்பா.. பேரன்கள் இருவரும் என்ன பண்றாங்க..?!” என்றார்..

“.......................” என்று எதிர்புறம் பதில் வந்தது.. அவர் ஏதோ கேட்க,

“இங்கே இனியா நல்ல இருக்காப்பா.. நாங்க டைம் கிடைக்கும் பொழுது வருகிறோம்..” என்று சொல்ல,

“......................” என்று ஏதோ கூறியவர் போனை வைத்தார்..

இப்படியே மாதங்கள் சென்றது பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு பரிச்சை முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.. அவள் எப்பொழும் வெள்ளிக்கிழமை அன்று அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அன்றும் அதுபோலவே அவள் வயல்காட்டின் வழியாக தென்னந்தோப்பிற்குள் புகுந்த வேடிக்கைப் பார்த்தவண்ணம் நடந்து சென்றாள்..

அந்த வழியின் இருபுறமும் இருந்த மரங்களில் இருந்து தென்றல் காற்று தவழ்ந்து செல்லவே மரங்களில் இருக்கும் அணில்கள் கொய்யாப்பழம் கொய்யா தங்களுக்குள் போடும் சண்டைகளும், வேப்பமரம் ஒன்றில் எங்கோ அமர்ந்து இசைபாடும் “கூ.. கூ..” என்ற குயிலின் இசைக்குப் போட்டியாக கிளிகள் இரண்டு, “கீ.. கீ..” தங்களின் இசையை இசைக்க, வயல்காட்டின் ஓரம் புல்லை மேய்ந்துக் கொண்டிருந்த மாடுகள், தண்ணீருக்காக, “ம்மா.. ம்மா..” என்று கத்தவும் இவற்றிற்கு தகுந்தாற்போல் வயல்வெளியில் காற்று தவழ்ந்து செல்ல அது செல்லும் திசைக்கு தகுந்தார் போல அசைந்துக் கொடுத்தது வயல்வெளி நாற்று.. அவளுக்கு இங்கே நடக்கும் ஒரு இசை கச்சேரியும் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் இயற்கை அழகும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை எழில்விழிக்கு..!

அவள் அப்படி செல்லும் வழியில் ஒரு அறுபது வயதை உடைய ஒரு பாட்டி.. அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையே அவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்ல அவர்களைப் பார்த்தபடியே தனது வழியைப் பார்த்து நடந்தாள். சிறிது நேரத்தில் வழியில் இருக்கும் இயற்கையில் அவள் மனம் ஒன்றிவிட அவளின் வழியைப் பார்த்து நடந்து சென்றாள்..

அவர் ஏதோ சிந்தனையில் இருக்க அவரும் எழிலை கவனிக்கவில்லை.. அந்த பாட்டி ஏதோ நினைவில் விரையாகவே நடந்து சென்றுவிட்டார்.. அவர் செல்வதை எல்லாம் இவள் கவனிக்கவே இல்லை..

அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லவே இவளும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்..

நாட்கள் விரைந்து செல்ல மறுபடியும் பள்ளிக்கூடம் தொடங்கவே, அவளும் எப்பொழுதும் போலவே சென்று வந்தாள்.. அப்படி ஒருநாள் அவள் பள்ளிக்கூடம் சென்று அன்று மினிபஸ் எல்லாம் ஸ்ட்ரைக் என்பதால் எந்த பஸும் வராமல் திரும்பவும் வீடு வந்து கொண்டிருக்க அன்றோ வெயில் கொளுத்தி எடுத்தது..

இவளுக்கு முன்னால் ஒரு வயதான பெண்மணி நடந்து வர, இவள் அவர்களுக்கு எதிர்புறம் நடந்து சென்றுக் கொண்டிருக்க இருவருக்கும் பத்தடி தூரத்தில் அவர்கள் மயக்கத்தில் சரிந்து விழப்போகவே அதை கவனித்தவள், “ஐயோ அந்த பாட்டி மயக்கத்தில் கீழே விழுகப் போறாங்க..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவரின் அருகில் ஓடினாள்..

அவர்கள் அதற்குள் மண்ணில் சரிய ஓடிசென்று தங்கிப் பிடித்தவள், “பாட்டி.. பாட்டி..” என்று அழைத்தவள், தன்னுடைய பேக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவர்கள் வாயில் வைத்து குடிக்க வைத்தாள்..

அதில் அவருக்கு கொஞ்சம் தெளிவு வர, மெல்ல எழுந்தவர் அவளின் முகத்தைப் பார்த்து, “நீ யாரும்மா..?” என்று கேட்டதும், “அதெல்லாம் நான் அப்புறம் சொல்கிறேன் பாட்டி நீங்க முதலில் எழுந்திறீங்க..” என்று அவர்களைத் தாங்கிப் பிடித்து எழுந்து நிற்க வைத்தவள்,

“பாட்டி காலையில் என்ன சாப்டீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்தின் நிழலுக்கு அழைத்து சென்றாள்..

“இன்னும் ஒன்னும் சாப்பிடவில்லை கண்ணா..” என்று சொல்ல, “என்ன பாட்டி வெள்ளிக்கிழமை விரதமா..?” என்று கேட்டவள் அவர் பதில் சொல்லும் முன்னரே,

“இங்கே இருங்க நான் இப்பொழுது வருகிறேன்..” என்று பேக்கை அங்கே வைத்துவிட்டுச் சிட்டாகப் பறந்து சென்றவள் வரும் பொழுது கையில் எலுமிச்சை சாற்றுடன் வந்தாள்..

அவளைப் பார்த்து மெல்ல புன்னகை செய்தவர், “இது என்னம்மா..?” என்று கேட்டதும், “எலுமிச்சை பழச்சாறு பாட்டி..” என்று கூறியவளைப் பார்த்து,

“இது எதுக்கும்மா எனக்கு..?” என்று கேட்டதும், “உங்களின் மயக்கம் சரியாக பாட்டி..” என்று கூறினாள்..

அந்த எலுமிச்சை பழச்சாறை அவர்கள் கையில் கொடுத்தவள், “இதை முதலில் குடிங்க நாம் அப்புறம் பேசலாம்..” என்று சொல்ல, அவரும் எதுவும் பேசாமல் வாங்கிக் குடிக்கவும் கண்களில் நல்ல தெளிவு வந்தது..

அதை குடித்து முடித்தவர் அவளின் முகத்தை நன்றாகப் பார்க்க அதில் இருந்த அமைதி அவரை வெகுவாக கவரவே, அவளை அருகில் அழைத்து அமரவைத்தவர்,

“உன்னோட பெயர் என்னம்மா..?!” என்று கேட்டதும் அவரின் முகத்தைப் பார்த்தவள்,

“எழில்விழி..” என்றாள் அவள் அவரின் முகத்தை நேராகப் பார்த்தபடியே...

“எந்த வகுப்பு படிக்கிறாய்..?” என்று அவளின் தலையை வருடிய வண்ணம் கேட்டார் அந்த பாட்டி..

“பத்தாம் வகுப்பு..” என்று அவள் கூறினாள்..

“இன்னைக்கு ஸ்கூல் போகலையம்மா..?” என்று கேட்டதும், “இல்லம்மா பஸ் வரவில்லை.. அதனால் நான் ஸ்கூல் போகவில்லை பாட்டி..” என்று சொல்லவும் அவளை மிகவும் பிடித்தது போனது அந்த பாட்டிக்கு..

அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவர், “சரிடா நீ வீட்டிற்கு கிளம்பு.. நான் கோவிலுக்கு போயிட்டு வீட்டிற்கு போகிறேன்..” என்று சொல்லவும்,

“இந்த வெயிலில் திரும்பவும் கோவிலுக்கு போக வேண்டாம் பாட்டி.. ஒருநாள் வரவில்லை என்றால் சாமி ஒன்றும் தண்டனை கொடுக்காது வாங்க நான் உங்களை உங்களின் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு போகிறேன்..” என்று அவள் மெல்ல சொல்ல அவளைப் பார்த்து சிரித்தவர்,

“எனக்கு நீ துணையா..? நல்ல ஜோடி பொருத்தம் தான்.. நீ வீட்டிற்கு போம்மா..” என்று கூறினார்..

“உங்கள் வீடு எங்கே இருக்கு என்று கொஞ்சம் சொல்லுங்க.. நான் உங்களை உங்களின் வீட்டில் விட்டுச் செல்கிறேன்..” என்று சொல்ல அவரும் சரியென தலையசைத்தவர் முகவரியைச் சொல்ல,

“எங்கள் வீட்டை தாண்டிதான் செல்ல வேண்டும்.. வாங்க பாட்டி..” என்று அழைத்துச் சென்றவள், வழியில் பெற்றோரைப் பார்த்து விவரம் சொல்லிவிட்டு அவரை பத்திரமாக அவர்கள் வீட்டில் கொண்டு சேர்த்தாள்..

அவர்கள் வீட்டு தென்னந்தோப்பின் நடுவே ஒரு பெரிய வீடு.. அந்த வீட்டில் அதற்கு தகுந்த வேலையாள் இருக்க வீட்டைப்பார்த்து அதிசயம் காண்பது போல பார்க்காமல் அமைதியாக இருந்தாள்..

இந்த அரைமணி நேரத்திலேயே அந்த பாட்டியின் மனதில், ‘என்னோட பெரிய பேரனுக்கு இந்த பெண்ணைத்தான் கட்டிவைக்க வேண்டும்.. அவனுக்கும் இவளுக்கும் தான் ஜோடிப்பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்ற விதை அவர்கள் மனதில் ஆழமாக வேருன்றியது..

அவர்கள் வீட்டிற்குள் அழைக்க, “இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் பாட்டி நீங்க உடம்பை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று சொல்லிவிட்டுச் செல்ல,

“எழில்..” என்று அவளை அழைத்தார்.. அவள் நின்று திரும்பி அவர்களைக் கேள்வியாகப் பார்க்க, அவளின் அருகில் வந்தவர்,

“குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்க கூடாது என்று சொல்வாங்க.. அதனால் நான் உனக்கு காசு கொடுக்க மாட்டேன்.. ஆனால் உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை தயங்காமல் நீ கேட்கலாம்.. நான் உன்னோட பாட்டி மாதிரி..” என்று கூறியவர் அவளின் பட்டுக்கன்னத்தில் முத்தம் பதிக்க,

அந்த நிலையிலும், “எனக்கு எந்த உதவியும் தேவைப்படாது பாட்டி.. அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாகக் கேட்கிறேன்..” என்று சொல்ல அவளை மலர்ந்த முகத்துடன் அனுப்பிவைத்தார்..

அவளின் வாழ்க்கையில் புயல் வீச ஆரமித்தது.. அவள் பத்தாம் வகுப்பு முடித்தும் அவளின் அன்னை பார்வதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க அந்த பிரசவத்தில் தனது அன்னையை இழந்தாள் எழில்விழி..

அந்த மறைவை மறக்க வைத்தது அவளின் தங்கை முகத்தில் இருந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. பார்வதி மறைவிற்குப் பிறகு குடும்ப பொறுப்புகள் அனைத்தும் அவளின் மீது சுமத்தப்பட அந்த நேரத்தில் தான் முத்துக்குமாருக்கும் தனலஷ்மிக்கும் திருமணம் நடந்தது..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஏற்கனேவே அண்ணனுக்கு பயந்தவள், இப்பொழுது அண்ணனுக்கு திருமணம் நடந்து அண்ணி வந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று மிகவும் பயந்து போயிருந்தாள் எழில்விழி..

ஆனால் தனம் அப்படி ஒன்றும் பெரிய கொடுமை பண்ணும் அண்ணி கிடையாது என்பதை வந்த ஒரே வாரத்தில் அறிந்துக் கொண்டாள்..

தனம் அந்த வீட்டில் முதலில் அடியெடுத்து வைத்த அன்று, அவளின் கணவன் சொன்ன சொல் தான் அவளின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது..

அவள் திருமணம் ஆகி வந்ததும் அவன் சொன்ன ஒரே விஷயம், “நீ எக்காரணத்தைக் கொண்டும் என்னோட தங்கை இருவரையும் கொடுமை செய்ய கூடாது..” என்று கூறியதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தனலக்ஷ்மி,

“என்னைப் பார்த்தால் கொடுமை செய்வது போலவா இருக்கிறது உங்களுக்கு..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்துப் பார்த்த முத்துக்குமார்,

“நான் உன்னை கொடுமை செய்ய வேண்டாம் என்று சொன்னது என்னோட தங்கைகள் மீது நான் வைத்திருக்கும் பாசத்திற்காக அல்ல.. இந்த ஐந்து ஏக்கர் நிலமும் எனக்கு மட்டும் வரவேண்டும்.. அதுக்காகத்தான் கூறினேன்..” என்று சொல்லவும் அவனைப் புரியாமல் பார்த்தாள் தனம்..

அவளின் பார்வையைப் புரிந்துக் கொண்டவன், “என்னம்மா புரியலையா..? நீ அவர்களை நல்ல பார்த்துக் கொண்டால் என்னோட அப்பா என்னை நம்பி இவர்கள் இருவரையும் அவர்களுடன் சேர்த்து நிலத்தையும் எனக்கு கொடுப்பார்..” என்று சொல்ல

“இப்பொழுதும் எனக்கு புரியலங்க..” என்று கூறினாள்..

“தெளிவாக சொல்கிறேன் என்னோட அப்பாவின் சொத்தை நான் யாருக்கும் தர விரும்பல.. அது என்னோட தங்கைகள் என்றாலும் கூட.. எனக்கு நான் மட்டும் நல்ல இருக்கணும் மற்ற யாரைப் பற்றியும் இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுது அக்கறை கிடையாது..” என்று அவன் சொல்ல,

தாலி கட்டிய அன்றே அவனின் குணத்தை அறிந்துக் கொண்ட தனலஷ்மி, ‘இனி அந்த பிள்ளைகள் இருவரையும் இவனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.. இவன் பணத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வான்..’ என்று மனதில் நினைத்தவள்,

“நீங்க சொல்வது போலவே நடந்துக் கொள்கிறேன்..” என்று அவள் பணிவாகக் கூறவே, அவளைப் பார்த்துக் கர்வத்துடன் சிரித்தான் முத்துக்குமார்..

அவளின், ‘ஐயோ பாவம் தாய் இல்லாத பிள்ளைகள் இருவரும்.. இரண்டுக்கும் வயது வித்தியாசம் பதினைத்து வருடம்.. மடுவுக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம்.. எழில்விழி பாவம் வெளி உலகம் தெரியாத பொண்ணு.. அதுவும் பருவத்தில் இருக்கும் பெண்..’ என்று நினைத்தவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது..

அடுத்த ஒருவாரத்தில் முத்துக்குமார் அனைத்து நடவடிக்கையும் அவளுக்கு அத்துபடியாக அந்த இரு மலருக்கும் தாயாக மாறினாள் தனலஷ்மி..

அவள் தான் எழில்விழியை மேல் படிப்பிற்கு போராடி அனுப்பினாள்.. இப்பொழுது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று போராட்டியே அவளை பன்னிரண்டாம் வகுப்பு வரையில் படிக்க வைத்தாள்..

இந்த போராட்டத்தில் கணவனுக்கே எதிரியாக மாறிப்போனாள் தனலஷ்மி.. அதுக்கு அவள் கவலைப்படவும் இல்லை.. அவளுக்கும் பாசம் என்றால் என்ன என்று அவளுக்கு நன்றாக தெரியும்..

தனலஷ்மி வந்த பிறகு குழந்தையை அவள் பராமரிக்க அப்பாவுடன் சேர்ந்து கொஞ்சம் வயல் வேலைகளையும் கற்றுக் கொண்டாள் எழில்விழி..

எதுக்கும் அவள் கலங்கவில்லை.. மனதில் ஒரு வைராக்கியம்.. தனக்காக அன்னை போலவே அண்ணி ஒருத்தி இருக்கிறாள் என்பதில் மனம் துவளாமல் படித்தவள் படிப்பை முடித்துவிட்டு வயலில் கால்பதித்தாள் இதில் இரண்டு வருடம் காற்றாக சென்று மறைய எழில்விழி தங்கை மஞ்சரி நடக்க ஆரமித்தாள்..

சென்னையில் இவர்கள் வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக செல்ல, ஒருநாள் அன்புவின் அறைக்கு வந்த அறிவு அண்ணனின் அருகில் வந்து அமர, அவனை நிமிர்ந்து பார்த்த அன்பரசன், “என்ன அறிவு..?” என்று தம்பியைப் பார்த்துக் கேட்டான்..

“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா..?” என்று கேட்டதும், “எந்த பாடத்தில் உனக்கு சந்தேகம்..?” என்று கேட்டான் அன்பு..

“எனக்கு பாடத்தில் சந்தேகம் இல்லை அண்ணா..” என்று அறிவு அண்ணனைப் பார்த்து சொல்ல அவனைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் அன்பரசன்..

“உன்னோட டிப்பன் பாக்ஸ் திருடும் அந்த வினோத மிருகத்தை கண்டுபிடித்தாயா அண்ணா..? ஏன் கேட்கிறேன் என்றால் நீ பள்ளிக்கூடத்தின் கடைசியாக இருந்த நான்கு மாதமும் இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்துச் சென்றாய் அதுதான் கேட்டேன்..” என்று அவன் தயங்கித் தயங்கிக் கேட்டதும்,

“இந்த சந்தேகமா..? அது ஒரு பொண்ணுடா.. அவளுக்கு அம்மா இல்ல.. அவள் நம்ம வீட்டு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அவளின் அம்மாவின் கைப்பக்குவம் பிடித்த காரணத்தால் இந்த மாதிரி செய்திருக்கிறாள்..” என்று சொல்ல,

“இந்த உண்மையை உனக்கு யார் சொன்னது..?” என்று அவன் கேட்டதும், “எனக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்க ஒருத்தங்க சொன்னாங்க..” என்று சிரிப்புடன் சொன்னவன்,

அண்ணனின் முகம் பார்த்தவன், “அது யாரு அண்ணா..?” என்று கேட்டதும், “போடா போய் வேலையைப் பாரு.. நானே ஒருநாள் கண்டிப்பாக உனக்கு சொல்கிறேன்..” என்று சொல்லவும் அவனின் முகத்தை உற்று நோக்கியவன் அவனின் வேலையைக் கவனிக்க சென்றுவிட்டான்..

அடுத்த கல்லூரி வாழ்க்கை அவனின் மனதை மிகவும் கவரவே அதில் திசை மாறிய மனம், அவளின் நினைவுகள் அவனின் மனதின் அடி ஆழத்தில் சென்று மறைய அவளை சுத்தமாக மறந்தே போனான் அன்பரசன்..

அவனது கல்லூரி வாழ்க்கையும் அவனுக்கும் ஒரு புதிரை வைத்தே காத்திருந்தது.. இவன் இவனின் வேலைகளைக் கவனிக்க நாட்கள் பறந்தோடிச் சென்றது.. இப்படியே நாட்கள் கழிய இரண்டு வருடம் மயமாக சென்று மறைந்தது..

இருவரும் தங்களின் மனதை அறிந்துக் கொள்ளாமல் இருக்க, இவர்கள் வாழ்க்கையில் அடுத்த சந்திப்பும் வந்தது.. சந்திப்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தியாகராஜன் சென்னை
சென்றவுடன் நடந்ததை,
2-ம் பகுதியில் சொன்னீர்களா,
சந்தியா டியர்?
இதனை முன்னால்
கொண்டு வந்திருக்கலாம் or
"இதற்கிடையில்"-ன்னு ஒரு
வார்த்தை சேர்த்து விடுங்கள்,
சந்தியா ஸ்ரீ செல்லம்
If my words are wrong, sorry,
சந்தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எழில்விழி காப்பாற்றும்
மயக்கமான அந்த பாட்டி,
அன்பரசனின் பாட்டி,
ஜெயந்தி அம்மாவா,
சந்தியா ஸ்ரீ டியர்?
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
ezhil aasha va romba miss panra epo rendu perum meet pannuvang????? romba nalla anniya irupanga pola .... anna tha romba mosham ........... pavam rendu ponnungalum :cry:......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top