Book Offers in Ms Publications

uruvamilla oru uravu - 4

#1
அத்தியாயம் – 4

ப்ரீத்தி அன்று காலையில், வருணுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள். காயத்தை கீறி தான் மருந்திட வேண்டும், ஆனால் அந்த காயத்தை கீறும் பொழுது உண்டாகும் வலியை அவன் தாங்குவானா என்றால், அவளை பொறுத்தவரை அவனால் அது முடியும் என்று தோன்றவில்லை.

அதனால் தான், அவள் சிறிது சிறிதாக செல்லலாம் என்று நினைத்தது. ஆனால் நேற்றைய சம்பவம், அவளின் எண்ணத்தை மாற்றி அமைத்தது. ஆகையால், இன்று அவளை பற்றி முதலில் சொல்லியாக வேண்டும் அவனிடம்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றி, அங்கே அறைக்குள் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ஒரு டவலுடன். ஷவர் திறந்து அருவியாக கொட்டும் தண்ணீர் அடியில் நின்று, தான் வந்த பாதையை நினைக்க தொடங்கினாள்.

நினைக்க, நினைக்க நெஞ்சில் வலி வலி மட்டுமே. அந்த கணம் தாங்காமல், அவளுக்கு அழுகை வருவதற்கு பதில் கோபம் வந்தது. வேகமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு, டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தவள், அங்கே நின்று இருந்த வருணை கவனித்தாள்.

வருணோ, அவள் நின்று இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போய் சாரி கூறி வெளியேற போனான். ஆனால் தன்னிலை அறியாமல், கோபம் மட்டுமே பிரதானமாக கொண்டு நின்று இருந்தாள் ப்ரீத்தி அப்பொழுது.

“நில்லுங்க! எதுக்கு வந்தீங்க? சொல்லிட்டு போங்க, இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிடல் ல நிறைய வேலை இருக்கு, அதனால நாளைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை, நேர்கொண்டு பார்க்க முடியாமல் திணறினான்.

“ஹலோ! உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன், மிஸ்டர் வருண். அங்க சுவரு ல என்ன இருக்கு, என்னை பார்த்து பேசுங்க” என்று அழுத்தமாக கூறவும், அவன் அவளை பார்த்து திரும்பினான்.

தலைக்கு குளித்து இருந்ததால், தலையிலிருந்து கால் வரை ஆங்காங்கே நீர் திவலைகள் அந்த காலை நேரத்தில் முகத்தில் சிறிது கடுமை பரவ நின்று இருந்தவளை பார்த்து பெருமூச்சு விட்டான்.

“எட்டு மணிக்கு, கீழே சாப்பிட வந்திடுங்க மிஸ் ப்ரீத்தி. கொஞ்சம் இன்னைக்கே பேசிட்டா பெட்டெர்ன்னு தோணுது, இதை யோசிச்சு யோசிச்சு எனக்கு தலைவலி தான் அதிகமாகுது”.

“தயவு செய்து, நேத்து ராத்திரி மாதிரி இன்னைக்கு எந்த ட்ரிக்சும் பண்ண வேண்டாம். இப்படி தான் எல்லோரும் முன்னாடி இருப்பீங்களா?” என்று அவளை அப்படி பார்த்து, தன்னை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் கேட்டு விட்டான்.

“என்ன?” என்று அவள் புரியாமல் கேட்கவும், அவன் அவளை ஏற இறங்க பார்த்த பின், தன்னை குனிந்து பார்க்கும் பொழுது தான், வெறும் டவலுடன் நின்று இருப்பது புரிந்தது.

“ஆஆஆஆஆ! ஷிட் வெளியே போடா” என்று கூறி பக்கத்தில் இருந்த குஷன் தலையணையை எடுத்து, அவன் மீது வீசினாள்.

“சாரி சொல்லிட்டு வெளியே போக இருந்தவனை, நீ தான் கூப்பிட்டு என்னன்னு சொல்லிட்டு போக சொன்ன. இப்போ வந்துட்டு என்னை தப்பு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவனும் விடுவேனா பார் என்று பதிலுக்கு எகிறினான்.

“இன்னும் ஏன் நின்னுகிட்டு இருக்க இங்க?” என்று கோபத்தில் அவன் அருகே வந்து, அவனை பிடித்து வெளியே தள்ள நினைக்கும் பொழுது, அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவன் மேல் மோதி நின்றாள்.

இதை எதிர்பார்க்காத வருண், கீழே விழாமல் இருக்க பக்கத்தில் இருந்த மேஜையை பிடித்ததோடு இல்லாமல், அவளையும் சேர்த்து பிடித்து நிறுத்தினான்.

அவனின் கை, அவளின் வெற்று முதுகை பிடித்து இருந்தது. முதன் முதலாக, ஒரு ஆணின் தொடுகையை உணர்ந்த ப்ரீத்தி சற்று தடுமாறி போனாள் முதலில்.

சட்டென்று அவனிடம் இருந்து விலகி, பார்வையை தரையில் பதித்து மறுபுறம் திரும்பி நின்றாள். அவனும் இதை எதிர்பாராததால், உடனே அங்கு இருந்து வெளியேறி சென்றான், கதவை பட்டென்று அடைத்து விட்டு.

“ஹையோ ப்ரீத்தி! இப்படியா அவன் முன்னாடி, வெறும் டவலோடு இருப்ப. ஒழுங்கா அவன் சாரி சொல்லி, போகும் பொழுதே அனுப்பி இருக்கணும்”.

“இப்போ பாரு, அவனை திட்டி, அவன் மேலே விழுந்து என்ன நினைச்சு இருப்பான் என்னை பத்தி?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்ததோடு அல்லாமல், நகத்தை கடித்துக் கொண்டே அங்கும், இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.

“ப்ரீத்தி! நீ இன்னைக்கே என்னை கொன்னவன் யாரு? ஏன் என்னை கொல்ல நினைச்சான்? இது எல்லாம் சொல்ல போறியா வருண் கிட்ட!” என்று சஞ்சனாவின் குரல் அருகில் கேட்கவும், அதிர்ந்து கத்த போனாள்.

அதற்குள் சுதாரித்து, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து மடமடவென்று தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, அவளை நேர் பார்வை பார்த்தாள்.

“எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிட்டா, அப்புறம் மிஸ்டர் வருணை நீ கொலைகாரனா தான் பார்க்க முடியும், அப்புறம் அவர் உயிரோடு இருப்பார்ன்னு உறுதியா சொல்ல முடியாது சஞ்சனா” என்று அழுத்தமாக கூறவும், அவளும் அதை ஆமோதித்தாள்.

“சஞ்சனா! இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி இங்க நடந்ததை, நீ பார்த்தியா, இல்லையா? என்னை ஏன் நீ இங்க தங்கணும் சொல்லி, அவ்வளவு கட்டயப்படுத்தின?” என்று அவளை பார்த்து இப்பொழுது, நேரடியாக கேட்டாள் ப்ரீத்தி.

“நீ எப்படி வருண் மேல விழுந்த? கால் தடுக்கி தான, அதை நான் தான் செஞ்சேன் போதுமா! இப்போ உனக்கு நல்லா புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன் ப்ரீத்தி” என்று அவள் சிரிப்புடன் கூறவும், முறைத்தாள் ப்ரீத்தி.

“ சஞ்சனா! நீ அப்போ மேட்ச் பிக்ஸ்சிங் பண்ண நினைக்கிறியா? இல்லை அவரை குணப்படுத்த நினைக்குறியா?” என்று கடுமையாக கேட்டாள் ப்ரீத்தி.

“இதில் என்ன சந்தேகம்! கண்டிப்பா ரெண்டும் தான், வருணை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே, நீ அவரை பார்த்து மனசால விரும்பி இருக்க. இப்போ வரைக்கும் நீ கல்யாணம் பண்ணாம, ஏன் இருக்க?” என்று நெத்தியடியாக பதில் வரவும், விக்கித்து நின்றாள் ப்ரீத்தி.

“சஞ்சு! உனக்கு எப்படி தெரியும்?” என்று திக்கி திணறி கேட்டாள்.

“நீ எவ்வளவு மூடி மறைக்க நினைச்சாலும், அந்த ஒரு சில செகண்ட் நீ வருணை பார்க்கிற பார்வை தான், உன்னை முதல காட்டி கொடுத்துச்சு. உனக்கு தான் டைரி எழுதுற பழக்கம் இருக்கே, என்னைக்கும் இல்லாம அன்னைக்கு தான் உனக்கே தெரியாம, உன் பின்னாடி வந்து பார்த்தேன்”.

“அவனை நீ பார்த்தது முதல், இப்போ வரைக்கும் எல்லாம் அதுல தான எழுதுற. அவனுக்கு மட்டுமே தனி டைரி போட்டு இருக்கியே, அதுல தான் எனக்கு ரெண்டு பேரை சேர்த்து வச்சா என்னனு தோனுச்சு” என்று கூறியவளை பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.

“ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன் நான், அவனை குணப்படுத்திட்டு, நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ. இதுவரைக்கும், அவன் என்னால கஷ்டப்பட்டது போதும், இனியும் அவன் கஷ்டப்பட கூடாது”.

“அவனும், நீயும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருந்தா தான், என் ஆத்மா சாந்தி அடையும். இல்லைனா, இப்படியே தான் கடைசி வரை திரிஞ்சிகிட்டே இருப்பேன்” என்று கூறிவிட்டு சென்றவளை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

எவ்வளவு நேரம் கண்ணீர் வடித்து இருப்பாளோ, அவளின் செல்பேசி சினுங்கியத்தில் தான் தன்னிலை அடைந்து, யார் என்று பார்த்தாள். ஏதோ ஒரு புதிய எண் வரவும், அதை எடுக்காமல் மணியை பார்த்துவிட்டு கிளம்ப தொடங்கினாள்.

மருத்துவமனை செல்ல, தேவையானதை எடுத்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவள் எழுதிய அவளை பற்றிய டைரியை எடுத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் கீழே இறங்கினாள்.

ஹாலில் அவன் இல்லை எனவும், உணவு மேஜை நோக்கி சென்றாள். அங்கே அவன் இவளுக்காக காத்து இருக்கவும், இவள் எதுவும் பேசாமல் அவனுக்கு எதிராக போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

சமையல்கார அம்மா, இருவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு செல்லவும், அவள் கவனத்தை தட்டில் மட்டுமே வைத்து இருந்தாள். அவனோ, இவளின் இந்த திடீர் செய்கை புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

“தட்டை பார்த்து சாப்பிடுங்க மிஸ்டர் வருண், அப்புறம் இந்தாங்க என் டைரி. இதுல எல்லா விபரமும் இருக்கு, வந்து உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு கை கழுவிவிட்டு, டைரி கொடுத்த கையோடு வேலை முடிந்தது என்பது போல் வெளியே சென்றவளை பார்த்து சிரித்துக் கொண்டான்.

“அதான, என்ன டா அமைதியா இருக்காளே அப்படின்னு பார்த்தேன். இந்தாடா நீ கேட்டதுன்னு சொல்லி, கைல கொடுத்துட்டு போயிட்டா” என்று காலை சம்பவத்தை மறந்தவனாக, சாப்பிட்டு முடித்து கையில் இருந்த டைரியை படிக்க, மேலே அவன் அறைக்கு சென்றான் வருண்.

இங்கே மருத்துவமனை வந்திறங்கிய ப்ரீத்திக்கு, மீண்டும் அதே புது எண்ணில் இருந்து அவளின் செல்பேசிக்கு வரவும், தெரிந்தவர்களா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை உள்ளே நுழைந்து கொண்டே , அதை எடுத்து பேச பச்சை பட்டனை அழுத்தினாள்.

“ஹலோ! யாரு?” என்று இவள் கேட்டதற்கு அந்த பக்கம் சிரிப்பு சத்தம் விகாரமாக கேட்டது.

“டேய்! யாரு டா பரதேசி? காலையிலே இப்படி உயிரை வாங்குற எருமைமாடு!” என்று இருந்த கோபத்தில் எதிர்முனையில் இருப்பவரை யாரென்று தெரியாமல், எகிற தொடங்கினாள்.

“ஹா ஹா! மிஸ் ப்ரீத்தி! வருண் வீட்டுக்கு வந்த முதல் நாளே, இப்படி கோபத்தோடு இருக்கீங்க! அவனை திருத்தி, என்ன செய்ய போறீங்க?”

“நான் சொல்லுறதை கேளுங்க, வருணை பார்க்காதீங்க. அப்படி அவனை திருத்துவேன், ட்ரீட்மென்ட் கொடுப்பீங்கன்னு அடம் பிடிச்சா, உங்க உயிரை எடுத்துடுவேன் ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கவும், இந்த முறை இவள் பெருங்குரலெடுத்து சிரித்தாள்.
 
#2
“டேய்! நீ ஆம்பளைன்னா, என் முன்னாடி வா டா. இப்படி இன்னொரு தடவை போன் ல மிரட்டின, குடலை உருவி அதையே உனக்கு மாலையா சாத்திடுவேன் ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு, ரிசெப்ஷனில் அன்று பார்க்க வேண்டிய பேஷண்ட் லிஸ்ட்டை வாங்கி சென்றாள்.

இவளிடம் போனில் பேசியவனோ, போனை தூக்கி எறிந்துவிட்டு அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியை எட்டி உதைத்தான். அவனின் கோபத்தை பார்த்த, அவனின் விசுவாசி என்னவென்று கேட்டான்.

“ஒரு பொட்டச்சி, என்னை கண்டபடி பேசிட்டா. வருண் கேஸ் ல ரொம்ப தீவிரமா இருக்கா, முதல இதுக்கு காரணம் என்னனு கண்டுபிடிக்கணும்”.

“அந்த சஞ்சனாவை போட்டு தள்ளின மாதிரி, இவளையும் போட வேண்டிய சூழல் வரும் போல தெரியுது. சரியா அவன் கிட்ட இருந்து, நான் கம்பெனியை வாங்க நினைக்கும் பொழுது, இப்படி ஒரு திருப்பம்”.

“அவளை பத்தின புல் டிடைல்ஸ் எனக்கு வேணும், அதுக்கு ஏற்பாடு பண்ணு” என்று அவன் தனது விசுவாசியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றான்.

இங்கே டைரியின் முதல் பக்கத்தை திருப்பிய வருண், அங்கே பாப் கட்டிங் செய்து கோபமாக உர்ரென்று முகத்தை வைத்து இருந்த, நான்கு வயது சிறுமி ப்ரீத்தி கண்ணுக்கு தெரிந்தாள்.

“ஹா ஹா! அப்போவே அவ இப்படி தான் இருந்து இருக்கா போல” என்று நிறைய நாட்கள் கழித்து மனம் விட்டு சிரித்தான் வருண்.

பக்கத்தில் இதை பார்த்த சஞ்சனா, இன்னும் நீ நிறைய சிரிக்கணும் என்று எண்ணிக் கொண்டாள்.

“ஹாய்! நான் ப்ரீத்தி. அப்பா பெயர் சுந்தரம், அம்மா பெயர் மீனாட்சி. நவம்பர் மாசம் எட்டாம் தேதி, தீபாவளி அப்போ தான் நான் பிறந்தேனாம். அஞ்சு வயசு வரை, என் அம்மா, அப்பா கூட இருந்து இருக்கேன்”.

“ரொம்ப லேசா தான் எனக்கு நியாபகம இருக்கு, அவங்க கூட நான் இருந்த நாட்கள். அப்புறம் என் பாட்டி மரகதம் கூட தான், நான் வளர்ந்தேன்”.

“அஞ்சு வயசில், என் அப்பா, அம்மா ஒரு விபத்தில் இறந்த பொழுது யாரும் என்னை பார்த்துக்க முடியாது சொல்லிட்டாங்க. என் பாட்டி தான் என்னை எடுத்து, இங்க கூட்டிட்டு வந்து வளர்த்தாங்க”.

“என்னோட iq லெவல் அப்போ கூட இருக்கு அப்படின்னு ரெண்டு கிளாஸ் தாண்டி போட்டாங்க ஸ்கூல் ல. அப்போ ஆரம்பிச்சது, எனக்கு பிரச்சனை”.

“ஏய்! என்ன பெரிய படிப்ஸா நீ? கிளாஸ்க்கு வர மிஸ் எல்லாம், உன்னையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. உன்னை மாதிரி நாங்க நல்லா படிக்கணும், பணிவா இருக்கனும், இப்பட, அப்படின்னு”.

“ஒழுங்கா நாங்க சொல்லுறதை கேட்டா, நீ தப்பிச்ச. இல்லை அப்புறம் உன்னை நாங்க வச்சு செஞ்சிடுவோம், ஜாக்கிரதை” என்று அந்த பத்து வயது பிள்ளைகள், எட்டு வயது சிறுமியை ஒவ்வொரு நாளும், படுத்தி எடுக்க தொடங்கினர்.

பாட்டியிடம் தன் மனக்குமுறலை கொட்டி விடுவாள், தினமும். அவர் பொறுமையாக இருக்கும் படி கூறுவார், எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் என.

ஆனால் அதன் பிறகு தான், அவள் வாழ்வில் பெரிய பிரச்னையை எதிர்கொண்டாள்.

பள்ளி வாசலில் இவள் நுழையும் பொழுதே, அவளை வம்பு வளர்க்க எப்பொழுதும் போல் அந்த கூட்டம் கூடி இருந்தனர். இவள் அவர்களை கண்டு கொள்ளாமல், சென்ற பொழுது அவர்கள் கோபத்தில் அவளை பிடித்து நிறுத்தி அடிகள் கொடுக்க தொடங்கினர்.

இவர்களை, ஏற்கனவே பிரின்சிபாலிடம் கம்ப்ளைன்ட் செய்து இருந்தாள் ப்ரீத்தி. ஆனால் அவரோ அவர்கள் எல்லாம் பெரிய இடத்து பிள்ளைகள், முக்கியமாக அரசியல் பின் புலம் உள்ள பிள்ளைகள். நாம் ஒன்றும் செய்ய முடியாது, என்று கையை விரித்து விட்டார்.

“பொறுமையா இரு கண்ணு, அப்போ தான் நம்மனால நல்லா இருக்க முடியும். படிப்பு நமக்கு ரொம்ப முக்கியம், இங்க பிள்ளைகளை தவிர மற்ற எல்லோரும் நல்லா தான இருக்காங்க. அதை பாரு டா கண்ணு, நீ பெரிய ஆள் ஆவுறது தான் உங்க அம்மா, அப்பா கனவு”.

“கனவு நனவாக, நாம கொஞ்சம் இதை எல்லாம் பொறுத்து போகனும். நம்ம கிட்ட இப்போ ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி, பெரிய பின் புலம் கிடையாது. படிப்பு தான் நமக்கு, பெரிய பதவியை கொடுக்கும். அதனால, பொறுத்து போ ராசாத்தி” என்று அவள் பாட்டி, ஒவ்வொரு முறை இவள் சொல்லும் பொழுது, கூறும் ஒரே வசனம்.

இந்த முறை திருப்பி அடிக்க வேண்டும், நம்மிடம் வம்பு வளர்த்தால் என்று அவள் ஒரு உறுதியுடன் பள்ளி சென்றாள். மூன்று நாள் முன் தான், அவர்கள் பள்ளியில் ஒரு பெண் அங்கே ஸ்ட்ரெஸ்சில், தூக்கில் தொங்கி உயிர் விட்டாள் என்று லீவ் விட்டு இருந்தார்கள்.

இன்று பள்ளி உள்ளே வரும் பொழுது, வழக்கம் போல் அவர்கள் இவளை நெருங்கி வரும் பொழுது, அவள் கண்ணுக்கு அந்த தூக்கில் தொங்கிய பெண் கண்ணுக்கு தெரிந்தாள்.

“நீங்க இறந்ததா சொன்னாங்க, உங்க போட்டோக்கு மாலை எல்லாம் போட்டாங்க. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க, கல்கி அக்கா?” என்று அந்த ஆத்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

அவள் பேசியதை கேட்டவர்கள், அவளை என்ன உளறுகிறாய் என்று மிரட்டினார்கள். அவளோ, தான் பார்த்துக் கொண்டு இருப்பதை எடுத்துக் கூறிக் கொண்டு இருந்தாள்.

அன்று மட்டும் அல்லாமல், அவள் கண்ணுக்கு தெரிந்தவற்றை எல்லாம் அவள் கூறும் பொழுது, அவள் கண்ணுக்கு பேய் தெரிகிறது என்று உணர்ந்து, அவளிடம் இருந்து ஒதுங்க தொடங்கினர்.

இது பற்றி அவள் பாட்டியிடம் பேச, அவர் இதைக் கேட்டு மேலும் அதிர்ந்து, தனக்கு தெரிந்த வழிமுறைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவளை பயப்படாமல் இருக்க செய்ய, சில தாயத்துக்களை கையிலும், கழுத்திலும் கட்டி விட்டார்.

அவளுக்கு முதலில் இது பயப்படும் விஷயமாக தோன்றவில்லை, ஆகையால் படிப்பில் முழு கவனம் செலுத்தி, அதில் நல்ல மதிப்பெண்களை வாங்க தொடங்கினாள்.

பாட்டிக்கோ, மனது நெருடிக் கொண்டே இருந்தது. இது நல்லதற்கா, அல்லது கெட்டதற்கா என்று. ஆகையால் இவளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, புகழ் பெற்ற ஜோசியர் ஒருவரிடம் சென்றார்.

அவள் ஜாதகத்தை கணித்த அந்த ஜோசியர், அவளுக்கு ஆன்மாக்கள் கண்ணுக்கு தெரியும் என்பதை கூறினார். மேலும், அவர்களால் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறிய பிறகு தான், பாட்டி சற்று ஆசுவாசமானார்.

ஆனாலும், பேத்திக்கு பாதுகாப்பாக எப்பொழுதும் அவர் கூடவே இருந்து வந்தார். பள்ளி முடிந்து கல்லூரிக்கு அடி எடுத்து அவள் வைக்கும் பொழுது தான், அங்கே சஞ்சனாவை அவள் கண்டாள்.

“ஹாய்! ஐ அம் சஞ்சனா, பி.காம்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஹாய்! நான் ப்ரீத்தி, பி.ஏ.(pshycology)” என்று இவளும் கை கொடுத்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

இருவரும், வேறு வேறு வகுப்பு என்றாலும் ஆங்கிலம் ஒரே வகுப்பு இருவருக்கும். அங்கு தான் இவர்களின் நட்பு பூத்து குலுங்க தொடங்கியது.

“ஹே ப்ரீத்தி, இந்த தடவை லீவ்க்கு என் கூட எங்க வீட்டுக்கு வரியா” என்று சஞ்சனா அழைத்தாள்.

“இல்லை சஞ்சு, பாட்டி வீட்டுல தனியா இருப்பாங்க, அவங்களை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். படிக்க நான் இப்படி வெளியே வர மாதிரி, அவங்க அரசு பள்ளியில், சத்துணவு தயாரிக்க போயிடுவாங்க”.

“நானும், அவங்களும் மட்டும் தான் வீட்டுல. சோ நான் எங்கேயும் போக மாட்டேன், நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வாயேன் இந்த தடவை, எங்க பாட்டிக்கு உன்னை அறிமுகப்படுத்துறேன்” என்று ப்ரீத்தி அழைக்கவும், சஞ்சு அவள் அன்னையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடைசி பரீட்சை முடிந்தவுடன், ப்ரீத்தியுடன் அவள் வீட்டுக்கு வந்தாள் சஞ்சனா.

சஞ்சனா விடுதியில் தங்கி படிப்பதால், அவள் பெட்டியுடன் அப்படியே இங்கே வந்துவிட்டாள். அந்த பத்து நாட்கள் முழுவதும், அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக பொழுது கழித்து, சந்தோசம் அடைந்தனர்.

அப்பொழுது தான் சஞ்சுவுக்கு, ப்ரீத்திக்கு ஆன்மாக்களை பார்க்கும் திறன் இருப்பதை அறிந்தாள். அதை வைத்து கேலி செய்தவள், தானே ஒரு ஆன்மாவாக இன்று அவள் முன்னே நின்று கொண்டு இருப்போம் என்று அவள் எண்ணி இருப்பாளா?

தொடரும்...
 

Latest Episodes

New comments

Latest updates

Top