• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Vetriyaa tholviyaa chapter 8 is below. Please read and post ur views.

அத்தியாயம்---8
அந்த மீட்டிங்கில் தங்கத்தின் இறக்குமதி போன ஆண்டோடு இன்றைய ஆண்டு குறைந்து இருப்பதுக்கு உண்டான காரணத்தில் இருந்து, விற்பனை குறைந்ததில் ஜி.எஸ்.டி வரி முக்கிய பங்கு வகித்து இருப்பது, மற்றும் தற்போதைய ஆபரண வடிவமைப்பு என்று பல தரப்பட்ட பிரச்சனை பேசிக் கொண்டு இருந்தாலும், அந்த மீட்டிங்கில் இடம் பெற்று இருந்த மூன்று பேரின் காதில் அதை பற்றி ஒன்று கூட விழாது அவர் அவர் எண்ணத்தில் மூழ்கி இருந்தனர்.
மனிஷ் என்ன தான் அவர்களிடம் சவாலாய் பேசி விட்டு வந்தாலும் மனதில் இப்படி ஏமாற்றி விட்டாளே….இதற்க்கு கண்டிப்பாக பதில் அடி கொடுக்காது இருக்க கூடாது.
என்னை என்ன சொம்பையன் என்று நினைத்து விட்டாளா…..? முதலில் பெண் மாறியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தாலும் சுகன் ஜெயந்தி பார்வையில் இருந்து ஓ.ஓ கதை இப்படி போகுதா….? என்று அப்போதே ஒரு முடிவு எடுத்தவனாய் அடுத்த கட்ட நாடகத்துக்கு அச்சாரம் போட்டு விட்டாலும் இதோடு விட அவனுக்கு மனது ஒப்பவில்லை.
சஞ்சய், மீனலோச்சனியை வைத்து படம் எடுத்தது. சஞ்சயை ஒரு மிரட்டு மிரட்ட தான். மத்த படி அதற்க்கு அடுத்து போகும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை. அதுவும் சஞ்சயின் உடல் நிலை பற்றி கேட்டதில் மனது குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் துடிக்கவும் செய்தது.
ஏன் நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கலாம் என்று கூட நினைத்திருந்தான். ஆனால் இப்போது தான் போய் பார்த்தால் இன்னும் அவன் உடல் நிலை பாதிக்குமோ என்று அந்த எண்ணத்தை விட்டது மட்டும் அல்லாது அவன் மீது போட்ட கேசை கூட வாபஸ் வாங்க என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்க என்று கொல்கத்தா வரும் அன்று தான் தன் வக்கிலிடம் பேசி விட்டு வந்திருந்தான்.
சஞ்சய் தரப்பில் இருந்து அதுவும் அவன் தங்கையிடம் இருந்து இப்படி ஒரு நடவடிக்கையைய் அவன் சத்தியமாக எதிர் பார்க்கவில்லை.
திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை நிழல் வடிவத்திலேயே என்னை மாற்றியவளிடம் இருந்து. சே...என்று தலை உதர.
“என்ன மனிஷ் உடம்பு சரியில்லையா…..?” என்று அவன் தோள் பற்றி கேட்ட சுக்ரலாலை பார்த்து புன்னகையுடன். “இல்லை அங்கிள்.” என்று அவரிடம் பதில் அளித்தாலும் எதிரில் குசு குசு என்று சுகனிடம் பேசிக் கொண்டு இருந்த செல்லம்மாவிடமே பார்வை இடம் பெற்று இருக்க.
அதை பார்த்த சுகரலாலுக்கு தான் பி. பி எகிறியது. சுகரலால் தான் மனிஷின் குரு. அப்படி தான் அவர் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு திரிகிறார். பாம்பாயில் மனிஷ் வீட்டு முன் கடை வைத்திருந்தவர் தான் இந்த சுக்ரலால்.
மனிஷை பார்த்த உடன் தெரிந்து விட்டது பையன் கெட்டிக்காரன் என்று. மூன்றும் பெண்ணாய் வைத்திருக்கும் சுக்ரலாலுக்கு கடைக்கு ஒரு நம்பகமானவன் தேவை என்ற போது தான் மனிஷ் கண்ணில் பட்டது.
கடை தேவைக்கு மட்டுமே தன் தொழிலை பற்றி அனைத்தும் கற்றுக் கொடுத்தது. ஆனால் மனிஷோ குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாய் அதில் உள்ள நெளிவு ,சுளிவு சில வற்றை அவருக்கே கற்றுக் கொடுக்க.
அய்யோ இவன் நமக்கே வினையாக வந்து விடுவானோ...என்று அவர் முழிப்பதற்க்குள் சென்னையில் தான் ஒரு கடை திறப்பதாக அழைப்பிதழ் நீட்ட.
தன் கடைக்கு இழுக்கும் யோசனையைய் கைய் விட்டவர். தன் குடும்பத்துக்குள் இழுக்கும் முயற்ச்சியில் இறங்கினார். தன் முதல் மகள் திருமணம் முடிந்த நிலையில் தன் இரண்டாம் மகளுக்கு மாப்பிள்ளையாக்க லேசுபாசாக தன் எண்ணத்தை மறைமுகமாக அவனிடம் தெரியப்படுத்த.
அதை கண்டும் காணாது போல அவன் பேச்சில்...தன் இரண்டாம் மகளை அவனுக்கு பிடிக்கவில்லையோ….என்று நினைக்கும் போது தான் நல்ல இடத்து சம்மந்தம் ஒன்று தானே வலிய வந்தது.
சரி மனிஷை மூன்றாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையாக்கி விடலாம். எங்கு போக போகிறான் நம்ப பையன் தானே என்ற எண்ணத்தில் தான் மாப்பிள்ளை இருக்கும் இடமான சென்னையில் தன் இரண்டாம் மகளுக்கு திருமணத்தை வைத்தார்.
தன் மனைவியோடு மனிஷ் வீட்டுல் இருக்கும் சமயம் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்தவர்.“குடும்பத்தோடு வர வேண்டும்.” என்று சொன்னதற்க்கு அழைப்பிதழை எடுத்து பார்த்த மனிஷ்.
“சாரி அங்கிள் அன்னிக்கி நான் சென்னையில் இருக்க மாட்டேன். அப்பா கண்டிப்பாக வருவார்.” என்று வாக்குறுத்தி கொடுத்து விட்டு தன் தந்தையைய் பார்க்க.
மகனின் பார்வையைய் புரிந்துக் கொண்ட சாருகேஷ் சுக்ரலாலை பார்த்து. “ நான் கண்டிப்பா வருவேன் சார்.” என்றதுக்கு வெளியில் சிரித்தாலும், மனதுள் நீ வந்தா என்ன வரலேன்னா என்ன.
உன் பையன் வந்தா என் மூன்றாம் பெண்ணின் அழகை பார்ப்பான் பிறகு சம்மந்தம் பேசலாம் என்று பார்த்தால் இப்படியாகி விட்டதே என்று மன வருத்ததோடு தான் சென்றார்.
திருமணத்துக்கு வந்த சாருகேஷ் வெங்கட பூபதியிடம் அவர் பேத்தியைய் பெண் கேட்டதை பார்த்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
மனிஷ் இந்த நிலைக்கு வருவதற்க்கு காரணம் நான். இவர் கண்ணுக்கு என் மகள் எல்லாம் தெரியலையா…..? இவர்களோடு உயரத்தில் இருக்கும் பாராம்பரிய தங்க நகை மாளிகை குடும்பம் தான் கண்ணுக்கு தெரிகிறதோ...என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் வெங்கடபூபதி சாருகேஷை அவமானப்படுத்தியது.
இந்த சந்தர்ப்பத்தை தான் பயன் படுத்திக் கொள்ள வேன்டும் என்று திட்டம் மிட்ட சுக்ரலால். அங்கு திருமண வைபோகத்தை வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பவனின் காதில் ஏதோ ஓதி பாக்கெட்டில் பணமும் திணிக்க.
அங்கு நடந்தவைகளை அழகாக வீடியோ எடுத்து சுக்ரலாலிடம் கொடுத்தான். மனிஷ் ஊரில் இருந்து வந்ததும்.
மன்னிப்பு வேண்டலுடன் “சாரி மனிஷ் எங்க வீட்டு விசேஷத்துக்கு வந்து உங்க அப்பாவுக்கு இவ்வளவு பெரிய அவமானம் வந்ததை நினச்சா எனக்கு வருத்தமா இருக்கு.” என்று நீலி கண்ணீர் வடிக்க.
அவர் எதிர் பார்த்த மாதிரியே… “என்ன அங்கிள் அப்பாவுக்கு அவமாரியாதையா…..?” என்று புருவம் மேலிட கேட்டவனிடம்.
தன் பதிவை காமிக்க. அதை பார்த்ததும் மனிஷுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
பெண் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் அதை நாசுக்காக தானே சொல்ல வேண்டும். இத்தனை பேர் இருக்கும் ஒரு இடத்தில் தன் தந்தை அவமதிக்க பட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது போனது.
அப்போதே அவன் முடிவு செய்து விட்டான். அவர்களின் குடும்ப பாராம்பரியத்தை சீர் குலைப்பது என்று.
முதலில் அந்த பெண்ணையே...என்று யோசித்தவன். பின் சீ. சீ தான் நினைத்ததுக்கு தன்னையே திட்டிக் கொண்டான்.
அவன் எப்போதும் குடும்ப பெண்களிடம் மரியாதயாக தான் பழகுவான். நகை வியாபாரத்தில் இருப்பதால் பெரிய மனிதர்கள் தங்கள் வீட்டு பெண்களோடு தான் வருவார்கள்.
வருமுன் இவனிடம் சொல்லி விட்டால் அந்த சமயம் அவர்கள் எந்த கடைக்கு வருகிறார்களோ...அந்த கடையில் இருக்கும் படி பார்த்துக் கொள்வான்.
வரும் பெண்களிடம் அவ்வளவு மரியாதையாக நடந்துக் கொள்வான். ஏன் ஒரு சில சமயம் அந்த பெரிய மனிதர்கள் தன் வீட்டு பெண்களை கடையில் விட்டு விட்டு “ நீங்கள் தேர்வு செய்து வைங்க. எனக்கு வேலை இருக்கு.” என்று அவர்களிடம் சொல்லியதோடு மனிஷிடமும் .
“பார்த்துக்கோ மனிஷ்.” என்று அவனின் பொறுப்பில் விட்டு விட்டும் செல்வார்கள். அதனால் தன் பழிவாங்களுக்கு வீட்டு பெண் வேண்டாம் என்று தான் சஞ்சயைய் தேர்ந்தெடுத்தது.
ஆனால் அந்த பெண் தனக்கு கொடுத்தது நினைத்தால் மனது ஆறவில்லை. ஒரு பக்கம் வெட்டி சாய்க்க ஆத்திரம் வந்தது என்றால் ….
மறுப்பக்கம் அவளை நானா….? இரு தலை கொள்ளி போல் அள்ளாடிக் கொண்டு மீட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது செல்லம்மாவையே பார்த்திருக்க.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice update.. patha vachathu sukralal a.. namakku kidakathathu yarukkum kidaikka kudathunu ninaikirar pola.. kadavulin mudivai matra mudiyathunu ippa purinjukitu irupar..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
O, appo Sukralal thaan villanaa, Viji dear?
Periya manushanaga irunthu kondu Intha Sukralalukku yen ivvalavu getta ennam?
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ஐயோ செல்லம்மா சும்மா இருக்காமல் மனிஷை இப்படி வெறுப்பைத்திவிட்டாரே,மனிஷ் என்னென்னவோ எல்லாம் யோசிக்கின்றாரே.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top