• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
புது பரிமாணம்

இருவரும் மரணத்தோடு போராடி உயிர்பெற்று வந்திருந்தனர்.

சற்றுமுன்பு வேகமாய் சுழன்றிருந்த உலகம், இப்போது அப்படியே சுழலாமல் நின்றுவிட்டதாய் தோன்றியது.

வெகுநேரமாய் அவர்களின் அணைப்பின் இறுக்கம் தளரவேயில்லை.

அவனுக்குள் முழ்கி கிடந்தவளுக்கோ அவனை பிரியும் எண்ணமே எழவில்லை. அவனுக்குமே அவளை விட்டுவிலகட மனமே வரவில்லை.

ஆனால் வீரேந்திரன் தன் அருகாமையில் அசைந்த நிழலுருவை கண்டு தமிழை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.

விழிகள் மூடி அவன் மேல அயர்ந்திருந்தவள் அவன் விலகப் போனதும் தன்னிலை உணர்ந்த விழித்துக் கொண்டாள்.

அவன் எழுந்து நின்று கொண்டு தன் கரத்திலிருந்து மணலை தட்டியபடியே "அந்த கடத்தல் கும்பல் எங்க இருக்காங்க சண்முகம் ?" என்று கேட்க,

சண்முகம் அவனிடம் தூரத்தில் கட்டி வைத்திருப்பவளை கைநீட்டி காண்பிக்க அவர்களை பார்த்தவன் விஷ்வா ஆதியை நோக்கி நடந்தான்.

தமிழ் தன் எதிரே மோதிக் கொண்டிருந்த அலைகளை நன்றியுணர்வோடு பார்த்தாள்.

தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. இந்த கடலும் இந்த கடலில் இருக்கும் அவர்களின் குலதெய்வமும் அவர்களை என்றும் விட்டுகொடுத்துவிடாது என்று.

எழுந்து நின்றவள், பின்னோடு பிரமாண்டத்தின் முழு ரூபமாய் நின்றிருந்த அரண்மனையை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

அதோடு அவள் முன்னே நடந்து சென்று கொண்டிருந்த வீரேந்திரனை நோக்கினாள்.

இத்தனை நேரம் தன்னை இறுக்கமாய் அவனின் அரவணைப்பில் வைத்திருந்துவிட்டு, இப்போது கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தது ஏன்?

தன் மீதான கோபமா என்று எண்ணத்தோடு விரக்தியுற்றவவள் நடக்க முடியாமல் நடந்து வந்தாள்.

வெறுங்கால்களோடு ஓடி வரும் போது அவள் கால்களை குத்திய எதுவும் அப்போது வலிக்கவில்லை. ஆனால் இப்போது நடக்க முடியாமல் அவஸ்த்தையாய் இருந்தது.

வீரேந்திரன் நேராய் விஷ்வாவை பார்த்ததும் புன்னகையித்தபடி "கிரேட் விஷ்வா... உண்மையிலேயே நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம்... என்ன கட்ஸ் ?!! " என்று பாராட்டியபடி அவனை தன் தோளோடு அணைக்க விஷ்வா வியப்பின் விளிம்பில் தன் மனைவியை பார்த்தான்.

சற்றுமுன்பு வரை விஷ்வாவும் ஆதியும் படபடப்போடு என்ன நேருமோ என்று காத்திருந்த சமயத்தில் தூரத்தில் தமிழும் வீரேந்திரனும் அவர்கள் உயிர்களை பணைய வைத்து பாமை தூக்கிவீசியதை பார்த்து கொண்டுதான் இருந்தனர்.

எல்லோருமே கிட்டதட்ட பரபரப்பின் உச்சத்தை எட்டிய தருணம் அது. அந்த பாம் வெடித்த சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்திருந்தது.

விஷ்வா தமிழ் வீரேந்திரனின் வீரசாகசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயிருக்க அவன் தன்னை பாராட்டி பேசுவது நெகழச்சியாய் இருந்தது.

வீரேந்திரனின் புகழ்ச்சிகளுக்கு தான் உரித்தானவன் இல்லையே என்ற எண்ணத்தோடு விஷ்வா "ஸார் நான்.." என்று அவன் பேசுவதற்காக முன்னதாக ஆதி அவன் கரத்தை பற்றி கொண்டு அழுத்தினாள்.

அவன் மௌனமாகிட பின்னர் அவள் புன்னகையோடு "விஷ்வா மட்டும் இல்லைன்னா அவனுங்க தப்பிச்சி போயிப்பாங்க... நான் வேண்டாம் விஷ்வா... அவனுங்க ஆறு பேர் இருக்கானுங்கனு ரிஸ்க்னு சொன்னதுக்கு... ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரின்னு அஸால்ட்டா அவனுங்கள அடிச்சி போட்டுட்டாரு" என்றாள்.

விரேந்திரன் புன்னகையித்தபடி கேட்டுவிட்டு விஷ்வாவின் தோளை தட்டி மெச்சிய பார்வை பார்க்க, அவனோ புருவத்தை ஏற்றி தன் மனைவி சொன்னதை கேட்டு வியப்பாய் பார்த்திருந்தான்.

அவன் தன் மனைவி காதோடு "நான் எப்போடி இப்படி எல்லாம் சொன்னேன்... நீ பாட்டுக்கு ஏசிபி சார்கிட்ட கதையா அளந்துட்டிருக்க" என்றான்.

வீரேந்திரன் குழப்பமாக "என்ன விஷ்வா? ஏதாச்சும் சொல்லனுமா? !" என்று கேட்கவும் விஷ்வா யோசனை குறியோடு "அது ஒண்ணும் இல்ல... போலீஸ் ஸ்டேஷ்னல உங்ககிட்ட கொஞ்சம் ரூடா பேசிட்டேன் சாரி" என்றான்.

"விடுங்க விஷ்வா... உங்க பாயின்ட் ஆஃப் வீயூல இருந்து பார்த்தா நீங்க பேசினதில ஒண்ணும் தப்பில்லை" என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, தமிழ் பொறுமையாய் அவர்களிடம் வந்து சேர ஆதி தன் தோழியை இறுக்கி அணைத்து கொண்டு "ரொம்ப டென்ஷன் படுத்திட்ட தமிழ்... எங்களுக்கெல்லாம் உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்துச்சு" என்றாள்.

தமிழும் தன் தோழியை தழுவியபடி "ஹ்ம்ம் சாரி" என்றாள்.

ஆதி தன் தோழியின் முகத்தை பார்த்து "சாரியை என்கிட்ட இல்ல... உன் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லு... பாவம் அவர்தான் ரொம்ப டென்ஷனாயிட்டாரு... அவர் உனக்காக ஓடின ஓட்டம் இருக்கு இல்ல... ப்ச்... நாங்கெல்லாம் அப்படியே ஸ்டர்ன் ஆயிட்டோம்... அவர் கத்திட்டு ஓடினதை பார்த்து என்ன நடக்குமோன்னு பார்த்திட்டிருந்த எங்களுக்கே பிபி எகிறிடுச்சு... ஏசிபி சார் நிலைமை" என்று சொல்லிக் கொண்டிருக்க விஷ்வா வீரேந்திரனை பார்த்து "நீங்க ரியல் ஹீரோ சார்" என்றான்.

ஆதி தன் தோழியின் முகத்தை பார்த்தபடி "ட்ரூ" என்றாள்.

வீரேந்திரன் தலையசைத்து "நீங்க சொல்றளவுக்கு எல்லாம் இல்ல... நான் ஒரு ட்ரெயின்ட் போலீஸ்... பட் நீங்க செஞ்சதுதான் பெரிய விஷயம்" என்று விஷ்வாவையும் ஆதியையும் புகழ, தமிழ் அவர்கள் பேசியதன் அர்த்தம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

வீரேந்திரன் தன் அலைப்பேசி எடுத்து கொண்டு அவர்களிடம் "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி அகன்றுவிட, ஆதி அப்போது அந்த கடத்தல் கும்பலை பிடித்த நிகழ்வுகளை தன் தோழிக்கு விவரித்த அதே சமயத்தில் தன் கணவனின் புகழுரைகளும் ஓயாமல் பாடி தீர்த்தாள்.

தமிழ் விஷ்வாவை நோக்கி "பயங்கரமா பைஃட் பண்ணி இருக்கீங்க போல... நான்தான் அந்த ஸ்டன்ட் சீனெல்லாம் பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டேன்" என்றாள்.

"பாமை தூக்கிட்டு ஓடினதைவிடவா... நான் செஞ்சது பெரிய ஸ்டன்ட்டு" என்றான் விஷ்வா.

தமிழ் அசட்டுத்தனமாய் சிரிக்க விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.

"புரிஷன்மார்களை டென்ஷன்படுத்திறதில உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆனந்தம்" என்றான்.

ஆதி கோபமாய் முறைத்து "இப்ப என்ன சொல்ல வர்ற...? " என்று கேட்டாள்.

விஷ்வா அந்த பேச்சை தொடராமல் "நீங்க இரண்டு பேரும் ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க... தண்ணி பாட்டிலும் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்" என்று நழுவி கொண்டான்.

பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பித்தால் ஆதி வசைமாறி பொழிந்து அவனை ஒரு வழி செய்துவிடுவாள். அதனால்தான் ரொம்பவும் சாமர்த்தியமாய் அந்த பேச்சை வளர்க்காமல் தப்பிக் கொண்டான்.

தமிழ் தன் தோழியினை பார்த்து "நீ விஷ்வா சாரை ரொம்பதான் மிரட்டி வைச்சிருக்க" என்றாள்.

"அய்யோ ? அவனா மிரள்வான்... உலக மகா ப்ராஃட்டு" என்று ஆதி விஷ்வாவை பற்றி சொல்லி சிரிக்க தமிழும் இதனை கேட்டு புன்னகையித்தாள்.

இவர்களின் சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் வீரேந்திரன் நேராய் கட்டிவைக்கப்பட்டிருந்த அந்த கடத்தல் கும்பலிடம் அருகில் சென்றான்.

வீரேந்திரன் சண்முகத்திடம் திரும்பி "சுற்றி நிக்கிற எல்லாரையும் க்ளியர் பண்ணுங்க" என்றான்.

அங்கே நடந்த கலவரத்தாலும் எழுந்த பெரிய சத்ததாலும் மக்கள் கூட்டம் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரையும் சண்முகமும் மற்ற கான்ஸ்டபிள்களும் பிராயத்தனப்பட்டு போகச் செய்ய இப்போது அந்த இடம் வெறிச்சோடிப் போனது.

வீரேந்திரன் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அங்கிருப்பவர்கள் ஒவ்வொரு பெயராய் விசாரித்தான். அந்த கூட்டத்து தலைவன் யார் என்பதை ஆதி விவரித்ததை வைத்து கண்டறிந்தான். அவன் தன்னை உமேஷ் என்று சொல்லி அறிமுகம் செய்து கொண்டான்.

அப்போது வீரேந்திரன் தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த இரு தோழிகளையும் அருகில் வர சொல்லி கையசைத்து அழைத்தான்.

அப்போது உமேஷின் தலைமுடியை பற்றியவன் ஆதியை நோக்கி "என்னை கொன்னாலும் பாம் எங்க வைச்சிருக்கேன்னு சொல்ல மாட்டேன்னு சொன்ன வீராதி வீரர் இவன்தானே" என்று கேட்க "ஆமாம்" என்றாள்.

தமிழும் எரிச்சலோடு "இவன்தான் என்னை அடிச்சி என் முடியெல்லாம் பிடிச்சி இழுத்து ரொம்ப இன்ஸல்ட் பண்ணான்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீரேந்திரனின் கோபம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தன.

உடனே சண்முகத்திடம் திரும்பியவன் "இந்த அஞ்சு பேரையும் ஜீப்ல ஏத்துங்க.. இவனை தவிர" என்று வீரேந்திரன் சொல்ல உமேஷிற்கு கதிகலங்கி போனது.

அந்த பயத்தை வீரேந்திரனின் விழிகள் நுணுக்கமாய் கவனிக்க, சண்முகமும் அவன் சொன்னது போலவே அந்த ஐந்து பேரையும் வண்டியில் ஏற்றினான்.

உமேஷும் அவன் பிண்ணனியில் உள்ள கூட்டத்தினரும் வீரேந்திரனின் குணத்தை பற்றி விசாரித்த பின்னரே இப்படி ஒரு திட்டத்தை தீட்டியிருந்தனர்.

நிச்சயம் இந்த குண்டுவெடிப்பில் அவன் இறந்துவிடுவான் என்று அவர்கள் கட்டிய மனக்கோட்டை எல்லாம் இப்போது சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்திருக்க தனியாய் வந்து சிங்கத்தின் வாயில் தலையை கொடுத்துவிட்டோம் என்று தோன்றியது அவனுக்கு.

வீரேந்திரன் அவன் முகமாற்றங்களை கவனித்தபடியே நெருங்கி தன் துப்பாக்கியை அவன் வாயில் நுழைத்து தொண்டை குழியில் அழுத்துவது போல் இறக்க அவன் அரண்டு போய்

"உஹும் ஹும்" என்று கனைத்தபடி தலையசைத்தான்.

வீரேந்திரன் புருவத்தை ஏற்றியபடி "என்னடா ?!... கொன்னாலும் பரவாயில்லைனு நீதானே சொன்ன " என்று தன் துப்பாக்கியை எடுக்காமலே கேட்க, அவன் செயலை பார்த்து கொண்டிருந்த தமிழுக்கும் ஆதிக்கும் கூட அச்சம் தொற்றி கொண்டது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவன் மிரட்சியோடு வேண்டாம் என்பது போல் தலையசைக்க வீரேந்திரன் குரூரமான புன்னகையோடு "அப்போ சாருக்கு பயம் இருக்கு" என்றபடி துப்பாக்கியை வெளியில் எடுத்தான்.

"சரி... உன்னை மன்னிச்சி விட்டுடுறேன்... ஆனா இப்ப நான் என்ன சொல்றேனோ அதை அப்படியே செய்யனும்" என்றான்.

அவன் புரியாமல் பார்த்தான்.

"ஒண்ணுமில்லை... இப்ப நான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணுவேன்.... அதோ தெரியுது பாரு... அந்த பழைய போட்டு... அதை போய் நீ தொட்டுட்டு ஓடி வர... உனக்கு 20 செகண்ட் டைம்... புரிஞ்சிதா... நீ எத்தனை செகண்ட் லேட் பண்றியோ அத்தனை குண்டு உன் உடம்பில இருக்கும்... அதோடு விட மாட்டேன்... உன்னை கொண்டு போய் ஜலசமாதி பண்ணிடுவேன்... என்ன ? கேம் ஸ்டார்ட் பண்ணலாமா ?!" என்று கேட்க உமேஷின் முகம் வெளிறி போனது.

'செய்யமாட்டேன்' என்று சொன்னாலும் அவன் விடமாட்டான் என்று இவனுக்கு நன்றாய் தெரியும்.

தன் அலைப்பேசியை எடுத்து பார்த்த வீரேந்திரன் "நீ டைம் செட் பண்ண... இப்ப நான் உனக்கு டைம் செட் பன்றேன்?" என்றான்.

அவனால் எதுவும் பேச முடியவில்லை.

வீரேந்திரஜ் சண்முகத்திடம் அவன் கால்கட்டை அவிழ்த்துவிட சொல்லி பணித்துவிட்டு அந்த போட்டில் அருகில் போய் நிற்க சொன்னான்.

உமேஷ் அவனை நிமிர்ந்து நோக்கி "ஸார் கை கட்டை அவிழ்க்கலயே" என்று சொல்ல வீரேந்திரன் மாறாத புன்னகையோடு "எதுக்குடா... கால்தானே ஓடப் போகுது" என்றான்.

உமேஷின் உடலெல்லாம் தடதடக்க ஆரம்பிக்க வீரேந்திரன் தன் துப்பாக்கயை கையில் ஏந்தியபடி "ரெடி... கெட் செட்... கோ" என்று அழுத்தமாய் உரைத்த மறுகணமே உயிரை பிடித்து கொண்டு ஓடினான்.

ஆதி தமிழை பார்த்து "என்னடி இது" என்று கேட்க

"பிஃஸ்க்கல் பிஸஸ் மென்டல் டார்ச்சர் (Physical plus mental torcher) நான்தான் அப்பவே சொன்னேனே... கேட்டானுங்களா... தேவைதான்... கொல்லிக் கட்டை எடுத்து தலையில சொரிஞ்சிக்கிட்ட கதைதான்" என்றாள்.

ஆதி புன்னகையித்தபடி "நீ அவனுங்ககிட்ட சொன்னதோட அர்த்தம் இப்போதான் புரியுது" என்றாள்.

அதற்க்குள் உமேஷ் அந்த மணற்பரப்பில் ஓட முடியாமல் ஓடி அந்த பழைய கப்பலை தொட்டுவிட்டு தன்னால் இயன்றளவு வேகமாய் ஓடிவந்து வீரேந்திரன் முன்னாடி வந்து விழுந்து பதட்டத்தோடு மூச்சுவாங்கினான்.

வீரேந்திரன் அவனை ஏளனமாய் பார்த்தபடி "ஸ்பீட் பத்தல... இரண்டு செகண்ட் லேட்டாயிடுச்சு உமேஷ்" என்றதும் அதிர்ந்தபடி "ஸார்ர்ர்ர்" என்று உச்சபட்ச பதட்டமடைந்தான்.

வீரேந்திரன் அலட்டிக் கொள்ளாமல் "ஸாரும் இல்ல மோரும் இல்லை... சொன்னது சொன்னதுதான்" என்று துப்பாக்கியை கரத்தில் ஏந்தியவன் சண்முகத்தை பார்த்து "ஆறு பேர்ல ஒருத்தன் தப்பிக்க போனான் சுட்டுட்டோம்னு ரெகார்ட்ல எழுதிடுங்க" என்றதும் தமிழும் ஆதியும் கூட அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

உமேஷ் அவனிடம் கெஞ்சத் தொடங்கினான். அத்தனை நேரம் அவன் செய்த வேலையெல்லாம் தமிழுக்கு நினைவுகளாய் எழும்ப வீரேந்திரன் அவனை நோக்கி "மன்னிக்க நான் என்னடா மகாத்மாவா ?!" என்று கேட்டுவிட்டு துப்பாக்கியை அவன் தலையில் வைத்து அழுத்த தமிழும் ஆதியும் கூட பதட்டத்தோடு விழிகளை மூடிக் கொண்டனர்.

வீரேந்திரன் தன் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய நொடி உமேஷின் மண்டை சிதறி இருக்கும்.

ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. உமேஷ் மனதளவில் மரணத்தை தொட்டுவிட்டு வர தமிழும் ஆதியும் என்ன நடந்திருக்கும் என்று விழிகளை திறந்து பார்க்க வீரேந்திரன் கள்ளத்தனமான புன்னகையோடு நின்றிருந்தான்.

"அச்சச்சோ !! கன்னை லோட் பண்ண மறந்திட்டேனே !" என்றான்.

உமேஷ் உள்ளே இழுத்த மூச்சை வெளியே விட வீரேந்திரன் சண்முகத்தை பார்த்து "இவனையும் கொண்டு போய் வண்டியில ஏத்தி ஸ்டேஷனுக்கு கிளம்புங்க" என்றவன் உமேஷை பார்த்து "இது வெறும் டிரெயிலர்தான் தம்பி... மெயின் பிக்சர் நாளைக்கு காட்டிறேன்" என்றான்.

சண்முகம் தன் போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட விஷ்வா வெகுதூரத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தான்.

விஷ்வா அலைந்து திரிந்து உணவு பொருளெல்லாம் வாங்கி வந்திருந்தான். ஆனால் தமிழும் ஆதியும் முதலில் வயிறு நிறைய தண்ணீரை போட்டி போட்டு குடித்து தீர்த்தனர்.

"ஏய்... தண்ணியே குடிச்சிட்டா சாப்பாடு" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க அவர்களோ அவன் சொல்வதை கவனியாமல் தாகம் தீரும் வரை தண்ணீரை குடித்தனர். அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் படாதபாடுபட்டது அவர்களுக்குதானே தெரியும்.

வீரேந்திரன் அவர்கள் எல்லோரையும் அரண்மனைக்குள் சென்றுவிடலாம் என்றழைக்க இப்போதைக்கு அந்த இரு தோழிகளுக்கும் அந்தளவுக்கு பொறுமையெல்லாம் இல்லை.

நால்வரும் பிறகு அந்த கடல் காற்றிலேயே அமர்ந்தபடி சாப்பிட தொடங்கினர்.

ஏதோ அறைவயிறும் கால்வயிறுமாய் கிடைத்த உணவை பங்கு போட்டு கொள்ள, அவர்கள் நால்வரும் அலைந்த அலைச்சலுக்கு அது நிச்சயம் போதாதுதான். இருப்பினும் அந்த பசியில் உண்டதே அவர்களுக்கு அமிர்தமாய் இருந்தது.

சாப்பிட்ட முடித்த பின் ஆதியும் விஷ்வாவும் புறப்பட தயாராகினர்.

வீரேந்திரன் அவர்களை அரண்மனையில் தங்கிக் கொள்ள சொல்ல தமிழும் கட்டாயப்படுத்தி இருக்க சொன்னாள்.

"இந்த நேரத்தில இரண்டு பேரும் எப்படி போவீங்க" என்று கேட்டாள் தமிழ்.

"வீட்டில அம்மா அப்பா ரொம்ப பயந்திருப்பாங்க... நாங்க போனதான் நிம்மதியா இருப்பாங்க... அதுவும் இல்லா நான் காலையில ஆபிஸ் போகனும்" என்று விஷ்வா சொல்ல வேறுவழியின்றி மறுக்க முடியாமல் வீரேந்திரன் உடனே அவனுடைய வாகனத்தின் டிரைவரை அழைத்து அவர்களை விட்டுவரச் சொன்னான்.

விஷ்வா அவனிடம் "என் கார் மஹாபலிபுரம் ஸ்டேஷன்ல இருக்கு... நான் அங்க போய் இறங்கிக்கிறேன்" என்றான்.

அவர்கள் புறப்படுவதை தமிழ் ஏக்கமாய் பார்த்தவள் வீரேந்திரனிடம் "நாமும் அவங்களோடவே கிளம்பலாமா ?!" என்று கேட்க வீரேந்திரன் முறைத்த முறைப்பில் பதிலேதும் பேசாமல் அமைதியானாள்.

எவ்வளவு துணிவிருந்தாலும் அவனை பார்த்தால் அவள் தைரியமெல்லாம் எங்கயோ சென்று ஒளிந்து கொள்கிறது.

என்னதான் மாயமோ ?!

தமிழுக்கு இப்போது உள்ளூக்குள் ஒருவித குளிர் பரவிக்கொண்டிருந்தது. தன்னந்தனியாய் தன் தோழி இப்படி விட்டுவிட்டு போய்விட்டாலே என்ற வருத்தம். அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கிய போது கூட இவ்வளவு பயத்தை உணர்ந்ததில்லை. ஆனால் இப்போது அவளுக்கு தன் கணவனோடு தனித்து இருப்பதினால் உள்ளுக்குள் கிலி பரவத் தொடங்கியது.

தமிழுக்கு பழைய நினைவுகள் ஓடத் தொடங்கியிருந்தது. ஒருமுறை தான் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று எண்ணி அவன் தன் கன்னம் சிவக்க கொடுத்த அறை.

இப்போது அத்தகைய அறை விழுமோ !

எல்லோரும் இருந்ததால் அடிக்காமல் விட்டுவிட்டானோ !

இப்போது அடிக்க போகிறானோ என்று அவள் எண்ணிக் கொண்டு தவிப்புறும் போதே வீரேந்திரனின் கரம் அவளை தூக்கி கொள்ள "வீர்" என்று அதிர்ந்தாள்.

அவனை குழப்பமாய் பார்க்க அவன் முகமோ நிலவொளியின் வெளிச்சத்தில் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவன் உதடுகள் உதிர்த்த புன்னகையும் கண்களில் இழையோடிய காதலும்தான்.

"என்ன பண்றீங்க வீர்... இறக்கி விடுங்க" என்றாள்.

"எனக்காக இந்த கால் என்ன ஓட்டம் ஓடுச்சுடி, கொஞ்ச நேரம் உன்னை நான் தாங்கிக்கிட்டா தப்பில்லை" என்று உரைக்க தமிழ் திகைத்து போய் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் மௌனமாய் அவனை பார்த்தபடி இருக்க அவன் அவளை பத்திரமாக தூக்கிவந்து தாமரை மண்டபத்தில் அமரவைத்தவன் அவளுக்கு கீழாய் அருகில் அமர்ந்தபடி அவள் கால்களை பிடித்து கொண்டு தன் மடியில் வைத்தான்.

"வீர்" என்று பதறியவளை "ஷ்ஷ்ஷ், கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்று சொல்லி தன் பேக்கெட்டில் இருந்த மருந்தை தடவியபடி

"என்ன பொண்ணுடி நீ... நேத்தே காலில் அவ்வளவு பெரிய காயம்.. எப்படிறி உன்னால ஓட முடிஞ்சிது" என்று அவன் கேட்கும் போதே அவளின் காலில் பட்ட காயம் நினைவுக்கு வந்தது.

அதனால்தான் தன் கால் இந்தளவுக்கு வலிக்கிறதா என்று யோசித்திருந்தவளுக்கு மருந்து தடவி முடித்தவன் எழுந்து அவள் அருகில் அமர்ந்தான்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
வீரேந்திரன் தன் மனைவியின் முகத்தை நிமிர்த்தி பிடித்து "உன் கையில இருந்த பாம் மட்டும் வெடிச்சிருந்தது... நீ என்னஆயிருப்பன்னு தெரியுமா?!... துண்டு துண்டா சிதறி போயிருப்ப" என்று சொல்லும் போதே வேதனையோடு அவன் விழிகள் நீரை உகுத்தது.

அவன் கண்ணீரை துடைக்க உயிர்த்திய அவள் கரத்தை தடுத்துபிடித்து கொண்டு "ப்ளீஸ் தமிழ் என்னை அழ விடு... நான் அழனும்... என்னால இதுக்கு மேல முடியாது" என்று சொல்லி தான் கட்டுபடுத்தியிருந்த வேதனையெல்லாம் கண்ணீராய் கரைத்தபடி அவள் மார்பின் மீது முகம் புதைத்து கொண்டு ஒரு குழந்தையாய் மாறி அழத் தொடங்கியிருந்தான்.

அவனின் கம்பிரத்தையும் ஆணவத்தையும் தலைநிமிர்ந்திருக்கும் ஆளுமையையும் பார்த்தவளுக்கு அவனின் இந்த பரிமாணம் ரொம்பவும் புதிது.

அவன் தன் ஈகோவை எல்லாம் மொத்தமாய் விடுத்து அவளிடம் சரண்புகுந்துவிட்டான்.

அவள் தன் கரத்தால் அவன் கேசத்தை தடவியபடி அவனை சமாதானப்படுத்த எண்ண அது சாத்தியப்படவில்லை.

அவனின் பிடிவாதம் கோபத்தைதான் கட்டுபடுத்த இயலாது எனும் போது இந்த நிலையிலும் அவனை கட்டுக்குள் கொண்டு வர அவளால் முடியவில்லை.

அவனுக்குள் இருக்கும் குற்றவுணர்வு அவனை குத்தி கிழித்து கொண்டிருந்தது.

அவனின் கர்வமும் ஆணவமும் அவனின் கண்ணீரில் வழிந்தோட அவளால் அவன் அப்படி அழுவதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

"ப்ளீஸ் வீர்... நீங்க அடிச்சா கூட தாங்கிக்கிறேன்... ஆனா நீங்க இப்படி அழறதை என்னால சத்தியமா தாங்கிக்க முடியல" என்று அவளும் சேர்ந்து அவனோடு கண்ணீர் வடிக்க அந்த வார்த்தையை கேட்ட நொடி தலையை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தான்.

"ப்ளீஸ் நீ இந்தளவுக்கு என்னை லவ் பண்ணாதடி... நான் உன் காதலுக்கு கொஞ்சங்கூட தகுதியானவன் இல்ல" என்று உரைத்தபடி அவன் எழுந்து நின்று கொள்ள அவளும் கோபத்தோடு அவன் முன்பு சென்றாள்.

"என்ன பேசிறீங்க வீர்? !... தகுதி அது இதுன்னு... இப்படி எல்லாம் பேசினிங்கன்னா எனக்கு ரொம்ப கோபம் வந்திரும் சொல்லிட்டேன்" என்றாள்.

"கோபப்படு தமிழ்... நான் செஞ்ச எல்லாத்துக்கும் கோபப்படு... நம்ம கல்யாணத்துக்கு உன்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சது.. காரணமில்லாம உன்னை அடிச்சது... டாமினேட் பன்றேன்னு சொன்னது... உன்னை கீழ விழவைச்சது... கொஞ்சமும் யோசிக்காம உன் ரூமை அடிச்சி உடைச்சதுன்னு... எல்லாத்துக்கும் சேர்த்து கோபப்படு... பைஃன்... அதை நான் ஏத்துக்கிறேன்... ஆனா நீ உன் உயிரை கொடுத்து காப்பாத்தற அளவுக்கு நான் என்னடி பண்ணேண் உனக்கு... அதை என்னால ஏத்துக்க முடியல... கில்டியா இருக்கு" என்று சொல்லியபடி அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல் கடல் அலைகளை வெறித்தபடி நின்று
கொண்டான்.


தமிழ் அவன் சொன்ன எந்த விஷயத்தையும் பொருட்படுத்தாமல் "வீர்... அதெல்லாம் முடிஞ்சி போன கதை... அதுவும் இல்லாம எல்லா சிட்டுவேஷன்லயும் என் தப்பும் இருக்கு... நீங்க இப்படி உங்களை மட்டும் தப்பு சொல்லிக்காதீங்க... " என்று அவனின் முகத்தை பாராமலே உரைத்தாள்.

அவனை பின்னோடு தன் கரத்தால் பிணைத்தவள் தன் மனதை நிறைத்திருந்த அவன் மீதான காதலை வார்த்தைகளால் கோர்த்தாள்.

"இந்த தமிழச்சி எத்தனை முறை மறித்தாலும்... அத்தனையும் முறையும் பிறந்து வருவாள்... உனக்காக... உன்னை சேர்வதற்காக... உன்னோட வாழ்வதற்காக... "

என்று சொல்லியவள் அவன் முதுகுபுறம் ஆதரவாய் தலைசாய்த்து விழிகளை மூடி இன்புற்றாள்.

அவளின் அணைப்பிலும் வார்த்தைகளிலும் அவன் மொத்தமாய் கிறங்கி போனான்.

அவள் காதலை சொன்ன விதத்தில் சிலாகித்து போனவன் மீளமுடியாமல் அவளோடு பிணைந்த தன் உணர்வுகளோடு கண்டுண்டு மயக்கத்தில் கிடந்தவன் சட்டென்று விழித்து கொண்டு அவனை சேர்த்திருந்த அவள் கரத்தை பிரித்து அவள் புறம் திரும்பி நின்றான்.

அவள் புரியாமல் பார்க்க அவன் தவிப்போடு "ஏன்டி இப்படி என்னை கொல்ற... நீ லவ் பண்ற அளவுக்கு நான் உன்னை லவ் பண்ணல தமிழ்... நீ எனக்காக உன் உயிரை கூட விட்டுகொடுக்க தயாரா இருக்கு... ஆனா நானோ என் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உன்னை உதாசீனப்படுத்தி இருக்கேன் " என்றான்.

"அய்யோ இப்படி பேசிறதை நிறுத்திறீங்களா... எனக்குதான் நல்லா தெரியுமே.. நீங்க உங்க வேலையை ரொம்ப நேசிக்கிறீங்கன்னு... அதனால எல்லாம் உங்க காதல் குறைஞ்சி போயிடாது... புரிஞ்சிதா" என்று அதிகாரமாகவே உறைத்தாள்.

"அப்படியா.... அப்போ உனக்கு தெரியாம உன் கைரேகையை தர்மா கேஸ் எவிடன்ஸ்க்காக நான் செக் பண்ணேன்... அது தப்பில்லைன்னு சொல்ல வர்றியா?!" என்று கேட்க அத்தனை நேரம் அவனிடம் அவனின் காதலுக்காக வாக்குவாதம் புரிந்தவள் இப்போது மௌனமாய் நின்றாள்.

அவனே மேலும் "நான் ஒரு புருஷனா உன் பக்கம் இருக்கிற நியாயம் என்னன்னு கூட கேட்காம... உன்னை அரஸ்ட் பண்றளவுக்கு போக இருந்தேன்.. அது தெரியுமா? !" என்று தன் மனதை அழுத்திய விஷயத்தை அவன் வெளிப்படுத்திவிட்டான்.

அப்போது அவர்களுக்கு இடையில்
ஒரு நீண்ட மௌனம் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது.


அவளோ அந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல் பின்னோடு சென்று தாமரை மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் உணர்வுகளும் காதலும் அவன் சொன்னதை கேட்டு அடிப்பட்டு போனதென்றே சொல்ல வேண்டும்.

Hi friends,
Thank u all for your great support


Tomo is vet prefinal epi

Pls share your comments and press like button

Love u all for your beautiful commentsView attachment 746
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நான் சித்திரை திருநாளுக்காக சொன்ன தகவலை ஏற்று புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி.


அதே நேரத்தில் நான் பொய்யான தகவலை பரப்புவதாகவும் வெள்ளையர்களை குறித்து அவதூறாக பேசியதாகவும் ஒரு நீண்ட தொரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தினார் ஒரு தோழி.

அவங்களுக்கான சிறு விளக்கம். அதை நான் பொதுப்படையாக முன் வைக்கிறேன் எனில் நான் பொய்யான தகவலை பரப்புவதாக சொன்னதை வாசகர்களுக்கு நேரடியாய் தெரியப்படுத்தி அவர்களும் தெளிவுப்பெற வேண்டுமே!

முக்கியமாக கல்விதிட்டத்தை நமக்காக தந்தது வெள்ளையர்கள் என்று அந்த தோழி குறிப்பிட்டார்.


நானும் அதனை ஏற்கிறேன். அதே நேரத்தில் அந்த கல்வித்திட்டத்தின் நோக்கமே நம்மை காலங்காலமாய் அடிமையாய் வைத்திருப்பதுதான். தாய் பால் பெறாத குழந்தையை போலவே தாய் மொழியில் கல்வி கற்காத பிள்ளைகள்.

அத்தகைய கல்வி முறை நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தெளிவாய் சொல்ல வேண்டுமெனில் இன்றைய கல்வி பெற்ற இஞ்சினியர்ஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் தஞ்சை கோபுரத்தை போன்ற ஒன்றை நிர்மானிக்க முடியுமா?

அத்தகைய புத்திசாலித்தனத்தை நம் கல்வி நமக்கு தந்திருக்கிறதா.

இன்னும் முக்கிய குற்றச்சாட்டு நம் இலக்கியங்கள் பலவற்றை நம் மன்னர்களே அழித்துவிட்டார்கள். இதை சொல்வதற்கு முன்பாக கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள். தமிழ் மொழி போல் பழமையான இலக்கியங்கள் கொண்ட ஒரு மொழியை சான்றாக கூறுங்கள் பார்ப்போம். பல்லாயிரம் வருட பழமையான இலக்கியத்தை கொண்ட மொழி தமிழ் மட்டுமே.

Google ல் நம் தகவல்களை தேடினால் அதிகமான தகவல்கள் பொய்யாகவும் இருக்கலாம். அதுவும் கிட்டதட்ட வேற்றுநாட்டவன் உரிமையான நிறுவனம்தான். நான் இணையதளத்தை நம்பியில்லை. பழம் பெரும் புத்தகங்களை நம்பியிருக்கிறேன்.

முக்கியமாய் தமிழ் எழுத்து பண்டைய எழுத்தோடு ரொம்பவும் மாறுபட்டதாக இருந்தாலும் நாம் பேசும் மொழியும் நம் கலாச்சாரமும் பல்லாயிர வருட பழமையை பறைசாற்றுகிறதே!
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இதுதான் அந்த தோழி அனுப்பிய Pvt msgஇதில் உள்ள கருத்துக்களும் வாசகர்கள் தெரிந்து கொள்வதன் அவர்களும் தெளிவுப்பெறலாம்.



mam,

neenga solli irukira information ai namakku kidaikaama seythathu vellai karan kondu vantha kalviya?

vellai karan namakku kalviyai kondu varum mun, Thamizhnaatil kurippitta irandu jaathikalai thavira yaarukum kalvi karkum urimaiye kidaiyaathu. Manusmirthi endra peyaril rajaraja cholan muthal pin pallava mannarkal, nayaka mannavarkal ena anaivarum thinitha satta amaipu athu.

kalvi karkum urimaiyai mattum alla, tamilargalathu unmaiyana arivu, kalvi anaithaiyum matham endra peyaril azhithu vada mozhi thaan uyarntha mozhi, athil irukum noolgal mattumey unmaiyil melanavai ena nam pazham thamizh noolkalai ellaam azhithu, namakku kidaikaamal seytha perumaiyum ippadi patta mannarkalaiye serum.

AD700m varutangal pakkam sundrapandiyan nam tamil noolkalai, mathathai kaaranam kaati azhitha kalvettukal irukindrana.

sitharthan enbathai thaan sithan ena makkal sonnaargal, namm makkal samnargalagavum bouthargalakavum irunthaargal, bouthamatham engu sendraalum muthalil avargal kondu selvathu maruthuvathai thaan, BC6m nootrandril irunthu tamilagathil ithu pulagathil irukirathu.

vadamozhi saarntha mathangal AD7m nootraandru thuvangi tamilagathirkul kondu vara pattapothu, (erathaazla 1300 varudangalukku pin)
manusmirithi padi andanan thavira maruthavam seyyum urimai entha jaathiyarukkum kidaiyathu endra vakaiyil, nam maruthuva seylbadugal yavatrukkum thadai vanthathu, sattathai meeruvor kollappattanar. sithargal enbavargal ragasiyamaay mattumey iyanga mudiyum ena nilai vanthathu,

athu saarntha noolgal azhikappattana

ippadi ethanaiyo varalatru koorukal kalvettukalaga nam naadu muzhuvathum pathivaakiththaan irukindrana.

jaathiyam endra peyaril kalvi urimaiye marukappatu kidantha namakku, antha vellaiyan thaan vanthu, ellorukum kalvi kodupen ena solla, namma naattu antha rendu jaathikaararakalum atharku ethiraaka aththanai poraadi, appothum iruthiyil, appadiye nee kalvi koduthaalum samaskirathil thaan athu tamil makkalukku iruka vendum ena sandaiyittu,

neengal sollum vellaiyan thaan pidivaathamaay avanavan thaaymozhiyilum aangilathilum kalvi ena kondu vanthavan.

Tamil ezhuthu naam payanpaduthuvathu kaalduvel (velaiyan) ezhuthu. avar tamil ai azhika athai kandu pidikavillai. ellorukum elithaay tamil poy sera vendum ena kandu pidithathu.

Tamilil muthan muthalil pazham puthagangalai ellaam thedi eduthu achedriyavar zeegan balgu (tharangambadiyil vanthu thangi iruntha oru germaniyar) (34 vayathil varumai matrum ovvatha thatpaveppam ithil iranthu ponar)
ippadiya periya atavanai podalaam avarkal namakku kalvi kidaika seytha muyarchi matrum thiyagangalai.

naan mela kuripitta oruvar kooda porulatha reethiyil vasathiyana vazhkaiyil irunthavarkal kidaiyaathu.
thangalin illaamai, thuyarangalukku mathiyil ithai ellam seythu koduthavarkal.

Thanjai periya koil kalvettai padithu raja raja cholan ena oru mannan aandaan ena namakku solli vaithavargal athey vellaiyargal thaan.

ippadi ovvoru koil kalvettaiyum thedi padithu nam pazham perumaiyai, vadamozhi varum munnum ingu tamil irunthathu, tamizhan vaalnthaan, avanukku kalacharam irunthathu ena ellaam namakkkey solliyavargal ithey vellaiyargal thaan.

antha koiliukkul kooda poga iyalaamal, koilkalai kattiyavarkaley antha koilukkul poka anumathi kooda ilamal nirkum samookathavargal thaan enbahthai kooda ariyamal, veliye nindravargal tamilargal.
(kolyai kattiyavan andanan kidaiyathu tamil mannargal ena namakku kandu pidithu sonnavan kooda vellaiyan thaan)

vellaiyargal varuvatharku 1000 varudam munneye vadamozhiyai athu saarnhtha matha tharmangalai namm meethu thinipathargaga, appothey namathu tamil noolgalai azhithaayidru.
ithil vellaiyar vanthu athai solli tharamal azhithaan ena solvathu eppadi?
ithellaam saatharana varalatru unmai.
google la 5 minutes thedinaa pothum ithellaam padika iyalum.

vellaiyargalai pukala naan ithai sollavillai.
en varalarai maraithu eppothum poyayaiye solli thara vendum?

14m nootraandil tamilgathukku vantha vadamozhi saarntha matham(vedangal ellaam samskiratham thaaney) ki.mu kala varalaaru ulla tamilnaatil aarambathil irunthu irunthathu ena innum nammidam soli kondirukum mathavaathigal vellaiyanai pazhi podukiraargal endraal avargal poiyyai kaapatha oru paliyaadu thevai padikirathu.
ulnokkam ethuvum illamal ezhuthum neengalum en athai seyya vendum.
thaviragalaamaey

kandipa ungalai hurt seyvathargaka ithai sollavillai mam.
author neenga, makkalukku unmaiya eduthutu ponga, ilaina kuraintha patcham poyyana thagavalai parapaatheenga.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

இவர்கள் இப்பதான் ஒற்றுமையானார்கள் என்று பார்த்தால் அதற்குள் திருப்பி முட்டிக்கொண்டுவிட்டார்களா.

நன்றி
 




Adhirai

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
21
Reaction score
58
Location
India
Arumaiyana padhivu mam. Veerendiran character nice. Evlo kaadhal irundhalum kadamaiyai seidhu mudithu thanimai kidaikkum varai wait panni manaiviyidam manam thiruppathi andha character oda gethu sema..

Regd the msg shared by ur friend, தமிழகத்தில் மட்டும் மதம் இல்லை. உலகம் முழுவதும் பரவி இருந்த, இருக்கும் ஒரு கொடிய விஷம் தான் மதம். அதனால் பல இன்னல்கள் இன்னும் பல மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல. வெள்ளக்காரன் தான் எல்லாத்தயும் சொன்னான் சொல்றீங்களே, அவன் ஏற்கனவே இங்க இருந்தத தான சொன்னான். அவன் தமிழ் மீதுள்ள பாசத்தால தமிழ் பற்றி ஆராய்ச்சி செய்யல, நம்ம மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரிந்ததால் நம்மிடம் communicate பண்றதுக்காக அங்கிரூந்த சிலரை பணியமர்த்தி அவனுக்கேற்ற மாதிரி தமிழை மாற்றி விட்டான். மேலும் அவனுடைய மதத்தை பரப்புவதற்கு நம் வரலாற்றையும் வேறு மாதிரி புனைந்து விட்டான்.
நான் இன்னும் பல விஷயங்கள் சொல்ல நினைக்கிறேன், இப்ப நேரமில்லாத காரணத்தால் மீண்டும் வருவேன். அதற்கு முன் அந்த தோழி சொன்ன மாதிரி Google ல் பண்டைய குருகுல முறை பற்றி ஒரு முறை அவர் தேடி பார்த்தால் தமிழர் கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top