• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

vaadi en thamizhachi - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
tamiloda kairekhai illa thane sis:unsure::unsure::unsure:ippo ava yaari kappatha pakra:unsure::unsure::unsure::unsure:nice epi sis:):):):):)
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
எதிர்ப்பார்ப்பும் காத்திருப்பும்..
எதிர்பாரா விபத்து..

Intha thalaipu neenga ezhuthinathu la irunthu eduthathu thaan.. suit aaguma paarunga...

Kairegai pathi sollalaye innum.. raghu pozhachitan nalla velai... Devi and raghu convo nalla irunthuchu.. veer tamizh azhuvathai thaanga mudiyalai solrathum semma.. veer kadaisiya wife close friend sir ethuku veer ne koopidunga solrathu.. apa raghu reaction ninachi sirippu.. maatuniyada feel??

as ususl semma epi...
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
உயிர் கொடுக்க வந்த தேவதை
thalaipu sariyaaaa
super ud sis
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அவன் அருகில் நின்றிருந்தவளை பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

அவள் தன் கண்ணீரை துடைத்தiபடி "நான் பேசிறது கேட்குதா? " என்று கேள்வி எழுப்பினாள்.

அவளை அங்கே எதிர்பாராதவன் குழப்பமடைந்தான். அவன் கேட்ட வார்த்தைகள் இன்னும் அவனை குழப்பிவிட்டது.

அவன் பேசாமல் அப்படி குழப்பமாய் பார்த்திருக்க அவள் "ரகு... ஏதாச்சும் பேசுங்க" என்று கேட்க அவன் அப்போது நிதானித்து பேச தொடங்கினான்.

அவன் "தமிழ் எங்கே தேவி?" என்று கேட்டபடி அந்த அறையை சுற்றி விழிகளை அலைபாயவிட்டபடி கேட்டான்.

அவன் பேசியதும் மூச்சை இழுத்து விட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவள் அவனிடம் "பக்கத்தில நிற்கிற நாங்கெல்லாம் மனிஷங்களா தெரியலியா ?" என்று கோபம் கொண்டவள் போல முகத்தை வைத்து கொண்டாள்.

அவளின் பேச்சும் அவள் பார்வையும் விடாமல் பிடித்து கொண்டிருக்கும் அவள் கரமும் அவனுக்கு ரொம்பவும் புதிதாய் இருந்தது.

சற்று கூர்மையாய் அவளை பார்த்தவன் லேசான புன்னகையோடு "மனிஷங்களா தெரியலயே..." என்றான்.

"அப்படின்னா?!"

"எனக்கு உயிர் கொடுக்க வந்த தேவதை மாதிரி" என்றான்.

அழுது சிவந்திருந்த அவள் முகம், அவன் சொன்ன வார்த்தையால் வெட்கத்தால் சிவப்பேற அப்படியே சிலையென நின்றுவிட்டான்.

அவன் யோசனைகுறியோடு "அப்போ நீதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் காதில ஐ லவ் யூன்னு சொன்னதா ?!" என்று கேட்க அவள் பதட்டமடைந்தாள்.

அவள் விழிகள் அலைபாயந்து கொண்டிருக்க

"உங்க அக்காவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது... என்னை கொன்னு புதைச்சிடுவா... " என்றான்.

இத்தனை நேரம் மௌனம்காத்தவள் இப்போது சட்டென "அக்காவுக்கு தெரியுமே... நான் சொல்லிட்டேன்" என்றதுமே அவள் தன்னை விரும்புகிறாள் என்பது அவன் புரிந்து கொண்டான்.

அந்த பேச்சை அதோடு நிறுத்த எண்ணி "சரி... அம்மா எங்கே ?" என்று கேட்க

"அம்மாவை இப்பதான் அண்ணானோட சாப்பிட அனுப்பி வைச்சேன்" என்றாள்.

"அண்ணனா... யார் ? அந்த ரவியா ? அவன் வந்திருக்கானா ?"

"ம்ம்ம்..."

"அவன் ஏன் இங்க வந்தான்...?"

"நீங்க ஏன் இப்படி கேட்கிறீங்கன்னு புரியுது... நீங்க நினைக்கிற மாறி இல்ல... அண்ணா ரொம்ப மாறிடுச்சு... "

அவன் அந்த நிலையிலும் ஏளனமாய் புன்னகையித்தபடி "ஹ்ம்ம்... நம்பிற மாதிரி எதாவது சொல்லு தேவி" என்றான்.

அந்த வார்த்தைகள் அவனுக்கு ரவி மீதிருந்த வெறுப்பை சுட்டிகாட்டியது.

தேவி அப்போது "நம்ப முடியாதுதான்... ஆனா சில விஷயங்கள் நம்பிற மாதிரி நடந்துச்சு" என்றவள் நடந்த விவரங்களை சுருக்கமாக சொல்லி முடிக்க ரகுவிற்கு தன் தோழிக்கு நடந்த அநியாயத்தை எண்ணி கண்ணீர் பெருகிற்று.

"தமிழ் ரொம்ப பாவம்..." என்றான்.

"ம்ம்ம்ம்... ஆனா மாமா எல்லாத்தையும் சமாளிச்சிட்டாரு" என்று தேவி உரைக்க

"என்ன பெரிசா சமாளிச்சாரு உங்க மாமா... உங்க மாமா மட்டும் ரவியை அரெஸ்ட் பண்ணி இருந்தா...இரண்டு குடும்பமும் பிரிஞ்சிருக்கும்... அவங்க கல்யாண உறவு ஒண்ணுமில்லாம ஆயிருக்கும்... யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம.. எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டு தமிழ்தான் எல்லாத்தையும் ஹேண்ட்ல பண்ணி இருக்கா" என்றான்.

தன் தோழி மீது அவன் கொண்ட மரியாதையை தேவி வியப்பாய் பார்த்து கொண்டிருக்க அவன் அப்போது பழைய நாட்களை நினைவுகூர்ந்தவன் "உனக்கு தெரியுமா தேவி? ஒரு தடவை ஒரு ரன்னிங் ரேஸ் காம்பிட்டீஷ்னல நான் ஜெய்கனும்ங்கிறதுக்காக ரொம்ப சுயநலமா எனக்கு ஈக்வலா ஓடிவந்தவளை லாஸ்ட் மினிட்ல தள்ளிவிட்டுட்டு வின்னிங் பாயின்ட் ரீச் பண்ணிட்டேன்.. அப்போ எல்லோரும் தமிழ்கிட்ட எப்படி விழுந்தன்னு கேட்டதுக்கு அவ என்னை பத்தி சொல்லாம தானாதான் விழுந்திட்டன்னு பொய் சொல்லிட்டா... அவளுக்கு யார் கெட்டது செஞ்சாலும் கூட... அவ எப்பவுமே எல்லோருக்கும் நல்லது மட்டும்தான் நினைப்பா.. அதான் அவளோட கேரக்டர்" என்று தன் தோழியை பற்றி சொல்லி பெருமிதப்பட்டு கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் வீரேந்திரன் அந்த அறைக்குள் நுழைந்திருக்க தேவியின் விழிகள் அவனை கவனிக்க, ரகுவும் திரும்பி நோக்கினான்.

அவன் ரொம்பவும் இயல்பாய் பேக்கெட்டில் தன் கரங்களை நுழைத்தபடி வந்தவன் தேவியை பார்த்து "தேவி...நீ எப்படி இங்கே ? ஆமாம் யாரு இந்த சார்? உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா ?!" என்று கேட்டான்.

இருவருமே ஸ்தம்பித்து இருக்க மீண்டும் அவன் தேவியிடம் "என்ன தேவி ? பதில் சொல்லாம நிற்கிற... யாருன்னு சொல்லு... நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல" என்றான்.

தேவி யோசனைகுறியோடு நிற்க, ரகுவிற்கு அவன் என்ன எண்ணி கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறேன் என்பது புரியவில்லை.

வீரேந்திரன் இன்னும் அழுத்தமாக "யாருன்னு சொல்லு தேவி ?" என்றான்.

அவள் அச்சத்தோடு"அது வந்து...
ரகு... அக்காவோட ப்ரண்ட் " என்றாள்.


வீரேந்திரன் ரகுவை புதிதாய் பார்ப்பது போல "ஹாய் ரகு... நான் வீரேந்திர பூபதி... உங்க ப்ரண்ட்டோட... ஹஸ்பெண்ட்" என்றான். கடைசி இரு வார்த்தைகளும் அழுத்தமாய் வெளிவந்தது.

ரகுவிற்கு தொண்டை அடைத்தது. எச்சில் விழுங்கியபடி "சார்" என்றவனை இயல்பாய் பார்த்தபடி

"என் வொய்ஃபோட... க்ளோஸ்ஸ்ஸ்ஸ் ப்ரண்ட் நீங்க... நீங்க போய் என்னை ஸார்னு எல்லாம் கூப்பிடுகிட்டு... ப்ளீஸ் கால் மீ வீர்"

ரகு பதில் பேசாமல் அமைதியாயிருக்க வீரேந்திரன் தேவியிடம் "ஆமாம்... தமிழ் எங்கே தேவி? " என்று கேட்டான்.

"அது... அக்கா வரல மாமா... .நானும் ரவி அண்ணாவும்தான் வந்தோம்"

வீரேந்திரன், ரகு இருவருமே அதிர்ச்சியாயினர்.

வீரேந்திரன் முகம் குழப்பமாய் மாற "வரலியா... ஏன் ? என்கிட்ட வர்றேன்னு சொன்னாளே ?!" என்றவன் தேவியின் பதிலை எதிர்பாராமல் தமிழின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

எதிர்புறத்தில் அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கேட்கவும் அவன் கொதிப்படைய
முகமெல்லாம் கனலாய் மாறியிருந்தது.


தேவி வீரேந்திரனிடம், "டென்ஷனாகாதீங்க மாமா... அக்கா வந்திடுறேன்னு சொன்னா? இப்போ வந்திருவா" என்றான்.

"உங்க அக்காவுக்கு என்னை டென்ஷன் படுத்திறதும் இரிடேட் பன்றததும்தான் வேலை" என்று வீரேந்திரன் புலம்ப, ரகுவின் மனமும் தமிழ் வராததை குறித்துதான் சிந்தித்து கொண்டிருந்தது

வீரேந்திரன் ஆழ்ந்த யோசனைக்கு சென்றவன் பின் தேவியை நிமிர்ந்து பார்த்து "நான் ரகு சார்கிட்ட தனியா பேசனும்... நீ வெளியே வெயிட் பண்ணு... அப்படியே கொஞ்ச நேரத்திற்கு யாரும் உள்ளே வர வேண்டாம்னு சொல்லு" என்றான்.

தேவி ரகுவை இரக்கமான பார்வையை பார்த்தபடியே வெளியேற அந்த பார்வையின் பொருளை ரகு உணர்ந்து கொண்டானோ இல்லையோ? ! வீரேந்திரன் உணர்ந்து கொண்டான்.

தேவி சென்றதும் இயல்பாய் வீரேந்திரன் அங்கிருந்த இருக்கையை அவன் படுக்கைக்கு அருகில் போட்டபடி அமர்ந்து ரகுவை ஆழமான பார்வை பார்த்தான்.

உடலின் காயங்களை விட அவன் பார்வை ரகுவை அதிகமாய் காயப்படுத்தியது.

ரகு அவனிடம் பேச யத்தனிக்கும் போதே வீரேந்திரன் முந்தி கொண்டு "ஆமாம்... தமிழ் உனக்கு ப்ரண்டு... தேவி உனக்கு யாரு?" என்று கேட்டு புருவத்தை ஏற்றினான்.

"தேவியும் எனக்கு நல்ல ப்ரண்டுதான்" என்று சற்றும் யோசிக்காமல் பதிலுரைத்தான்

"குட்... ப்ரண்டுங்கிற வரைக்கும் ஒகே... பட் அந்த லிமிட்டை நீ க்ராஸ் பண்ணிடாதே... ரைட்" என்று சொல்லி அவன் மிரட்டலாய் ஒரு பார்வை பார்த்தான்.

ரகுவிற்கு கோபம் வந்தாலும் அதனை காட்ட முடியாத இயலாமையில் உள்ளுக்குள் பொறுமி கொண்டிருந்தான்.

மேலும் வீரேந்திரனே ரகுவை பார்த்து "ஆமாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் ப்ரண்டை பத்தி தியாகி லெவலுக்கு பேசிட்டிருந்த இல்ல... கெட்டது செஞ்சா கூட அவ நல்லதே நினைக்கிறவளா... இதான் இத்தனை வருஷத்துல... நீ அவளை பத்தி புரிஞ்சிக்கிட்டதா? !" என்று கேட்க

ரகு கோபமாக "நான் அவளை புரிஞ்சிக்கிட்டதை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க... உங்களுக்கு அவளை பத்தி என்ன தெரியும்? " என்று கேட்டு அலட்சியமாய் பார்த்தான்.

வீரேந்திரனுக்கும் சினம் மிகுந்தது.

வாசகர்களே,
கருத்தை தெரிவித்து என்னை விடாமல் ஊக்கப்படுத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.. நன்றி... நன்றி,


மறவாமல் இம்முறையும் லைக் பட்டனை அழுத்தி விடுங்கள். கருத்தையும் தெரிவித்து விடுங்கள்.

தலைப்பு கொடுக்கலாமே? !!!
nyc update mam...nxt update??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top