• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் friends... வராக நதியோடு வந்துட்டேன்... ஹிஹி... இந்த அப்டேட் தரதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே... ஐயையோ... என் மூளைய ரொம்ப வேலை வாங்குது.. அதான் தாமதம்... சாரி... கோபப்படாமல் லைக் அண்ட் கமெண்ட் தரவும்... ப்ளீஸ்...:geek::geek::geek:

வராக நதி - 23

விகாஷினிக்கு போனை போட்டவாறே ஆபீசை விட்டு வெளியேறி கார் பார்கிங்கை அடைந்தான் முகிலன்...

அவள் எடுத்ததும் அவளை பேசவிடாமல் கேள்வியால் குடைந்தெடுத்தான்...


“ரிஷி எங்க...? ஏன் இத்தனை நாளாக மறைச்ச... ? உனக்கு கொஞ்சம் கூட...”

என்று திட்ட போவதற்குள்... அவனை இடைமறித்த விகாஷினி...

“ஹோச்பிடல் அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன்... ஒழுங்கா வந்து சேரு... அப்புறம் எல்லா கேள்வியும் கேட்கலாம்..”

என்றுவிட்டு தொடர்ப்பை துண்டித்தாள். ( ஏன் மா... முழுசா யாரு கூடவும் பேசவே மாட்டியா நீ...? )

பிளாக் செய்யப்பட்டதால் அவுட்பாக்ஸில் இருந்த மெசே‌‍ஜை மீண்டும் அனுப்பியவள் முகிலனின் குரலில் இருந்த சந்தோசத்தை... தவிப்பை... கோபத்தை... அதற்கு மேல் இருந்த தூய்மையான நட்புணர்வை உணர்ந்தாள்... மேலும் அவனிடம் சொல்லாமல் மறைத்த குற்றஉணர்ச்சியும் சேர்ந்துகொள்ள... அதனாலேயே பேசமுடியாமல் உடனடியாக துண்டித்தாள்.

அதை அறியாத முகிலன்...

“திமிர்.. திமிர்.. உடம்பெல்லாம் திமிர்... ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கல பாரு அவனுக்கு... போயும் போயும் இந்த அல்லிராணி தான் கிடைச்சாளா...?”

என்று வெகு நாள் கழித்து நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் அவனையே திட்டித்தீர்த்தான். நண்பனை திட்டுவதை விட வேறு சந்தோசம் இந்த உலகில் உண்டா என்ன...?

பிரவுன் டஸ்டர் கூட எஜமானின் மனமறிந்து அரேபிய குதிரை போல சாலையில் சீறி பாய்ந்தது.

இங்கே வீட்டில் விகாஷினி புண்ணியத்தில் எழுந்து அவசரமாக குளித்து முடித்த ருத்ரா... கட்டிலில் இருந்த பூக்களை அகற்றிவிட்டு தான் வெளியே வந்தாள். வேலை செய்பவர்கள் சுத்தம் செய்வார்கள் என்று தனது மாமியார் கூறியிருந்தும்... தன் வீட்டில் தானே சுத்தம் செய்வதால், வேலையாட்களை பெட்ரூமில் விட அவளிற்கு சங்கடமாக இருந்தது.

தலை வேறு பாரமாக இருக்க... வீட்டில் இவ்வாறு இருந்தால் அம்மா போட்டு தரும் சுக்கு காபிக்கு மனம் மனம் ஏங்கியது. ஆனால் கேட்க தயக்கமாகவும் இருந்தது.

என்ன தான் அதுவும் அவள் வீடு தான் என்றாலும்... ஜீ பூம் பா என்று மேஜிக் செய்தா பிறந்த வீட்டை எண்ணும் மனதை மாற்ற முடியும்.

இவ்வாறு யோசனையில் ருத்ரா இருக்க... அபிராமி தான் வராண்டாவில் அமர்ந்திருந்த கணவனிற்கு குடிக்க ஓட்ஸ் கஞ்சியை எடுத்து வந்தார்.

வழியில் யோசனையுடன் நிற்கும் மருமகளை பார்த்தவர்...

“என்னமா...? எழுந்துட்டியா... ? வா வா... உன்னை தான் தேடுனேன்... தூங்குறனு சொல்லிட்டு போயிட்டான் உன் புருஷன்...”

என்று சிநேகமாய் சிரித்தார்.

“இல்லை அத்தை... எப்பொதும் சீக்கிரம் எழுந்திடுவேன்... புது இடம் அதான் தூக்கம் வரல...”

என்று சமாளித்தாள்.

அவள் சமாளிப்பதை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவர்... பின்..

“பூசையறையில் குத்துவிளக்கு ஓரமா இருக்கும் பாரு... அதை மட்டும் சாமி கும்புட்டு ஏற்றிவைமா... நான் உன் மாமாவுக்கு கஞ்சி குடுத்துட்டு வரேன்”

என்றவாறு சென்றார்.

இவளும் பூசையறை சென்று தன் அத்தை கூறியதை நிறைவேற்றினாள்...

சூடாக எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும் போல் இருக்கவே அடுப்பறை செல்ல... அங்கு ஒருவரையும் காணோம்...

அதற்குள் அபிராமியும் வந்துவிட்டார்...

“அடுப்பறை வேலைக்கு ஆள் இருக்கு ருத்ரா... ஏதாவது வேணும் என்றால் இதோ வராங்க பாரு... சவிதாமா.. அவங்ககிட்ட கேளு...”

என்று மத்திய வயது தாண்டிய பெண்மணியை அறிமுகபடுத்தினார். கூடவே...

“அவங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை.. கேட்டால் செய்து தருவாங்க... இல்லை நாமலே செய்யணும் என்றாலும் செய்துக்கலாம்...”

என்று வீட்டின் நடைமுறையை பேச்சோடு பேச்சாய் விளக்கினார். பின்பு...

“காலையில் என்ன குடிப்ப... காபியா..? டீயா..?”

என்று கேட்க..

அவ்வளவு நேரம் உரிமையாய் அபிராமி பேசியதும் தான் தயக்கம் அகன்றது ருத்ராவிற்கு...

“சுக்கு காபி அத்தை..” என்று பதில் கூறினாள்.

“அட... தினமும் சுக்கு காபியா குடிப்ப...”

என்று அபிராமி கேட்க... அதற்குள் சவிதாமா தண்ணியை கொதிக்க வைத்திருந்தார்.

“இல்லை.. அத்தை தலை வலிக்கும் போது மட்டும்... மற்ற நேரமெல்லாம் அம்மா ராகி கூழ் தருவாங்க...”

என்று சகஜமாக பேசத்தொடங்கினாள்.

“தலை வலிக்குதா... அப்போவே சொல்லியிருக்கலாம்ல..”

என்று செல்லமாய் கடிந்தவாறு மாமியார் பேச... அங்கே இருவரும் கதை பேச ஆரம்பித்தனர்.

அவர்கள் பேசு சுவாரசியத்தில் உலகம் மறக்க... சுக்கு காபி வந்ததும் தான் இருவரும் சுற்றுப்புறம் உணர்ந்தனர்.

அங்கே, இவர்கள் அமர்ந்து பேசும் டைனிங் டேபிளின் எதிர்ப்புறம் கன்னத்தில் கைக்கொடுத்தவாறு அமர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களான மாணிக்கவேல், கார்த்திகேயன் மற்றும் கார்த்திகாயினி.

அதை கண்டதும் லஜ்ஜையுற்று எழுந்துக்கொள்ளப் பார்த்த ருத்ராவை கைபிடித்து அமர வைத்த அபிராமி...

“அப்புறம் நீ சொல்லுமா...”

என்று கதை பேச ஊக்குவிக்க...

அவளோ இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன அண்ணி... இப்படி பாக்குறிங்க...”

என்றவாறு பக்கென்று சிரித்துவிட்டான் கார்த்தி.

“ஏய்.. எதுக்குடா சிரிக்குற..”

என்று அபிராமி மகனிடம் வினவ..

“இல்ல... அண்ணி என் தூக்கத்தை காப்பாத்துன தெய்வம் மா... இல்லன்ன எப்பவோ நீங்க என் ரூமிற்கு வந்து.. டேய் எழுந்திரு டா.. டேய் எழுந்திரு டான்னு சுப்ரபாதம் பாடிருப்பீங்க...”

என்று கூற...

“ஆமா... ஆமா... என்னை கூட வந்து சாப்டு.. சாப்டுனு பாடுவாங்க... இன்று நாம வந்து அரைமணி நேரம் கழிச்சும் நம்மள கண்டுக்காம அரட்டை அடிக்குறத பாரேன்...”

என்று காயுவும் ஒத்து ஊதி தங்களது அம்மாவை வம்பிழுக்க...


மாணிக்கவேல் அதை ரசித்துச் சிரித்தார்.

சாப்பாடும் தயாராகவே அனைவரும் உண்டுவிட்டு ஹாலில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தந்தையுடன் தொழில் பேசும் கார்த்தி கூட அன்று தன் வீட்டின் புது உறவான அண்ணியிடம் பேசிக்கொண்டிருக்க... காயுவும் அவனுடன் சேர்ந்து கல்லூரியை கட் அடித்து விட்டு ருத்ராவுடன் பேசுவதில் போட்டி போட்டாள்...

ஏன் கல்லூரி போகவில்லை என்று ருத்ரா கேட்டதற்கு...

“எங்க அண்ணாக்கு கல்யாணம் ஆகிருச்சி... கல்யாணத்துல வேலை பார்த்தே ஓய்ந்து போயிட்டேன்...”

என்று கூற...

“ஒரே ஒரு நாத்தனார் முடிச்ச போட்டுட்டு இவ பண்ற அலப்பறை இருக்கே..”

என்று கூறி தலையில் அடித்தான் கார்த்தி... பின்னே முக்கால்வாசி வேலையை பார்த்தது இவன் தானே...

அதே நேரம் வீட்டினுள் அவசரமாக நுழைந்த முகிலன் தன் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் அமர்ந்து தன் மனைவியோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அவன் வந்ததும் அரவம் உணர்ந்து அனைவரும் இவனை பார்க்க.. ருத்ராவை தவிர அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி போன வேகத்தில் வருவது இதுவே முதல்முறை என்பதால்.

“இதுக்கு எதுக்குடா நீ ஆபீஸ் போன.. பேசாம வீட்டுல இருந்திருக்கலாம்ல...”

என்று அபிராமி மகனை மனதினுள் கேலியோடும்.. வெளியில் சீரியசாகவும் கேட்டார்.

அதை உணராத முகிலன்..

“இல்லை மா.. எனக்கு மும்பைல வேலையிருக்கு.. போயிட்டு எப்போ வருவேன்னு தெரியாது.. ரொம்ப அவசரம்”

என்று கூற..

“தனியாவா போற.. நேத்து தானடா வந்த.. கூட ருத்ராவையும் கூட்டிட்டு போ..”

என்று எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க போராடினார்.

ஆனால் அவனோ..

“அவ வந்தா ஆபிஸ் வேலையை யாரு பார்ப்பா.. இப்போ என் இடத்துல இருந்து அவ தான் இந்த ப்ராஜெக்டை பார்க்கணும்.. கூடவே இன்னும் இரண்டு நாள்ல முத்ராவ வர சொல்லிட்டேன்... அடுத்த வாரம் அவளுக்கு காலேஜ் ஓபன் ஆகிரும்...”

என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான். உணர்ச்சி வசப்பட்டிருக்கையில் தான் சுபாவம் மாறுமே... பேசாதவன் பேசுவது அதிசயமா என்ன...?

கல்யாணம் ஆகிய மூன்றே நாளில் இவ்வளவு மாற்றமா... ? என்று அனைவரும் வியக்க.. ருத்ராவோ தான் எப்போது இவன் கம்பெனிய பார்த்துக்குறேன்னு சொன்னேன்.. என்னால எப்படி முடியும்.. என்ன தெரியும் என்று அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் ஆழ்ந்தாள். போன தலைவலி திரும்ப வரும் போல் இருந்தது.

அவன் மேலே அவர்கள் அறைக்கு செல்ல.. ருத்ராவும் பின்தொடர்ந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்ததும்..

“என்னால ஆபீஸ்லாம் பார்க்க முடியாது.. எப்போவும் போல டிசைன் மட்டும் பண்ணி தரேன்.. உங்க இடத்துல இருந்துலாம் என்னால பார்க்க முடியாது”

என்று பிடிவாதத்தோடு மறுக்க...

“நீ முழு நேரமும் அங்க இருக்க வேண்டாம்.. ஜஸ்ட் அந்த ஆந்திரா பிளான் பத்தி மட்டும் என்ஜினீயர் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வா போதும்.. அப்படியே என் பிஏ கிட்ட கேட்டு புது பிளான்க்கு வர வாடிக்கையாளரை அவங்களுக்கு எப்படி வேனுமன்னு கேட்டு டிசைன் பண்ண பாரு... அதுக்குள்ள நான் வந்துருவேன்.. இப்போ எனக்கு ரிஷிய பார்த்தே ஆகணும்.. ப்ளீஸ்...”

என்று கெஞ்சல் என்றால் என்னவென்றே தெரியாதவன் கெஞ்சினான்.

அவளுக்கும் அவன் கூறிய வேலைகளை நம்மால் செய்ய முடியும் என்று தோன்றவே...

ஹ்ம்ம்.. நான் நாளையில் இருந்து போயிட்டு வரேன்

என்றாள்.

“தான்க் யூ ருத்.. தான்க் யூ சோ மச்..”

என்ற முகிலன் பெட்டியை எடுத்து கதவு வரை சென்றான்... பின் திரும்பி நின்று..

“பை ருத்” என்று விடைபெற...

அவள் பே!!! என்று தன் மிகப்பெரிய பெயரை அவன் சுருக்கியதால் முழிக்க..

“பை சொன்னேன்”

என்றான் அவளையே பார்த்துக்கொண்டு நகராமல்...

“ஹான்.. பை..”

என்று கையசைக்க.. கண்களில் மின்னலுடன் தன் வெகுநாள் எதிர்பார்ப்பான யாருக்கேனும் டாட்டா காட்டி விடைபெறவேண்டும் என்ற ஒன்று நிறைவடைந்த திருப்தியில் உற்சாகத்தோடு மும்பை புறப்பட்டான் முகிலன். ( டேய்... நீ கெத்துடா கெத்து... இப்படி சின்னப் புள்ளத்தனமா பிகேவ் பண்றியேடா )
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மும்பை செவேன்ஹில்ஸ் மருத்துவமனை...

அன்றைய மாலையில் ரிஷியின் அறையில் ரிஷியின் பெற்றோர், கிருஷ்ணகுமார், விகாஷினி
மற்றும் முகிலன் ஆகியோர் கூடியிருந்தனர்.


நடந்ததை கிருஷ்ணகுமார் எடுத்து கூற... அதனை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இத்தனை நாள் ரிஷியை பாதுகாப்பாய் வைத்துப் பார்த்த அவர்களிடம் முகிலனால் கோபத்தை காண்பிக்க முடியவில்லை.

பெற்றோருக்கோ மகன் உயிருடன் இருப்பதே போதும் என்ற நிலைமை... அவன் நினைவுகளை
மீட்க சிறுவயதில் இருந்து அவனின் சந்தோஷ நிகழ்வுகளை மாற்றி மாற்றி கூறக்கொண்டிருந்தனர்...


உயிரும் உருவமும் கொடுத்த உறவுகளின் பாசக்குரல் யாரையேனும் அசைக்காமல் இருக்குமா...? அது அவனின் மூளையை சென்று அடைந்ததும்... சிறிது சுறுசுறுப்பாகியது.

டாக்டர்கள்...

“வெல் டன்... இதே மாதிரி அவரது மூளையை தூண்டிவிட்டே இருந்தா நினைவுகள் சீக்கிரம்
திரும்ப வாய்ப்பிருக்கு... நம்பிக்கையை தவற விடாதீங்க...”


என்று விட்டு சென்றனர்.

இது விகாஷினியை வெகுவாக காயப்படுத்தியது என்றால் மிகையல்ல... கிட்டதட்ட இரண்டு
வருடமாக இவள் போராடி முன்னேற்றம் அடையாத ரிஷி.... அவனின் உறவுகள் வந்த இரண்டு
மணிநேரத்தில் முன்னேற்றம் அடைந்தால்... அவன் என்னை வெறுத்துவிட்டானோ... அதனால்
தான் என் குரல் அவனை எட்டவில்லையோ... என்று மனதினுள் மறுகினாள்... பின்


“நான் இரண்டு நாள் கழித்து வரேன்...”

என்று பொதுவாக அனைவரிடமும் கூறி வெளியேறினாள்.

இன்னும் இரண்டு நாளில் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை இவள் பெயருக்கு மாற்ற ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. சொன்னது போல் அந்த வாரம் முடிவதற்குள் அவள் பெயரில் எழுதி வைக்க
போகிறார் விக்னேஸ்வரி.


அதனால் வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாகக்கூடாது என்று தனது
நடமாட்டத்தை மருத்துவமனை பக்கம் செல்லாமல் தவிர்த்திருந்தாள் விகாஷினி.


என்ன தான் ரிஷி முழிக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்று நெஞ்சுமுட்ட ஆசை
இருந்தாலும்... விக்னேஸ்வரியிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்பது ஒரு பக்கம் இருக்க...
தன்னால் செய்ய முடியாததை அவனின் பெற்றோர்களோ முகிலனோ செய்வதை தாங்கும் சக்தி
அவளிற்கு இல்லை என்றே கூறலாம்.


இந்த இரு நாட்களும் மாறி மாறி அனைவரும் பேச... ரிஷியின் மூளை விழிப்பதற்காக
காத்திருந்தது.


டாக்டரும்...

“அவங்க நீங்க பேசுகிறதை கவனிக்குறார்... பட்.. ஏனோ கண்ணை திறக்க முடியல... அவங்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆக கூடிய அளவிற்கு புது விஷயம் எதாவது இருந்தா சொல்லி ட்ரை பண்ணுங்களேன்”

என்று ஆலோசனை குடுத்தார்.

அதே நேரம்... விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விகாஷினி
பெயரிற்கு மாற்றப்பட்டது.


மாற்றிய கையோடு...

“இந்தா இவன் தான் மாப்பிள்ளை...”

என்று ஒரு போட்டோவையும் நீட்டினார் விக்னேஸ்வரி. இனி தன் மகள் திருமணத்திற்கு
சம்மதிப்பாள் என்றெண்ணி.


ஆனால் அவளோ... ஒரு நக்கல் சிரிப்போடு... சொத்து பத்திரத்தை எடுத்தவள்... அப்போதே ரிஷியை குறித்து கூற வாயெடுக்க...விக்னேஸ்வரி அருகில் நின்றிருந்த தந்தையோ தலையை இடமும் வலமுமாக அசைத்தார். சொல்லாதே என்பது போல்...

அதை பார்த்து தன்னை கட்டுப்படுத்தியவள்... தோளை மற்றும் ஸ்டைலாக குலுக்கி...

“என்னமோ பண்ணுங்க...”

என்று கூறி மருத்துவமனை விரைந்தாள்.

இவள் ரிஷியின் அறைக்கதவை திறந்த நேரம்... அங்கே முகில் தான் பேசிக்கொண்டிருந்தான்.
அதுவும் அவன் திருமணத்தை குறித்து...


“டேய்... எனக்கு கல்யாணம் ஆகிருச்சி டா... காதலுக்கு வேணும்னா நீ சீனியரா இருக்கலாம்... ஆனா கல்யாணத்துல நான் தான் டா சீனியர்”

என்றான். மேலும்,

“அதுவும்... இப்போ நானும் காதலிக்குறேன் டா... அது கூட தெரியாம அவளை நான் கல்யாணம்
பண்ணிட்டேன்”


என்று கூற... விகாஷினியோ ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினாள்... ருத்ரா இந்த இடத்தில்
இருந்தால் எவ்வாறு உணர்ந்திருப்பாளோ...


கேட்டுக்கொண்டிருந்த ரிஷியின் மனதிற்கு சந்தோசம் பெருகியது... அது மூளையை சென்றும்
தாக்க... அவன் உடல் லேசாக... மிக மிக லேசாக அசைந்தது...


ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை..

“இனி பாரு... நீ காதலிக்கும் போது என்னை படுத்தினப்பாட்டை எல்லாம் நான் உனக்கு பண்ண
போறேன்..”


என்று கூற... அப்போது அவனின் கருமணிகள் அசைந்தது...

அதை பார்த்ததும் பக்கத்தில் இருந்த நர்சை கூவி அழைத்து.. பார்க்க சொன்னான் முகிலன்...

அவரோ...

“பேசன்ட் கண்ணு முழிக்க போறார்... நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்”

என்று ஓடினார்.

டாக்டர் வரும் வரை..

“ரிஷி... டேய் ரிஷி... எழுந்திரு டா...”

என்று முகிலனும் பெற்றோரும் உலுக்காத குறையாக எழுப்ப... இதயம் வெளியே எம்பி குதித்து
விடும் வேகத்தில் துடிக்க... தன்னை பார்த்ததும் என்ன செய்வானோ என்ற பயத்தையும் மீறி...
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் விகாஷினி.


டாக்டர் வந்து பரிசோதனை செய்கையில் அவன் தன்னையும் மீறி

“விகாஷி...”

என்று முனங்கியவாறே கண்திறவாமல் மயங்கினான். நண்பனால் முழித்த ரிஷி காதலை
வெளியிட்டு நட்பிற்கும் காதலிற்கும் நியாயம் செய்தான்.


அதை கேட்டதும் விகாஷினிக்கு என்ன உணர்வு என்றே சொல்ல தெரியவில்லை... உலகை
வென்றாலும் இந்த சந்தோசம் கிடைத்திருக்காது அவளிற்கு... ஓடிச்சென்று வழக்கம் போல் அவன்
கையைப் பற்றிக்கொண்டாள்.


அனைவரும் பதட்டம் அடைய... டாக்டர் தான் சமாதானப்படுதினார்...

“தொடர்ந்து கண்மூடி அசையாமல் இருந்ததால அவங்களால் கண் திறக்க முடியாமல்
மயங்கியிருக்கலாம்... இது கோமாவில் இருந்து எழும்போது நடப்பது தான்.. டோன்ட் வொர்ரி... ஹி
வில் பீ ஆல்ரைட்... நாளைக்கு அவங்க உங்க கிட்ட பேசுவாங்க...”


என்ற நல்ல செய்தியை சொல்லி சென்றார்.

ஆக... தன் நட்பையும் காதலையும் நிருபித்து கிட்டதட்ட மறுபிறப்பு எடுத்தான் ரிஷி.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top