• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வணக்கம் வணக்கம்... வராக நதியை படிக்க வரும் அனைவருக்கும் வணக்கம்... டைப்பிங் ல இருக்கும் எல்லா வகையான கஷ்டத்தையும் உணர்ந்தாச்சு... அதுக்காக நான் திருந்துவேன்னு நினைக்காதீங்க.. நான் மற்றவர்களை கேட்க தான் செய்வேன்...;););)

வராக நதி - 25

ஹோட்டலில் தன் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த முகிலனிற்கு ருத்ராவிடம் பேசி நான்கு நாட்கள் ஆனதால் பேசவேண்டும் போல் இருந்தது.

உடனே அழைக்க... அந்த பக்கம் ருத்ரா ஆபீசில் முக்கியமான ஆட்களுடன் அமர்ந்து... ஆப்பிள் கம்பெனி
ப்ராஜெக்ட் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியதிருந்ததால், அதில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும்
சவால்களை எடுத்து சொல்லி அதை எப்படி தீர்ப்பது என்றும் கலந்துரையாடிக் கொண்டிருந்தாள்.


அப்போது அவளருகே இருந்த போன் வைரேட் மோடில் இருந்து சத்தமில்லாமல் அதிர்ந்து தான் இருப்பதை
உணர்த்தியது.


அதில் முகிலன் அழைப்பதை பார்த்தவள்...

இந்த நாலு நாளா குடும்பத்தையே மறந்து இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க... என்று தான் நினைத்தாள்.

அவளுக்கெங்கே தெரியும்... அவனிற்கு குடும்பத்துடன் பேசும் பழக்கம் எல்லாம் இல்லை என்று. வெளியூர்
எப்போதெல்லாம் கிளம்புகிறானோ அப்போது தாயிடம் மட்டும் கூறிக் கிளம்புவான்... தந்தை இருந்தால்
அவரிடமும், இல்லையென்றால் தாய் கூறிக்கொள்வார் என்றுவிட்டு கிளம்பிவிடுவான். வரும்போதும் இதே
கதை தான்... தாயிடம் எப்போது வீட்டிற்கு வருவேன் என்பதை மட்டும் தகவலாக சொல்வான். அதுவும் தாய்
கண்டிப்பாக சொல்லித்தான் போகவேண்டும்.. வரவேண்டும் என்று கூறியதால்... இல்லையென்றால் அதுவும்
இல்லை.


"எஸ்கியுஸ் மீ... நீங்க கண்டினியு பண்ணுங்க"

என்றவாறு வெளியேறினாள்.

தன்னுடைய காபினுக்கு சென்று போனை உயிர்பித்தாள் ருத்ரா. அடுத்த நொடி...

“ஹலோ... ருத்”

என்ற முகிலனின் உற்சாக குரல் செவியினில் மோதியது.

அவள் ஒன்றும் சொல்லாமல் ருத் என்ற அழைப்பை தன்னை அறியாமல் ரசித்தவாறு அவனை கவனிக்க...

"என்ன பேச மாட்டியா...? ரிஷி கோமால இருந்தான்... அந்த அதிர்ச்சில பேச மறந்துட்டேன்... ஆபீஸ் எப்படி
போகுது.. ஒன்னும் கஷ்டமா இல்லையே..."


என்று அக்கறையுடன் கேட்க...

"ஹ்ம்ம்... நல்லா தான் போகுது... எனக்கு தான் புதுசா இருக்கு..."

என்று கூறியவள்.. பின்

"ஆமா உங்க ப்ரண்ட் இப்போ எப்படி இருக்காங்க..."

என்று நலம் விசாரித்தாள்.

"ரெண்டு நாள் முன்னாடி தான் கண் முழிச்சான்... இன்று இரவு கோவை வந்துருவோம்"

என்றான் கார்முகிலன்

ருத்ராவும்...

"ம்ம்ம்... ஓகே... நான் வீட்டுக்கு சொல்லவா இல்லை நீங்களே அவங்ககிட்ட பேசுறீங்களா...?"

என்று கேட்க...

"நீயே சொல்லிரு ருத்... நான் இப்போ ஹோச்பிடல் கிளம்பனும். கொஞ்சம் வேலை இருக்கு"

என்றான்.

"சரிங்க..."

என்று போனை வைக்க போக..

"ருத்... ஒரு நிமிஷம்..."

என்றான் தீவிரமாய்...

"சொல்லுங்க..."

என்று இவள் ஏதேனும் முக்கிய விஷியமோ என்று அவன் குரலில் அலெர்ட் ஆக...

"என் பெயர் என்ன...?"

என்றான் அவன்...

.................. ???? இந்த பக்கம் பதிலே இல்லை...

"ஹலோ ருத்... என் பெயர் கூட தெரியாதா ?"

என்று சீண்ட...

"முகில..."

என்று கூறுவதற்குள்..

"முழுபெயர்..."

என்று கத்தரித்தான்...

"கார்முகிலன் ..." என்று முணுமுணுத்தாள்.

"தெரியுதுல... நானும் பார்த்துட்டே இருக்கேன்... என்கிட்ட மொட்டையா வாங்க.. போங்க... இப்படியே பேசிட்டு
இருக்க... பேர் சொல்லி கூப்பிடு"


என்று கோரிக்கை வைத்தான்.

வீட்டுக்கு பேச நேரமில்லை என்றவன்... இவளுடன் பேச்சை முடிக்க விருப்பமின்றி வளர்த்துக்
கொண்டிருந்தான்.


அப்படி அவன் சொல்லும் போதே... இந்த நான்கு நாட்கள் அவனை அதிகம் நினைத்ததால்,
ருத்ராவிற்குஅவனை மனதிற்குள் அழைக்கும் பெயர் நினைவுக்கு வந்தது.


சிறு புன்னகையோடு அவள்..

"மாட்டேன்.."

என்று கூற...

"அப்போ.. மாமா.. மச்சான்.. அத்தான்...டார்லிங்.. டியர்... இதெல்லாம் ஓகே வா...?"

என்றான். ( இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. ?? )

அவள் அதை கேட்டு... முகம் சிவக்க...

"இன்னக்கி உங்களுக்கு என்னமோ ஆகிருச்சி... நான் எப்படியும் கூப்பிடமாட்டேன்... போனை வையுங்க"

என்று வைக்க போக..

"நீ கூப்பிட்டாத் தான் இன்று வீட்டுக்கு வருவேன்... இல்லைனா வர மாட்டேன்"

என்று அடம் பிடித்தான்.

( போச்சு போச்சு... முத்திப் போச்சு... படிக்குறவங்க காண்டாக போறாங்க )

"என்ன நீங்க..."

என்று சலித்தவள்...

"சரி முகிலன்... போதுமா"

என்றாள்.

"போதாது... இப்போ நான் எப்படி உன்னை ருத்ன்னு டிபரென்ட்டா கூப்பிடுறேன்... நீயும் அதே மாதிரி ட்ரை
பண்ணு"


என்றான்.

"சரி... முகில்..."

"வேணாம்... அது ரிஷியோடது..."

"ஹ்ம்ம்... முகிலா..."

"ம்ஹ்ம்... அது அம்மாவோடது..."

யோவ்... என்று எகிற வந்து உதட்டை கடித்தவள்...

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு... ஏற்கனவே மிருதுவான குரலை இன்னும் மிருதுவாக்கி...

"முகி...."

என்றழைத்தவள்... மனதின் படபடப்பில் பட்டென்று போனை கட் செய்தாள்.

இந்த பக்கம் அவள் போனை கட் செய்ததே தெரியாமல் அவளின் குழைவான முகி என்ற அழைப்பிலேயே
லயித்திருந்தான் கார்முகிலன் வெகுநேரமாய்.


அனைவரும் கோவை செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்க.. அந்த நேரத்தில் ரிஷி தங்கள்
தொழிலை பற்றி பெற்றோரிடம் கேள்வி எழுப்பினான்... இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.


விகாஷினி எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

முகிலன் தான்..

“உன் கம்பெனி இப்போ என்கிட்ட தான் பத்திரமா இருக்கு.. கூடிய சீக்கிரம் உன்கிட்ட திரும்ப வரும்”

என்றான்.

“உன்கிட்டயா.. என்னடா சொல்ற.. அபி கன்ஸ்ட்ரக்ஷன்னா”

என்றான் திகைப்பாக.. விகாஷினி நடந்ததை எல்லாம் கூறியிருந்தாலும் இதனை கூறவில்லையே.

"ஆமா.. உங்க அப்பா அதை விற்க போயிட்டாரு... சோ அதை நான் வாங்கிட்டேன்.. புதுசா தொடங்குன மாதிரி
இருக்கணும்னு பேர் மாற்றி வச்சேன்.. விகாஷினி மேல இருக்குற கோபத்துல அவளை மறைமுகமா எதிர்க்க
ஆரம்பித்து போன வாரம் தான் நேரிடையா பார்த்தோம்..”


என்றான்.

விகாஷினிக்கே இது புதிய செய்தி.. இவன் ரிஷியின் கம்பெனியை வாங்கியிருக்கான் என்பது.

இனி எனக்கு இது தேவை இல்லை.. என்னோட கனவான கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்க போறேன்..
என்றான் புன்னகையோடு.


ரிஷி ஒன்றும் சொல்லாமல் நண்பனை இறுகி அணைக்க...

அதை பார்த்த விகாஷினி..

“சரி.. கம்பெனிய திருப்பி குடுத்துட்டா... நீ ருத்ராவை என்ன பண்றதாக உத்தேசம்... வீட்டுக்குள்ள போட்டு பூட்ட
போறியா.. அதுக்காகவா அவளை விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை விட்டு தூக்கி.. உன் கம்பெனில சேர்த்த..”


என்று சற்று கோபமாக வினவ..

ரிஷி இது எப்போ..!!! என்றவாறு பரிதாபமாக முழித்தான்.

“நீ ரொம்ப நியாயம் பண்ணுற மாதிரி பேசாத.. அவளோட டிசைன் உன் பேர்ல மாற்றி.. அவளுக்கு கிடைக்க
வேண்டிய பணத்தையும் அபேஸ் பண்ணுனவ தான நீ...”


என்று குற்றம் சாற்ற...

“வாட்... பணத்தை நான் அபேஸ் பண்ணுனேன்னா..”

என்றவள்...

“அவளுக்கு குடுக்க வேண்டிய பணத்தை கரெக்ட்டா செட்டில் பண்ணிட்டேன்... பேர் மாத்துறது கேட்டால்... அவ
இங்க ஒர்க் பண்ணியிருந்தா அவ பேர் சேர்த்திருப்பேன்... எங்கயோ இருந்து டிசைன் பண்ணி தந்தா.. கஸ்டமர்
கிட்ட எப்படி சொல்றது.. அதான் என் பேரை போட்டேன்.. இது என்ன அவ்ளோ பெரிய தப்பா..”


என்று கேட்டாள் விகாஷினி.

என்ன தான் தாயின் இன்னொரு முகம் தெரிந்தாலும்... அவர் சிறுவயதில் இருந்து கற்று கொடுத்த தொழில்
அப்போ அப்போ எட்டித்தான் பார்த்தது.


கிருஷ்ணகுமாரும் அங்கு இருந்ததால்... மகளிடம்..

“விகாஷினி... உனக்கு தொழில்ல எது சரி எது தப்புன்னு இனிமே தான்மா புரியும்..”

என்றவர்..

“நான் அவளிற்கு சொல்லித்தறேன்.. இப்போ சண்டை போடாதீங்க...”

என்றார் முகிலனிடம்.

அமைதியாக சிறிது நேரம் இருந்தவன்.. ரிஷியிடம் திரும்பி..

“நான் கம்பெனிய உன் பேருக்கு எழுதி தருவேன்.. ஆனா என் மனைவி அங்கதான் வேலை பார்ப்பாள். அவள்
மற்றும் இல்லை.. அங்க வேலை பார்ப்பவங்க யாரையும் வெளிய போக சொல்ல கூடாது”


என்றான்.

இப்போது விகாஷினியை பார்த்து..

“நீ பணத்தை ஒழுங்கா குடுத்திருந்தா சந்தோசம்..ஆனா ருத்ராக்கு சரியா வந்து சேரலை... உன் தொழில்ல
நிறைய கருப்பு ஆடுகள் இருக்கு.. அதுவும் பணத்துக்காக நீ நான்னு போட்டிப்போட்டு போட்டுக்குடுக்க வராங்க..
அவங்களை எல்லாம் தூக்கிட்டு நம்பிக்கையான மனுசங்களை பார்த்து வேலைக்கு வை..”


என்று இலவச டிப்ஸ்சும் கொடுத்தான்.

அதற்குள் இவர்கள் ஏற வேண்டிய விமானம் வர... ரிஷி தான் முதல் ஆளாக விடைப்பெற ஆரம்பித்தான்.

முகில் பேசியதால் சுணங்கியிருந்தவளை ஏதேதோ பேசி சிரிக்க வைத்து விட்டே கிளம்பினான்.

முகிலிடமும்..

“கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் கம்பெனி வாங்கிக்குறேன்.. அது வரை நீயே பாரு..”

என்று தொழில் பற்றிய பேச்சை முடித்தான். ( ஷப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே... )

கோவையில் ரிஷி மீண்டும் வந்ததை முகிலன் தன் வீட்டினரிடம் கூற.. அவர்களும் ஆச்சரியப்பட்டு பின்
மனம் மகிழ்ந்தனர்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்களும் ரெக்கை கட்டி பறந்தது.

ருத்ராவை இப்போது வாரநாட்களில் காயுவும்.. வாரஇறுதியில் காயுவும் முத்ராவும் சேர்ந்தும்
காலையில் யோகா செய்ய பிடித்துக்கொண்டனர்.


முகிலன் காலையில் உள்ளே இருந்தால் தப்பிக்கும் மார்க்கம் ருத்ராவிற்கு கிடைத்திருக்கும்..
காயுவும் முத்ராவும் தொந்திரவு பண்ண வேண்டாம் என்று விட்டிருப்பார்கள்.. இங்கு தான் அவன்
அனைவருக்கும் முன் எழுந்து ஜாகிங் சென்று விடுவானே... ருத்ராவை விடுவதாக இல்லை
பெண்கள் இருவரும்.


வீட்டில் வாரம்வாரம் முத்ரா வந்து போக...ருத்ரா மட்டுமின்றி அவள் தங்கை முத்ராவும்
முகிலனின் குடும்பத்தாருடன் ஒன்றத் தொடங்கினாள். பின்னே.. காயுவை எப்படி
பார்க்கிறார்களோ அதே போல் இவளையும் கவனித்துக் கொண்டால்.. பாசம் வரத்தானே
செய்யும்...பேருக்கு தான் ஹாஸ்டல் வாசம்.. உணவு மதியம் வீட்டில் இருந்து தான்... தினமும்
மாலைவரை கோவையை சுற்றி வேறு பார்ப்பார்கள்.. சில நாட்கள் வீட்டிற்கும் வந்து விடுவார்கள்.
கல்லூரி பாதி நாள் என்றால் இப்படி தான் நேரம் போகும் போல...


அந்த நாட்களில் மாலை வரை வீடே உற்சாகத்தில் அதிரும்.. வீட்டில் தனியாக இருந்து பீடில்
வாசித்துக் கொண்டிருந்த காயுவுக்கு கூட இரு தோழிகள் கிடைத்தது கொண்டாட்டமாக இருந்தது.


பரணில் தூக்கி போட்ட உள்விளையாட்டுகள் அனைத்தும் தூசி தட்டப் பெற்றன..

அன்றும் அப்படி தான்.. மூன்று பெண்களும் கேரம் விளையாண்டுக் கொண்டிருக்க.. கார்த்தி அன்று
மாலை சீக்கிரமே வந்துவிட்டான். காலியாக இருந்த ஒரு பக்கத்தில் அமர்ந்து...


“விளையாண்டே ரொம்ப வருஷம் ஆச்சு.. நானும் வரேன்.. ஆட்டத்தை கலைங்க”

என்றான்.

இவர்கள் நால்வரும் லூட்டி அடிப்பதை மாணிக்கவேல் அபிராமி தம்பதியினர் சந்தோசத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்.


“வீடு இப்போ தாங்க வீடு மாதிரியே தெரியுது”

என்று அபிராமி கூற.. தலையசைத்து அதை ஆமோதித்தார் மாணிக்கவேல்.

ருத்ரா மற்றும் முகிலனிற்கு இந்த இடைப்பட்ட நாட்கள் பூங்காற்றாய் இதயத்தை தழுவி... குளிர்ச்
சாரலாய் மனதை நனைத்தது.


ஒருவரை ஒருவர் சிறிது சிறிதாய் புரிந்து கொள்ள தொடங்கியிருந்தனர். தொழில் பேச்சு எங்கே
எப்படி என்றே தெரியாமல் வாழ்க்கைப் பேச்சாய் மாறி இருந்தது. வீட்டில் நடப்பது அவனிற்கும்..
தொழிலில் நடப்பது அவளிற்கும் அத்துபடி... தயக்கங்கள் அனைத்தும் தேய்ப்பிறையாய் குறைய
நேசம் வளர்பிறையாய் வளர்ந்து.. முழுமதி ஆகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தது.


ருத்... முகி என்று இருக்கும் இருவரும் ருத்ராமுகி ஆகும் நாள் அருகில் நெருங்கிவிட்டது என்பது
திண்ணம்.


கோவையில் அந்த பிரமாண்ட கல்யாண மண்டபத்தின் வாசலில் வாழை மரங்கள் மற்றும்
பழங்களின் தோரணங்கள் அலங்கரித்து தொங்க...


உறவுகள் மற்றும் நண்பர்களின் முகங்கள், அவர்கள் போட்டிருக்கும் உடை மற்றும் நகைகளுக்கு
இணையாக பளபளத்துக் கொண்டிருந்தது ஒரே ஒரு முகத்தை தவிர.. அவர் முகம் மட்டும் ஐயர்
ஹோமம் வளர்க்கும் தீ ஜவாலையை ஒத்து இருந்தது. அவரது கண்கள் எதுவும் செய்ய முடியாத
ஆத்திரத்தில் மணமேடையில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கும் தனது மகளையும் ரெண்டு
வருடத்திற்கு பிறகு இன்று வந்து மீண்டும் தன் மகளை கைப்பிடிக்க வந்திருக்கும் ரிஷியையும்
வெறித்துக் கொண்டிருந்தது.


இவர் இப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் பின்னணிக்கு காரணம் அவரின் கணவர்
கிருஷ்ணகுமார் தான்..


இரு நாட்கள் முன்பு தந்தையும் மகளும் பெட்டியை கட்டி எங்கோ கிளம்ப..

“எங்க கிளம்புறீங்க...”

என்றவாறே வந்தார் விக்னேஸ்வரி.

“கிளம்புறீங்க இல்லை மாம்.. கிளம்புறோம்” என்றாள் மகள்.

“நானுமா.. ஏதாவது சுற்றுலாவா.. முன்னாடியே சொல்ல மாட்டீங்களா...?”

என்று வேலை அதிகம் இருந்ததால் எரிச்சல் பட...

“சுற்றுலா எல்லாம் அப்புறம் போயிக்கலாம்.. இப்போ கல்யாணத்துக்கு போறோம்.. இன்னும்
ரெண்டு நாள்ல கல்யாணம்..”


என்றாள் விகாஷினி... மறைக்க முயன்றும் உற்சாகம் தெறித்தது குரலில்.

“கல்யாணத்துக்கா.. அதுவும் ரெண்டு நாள் முன்னாடி.. ஆர் யூ மேட்... எல்லாம் நாளைக்கு நைட்
போயிக்கலாம்... ஆமா யாருக்கு கல்யாணம்.. இன்விடேஷன் வரவே இல்லை...”


என்றார்.

உடனே மகள் பெட்டியில் இருந்து தன் கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்ட...

அதை வாங்கியவர்..

“உனக்கும் அநேகமா சீக்கிரம் கல்யாணம் நடக்கும்...”

என்றவாறே பிரித்தார்... முன்பக்க பெயரை கவனிக்கவில்லை...

கல்யாண மணமக்கள் பெயரை பார்த்த அவர் தீயை மிதித்தவர் போல் ஆனார்.

தன் புதல்விக்கு கல்யாணம் என்பது முதல் கட்ட அதிர்ச்சி என்றால்..

இரு வருடம் முன் இறந்துவிட்டான் என்று நினைத்தவன்.. இன்று மாப்பிள்ளையாய் வந்தது
இரண்டாம் கட்ட அதிர்ச்சி... அதை விட உலகத்தில் மகளின் கல்யாணத்தை மகள் தந்த
இன்விடேஷன் மூலமாக தெரிந்தவர் இவராக தான் இருப்பார்.


கம்பெனியும் சாமர்த்தியமாக வாங்கிய பெண்ணை முறைத்து பார்த்தவர்.. அவள் சிரித்துக்
கொண்டிருக்கவும்.. ஆக்ரோஷத்தில் அடிக்க சென்றார்.


அதற்குள் மகளை தன்புறம் இழுத்த கிருஷ்ணகுமார்..

“போதும்.. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா.. உன்னை இங்க விட்டு வச்சிட்டு எந்த நேரம் என்ன
பண்ணுவியோன்னு நிம்மதியா இருக்க முடியாது..”


என்றார்.

“வர முடியாது.. இந்த கல்யாணத்தை நடத்தவிடவும் மாட்டேன்”

என்று கீறிச்சிட்டவரை..

“அப்போ நாம டிவோர்ஸ் தான் பண்ணனும்.. பரவால்லையா...?”

என்று கேட்க..

அவர் பதில் கூறும் முன்...

“உன் மரியாதையையும் யோசிச்சிக்கோ... இத்தனை வருஷம் என்னத்த வாழ்ந்தானு உன்னை
தான் எல்லாரும் பேசுவாங்க...”


என்று அவரது வீக் பாயிண்ட்டில் அடித்தார்.

விக்னேஸ்வரிக்கு மற்றவர்கள் தன்னை பிரமிப்பாக பார்க்க வேண்டும்.. மரியாதை தர வேண்டும்..
அது தான் முக்கியம்.. மற்றதெல்லாம் ஏன்.. மகளும் கணவனும் கூட அதற்கு அடுத்து தான்.. விட்டு
கொடுப்பாரா..? வேண்டா வெறுப்பாக கிளம்பி..


இதோ இப்போது உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாத படி கிருஷ்ணகுமார்... ரிஷிக்கும் அவனின்
குடும்பத்திற்கும் ஆபத்து வராமல் மறைமுக பாதுகாப்பு கொடுத்த கையோடு.. ஆபத்து வந்தால்
அதற்கு மனைவி தான் காரணம் என்றுகாவல் நிலையத்தில் ரகசிய புகாரும் இவரின் கண்
முன்னால் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட அனைத்து வழிகளிலும் லாக் செய்யப்பட்டிருந்தார்
என்றால் சரியாக இருக்கும்.


இங்கே அவர் இப்படி புகைய.. மண்டபத்தில் கல்யாண ஜோடியும்.. ருத்ராமுகியும் கண்களால்
காதல் பேச...


மீதி இருக்கும் ஒரு ஜோடியான முத்ரா மற்றும் கார்த்தி தான்... அவள் பார்க்கையில் அவன் வேறு
எங்கோ பார்க்க... அவன் பார்க்கையில் அவளும் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கண்களை
திறந்து வைத்தே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இன்னும் சில
நொடிகளில்... அசாதாரணமான நேரத்தில் தங்களின் காதலை வலியோடு உணருவார்கள்.


வழக்கம் போல் தனக்கு பிடித்த இளநீல நிறத்தில் சோலி அணிந்து தன் தாய் தந்தையிடம்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் முத்ரா.. அவள் கூடவேதான் ருத்ராவும் காயுவும் இருந்தனர்.
இப்போதெல்லாம் இவர்கள் மூவரை பிரித்து தனித் தனியே பார்க்க முடிவதில்லை... முப்பெரும்
தேவியரை போல் ஒன்றாகவே எங்கும் அலைந்தனர்.


பெற்றோரை இந்த கல்யாணத்திற்கு மகள்கள் இருவரும் அழைக்க.. அவர்களும் மகள்களை காண
வந்திருந்தனர். இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து மனம் நிறைந்தது... இதைத் தவிர
வேறென்ன வேண்டுமாம் பெற்றவர்களுக்கு...


“கெட்டி மேளம்..கெட்டி மேளம்..” என்று ஐயர் குரல் உயர்த்த... மங்கள வாத்தியங்கள் மணமக்களை
வாழ்த்த.. அட்சதை மழையென பொழிய... விகாஷினி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு
மனைவியாக்கி கொண்டான் ரிஷி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top