• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Urasathe Usurathan ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
இன்னும் எபிலாக் வரல, ஆனா இதுக்கு ரெவ்யூ எழுதாமல் இருக்க முடியல... ஸோ இதோ என்‌ பார்வையில் எப்படி இந்த கதை உரசிச்சு உசுரன்னு சொல்லறேன் ???


உரசாத உசுரத்தான்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கதையிலும் எங்க மனசை உரசி உரசி சோதிக்கறீங்களே வநிஷா இது நியாயமா? தர்மமா ? உங்களுக்கே அடுக்குமா???

அழகுன்னா என்ன சன் க்ளாஸ் ஃபிகர்?, மேன்லி லுக்? , காந்த கண்கள் ?, சிறுத்த இடை? தேன்பலா இதழ்கள்?

ச ச அழகு என்பது விழிகள் சம்பந்தபட்டதில்ல உள்ளம் சம்பந்தப்பட்டது.. அகவிழியால் அள்ளி பருகுவதே அழகுன்னு அழகா சொல்லி நம்மள அழகான ஒரு வாழ்வியலுக்கு அழகா கூட்டிட்டு போயிருக்காங்க... இரவின் மடியில் ராஜாவின் பாடல் போல் மென்மையான , மேன்மையான.. அதே சமயம் உயிர் உருக்கும் கதை...

அன்பு கிடைத்த வாழ்வு , அன்பு கிடைக்காத வாழ்வு ஒரு மனிதனை எவ்வளவு வித்தியாசபடுத்தி காட்டுது...பிள்ளைங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கணும்னா எப்படி இருக்கணும்? நிறைய முறை யோசிருப்போம், அதற்கு எடுத்துக்காட்டு குமரகுரு அப்பா... என்ன காதல் , என்ன பாசம்... காசு பணமில்லனாலும் அவர் மனைவி மீது வைத்த காதல், அன்பு...சொல்ல வார்த்தைகள் இல்லை..கண்ணுரங்கம் கண்ணுரங்கம்னு அவளுக்காகவே உருகி உருகி , மனசை உரசி உரசி உசிர உருவிட்டாரு மனுஷன்...

நல்ல ஆண்மகன் பிறப்பால் வருவதில்லை தன் தந்தை தன் தாயை நடத்தும் விதத்திலும், தன் தாய் தன் தந்தையை தாங்கும் குணத்திலும்..இருவர் அன்பில் குழுப்பாட்டபட்ட எந்த ஆணும் தி பெஸ்ட்.. அவன் மனைவியை தாங்குவான் வெட்டு சாரை போல்..

"அழகு என்பது காதலில் என்று சொன்ன மனிதர்கள்"

ஒல்லி உடம்பு , உடம்புக்கு சம்பந்தமே இல்லாத லொட லொட வாய்.. இன்ஸ்டன்ட் கவிதை, டி.ஆரின் வாரிசு என‌ அறிமுகமாகும் நாயகி அபிநயசரஸ்வதி.... அந்த பெயர் லு லுலாயிக்கு..அவள் நம் அப்பி...
என்னடா சிரிப்பா சிரிக்க வைக்கறா என அவ மனவறையே திறக்கும் போது தான் குருதி வாசம்.. எவ்வளவு அடி,வேதனை..ஆனாலும் தன் அன்பையும்,அரவணைப்பையும் விடாமல் கேசரியாய் கிண்டி தெகட்டாமல் கொடுத்தவள்... நல்ல வித்தில் முளைத்த செடி வீணாகாது ..அது போல் தாய் தந்தையின் தூய அன்பில் பிறந்து..அவர் அரவணைப்பின்றி போனாலும்.. குழந்தைகள் தன் பொம்மையை குழுப்பாட்டி, பொட்டிட்டு , கொண்டாடுமே அதே போல் ராமை அன்பால் செதுக்கி, காதல் எதையும் தகர்க்கும் தாழ்வுமனபார்மை எல்லாம் ஜூஜூபி என நத்தையென ஓட்டுக்குள் சுருங்கிய சதாவை மோபம் பிடிக்க வைத்து வைத்தே..வாழ்வில் வெற்றி பாதையில் இட்டுச் சென்று..காதலால் உரசி உரசியே நம்மை கிரங்க வைத்து உசிர் குடித்த ராட்சசி..

"அன்பு விழிகளிலில்லை இதய மொழிகளில் என சொல்லி தரும்‌ பப்பி இந்த அப்பி..."

தன் குறை கண்டு கலங்காமல், தன் நிறையை வைத்து வெற்றி பெற்று மணக்க மணக்க வாழும் வெட்டு மாமா...வெட்டின் ரகசியம் அவிழ்க்கும் போதும்.. வெட்டினால் உண்டான வெட்டியான தாழ்வுமனப்பான்மையை தன் காதலுக்காக வெட்டி எறியும் போதும்..காதலால் தன்னவளை கொண்டாடிய போதும் , தந்தைக்காக தவிக்கும் போதும்... மிஸ்டர் வெட்டு உரசி உரசியே நீ அடிச்சிட்டையா ஹிட்டு...

"அழகு என்பது புறம் தாண்டி மனதோடு மணப்பது என மோந்து மோந்தே சொன்ன மன்மதன்.."

சும்மா அங்ககுறை கொண்டவங்களை அங்க அங்கமாக கேலி, கிண்டலால் துடிக்க வைக்காம, தூண்டுகோலாக இரு... இல்ல தூர விலகி போ..உன் பரிதாபமோ , பிச்சையோ தேவையில்லை.. உள்ளார்ந்த அன்பும், தட்டி கொடுக்கும் கரமும் போதும் என அழகாய் ஆணி அடிச்சு சொல்லிட்டீங்க அக்கா.. இதுக்கு ஒரு ?

இந்த கேரக்டர் கேணைன்னு நினைப்போம் ஆனா இப்போ சொல்லபோறவன் நம்மால் உருவாக்க படுபவன்... தவறெல்லாம் நம் பக்கம் வைத்து அலேக்காக தப்பை திருப்பி விடும் நம் சமுகத்துக்கும் , நமக்கும் வினைத்தொகையென சவாலாய் நிற்கும் ராஜா...ரொம்ப யோசிக்க வச்ச கதாபாத்திரம்..

அழகு ,அறிவு , செல்வம், செல்லம் எல்லாமிருக்க வெற்று நிலையில் பூத்த கள்ளி செடி ராஜா...

## புத்திசாலியா பொறந்தா பாவமாடா... பொறாமை தீயில் பல ராஜாக்கள் பொசுங்குகின்றனர்...

## எதுக்கு அழற , அடி உதையென குழந்தையின் குமுறல் குரலை வெளி எழும்ப விடாமலே பல ராஜாக்களின் குரல்வளை நெறிக்க படுகின்றன.

## பிள்ளை பருவத்தில் சரியான அன்பு காட்டாமல் தன் துணையை கொஞ்சி,தன் பிஞ்சினை பஞ்சென தூக்கி எறியும் சில முட்டாள் பெற்றோரால் தூய அன்பின் நெடி அறியாமல் சாக்கடையை சந்தனம் என முகரும் பல ராஜாக்களை நாம் அறிவோமா??...

அப்படி பட்டவன் கையில் அன்பே உருவாய் கொழுகம்பென ஒர் உயிர் கிடைத்தால்...படர்ந்தான் அடர்த்தியாய் அவனோ சப்பாத்திக்கள்ளி முள்ளாய் குத்தியே படர்ந்தான்... அவன் அன்பு தவரல்ல காட்டிய விதம் தவறு..அவன் காதல் மொழி பொய்யில்லை அதிலோ பல இலக்கண பேதம்..

"அழகு என்பது கூட ஒருவகை முரட்டு பாசம் என உரசி உரசி‌ கூறிய தூய அன்பின் நாட்டை இழந்த ராஜா..."

குழந்தைகள் களிமண் பொம்மைகள் , அவர்களை சிற்பமாக்குவதோ அற்பமாக்குவதோ நம் கைகளில்.. அன்பினால் அவர்களை செதுக்கி சிற்பமாக்கவும் முடியும்... கடமைக்கு பெத்து போட்டுவிட்டு அவர்களை வெற்று பாறையாக்கவும் முடியும் என அழகாய்.. நறுக்கென்று இந்த சூழ்நிலையில் நம் சமுதாயத்தில் செய்யும் தவறுகளையும் அதன் பயனால் நாம் பெற்றிருக்கும் ராஜாக்களை கண் முன்னே கொண்டு வந்து..இனியாவது அத்தகைய ராஜாக்கள் வராமலிருக்க சிந்திக்க வைத்த விதம் அருமை?

குணா-கேசி, சாமியண்ணா, ராம், மணியம் சார்னு நம்மள சுத்தி எவ்வளோ அழகான மனுஷங்க..

"அடடா அழகு , பணத்துல இல்ல நல்ல குணத்திலும், பாசத்திலும்னு சொல்லி தந்த செல்வங்கள் இவங்க.."

எவ்வளவு தான் புத்திசாலியாய்/அன்பா இருந்தாலும் இந்த உலகம் புற அழகை தானே பார்க்குது.. ! ரங்கநாதன் தெரு கூட்டம்னு முகம் சுளிக்கற மக்கள் தான் பப்ல இருக்கற கூட்டத்தை ரசிக்கறாங்க...இதுல அழகு எதுல இருக்கு நீங்க தான் சொல்லணும்னு நம்மள நல்லாவே உரசி உரசி உயிர்ப்போடு இருக்க தேவையானதை சொல்லி சென்ற கதை.. வாழ்த்துகள் ? இது மாதிரி நிறைய நல்ல கதை தரணும் ???

unga azhagu tamilil romba arumaiyaa soliteenga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top