• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 7 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
Continuation:

புருவத்தை உயர்த்தி என்ன என்ற வகையில் கேட்டவனுக்கு. பதிலாய் தலை தானாய் ஒன்றும் இல்லை என்று ஆடியது.
அவள் ஆட்டளில் அவள் காதில் போட்டு இருந்த ஜிமிக்கியும் சேர்ந்து ஆட. விட மாட்டேன்டி உன் அழகும் எனக்கு தான். உன் திமிரும் எனக்கு தான் என்று மனிஷ் நினைத்துக் கொண்டு இருக்க.
செல்லம்மாவுக்கோ அவன் அழகோடு அவனின் புத்தி கூர்மை தான் யோசிக்க வைத்தது. தான் போட்ட திட்டத்தில் கன்டிப்பாக ஜெயந்தியைய் வேண்டாம் என்று சொல்லி விடுவான். சந்திர்ப்பம் பார்த்து சுகனின் காதலை அங்களிடம் சொல்லி இருவரையும் சேர்த்து வைத்து விடலாம்.
அத்தோடு என் அண்ணாவுக்கு செய்ததுக்கு பதில் அடி கொடுத்து விடலாம் என்று நினைத்து அவள் போட்ட ஒரு திட்டம் இது மாதிரி முடியும் என்று எதிர் பார்க்காது அடுத்து என்ன செய்ய என்று அவள் மூளை யோசிக்கும் போதே…
அதற்க்கு இடஞ்சலாய் ஜெயந்தியின் பெரியம்மாவிடம் மனிஷ்….
“ஆன்டி என் அப்பாவுக்கும், சித்திக்கும் உங்க வீட்டு பொண்ணு போட்டோ தானே அனுப்பினிங்க.” என்று பணிவாய் கேட்க.
“ஆமாப்பா. வீட்டுக்கு என் பைய அனுப்பினான். அவன் சரியாக தான் அனுப்பினான்.” என்று கூடுதல் தகவல் சொல்ல.
“ அப்போ அவரே எனக்கும் அனுப்பி இருந்து இருக்கலாமே….”
“நானும் அது தான் சொன்னேன் தம்பி. ஆனா ஜெயந்தி தான் உங்க கிட்ட இருக்குறது எல்லாம் பழைய போட்டோ. நான் புதுசா செல்பி எடுத்து அனுப்புறேன்னு சொல்லிட்டா. சொன்னது உடனேவாவது செய்தாளா….?அதோ இதோன்னு அவங்க பெரியப்பா சத்தம் போட்டு நேத்து தான் உங்களுக்கு அனுப்பினா. அதுவும் ஒழுங்கா அனுப்பாம இப்படி சொதப்பி வெச்சி இருக்கா.”
மனிஷ் பெரியம்மா பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தாலும் பார்வை முழுவதும் செல்லம்மாவிடமே இருந்தது. செல்லம்மாவும் இப்போது நேர்கொண்டு அவனை தான் பார்த்துக் கொன்டு இருந்தாள். இவன் சாதரணமானவன் கிடையாது. இவனிடம் மோத பார்த்து தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அடுத்து என்ன திட்டம் போட போகிறான் என்று பார்க்க.
செல்லம்மா நினைத்தது போல்…..”நல்ல வேள எங்க வீட்டுக்கு சரியான போட்டோவை அனுப்பி வெச்சிங்களே...அப்பாவுக்கும், சித்திக்கும், உங்க வீட்டு பெண்ணை ரொம்ப பிடிச்ச தொட்டு தான் இந்த பெண் பார்க்கும் விஷயத்துக்கே நான் ஒத்துக் கொண்டேன்.
என்னை பொறுத்த வரை பெரியவங்க விருப்பம் தான் என் விருப்பம். நீங்க உங்க வீட்டு பெண்ணை கேட்டு முடிவு பண்ணுங்க.” என்று சொன்னதை கேட்ட சுகன் வாயில் கைய் வைத்து அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்.
சுகன் நின்ற கோலத்தை பார்த்து மனிஷூக்கே சிரிப்பு வந்து விட்டது. அதை அடக்கியவனாய் யார் கிட்ட…..?” என்று நினைக்க.
மனிஷின் பேச்சை கேட்ட ஜெயந்தியின் மொத்த குடும்பமும் மொத்தமாய் வீழ்ந்து விட்டது. சே மாப்பிள்ளை பெண் போட்டோ மாத்தி அனுப்பிச்ச தொட்டு தான் பொண்ணு செல்லம்மான்னு பார்த்து இருக்காரு.
போட்டோ மாத்தி அனுப்பிச்சதுக்கு கோவிச்சிக்காம பெரியவங்க விருப்பம் தான்னு சொல்றாருன்னா எவ்வளவு நல்ல பிள்ளை என்று மொத்த குடும்பமும் அவனுக்கு பெண்ணை கொடுக்கலாம் என்ற முடிவோடு ஒருவருக்கு ஒருவர் பார்வை பரிமாறிக் கொண்டு தங்கள் முடிவை எடுத்தவர்கள்.
குடும்ப தலைவராய் சந்திரசேகர்.”எங்க வீட்டு பொண்ணும் பெரியவங்க பேச்சுக்கு மறுவார்த்தை சொல்ல மாட்டா மாப்பிள்ளை.” மனிஷ் தான் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற முடிவோடு பேச.
“ எதுக்கும் பெண் கிட்ட ஒரு வார்த்தை கேட்டே கல்யாணத்தை முடிவு பண்ணுங்க.” என்று பெண்ணின் விருப்பம் தான் முக்கியம் என்பது போல் சொல்ல.
பெண்ணை மதிக்கும் அந்த பேச்சு ஜெயந்தியின் அண்ணியைய் வெகுவாக கவர்ந்து விட.”உங்களுக்கு என்ன குறச்சல் . உங்கல கல்யாணம் செய்துக்க எங்க வீட்டு பொண்ணுல கொடுத்து வெச்சி இருக்கனும்.ிருந்தாலும் உங்க அப்பா அனுப்பிய போட்டோவை பத்து நாள் முன்னவே காட்டிட்டேன் அவளுக்கு பிடிச்ச தொட்டு தான் இந்த பெண் பார்க்கும் சடங்கே….” என்று சொன்னதும்.
“அப்போ என்ன பத்திய டீடையில் என் போட்டோவே காட்டிட்டிங்க . ரொம்ப சந்தோஷம். இனி வீட்டு பெரியவங்க நீங்க முடிவு செய்யுங்க.” என்று நேரத்தை பார்த்த மனிஷ்.
“மன்னிச்சிக்குங்க ஒரு மீட்டிங்குக்கு தான் இங்கு வந்ததே….வந்த இடத்தில் என் வாழ்க்கை துனையையும் சேர்த்து பார்த்துட்டேன்.” என்று செல்லம்மாவை பார்த்துக் கொண்டே சொன்னவன்.
அனைவரையும் பார்த்து கைய் கூப்பி “அப்போ நான் கிளம்புறேன்.” என்று விடை பெற்றவன்.
செல்லம்மா, சுகனை கடக்கும் போது…. “எனக்கு வைத்த ஆப்பை உங்களுக்கே எப்படி திருப்பினேன் பார்த்தியா….?”என்றே சொல்லோடு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு அதனால் தவிக்குது பார் செல்லா பொண்ணு
திருடனுக்கு தேள் கொட்டின கதையாகிட்டு போயிட்டான்
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
செல்லம்மா மனீஷை அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டீயே இனி படப்போறது நீ தானே.
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
ha haaaaaaaaa superr aappuuuuuuuuuuuuuu
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
Ha....ha.... ஒரே நிமிடத்தில் செல்லத்தின் திட்டம் என்ன என்று அறிந்துக் கொண்டான்...
பாவம் செல்லா....அவள் திட்டத்தை வைத்தே அவளை கார்னர் பண்ணிட்டான்...:cautious:
எல்லா நேரமும் அவனே ஜெயிப்பானா என்ன...?
செல்லத்துக்கும் ஒரு நேரம் வரும் .....:cool:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yaru kitta summa senjuruvom illa Manisha kokka nu avaru ippadi mind voice la sollittu phoga ?Namma chellamma vo ??‍♀ unnai solli kutrum illla ennai solli kutrum illai kalam seidha Kolamadaa nu mind voice phada ippadi adhirchiya nikkureye Enna ma panna phora???‍♀ Nice ud viji????but kutti kutti ud pa?it’s ok?
 




sumiram

மண்டலாதிபதி
Joined
Jan 25, 2018
Messages
422
Reaction score
772
Location
doha
Chellamma nee potta thittam ippadi oothikiche.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top