• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Varaga Nathikaraiyoram oru sokkattaan paarvai 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் friends... தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் நானும் ஹரிணியும் நட்பால் ஒன்றாக பயணித்தது போல்.. எங்கள் கதையையும் பிணைத்துள்ளோம்... அவள் பாதி நான் மீதி என்று கலந்து கட்டிய அத்தியாயம் இது... எப்போதோ முடிவு செய்து இப்போது வாய்ப்பு வந்துள்ளது தோழர் தோழிகளே... உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்து நாங்கள்...

வராக நதிக்கரையோரம் ஒரு சொக்கட்டான் பார்வை

அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் உள்ளே லம்போகினி நுழைந்தது .

அதிலிருந்து இறங்கிய கிருஷ், மறுபக்கம் சென்று கதவைத் திறந்து விட்டான். அவனை முறைத்தபடியே
உள்ளே இருந்து வந்தவள் வைஷாலி ராகவ்கிருஷ்ணா . அப்படி தானே சொல்ல சொல்லி இருந்தான் அவன்.
தங்க நிறத்தில் வெள்ளி ஜரிகை கொண்ட சேலை அணிந்து இருந்தாள் . அவளின் நிறத்திற்கு அது மிகவும்
எடுப்பாக இருந்தது. மை தீட்டிய விழி, கிருஷ்ஷின் மையலை மேலும் கூட்டியது . கழுத்தில் பாந்தமாகப்
பொருந்திய செயின் , அதன் ஜோடியென அமைந்த கம்மல் என்று அசத்தலாக வந்திருந்தாள் வைஷாலி .


அவளின் முன் நெற்றியில் புரண்ட கூந்தலை மெதுவாகக் காதோரம் ஒதுக்கி விட்டான் கிருஷ். சரேலென
நிமிர்ந்தவளைக் கண்டு,


"உஷ், கண்ட்ரோல் டார்லிங். இப்ப நீ என்னோட வைஃப். "

என்று அழகாகக் கண்ணடித்தான். அதிலே மொத்தமாக வீழ்ந்த வைஷாலி, தன் பாவனைகளை மறைக்கப்
பெரும்பாடு பட்டாள். அங்கேயே நின்றிருந்தால், சந்தேகமே இல்லாமல் சில பல சம்பவங்கள் நிகழும்
என்பதால் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள் அவள்.


வாழைத் தோரணங்கள் வரவேற்க, முகப்பில் கார்த்திகேயன் வெட்ஸ் முத்ரா என்று பெயர் தாங்கிய பேனரில்
இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படமும் பொருந்தியிருந்தது.


கார்த்திக்கின் தோளில் வாகாய் சாய்ந்தபடி நின்றிருந்தாள் முத்ரா. ஓரக்கண்ணால் அவளையே கனிவுடன்
நோக்கியபடி கார்த்திக் இருந்தான்.


இருவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை மிளிர, அதுவே அவர்களின் கணக்கில்லா காதலைக் காட்டியது.

"ஜோடி பொருத்தம் செம்மயா இருக்கு தான"

என்று மகிழ்ச்சியுடன் கிருஷ் கேட்க,

" ஹ்ம்ம் ஆமா, லவ்லியா இருக்காங்க ரெண்டு பேருமே . முத்ராவ பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு "
என்று வைஷாலியும் புன்னகைத்தாள் .


" என்னைத் தவிர எல்லாரையும் பாரு நீ "
கிருஷ் சலித்துக்கொண்டான் .


" ஓகே பாஸ்... வாங்க உள்ள போலாம் "
வைஷாலி முன்னே சென்றுவிட,


தான் சொன்னதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்ததா இல்லையா என்றே தெரியாமல் முழித்தான் அவன்.

பின் இவர்கள் ஜோடியாக உள்ளே செல்ல, அனைவரும் வைத்த கண் வாங்காமல் ஒரு நிமிடம் இவர்களையே நோக்க, வைஷாலி தான் கொஞ்சம் தடுமாறினாள். கிருஷ் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நேராக மணமகன் அறையை நோக்கி நகர, பின்னோடு வேறு வழியின்றி இவளும் சென்றாள்.

அங்கே கண்ணாடி முன் நின்று கார்த்திக் தன் உடையை சரிபார்த்துக் கொண்டிருக்க,

அவனருகே நின்றிருந்த காயு வழக்கம் போல் கடமையே கடவுளென செல்பி எடுக்க கார்த்தியை கெஞ்சிக்
கொண்டிருந்தாள்..


“டேய் ஒரே ஒரு போட்டோ டா..”

என்று.. பக்கத்தில் அவன் கணவன் வேறு..

“போதும் ரெஸ்ட் எடு டா..”

என்று இவளை கெஞ்சி கொண்டிருந்தான்..

"மாப்பிளையை பார்க்க பெர்மிஷன் கிடைக்குமா ? "

என்று கிருஷ் பணிந்தவன் போல் கேட்க, கண்ணாடி வழியே தன் பின்னால் நோக்கினான் கார்த்தி.. அது அங்கிருப்பவனின் கையை மட்டும் காண்பிக்க.. ,

" அதான் பார்த்துட்டியே, அப்பறம் என்னடா சீன் ஓட்டற ? "

என்று சிரித்தபடியே திரும்பியவன்.. கிருஷ்ஷை பார்த்ததும் அசையாமல் நின்றான் .

கிருஷ்ஷும் நகராமல் நிற்க, இருவரும் எதுவும் பேசாமல் சற்று நேரம் அப்படியே இருந்தனர்..,

நெடுநாளைக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் நிலை இவ்வாறா இருக்கும் என்ற எண்ணம் வைஷாலிக்குத்
தோன்றியது. காயுவோ கிருஷ்ஷை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்ற ரீதியில் நின்றிருந்தாள் .
ஆனால், அடுத்த நொடி சொல்லி வைத்தாற்போன்று வேகமாக அருகில் வந்தவர்கள் நண்பர்கள் இருவரும்.. சிறுவர்கள் போன்று


" பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்? கோ ஜாம்
என்ன கோ? டீ கோ
என்ன டீ ?ரொட்டி
என்ன ரொட்டி ? பச்சை ரொட்டி
என்ன பச்சை ? மா பச்சை
என்ன மா ? டீச்சர் அம்மா
என்ன டீச்சர் ? கணக்கு டீச்சர்
என்ன கணக்கு ? வீட்டு கணக்கு
என்ன வீடு ? மாடி வீடு
என்ன மாடி ? மொட்டை மாடி
என்ன மொட்டை ? பழனி மொட்டை
என்ன பழனி ? வடபழனி
என்ன வடை? ஆமை வடை
என்ன ஆமை ? குளத்தாமை
என்ன குளம் ? திரி குளம்
என்ன திரி ? விளக்குத் திரி
என்ன விளக்கு ? குத்து விளக்கு
என்ன குத்து ? கும்மாங் குத்து


என்றபடி ஒருவருக்கொருவர் மற்றவர் வயிற்றில் பலமாகக் குத்தியபடியே இறுக்கமாக அணைத்துக் கொண்டனர் .

" சின்ன வயசுல விளையாடுனது . எவ்ளோ வருஷம் ஆச்சுல்ல !! எப்படி டா இருக்க ? என்னையெல்லாம் மறந்தே போயிட்ட ? ஆக சார்க்கு மெயில் அனுப்பல என்றால் போன் பண்ணி பேசிருக்கவே மாட்டீங்க.."
என்று கார்த்திக் ஆரவாரத்துடன் கேட்க..


" அப்படில்லாம் இல்லை டா.. கொஞ்சம் வீட்டுல பிரச்சனை அதனால ஸ்கூல்க்கு அப்புறம் டச் விட்டு போச்சு.. ஆன அப்போ அப்போ உன்னை நினைச்சுப்பேன் டா.. உன்வீட்டுக்கு வரலாமானு கூட யோசிச்சேன்.. அப்புறம் அதுவும் முடியாம... வேலை விஷயமாக மும்பை போயிட்டேன்.. இப்போ திரும்ப எல்லாத்தையும் இங்க கொண்டு வந்தாச்சு...”

என்றவாறு..

அவனின் தோளில் ஒரு போடு போட்டான் .

மறுபடியும் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர் .

“அடப்பாவிகளா இப்படி கட்டிப்பிடி வைத்தியம் பண்ணிட்டே இருந்தா கல்யாணம் நடந்த மாதிரி தான்”

மனதில் நொந்த காயு ,

" எக்ஸ்கியூஸ் மீ. இனிமே முத்ரா மட்டும் தான் இவனை ஹக் பண்ணலாம். நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க "

என்று இருவரையும் பிரித்து விட்டப்படியே கிருஷ்ஷிடம் சொன்னாள் காயு .

திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் ,

" ஹே காயு தான நீ ? எவ்ளோ பெரிய பொண்ணாகிட்ட "
ஆச்சரியப்பட்டான் கிருஷ் .


கண்களை சுருக்கி, மண்டையை கசக்கிப் பார்ததாள் காயு.

“யாரு இவன் ?”

அப்பொழுது சிரித்தபடி காயுவின் தலையைத் தட்டிய கார்த்திக்,

"உனக்குத் தெரிலயா ? என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் ராகவ்"

என்று அவனின் தோளில் கை போட்டான் .

அப்பொழுதே பல்பு பலமாக எரிய ,

" வாவ், நீங்களா அண்ணா!!!! எப்படி இருக்கீங்க ? அடையாளமே தெரில எனக்கு "

என்று காயு மகிழ்ச்சியில் கூவ , அவள் கணவன் வருண்..

“காயு இப்படி வா...”

என்று அவளை பிடித்து அமர வைத்து கையில் இருந்த ஜூஸை குடிக்க சொன்னான்.. அதன் பின்பே காயுவை
கிருஷ் மற்றும் ஷாலி உற்று பார்க்க.. அவள் கர்ப்பமாக இருப்பதே தெரிந்தது..


அதை கண்டு கிருஷ் தான்..

“என்னடா இவ.. இந்த நேரத்திலயும் இப்படி அடங்கவே மாட்டிக்குறா..”
என்றான் கார்த்தியிடம்..


“இந்த நேரத்துல இல்ல.. எந்த நேரத்திலும் இவ அடங்க மாட்டா டா.. அது அவ பாடு அவ புருஷன் பாடு”
என்று கூற..


"போடா டேய். இன்னிக்கு உனக்கு கல்யாணம்னு சும்மா விடறேன்... இல்லன்னா நடக்கறதே வேற "
என்று ஒற்றை விரலை ஆட்டி கார்த்தியை மிரட்டியவள் ,


"இவங்க?"

என்று கேள்வியாய் வைஷாலியை நோக்க, அப்படி ஒரு ஜீவன் அங்கே நிற்பதை அப்பொழுது தான் கார்த்திக் பார்த்தான் .

" மீட் மை வைஃப் வைஷாலி "

என்றபடி உரிமையாய் அவள் தோளில் கையை வைத்தான் கிருஷ்.

அவஸ்தையாய் நெளிந்தபடியே புன்னகைத்தாள் வைஷாலி. காயு அவளருகே வந்து சிநேகமாகக் கை
குலுக்கினாள் .


" ஓஹ், வெல்கம் வெல்கம். எனக்கு நம்பவே முடியல , இந்த ஊமைகோட்டான் எப்படி சேலெஜ்ல வின்
பண்ணான்னு ? உங்களைப் பார்த்ததும் தான் டவுட் கிளியர் ஆச்சு "


என்று கார்த்திக் சிரிக்க, ஓங்கி அவனை ஒரு அடி விட்ட கிருஷ்,

"எனக்கும் தான் நீயெல்லாம் கல்யாணம் பண்ணுவன்னு டவுட் இருந்துச்சு. வெளில பேனர் பார்த்ததும் டவுட் போயிந்தி "

என்று வாய் விட்டு சிரித்தான் .

" உஷ், டேய் சத்தமா பேசாத. யாராச்சும் தப்பா நினைக்கப் போறாங்க "

கார்த்திக் நாலாபுறமும் கண்களை உருட்ட,

" சரி சரி, சீக்கிரமா ரெடியாயிட்டு வா. நான் வெளில வெயிட் பண்றேன்."

கிருஷ் கூறினான் .

" நானெல்லாம் எப்பவோ ரெடி டா. கட்டுடா தாலியைன்னு எப்ப சொல்லுவாங்கன்னு வெயிட்டிங் "

கார்த்திக் சாதாரணமாகக் கூற நினைக்க, அவனையே அறியாமல் வெட்கம் வந்து டென்ட் போட்டு அமர்ந்தது அவன் முகத்தில் .

உடனே காயு, கிருஷ் இருவரும் ஓட்டித் தள்ளினர் .
வைஷாலி தான் ,


“அட, சும்மா இருங்க பா ரெண்டு பேரும். பாவம் நம்ம மாப்பிள்ளை"
என்று சொன்னாள் .


" உங்க கல்யாணத்தப்பவும் இதே மாதிரி கலாய் வாங்கிருப்பீங்க தான வைஷாலி. அதான் சப்போர்ட்டா !! "
காயு கேட்க,


"வாட் ?"

என்று அதிர்ந்தவள், அவசரமாகப் பார்வையை கிருஷ்ஷிடம் செலுத்தினாள் .

"ஆக்ட் பண்ணு கரெக்ட்டா. கொஞ்சம் வெட்கப்படு"

என்று அவன் அவள் மட்டுமே கேட்கும்படி காதருகே குனிந்தபடி கூற,

“வராத வெட்கத்தை எப்படி வெல்கம் பண்ணறது”

என்று அவள் விழித்தாள்.

இவர்களின் ரகசிய சம்பாஷனைகளைக் கண்டு மற்ற இருவரும்...

" ஹோ ஹோ "

என்றபடி கலாய்க்க, அழையா விருந்தாளியாக வெட்கம் வந்தமர்ந்தது வைஷாலி முகத்தில் .
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மாப்பிள்ளையை அழைப்பதாக செய்தி வர.. தன் மனதை கொள்ளை கொண்ட தேவதையை
காண கார்த்தி ஆவலோடே சென்றான்..


முத்ரா மேடைக்கு வருகையில் அவளை பார்த்த கார்த்திக்கு எப்போதும் வரும் கட்டுங்கடங்காத
காதலும் மயக்கமும் அப்போது ஒருபிடி அதிகமாகவே வந்து அடித்துச்சென்றது.


கிருஷ் மற்றும் ஷாலி முன் வரிசையில் அமர்ந்து தங்கள் திருமணம் பற்றிய கனவில் மூழ்கினர்.

மேடையில் கார்த்தி மற்றும் முத்ரா அடிக்கடி ஒர பார்வை பார்த்துக் கொண்டு ஐயர் கூறிய
மந்திரத்தையும் கூறிக் கொண்டிருக்க..


கார்த்திக்கு பொறுமை பறந்தது.. எப்போ டா தாலி வரும் என்று உள்ளுக்குள் கிட்டதட்ட ஏங்கவே
ஆரம்பித்தான்..


ஒரு வழியாக தாலி அவன் கையில் வந்து சேர.. முத்ராவின் வெண்கழுத்தில் தாலி கட்டி தன் இரு
வருட காதலை தன்னுடைமை ஆக்கிக் கொண்டான்..


அங்கிருக்கும் ருத்ராமுகி மற்றும் ரிஷிவிகாஷி ஜோடிகளும் தங்கள் திருமணத்தை எண்ணிப்
பார்த்து மகிழ்ந்தனர்.. மித்து பாப்பா சமர்த்தாக தனது சீதா பாட்டியின் கைகளில் அமர்ந்து புதிதாக
இருக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


திருமண விழா இனிதே முடிய.. மாலை வரவேற்புக்கு தயாராக சென்றனர் இருவரும்..

ஆகாய நீல லெகங்கா முத்ராவை வெகு அழகாக ஜொலிக்க வைக்க.. முத்ராவின் ஆசைக்காக
கார்த்தியும் ஆகாய நீல வண்ணத்திலேயே ஷெர்வானி அணிந்திருந்தான்..


அவர்களை பார்க்க பழங்காலத்து அரசர் அரசி போல் கம்பீரமாக இருந்தது.

“கிப்ட் குடுத்துட்டு போகலாமா ஷாலி..”

என்று கிருஷ் கேட்க..

“ஓகே பாஸ்..”

என்றவாறு எழுந்தாள்..

ஒருவாறு போட்டோவிற்கு போஸ் கொடுத்து கிளம்ப பார்க்க.. ஷாலியின் போன் அவர்கள்
நடத்தும் நாடகத்திற்கு எதிராக வந்தது..


அவளது தாய் தான் அழைத்திருந்தார்..

எடுத்ததும்..

“எப்போடா வீட்டுக்கு வருவ..”

என்று கேட்க..

தாங்கள் போடும் நாடகத்தை மறந்த ஷாலி..

“அம்மா இப்போ கிளம்பிட்டேன்.. ஒரு அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துருவேன் மா.. பாஸ்
ஓட பிரண்ட் கல்யாணம் முடிஞ்சிருச்சி”


என்று கூற..

கிருஷ் ஜெர்க்கானான் என்றால்.. கார்த்தியோ..

“என்னது வீட்டுக்கு போவீங்களா.. இது உங்க பாஸா.. அப்போ கல்யாணம் ஆகலை அப்படி தானே..”

என்று கேள்வி கேட்க..

கிருஷ் அப்போதும் சமாளிக்க தான் பார்த்தான்..

“இல்லடா.. நாங்க அவ அம்மா வீட்டுக்கு போகிறோம்.. என்னை அவ பாஸ்ன்னு தான் கூப்பிடுவா..”

என்று கூறி மூச்சு விட..

“டேய் டேய்.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா.. நீ பொய் சொல்லும்போது தான இப்படி அவசர
அவசரமா பேசுவ..”


என்று அவனின் தோளில் மேடை என்றும் பாராமல் அடிக்க..

வைஷாலியோ என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக்கொண்ட பாவனையில்
நின்றிருந்தாள்.


அதற்கு மேல் கார்த்தியிடம் மறைக்க முடியாமல்..

“இப்போ என்னடா.. ஆமா எங்க கல்யாணம் இன்னும் நடக்கலை.. பட் என் வைஃப் என்றால் அது
இவள் தான் அதான் கூட்டிட்டு வந்தேன்...” என்று தன்னை நியாயப்படுத்த..


இப்பொது ஜெர்க்காவது ஷாலி முறை ஆனது...

“அப்போ நான் தான் பந்தயத்துல ஜெயிச்சேன்.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோ.. ஆஹா.. ஆனாலும்
உனக்கு இவ்ளோ தில்லு ஆகாது டா..”


என்று ஓட்ட ஆரம்பித்தான் கார்த்தி..

பதிலுக்கு கிருஷ் எப்போடா தாலி கட்டுவோம் என்று கார்த்தி ஏங்கியதை சொல்லி கிண்டலடிக்க..

முத்ராவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..

அதே மகிழ்ச்சியில் இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

அதன் பிறகு மணமக்கள் போட்டோ எடுத்தே கலைத்து போயினர் என்றால் மிகையல்ல... பின்னே
முகிலனின் திருமணம் பெரிய குளத்தில் நடந்ததால் கோவையில் இருந்து வர முடியாத
அத்தனை பேரையும் அழைத்து பிரமாண்டமாக அல்லவா நடத்துகின்றனர்...


அவர்களுக்கு தெம்பை தந்ததே மித்து குட்டி தான்.. இப்போது ருத்ரா கையில் தவழ.. அடிக்கடி மேடை பக்கம் கைக்காமித்து அவர்களிடம் செல்லம் கொஞ்சி.. போட்டோ எடுத்து.. அந்த மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்கியவாறு அன்றைய நாளை துறுதுறுப்போடு முடித்து வைத்தாள் அவ்வீட்டின் குட்டி இளவரசி மித்ரா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top