• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VNE in Maha's Pov

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
@Bharathi Senthil Selvan நீங்கள் கேட்டு கொண்டதன் படி வீணையடி நீ எனக்கு மகாவின் பார்வையில் கவிதை வடிவில்.. தாமதத்திற்கு மன்னிக்கவும் ??

"கைதலம் பற்ற கனா கண்டேன்
தோழி நான் கைதலம் பற்ற கனா கண்டேன்..
கனவில் நாரணனை போல் வரன் வருவான் என்ற எனக்கு
கண்முன்னே கள்வன் அவன் உடலுரச கண்டேன்..
எள்ளவும் தயக்கமில்லை எள்ளலுடன் மிர்ச்சி என்றான்..
கோதையின் கோபம் கொப்பளிக்க பொறுக்கி என்றேன்..
நாளை என்னுள் பொறுக்கி ரத்தினம் எடுக்க போகும் என்னவன் என்றறியாமல்..


மீண்டும் அவன் ஏன்‌ பேதை மனதினை தீண்டவா ? யாரவன்?
அங்கங்களின் அழகை உரைத்து
அடங்காத கோபத்தை கொடுத்தவன்..
இந்திரனோ இமயவனோ?
இயம்ப இயலவில்லை..
மனம் கவர் கள்ளன் என்றறியாமல் ..
கன்னத்தில் முத்திரை பதித்தேன்
காலணிகளால்..


கடங்காரன் தானவன் அறியவில்லை அப்போது
களவிடுவான் நாளை என்று புரியவில்லை அப்பொழுது..
அம்பென வந்தான் விஜயன்…
அம்பலத்தில் மிதந்தந்தான் என் விழி தீண்டி..
தமயனின் தடுமாற்றம் தானறியாமல்
தலை கொடுத்தேன் சிங்கத்தை வரவேற்று.


கானத்தில் நெக்குருகி கண்ணனை அழைத்தேன்..
கண்ணனும் வந்தான் இந்த மாயவன் வடிவத்தில்..
கல்லுக்குள் ஈரமுண்டோ..
அரக்கனுக்கும் இசை ஞானமுண்டோ..
மயங்கினான் குரலழகில்
மறக்குமோ அவன் விழிமூடல்..


கள்வனின் காதலி ஆவேன் என
கணபொழுதும் கருதவில்லை..
கலியின் களியாட்டத்தில்..
தலைக்குப்பிற விழுந்தேன் தலைகுப்பாவில் அவனுடன்
கடத்தி வந்தான் கள்வனவன்..


விழி நீர் விலையாய் கேட்டான்
வீணான அவா என்றேன்..
குடும்பத்தை பந்தாடினான்
குடுமி என்னிடம் என்றான்..
யாரவன் ? ஏன் இவன்???
கேள்வியின் நாயகன்..
கேண்மையை கையிலெடுத்தேன்.
கள்ளுண்ட வண்டென எண்ணினேன்..
கண்ணியம் எனக்கும் உண்டென காட்டினான்.
குரலில் கட்டுண்டானாம்..
கைபேசி என் கை சேர‌ கனவு கண்டான்..


பூஞ்சுருளால் பனி மூட்டம் அறை எங்கும்
பூம்பாவை மனம் பதற
ஏன் என்றேன் மருத்துவராய்
எட்டி நில்லென எச்சரித்தான்..
எட்டி நின்றால் எள்ளவும் அது நானல்லவே..
எனை அறியாமல் சக்கிர வியூக்துக்குள் சென்றேன்..
எமன் வரவேற்ற அபிமன்யூ போல்..
எமனில்லை என்னவன்….


அருகாமை அனல்மூட்ட
அணு அளவும் யோசிக்கவில்லை
அணிமணிகளுடன் கிளம்பிவிட்டான் கானகத்திற்கு..
அன்னாரின் சீதை நான் தான் பின்னாளில் என்றறியாமல் முரண்டடித்தேன் அவனுடன் செல்ல…
யாரவன் கனா கண்ட நாரணனோ நரஹரியோ??


இயற்கை யோடு ஒன்றினோம் அவன்
இயற்கையை இயம்பினான் பொய் கலவாமல்..
காதல் பொய்யாம் கல்யாணம் கண்கட்டாம்.
கருத்து தான் அவனிடம்..
காதலுக்காக வீதி உலா வருவாய் என்றேன்
நான் என்ன பிற்காலம் அறியும் ஞானியா??


சிறுக சிறுக நெருங்கினான் மனதில்..
ராவணனும் ராகம் மீட்டுவான் என்றறிந்ததேன்
பல மலர் கண்ட வண்டவன்‌ ஆயினும்
பரவசத்துடன் பகடி புரிந்தேனே ஏன்…
நக்கீரனாய் ஏன் மாறவில்லை
நங்கை நான்..
என்னில் மாற்றம் நான் அறியாமலே..
என்னவனோ யாரறிவார்?


சில பல பேச்சுக்கள்
சில பல சண்டைகள்..
சிசுவின் உயிர் எங்களை புதுபிக்குமென
சின்ன எண்ணமறியாமல் கண்டோம் ஈருயிரை..
தலைவன் துணையுடன்‌ காமனை வெல்வர் நானோ
தலைவன் துணையுடன் கடவுளாய் நின்றேன் குழந்தையுடன் அவன் விழிகளுக்கு…
நாமகரணம் சூட்ட சொன்னால்
நாரணனை எண்ணி கானா காணும் கோதையெனை கூப்பிட்டான்..
மஹா வேங்கடலக்ஷ்மி
மஹா வேங்கடலக்ஷ்மி
மஹா வேங்கடலக்ஷ்மி!!!! என
புது மலரவளின் செவியில்..


மௌனம் மௌனம் மௌனம்
கொன்று விடேன் இச்சூழலை..
மகவின் வருகைக்காக மகாவுக்கு
மனமுவந்து பரிசளித்தான்..
நீர்மூழ்கி கப்பலானால்..
நீண்ட நொடி தாமதமின்றி தாய்மடியென..
நீந்தினேன் மூச்சடக்கி
மூழ்கினேன் என துடித்தான்
பாசாங்கு செய்ய போய்
பரிசளித்தான் முத்தத்தை
அழுத்தமாக ஆழமாக
வன்மையாக வன்மையிலும் மென்மையாக…
அமுதுண்ணும் ராட்சசன்..
காதல் சொன்னான்..
கள்ளமில்லை என்றான்…
ஏனடா குருதியில் காதல் குழல் செலுத்தினாய்??
அவநூதி நான் என்றான்..
காதல் பார்வை மறைக்க காந்தாரி ஆனாய் என்றான்..
பிச்சியவள் அறியவில்லை..
இது காதலா???


கானகம் கடந்து..கடன் தனை கழித்து..
கிரகபிரவேசம் செய்தேன்..என்னவனும் என்னுள் பிரவேசம் செய்ததறியாமல் ..
ஏனோ அவனை பிறர் நோவது வலிக்கிறது..
ஏனோ சீறாட்டியவளின் பேச்சு கசக்கிறது
ஏனோ சகோதரனின் கோபம் கனக்கிறது??
மாயமோ மந்திரமோ நானறியேன்
மாயவனின் லீலை தான் துவங்கியது..
மாதுவோடு மது உண்டவன் என்ற தலைப்பில்..
எந்தையின் இயக்கம் தவறிய இதயத்துக்கு தெரியுமா?
என்னவன் எனக்குள்ளிருக்கிறான் என?
ஏன் என்றேன் ? நான் அப்படியா என்றான்..
அண்ணனின் முன்னிலையில் அம்மனிதனின் முகத்திரை கிழித்தான்.
காதலுக்கு காத்துள்ளேன்‌ என்றான்..


துளி துளியாய் காதல் சேர்த்து..
மதகுடைத்த வெள்ளமாய் பிரவாகமெடுத்தான் என்னுள்..
கைகோர்த்து நடந்தோம்..
கண்கள் எல்லாம் எங்களிடம்..
கண்டாள் சூர்ப்பனகை..
கதை படித்தாள் என்னவனை தட்டி செல்வேன் என..
கண்டிருக்க வேண்டுமோ அன்றே??
கண்மறைத்த காதலை நோவதா?
காலமறந்த முத்தத்தை நோவதா?.
கண்மூடி ரசித்த கனா சிதறியதே..
கயவனின் கைவினை சதி செய்ததே..
பதட்டம்.. வாழ்வோமா வீழ்வோமா
எது வாயினும் உன்னுடனே..
கை சேர்வோம் விரைவில் என்று
தலை சரிய வைத்தான்…
என்னவனே என் எண்ணத்தை இழந்தேனா?


புலனம் வாயிலாக புயல்லொன்று வீசியது என் வாழ்வில்..
வார்த்தைகளில் கேட்ட ராஸலீலை
விரிந்ததே கண்முன்னே..
முத்தமிட்டவன் மயக்கத்தில்..
மதுவென இனித்தவன்
மதுவாகிய மாதுவோடு…
கோடி கோடி ப்ரளயம்.. தாயிட்ட
கோடு தாண்டிய சீதையா நான்???
துக்கப்பந்து தொண்டை அடிக்க
சரியாக அம்பெய்தினான் விஜயனவன்
கரம் பிடிப்பதை தவிர்க்க
படம் பிடித்ததை தவிர்பேன் என..
தராசில் என்னவனின் காதல் மானம்..


கண்ணீர் ஆழியாக..
கண்ணனவன் கூறானோ நானில்லையென??
கண்ணீர் கண்டதும் கண்டானே
கண்டவளுடன் சல்லாபிக்கும் நிமிடங்களை..
கனம் கூடியதோ என் மன்னவா?
கண நேரத்தில் மாலை நிச்சயமென்றாய்..
வேட்டை நாய் ஆனாய்..
வேட்டையாடினாய் விஜயனை உடுப்போடு..
வேண்டுமா இத்திருமணம்?
வேண்டுதலை வெட்டி சாய்த்தாய்


கர்மா தான் விடுமோ?
கைபிடித்தேன் மாறா காதலுடன்..
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்த என் நம்பியை...
கனலாக உடல் தகிக்கிறது உன் அருகாமையால்
கனவாக கூடாத அக்காணொளியும்
கயவனும் குணமானான்..
கண்களுக்கு தெரியாமல் என்னவனில் மாற்றம்..
கவலை மறக்க முடியவில்லை
குல்பி என கிரக்கமாய் அழைத்த என் பாவா
குதுகலிக்க முடியவில்லை உன் பாவத்தால்..


நூறாம் நாள் .. நுகர்ந்து உன்னடி சேர‌ எண்ணி..
நுண்ணிய எண்ணங்களோடு பரிசை பத்திரப்படுத்தினேன்..
நுகாரமல் நுகர்ந்து கூறினான் நண்பனவன்
நீ இருக்கிறாய் அவள் அருகிலென..
நீயா இருக்காது..இருக்காது ...கைபேசியில் கூறிய வார்த்தைகள் கைகொடுக்க வில்லையே கணவா..
கனவாக கூடாத அச்சொர்கவாசல் திறப்பு..
கண நேரத்தில் பூமித்தாயின் மகளாகேனோ??
வெறுத்து வாழ்வு..
வெற்று காகிதமா என் காதல்???
உலகமே மாயையோ
உணர்வு தான் தேவையோ…
வேண்டாமென துறந்தேன்..


நாணயத்தில் உன் பக்க
நாணயத்தை காண தவறியதேனோ?
நாயாய் தேடி அலைந்தாய்
நான் சிந்திய சொற்கள் பலித்ததோ?
நடைபிணமாய் நாம்...
நங்கூரம் இட்ட கப்பலாய்
நடுங்கி ஒடுங்கி வேலவனுடன் நான்
கண்டான் சீதையை..
அனுமனோ இன்று அவள்..
அறைந்தேன் அவளை என்
அறியாமை அறைய தவறி..
நாண்மாட கூடலில் உனை கைதியாய் நிற்கவைத்தேன் பாவி நான்...
நவில்வதை நொடி பொறுத்திருந்தால்
இந்நிலையில் நிற்க வேண்டாமே..


நாடி வந்த என்னை
நாலு வார்த்தை கேட்டாலும் பொறுத்திருப்பேன்..
கண்ணீர் சிந்தினாய் என் விழியினுள் குருதியின் பெறுக்கெடுப்பு..
புரிந்து கொண்டோம்.. என்னை
புசித்து உண்பது எப்போது..
கன்னியாய் நான்
கணவனாய் களவாட போவது எப்போது??
ஊடலும் காதலுக்கு வலு..
தீண்டல் தான் காமனின் வாயிலுக்கு வழி
விழி மூடி விளிக்கு ஏங்கும்
பிரியா முத்ததுக்கு விளிக்கிறேன் வா…
மாரி தான் துணை செய்து மாரி தனை பொழிந்தாளோ?
விஸ்வாமித்திரரின் தவம் கலைய..
மேனகையின் மென்னுடலை மழை நனைக்க..
போதை தான் நானுக்கு
பேதை நான் உன் கரங்களில்..
வீணையடா நான் உனக்கு…
மீட்டிவிடு எனக்கும் சேர்த்து….."
 




Last edited:

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Wow wow wow
மஹா மீதான ஷ்யாமின் காதலைவிட
VNE மீதான உன் காதல் வியக்க வைக்கிறது பெண்ணே
கதையின் ஓரிடமும் விடவில்லை நீ
என் மனம் கொள்ளை கொள்ளவும் தவறவில்லை நீ
அழகான எழுத்து
அற்புதமான நடை
அள்ளியது நெஞ்சை
ஆஹா என்று சொல்ல வைத்தது
உன் கவிதை
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் அப்புகுட்டி,
ஒரே கவிதையில் full VNE Story யையும் சொல்லி வார்த்தையிலே வர்ணஜாலம் காட்டிட்ட அப்பு....
ரொம்ப சந்தோஷம் அப்புகுட்டி...
இப்படியே நீ கவிதைகள் நிறைய எழுதனும்... நாங்க ஆசை தீர படிக்கனும்...இதெல்லாம் நடக்கனும்னு அந்த ஆண்டவனிடம் வேண்டிக்கிறேன் பா...
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
@Aparna அப்புமா பராட்ட வார்த்தைகள் வரவில்லை
நாணயத்தில் உன் பக்க
நாணயத்தை காண தவறியதேனோ?
நாயாய் தேடி அலைந்தாய்
நான் சிந்திய சொற்கள் பலித்ததோ?
நடைபிணமாய் நாம்... மஹா ஷ்யாமை புரிந்த வரிகள் வாழ்த்துகள் கவிதை கொடுத்த கவிதையானிக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top