• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 98 74.8%
  • நன்று

    Votes: 33 25.2%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    131

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
செந்தமிழ்


சூரியன் உச்சி வானில் நின்று கொண்டு உக்கிரமாய் பார்த்து கொண்டிருக்க, எல்லோருமே அந்த பெரிய விளையாட்டு திடலில் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தனர்.

அந்த பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடந்து கொண்டிருக்க, எல்லோருமே போட்டிகளில் ஆர்வமாய் பங்குக் கொண்டு தங்கள் திறமைகளை பறைச்சாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தியபடி ஒரு கூட்டம் ஆரவாரித்து கொண்டிருந்தது.

அதுவும் ஓட்டப்பந்தயம் நிகழும் போதும் எழும் சத்தம் அங்கே ஓடுபவர்களின் வேகத்தையும் வெற்றியையும் கூட தீர்மானித்தது. அந்த பெரிய திடலில் ஒரு ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி வெற்றியை அறிவித்து கொண்டிருந்தார் ஆசிரியர் மகேந்திரன் தன் கனிர் குரலால். அவரின் தூயதமிழ் உச்சரிப்பின் கம்பீரம் அந்த இடத்திலுள்ளவர்களை வசீகரித்து கொண்டிருந்தது.

போட்டியின் முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் அரங்கத்தில் பெரும் குழப்பமே விளைந்து கொண்டிருந்தது. நேதாஜி டீமும் ஜான்சி ராணி டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.

இறுதி வெற்றி கோப்பையை யார் தட்டிச் செல்வது என்ற பூசலில் இரு அணியுமே விட்டு கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய பூசலை சமாதானம் செய்ய வேண்டிய ஆசிரயர்களும் கூட சண்டையிட்டு கொண்டிருக்க அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் நீண்டு கொண்டிருக்க இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தனர்.

நேதாஜி அணியினர் சேர்ந்து அந்த அணியின் தலைவன் ரகுவை ஜான்சி ராணி அணியினரில் இருந்து யாராவது ஒருவர் கலந்து கொண்டு வீழ்த்திவிட்டால் வெற்றியை விட்டு தருவதாக சொல்ல, யாருமே அவனை எதிர்த்து ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயாராக இல்லை.

இப்போழுது உண்மையில் பிரச்சனை முடிவுக்கு வந்து வெற்றி நேதாஜி அணிக்கு அறிவிக்கப்படும் நிலையில், ஜான்சி ராணி அணியிலிருந்து அதே வகுப்பு மாணவி செந்தமிழ் முன்னாடி வந்து தான் போட்டியில் கலந்து கொள்கிறேன் என முன் வர அங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. ஆணுக்கு நிகராய் பெண் என்பதை தாண்டி இருவருமே ஓட்டபந்தயத்தில் வல்லமை பொருந்தியவர்கள் என அந்த பள்ளிக்கே தெரியும்.

ஆணுடன் பெண் போட்டியிடுவதா என்ற சர்ச்சைகளை அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாற்றியமைத்தார். அவர்கள் இருவருமே சரிசமமான பலம் கொண்டவர்கள் என்று உரைத்து போட்டிக்கு சம்மதம் சொல்ல களத்தில் இருவருமே இறங்கினர்.

ஆயிரத்து இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. எல்லோருமே அந்த போட்டி நடக்கும் களத்தையே ஆர்வமாய் உற்று நோக்கி கொண்டிருந்தனர்.

ரகு மற்றும் செந்தமிழ் இருவரின் பார்வையும் ஒரு சேர மோதிக் கொள்ள அவர்கள் இருவருக்குமே வெற்றியை ஈட்டுவதே குறிக்கோளாய் இருந்தது. உடற்கல்வி ஆசிரயர் குரலை உயர்த்தி கம்பீரமாய் "ஆன் யுவர் மார்க்... கெட் செட் கோ" என்றார்.

இருவருமே ஒருவரை ஒருவர் வீழ்த்த மும்முரமாய் ஓட்டம் பிடிக்க, அதுவல்லவா போட்டி என்றளவுக்கு அந்த விளையாட்டுத் திடலே அவர்களை உற்சாகப்படுத்த அதிர்ந்து கொண்டிருந்தது. இருவருமே விட்டுகொடுக்க தயாராக இல்லாத பட்சத்தில் சரிசமமாய் ஓடும் அவர்களில் யார் வெற்றி கொள்வார்கள் என்பதை தீர்மானிக்க முடியாமல் கூர்மையான விழிகளோடு பார்த்து கொண்டிருந்தனர். இருவருமே கடைசி சுற்றில் தங்களின் முழு முயற்சியோடு வேகமெடுக்க

"தமிழச்சி தமிழச்சி தமிழச்சி" என்று குரல் ஓங்கிய அதே நேரத்தில் அவனுக்கென்ற ஒரு கூட்டம் "ரகு ரகு ரகு" என்று ஒலிக்க அங்கே நேதாஜி அணி, ஜான்சி ராணி அணி என்பதை மறந்து அந்த போட்டி ஆர்வத்தின் எல்லையின் விளிம்பில் ரொம்பவும் எதிர்பார்ப்பை அதிகரிக்க கடைசி சில நொடிகளில் வெற்றியை யார் வீழ்த்துவார்கள் என்ற ஆவலில்... தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழ அவள் கனவு கலைந்து விழித்தெழுந்தாள்.

அவள் அப்படி விழுந்தால் அடிபடாத வண்ணம் கீழே மெத்தை விரிக்கப்பட்டிருக்க, இது அவளுக்கு எப்போதும் வழக்கம் போல.

அதிர்த்தியோடு எழுந்து "தமிழ்... உனக்கு இதே வேலையா போச்சு " என்று தனக்குத்தானே கடிந்து கொண்டவள் தரையில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

எல்லோருமே இயல்பாய் புதுவிதமான அல்லது அர்த்தமில்லாத, ஏன் சில நேரங்களில் நடக்க போகும் நிகழ்வுகளை கூட கனவாய் காண்பார்கள். ஆனால் அவளுக்கு எப்போதும் நடந்து முடிந்த நிகழ்வுகள் அப்படியே நடந்ததுபோலவே கனவாய் தோன்றுவது வழக்கம். கனவின் பாதியிலோ அல்லது முடிவிலோ இப்படி படுக்கையில் இருந்து வீழ்வதும் வழக்கமான ஒன்றுதான்.

அதை குறித்து மும்முரமாய் சிந்தித்தவள் 'நேத்து அந்த நீயூஸ் படிச்சதோட தாக்கம்... அதான் ரகு ஞாபகம் வந்திடுச்சு... இதே சாக்கா வைச்சு அவனுக்கு கால் பண்ணி பேசினா என்ன?" என்றபடி தோள்களில் சரிந்த முடியை கோதியபடி எழுந்து கொண்டாள்.

மேஜை மீதிருந்த கைப்பேசியை எடுத்து அவள் அழைப்புவிடுக்க எதிர்புறத்தில் ஒரு குரல் உற்சாகமான தொனியில் "ஏடி தமிழச்சி... என்னடி திடீர்னு என் ஞாபகம்" என்றான்.

"இல்லடா... ஒரு கனவு கண்டேன்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாக,

எதிர்புறத்தில் சிரிப்பின் ஒலி அதிகமாய் கேட்க செவியிலிருந்து கைப்பேசியை தள்ளி வைத்து கொண்டாள்.

அவள் கோபத்தோடு "போதும் நிறுத்துடா" என்று சொன்னதும்

"அடி கிடி ஒண்ணும் படலயே... ஆம்புலன்ஸ் ஏதாச்சும் அனுப்பட்டுமா ?" என்று அவன் கேட்க

"அதெல்லாம் சேஃப்பா லேண்டாயிட்டேன்" என்றாள்.

மீண்டும் சிரித்தவன் "ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி நடந்தது... இன்னுமாடி உனக்கு அந்த கனவு வருது... " என்று கேட்டான்.

"பின்ன... கனவிலயும் வந்து டார்ச்சர் பன்ற" என்று சொல்லவும்

"கனவிலயும் நான்தானே வின் பண்ணிருப்பேன்" என்றான்.

"அதுக்குள்ள நான்தான் முழிச்சிட்டேனே"

"முழிச்சிட்டேன்னு சொல்லாதே... விழுந்தேட்டேன்னு சொல்லு"

"ஆமாம்... விழுந்தட்டேன்... பட் நீ வின் பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லாதே... பிஃராட்டு... நீ எப்படி வின் பண்ணேன்னு எனக்குதானே தெரியும்" என்றாள்.

"எப்படியோ... ஜெய்ச்சிட்டேன் இல்ல... தட்ஸ் அ மேட்டர் "

"நேர்மையில்லாத வெற்றி நிலைக்காது"

"அன்னைக்கும் இதானடி சொன்ன... என்னாச்சு... ஷீல்டை நேதாஜி டீம்தானே வாங்குச்சு" என்றான் கர்வத்தோடு. அப்போது அந்த நாள் அவள் கண்முன்னே நிழலாடியது. அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் காயப்படுத்த மௌனமாயிருந்தவளிடம்

"என்ன தமிழ் ... ஸைலன்ட்டாயிட்ட... ப்ஃலிங்ஸா... " என்றான்.

"இப்பவரைக்கும் நீ என்கிட்ட ஸாரி கேட்டியாடா" என்றவளின் கோபத்தை உணர்ந்தவன் "இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... நல்லா யோசிச்சு பாரு... நீ தோற்றாலும் நீ என்கிட்ட தைரியமா போட்டி போட்டதுக்காக பெருமையா பேசுவாங்க... அதுவே நான் தோற்றா... பொம்பள புள்ளகிட்ட போய் தோற்றிட்டியேன்னு அவமானப்படுத்துவாங்க..." என்றான் ரகு.

"தப்பை நியாயப்படுத்திற... சரி போகட்டும் விடு... போனா போதுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்" என்றாள்.

இருவருமே ஒருவருக்கொருவர் அந்த பசுமையான நாட்களை எண்ணி புன்னகையித்து கொள்ள, தமிழ் அவனிடம் "நாம மீட் பண்ணி ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல" என்றாள்.

ரகுவும் ஆமோதித்து "ம்ம்ம்... ஆமாம்... ... நான் இப்போ ஒரு கேஸ் விஷயமா சென்னைக்கு வர்றேன்... அப்போ மீட் பண்ணுவோம்" என்றான்.

தமிழ் யோசனையோடு "கேஸ்னா அந்த ஆர்க்கியலாஜிஸ்ட் சூசைட் கேஸ்தானே... ஏதாச்சும் க்ளூ கிடைச்சிதா" என்று அவள் ஆர்வமாய் கேட்க

"உம்ஹும்...ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல ... இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய மேட்டர்... பெர்ஸன்ல் ரிஸன் மாதிரி எதுவும் தெரியல...
ஆமாம் உனக்கென்ன அந்த கேஸ்ல இவ்வளவு ஆர்வம்" என்று அவன் சந்தேகமாய் கேட்க அவள் இயல்பாக

"ஆர்வம்தான் ரகு... ஏன்னா எனக்கு அவரை நல்லா தெரியும் ... அவரோட டெத் எனக்குமே பெரிய ஷாக்"
என்றாள்.

"ஓ அப்படியா" என்று யோசனையில் ஆழ்ந்தவன் அப்படியே சில நொடிகள் அமைதி காக்க

"ஏ ரகு... என்ன போலீஸ் மூளை யோசிக்க ஆரம்பிச்சிடுச்சா" என்று சொல்லும் போதே எதிர்புறத்தில் அவன் சுதாரித்து கொண்டு,

"நாம சென்னை வந்த பிறகு உன்னை வந்து மீட் பன்றேன்... இதை பத்தி அப்போ டீடைல்லா பேசுவோம்..." என்றான்.

"ஒகே ரகு... வந்ததும் மறக்காம மெஸ்ஜ் பண்ணு" என்று சொல்ல

ரகுவும் "கண்டிப்பா" என்று சொல்லியபின் அவர்களின் உரையாடல் அங்கே முடிவுற்றது.

அவனிடம் பேசிய பின் அவள் சிந்தனையில் ஆழ்ந்துவிட உடனே அவளருகில் இருந்த பழைய செய்தி தாளை புரட்டி அதிலிருந்த செய்தியை படிக்கலனாள். பிறகு மெல்ல அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தாள்.

இந்த நேரத்தில் அவளின் படுக்கை அறை குறித்து விவரித்தை பதிவு செய்தே தீர வேண்டும். அந்த அறை இயல்பான தோரணையில் காட்சியளிக்கவில்லை. முற்றிலுமாய் வித்தியாசமாகவும் அத்தனை விசாலமாகவும் ஒரு வீட்டின் முகப்பறை என்று சொல்லுமளவுக்கு இருந்தது. அந்த அறை அவளின் செல்வசெழிப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவளின் எண்ணங்களையும் பிரதிபலித்தது.

அங்கே நிரம்பியிருந்த பழமையான பொருட்களும் புத்தகங்களும் அது ஒரு அருங்காட்சியகமோ அல்லது நூலகமாகமோ என சந்தேகம் கொள்ளச் செய்ய அங்கே கலைந்திருந்த நூல்கள் பலவும் தமிழ் சார்ந்த இலக்கியங்களும் வரலாறுகளுமாகவே இருந்தன. அது மட்டுமின்றி சுவறே தெரியாதளவுக்கு அத்தனை படங்கள் மாட்டியிருக்க அவை அனைத்தும் கோவில்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் மற்றும் பழமையான பொருட்களின் புகைப்படங்களாகவே இருக்க அவை எல்லாமே அவளே தேடி தேடி படம் பிடித்தவை என்பது தெளிவாக தெரிந்தது.

இவற்றோடு அல்லாமல் அந்த விந்தையான அறையில் மற்றொரு சிறப்பம்சம் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியும்.

கூர்மையான விழிகளும் தலைப்பாகையும் மீசையும் மட்டும் அழுத்தமான கருமைநிறத்தில் தீட்டப்பட்டிருக்க அது கம்பீரத்தின் மொத்த உருவமான மகாகவி பாரதியின் திருவுருவம்.

அந்த முகத்தோற்றம் அந்த அறையின் கம்பீரத்தை பன்மடங்கு அதிகரிக்க தமிழ் பற்றை அல்ல தமிழின் மீதான அவளின் அதீத காதலையும் மோகத்தையும் அந்த அறை அழுத்தமாய் பறைசாற்றி கொண்டிருந்தது.

செந்தமிழ் அவளுக்கே உரிய பாணியில் பேண்ட் ஷர்ட்டை உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கச்சிதமாய் அணிந்து கொள்ள, தோள்களில் சரிந்த கூந்தலை தூக்கி ஒரு முனையில் கட்டிக் கொண்டாள். உடை மேற்கத்திய ரீதியில் இருந்தாலும் அவள் தமிழ் கலாச்சாரத்தின் அக்மார்க் ரகபெண் என்று அவளே சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவல்லாது அவளை அவளின் தோற்றத்தின் அழகை தாண்டி திமிரும் தைரியமுமே திண்ணமாய் பிரதிபலிக்க அழகிற்கான முக்கியத்துவம் அவளை பொறுத்த வரை கொஞ்சம் குறைவுதான். அதே சமயத்தில் அவள் தன் அழகை முன்னிறுத்தினால் பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் தேவதை அம்சம் என்பதிலும் ஐயப்பாடில்லை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தமிழ் புறப்பட்டு அறையை விட்டு வெளியேற அவளின் பிரம்மிப்பூட்டும் அந்த பிரமாண்டமான வீடு ஆள்அரவமின்றி காட்சியளிக்க அவள் அழைத்த பின்னரே வேலையாட்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்தனர். அவர்களில் ஒருவனிடம் "ரூமை க்ளீன் பண்ணிட்டு... லாக் பண்ணிடுங்க" என்று சொல்லி சாவியை அவனிடம் நீட்டினாள்.

கருணா தலையசைத்து ஆமோதித்தவன் அவளிடம் மெல்ல"ஐயா... நீங்க எழுந்ததும் உங்ககிட்ட பேசினும்னு ரொம்ப நேரமா காத்திட்டிருக்காரு " என்றான்.

இதை கேட்டு அவளின் முகம் முற்றிலுமாய் வெறுப்பாய் மாறியிருந்தது. அவள் சலிப்போடு எப்படி இவருக்கு சொல்லி புரிய வைப்பது என்று யோசிக்க "தமிழ்" என்று அவளின் தந்தை விக்ரமவர்மனின் அழைப்பு கேட்டு
விருப்பமின்றி அவர் முன்னே வந்து நிற்க கம்பீரமாய் சோபாவில் வாட்டசாட்டமாய் அமர்ந்திருந்தவர் இறுக்கமான முகத்தோடு "உட்காரு தமிழ்.. நான் உன்கிட்ட பேசினும்" என்றார்.


"சாரிப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நாம அப்புறம் பேசலாம்" என்று தவிர்த்துவிட்டு அவள் வேககாய் வாசல்புறம் நோக்கி போக

"தமிழ் நில்லு...." என்று குரலை உயர்த்த, அவள் திரும்பி வந்து நின்றாள்.

மேலும் அவர் "நீ இப்படி பிடி கொடுக்காமலே நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்... மாப்பிள்ளை வீட்ல எப்ப வந்துபார்க்கிறதுன்னு நச்சரிச்சிட்டே இருக்காங்க" என்றார்.

"எனக்கு விருப்பமில்லைன்னு முன்னாடியே சொல்லிட்டேன் ல... திரும்ப திரும்ப இதே கேள்வியையே நீங்க கேட்டா என் பதில் மாறிடுமா என்ன?" என்று கோபமாய் சொல்ல அப்போது பின்னோடு வந்த ஒரு பெண்மணியின் குரல் "அதான் வேண்டாங்கிறளே அப்புறம் ஏன் அவளை தொல்லை பன்றீங்க" என்றது.

தமிழின் பார்வை வியப்பில் அகல விரிந்தது 'சித்தி ஏன் இன்னைக்கு நமக்கு சாதகமா பேசிறாங்க' என்று யோசித்து கொண்டிருக்க விக்ரமவர்மன் அவரின் இரண்டாவது மனைவி விஜயாவை நோக்கி "நீ உள்ளே போ... தேவையில்லாம இதுல நீ தலையிடாதே" என்றார்.

மீண்டும் அவர் தமிழை நோக்கி "உன் விருப்பமிருந்தாலும் இல்லன்னாலும் இந்த கல்யாணம் நடக்கதான் போகுது... நீயே பேசாம உன் மனசை மாத்திக்கிற வழியை பாரு" என்றார்.

தமிழ் தீர்க்கமாய் அவரை நோக்கி "என் விருப்பமில்லாம எதையாச்சும் செஞ்சீங்க... அப்புறம் ஏடாகூடாமா நான் எதையாச்சும் பண்ணிடுவேன் பார்த்துக்கோங்க" என்று எச்சரிக்கையாக அவள் உரைத்துவிட்டு அகல, அவருக்கோ உண்மையில் இந்த திருமணத்தை எப்படி நடத்த போகிறோம் என்று அச்சம் தொற்றி கொண்டது. தன்னிலைமையை எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று யோசித்து கொண்டிருக்க விஜயா அப்போது அறைக்குள் இருந்த தன் மகன் ரவிவர்மனிடம் ஏதோ ஓதிக் கொண்டிருந்தாள்.

"அந்த திமிரு பிடிச்சவளே கல்யாணம் வேணாங்கிற... இவருக்கு என்னடா திடீர்னு பொண்ணை மேல ரொம்ப அக்கறையாம்... இந்த சம்பந்தத்தை நம்ம தேவிக்கு பார்த்திருக்கலாம்னு நான் எத்தனை தடவை சொன்னேன்... அந்த மனிஷன் காதிலேயே வாங்கிக்கலயே ... என்னதான் இருந்தாலும் நான் அவருக்கு இரண்டாந்தாரம்தானே" என்று அவர் அலுத்து கொண்டு வருத்தப்பட,

ரவி அப்போது தன் உடையை கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டிருந்தான். அவனின் தோற்றம் ஆடம்பரத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை மாறாய் அவனின் பணத்திமிரையும் உரைக்க சாவகாசமாய் அம்மாவின் இரு பக்க தோள்களை பிடித்தபடி "நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படறீங்க... அதுவும் நான் இருக்கும்போது... மாப்பிள்ளை வீட்டில இருந்து இந்த கல்யாணத்தை அவங்களே வேணான்னு சொல்வாங்க... அதுவும் இந்த மாதிரி பொண்ணு வேண்டவே வேண்டான்னு சொல்வாங்க... அதுக்கப்புறமா எப்படியாவது பேசி இந்த சம்பந்தத்தை நம்ம தேவிக்கு பேசி முடிக்கிறேன்... பார்த்துக்கிட்டே இருங்க" என்றான்.

விஜயா அவனை நோக்கி "எப்படிறா ?" என்று கேட்க அப்போது ரவி தன் தாயிடம் சூட்சமமாய் பார்த்த பார்வையில் அவன் ஏற்கனவே திட்டத்தை சாமர்த்தியமாய் செயல்படுத்திவிட்டான் என்று தோன்றியது.

அப்போதுதான் விஜயாவின் மனதில் கனலென எரிந்து கொண்டிருந்த பொறாமை தீ லேசாய் அடங்கியது.

தமிழ் காரில் புறப்பட்ட சில நொடிகளில்
அவளின் தாத்தா சிம்மவர்மனை பற்றிய எண்ணங்கள் அவளை அலைகழிக்க அவரின் மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு. அந்த மரணமே அவளுக்கு தனிமையின் கொடுமையை புரிய வைத்தது. பிறந்ததும் தாயின் மரணம், உடனடியாக அப்பாவின் இரண்டாவது திருமணம் என மோசமான சூழ்நிலைகளில் இருந்து அவளுக்கு பக்கபலமாகவும் எல்லா உறவாகவும் துணை நின்றது அவளின் தாத்தா சிம்மவர்மன்தான். அவர் "ஏ தமிழச்சி" என்று செல்லமாய் அழைப்பதை மனதிற்குள் எண்ணி பார்த்து கொள்ள இப்போது அந்த ஞாபகங்கள் அவளுக்குள் வேதனை புகுத்தி கண்கள் கலங்கச் செய்தது. பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு 'நான் உங்கள் தமிழச்சி பேசுகிறேன்' என்று சொன்னால் மட்டுமே போதும். எல்லோருமே வெற்றி கோப்பை யாருடையது என்பதை தீர்மானித்துவிடுவர். அதனாலயே தமிழச்சி என்பது அவளின் பெயரையே மறக்கடித்து அவளின் தனி அடையாளமாய் மாறியிருந்தது.


சிம்மவர்மனின் தமிழ் பற்றுதான் அவளுக்குள்ளும் இப்போது மலையென வளர்ந்து நிற்கிறது. அவர் பழமையான ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் போன்றவற்றை சேகரித்து அவற்றினை எல்லோருக்கும் புரியும் வண்ணம் நூலாக வெளியிட்டவர்.

ஜெமின் வம்சத்தில் பிறந்திருந்தாலும் சிம்மவர்மன் சொத்து ஆடம்பரம் இதில் எல்லாம் நாட்டமில்லாதவர். தமிழின போராட்டம் போன்றவற்றில் முதலிடத்தில் நிற்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அரிசியல் பதவிகளும் தேடி வர அவற்றை எல்லாம் துச்சமாக ஒதுக்கிவிட்டவர். ஆனால் செந்தமிழின் தந்தை விக்ரமவர்மன் அதை தன் வளர்ச்சிக்கு சாதகமாக்கி அரிசியல் சாம்ராஜ்ஜியத்தில் புகுந்து அவருக்கென்று ஒரு பெயரை நிலைநாட்டிக் கொண்டார்.

இன்று அமைச்சர் பதவியிலிருந்து கொண்டு அரசியல் செல்வாக்கை சரியாய் பயண்படுத்திக் கொள்ளும் சூத்திரதாரி. அதுவும் தந்தையின் மரணத்திலும் அனுதாபத்தை சம்பாதித்து பெயரையும் புகழையும் அதிகரித்து கொண்டார்.

ஆனால் செந்தமிழிற்கு தந்தையின் சொத்து செல்வாக்கு அரசியல் பதவியில் நாட்டமில்லை. அவளுடைய தாத்தா நடத்தி வந்து கொண்டிருந்த 'தமிழச்சி' என்ற பத்திரிக்கையை அவருக்கு பிறகாய் அதே போல ஏற்று நடத்துவதிலும் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கல்வெட்டியல் கற்பதிலுமே அவளின் ஆர்வம் மிகுந்திருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடந்த பல பூசல்களில் மனம் நொந்தே அவளின் தாத்தா மரணித்ததை இன்னும் அவள் மறக்க இயலவில்லை. அதற்குள் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் தந்தையின் மீது அவளுக்குள் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.

மரணிக்கும் தருவாயில் அவளின் தாத்தா சிம்மவர்மன் சொன்னது இப்போதும் அழுத்தமாய் அவள் நினைவில் பதிந்திருந்தது. எந்த காரணத்தை கொண்டும் நம்முடைய பாரம்பரிய அரண்மனையை விற்க கூடாதென்றும், அதே சமயத்தில் உன் தந்தை காட்டும் மாப்பிள்ளையை மட்டும் நீ திருமணம் செய்து கொள்ளவே கூடாதென்றும் உரைத்தார். மணம்புரிபவன் உன் மனதிற்கு விருப்பமானவனாக மட்டுமே இருக்க வேண்டுமென அவர் அத்தனை கண்டிப்பாய் உரைத்திருக்க இப்போது தன் தந்தையின் எண்ணத்தை எப்படி முறியடிப்பது என்பதே அவளின் ஒரே குறிக்கோளாய் இருந்தது.

அப்போது அவளின் சிந்தனையை தடை செய்யும் விதமாய் வந்த கைப்பேசி அழைப்பை ஏற்றவளுக்கு கிடைத்த தகவல் கோபத்தை ஏற்படுத்த காரை உடனே அசிஸ்டென்ட் கமிஷன்ர் அலுவலகம் நோக்கி திருப்பினாள்.

*****

வீரேந்திரன்


பரபரப்போடு செயல்பட்டு கொண்டிருந்த அந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் எல்லோரின் பார்வையிலும் அச்சமும் என்ன நடந்திருக்கும் என்ற ஆவலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்க அசிஸ்டென்ட் கமிஷ்னர் ராஜ வீரேந்திர பூபதி தன் அறைக்குள் கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்தான்.

உயரமும் கம்பீரமும் அவனின் காக்கி உடையில் இன்னும் மிடுக்காய் காண்பிக்க அந்த கூர்மையான விழிகள் அவனின் சீற்றத்தை அழுத்தமாய் வெளிப்படுத்தி கொண்டிருந்தது. சாதாரணமாய் இப்போது யாரும் அவன் முன்னிலையில் போக முடியாது எனும் பொழுது அவனின் கோபத்திற்கு காரணமானவளே அவனை நேரடியாக சந்திக்க வந்து கொண்டிருந்தாள்.

இருவருமே பணம் குணம் அறிவு நேர்மை எண்ணம் தைரியம் என எல்லாவற்றிலும் ஒரே போலவே இருக்க எதிர் எதிராய் நிற்க வைக்கும் சூழ்நிலை எது?

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
 




Last edited:

Pavithra

நாட்டாமை
Joined
Jan 30, 2018
Messages
30
Reaction score
70
Location
Chennai
Nala arambam.Tamil character super..avaluku chithiya ayooo. Pavam.bharathi pic in room super...veer wow..waiting to see him
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அருமையான ஆரம்பம்....
நேதாஜி டீம் ஷீல்ட் எப்படி வாங்கனாங்கனு சொல்லவே இல்லை...ரகு அப்படி என்ன பன்னி ஜெயித்தான்??? தமிழின் தமிழ் ஆர்வமும் ரசனையும் பாரதி ஓவியமும் தன் அறையில் சேர்த்து வைத்த இலக்கிய புத்தகங்கள் சுவர் தெரியாத அளவு மாட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு சித்திரங்கள் இவை அனைத்தையும் படிக்கவே மிக அருமை....வாழ்த்துகள்..
.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top