• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unthau Vizhiyil Tholainthen Penne! - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22

அவன் சென்ற திசையைப் பார்த்தே நின்றிருந்த எழில் தனது கையில் இருந்த பரிசு பொருளைத் திறந்துப் பார்த்தாள்.. அதில் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரத்தில் இரண்டு கொடிகள் பின்னிக்கொண்டது போல அமைக்கப்பட்ட இரண்டு இதயங்கள்.. அந்த இதயத்தின் நடுவே ஒன்றில் “E” என்ற எழுதும், மற்றொரு இதயத்தில் “A” என்ற எழுதும் இருக்க அதைப் பார்த்தவள்,

“என்னோட மனதில் உள்ளதை தெரிந்தும் நீ மெளனமாக இருப்பதற்கு நான் காரணம் ஆக முடியாது..” என்றவள் வீட்டிற்குள் சென்றாள்.. அவன் மீண்டும் காரில் கோவை வந்து அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தான்..

அவன் கோவை போய்ட்டு வருவதற்குள் இங்கே பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர் ஆதியும், ஆஷா..! இவன் சென்னை ஏர்போர்டில் இறங்கியது ஆதியிடமும், ஆஷாவிடமும் இருந்து போன் வந்து கெண்டே இருந்தது..

அன்பு இதை எதையும் கவனிக்காமல் இன்று அலைந்த அலைச்சலில் வீட்டிற்கு சென்றவன், குளித்துவிட்டு வந்து படுத்தவன் மறுநாள் சூரிய உதயத்தின் போதுதான் எழுந்தான்.. அவன் எழுந்து கிளம்பி ஆபீஸ் போக கீழே வர அவனிடம் சொல்லிவிட்டுச் செல்ல காத்திருந்தார் ஜெயந்திம்மாவும், இனியாவும்..!

தனது பாட்டியைக் கண்ட அன்பு, “என்ன பாட்டி காலையிலேயே கிளம்பி எங்க போக போறீங்க..?” என்று கேட்டவண்ணம் டைனிங் ஹாலில் சென்று அமர்ந்தான்..

“அன்பு நானும், பாப்பாவும் ஊருக்கு போகிறோம் டா.. கல்யாண வேலைகள் நிறைய இருக்குடா..” என்று சொல்ல இருவரையும் பார்த்தவன், “என்ன பாட்டி இப்பொழுதே போய் என்ன பண்ண போறீங்க..” என்று கேட்டதும் ஜெயந்திம்மா மனதிற்குள்,

‘இப்பொழுது போனால் தன கண்ணா உன்னோட திருமண ஏற்பாட்டையும் செய்ய சரியாக இருக்கும்..’ என்று மனதில் நினைத்தவர், “இல்லடா கண்ணா அங்கே போனால் அடுத்தடுத்து நிறைய வேலைகள் இருக்கு.. நாங்க முன்னாடி போகிறோம்.. நீங்க பின்னாடி வாங்க..” என்று சொல்ல சுமித்ராவும், தியாகு இருவரும் மகனைப் பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டனர்..

அவன் நேற்று எழிலை பார்க்க சென்றது இனியா, அறிவை தவிர மற்ற மூவருக்கும் நல்லாவே தெரியும்.. இருந்தாலும் அமைதியாக இருந்தனர்..

“சரிங்க பாட்டி வாங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு சொல்ல, “இல்லப்பா அறிவு இன்னைக்கு வீட்டில் தான் இருக்கிறான் நாங்க அவனோடு செல்கிறோம் நீ கிளம்பு..” என்று ஜெயந்திம்மா சொல்லிக் கொண்டிருக்க, அன்புவின் அலைபேசி நிற்காமல் அலறிக் கொண்டே இருந்தது..

அதைப் பார்த்த சுமித்ரா, “என்னடா செல் அடித்துக் கொண்டே இருக்கிறது நீ கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாய்..?” என்று கேள்வி எழுப்ப, “ஆஷா, ஆதி இருவரும் தான்.. இன்னைக்கு இருவருக்கும் சண்டை போல அதுதான் போன் எகிறுகிறது..” என்று சொன்னவன்,

“சரிம்மா நான் என்ன என்று போய் பார்க்கிறேன்.. பாட்டி நான் கிளம்புகிறேன்.. ஊரில் இருக்கும் அனைவரையும் நான் கேட்டதாக சொல்லுங்கள்..” என்று சொல்ல ஜெயந்திம்மா மனதில் எதையோ நினைத்து சிரிக்க,

இனியாவோ, “அண்ணா ஆடு, மாடு, கோழி, செடிகொடி, மரம் இவற்றிடம் எல்லாம் நீ விசாரித்ததாக நான் சொல்லிவிடுகிறேன்..” என்று சொல்ல, சுமித்ரா, தியாகு, ஜெயந்திம்மா மூவரும் சிரித்தனர்..

“உனக்கு வாய் கொழுப்பு அதிகமாக ஆகிவிட்டது..” என்று அவன் அவளை அடிக்க துரத்த பலநாளுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது... மீண்டும் அவர்களின் கவனத்தைக் கலைத்தது அன்புவின் அலைபேசி..

அதை எடுத்துப் பார்த்த அன்பு, “இதுக்குமேல் இங்கே இருந்தேன் என்றால் அவர்களை சமாதானம் செய்ய முடியாது.. நான் போய் என்ன விஷயம் என்று பார்க்கிறேன்..” என்று கிளம்பிச் சென்றான் அன்பு..

அன்பு அவசர அவசரமாக கிளம்பி ஆபீசிற்கு சென்று பார்த்தான்.. இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.. அவர்களைப் பார்த்தும் வழக்கம் போல ஏதோ பிரச்சனை என்று உணர்ந்துக் கொண்ட அன்பு,

“ஹாய் ஆஷா என்ன பிரச்சனை எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்..?!” என்று கேட்டதும், ஆஷா நிமிர்ந்து அன்புவைப் பார்க்க, ஆதியோ, “ஏண்டா வந்ததும் அவளைக் கேட்கிறாயே என்னைப் பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா..?” என்று கிட்டதட்ட பாவமாகக் கேட்டதும் இருவரின் நடுவே இருந்த சேரில் அமர்ந்தவன்,

“இப்பொழுது உங்களுக்குள் என்னடா பிரச்சனை..?!” என்று கேட்டதும், “ஆதி நான் ஊருக்குப் போயிருந்த பொழுது இவங்க அம்மா இவனுக்கு பொண்ணு பார்த்தாங்களாம்.. பொண்ணு நல்ல வசதியான இடமாம்.. நான் அவளையே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று என்னிடமே சொல்கிறான்..” என்று அன்பிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பைலை எடுத்து ஆதியின் தலைமேல் போட்டாள் ஆஷா..

அதைப் பத்திரமாக கேச் பிடித்த ஆதி, “ஐயோ இது வரதராஜன் பைல் இது மட்டும் இல்லை என்றால் ஒண்ணுமே பண்ண முடியாது..” என்று கூறினான்..

அன்புவும், “அந்த பைல் தாண்டா ரொம்ப முக்கியம் பத்திரமாக அந்தபக்கம் வை..” என்று சொல்ல, “டேய் நான் இங்கே வாழ்க்கையே பறிபோக போகிறது என்று புலம்புகிறேன்.. இப்பொழுது வரதராஜன் பைல் ரொம்ப முக்கியமா..” என்று ரௌத்திரமாகக் கேட்டாள் ஆஷா..

அவள் கேட்டதில் அந்த நேரத்தில் கூட அன்பு, ஆதி இருவருக்கும் சிரிப்பு வந்தாலும் சிரித்தால் அவ்வளவுதான் என்று நினைத்தவன், “சரிதான் அந்த பைல் முக்கியம் இல்ல..” என்றவன்,

ஆதியின் பக்கம திரும்பி, “நீயேண்டா இப்படி சொன்னாய்..?” என்று அவனிடம் கேட்டதும், “இவளும் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை அப்பாவைப் பார்க்க போகிறாள் இல்ல அவரின் அப்பாவிடம் சொல்ல வேண்டியது தானே..?! எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. நான் இவரை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே..?!” என்று அவன் கேட்டதும்,

அன்பு ஆஷாவிடம், “அவன் சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. நீ உன்னோட அப்பாவிடம் பேச வேண்டியது நானே ஆஷா..?” என்று கேட்டதும், “இவங்க அம்மா என்னிடம் வந்து என்ன சொன்னாங்க தெரியுமா அன்பு..?!” என்று கேட்டாள்..

“என்னைக்கு என்னோட அம்மா உன்னை நேரில் பார்த்தாங்க..?” என்று அவனும் கோபமாகக் கேட்டதும், “எழில் ஊருக்கு போன அன்னைக்குதான் உன்னோட அம்மா எனக்கு போன் பண்ணி பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வர சொன்னாங்க..” என்று கூறினாள்..

“சரி ஆஷா அவங்க அம்மா உன்னிடம் என்ன சொன்னாங்க..?” என்று பொறுமையாகக் கேட்டான் அன்பு.. “நான் மசூதி, சர்ச் என்று சுத்திட்டு இருக்கிறேன் என்றும் உன்னையெல்லாம் என்னோட் பையனுக்கு கட்டிவைக்க எனக்கு இஸ்டம் இல்லை என்றும் இன்னும் என்னென்னவோ சொன்னாங்க..” என்று கூறியதும் அதுவரை இருந்த நிலை மாறி வாய்விட்டு சிரிக்க ஆரமித்தான் ஆதி..

அவனைப் பார்த்து கோபமாக திரும்பிய ஆஷாவோ, “எதுக்குடா இப்படி சிரிக்கிறாய்..?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்..

“என்னோட அம்மா என்ன தப்ப சொல்லிட்டாங்க.. நீ சர்ச், மசூதி, பிரியாணி கடை எல்லாவற்றையும் சுற்றுவது உண்மைதானே..?!” என்று கேட்டு அவளை இன்னமும் கோபப்படுத்திப் பார்த்தான் ஆதி..

அப்பொழுது அவனின் கண்ணைப் பார்த்தான் அன்பு.. அவனின் கண்களில் இருந்த குறும்பைக் கண்ட அன்புவிற்கு ஏதோ புரிவது போல இருக்க, “சொல்ல வருவதை தெளிவாக சொல்லுடா..” என்றான் அன்பு.

“முதலில் இருந்து கேளுடா அன்பு..” என்று கூறியவன், “என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்ததும், ‘எனக்கு ஆஷாவை ரொம்ப பிடிச்சி இருக்குடா கண்ணா.. இனியும் நாள் கடத்தாமல் என்னோட தங்கக்கட்டியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாடா..’ என்று சொல்றாங்க.. எனக்கு சந்தோசமாக இருந்தது..” என்று சொல்ல அன்பு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்..

“இவளிடம் இருக்கும் நல்ல குணம் என்னோட அம்மாவுக்கு அதிக சொத்தாக தெரிந்தது.. அதுதான் என்னிடம் பணக்கார இடத்தில இருந்து பொண்ணு வந்திருக்கிறது மகனே.. நீ அந்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள் என்று சொன்னாங்க..” என்று சொன்னவன் ‘அந்த பெண்ணையே’ என்று வார்த்தையில் அழுத்தம் கொடுக்க அதுவரை இருந்த கோபம் மாறி சிரிக்க ஆரமித்தாள் ஆஷா..

அவள் சிரிப்பதைப் பார்த்த அன்பு, “ஏய் லூசு ஆஷா அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒழுங்க காது கொடுத்துக் கேட்டிருந்தால் நேற்றில் இருந்து அனுபவித்த மனவலியில் இருந்து தப்பித்து இருக்கலாம் இல்லையா..?!” என்று சிரிப்புடன் சொன்னவன்,

“என்னடா இவங்களுக்கு பின்னாடி லவ் பண்ண ஆரமித்த இனியாவிற்கே நிச்சயம் முடிந்ததே என்ற வருத்தம் இருந்துடா எனக்கு.. ஆனால் இப்பொழுது இல்ல.. அவங்க திருமணத்திற்கு முன்னாடியே உங்க திருமணத்தின் முகூர்த்தத்தை வைக்க சொல்லுங்க..” என்று சொல்ல ஆதி ஆஷாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “இன்னும் என்ன என்ன சொன்னாங்க உன்னோட அம்மா..?” என்று கேட்டான் அன்பு..

“என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்து இவளுக்கு சேலை கட்ட தெரியாதாம்.. வந்தும் முதலில் சேலை கட்ட கத்துக் கொடுக்கணும் என்று சொல்லிட்டு இருக்காங்க.. இது புரியாமல் லூசு நேற்றில் இருந்து சண்டை போட்டே உயிரை வாங்குது..” என்று சிரிக்க, “இதற்கு தான் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு இருந்தீங்க..?” என்று சந்தோசமாகக் கேட்டான் அன்பு..

“எங்கம்மா பார்த்த பணக்காரப்பெண் இவள் தான் என்று சொல்லும் முன்னாடியே அம்மிணி சண்டையை ஆரமித்து விட்டாங்க.. அப்புறம் எப்படி உண்மையைச் சொல்ல..?!” என்று ஆஷாவைப் பார்த்து கண்ணடித்தான் ஆதி.. ஆதி ஒரு முடிவெடுத்தால் அதில் அவனின் அம்மாவிற்கும் முழு விருப்பம் இருக்கும் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது.. அவனின் அம்மா ஒத்துக் கொண்டதே அன்புவிற்கு சந்தோசமாக இருந்தது..

பக்கத்தில் இருந்த பைலை கையில் எடுத்த அன்பு, “இது எனக்கு ரொம்ப முக்கியம்.. உனக்கு இரு வருகிறேன்..” என்று அறையை விட்டு வெளியே சென்றவன் பெரிய குச்சியை எடுத்து வந்து, “இந்த ஆஷா இப்பொழுது அடிக்க உனக்கு ரைட்ஸ் இருக்கிறது.. அவனை விடாதே..” என்று குச்சியை அவனின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அடப்பாவி அன்பு.. பிரச்சனையைத் தீர்த்து வைக்க சொன்னால் என்னைத் தீர்க்க ஐடியா கொடுக்கிறீயே..?! நீயெல்லாம் நல்ல வருவடா..” என்று சொல்ல, “தேங்க்ஸ் மச்சி என்ஜாய்..” என்று சொல்லிவிட்டு புன்னகையோடு கூறினான் அன்பு..

அவளோ ஆதியை பார்த்து, “ஆதும்மா நான் தயார்.. நீ தயாரா..?” என்று கேட்டதும் ஆதியின் பார்வை மாறுவதைக் கண்டு, “அடிவாங்க தயாரா என்று கேட்டேன் மாம்ஸ்..” என்று சொல்ல, “இதில் எல்லாம் சரியா இரு..” என்று சொல்ல,

“என்னை எதுக்குடா இரண்டு நாளாக தவிக்கவிட்டாய்..?” என்று அவனை அடிக்க கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் ஓடி அவளுடன் விளையாடியவன் அவளின் கையைப் பிடித்து இழுத்தும் அவனின் மார்பின் மீது வந்து விழுந்தாள் ஆஷா..

அவள் விழுந்ததும் நெஞ்சில் குத்த, “ஆஷா வலிக்குதுடி.. எதுக்கு இவ்வளவு கோபம்.. நான் உன்னிடம் இன்றா இப்படி விளையாடுகிறேன்.. எப்பொழுது போல தான் இன்றும் விளையாடினேன்..” என்று அவன் சொல்ல,

“பார்த்த முதல் நாளே வந்து லவ் சொன்னவன் நீ.. உன்னை தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்க முடியாது தெரியுமா..? நான் விளையாட்டாக இருந்தாலும் உன்னோட காதலில் இன்று மட்டும் அல்ல என்றும் விளையாடாக இருந்தது இல்லை..” என்று சொல்லி அவள் கண்கலங்க,

“எதுக்கு ஆஷா இப்பொழுது கண்கலங்குகிறாய்..” என்று அவளின் கண்களைத் துடைத்துவிட்டவன், “இப்பொழுது நம்ம பிரச்சனை சால்வ்..” என்று சொல்ல, “என்னோட அப்பா எனக்கு பார்த்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் ஆதி..” என்று அவள் சந்தோசமாகக் கூறினாள்

“அடிப்பாவி என்ன வேலை செய்துவிட்டு வந்திருக்கிறாய்..? ஐயோ உன்னிட அப்பா மாப்பிள்ளையாகப் பார்த்தது என்னைத்தான்..” என்று சொல்ல, “ஐயையோ..” என்று கையை உதறினாள் ஆஷா.. “இதுக்கு மேல் என்ன இருக்கு..? ஆதி உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது..?!” என்று புலம்பினான்..

அந்தநேரம் ஆதிக்கு போன் செய்த அன்பு, “ஆதி உன்னோட அம்மா போன் பண்ணினாங்க.. உனக்கு பொண்ணு பார்க்க வேலூர் போகணும்மாம் சீக்கிரம் கிளம்பு.. அப்படியே ஆஷாவிடம் அவரின் அப்பா அவளை நாளைக்கே இன்னைக்கே ஊருக்கு கிளம்பி வர சொன்னாங்க என விஷயத்தை சொல்லிவிடுடா..” என்று கூறியவன் போனை வைக்க,

“கடவுள் என்பக்கம் இருக்காரு..” என்று நிம்மதி பெருமூச்சுடன், “போம்மா உன்னோட அப்பா உன்னை உடனே கிளம்பி வர சொன்னாராம்.. கிளம்பு..” என்று சொல்ல, “நான் முதலில் போய் எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொல்ல போறேன் மாம்ஸ்..” என்று சந்தோசமாகச் சென்றாள் ஆஷா..

அவ்வளவு சந்தோசமாக செல்லும் அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, ஒருபக்கம் ஆதி – ஆஷா இருவரின் திருமண ஏற்பாடு கொஞ்சம் விரைவாக நடக்க, இளா – இனியா இருவரின் திருமண ஏற்பாடு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் நிதானமாக நடந்தது..

அன்பு – எழில் இருவரும் மனதில் இருப்பதைச் சொல்லாமல் காலம் தள்ள கேஸில் முதல் விசாரணை நடக்கும் தேதி சொல்லப்பட அன்று அண்ணியிடம் தங்கையை விட்டு விட்டு வந்தது போலவே இன்றும் சென்னை வந்தாள் எழில்..

அன்பு இந்த கேஸிற்கு ஆஜர் ஆகிறான் என்று கேள்விப்பட்டதுமே எதிர் தரப்பு வக்கீல், “கண்டிப்பா கேஸ் தோல்விதான்..” என்று முடிவே எடுத்துவிட்டார்.. அவர் நினைத்தது போலவே நடந்தது..

விசாரணை தொடங்க, அந்த விசாரணைக்கு முத்துகுமார் வராத காரணத்தால் வாய்தா கொடுக்கப்பட்டது. அன்று கோர்ட்டை விட்டு வெளியே வந்த நால்வரும் யோசனையோடு இருக்க, “இன்னும் இப்படியே வாய்தா.. வாய்தா.. என்று இழுப்பங்களா..?” என்று சலிப்புடன் கேட்டாள் எழில்..

அவளின் முகத்தைப் பார்த்த அன்பு, “வாய்தா கொடுத்தது உன்னோட அண்ணன் ஆஜர் ஆகாத காரணத்தால்.. அடுத்த விசாரணைக்கு உன்னோட அண்ணன் வந்தால் அதுக்கு அடுத்த விசாரணையில் தீர்ப்பு வரும்.. ஏன் என்றால் உன்னோட பக்கம் தான் நியாயம் இருக்கிறது.. அதனால் கவலைப்படாமல் இரு..” என்று கூறினான் அன்பு..

அவன் சொல்வதைக் கேட்டு ஆதியின் பக்கம் குனிந்த ஆஷா, “இவங்க இருவரையும் எப்படியாவது வீட்டில் மாட்ட வைக்கணும் ஏதாவது ஐடியா இருந்த சொல்லு ஆதி..” என்று சொல்ல, “நீ அன்புவின் தங்கை நிச்சயதார்த்திற்கு வரவில்லை தானே..?!” என்று கேட்டதும் இல்லை என்று இடமும் வளமும் தலையசைத்தாள் ஆஷா..

“அவங்க பாட்டி இன்னைக்கு ஊரில் இருந்து வராங்க..” என்று சொல்ல, “அவங்க வருவதற்கும் இவங்களை மாட்ட வைப்பதர்க்கும் என்ன சம்மந்தம்..?!” என்று புரியாமல் கேட்டாள் ஆஷா..

“இவங்க இருவரும் ஒரே ஊர் தானே..? எப்படியும் எழிலை அந்த பாட்டிக்கு தெரியாமல் போகாது.. சோ, அவங்க வந்ததும் இவளைக் கண்டு ஏதாவது கேட்டால் அலை மாட்டிவிட வேண்டியது தான்..” என்று சொல்ல, “சூப்பர் ஐடியா.. அறிவுக்கு போன் பண்ணி சொல்லிரு..” என்றவள்,

“ஆமா அவங்க எதுக்கு இப்பொழுது வராங்க..?” என்று புரியாமல் கேட்டதும், “ம்ம் நம்ம இருவருக்கும் திருமணம் என்று அன்பு சொன்னதால் நம்மை ஆசிர்வாதம் பண்ண வராங்க..” என்று அவன் விளையாட்டு போல் சொன்னாலும் அதுதான் உண்மையும் கூட!

இனியாவின் நிச்சயதார்த்தத்தில் ஆதியைப் பார்த்த பொழுதே அன்புவிடம் ஜெயந்திம்மா சொல்லிவிட்டார்.. இந்த பையனின் பையனின் திருமணத்திற்கு என்னிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார்..

அன்பு தனது பாட்டிக்கு போன் பண்ணி இன்னும் ஒரு வாரத்தில் இருவருக்கும் திருமணம் என்று சொல்லவும், ஆஷாவும் தனது பங்கிருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வந்துவிட்டு வந்தாள்..

அன்புவின் தோழி ஆஷா என்று ஜெயந்திம்மாவுக்கு தெரியும்.. ஆனால் வருவது ஜெயந்திம்மா அன்புவின் பாட்டி என்று ஆஷாவிற்கு தெரியாது.. எழிலுக்கும் தெரியாது..

அன்புவும் எழிலும் இவர்கள் பேசுவதைக் கவனிக்காமல் நிற்க, இவர்கள் இருவரும் அடுத்து நக்க வேண்டியதைப் பற்றி பேசிவிட்டு அறிவுக்கும் தகவல் தெரிவித்தனர்..

ஆதிக்கும் – ஆஷாவிற்கும் வெளியே வேலை இருக்க அவர்கள் இருவரும் அன்புவிடமும், எழிலிடமும் சொல்லிவிட்டுச் சென்றனர்.. அன்பும் எழிலும் எப்பொழுது போல இன்றும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்..

எழில் காரை விட்டு இறங்கியதும் வீட்டிற்குள் செல்ல, சுமித்ரா எழிலைக் கண்டதும், “எழில் வந்துவிட்டாயா..? எப்பொழுது வந்தாய்..? காலையிலேயே வா மாதிரி அங்கிருந்து கிளம்பி இருப்பாய்..?” என்று கேட்டவர் எழிலைக் கட்டிக்கொள்ள,

“ம்ம் ஆமாம் அம்மா நான் காலையில் இங்கே வர மாதிரி தான் கிளம்பினேன்.. வந்ததும் கோர்ட்டிற்கு போனோம்..” என்று சொல்ல, அவளின் பின்னோடு வந்த அன்பைப் பார்த்துவிட்டு,

“என்னடா ஆனது கேஸ்..” என்று கேட்டதும், “வாய்தா கொடுத்துட்டாங்க..” என்று சொல்ல, “எப்பொழுது பார் வாய்தா.. வாய்தா..” என்று சொல்லியவர்,

“எழில் இன்னைக்கு என்னோட அத்தை இங்கே வாராங்க அவங்களை அழைத்துவர தான் நானும், அவரும் போகிறோம்..” என்றவர்,

“நீ வரும் விஷயத்தை இவன் என்னிடம் சொல்லவே இல்லடா கண்ணா.. வீட்டில் எல்லாம் இருக்கிறது உனக்கு என்ன விருப்பமோ செய்து சாப்பிடு.. எனக்கும் சேர்த்து நீயே சாப்பிடு..” என்று கூறியவர்,

“வாம்மா எழில் எப்படி இருக்கிறாய்.. இவன் நீ வருவதை எங்களிடம் சொல்லவே இல்லை.. இரும்மா நாங்க இருவரும் என்னோட அம்மாவை போய் கூட்டிட்டு வருகிறோம்..” என்று கூறினார்.. அவளை பேச விடவே இல்லை..

“அன்பு அறிவு மேலே இருக்கிறான் இருவரும் எழில் இடம் பேசிட்டு இருங்க நான் வந்து விடுகிறேன்..” என்று சொல்ல சரியென தலையசைத்தவன் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கேஸ் பைலைப் படிக்க மாடியில் இருந்து இறங்கி வந்த அறிவு,

“வாங்க எழில் எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டதும் புன்னகைத்தவள், “நான் நல்ல இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள்..

“நான் நலம்..” என்று சொல்ல, பக்கத்தில் இருந்த டிவிடி பிளேயரை ஆன் செய்து பாட்டு கேட்க ஆரமித்தான் அறிவு.. இவள் சென்று சமைக்க என்ன இருக்கிறது என்று பார்க்கவும் பாடல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.. அறிவுக்கு ஏதோ பிசினஸ் கால் வர செல்லை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்..

‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..!’ என்று பாடல் ஒலிக்க அன்புவிற்கு அந்த பாடல் கேட்க மனம் விரும்பினாலும் வேலை காரணமாக கேட்க முடியவில்லை.. எனவே பாட்டை நிறுத்தினான்..

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,

உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்..

அவன் பாட்டை நிறுத்திய பிறகும் பாடல் ஒலித்தது நிறுத்திய இடத்தில் இருந்தே..! அவனுக்கு சந்தேகம் வர பாடல் வந்த திசை நோக்கி சென்றான்..!

அவள் பாடல் முடிந்து திரும்பிப் பார்க்க சமையல் அறையின் சுவற்றில் சாய்ந்து அவள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவன், “எதுக்கு இந்த பாட்டை பாடுகிறாய்..?” என்று அவளிடம் வம்பிலுக்கு அவள் பதில் சொல்லாமல் வெளியே ஓட நினைக்க, அவளின் கையைப் பற்றி இழுத்தான் அன்பு.. அவளின் மார்பில் வந்து விழுந்தாள் எழில்..!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top