• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 108 91.5%
  • நன்று

    Votes: 11 9.3%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    118

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நட்பு

(தமிழச்சியை வாசகர்கள் நீங்கள் விரைவாய் பார்க்க அல்லது படிக்க ஆசைப்பட்டதால் உங்கள் விருப்பத்திற்கு இணங்க)

செந்தமிழ் தன் தந்தை சொன்ன வார்த்தைகளால் ரொம்பவும் மனதளவில் காயப்பட்டிருந்தாள். அவள் மனம் முழுக்க வலியும் வேதனையும் நிரம்பியிருக்க, தேவியோ அவளுக்கு துணையாய் சமாதானமான வார்த்தைகளை உரைத்து தேற்ற முயற்ச்சித்து கொண்டிருந்தாள்.

செந்தமிழை பொறுத்த வரை அன்னை தந்தையின் பாசம் என்பது கானல் நீராகவே போய்விட, தாத்தாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த அவளுக்கு கணவன் மற்றும் வாழப் போகும் குடும்பத்தின் மீது அதீதமான எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைவே இருந்தன. இப்போது அதுவுமே தன் விருப்பம் போல் நடக்க போவதில்லை என்ற ஏமாற்றம் அவளை வேதனையுற செய்திருந்தது.

அவள் இந்த உலகத்திலேயே அதிகமாய் நேசித்தது அவளின் தாத்தா சிம்மவர்மன்தான். அந்த இழப்பு அவள் வாழ்க்கையை புரட்டி போட்டது. அவளை ரொம்பவும் தனிமைப்படுத்தியது.

இப்போது மீண்டும் அத்தகைய ஒரு மோசமான மனநிலைக்கு அவள் தள்ளப்பட்டிருக்க, அதனால் ஏற்பட்ட மனச்சோர்வால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.

விக்ரமவர்மனின் மனதையும் தமிழின் இந்த நிலைமை பாதித்திருக்க மகளை எதிர்கொள்ளும் தைரியம் இப்போதைக்கு அவரிடம் இல்லை. தேவிக்கோ செந்தமிழின் நிலையை புரிந்து கொள்ளவும் அவளுக்கு ஆறுதல் கூறவும் முதிர்ச்சி இல்லை.

விடிந்து இப்போது பொழுதும் சாய்ந்து மாலை நேரம் உதயமாக, தமிழுக்கு அந்த நாளே முழுவதுமாய் இருளடர்ந்திருந்தது. அந்த சமயத்தில் ரகு அவளை காண வீட்டிற்கு வந்திருந்தான்.

அவனை பார்த்ததும் விஜயா ஜாடை மாடையாய் அவர்களின் நட்பை தாழ்த்தி பேச, அதை கேட்க அழுத்தமாய் அவனுக்குள் கோபம் உதித்த போதும் எதுவும் பேசாமல் தமிழ் அறை நோக்கி விரைந்தான். அப்போது எதிரே வந்த தேவியை பார்த்து "தமிழ் வீட்டில இருக்காளா ?" என்று கேட்க

அவளோ வருத்தமான முகப்பாவனையோடு "ம்ம்ம்... ஆனா வீட்டில கொஞ்சம் பிரச்சனை... அக்கா ரொம்ப அப்செட்டா இருக்காங்க?" என்றதும்

விஜயா குரலை உயர்த்தி "ஏ தேவி வா இங்க... இதெல்லாம் உங்க அக்கா சொல்லாமலா இவர் இங்க வந்திருப்பாரு" என்றுரைக்க ரவியின் முகம் மேலும் கோபமாய் மாற தேவி கண்ணசைவால் தன் தாய் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

தமிழின் அறைக்குள் நுழைந்த ரகுவின் பார்வை படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்து வேதனையுற்றது.

அவள் அவனின் வருகையை பார்த்ததும் முகத்தை துடைத்து கொண்டு "வா ரகு... வர்ற போறேன்னு ஒரு கால் கூட பண்ணி சொல்லல" என்றாள்.

ரகு அவள் அருகில் இயல்பாய் அமர்ந்தபடி "இப்போதான் டைம் கிடைச்சது... உடனே உன்னை பார்க்கலாம்னு... ஆனா இங்க வந்து பார்த்தா நீ இப்படி இருக்க" என்றான்.

அவள் இயல்பாய் இருக்க முயன்றபடி "எப்படி இருக்கேன்... ஐம் குட்... கொஞ்சம் உடம்புக்கு முடியல... அவ்வளவுதான்" என்று சமாளித்தாள்.

"இந்த கதையெல்லாம் என்கிட்ட விடாதே... வரும் போது தேவியை பார்த்துட்டுதான் வந்தேன்..." என்றான்.

அவள் பதில் பேசாமல் மௌனமாகிட ரகு அவளை நோக்கி "என்னடி ஆச்சு... அதுவும் நீ இந்தளவுக்கு சோர்ந்து போயிர்க்கன்னா... ஏதாவது பெரிய பிராப்ள்மா ?!..." என்று கேட்க

அவள் பெருமூச்செறிந்தபடி "என் மேரேஜ்... அதுதான் இப்போ பெரிய பிரச்சனை" என்றாள்.

ரகு சிரித்துவிட்டு "அது உனக்கெப்படி பிரச்சனை... உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்குதானே பிரச்சனை" என்றான்.

"போ ரகு.. நானே ரொம்ப டிப்பிரஸ்ட்டா இருக்கேன்... நீ என்னன்னா நேரங் காலம் இல்லாம கேலி பண்ணிக்கிட்டு" என்றாள்.

ரகு மெலிதான புன்னகையோடு "டிப்பிரஸ்ட்டா இருக்கியா ?!... புதுசா ஏதோ சொல்ற... நம்ப முடியலியே" என்றவனை அவள் முறைத்து பார்த்தாள்.

அவன் அந்த அறையின் கம்பீரமான பாரதியின் ஓவியத்தின் முன் நின்றபடி "எப்பவும் இந்த பாரதியார் முகத்தை பார்த்தா... தைரியம் வரும் உத்வேகம் வரும்... எல்லா பிரச்சனைகளும் கடந்து வர்ற சக்தி கிடைக்கும்னு சொல்லுவ... வாட் ஹேப்பன் டூ ஆல் தட்" என்று கேட்க

அவள் விரக்தியான புன்னகையோடு "ம்ம்ம்... வரும்தான்... ஆனா என்னதான் இருந்தாலும் இட்ஸ் ஜஸ்ட் அ பெயின்ட்டிங்... இட் கான்ட் ஸ்ப்பீக் ரைட்... பாரதி எனக்கு தைரியத்தை கொடுப்பாரு... என்னதான் நான் தைரியமா திமிரா இருந்தாலும் ... அதெல்லாத்தையும் கடந்து... ஒரு ஸ்டிராங் ஸப்போர்ட் வேணும்... உயிருள்ள என் உணர்வுகளை புரிஞ்சிக்க எனக்கு ஒரு உறவு வேணும்... ஜஸ்ட் லைக் மை பாரதி...அதே போல ஷார்ப் ஐஸ்ஸோட ...எதுக்காகவும் யார்கிட்டயும் தலைவணங்காத திமிரோட.... யார் முன்னாடியும் விட்டு கொடுக்காத தான்ங்கிற அந்த அகங்காரத்தோட... எனக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னாடி நின்னு தாங்கி பிடிச்சிக்கிற துணிவோட..." என்று வரிசையாய் தன் மனக்கற்பனைகளை நண்பனிடம் விவரிக்க

ரகு சிந்தித்தபடி "ஓ... அப்படி... பட் அந்த மகாகவி பாரதியே உன் மேல இரக்கப்பட்டு மேலிருந்து இறங்கி வந்தால்தான்டி உண்டு" என்றான்.

"அதெல்லாம் நடக்காது ரகு... ட்ரீம்ஸ் ஆர் ஆல்வேஸ் ட்ரீம்ஸ்..." என்றாள் விரக்தியோடு.

ரகுவிற்கு அவள் பேச்சில் தெரிந்த விரக்தி அவன் மனதிலும் வேதனையை புகுத்த அவன் வார்த்தைகளின்றி மௌனமாய் அமர்ந்து அவளை சமாதானபடுத்தும் வழிகளை யோசிக்கலானான்.

அப்போதுதான் தமிழ் தன் நண்பன் மனதையும் தான் வேதனைக்குள்ளாக்கி விட்டோமோ என புரிந்தவள் பேச்சை மாற்றும் விதமாய் "சரி நீ சென்னைக்கு வந்த வேலை முடிஞ்சிதா ?!" என்று கேட்க

அவனும் அப்போதைக்கு அந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி "ம்ம்ம்.. ஒரளவுக்கு முடிஞ்சிது" என்றான்.

"ஆமாம்... அந்த ஏசி வீரேந்திரன் கூட உனக்கென்ன வேலை ?" என்று கேட்க

"அது அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் தர்மா டெத் கேஸ் இருக்கு இல்ல... அதை இனிமே அவர்தான் விசாரிக்க போறாரு... நான் அவர் கூட இருந்த அசிஸ்ட் பண்ண போறேன்... அதுக்காகதான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு அப்படியே அவரையும் மீட் பண்ண போனேன்..." என்றான்.

தமிழ் யோசனையோடு "நீ சொல்றத பார்த்தா... ஏதோ பழமையான பொருளை கடத்திற மாதிரி கேங் இன்வால்வ் ஆயிருப்பாங்களா ?!" என்று கேட்க

"ம்ம்ம்... அந்த மாதிரியான பாயின்ட்லதான் இன்விஸ்டிகேஷன் பண்ணிட்டிருக்கோம்... பட் பெரிசா க்ளூ கிடைக்கல... ஆனா அவர் ரூம்ல இருந்த இந்த பெய்ன்டிங்" என்று சொல்லி தன் கைப்பேசியை எடுத்தவன் அதிலிருந்த சில கருப்பு வெள்ளை ஓவியங்களை அவளிடம் காட்டினான்.

வரிசையாய் அந்த ஓவியங்களை பார்த்தவளின் விழிகள் அகல விரிய அந்த வியப்புகுறியை ரகுவும் கவனித்தான்.

ரகு அவளிடம் "உனக்கு இதை பத்தி எதாச்சும் தெரியுமா ?!" கேட்க

அவள் பதில்பேசாமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.

"தமிழ் என்னாச்சு ?!" என்று ரகு கேட்க அவள் அவனிடம் "எனக்கு இந்த பெயின்ட்டிங்ஸ் எல்லாம் நேர்ல பார்க்கனுமே" என்றாள்.

ரகு ஆர்வமாய் "உனக்கு ஏதாச்சும் புரியுதா?.. இதுக்கும் அவர் மார்டர்க்கும் சம்பந்தம் இருக்குமா ?" என்று வினவ

தமிழ் அழுத்தமாக "அதெல்லாம் என்கிட்ட இப்ப கேட்காதே ரகு... எனக்கு அந்த ஆர்க்யாலஜிஸ்ட் தங்கியிருந்த இடத்தை பார்க்கனும்" என்றாள்.

"நாட் பாஸிப்பிள்... இப்போ அந்த இடம் போலீஸ் கஸ்டடில இருக்கு... வேண்ணா ஏசிபி வீரேந்திரன் அனுமதியோடு" என்று சொன்னதும்

"நோ... நீயும் நானும் மட்டும் போவோம்... யாருக்கும் தெரியாமா... ரகசியமா" என்று அவள் சொல்ல அவன் அதிர்ந்தான்.

"ஏய்... மொத்தமா என் வேலைக்கே உலை வைக்க ஐடியா பண்ணிட்டிருக்கியா ?!" என்று ரகு கேட்டான்.

"போலீஸானதும் பயந்தாகோளியா மாறிட்டியாடா ?!... .நம்ம ஸ்கூல் டேஸ்ல சேலஞ்சிங்கான மேட்டர்னா முன்னாடி நிக்கிற ரகு இப்ப எங்க...?!" என்று அவள் கேட்க

"என்னடி உசுப்பேத்திறியா?!.. அந்த ஏசிபிக்கு மட்டும் தெரிஞ்சிது... நோண்டி நொங்கெடுத்திருவான்"

"பெரிய ஏசிபி... அவன் என்ன அப்படி கிழிச்சிருவான்னு பார்க்கலாம்... நீ அத பத்தி எல்லாம் யோசிக்காதே
ரகு... உன்னால முடியுமா முடியாதான்னு மட்டும் சொல்லு" என்றாள்.

அவன் அவள் அப்படி கேட்பதன் காரணம் புரியாமல் தயங்க அவளே மீண்டும், "ரகு ப்ளீஸ்... இதுல ஒரு முக்கியமான மேட்டர் இருக்குடா... அதனாலதான் சொல்றேன்..." என்றாள்.

"என்ன மேட்டர் ?"

"நான் அதபத்தி அப்புறம் சொல்றேன் ரகு... பட் ப்ளீஸ் நீ என்னை கூட்டிட்டு போ... ஏதோ விளையாட்டா சொல்றன்னு நினைக்காதே... ரியலி இட்ஸ் ஸீர்யஸ்" என்று அவள் சொல்லும் விதத்தில் ஏதோ முக்கியமான விஷயம் ஒலிந்திருப்பதை உணர்ந்து கொண்டான்.

எனினும் தயக்கத்தோடு அவளிடம் "அப்படின்னா... இத பத்தி நாம ஏசிபி வீரேந்திரன் கிட்ட பேசலாமே ?!" என்றான்.

"ஸ்டாப் இட் ரகு... அந்த வீரேந்திரன் பத்தி பேசாதே... ஹீ இஸ் சச் அ இரிடேட்டிங் மேன்... அன்னைக்கு அவன் என்கிட்ட பேசின பேச்சிருக்கே... என்னால அதை மறக்கவே முடியாது... அவன் விஷயத்தில நான் ஒரு பெரிய தப்பு செஞ்சிட்டேன்... அந்த கில்டீனஸ்... அதுக்காகதான் அவனை மீட் பண்ணி சாரி கேட்கனும்னு நினைக்கிறேன்... இல்லன்னா... அவனை நான் பார்க்க கூட விருப்பப்படல" என்று அவள் சொல்லும் போதே அவளின் விழிகள் அத்தனை வெறுப்பை உமிழ்ந்தது.

ரகுவிற்கு அவளின் வெறுப்பை எப்படி எடுத்து கொள்வதென்றே புரியாமல் நிற்க தமிழ் அவனின் ஒற்றை பதிலுக்காக காத்திருந்தாள். அவனும் யோசித்துவிட்டு அரைமனதோடு தலையசைத்து சம்மதம் உரைத்தான்.

"சரி...உனக்கு அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் வீடு தெரியுமா ?!" என்று ரகு அவளை நோக்கி வினவ

"ம்ம்ம்...காஞ்சிபுரத்திலதானே... தெரியும்... அங்கேதானே எங்க சொந்த ஊர் இருக்கு... நானும் அவர் வீட்டுக்கு ஒரே தடவை போயிருக்கேன்... பட் சரியா ஞாபகம் இல்ல" என்றாள்.

"பைஃன்... போவோம்... என்னைக்கு எப்போன்னு சொல்றேன்... அப்போ போவோம்" என்றான்.

இருவருமே இவ்வாறான சம்பாஷணைக்கு பிறகு அறையை விட்டு வெளியே பேசிக் கொண்டே வர, அத்தனை நேரம் அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் மொத்தமாய் விலகியிருந்தது.

தேவி வியப்போடு "ஏதாச்சும் மேஜிக் பண்ணிங்களா... அக்கா நார்மலாயிட்டா ?" என்று ரகுவிடம் கேட்க

அங்கிருந்த ரவிவர்மன் தேவியிடம் "அது மேஜிக் எல்லாம் இல்ல தேவி..." என்றான்.

தேவி ரவியை நோக்க ,அவன் சூட்சமமாய் புன்னகையித்து "அதெல்லாம் உன் வயசுக்கு புரியாது... நீ சின்ன பொண்ணு" என்றான்.

ரகு அவன் பேச்சை கேட்டு எரிச்சலடைய தமிழ் அவனிடம் சமிஞ்சையால் புறப்பட சொன்னாள்.

ரவிவர்மன் விடாமல் "என்ன ரகு சார் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க... நீங்க வந்த வேலை முடிஞ்சிருச்சு போல" என்றதும் ரகு அவனிடம் கோபத்தை காட்ட முயற்சிக்க தமிழ் அவனை கட்டாயப்படுத்தி தடுத்து வெளியே அழைத்து கொண்டு போனாள்.

ரகு எரிச்சலோடு "இவனை எப்படி நீ டால்ரேட் பண்ணிட்டிருக்க... எனக்கு வந்த ஆத்திரத்துக்கு" என்று சினத்தோடு சொல்ல அவளோ அமைதியாக "சேரு மேல கல்லை தூக்கி எரிஞ்சா அது நம்ம மேலதான் தெறிக்கும்... அவன்கிட்ட போய் நீ வாயக் கொடுக்கிறதும் அப்படிதான்... ஜஸ்ட் இக்னோர் ஹிம்" என்றாள்.

ரகுவும் அவள் சொன்னதை ஆமோதித்தபடி "சரி ஒகே... நான் கிளம்பிறேன்... அப்புறம் நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு" என்றான்.

"என்னது ?"

"நீ அந்த ஏசிபியை மீட் பண்ணி சாரி கேட்கனும்னு சொன்னே இல்ல"

"ஆமாம் சொன்னேன்... பட் எப்படி மீட் பன்றது"

"ஆபிஸ்ல எல்லாம் கஷ்டம்... பட் ஒரு ஐடியா இருக்கு"

"வாட் ?"

"அவன் டேய்லி யூஷ்வலா... எலியாட் பீச்ல ஜாக்கிங் போவான்... அங்கே வேணா மீட் பண்ணலாம்" என்றான் ரகு.

"குட் ஐடியா ரகு" என்று அவனை பாராட்டிவிட அவனும் அவளிடம் விடைபெற்று கொள்ள அவனை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அத்தனை நேரம் அவளை முழுவதுமாய் ஆட்கொண்டிருந்த மனவேதனை எல்லாம் நண்பனை கண்ட மாத்திரத்தில் விடை பெற்று கொண்டுவிட்டதை எண்ணும் போதே அவளுக்கே வியப்பாய் இருந்தது. தோள் கொடுக்க நண்பன் இருந்தால் துயரமெல்லாம் பறந்து ஓடிவிடும். புனிதமான ஆண் பெண் நட்பு என்பது குறிஞ்சி மலரை போல ரொம்பவும் அரிதாய் கிடைக்க பெறும் பொக்கிஷம். ஆனால் எல்லோருக்கும் அத்தகைய நட்பு வாய்க்க பெறுவதில்லை என்பதுதான் உண்மை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தமிழ் உள்ளே நுழைந்த நொடி ரவிவர்மன் அவளை வழிமறித்து குரோதத்தோடு "அன்னைக்கு நான் குடிச்சிட்டு டிரைவ் பண்ணேண்ணு என்னை அடிச்ச... நீ செய்ற தப்புக்கெல்லாம் உன்னை யாருடி அடிக்கிறது" என்று கேட்டான்.

"டி போட்டு பேசின்னா பிச்சிடுவேன் ராஸ்கல்... நான் உனக்கு அக்காங்கிறதை மனசில வைச்சுக்கோ" என்றாள்.

"அக்காவா... நீ என்னடி எங்க அம்மா வயித்துல பிறந்தவளா...?" என்று கேட்டான்.

"வேண்டாம் ரகு... நீ உன் லிமிட்டை தாண்டி பேசிட்டிருக்க... "

"என்னடி பண்ணுவ" என்று திமிராய் கேட்க

அவள் கையை கட்டி நின்றபடி "மாப்பிள்ளை வீட்டுக்கு ரகுவும் நானும் சேர்ந்திருக்கிற போட்டோவை அனுப்பினது நீதான்னு அப்பாகிட்ட சொல்லுவேன்" என்றாள்.

அவன் பதட்டமடைந்தவனாய் "என்ன போட்டோ... எனக்கு எதுவும் தெரியாது ?" என்று தப்பிக்க முற்பட

"ஏன்டா நடிக்கிற... நீதான் அந்த போட்டோவை அனுப்பி இருப்பன்னு எனக்கு அன்னைக்கே தெரியும்... இந்த மாதிரி கீழ்தனமான வேலையை உன்னை தவிர வேற யாரு செய்ய முடியும்... நான் அப்பாகிட்ட அப்பவே சொல்லி இருப்பேன்... பட் தெரிஞ்சோ தெரியாமலோ நீயாவே எனக்கு ஒரு நல்லது செஞ்சிட்ட... அதனால போனா போதுன்னு உன்னை மன்னிச்சி விட்டுட்டேன்... ஆனா எப்பவுமே இப்படியே இருப்பன்னு மட்டும் நினைக்காதே" என்று அவள் சொல்ல அவன் பதில் பேச முடியாமல் அமைதியாய் நின்றான்.

தமிழ் அவனை கடந்து சென்றுவிட்டு மீண்டும் அவன் புறம் திரும்பி
"இத பாரு ரவி... நீ என் வாழ்க்கையை கெடுக்கிறன்னு என்ன வேணா பண்ணி தொலை... அதை பத்தி எனக்கு கவலை இல்ல... ஆனா என் ரூம்க்குள்ள மட்டும் நுழையற வேலை வைச்சுக்காதே..." என்றாள்.

ரவி யோசனையோடு தான்தான் இவள் ரூமுக்குள் நுழைந்து போட்டோவை எடுத்ததோம் என்பதை இவளா யூகித்தாளா அல்லது வேறு யாராவது சொல்லி இருப்பார்களா என சிந்தித்தவன் இது அந்த வேலையாள் கருணாவின் வேலையாக கூட இருக்கும் என்று சந்தேகித்தான்.

அந்த அறையில் ஏதேனும் ரகசியத்தை வைத்திருப்பாளோ என்ற எண்ணம் அவனுக்குள் அடிக்கடி தோன்றி கொண்டுதான் இருந்தது. ஆனால் இன்று அவள் பேசுவதை வைத்து பார்த்தால் நிச்சயம் ஏதோ ரகசியம் உள்ளே இருக்கும் என்றே அவன் உறுதி செய்தான்.

மன்னிப்பு

சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரை. தங்க நிறத்தில் தகதகவென மின்னிக் கொண்டிருக்கும் கதிரவனின் பொன்கிரணங்கள் பட்டு கடல்நீரை எல்லாம் பொன்னாய் ஜொலிக்க செய்ய, அந்த அழகான விடியல் பொழுதில் ஜாகிங் உடையில் தமிழ் தன் சிரத்தை திருப்பி அப்படியும் இப்படியுமாய் வீரேந்திரனை தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் விழிகளும் சுழன்று சுழன்று அவனையே காண துடித்து கொண்டிருக்க இன்றும் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு கிட்டாதோ என மனதளவில் நம்பிக்கை இழந்தாள்.

அந்த சமயத்தில் எதிர்பாராமல் அவள் தோள் லேசாய் இடிப்பட கடந்து போனவனை திட்ட யத்தனித்த சமயத்தில் ஒரு கம்பீரமான குரல் "சாரி" என்று சொல்லியபடி திரும்ப அப்போது அவர்கள் இருவரின் சந்திப்பும் இயல்பாகவோ அல்லது விதியின் வசத்தாலோ நிகழ்ந்துவிட்டது.

வீரேந்திரன் தமிழை பார்த்து சற்று ஸ்தம்பித்து நிற்க அவளுமே அந்த நொடி ஜாகிங் உடையில் அவனின் உயரமான கம்பீர உடலமைப்பை கண்டு வியந்து நின்றாள்.

உடனடியாய் அவன் விழிகள் கூர் வாளாய் மாறி அவளை கோபமாய் தாக்க முற்பட, அவளோ அவனை கண்டுவிட்ட களிப்பில் அழகாய் இதழ்கள் விரிய புன்னகையை உதிர்த்தாள்.

அந்த புன்னகையை கண்ட நொடி அவனின் கோபமெல்லாம் காணாமல் கறைந்து போவதை தடுக்க இயலாமல் சட்டென திரும்பி அவளை கவனிக்காதது போல் மீண்டும் அவன் ஓட்டத்தை தொடர்ந்தான்.

தமிழ் அவன் பின்னோடே போய் "ஹெலோ.. ஏசிபி சார்" என்று அழைக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்னேறி சென்றான்.

அவளோ விடாமல் துரத்தியபடி "ஏசிபி சார் நில்லுங்க..." என்றாள்.

அவனும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்க மீண்டும் மீண்டும் அவளின் அழைப்பு அவன் செவியை துளைத்து கொண்டு நுழைந்தாலும் அவன் மூளை கர்வமாய் அவளை மதிக்க வேண்டாமென கட்டளையிட்டு கொண்டிருந்தது.

அவளுக்கோ இப்படி வேண்டா வெறுப்பாய் தவிர்ப்பவனை பின்தொடர்வது எரிச்சலை ஏற்படுத்த மனதிற்குள் 'பெரிய இவன்னு நினைப்பு... கூப்பிட கூப்பிட கேட்காத மாறியே போறான்... அவ்வளவும் ஈகோ.....' என எண்ணி கொண்டவள் குரலை உயர்த்தி "ஒரு பொண்ணை நின்னு முகத்துக்கு நேரா பேஃஸ் பண்ண முடியாம தெறிச்சு ஓடிறீங்க... இதுதான் ஏசி சாரோட வீரமா?! நீங்கெல்லாமா நம் நாட்டோட சட்ட ஒழுங்கை காப்பாத்த போறீங்க... ஸோ ஸேட்" என்று ஏளனமாய் உரைக்க

அந்த வார்த்தைகள் அவன் ஈகோவை அழுத்தமாய் தூண்டிவிட அப்படியே தன் ஓட்டத்தை நிறுத்தியவன் அவளை நோக்கி சீற்றமாய் எழும்பிவரும் கடல் அலைகள் போல விறுவிறுவென வந்து எதிரே நின்றான். அவளுக்கு அவனின் உக்கிரமான பார்வை லேசாய் கிலியை உண்டுபண்ணியது.

இருந்தாலும் அவனை எதிர்நோக்கி திடமாய் அவள் நிற்க அவன் சினத்தோடு "இப்போ யாரு தெறிச்சு ஓடினது" என்று கேட்டான்.

அவள் அலட்சியமான புன்னகையோடு "வேற யாரு ஏசிபி சார்... நீங்கதான்" என்றாள்.

"முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க... நான் உன்னை பார்க்க பேச கூட விருப்பப்படல... அதனாலதான் ஒதுங்கி போறேன்... அதை நீ உனக்கு சாதகமா எடுத்துக்காதே... " என்றான்.

அவள் ஏதோ பேச யத்தனிக்க அவளை பேசவிடாமல் "நீ செஞ்ச வேலைக்கு உன்னை எல்லாம்... !" என்று சொல்லிவிட்டு அவன் கோபத்தை காட்ட முடியாமல் இயலாமையோடு நின்றவன், வெறுப்பை பார்வையிலேயே உமிழ்ந்துவிட்டு திரும்பி செல்ல யத்தனிக்க

அவளுக்கு கோபம் ஏற்பட்டாலும் அதை காட்டும் நேரம் இது இல்லை என பொறுமையோடு "ஏசி சார்... நான் சொல்றதை கேட்டிட்டு ஒரே நிமிஷம் போங்க" என்றாள்.

அவன் திரும்பி அவளை அதே மாறாத வெறுப்போடு நோக்க அவள் நிதானமாய் "எனக்கு உங்க கோபம் புரியுது... பட் நான் அப்படி ஒரு தப்பை தெரிஞ்சி செய்யல... இந்த மாதிரி தப்பை நான் என் கரியர்ல இதுவரையிலும் செஞ்சதே இல்ல.. ஏதோ மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்லதான் அப்படி ஒரு தப்பான நீயூஸ் பப்ளிஷ் பண்ணிட்டேன் ... எக்ஸ்ட்டிரீம்லி சாரி பாஃர் தட்... " என்று சொல்ல அவனின் கோபம் துளியளவும் குறைந்ததாகவே தெரியவில்லை.

அவன் அலட்சிய பார்வையோடு "குத்தி காயப்படுத்திட்டு சாரி கேட்டா சரியா போயிடுமா" என்றான்.

"நீங்க சொல்றது புரியுது... நான் மறுப்பு செய்தியும் கொடுத்திட்டேன்...அது நெக்ஸ்ட் வீக் மேகஸின்ல வந்திரும்" என்றாள்.

"அதெப்படி ?!... உங்க இஷ்டத்துக்கு நீங்க எழுதிடுவீங்க... அப்புறம் மறுப்பு செய்தி கொடுத்திட்டா முடிஞ்சிடுமா... எனக்கு இதனால ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பதில்? " என்று கேட்டான்.

அவள் மௌனமாய் நிற்க அவனோ கூர்மையாய் நோக்கி "பதில் சொல்ல முடியல இல்ல" என்று கேட்க

அவள் ஏதோ சொல்ல யத்தனிக்க அவன் கையமர்த்தி

"நான் என்ன சொன்னாலும் உன்னால என் நிலைமையை புரிஞ்சிக்கவும் முடியாது... இப்ப நீ போடற உன் மறுப்பு செய்தியால எதையும் மாத்திடவும் முடியாது... நீ எனக்கு ஏதாவது செய்ய முடியும்னா... பெட்டர் டோன்ட் கம் இன் மை வே...யூ காட் இட்" என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவளை புறக்கணித்தபடி அவன் எதிர்புறத்தில் முன்னேறி வேகமாய் செல்ல அவள் மனமோ தவிப்புற்றது.

ஆனால் மீண்டும் ஏதோ எண்ணம் தோன்ற தூர சென்றவனை நோக்கி ஓடிவந்தவள் அவனை வழிமறித்து மூச்சிறைத்தபடி நின்றாள்.

அவன் புரியாமல் அவளை பார்க்க அவள் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டுவிட்டு அவனை நோக்கி "திரும்பவும் சொல்றேன்... உங்க பேரை கெடுக்கனும்னோ... இல்ல உங்க டிக்னிட்டியை ஸ்பாயில் பண்ணனும்னோ நான் இப்படி எல்லாம் செய்யல... என்னை நம்புங்க...

ஒரு காலேஜ் பொண்ணு... நீங்க அவகிட்ட மிஸ்பிகேவ் பண்ணதா சொன்னா... நீங்க விடாம டார்ச்சர் பன்றதா வேற சொன்னா... நான் இதை பத்தி கமிஷ்னர்கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாம்னு சொன்னதுக்கு... போலீஸ்கிட்ட போனாலே என் கரியர் லைஃப் எல்லாம் ஸ்பாய்லாயிடும்னு பயந்தா.. அதான்" என்று நினைத்ததை பேசிவிட்டு அமைதியானவளை நோக்கி
குழப்பத்தோடு "யார் அந்த பொண்ணு... அவ டீடைல்ஸ் இருக்கா உன்கிட்ட" என்று கேட்க

"ம்ம்ம்" என்று சொல்லி அவள் கைப்பேசியில் இருந்த ஒரு பெண்ணின் புகைபடத்தை காண்பித்து அவள் பதிவு செய்து வைத்திருந்த அந்த பெண் பேசியதெல்லாம் அவனுக்கு போட்டு காண்பிக்க, அவன் அவற்றை எல்லாம் கேட்டு திகைப்புற்றான்.

அவன் அவளை நோக்கி "யாராச்சும் என்னை பத்தி இப்படி தப்பு தப்பா சொன்னா உடனே அதை நம்பி எதை வேணா எழுதிடறதா?" என்று மீண்டும் கோபமாய் கேட்க

"அப்படி இல்ல... நானே தனிப்பட்ட முறையில உங்களை பத்தி விசாரிச்சேன்"

"என்ன விசாரிச்ச ?"

"நீங்க காலேஜ் டேஸ்ல எல்லாம் பிளே பாயாமே ... நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் அப்படின்னு" என்று சொன்னவளை கோபமாய் முறைத்து

"ஸ்டாப் இட்... அதெல்லாம் என் பழைய கதை" என்று சொல்ல

"அப்போ அதெல்லாம் உண்மைதானா ?" என்று கேட்டு நம்ப முடியாமல் பார்த்தவளிடம்

"அது என் பெர்ஸன்ல்" என்றான்.

"சரி ஒகே ... அப்போ அந்த ராதா கேஸ்" என்று அவனை நோக்கி கேட்க

வீரேந்திரன் தன் முகவாயாய் தடவியபடி யோசித்தவன் மெல்ல தன் பாதையில் முன்னேறி நடக்க அவளும் அவனை பின்தொடர்ந்தாள். பின்னர் அவன் அவளை நோக்கி "அந்த கேஸ்ல... ராதாவோட ஹஸ்பென்ட் வீட்டில வேலை செய்ற பொண்ணுகிட்ட மிஸ்பிகேவ் பண்ணிருக்கான்... அவனை தடுக்க ராதா முயற்சிக்கும் போது கொஞ்ச பலமா அடிச்சதில அவன் இறந்துட்டான்... தற்காப்புக்காக கொலைன்னு பைஃல் பண்ணிரூக்கலாம்... ஆனா கோர்ட் கேஸ்னு அலையனும்... ராதா... அப்புறம் அந்த பதினெட்டு வயசு பொண்ணோட ப்யூச்சர்னு... எல்லாத்தையும் பத்தி யோசிச்ச போது... நேர்மையா இருக்கிறதை விட மனதாபிமானத்தோட நடந்துக்கனும்னு தோணுச்சு... ஸோ நான் அந்த கேஸ்ஸை ஆக்ஸிடென்ட்னு பைஃல் பண்ணேன்...இதுல என்ன தப்பு..." என்று அவன் கேட்கவும் அவளுக்கு அந்த நொடி அவனின் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது. அவனை போய் தவறாக சித்திரித்துவிட்டோமே என்ற கோபம் அவளுக்கு அவள் மீதே உண்டானது.

தமிழின் மனதில் அவன் மலையென உயர்ந்து நிற்க, வீரேந்திரனுக்கும் ஒருவாறு தமிழ் மீது ஏற்பட்ட தவறான பிம்பம் மாறியிருந்தது. இருவருமே மௌனமாய் அந்த மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தன் மௌனத்தை கலைத்தபடி "நான் கேட்ட... விசாரிச்ச விஷயம் எல்லாம் உங்களை தப்பாவே காட்டிடுச்சா... இல்ல நான்தான் தப்பான கண்ணோட்டத்தில உங்களை பார்த்திட்டனான்னு எனக்கு தெரியல... பட் எப்படி பார்த்தாலும் நான் செஞ்சது பெரிய தப்புதான்... எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்களேன்" என்று கேட்டாள்.

அவன் அவளை பார்த்தபடி "தப்பு செய்றது எல்லோருமே பண்ணுவாங்க... பட் அந்த தப்புக்கு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிற துணிச்சல்... அது நிறைய பேர்கிட்ட இருக்கிறதில்ல... யூ ஹேவ் தட் கட்ஸ்" என்று சொல்லியவன் அவனின் முகத்தின் இறுக்கத்தை தளர்த்தி புன்னகையை வீசினான்.

அவனின் அந்த காந்தமான புன்னகையில் இருந்த ஈர்ப்புவிசையில் தமிழ் மீளாமல் அப்போது சிக்கி கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் அவளின் நினைவெல்லாம் எங்கோ தொலைந்து போயிருக்க அவள் வழியில் இருந்த மேட்டை கவனிக்காமல் இடித்து சற்று தடுமாறி விழப்போக அவன் அவளை விழாமல் தன் கரத்தால் தாங்கி கொண்டான்.

அவனின் கரத்தின் பிடி கொஞ்சம் அழுத்தமாக அவள் தேகத்தில் படிந்திருக்க அச்சப்பட்டு அவசரமாய் விலகி நின்று முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள்.

எத்தனையோ பேரை அவன் கரம் ஆண் பெண் பேதமின்றி தாங்கியிருக்க இன்று அவளை தொட்டதும் உணர்ச்சிகள் ஊற்றாய் பெருகுவதை அவனால் தவிர்க்க முடியாமல் தடுமாற, அவளோ சரிந்து விழுந்த போது தாங்கி கொண்டவனிடமே மனமும் சரிய பார்ப்பதினை தடுக்க முடியாமல் தவிப்போடு நின்றாள்.

அப்போது இவர்களின் இந்த சந்திப்பின் காரணத்தை அறிந்து கொள்ளாமல் ஸ்வேதா நின்று கரவொலி எழுப்ப, அந்த சத்தம் இருவரையும் அவரவர்கள் நிலைப்பாட்டிற்கு இழுத்துவந்தது. அந்த நொடி இருவரின் பார்வையும் ஸ்வேதாவின் புறம் திரும்ப... ????

தமிழச்சி வருவாள்...

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top