• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Odi olintha antha siru uravam Cat poonaiyaa or Rat eliyaa, மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Adengappa? Dharmaavukku mela Oru kedi villan irukkaanaa?
Illai antha villan Dharmaavethanaa, மோனிஷா டியர்?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Very interesting ?? ippo manda kayathu yarn antha uruvam!! Can’t wait for next update... Tamil n Veer characterisation super o super! Risk ellam rusk sapidara madiri ??
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
எப்பாபா இந்த ரெண்டு அடங்காப்பிடாரிங்களும் சேர்ந்து விஷ்வா,வீரை என்னாபாடு படுத்துறாங்க.அவங்களோட அன்பும்,காதலும் இவங்களுக்கு கிண்டலாக இருக்கு.
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
nyc update nxt u
அரண்மனை வாசலை அடைந்ததும் தமிழை காரிலிருந்து இறக்கிவிட, அவளை பார்த்ததுமே காவலாளி அந்த விசாலமான கேட்டை திறந்தான்.

அதற்கு பிறகாய் அந்த கடத்தல் கும்பல் காவலாளி முதல் வேலையாட்கள் வரை அவர்கள் கட்டுபாட்டில் கொண்டு வர, அன்றைய மாலை பொழுது மங்கி இருள் சூழ காத்திருந்தது.

அரண்மனைக்குள் பிரவேசித்ததும் தமிழுக்கு அங்கே நிகழ்ந்த அவர்களின் கல்யாணம் நினைவுக்கு வர, அருகிலிருக்கும் போதெல்லாம் அனாவசியமாய் சண்டையிட்டுவிட்டு இப்போது அவன் அருகாமையை தேடும் அவள் மனதை என்ன சொல்ல?

இப்படி யோசித்தவாறே அவள் கால்கள் அன்று போல் அவள் தாத்தாவின் அறைக்கு செல்ல, அந்த கும்பலின் சிலர் ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு முக்கியமான மூவர் மட்டுமே அவளை பின்தொடர்ந்தனர்.

அதில் ஒருவன் ஆதியின் தலையில் துப்பாக்கியை பிடித்தபடியே வந்தான்.

அவள் தாத்தாவின் அந்த பிரமாண்டமான அறைக்குள் நுழைந்ததுமே அவளுக்குள் ஒரு தைரியமும் உத்வேகமும் பிறந்தது.

அவள் தாத்தாவின் மீது அவளுக்கு அபாரமான நம்பிக்கை. எந்த சூழ்நிலையிலும் தன்னை அவர் கைவிடமாட்டார் என்று எண்ணி கொண்டிருக்க அவள் பின்னிருந்து ஒரு குரல் மிரட்டலாய் "ரூமோட லைட்டை ஆன் பண்ணு" என்றான்.

அவளும் அவன் சொல்படி விளக்கை போடவும் மேலிருந்த அந்த பிரமிப்பான அடுக்கு மின்விளக்கு அழகாய் பிரகாசித்தது.

படபடத்து கொண்டிருக்கும் நெஞ்சத்தோடு நிற்பவள் தன் தோழியை திரும்ப நோக்கினாள்.

"என்ன நிக்கிற.. எங்கள ஏமாத்தலாம்னு யோசிக்கிறியா"

"சேச்சே... அப்படி எல்லாம் இல்லை... " என்று தோள்களை குலுக்க ஆதி தன் தோழியின் செயலில் இருக்கும் திருட்டுத்தனம் நன்றாகவே புரிந்தது.

"சரி... அந்த பொக்கிஷம் எங்கே ?"

அவள் உடனே அங்கிருந்த பெரிய மரபீரோவை கை நீட்டி காண்பிக்க

அவன் அவளை முறைத்தபடி "என்ன விளையாடிறியா..." என்று கேட்டான்.

"நான் விளையாடில... அந்த பீரோவுக்கு பின்னாடி ஒரு ரகசிய கதவிருக்கு" என்றாள்.

எல்லோருமே வியப்படைந்தனர் ஆதி உட்பட.

அதில் ஒருவன் "உண்மையாவா" என்று சந்தேகமாய் தமிழை பார்க்க அவள் எரிச்சலோடு "நீங்க நம்பிறதும் நம்பாததும் உங்க இஷ்டம்... ஆனா நீங்க கேட்டது அங்கதான் இருக்கு" என்றாள்.

உடனே இருவர் சென்று அந்த பீரோவை நகர்த்த முயற்சித்தனர்.

இப்போது துப்பாக்கியோடு ஆதியின் அருகிலிருக்கும் ஒருவனை மட்டும தான் சமாளிக்க வேண்டும் என்று தமிழ் எண்ணி கொண்டாள்.

ஆனால் அது அத்தனை சுலபமல்ல. அவன்தான் அந்த கூட்டத்தில் அதிக பலம் வாய்ந்தவனாகவும் புத்திசாலியாகவும் இருப்பான் என்று தோன்றிற்று.

அவர்கள் அந்த பீரோவை நகர்த்தி, தான் சொன்ன பொய்யை கண்டறியும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணியவள் 'தாத்தா... ஹெல்ப் பண்ணுங்க' என்று முனகினாள்.

ஆனால் அந்த தூப்பாக்கி ஏந்தி நிற்பவன் சற்றும் கண்ணசராமல் அந்த இரு பெண்களையும் கண்காணித்தான்.

அதே சமயம் அந்த இருவர் பீரோவை நகர்த்திய மாத்திரத்தில் சடசடவென அந்த இடுக்குகளில் இருந்த வௌவால்கள் வெளியேறிவிட அதில் ஒன்று அந்த துப்பாக்கி வைத்திருந்தவன் மீது பாய்ந்து பறந்து செல்ல அவன் அரண்டு போனான்.

தமிழ் எதிர்பார்த்த அந்த நூலிழை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது... அதை சரியாய் பிடித்து கொண்டாள்.

உடனடியாய் தமிழ் தன் தோழியின் கரத்தை பற்றி கொண்டு அந்த அறையின் விளக்கை அணைத்துவிட்டாள்.

அந்த கடத்தல் கும்பல் நிலைமையை உணர்ந்து தட்டுத்தடுமாறி விளக்கை போட்ட போது அவர்கள் மாயமாய் மறைந்திருந்தனர்.

பெண்களென்று அத்தனை சுலபமாய் எண்ணிவிட்டதனால் வந்த வினை.

அதற்கு பிறகாய் நடந்தெல்லாம் ஆதிக்கு மாயைதான். இருள் சூழ்ந்த அந்த ரகசிய அறைக்குள் வந்தாகிவிட்டது.

வெளியே காலடி சத்தம் மெதுமெதுவாய் குறைந்திருக்க ஆதி தன் தோழியின் கரத்தை பற்றி கொண்டு "இதென்ன ரூம்... இந்த ரூம்க்குள்ள எப்படி வந்தோம்..." என்று கேட்டாள்.

தமிழ் கிசுகிசுத்த குரலில் "இந்த ரூம்தான் எங்களோட லாக்கர் மாதிரி... இங்கதான் முக்கியமான பாரம்பரிய நகைகள் பொக்கிஷங்கள் எல்லாம் முன்னாடி வைச்சி பாதுக்காக்கப்பட்டுச்சு..." என்றாள்.

"அது சரி... நாம எந்த வழியா இந்த ரூம்க்குள்ள வந்தோம்"

"வெளியே தாத்தா ரூம்ல சுவற்றில ஆளுயரத்துக்கு எங்க தாத்தா ராஜசிம்மனோட ஓவியம் இருக்கு... பார்க்கதான் அது ஓவியம்... ஆனால் அது ஒரு ரோலிங் டோர்... கொஞ்சம் அழுத்தி சுழற்றினா இந்த அறைக்குள்ள வந்துடலாம்... அப்புறம் பழையபடி சுழற்றி உள்ளே லாக் போட்டிருலாம்" என்றாள்.

ஆதி வியப்புக்குறியோடு "ரியல்லி" என்றாள்.

"ஹ்ம்ம்... இந்த மாதிரியான ரகசிய வழிகள் இன்னும் இரண்டு முன்று இருக்கு... இது எனக்கு தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்" என்றாள்.

"சரி... அப்போ அந்த பொக்கிஷம் இங்க இல்லயா... நீ சொன்னது முழுக்க ரீலா"

தமிழ் பதில் பேசாமல் இருக்க ஆதி "கேடி... என் உயிரை பணயம் வைச்சி... நீ பொய் சொல்லி இருக்க" என்றாள்.

"பொய்மையும் வாய்மையிடத்துன்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு இல்ல" என்றாள்.

"அதெல்லாம் சரிடி என் அதிமேதாவி... இங்கிருந்து எப்படி வெளியே போறது"

தமிழ் தீவரமாய் யோசித்தபடி "இந்த ரூம்ல இருந்து வெளியே போக வேற ஒரு வழி இருக்குன்னு தாத்தா சொல்லியிருக்காரு... பட் அது என்ன மாதிரி வழி? .. எங்க இருக்கும்னு இந்த இருட்டில ஒண்ணும் தெரியலயே..." என்றாள்.

"இப்ப என்ன பன்றது... வந்த வழியே திரும்பி போக முடியுமா"

"அது ரொம்ப ரிஸ்க்"

"ஆனா இந்த ரூம்ல இப்படியே காத்தில்லாம... லைட்டில்லாம... ரொம்ப நேரம் இருக்கவும் முடியாது... அதுவும் நமக்கு ரிஸ்க்தான்" என்று ஆதி சொல்ல அவர்கள் இருவரின் நிலைமையும் ரொம்பவும் பரிதாபகரமாகவே இருந்தது.

அந்த சில நிமடங்களில் மழையில் நனைந்தது போல் மொத்தமாய் அவர்கள் வியர்வையில் நனைந்திருந்தனர்.

அங்கே இன்னும் சில மணிதுளிகள் அடைந்து கிடப்பது கூட ரொம்பவும் சிரமம்தான்.

தமிழ் குழப்பமாக "கொஞ்ச நேரம் மேனேஜ் பண்ணுவோம் ஆதி.. அப்புறமா என்ன பன்றதுன்னு யோசிக்கலாம்" என்றாள்.

வேறுவழியின்றி இரு தோழிகளும் ஆதரவாய் ஒருவர் மீது ஒருவர் தலைசாய்த்து படுத்து கொண்டனர்.

ஆதி தவிப்போடு "நான் பயப்படலடா... பட் என் விஷ்வாவை நினைச்சா கவலையா இருக்கு... ரொம்ப அப்சட்டாயிடுவான்" என்றாள்.

"இப்ப விஷ்வாவை பத்தி கவலை பட்டு என்ன யூஸ்... என் கூட வர்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கனும்" என்றாள்.

"போடி... இப்பவும் உன் கூட வந்ததில எனக்கு எந்தவித வருத்தமும் இல்ல"

"அப்போ விஷ்வா பாவம் இல்லயா"

"ஏன்... உன் ஏசிபி சாரும் உன்னை தேடிட்டிருப்பாரே... அவரை பத்தி உனக்கு கவலை இல்லயா"

"கவலை படற அளவுக்கெல்லாம் ஒண்ணுமில்லை... என்னை காணோம்னு இன்வஸ்ட்டிகேஷன் பண்ணிட்டிருப்பாரு... சீக்கிரமே வந்திருவாரு... அவரோட காதல் மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ... அவரோட கடமை உணர்ச்சி மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு... யூ நோ... யாரும் இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்திறங்கிற மாதிரி... அவ்வ்வ்வ்வளவு கடமை உணர்ச்சி... " என்று அவள் விளையாட்டாக சொன்னாலும் அந்த வார்த்தையில் அத்தனை கோபமும் எரிச்சலும் இருந்தது.

"அப்போ அவர் பீஃல் பண்ண மாட்டாருன்னு சொல்றியா ?!"

"பீஃல் பண்ணுவாரான்னு தெரியல... ஆனா மனிஷன் செம காண்டல இருப்பாரு... நான் மட்டும் கிடைச்சேன்... இருக்கிற பிரச்சனை எல்லாம் இழுத்துவிடிறியான்னு... என் கன்னத்தை பேத்திருவாரு... அதான் கொஞ்சம் பயமா இருக்கு"

"நீயா தமிழ் பயப்படிற... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அசால்ட்டா அவனுங்க எல்லோரையும் சமாளிச்ச"

"நீ வேற ஆதி... அவனுங்கெல்லாம் டம்மி வில்லன்... வீரேந்திர பூபதிதான் மை ரியல் வில்லன்..." என்று தமிழ் சொல்லி கொண்டிருக்கும் போதே இருவருமே மிரளும் வண்ணம் ஒரு சிறு நிழல் போன்ற உருவம் அதிவேகமாய் ஓடி மறைந்தது.

இருதயமே நின்றது போல அமர்ந்திருந்த அந்த இரு தோழிகளும், உடனே அந்த சிறு உருவம் எப்படி உள்ளே வந்து மறைந்திருக்கும் என்று யோசிக்க முற்பட்டனர்.

******

சரியாய் அதே சமயத்தில் வீரேந்திரனின் வாகனம் சிம்மவாசல் ஊருக்குள் நுழைய, விஷ்வாவும் அவனுடன் வந்து கொண்டிருந்தான்.

இருவருக்கும் இடையில் சற்றுமுன்பு நடந்த பெரும் வாக்குவாதமும் பூசலும்
அவர்கள் இருவரின் முகத்திலும் வெறுப்பை ஊற்றெடுத்து கொண்டிருந்தது.


plssss like and comment friends
next update epo mam
 




Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Sis super but am angry.u better write a mega serial u will defeat Radhika yappa mudila unga thodarum.
 




Yamini Dhanasekar

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
254
Reaction score
410
Interesting,thrilling ud .But story seekirame mudiya pogudhenu thonudhu
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Ha ha tamilammma seeemmmm ponga
Epdi yo tammi villanga Kita thapiyachi
Unnoda orijinal villan on da way waituuuu
ARPUTAMANA padivu:love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top