• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

vaadi en thamizhachi - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
28

(எல்லா அத்தியாயங்களுக்கும் தலைப்பு கொடுப்பது எனக்கு வழக்கம். இந்த அத்தியாயத்திற்கு என்ன தலைப்பு கொடுப்பது என்று குழப்பமாயிருக்கிறது. நீங்கள் படித்துவிட்டு உங்கள் தலைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்பு அத்தியாயத்திற்குள் எழுதப்பட்ட வார்த்தையாக இருந்தால் நலம்...)

ரகுவிற்கு ஆப்ரேஷன் நடைபெற்று கொண்டிருக்க, வீரேந்திரன் ஒரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டிருந்தான். ரகுவிற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலை மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ரகுவின் அம்மா பதட்டத்தோடு ஒரு நர்ஸின் வழிகாட்டுதலோடு நுழைந்தார்.

அவர் முகமெல்லாம் இருளடர்ந்திருக்க கண்களின் கண்ணீரின் தடம். சில வருடங்கள் முன்பு தன் கணவனை இழந்திருந்தார். இன்று மகன் மட்டுமே ஒற்றை துணையாயிருக்க, இந்த செய்தி அவரை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை துயரோடு வந்து நின்றவர், வீரேந்திரனை அறிமுகமில்லாமலே அவன் போலீஸ் என்பதை கண்டறிந்தார்.

அவன் அருகில் வந்தவர், பேச திக்கிதிணறியபடி ஏதோ கேட்க யத்தனிக்கவும்,.வீரேந்திரன் முந்தி கொண்டு "நீங்கதான் ரகுவோட அம்மாவா?" என்று கேட்ட கணமே அவர்கள் விழிகளில் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

வீரேந்திரன் உடனடியாக "நீங்க ஓண்ணும் பயப்படாதீங்கம்மா... ரகுவிற்கு ஒண்ணும் இல்ல.. நல்லா இருக்கான்" என்றான்.

அவர் சற்று நிம்மதியடைந்து "எங்க இருக்கான் ?... நான் அவனை பார்க்கனும்" என்றார்.

அவன் உள்ளம் நடுங்கினாலும் முகத்தில் அதனை காட்டி கொள்ளாமல், "பார்க்கலாம்... நீங்க முதல்ல இப்படி உட்காருங்க" என்று சொல்லி அவரை இருக்கையில் அமர வைத்தவன்,
தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து "நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க... தண்ணீர் குடிங்க" என்றான்.

ஒரே மகனை இழந்துவிடப் போகிறோமோ என்ற அவரின் அவஸ்த்தை கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.

அவர் தண்ணீரை பருகாமல் "இல்ல தம்பி... எனக்கு இப்போ ரகுவை பார்த்ததான் நிம்மதி... அவன் எங்க இருக்கான் ?" என்று விழி நீரை துடைத்தபடி கேட்டார்.

"அவனுக்கு ஒண்ணும் இல்லம்மா... நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. ரிலேக்ஸா இருங்க... அவனுக்கு டாக்டர் உள்ளே டீரீட்மன்ட் பண்ணிட்டிருக்காரு... முடிஞ்சதும் உங்க பிள்ளையை நீங்க போய் பார்க்கலாம்" என்று நிதானமாய் சொல்ல அவன் சொன்ன விதத்தில் அவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

தண்ணீரை வாங்கி குடித்து முடித்துவிட்டு அமைதியை மூச்சு இழுத்துவிட்டு கொண்டு காத்து கிடந்தார்.

தான் சொன்னது பொய்யாக இருப்பினும் அது ரகுவின் அம்மாவிற்கு தைரியத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து அப்போதைக்கு நிம்மதிப்பெற்றான்

நேரம் கடந்து கொண்டே போக ஆப்ரேஷன் நல்லபடியாய் நடந்து முடிய வேண்டுமே என அவன் தவிப்புற்றிருந்தான்.

அப்போது ஒரு நர்ஸ் அவனருகில் வந்து நின்று "நீங்கதானே ஏசிபி வீரேந்திர பூபதி" என்று கேட்டாள்.

"எஸ்"

"உங்களுக்கு போஃன் வந்திருக்கு... ரிசப்ஷ்னல"

குழப்பமாய் பார்த்தவன் பின் வேகமாய் ரிசப்ஷனிற்கு சென்று அங்கே இருந்து தொலைப்பேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்து
"ஹெலோ" என்றான்.

"நான் எத்தனை தடவைதான் கால் பன்றது.. ஏன் என்னை இப்படி டென்ஷன் படுத்திறீங்க... ?" என்று தமிழ் கேட்கவும்,
அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என யோசனையில் நின்றவனை அவள் குரல் மீண்டும் மீட்டெடுத்தது.

"ப்ளீஸ் சொல்லுங்க வீர்.... ரகு எப்படி இருக்கான்? " அவள் கேட்டபடியே அழத் தொடங்கினாள்.

அழுகை தொனியில் ஒலித்த அவள் குரல் அவன் மனதை என்னவோ செய்தது.
"தமிழ் அழாதே... நீ டென்ஷன் ஆகற அளவுக்கு ஒண்ணுமில்லை..." என்றான்.

அவள் விசும்பலோடு "பொய் சொல்லாதீங்க வீர்... எனக்கு தெரியும்... ரகுவிற்கு ரொம்ப ஸ்ரீயஸா இருக்கு... அது என்கிட்ட சொல்ல முடியாமதான் என் போஃனை அட்டென்ட் பண்ண மாட்டிறீங்க" என்றாள்.

அவன் அதற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் "சரி... நானே உன் லைனுக்கு வர்றேன்... நீ கட் பண்ணு" என்று சொல்லியவன் அழைப்பை துண்டித்துவிட்டு தனியே வந்து நின்று தன் கைப்பேசி எடுத்து அழைத்தான்.

அவள் ஏற்றதும் அவன் நிதானமாக நிலைமையை எடுத்துரைத்தான்.

"ரகுவுக்கு இப்போ கொஞ்சம் ஸீர்யஸ் கன்டிஷன்தான்... ஹெட் இஞ்சுரி... ஆப்ரேஷன் நடந்திட்டிருக்கு... ரகுவோட அம்மா வேற ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க... எனக்கே என்ன செய்றதுன்னு புரியல"

அவன் குரலில் இருந்த தைரியமற்ற நிலையை உணர்ந்தவள் மொத்தமாய் உடைந்து போனாள்.

அவள் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டிருக்க "அழாதே தமிழ்... ப்ளீஸ்... என்னால தாங்க முடியாது... நீ இப்படி உடைஞ்சி போயிடுவன்னுதான் நான் உன்கிட்ட சொல்லாம கூட புறப்பட்டு வந்துட்டேன்?!!" என்று அவன் உரைத்து கொண்டிருக்க அவள் அமைதியானாள்.

அவள் குரல் மீண்டும் சிரமப்பட்டு வெளிவந்தது.

"ரகுவிற்கு எதுவும் ஆகதில்ல வீர்..." என்று கேட்க,

அவன் அழுத்தமாக "கண்டிப்பா ரகுவிற்கு ஒண்ணும் ஆகாது... நீ தைரியமா இரு" என்றான்.

அவள் மெல்ல தன்னை தேற்றி கொண்டவள்

"வீர்..." என்று அழைத்தாள்.

"சொல்லு தமிழ்"

"ரகுவோட அம்மா ரொம்ப
பாவம் வீர்... அவனை தவிர வேற யாரும் அவங்களுக்கு இப்போ ஸப்போர்ட் கிடையாது...... நீங்க கொஞ்சம் பக்கத்திலிருந்து" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் தீர்க்கமாக

"புரியுது தமிழ்... நான் அவங்க கூட இருந்து பார்த்துக்கிறேன்... " என்றான்.

"சரி... நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்.

வீரேந்திரன் யோசனையோடு "அது சரி... உனக்கெப்படி ரகுவிற்கு ஆக்ஸிடென்ட்னு தெரியும்" என்று கேட்டான்.

"தெரியும் வீர்" என்றாள்.

"அதான் எப்படி?... அதுவும் இந்த ஹாஸ்பெட்டில்னு எப்படி தெரியும் உனக்கு"

"ரகுவுக்கு கால் பண்ண போது... லைன் போகல... அதான் நான் ஸ்டேஷனுக்கு கால் பண்ணேன்... அங்கே விசாரிச்சி போதுதான்... இப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன்" என்றாள்.

கடிதத்தை பற்றி மட்டும் அவள் உரைக்க மறைத்திருக்க வீரேந்திரனுக்கு அவள் சொல்வதில் முழு உண்மை இல்லையோ என்று தோன்றிற்று.

"நீ என்னை காதலிக்கிற... பட் என்னை நம்பவே மாட்டிற இல்ல" என்று மனதில் உதித்த எண்ணத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.

அவன் சொன்னதை கேட்டு அவள் அமைதியாய் இருக்க அவனே மேலும் "என்னை ஏசிபியா பார்க்காதே தமிழ்... உன் ஹஸ்பெண்ட்டா பாரு... அட்லீஸ்ட் ஒரு வெல் விஷ்ஷரா பாரு... எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லிடு" என்றான்.

அவன் பேசிய விதத்திலேயே அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் நிதானித்து"சொல்றேன் வீர்... ஆனா போஃன்ல வேண்டாம்... நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் எனக்கு மறக்காம கால் பண்ணுங்க" என்றாள்.

அவனும் ஆமோதித்து அழைப்பை துண்டித்தான்.

மனமெல்லாம் அவள் என்ன சொல்வாளோ என கவலையில் ஆழ்ந்துவிட அந்த சமயத்தில் ஆப்ரேஷன் முடிவுற்று டாக்டர் அவனை அழைத்திருந்தார்.

அவர் வீரேந்திரனிடம் "நத்திங் டூ வொர்ரி... ஹீ இஸ் ஆல்ரைட் நவ்... இப்போதைக்கு ஐசியூல வைச்சிருக்கோம்... நாளைக்கு இல்ல ஈவனிங் கூட நார்மல் வார்டுக்கு மாத்திரலாம்" என்றார்.

அவனின் மனதின் பாரம் இறங்கியதாக பெருமூச்சுவிட்டவன் உடனே தமிழுக்கும் அழைத்து இந்த செய்தியை சொல்லியிருந்தான்.

ரகு ஐசியூவில் மயக்க நிலையில் தலையில் கட்டுப் போட்ட நிலையில் இருக்க உடம்பெல்லாம் ஆங்காங்கே காயங்களும் கட்டுக்களும் போடப்பட்டிருந்தது.

சுவாசகுழாய் வேறு பொருத்தப்பட்டிருக்க இந்த நிலையில் தன் மகனை பார்த்த ரகுவின் தாய் அழுது அரற்ற ஆரம்பித்தார். அத்தனை நேரம் இருந்த தைரியமெல்லாம் நொறுங்கி போயிருந்தது அவருக்கு.

வீரேந்திரன் அவரை தேற்றி நிலைமையை விளக்கி புரிய வைத்தான். மெல்ல மெல்ல அவரும் அவனின் நம்பிக்கையான வார்த்தைகளால் தன் துக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தார்.

வீரேந்திரனுக்கு மாறி மாறி அழைப்புகள் வந்து வேலைகள் குவிந்துகிடக்க, ரகுவின் அம்மாவை துணையாக ஸ்டேஷனிலிருந்து ஒரு பெண் கான்ஸ்ட்டெபிளை வரவழைத்து விட்டுச்சென்றான்.

அவன் ஸ்டேஷனுக்கு சென்று குளித்து முடித்து வேலையில் ஈடுப்பட்டாலும் மனம் ஒரு பக்கம் பாஃரன்ஸிக்(forensic) ரிப்போர்ட் பற்றியே நினைத்து கொண்டிருந்தது.

அவனால் முழுமையாய் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

அவள் மருத்துவமனைக்கு வந்திருப்பாளா என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பும் உள்ளுக்குள் இருந்தது.

மாலை நேரம் எட்டியிருந்த நிலையில் மருத்துவமனையில் ரகுவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.

அவன் கண்விழித்தாலும் சுயநினைவு பெறமுடியாமல் ஒருவித மௌனநிலையிலேயே இருந்தான். அவன் உடல் எந்தவித செயலையும் செய்ய முடியாதபடி கட்டுண்டு கிடந்தது.

அவன் அம்மாவின் குரலும் கண்ணீரையும் அவனால் உணர முடிந்ததே ஒழிய ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் தவிப்புற்றவன் தன்னிலை மறந்து மீண்டும் மயக்கநிலைக்கு சென்றிருந்தான்.

ஸ்டேஷனிலிருந்து வீரேந்திரனுக்கு அவன் வார்டுக்கு மாற்றப்பட்ட தகவலை அங்கிருந்த கான்ஸ்டபிள் உரைக்க, அவன் புறப்பட்டு செல்ல யத்தனித்த போது எஸ். ஐ சண்முகம் அவன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.

அதனை கையில் பெற்று கொண்ட மாத்திரத்தில் அவனுக்குள் ஒருவித படபடப்பும் நடுக்கமும் தொற்றி கொண்டது.

முதல் முறையாய் தன் யூகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே அந்த ரிப்போர்ட்ஸை பிரித்து பார்க்கலானான்.

*****

ரகுவின் மூளை தன்னை மீட்டு கொள்ள போராட அப்போது அறைமயக்க நிலையிலேயே நிகழ்ந்த அந்த கோரமான விபத்து அவன் நினைவுக்கு வந்தது.

ஒரு பெரிய வண்டி கட்டுபாடில்லாத வேகத்தோடு வந்து தன் வாகனத்தில் மோதிய மாத்திரத்தில் தான் தூக்கியறியப்பட்டது நினைவுக்குவர மரணத்தை தொட்ட உணர்வு அவனுக்கு.

அது நிச்சயம் எதிர்பாராத விபத்தல்ல என்று யோசித்திருந்தவனுக்கு அவன் கரத்தில் ஒருவித சில்லிட்ட உணர்வு.

அந்த நிலையிலும் அவன் செவிகள் நன்றாகவே வேலை செய்தன.

"ஐ லவ் யூ ரகு... " என்ற வார்த்தை ஒலிக்க இப்படி யார் தன்னிடம் சொல்ல முடியும். கனவாக இருக்க கூடுமோ என்று எண்ணி
அவன் சிரமப்பட்டு விழித்து கொள்ள முயற்சி செய்தான்.

அவன் விழிகள் விரிந்தாலும் காட்சிகள் மங்கியிருக்க ரொம்பவும் அக்கறையாக ஒரு குரல் "உங்களுக்கு ஒண்ணும் இல்ல ரகு... நல்லாயிடும்" என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியது.

ஆழமாக யோசித்தால் பரிட்சையமான குரல் போலவும் இருந்தது. பரிட்சையமாகத குரல் போலவும் இருக்கிறதே என்று எண்ணியவனின் விழிகள் இப்போது தெளிவாய் பார்க்க முடிந்திருந்தது.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவன் அருகில் நின்றிருந்தவளை பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

அவள் தன் கண்ணீரை துடைத்தiபடி "நான் பேசிறது கேட்குதா? " என்று கேள்வி எழுப்பினாள்.

அவளை அங்கே எதிர்பாராதவன் குழப்பமடைந்தான். அவன் கேட்ட வார்த்தைகள் இன்னும் அவனை குழப்பிவிட்டது.

அவன் பேசாமல் அப்படி குழப்பமாய் பார்த்திருக்க அவள் "ரகு... ஏதாச்சும் பேசுங்க" என்று கேட்க அவன் அப்போது நிதானித்து பேச தொடங்கினான்.

அவன் "தமிழ் எங்கே தேவி?" என்று கேட்டபடி அந்த அறையை சுற்றி விழிகளை அலைபாயவிட்டபடி கேட்டான்.

அவன் பேசியதும் மூச்சை இழுத்து விட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவள் அவனிடம் "பக்கத்தில நிற்கிற நாங்கெல்லாம் மனிஷங்களா தெரியலியா ?" என்று கோபம் கொண்டவள் போல முகத்தை வைத்து கொண்டாள்.

அவளின் பேச்சும் அவள் பார்வையும் விடாமல் பிடித்து கொண்டிருக்கும் அவள் கரமும் அவனுக்கு ரொம்பவும் புதிதாய் இருந்தது.

சற்று கூர்மையாய் அவளை பார்த்தவன் லேசான புன்னகையோடு "மனிஷங்களா தெரியலயே..." என்றான்.

"அப்படின்னா?!"

"எனக்கு உயிர் கொடுக்க வந்த தேவதை மாதிரி" என்றான்.

அழுது சிவந்திருந்த அவள் முகம், அவன் சொன்ன வார்த்தையால் வெட்கத்தால் சிவப்பேற அப்படியே சிலையென நின்றுவிட்டான்.

அவன் யோசனைகுறியோடு "அப்போ நீதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் காதில ஐ லவ் யூன்னு சொன்னதா ?!" என்று கேட்க அவள் பதட்டமடைந்தாள்.

அவள் விழிகள் அலைபாயந்து கொண்டிருக்க

"உங்க அக்காவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது... என்னை கொன்னு புதைச்சிடுவா... " என்றான்.

இத்தனை நேரம் மௌனம்காத்தவள் இப்போது சட்டென "அக்காவுக்கு தெரியுமே... நான் சொல்லிட்டேன்" என்றதுமே அவள் தன்னை விரும்புகிறாள் என்பது அவன் புரிந்து கொண்டான்.

அந்த பேச்சை அதோடு நிறுத்த எண்ணி "சரி... அம்மா எங்கே ?" என்று கேட்க

"அம்மாவை இப்பதான் அண்ணானோட சாப்பிட அனுப்பி வைச்சேன்" என்றாள்.

"அண்ணனா... யார் ? அந்த ரவியா ? அவன் வந்திருக்கானா ?"

"ம்ம்ம்..."

"அவன் ஏன் இங்க வந்தான்...?"

"நீங்க ஏன் இப்படி கேட்கிறீங்கன்னு புரியுது... நீங்க நினைக்கிற மாறி இல்ல... அண்ணா ரொம்ப மாறிடுச்சு... "

அவன் அந்த நிலையிலும் ஏளனமாய் புன்னகையித்தபடி "ஹ்ம்ம்... நம்பிற மாதிரி எதாவது சொல்லு தேவி" என்றான்.

அந்த வார்த்தைகள் அவனுக்கு ரவி மீதிருந்த வெறுப்பை சுட்டிகாட்டியது.

தேவி அப்போது "நம்ப முடியாதுதான்... ஆனா சில விஷயங்கள் நம்பிற மாதிரி நடந்துச்சு" என்றவள் நடந்த விவரங்களை சுருக்கமாக சொல்லி முடிக்க ரகுவிற்கு தன் தோழிக்கு நடந்த அநியாயத்தை எண்ணி கண்ணீர் பெருகிற்று.

"தமிழ் ரொம்ப பாவம்..." என்றான்.

"ம்ம்ம்ம்... ஆனா மாமா எல்லாத்தையும் சமாளிச்சிட்டாரு" என்று தேவி உரைக்க

"என்ன பெரிசா சமாளிச்சாரு உங்க மாமா... உங்க மாமா மட்டும் ரவியை அரெஸ்ட் பண்ணி இருந்தா...இரண்டு குடும்பமும் பிரிஞ்சிருக்கும்... அவங்க கல்யாண உறவு ஒண்ணுமில்லாம ஆயிருக்கும்... யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம.. எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டு தமிழ்தான் எல்லாத்தையும் ஹேண்ட்ல பண்ணி இருக்கா" என்றான்.

தன் தோழி மீது அவன் கொண்ட மரியாதையை தேவி வியப்பாய் பார்த்து கொண்டிருக்க அவன் அப்போது பழைய நாட்களை நினைவுகூர்ந்தவன் "உனக்கு தெரியுமா தேவி? ஒரு தடவை ஒரு ரன்னிங் ரேஸ் காம்பிட்டீஷ்னல நான் ஜெய்கனும்ங்கிறதுக்காக ரொம்ப சுயநலமா எனக்கு ஈக்வலா ஓடிவந்தவளை லாஸ்ட் மினிட்ல தள்ளிவிட்டுட்டு வின்னிங் பாயின்ட் ரீச் பண்ணிட்டேன்.. அப்போ எல்லோரும் தமிழ்கிட்ட எப்படி விழுந்தன்னு கேட்டதுக்கு அவ என்னை பத்தி சொல்லாம தானாதான் விழுந்திட்டன்னு பொய் சொல்லிட்டா... அவளுக்கு யார் கெட்டது செஞ்சாலும் கூட... அவ எப்பவுமே எல்லோருக்கும் நல்லது மட்டும்தான் நினைப்பா.. அதான் அவளோட கேரக்டர்" என்று தன் தோழியை பற்றி சொல்லி பெருமிதப்பட்டு கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் வீரேந்திரன் அந்த அறைக்குள் நுழைந்திருக்க தேவியின் விழிகள் அவனை கவனிக்க, ரகுவும் திரும்பி நோக்கினான்.

அவன் ரொம்பவும் இயல்பாய் பேக்கெட்டில் தன் கரங்களை நுழைத்தபடி வந்தவன் தேவியை பார்த்து "தேவி...நீ எப்படி இங்கே ? ஆமாம் யாரு இந்த சார்? உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா ?!" என்று கேட்டான்.

இருவருமே ஸ்தம்பித்து இருக்க மீண்டும் அவன் தேவியிடம் "என்ன தேவி ? பதில் சொல்லாம நிற்கிற... யாருன்னு சொல்லு... நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல" என்றான்.

தேவி யோசனைகுறியோடு நிற்க, ரகுவிற்கு அவன் என்ன எண்ணி கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறேன் என்பது புரியவில்லை.

வீரேந்திரன் இன்னும் அழுத்தமாக "யாருன்னு சொல்லு தேவி ?" என்றான்.

அவள் அச்சத்தோடு"அது வந்து...
ரகு... அக்காவோட ப்ரண்ட் " என்றாள்.

வீரேந்திரன் ரகுவை புதிதாய் பார்ப்பது போல "ஹாய் ரகு... நான் வீரேந்திர பூபதி... உங்க ப்ரண்ட்டோட... ஹஸ்பெண்ட்" என்றான். கடைசி இரு வார்த்தைகளும் அழுத்தமாய் வெளிவந்தது.

ரகுவிற்கு தொண்டை அடைத்தது. எச்சில் விழுங்கியபடி "சார்" என்றவனை இயல்பாய் பார்த்தபடி

"என் வொய்ஃபோட... க்ளோஸ்ஸ்ஸ்ஸ் ப்ரண்ட் நீங்க... நீங்க போய் என்னை ஸார்னு எல்லாம் கூப்பிடுகிட்டு... ப்ளீஸ் கால் மீ வீர்"

ரகு பதில் பேசாமல் அமைதியாயிருக்க வீரேந்திரன் தேவியிடம் "ஆமாம்... தமிழ் எங்கே தேவி? " என்று கேட்டான்.

"அது... அக்கா வரல மாமா... .நானும் ரவி அண்ணாவும்தான் வந்தோம்"

வீரேந்திரன், ரகு இருவருமே அதிர்ச்சியாயினர்.

வீரேந்திரன் முகம் குழப்பமாய் மாற "வரலியா... ஏன் ? என்கிட்ட வர்றேன்னு சொன்னாளே ?!" என்றவன் தேவியின் பதிலை எதிர்பாராமல் தமிழின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

எதிர்புறத்தில் அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கேட்கவும் அவன் கொதிப்படைய
முகமெல்லாம் கனலாய் மாறியிருந்தது.

தேவி வீரேந்திரனிடம், "டென்ஷனாகாதீங்க மாமா... அக்கா வந்திடுறேன்னு சொன்னா? இப்போ வந்திருவா" என்றான்.

"உங்க அக்காவுக்கு என்னை டென்ஷன் படுத்திறதும் இரிடேட் பன்றததும்தான் வேலை" என்று வீரேந்திரன் புலம்ப, ரகுவின் மனமும் தமிழ் வராததை குறித்துதான் சிந்தித்து கொண்டிருந்தது

வீரேந்திரன் ஆழ்ந்த யோசனைக்கு சென்றவன் பின் தேவியை நிமிர்ந்து பார்த்து "நான் ரகு சார்கிட்ட தனியா பேசனும்... நீ வெளியே வெயிட் பண்ணு... அப்படியே கொஞ்ச நேரத்திற்கு யாரும் உள்ளே வர வேண்டாம்னு சொல்லு" என்றான்.

தேவி ரகுவை இரக்கமான பார்வையை பார்த்தபடியே வெளியேற அந்த பார்வையின் பொருளை ரகு உணர்ந்து கொண்டானோ இல்லையோ? ! வீரேந்திரன் உணர்ந்து கொண்டான்.

தேவி சென்றதும் இயல்பாய் வீரேந்திரன் அங்கிருந்த இருக்கையை அவன் படுக்கைக்கு அருகில் போட்டபடி அமர்ந்து ரகுவை ஆழமான பார்வை பார்த்தான்.

உடலின் காயங்களை விட அவன் பார்வை ரகுவை அதிகமாய் காயப்படுத்தியது.

ரகு அவனிடம் பேச யத்தனிக்கும் போதே வீரேந்திரன் முந்தி கொண்டு "ஆமாம்... தமிழ் உனக்கு ப்ரண்டு... தேவி உனக்கு யாரு?" என்று கேட்டு புருவத்தை ஏற்றினான்.

"தேவியும் எனக்கு நல்ல ப்ரண்டுதான்" என்று சற்றும் யோசிக்காமல் பதிலுரைத்தான்

"குட்... ப்ரண்டுங்கிற வரைக்கும் ஒகே... பட் அந்த லிமிட்டை நீ க்ராஸ் பண்ணிடாதே... ரைட்" என்று சொல்லி அவன் மிரட்டலாய் ஒரு பார்வை பார்த்தான்.

ரகுவிற்கு கோபம் வந்தாலும் அதனை காட்ட முடியாத இயலாமையில் உள்ளுக்குள் பொறுமி கொண்டிருந்தான்.

மேலும் வீரேந்திரனே ரகுவை பார்த்து "ஆமாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் ப்ரண்டை பத்தி தியாகி லெவலுக்கு பேசிட்டிருந்த இல்ல... கெட்டது செஞ்சா கூட அவ நல்லதே நினைக்கிறவளா... இதான் இத்தனை வருஷத்துல... நீ அவளை பத்தி புரிஞ்சிக்கிட்டதா? !" என்று கேட்க

ரகு கோபமாக "நான் அவளை புரிஞ்சிக்கிட்டதை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க... உங்களுக்கு அவளை பத்தி என்ன தெரியும்? " என்று கேட்டு அலட்சியமாய் பார்த்தான்.

வீரேந்திரனுக்கும் சினம் மிகுந்தது.

வாசகர்களே,
கருத்தை தெரிவித்து என்னை விடாமல் ஊக்கப்படுத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.. நன்றி... நன்றி,

மறவாமல் இம்முறையும் லைக் பட்டனை அழுத்தி விடுங்கள். கருத்தையும் தெரிவித்து விடுங்கள்.

தலைப்பு கொடுக்கலாமே? !!!
 
Last edited:

Farmila

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
91
Reaction score
80
Location
Kandy
அந்த வார்த்தைகள் அவனுக்கு ரகு மீதிருந்த வெறுப்பை சுட்டிகாட்டியது.
*ரவி
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

"நட்பின் எழுச்சி"
இந்த தலைப்பு நல்லாயிருக்கா,
மோனிஷா டியர்?
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர் சிஸ்.....கைரேகை தமிழ் கூட ஒத்துப் போகுதா????அப்ப தமிழ் தர்மாவ பாத்த அன்னைக்கு அதை வேற யாரும் பாத்து அந்த கத்திய வச்சே கொலை பன்னிருப்பாங்களோ... ரொம்ப ஆர்வமா இருக்கு அடுத்த எப்பிக்கு...தேவி காதலை ரகு ஏத்துக்கிட்டானா???ரகுவைப் பாக்க ஏன் தமிழ் வரல....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top