• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சுரங்க பாதை

வீரேந்திரன் அந்த கடைசி ஓவியம் என்னவாக இருக்கும் என்று கிட்டதட்ட யூகித்து விட்டான்.

அது நிச்சயம் அந்த அரண்மனையாகதான் இருக்க கூடும்.

அந்த மூன்று ஓவியங்களும் ஏதோ ஒரு விதத்தில் தமிழின் குடும்பத்தின் பாரம்பரியமான வரலாறையே குறி வைக்கிறது.

அப்படி இருக்க தர்மா முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரண்மனையை வரையாமல் விட்டிருக்க முடியுமா... ?

அப்போதுதான் தமிழ் அரண்மனையில்
இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற, இதுவரையிலும் அவன் யூகம் தவறானதே இல்லை.

இம்முறையும் தவறாகாது என்று தோன்ற, உடனடியாக ஸ்டேஷனுக்கு புறப்பட்டவன், அங்கிருந்து காவலளிகள் சிலரோடு புறப்பட திட்டமிட்டான்.

அதோடு அல்லாது சிம்மவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உடனடியாக அரண்மனைக்கு போய் சோதிக்க பணித்தான்.

வீரேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில்,விஷ்வா ஸ்டேஷனை வந்தடைந்தான்.

வீரேந்திரன் இருந்த அவசரத்தில் அவனிடம் பேசும் நிலையிலும் இல்லையென்பதால் அவனை
தவிர்த்துவிட்டு அவன் செல்லவும் "ஹெலோ ஏசிபி சார்... உங்களுக்கு ஆயிரம் முக்கியமான விஷயங்கள் இருக்கலாம்.. பட் எனக்கு என் மனைவிதான் முக்கியம்... " என்றான்.

தான் நிற்கும் இடத்தை பற்றியோ, பேசி கொண்டிருக்கும் நபரின் பதவி பற்றியோ கவலை கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

இப்போது ஆதி மட்டுமே அவன் மனதில் நின்று கொண்டிருந்தாள்.

வீரேந்திரன் விஷ்வாவை யாரென்று அறிமுகமில்லாமலே கணித்துவிட, அந்த சமயத்தில் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவிடம் கடிந்து கொள்ள எண்ணிய போது வீரேந்திரன் தன் கண்ணசைவாலயே அவரை தடை செய்தான்.

விஷ்வா தன் கோபம் குறையாமல் "சொல்லுங்க ஏசிபி சார், என் வொய்ஃப் ஆதி பத்தி தகவல் தெரிஞ்சிதா? " என்றான்.

"ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு... அது விஷயமாதான் போயிட்டிருக்கேன்... நீங்க டென்ஷாகாதீங்க" என்று அமர்த்தலாகவே உரைத்தான்.

"டென்ஷாகாம எப்படி இருக்க முடியும்.... என்னால முடியாது... நானும் வர்றேன்"

"அதெல்லாம். ரிஸ்க்... நீங்க வர வேண்டாம்"

"என் மனைவி பிரச்சனையில இருக்கும் போது நான் என் பாதுகாப்பை பத்தி எல்லாம் கவலை பட முடியுமா... உயிர் போற ரிஸ்காவே இருந்தாலும் பரவாயில்லை" என்றான்.

அவனின் மனநிலையை வீரேந்திரனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் அவனை அழைத்து சென்று ஏதேனும் ஆபத்தில் அவன் சிக்கி கொண்டுவிட்டால்...

அதுவும் இத்தனை உணர்ச்சிவசப்படுபவனை உடன் அழைத்து செல்வது பெரும் பிரச்சனையாகிவிடலாம் என சிந்தித்த அடுத்த கணம் "சாரி... உங்களை கூட்டிட்டு போக முடியாது" என்று சொல்லி தவிர்த்தான்.

விஷ்வா விடாமல் "சரி எங்கன்னு சொல்லுங்க... நானே போய் பார்த்துக்கிறேன்... உங்களை மட்டுமே நம்பி என் மனைவிக்கு எதுவும் ஆகாதுன்னு என்னால குருட்டாம் போக்கில உட்கார்ந்திட்டிருக்க முடியாது" என்றதும் வீரேந்திரனுக்கு அதீத எரிச்சல் மூண்டது.

அதற்குள் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவை முறைத்தபடி "இத பாருங்க... பிரச்சனையில மாட்டிட்டு இருக்கிறது உங்க மனைவி மட்டுமில்லை... சாரோட மனைவியும்தான்... உங்களுக்கு இருக்கிற அதே டென்ஷனும் கவலையும் அவருக்கும் இருக்கு... அவங்களை கண்டிப்பிடிக்க சார் எவ்வளவு போராடிட்டிருக்காருன்னு தெரியாமா பேசாதீங்க" என்று உணர்வசப்பட்டு உரைக்க

"சண்முகம் போதும்..." என்று வீரேந்திரன் அவரை பேசவிடாமல் நிறுத்திவிட்டு "இத பாருங்க... என் மனைவின்னு இல்ல... யாரா இருந்தாலும் நான் இப்படிதான் போராடியிருப்பேன்... உங்க வொய்ஃப்க்கு எந்த ஆபத்தும் வராது... இரிடேட் பண்ணாம இங்கிருந்து கிளம்புங்க..." என்றான்.

விஷ்வா அப்போதும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை.

அவன் கோபமாக "உங்க மனைவியையே உங்களால பாதுகாக்க முடியல... இதுல நீங்க ரொம்ப பொறுப்பா என் மனைவியை கண்டிபிடிச்சிருவங்களாக்கும்... " என்றதும் வீரேந்திரன் உச்சபட்ச கோபத்தை எட்டியவன் "ஹ்ம்ம்... இதே வார்த்தையை நான் உங்களை திருப்பி கேட்க முடியும்... மைன்ட் இட்" என்றான்.

அப்போது வீரேந்திரனுக்கு மண்டையில் உரைத்தது. இப்படி விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை சரியில்லை என்று எண்ணியவன், அத்தோடு தன் பேச்சை நிறுத்தி கொண்டான்.

விஷ்வாவை கையசைத்து வரச்சொல்லிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

விஷ்வாவை பொறுத்தவரை அவனுக்கு கோபம் வந்துவிட்டால் யோசிக்கும் திறனற்று போய்விடுவான்.

அப்படி இருப்பவனை சமாளிக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் ஆதியால் மட்டுமே முடியும்.

இப்போது அவளுக்கு என்ன நேர்ந்துவிட்டதோ என்று நொடிக்கு நொடிக்கு பதட்டத்தில் தவித்து கொண்டிருப்பவன் எதை பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் அளந்து கொண்டிருப்பானா என்ன?

அந்தளவுக்கான பொறுமையும் அவனிடம் இல்லை.

அவர்கள் இருவரின் மனநிலையும் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும் இருவரும் இரு துருவங்களாகவே அமர்ந்திருந்தனர்.

வீரேந்திரன் விஷ்வாவின் புறம் திரும்பும் போதெல்லாம் கோபப் பார்வையை வீச, பதிலுக்கு விஷ்வாவும் கண்களாலயே கோபத்தை அனலாய் கக்கி கொண்டிருந்தான்.

இப்படியாக எதிர்புதிரமாய் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் மனைவிமார்கள் இருவரும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து வந்தனர்.

********

தமிழும் ஆதியும் தங்கள் முன்னதாக கடந்து சென்ற அந்த சிறு நிழல் என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர்.

ஆதி தமிழிடம் சன்னமான குரலில் "எலியா இருக்குமோ ?!" என்றாள்.

தமிழும் அப்படிதான் இருக்கும் என்று தலையசைத்தவள் பின் யோசனைகுறியோடு "அதெப்படி உள்ளே வந்திருக்கும்" என்றபடி ஆதியை நோக்க இருவருமே யோசிக்கலாயினர்.

இந்த அறையை விட்டு வெளியேறும் வழியாக இருக்குமா என்று எண்ணியவர்கள் தவழ்ந்த வாக்கில் அந்த உருவம் மறைந்த திசை நோக்கி சென்று பார்க்க அந்த இருளடர்ந்த அறையில் அவர்களால் எதையும் காண இயலவில்லை.

ஆதலால் இருவரும் தங்கள் கரங்களால் தொட்டு தடவியபடி அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆதியின் கரத்தில் சட்டென சமதளம் பள்ளமாய் மாறி கீழிறுங்குவதாய் உணர்ந்தாள்.

அவள் சுதாரித்து கொண்டு "தமிழ்" என்று தன் தோழியை அழைக்கவும்

"என்ன ?... ஏதாவது வழி கிடைச்சுதா?"

ஆதி அவள் கரத்தை பிடித்து அந்த இடத்தில் வைக்க, அவர்கள் தொட்டு பார்த்த இடத்தில் ஒரு கம்பளவிரிப்பு இருந்தது.

அதன் ஒரு பக்கம் எலி தான் வந்து போக வசிதியாய் வட்டமாய் கிழித்து வைத்திருந்தது.

ஆதி யோசனையோடு "இது ஏதாச்சும் சுரங்கமா இருக்குமா?" என்று மெலிதாய் கேட்கவும் தமிழ் குழப்பமடைந்தபடி "இந்த கார்பெட் எடுத்து பார்ப்போம்" என்று சொல்லியபடி அவர்கள் பள்ளமென உணர்ந்து இடத்தில் மறைக்கப்பட்ட கம்பளவிரிப்பை விலக்கி பார்க்க யத்தனித்தனர்.

இருவருமே அந்த விரிப்பை சுருட்டவும், அதிலிருந்து பறந்து தூசியால் தும்ம ஆரம்பித்தனர்.

ரொம்பவும் சிரமப்பட்டு மூக்கை பொத்திக் கொண்டாலும், அவர்களால் அதனை கட்டுபடுத்துவது இயலாத காரியமாய் இருந்தது.

அந்த சமயத்தில் வெளியே காலடி சத்தம் பரபரப்பாய் கேட்கவும் இருவரும் அமைதியடைந்தனர்.

மீண்டும் வெளியே இருந்து ஒரு குரல் ஆக்ரோஷமாய் "இங்கதான்டா அவளுங்க இருக்காங்க... தேடுங்கடா" என்று அதிகாரமாய் சொன்னது.

இன்னும் சில நொடிகள் இங்கிருந்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணம் இருவருக்கும் உதித்தது.

தமிழ் மெலிதாக "போச்சு... அவனுங்க கிட்ட மாட்டினோம்... செத்தோம்" என்று சொல்லவும் ஆதி பொறுமையாக "பேசாம... இந்த வழியில நாம எஸ்கேப் ஆக முடியுமான்னு பார்க்கலாமே" என்று உரைத்தாள்.

ஆதி சுலபமாய் சொல்லிவிட்டாலும் அது அத்தனை சுலபமான காரியம் அல்லவே !

ஆதி சொன்னதோடு நிற்காமல் அந்த பள்ளத்தில் மெல்ல தன் கால்களை இறக்க, தமிழ் அச்சத்தோடு அவள் கரத்தை இறுக்க பற்றி கொண்டு "பாத்து பத்திரம்" என்றாள்.

ஆதி கால்கள் அந்தரத்தில் தொங்க மெல்ல சற்று ஆழமாய் இறங்கவும் தரைத்தட்டுப்பட்டது.

அது ஏதோ படிகெட்டை போல கீழே இறங்க "இது கண்டிப்பா சுரங்க பாதைதான்" என்று உறுதிபடுத்தினாள்.

தமிழ் ஆழமாய் சிந்தித்தவள் "எனக்கு இப்ப ஞாபகம் வருது... தாத்தா ஒரு தடவை சொல்லி இருக்காரு... அரண்மனையில இருந்து ஒரு சுரங்க பாதை வெளியே இருக்கிற தாமரை மண்டபத்தில முடியும்னு... மே பீ இது அந்த வழியா இருக்கலாம்" என்றாள்.

"ரியலி...இந்த மேட்டர் செம இன்ட்டிரஸ்டிங்கா இருக்கு தமிழ்"

"பட் இந்த வழி சேஃப் இல்ல ஆதி"

"என்ன மாறி ஆபத்து இருக்கும்னு சொல்ல வர்ற ?!"

"ஏதாச்சும் விஷவாயு தாக்கினா... இல்ல ஏதாச்சும் விஷ ஜந்து தாக்கினா" என்றதும் ஆதிக்கு சிரிப்பு வந்தது.

"விஷவாயு எல்லாம் சேன்ஸ் இல்ல... எலி சேஃப்பா வந்து போகுது இல்ல... அதுவும் இல்லாம வெளியே இருக்கிற அந்த ஜந்துங்களை விடவா மோசமான ஜந்துக்கள் உள்ள இருந்திர போது... " என்றாள் ஆதி.

"நீ சொல்றதெல்லாம் சரி... பட் நம்மக்கிட்ட லைட் கூட இல்லையே"

"ஹ்ம்ம்ம்.... கொஞ்ச நேரத்துக்கு நம்ம பிளைன்டா (Blind )மாறிட்டோம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்"

இருவருக்கும் அவர்கள் செய்யும் காரியத்தின் விபரீதம் புரிந்தாலும் இப்போதைக்கு அந்த சுரங்கத்தை தவிர தப்பிக்க அவர்களுக்கு வேறுவழியில்லை.

இனி அந்த அறையில் இருப்பதை விட அந்த சுரங்கத்திலேயே இறங்கி பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தனர்.

ஆதி மெல்ல அந்த சுரங்கத்திற்குள் கீழிறங்க, அவளை பின்தொடர்ந்து தமிழும் இறங்க யத்தனிக்கும் போது வெளியே இருந்து ஒரு குரல் மிரட்டலாய் ஒலித்தது.

"எங்களுக்கு தெரியும்டி... நீங்க இங்கதான் எங்கயோ ஒலிஞ்சிட்டிருக்கீங்க... இப்ப நீங்களா வெளியே வரல... அப்புறம் நடக்க போற விபரீதத்தை யாராலயும் தடுக்க முடியாது" என்றான்.

தமிழ் அவன் மிரட்டலை பொருட்படுத்தாமல் அடியெடுத்து கீழே வைக்க, மீண்டும் அந்த குரல் "ஏ செந்தமிழ்... நீ இப்போ வரல இந்த அரண்மனை இருந்த தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போயிடும்" என்று சொன்னதும் தமிழ் அதற்கு மேல் அடியெடுத்து வைக்காமல் அதிர்ந்தபடி நிற்க
 
Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஆதி அவள் கரத்தை பற்றி கொண்டு "தமிழ் வா... நம்ம போயிடுவோம்... அவனுங்க சும்மா மிரட்டிறானுங்க" என்றாள்.

தமிழுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் இருக்க வெளியே இருந்தவன் இன்னும் சத்தமாக "இப்ப நீங்க வெளியே வரல... இந்த அரண்மனையை மொத்தமா கொளுத்திருவோம்" என்று மிரட்ட, தமிழின் சப்தநாடிகளும் ஒடுங்கி போனது.

அவர்கள் சொல்வது போல செய்துவிட்டால் தன் முன்னோர்கள் காலகாலமாய் கட்டியாண்ட இந்த அரண்மனை சாம்பலாய் போய்விடுமே!

அவர்களை இங்கு அழைத்து வந்து
தான் பெரிய முட்டாள்தனத்தை செய்துவிட்டோமோ என்று எண்ணி தலையிலடித்து கொண்டாள்.

ஆதிக்கு இந்த நிலையில் என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் தமிழ் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாய் முடிவெடுத்துவிட்டாள்.

அவள் ஆதியை நோக்கி சமிஞ்சையால் சுரங்கத்தின் வழியாய் போக சொன்னாள்.

ஆதி அதிர்ந்து நிற்க தமிழ் அவளிடம்

"நீ முடிஞ்சா தப்பிச்சி போய் வீருக்கு தகவல் சொல்லு... நான் அவனுங்க எந்த விபரீதமும் பண்ணாம சமாளிச்சுக்கிறேன்... "

"அதுக்காக உன்னை தனியா
இவனுங்க கிட்ட விட்டுவிட்டு போக சொல்றியா... நோ... நீ வரலன்னா நானும் உன் கூடவே இருக்கேன்"

"அய்யோ ஆதி... நீ இதுக்குள்ள போறதும் ரிஸ்க்தான்... பட் நீ வெளியே போக முடிஞ்சா... வீரை கான்டக்ட் பண்ண முடியுமே... அதனால்தான் சொல்றேன்.. ப்ளீஸ் நீ போ... அப்படி வழியில்லன்னா திரும்பி வந்திரு... ஆனா நான் இப்ப போலன்னா ... அவனுங்க நிச்சயம் கோபத்தில அரண்மனையை எரிச்சிடுவானுங்க... ஸோ நான் போறேன்"

"உன்னை ஏதாவது பண்ணிடுவாங்க தமிழ்"

"உம்ஹும்... மாட்டானுங்க... அந்த பொக்கிஷத்தோட ரகசியம் தெரிய வரைக்கும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டானுங்க... "

ஆதி யோசனையோடு நிற்க தமிழ் தீர்க்கமாக "டைம் வேஸ்ட் பண்ணாத ஆதி... நீ போ..." என்று துரிதப்படுத்தினாள்.

தமிழுக்கு அரண்மனை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததென்று ஆதிக்கு நன்றாகவே தெரியும். ஆதலால் இனி அவள் நிச்சயம் வரமாட்டாள். அதே நேரத்தில் புத்திசாலித்தனமாய் யோசித்தால் ஒருவராவது தப்பி போய் பிரச்சனையின் தீவரத்தை வீரேந்திரனுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்ற தமிழின் வாதமும் சரியென்று தோன்றியது.

அந்த இரு தோழிகளுமே நிலைமையை சமாளிக்க இருவேறு ஆபத்தான வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

ஆதி கண்கள் புலப்படாத ஆபத்துகள் அடங்கிய அந்த சுரங்கத்திற்குள் செல்ல முற்பட்டாள்.

தமிழ் அந்த கொடூரமானவர்களை எதிர்கொள்ள தயாரானாள்.

ஆதி உள்ளிறங்கி செல்ல செல்ல அவளுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று தமிழ் தவிப்புற்றபடி நிற்க

அறைக்கு வெளியே இருந்து "அவளுங்க வர மாதிரி தெரியல... ஒரு ரூம் விடாம எல்லாம் ரூம்லயும் நெருப்பை பத்த வையுங்க... அவளுங்க எப்படி தப்பிக்கிறானுங்கன்னு நானும் பார்க்கிறேன்" என்ற ஒரு குரல் அதிகார தொனியில் கேட்க, தமிழ் அஞ்சியபடி உள்ளிருந்து "வேண்டாம்... வேண்டாம்.. அப்படி எல்லாம் பண்ணாதீங்க... நானே வந்திடுறேன்" என்றாள்.

அவளின் குரல் வந்த திசையை இம்முறை அவர்கள் தெளிவாய் கணித்துவிட ஒருவன் ஓவியத்திற்கு அருகில் வந்து "இங்கிருந்துதான் சத்தம் வருது.. " என்றான்.

தமிழ் அவசர அவசரமாய் அந்த சுரங்க பாதை தெரியா வண்ணம் அந்த கம்பளவிரிப்பை சரி செய்தாள்.

அவர்களோ வெளியே ராஜசிம்மன் ஓவியத்தை உடைக்க முயற்சி செய்யும் சத்தம் ஒலிக்க அவள் உடனடியாக "ப்ளீஸ் அந்த ஓவியத்தை எதுவும் பண்ணிட வேண்டாம்... நானே வெளியே வந்திடுறேன்" என்றாள்.

தமிழ் முடிந்தவரை தாமதிக்க தாமதிக்க ஆதி அவர்களிடம் சிக்காமல் சிறு தொலைவுவாவது கடந்துவிடுவாள் என்பதே அவளின் எண்ணம் !

ஆதி சென்ற பாதை ஆழமாய் உள் இறங்க இறங்க தனிமை ஒரு புறமும் இருள் மறுபுறமும் அவளின் அஞ்சா நெஞ்சத்தை அசைத்து பார்க்க தொடங்கியது.

சுற்றிலும் எந்தவித சத்தமும் எழவில்லை. அவள் இதயம் மட்டும் லப்- டப்- லப் -டப் என்று துடித்து அவள் செவியை துளைத்து கொண்டிருந்தது.

குருட்டு தைரியம் என்று சொல்வார்களே ! அவ்வாறே ஆதியின் தைரியத்தை இப்போது விவரிக்க வேண்டும்.

விழிகள் உண்மையிலேயே பார்க்கும் சக்தியை இழந்துவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளுக்கு.

சிறிது நேரத்தில் படிகள் மாறி சமதளமான தரையாய் மாறிட, அவள் உயரத்திற்கு கொஞ்சம் குனிந்து செல்ல வேண்டிய நிலைதான்.

எப்படி இந்த பாதையை உபயோகப்படுத்தியிருப்பார்கள் என்று வியப்பானாள்.

அவள் நடக்க நடக்க அந்த பாதை முடியாமல் நீண்டு கொண்டே போக, அவள் பொறுமை கரைய தொடங்கியது.

இந்நிலையில் வெளியேறும் வழி இல்லாமல் போனால் மீண்டும் தான் இத்தனை தூரம் பின்னோக்கி செல்ல வேண்டுமா? !

இவ்வாறு எண்ணும் போதே அவள் உள்ளம் பதறியது.

அவள் மூச்சு வேறு முட்ட ஆரம்பித்தது. அவள் தலையெல்லாம் சுழல உடலெல்லாம் வியர்வையை ஊற்றி, நாக்கு உலர்ந்து போனது.

மேலே செல்ல முடியும் என்ற அவள் நம்பிக்கை மெல்ல உடைய ஆரம்பிக்க,
வெளியே சென்று விடுவோமோ ?!
என்ற கேள்வி எழ அவளின் மனஉறுதியும் தளர்ந்தது.

உடலும் சோர்வுற்று அவளை மயக்க நிலைக்கு தள்ள யத்தனிக்க சாயப் பார்த்த போது ஏதோ ஒரு சக்தி அவளை விழ விடாமல் சுதாரிக்க சொல்ல, அப்படியே குனிந்த வாக்கில் அருகில் தட்டுப்பட்ட சுவற்றை பற்றி கொண்டாள்.

அவள் கழுத்திலிருந்து ஆதிபரமேஸ்வரி டாலர் தொங்கியபடி ஊசாலாடி கொண்டிருந்தது.

கடவுள் பக்தியை தாண்டி அது அவளின் மனோபலத்தை தூக்கி நிறுத்தும் சக்தி. எத்தனையோ மரணத்தருவாயை அவள் கடந்துவந்ததை இப்போது நினைவுப்படுத்தி கொண்டாள்.

அவள் விதி முடிந்துவிடும் என்று எண்ணும் கடைசி நொடியில் ஏதாவது ஒரு அதிசியம் நிகழ்ந்து அவளை காப்பாற்றி இருக்கிறது. நேற்று நடந்த விபத்தில் கூட அப்படிதான் உயிர்பிழைத்து கொண்டாள்.

இந்த சுரங்கம் அவற்றை எல்லாம் விட பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லி திடப்பட்டவள் தன் ஒற்றை கரத்தால் ஆதிபரமேஸ்வேரி டாலரை பற்றி கொண்டபடி 'ஆதி... திங் பாஸ்ட்டிவ்.. உனக்கு எதுவும் ஆகாது..." என்று ஒயாமல் சொல்லிக் கொண்டே நடக்கலானாள்.

அப்போது சில்லென்று காற்று அவள் மேனியை தழுவி சென்றது. வியர்வையால் நனைந்திருந்தவளுக்கு அந்த வெளிக்காற்று பட்டதும் அத்தனை இன்பகரமான உணர்வு.

அந்த காற்று வந்த திசையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதோ ஒரு வெளிச்சம். ரொம்பவும் குறைவாய்... ஒரு சிறு துவாரத்தின் வழி புகுந்தது.

உற்று கவனிக்க அந்த எலியின் வேலையாக இருக்கும் என்பதாக யூகித்தவள் மானசீகமாய் அந்த எலிக்கு நன்றி தெரிவித்து கொண்டு மூச்சை இழுத்துவிட்டு மீண்டும் திடப்பட்டு நடக்க தொடங்கினாள்.

சட்டென்று ஏதோ தடுக்க, அது படிக்கெட்டுகள் என்பதை உணர்ந்தவள் ரொம்பவும் ஜாக்கிரதையாய் ஏறத் தொடங்கினாள்.

மேலேறி ஆதி சென்று கொண்டிருக்க, அவள் தலையிடித்து கொண்டது.

அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். தலையை தேய்த்தபடி இனி வெளியேறும் வழியை கண்டறிய வேண்டும் என மேலே இடித்த அந்த கல்லை தூக்க முற்பட்டாள். அது அவளால் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

வெளியே செல்லும் வழி தட்டுபடவேயில்லை.

மீண்டும் சோர்வு உண்டானது. திரும்பி சென்றுவிட வேண்டியதுதானா?உயிரை பிடித்து கொண்டு வந்து கடைசியில் தன் முயற்சி தோல்வியை தழுவிவிட்டதா என்று எண்ணி தவிப்போடு பின்னோடு தட்டுப்பட்டு சுவற்றில் தலையை சாய்க்க போக ஏதோ கூர்மையாய் அவள் பின்மண்டையை குத்திட, அது என்னவாக இருக்கும் என்று தொட்டு பார்த்தாள்.

அந்த கூர்மையான பொருளை பிடித்து உணர்ந்தவள் அதனை அசைத்து, பிறகு சிரமப்பட்டு அழுத்தி பார்த்தாள்.

மெல்ல மேற்புறம் ஏதோ நகர்ந்து தனித்து மேலெழும்பியது. பிரம்மிப்போடு பார்த்திருந்தவள் மேலிருந்த அந்த கல்லை நகர்த்த அது அசைந்து கொடுத்தது. மூச்சை இழுத்தி பிடித்து கொண்டு தள்ளினாள்.

ஆம்... திறந்தது. அவள் செல்வதற்கான வழி பிறந்தது. வெளிச்சம் மெல்ல மெல்ல நுழைந்தது. ஆதி பரவாசமானாள். வியப்புற அது முழுமையாய் திறப்பதை கவனித்தாள்.

ரொம்பவும் சிரமப்பட்டு அந்த துவாரத்தின் வழியே தலையை நுழைத்து தேகத்தை லாவகமாய் வெளியே கொண்டு வந்தாள்.

வெளியே வந்து நின்றவள், சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள்.

அவள் உடல் மொத்தமாய் நனைந்திருக்க எட்டிப் பார்க்கும் தூரத்தில் கடல் அலை காற்று அவள் தேகத்தை வருடி சிலிர்பூட்டி அவளை உயிர்ப்பிக்க செய்தது.

அவள் நின்று கொண்டிருந்த இடமோ அரண்மனைக்கு பின்புறம் கட்டமைக்கப்பட்டிருந்த இளைபாறும் மண்டபம் என்பதை அறிந்து கொண்டாள்.

அந்த மண்டபத்தை சுற்றிலும் கல்தூண்கள் அமைக்கப்பட்டிருக்க நடுநாயகமாய் கற்களால் செதுக்கப்பட்ட ஒற்றை தாமரை மலர் இருந்தது .

இப்போது அந்த மலரே நகர்ந்து அவள் வெளியே வர வழிவிட்டிருக்கிறது.

இதனை கண்டவள் வியப்பின் விளம்பிற்கு சென்றாள். மெல்ல அந்த தாமரையை அழுத்தி சிரமப்பட்டு அவள் நகர்த்த அது மீண்டும் தன்னிடத்தில் லாவகமாய் சென்று அமர்ந்து கொண்டது.

அந்த பயணம் ஆபத்தோடு ஆரம்பித்து பெரும் ஆச்சர்யமாய் முடிந்திருந்தது.

ஆதிபரமேஸ்வேரி கோவில் ஒரு விளங்கி கொள்ள முடியாத அதிசயமெனில், இந்த அரண்மனை முற்றிலும் வேறுவிதமான அதிசயம் !

ஆச்சர்யத்திற்கெல்லாம் மேலாக பெரும் சுவராஸ்யம் !

இவற்றை எல்லாம் விட பேராதிசயம் இதனை கட்டமைத்த தமிழனின் மூளை.

ஆனால் இன்றோ அத்தகைய தமிழ் சந்ததிகளில் பிறந்த பலரும் தன் மூளையை அயல்நாட்டினனுக்கு அடிமட்டத்திற்கு விற்றுக் கொண்டிருக்கும் அவலத்தை எண்ணி அந்த நொடி அவள் மனம் வேதனையில் உழன்றது.

இத்தகைய அரண்மனையை கட்டிகாக்க வேண்டும் என்ற தமிழின் நினைப்பில் தவறொன்றுமில்லை என்ற சிந்தனை எழ, அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

இத்தனை நேரம் இருளிலேயே இருந்ததினாலோ என்னவோ அவள் பார்வை மங்கலாய் தெரிந்தது.

அதுவல்லாது கடல் அலையின் ஓசை செவிக்குள் நுழைந்து அவள் மனதை பிசைந்து கொண்டிருந்தது.

ஆதி வேகமாய் யார் மூலமாவது வீரேந்தினை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு உடல் வலிமை குன்றிய போதும் மனவலிமையோடு சாலையை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

***********
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அந்த போலீஸ் வாகனம் வேகமாய் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்க, வீரேந்திரனின் விழிகள் அந்த கடற்பரப்பையே பார்த்தபடி இருந்தன.

இதே கடற்பரப்பில் வைத்துதான் தான் கொஞ்சமும் முன்யோசனையில்லாமல் அவளை அடித்து காயப்படுத்திவிட்டோம் என்ற எண்ணம் மனதை அழுத்தி காயப்படுத்தியது.

தன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்ற சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.

ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.

அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.

வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.

"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.

விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.

தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருக்கும் போதே அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.

அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.

அவள் எங்கே ?

அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.

ஆதி விஷ்வாவை தன்னிடமிருந்து பிரித்தவள் கணவனை சமிஞ்சையால்
அமைதியடைய சொல்லிவிட்டு, முழுநிலவினை பார்த்து ஏக்கமாய் பொங்கி கொண்டிருக்கும் கடல்அலைகளை பார்த்தபடி சிலையாய் நின்றவனின் அருகாமையில் சென்றாள்.

வீரேந்திரன் தன் கண்ணீரை அவசரமாய் துடைத்து கொண்டு தவிப்போடு "என் தமிழச்சி எங்கே?" என்று கேட்கவும்
ஆதியை குற்றவுணர்வு குத்தியது.

தான் சுயநலமாக நடந்து கொண்டோமோ என்ற குற்றவுணர்வு.

வீரேந்திரன் உணர்ச்சிவசத்தோடு அந்த கடல் அலைகளின் சத்தமே அமிழ்ந்துவிடும்படி "தமிழ் எங்கே ?" என்று தன் குரலை உயர்த்தி கேட்க, அவனின் கோபம், காதல், தவிப்பு என்ற அவன் உள்ளடக்கிய அத்தனை உணர்வுகளும் மொத்தமாய் வெளிவந்தது.

ஆதியால் அவனின் மனநிலையை நன்காகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் மேலும் தாமதிக்காமல் அவர்களை சிலர் கடத்தி வந்தது முதல், நடந்த நிகழ்வையும் அவள் தப்பிவந்த வழியையும் பற்றி சொல்லி முடிக்க விஷ்வாவால் அவள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை.

வீரேந்திரனும் வியப்படைய அவளை நோக்கி "நீங்க வந்த வழியில இருந்து அரண்மனைக்கு உள்ளே போக முடியுமா ஆதி" என்று கேட்க ஆதி தெளிவற்ற நிலையில் பார்த்தாள்.

"உம்ஹும்... முடியாதுன்னுதான் நினைக்கிறேன்"

வீரேந்திரன் உடனே பின்னோடு வந்த எஸ்ஐ சண்முகத்தை அழைத்தவன் "அந்த மண்டப்பத்தில இரண்டு கான்ஸ்டபிளை நிற்க வையுங்க... அந்த கல்பிரிட்ஸ் அந்த வழியா தப்பிச்சி போயிட கூடாது" என்று உரைத்தான்.

எந்நிலையிலும் அவன் போலீஸ் மூளை தளராமல் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்திக்கலானது.

அவன் மேலும் ஆதி விஷ்வாவின் புறம் திரும்பி "நீங்க இரண்டு பேரும் கிளம்பிறதுக்கு வண்டி அரேஞ்ச் பண்ண சொல்றேன்... போயிடுங்க" என்று சொல்லிய மறுகணமே தன் வாகனத்தை நோக்கி விறுவிறுவென நடக்க

ஆதி அவசரமாய் அவன் பின்னோடு சென்றபடி "இல்ல... தமிழ் நல்லா இருக்காளான்னு தெரியாம நாங்க இங்கிருந்து போக
முடியாது" என்றாள்.

சட்டென்று திரும்பி அவளை நேர்கொண்டு பார்த்தவன் "தமிழுக்கு எதுவும் ஆகாது... நான் பார்த்துக்கிறேன்... அன் மோரோவர்... உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் சொல்றேன்... ப்ளீஸ் கிளம்புங்க... உங்க ஹஸ்பெண்ட் மாறி நீங்களும் அடம் பிடிக்காதீங்க... நிலைமையை புரிஞ்சிக்கோங்க" என்று தீர்க்கமாய் அவள் மேலே பேசும் சந்தர்ப்பத்தை வழங்காமல் வாகனத்தில் ஏறி புறப்பட்டுவிட்டான்.

"போட்டு கொடுத்திட்டானே" என்று விஷ்வா புலம்பும் போதே ஆதி அவன் புறம் திரும்பியவள் "நீ ஏதாவது கோபத்தில ஏடாகூடாம பேசினியா... விஷ்வா" என்று கேட்டாள்.

"சேச்சே... அப்படி எல்லாம் இல்லையே" என்று சமாளித்தான்.

"நீ பேசியிருப்படா... டென்ஷன்ல என்ன பன்ற ஏதோ பன்றன்னே உனக்குதான் எதுவும் தெரியாது" என்று சொல்லியவள் அப்போது நிற்க முடியாமல் அந்த மணற்பரப்பில் விழப் போக விஷ்வா தன் கரத்தால் அவள் வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்து கொண்டான்.

தண்ணீரும் காற்றும் இன்றி எப்படியோ மனோபலத்தோடு உயிரை பிடித்து கொண்டு வந்து சேர்நதிருந்தாள். இப்போது அந்த களைப்புணர்வை வலுக்கட்டாயமாய் அவள் தேகம் அவளுக்கு உணரத்த, விஷ்வாவோ அவளை தன் கரத்தில் தாங்க பிடித்தபடி என்னவானதோ என தவிப்புற்றான்.

******

வீரேந்திரன் வாகனத்தில் செல்லும் போதே என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவன் சிம்மவாசல் காவல் நிலையத்தினரிடம் அவன் சோதிக்க சொன்னதை பற்றி கேட்க உள்ளே செல்வதற்கு வழியில்லாமல் கதவு பூட்டப்பட்டிருப்பதாக உரைத்தனர்.

உள்ளே ஆள் அரவம் எதுவும் தென்படவில்லை என்று தகவல் உரைத்தனர்.

அவன் அவர்களின் தகவலை கேட்டு எரிச்சலடைந்தவன் அரண்மனைக்கு வெளியே பாதுகாப்பென நிற்க சொன்னான். தான் வரும் வரை யாரும் உள்ளே சென்றுவிட கூடாதென்றும் பணித்திருந்தான்.

அவனுக்கு தன் மனைவியின் தைரியத்தின் மீது அபார நம்பிக்கை இருந்தது. அவளின் அந்த தைரியம்தான் இன்னும் அவனை திடமாய் தாங்கி பிடித்து கொண்டிருந்தது.

ஆனால் அவளின் அதே துணிவுதான் அவனை பெரும் துயருக்குள்ளாக்கவும் போகிறது என்பதை அப்போது அறிந்திருக்க மாட்டான்.

Hi friends

அடுத்த விறுவிறுப்பான பதிவோடு விரைவாய் வருகிறேன். போன பதிவிற்கு கருத்துரைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அதே போல இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள். லைக் பட்டனையும் மறவாமல் அழுத்திவிடுங்கள்.

நன்றியுடன்
மோனிஷா
 
Last edited:

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

அரண்மனை என்றாலே மர்மங்கள் நிறைந்ததுதானா.

நன்றி
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Wow!! Semma suspense la close pannitinga? can’t wait for next update
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆதி தப்பிக்கும் போது மீண்டும் பொன்னியின் செல்வன் படித்த பீலிங்...அரண்மனை என்றாலே மரமங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.... விஷ்வாக்கு வீர்கிட்ட பேசினது குற்றவுணர்வா தோனலையா...அடுத்து என்ன செம விறுவிறுப்பு....சீக்கிரம் அடுத்த யூடியோட வாங்க...
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
அந்த போலீஸ் வாகனம் வேகமாய் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்க, வீரேந்திரனின் விழிகள் அந்த கடற்பரப்பையே பார்த்தபடி இருந்தன.

இதே கடற்பரப்பில் வைத்துதான் தான் கொஞ்சமும் முன்யோசனையில்லாமல் அவளை அடித்து காயப்படுத்திவிட்டோம் என்ற எண்ணம் மனதை அழுத்தி காயப்படுத்தியது.

தன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்ற சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.

ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.

அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.

வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.

"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.

விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.

தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருக்கும் போதே அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.

அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.

அவள் எங்கே ?

அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.

ஆதி விஷ்வாவை தன்னிடமிருந்து பிரித்தவள் கணவனை சமிஞ்சையால்
அமைதியடைய சொல்லிவிட்டு, முழுநிலவினை பார்த்து ஏக்கமாய் பொங்கி கொண்டிருக்கும் கடல்அலைகளை பார்த்தபடி சிலையாய் நின்றவனின் அருகாமையில் சென்றாள்.

வீரேந்திரன் தன் கண்ணீரை அவசரமாய் துடைத்து கொண்டு தவிப்போடு "என் தமிழச்சி எங்கே?" என்று கேட்கவும்
ஆதியை குற்றவுணர்வு குத்தியது.

தான் சுயநலமாக நடந்து கொண்டோமோ என்ற குற்றவுணர்வு.

வீரேந்திரன் உணர்ச்சிவசத்தோடு அந்த கடல் அலைகளின் சத்தமே அமிழ்ந்துவிடும்படி "தமிழ் எங்கே ?" என்று தன் குரலை உயர்த்தி கேட்க, அவனின் கோபம், காதல், தவிப்பு என்ற அவன் உள்ளடக்கிய அத்தனை உணர்வுகளும் மொத்தமாய் வெளிவந்தது.

ஆதியால் அவனின் மனநிலையை நன்காகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் மேலும் தாமதிக்காமல் அவர்கள் கடத்தி வந்தது முதல், நடந்த நிகழ்வையும் அவள் தப்பிவந்த வழியையும் பற்றி சொல்லி முடிக்க விஷ்வாவால் அவள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை.

வீரேந்திரனும் வியப்படைய அவளை நோக்கி "நீங்க வந்த வழியில இருந்து அரண்மனைக்கு உள்ளே போக முடியுமா ஆதி" என்று கேட்க ஆதி தெளிவற்ற நிலையில் பார்த்தாள்.

"உம்ஹும்... முடியாதுன்னுதான் நினைக்கிறேன்"

வீரேந்திரன் உடனே பின்னோடு வந்த எஸ்ஐ சண்முகத்தை அழைத்தவன் "அந்த மண்டப்பத்தில இரண்டு கான்ஸ்டபிளை நிற்க வையுங்க... அந்த கல்பிரிட்ஸ் அந்த வழியா தப்பிச்சி போயிட கூடாது" என்று உரைத்தான்.

எந்நிலையிலும் அவன் போலீஸ் மூளை தளராமல் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்திக்கலானது.

அவன் மேலும் ஆதி விஷ்வாவின் புறம் திரும்பி "நீங்க இரண்டு பேரும் கிளம்பிறதுக்கு வண்டி அரேஞ்ச் பண்ண சொல்றேன்... போயிடுங்க" என்று சொல்லிய மறுகணமே தன் வாகனத்தை நோக்கி விறுவிறுவென நடக்க

ஆதி அவசரமாய் அவன் பின்னோடு சென்றபடி "இல்ல... தமிழ் நல்லா இருக்காளான்னு தெரியாம நாங்க இங்கிருந்து போக
முடியாது" என்றாள்.

சட்டென்று திரும்பி அவளை நேர்கொண்டு பார்த்தவன் "தமிழுக்கு எதுவும் ஆகாது... நான் பார்த்துக்கிறேன்... அன் மோரோவர்... உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் சொல்றேன்... ப்ளீஸ் கிளம்புங்க... உங்க ஹஸ்பெண்ட் மாறி நீங்களும் அடம் பிடிக்காதீங்க... நிலைமையை புரிஞ்சிக்கோங்க" என்று தீர்க்கமாய் அவள் மேலே பேசும் சந்தர்ப்பத்தை வழங்காமல் வாகனத்தில் ஏறி புறப்பட்டுவிட்டான்.

"போட்டு கொடுத்திட்டானே" என்று விஷ்வா புலம்பும் போதே ஆதி அவன் புறம் திரும்பியவள் "நீ ஏதாவது கோபத்தில ஏடாகூடாம பேசினியா... விஷ்வா" என்று கேட்டாள்.

"சேச்சே... அப்படி எல்லாம் இல்லையே" என்று சமாளித்தான்.

"நீ பேசியிருப்படா... டென்ஷன்ல என்ன பன்ற ஏதோ பன்றன்னே உனக்குதான் எதுவும் தெரியாது" என்று சொல்லியவள் அப்போது நிற்க முடியாமல் அந்த மணற்பரப்பில் விழப் போக விஷ்வா தன் கரத்தால் அவள் வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்து கொண்டான்.

தண்ணீரும் காற்றும் இன்றி எப்படியோ மனோபலத்தோடு உயிரை பிடித்து கொண்டு வந்து சேர்நதிருந்தாள். இப்போது அந்த களைப்புணர்வை வலுக்கட்டாயமாய் அவள் தேகம் அவளுக்கு உணரத்த, விஷ்வாவோ அவளை தன் கரத்தில் தாங்க பிடித்தபடி என்னவானதோ என தவிப்புற்றான்.

******

வீரேந்திரன் வாகனத்தில் செல்லும் போதே என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவன் சிம்மவாசல் காவல் நிலையத்தினரிடம் அவன் சோதிக்க சொன்னதை பற்றி கேட்க உள்ளே செல்வதற்கு வழியில்லாமல் கதவு பூட்டப்பட்டிருப்பதாக உரைத்தனர்.

உள்ளே ஆள் அரவம் எதுவும் தென்படவில்லை என்று தகவல் உரைத்தனர்.

அவன் அவர்களின் தகவலை கேட்டு எரிச்சலடைந்தவன் அரண்மனைக்கு வெளியே பாதுகாப்பென நிற்க சொன்னான். தான் வரும் வரை யாரும் உள்ளே சென்றுவிட கூடாதென்றும் பணித்திருந்தான்.

அவனுக்கு தன் மனைவியின் தைரியத்தின் மீது அபார நம்பிக்கை இருந்தது. அவளின் அந்த தைரியம்தான் இன்னும் அவனை திடமாய் தாங்கி பிடித்து கொண்டிருந்தது.

ஆனால் அவளின் அதே துணிவுதான் அவனை பெரும் துயருக்குள்ளாக்கவும் போகிறது என்பதை அப்போது அறிந்திருக்க மாட்டான்.

Hi friends

அடுத்த விறுவிறுப்பான பதிவோடு விரைவாய் வருகிறேன். போன பதிவிற்கு கருத்துரைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அதே போல இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள். லைக் பட்டனையும் மறவாமல் அழுத்திவிடுங்கள்.

நன்றியுடன்
மோனிஷா
ரொம்ப நாட்களாக இழுத்துடிக்கின்றீங்க
இப்படி உங்கள் வாசகர்களை ஏமாற்றலாமா
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
:unsure:
ரொம்ப நாட்களாக இழுத்துடிக்கின்றீங்க
இப்படி உங்கள் வாசகர்களை ஏமாற்றலாமா
நான் ஏமாத்திறேனா?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top