அத்தியாயம் 7
அவன் வெளியேறியதுமே தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் அமுதினியனைத் தீர்க்கமானப் பார்வையுடன் ஏறிட்டு,
“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை! நேரடியாக விஷயத்துக்கு வர்றேன். நீங்க எதுக்காக என்னைக் கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்றீயன்னுத் தெரிஞ்சிக்கலாமா?”என்று அவனிடம் கேட்டிருந்தாள் வேதவள்ளி.
அதில் தானும் அவளை அழுத்தமாகப் பார்த்து,”நானும் உங்ககிட்ட நேரடியாகவே எல்லாத்தையும் சொல்றேன்! எனக்கு ஒரு துணை வேணும்! அதுவும் என்னோட மனநிலையில் இருக்கிற ஒரு துணை எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும். அதே மாதிரி நானும் உனக்கு வாழ்க்கை முழுக்கத் துணையாக இருப்பேன்! இனி வரும் காலங்களில் என்னோட காதல் முழுவதையும் உன்னோட மட்டுமே பகிர்ந்துக்க ஆசைப்பட்றேன்! இதை எல்லாத்தையும் சேர்த்து தான் நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்க விருப்பப்பட்றேன்! இனிமேலும் என்னோட இந்த உறுதி மாறாது!”என அவளுக்கு விளக்கம் கொடுத்தான் அமுதினியன்.
அதைக் கேட்டு விட்டு,”நீங்க சொல்வதும் நியாயமானக் காரணமாகத் தான் இருக்கு. ஆனாலும் என்னை ராசியானவ இல்லன்னு இந்த ஊரே பழிச்சுப் பேசிட்டு இருக்கு! அதைப் பத்தி உங்களுக்கு என்னக் கருத்து இருக்கு? அதைச் சொல்லுங்க”என வேதனையுடன் வினவியவளைத் தானும் கசந்த முறுவலுடன் நோக்கி,
“அப்போ நானும் ராசியில்லாதவன் தானே? ஏன்னா, என்னோட ராசியால் தானே எம்பொஞ்சாதியும் இறந்து போனாள்? இப்போ நீங்க தான் சொல்லனும். என்னை மாதிரியான ஒரு ராசிக் கெட்டவனைக் கட்டிக்க உங்களுக்குச் சம்மதமா?”என்றதுமே,
அவனைத் தன்னுடைய விழிகளை விரித்து ஆச்சரியம் அடைந்து போய்,
“நீங்களே உங்களை எதுக்கு ராசிக்கெட்டவன் அப்படின்னுச் சொல்லிட்டு இருக்கீய?”என்று தன்னுடைய உதடுகள் துடிக்க கேட்டாள் வேதவள்ளி.
“ஆமாம். ஊரார் எல்லாம் உங்களை ராசிக்கெட்டவள்ன்னுச் சொல்லும் போது உங்களை மாதிரியான சூழ்நிலையில் தானே நானும் இருக்கேன்! அப்போ நானும் ராசிக்கெட்டவன் தானே? அதான் சொன்னேன்ங்க”என்று அவளிடம் பதிலளித்த ஆடவனை விழிகள் பனிக்கப் பார்த்து,
“அப்போ உங்களுக்கு என்னைக் கட்டிக்கிறதில் எந்த தயக்கமும் இல்லையா? நான் இதை ஏன் கேட்கிறேன்னா…”எனத் தயக்கத்தின் காரணமாக மேலே பேசாமல் அவனைத் தடுமாற்றத்துடன் நோக்க,
உடனே,”நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுதுங்க! நீங்க என்னோட நண்பனோட பொஞ்சாதியாக இருந்தீங்க! ஆனால் இப்போ இல்லை! அந்த வாழ்க்கை உங்களுக்கு முடிஞ்சது! இப்போ என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க வேதவள்ளின்ற ஒரு பொண்ணு! நீங்க என்னை மாதிரியான ஒரு நிலையில் இருக்கீங்க! அதனால் என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என் கூட கடைசி வரைக்கும் வாழ்வீங்கன்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் உங்களைக் கட்டிக்க விருப்பப்பட்றேன்! மத்தபடி நீங்கச் சொல்லத் தயங்குற விஷயத்தைப் பத்தி நாம ரெண்டு பேருமே மறந்துடுவோம்! இனிமேல் நம்மளோட வாழ்க்கையை வாழ்வோம்! அவ்வளவு தான்!”என்று கூறியவனை மறுக்க மனம் வராததால்,
”சரிங்க. நான் உங்களைக் கட்டிக்கச் சம்மதிக்கிறேன்! நீங்க இதைப் பத்தி மேற்கொண்டு என் அண்ணேங் கிட்டே பேசிக்கோங்க!”எனத் தனக்கு இந்த திருமணத்தில் ஒப்புதல் அளித்து விட்டிருந்தாள் பெண்ணவள்.
அதைக் கேட்டவுடன்,”நீங்க உண்மையாகவா சொல்றீய வேதா?”என்றவனிடம்,
“ஆமாம்ங்க. நான் உண்மையாகத் தான் சொல்றேன்! நாமக் கல்யாணம் பண்ணிக்கலாம்”என்று வாக்குமூலம் கொடுத்தாள் வேதவள்ளி.
உடனே அவளிடம்,”அப்போ உங்க அண்ணன் கிட்டே நான் மேற்கொண்டுப் பேசுறதுக்கு அவரையும் உள்ளே வரச் சொல்லலாமா?”என்றிருந்தான் அமுதினியன்.
“ம்ம்ம். நானே போய் எங்கண்ணனை வரச் சொல்லவா?”எனக் கேட்கவும்,
“வேணாமுங்க. நான் ஆளனுப்பி விட்றேன்!”என்றவனோ,
தனது உதவியாளை அழைத்து வைரமணியைத் தேடி அவரை இங்கு வரச் சொல்லுமாறு அனுப்பி வைத்தான் அமுதினியன்.
அதற்குப் பிறகானச் சில நிமிடங்களிலேயே அந்த அறைக்குள் வந்து சேர்ந்து,
“என்ன எல்லாம் பேசியாச்சா?”என்று தன்னுடைய தங்கையைக் கூர்ந்து பார்த்துக் கேட்டிருந்தான் வைரமணி.
“பேசியாச்சு அண்ணா. எங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம்!”என்று அவனிடம் உறுதியாக கூறினாள் வேதவள்ளி.
அவளது அந்த தெளிவானப் பதிலைக் கேட்டதும் நிம்மதியுற்று,
“அப்போ நான் வீட்டில் இருக்கிற மத்தவங்க கிட்டே பேசிட்டு அதுக்கப்புறம் உங்களைப் பார்க்க வர்றேன்”என்றிருந்தான் வைரமணி.
“சரிங்க”என்றவனிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அகன்றுத் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் அண்ணனும், தங்கையும்.
அவர்களின் வருகையை அறிந்ததுமே அவர்கள் இளைப்பாறத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து விட்டு,
“நீங்க ரெண்டுப் பேரும் போன விஷயம் என்னாச்சு?”என்று அவர்கள் இருவரிடமும் வினவினர் வனக்கிளி மற்றும் இளவரசி.
“உடனே தனது தங்கையைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,
“எல்லாம் நல்லபடியாகத் தான் முடிஞ்சது!”என்று அவர்களிடம் அந்த இனிப்பானச் செய்தியை அறிவித்தான் வைரமணி.
அதைக் கேள்வியுற்றதும் ஆனந்தத்தில் திளைத்துப் போய் விட்டார்கள் அவனது தாயும், மனைவியும்.
“இப்போ தான் எங்களுக்கு மனசு இலேசாகி இருக்குத்தா! ரொம்பச் சந்தோஷம்!”எனத் தன்னுடைய மகளிடம் நெகிழ்ச்சியுடன் உரைத்தார் வனக்கிளி.
அவரைப் போலவே தானும்,”ஆமாம்த்தா. எனக்கும் இந்தச் செய்தியைக் கேட்டதுக்கு அப்பறமாகத் தான் நிம்மதியாக இருக்கு!”என்று குதூகலமாக கூறியிருந்தாள் இளவரசி.
அதில் தானும் மெலிதாகப் புன்னகைத்தாள் வேதவள்ளி.
“அப்போ நாம மேற்கொண்டுக் கல்யாணத்துக்கான வேலைகளைச் செய்யத் தொடங்கலாமா? அந்தப் பையனுக்கு ஏதாவது விருப்பம் இருக்கா? அதை உங்ககிட்ட சொன்னானா?”என்று மகனிடம் விசாரணை நடத்தினார் வனக்கிளி.
அதற்கு,“அப்படியெல்லாம் நாங்க ரொம்ப விவரமாகப் பேசிக்கலை. உங்க ரெண்டு பேர் கிட்டேயும் விஷயத்தைச் சொல்லிட்டு அதுக்கு அப்பறமாக எல்லாத்தையும் ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சோம். அதான்”என்றுரைத்தான் வைரமணி.
“ஓஹோ! சரிப்பா. நானும், மருமவளும் ஜோசியர் கிட்டே போய்ப் பொண்ணுப் பார்த்துப், பூ வைக்கிறதுக்கான நாளைக் குறிச்சிட்டு வந்துரட்டா?”எனக் கேட்டார் வனக்கிளி.
அதற்குப்,“அதுக்கு நீங்க யாரும் போக வேண்டாம். நானே ஜோசியரை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றேன். அவர் கிட்டே அப்போவே எல்லாத்தையும் தெளிவாக கேட்டுக்கிடுங்க”என்றுரைத்து விட்டான் வைரமணி.
அப்பொழுது வனக்கிளியின் குரலில் ஒரு படபடப்புடன் கூடிய சந்தோஷமும், நிறைவும் நிறைந்து வழிவதை அங்கேயிருந்த மற்ற மூவராலும் உணர முடிந்தது!
“ம்மா! நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் போயிருக்கீய! முதல்ல உங்களை ஆசுவாசப்படுத்திக்கோங்க”என்று தன்னுடைய தாய்க்கு அறிவுறுத்தினாள் வேதவள்ளி.
அதற்கு அவரோ,”உனக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுல்ல? அதான், என்னைக் கையிலேயே பிடிக்க முடியலை!”என்றவரிடம்,
“சரித்தா. ஆனாலும் தண்ணீரைக் குடிங்க முதல்ல”என அவரிடம் நீர்ச் செம்பைக் கொடுத்துக் குடிக்க வைத்தாள் அவரது மகள்.
நீரைப் பருகி விட்டு மகளைக் கனிந்த பார்வையுடன் நோக்கி,
“நான் இப்படி நடந்துக்கிறது உங்க மூனு பேருக்கும் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இந்தக் கல்யாணப் பேச்சு எவ்வளவு நிம்மதியைக் கொடுத்து இருக்குது தெரியுமா? அதை உங்களுக்குச் சொன்னால் புரியுமான்னுத் தெரியலை”என்று தழுதழுத்தார் வனக்கிளி.
உடனே அவரைத் தாவிக் கட்டிக் கொண்டு,
“ம்மா! நீங்க உங்களோட மகிழ்ச்சியைத் தாராளமாக எங்க முன்னாடி வெளிப்படுத்தலாம்!”எனக் கூறி அவரை நிதானப்படுத்தினாள் வேதவள்ளி.
அவரைப் போலவே தாங்களும் மிகவும் மகிழ்வுடன் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுத்தார்கள் வேதவள்ளி, வைரமணி மற்றும் இளவரசி.
ஆனால் தனது திருமணம் வேதவள்ளியுடன் நிச்சயமாகி விட்டதை இப்போதைக்கு யாரிடமும் அறிவிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான் அமுதினியன்.
சிவமலையின் பெற்றோருடனும் தன்னுடைய பந்தத்தை உடைத்து விட்டிருந்ததால் அவர்களிடமும் இதைக் கூற வேண்டியதில்லை என்று உணர்ந்து கொண்டு இந்தத் திருமணத்திற்கான அனைத்து ஆயத்தங்களையும், தானே எடுத்துச் செய்ய உறுதிப் பூண்டு விட்டான்.
அதேபோல் தங்களது அன்னைப் பூ வைப்பதற்கான நாளைக் குறிக்க ஜோசியரை வீட்டிற்கு வரவழைத்துப் பேசப் போவதை அவனிடம் தெரியப்படுத்தினான் வைரமணி.
அதைக் கேட்டு விட்டு,”அப்படியா? அப்போ நானும் அங்கே இருக்கனுமா? இல்லைன்னா, நீங்களே பேசிக்கிறீங்களா?”என்று வினவினான் அமுதினியன்.
“உங்க வீட்டில் கல்யாணத்தைப் பத்திப் பேச நீங்க தானே இருக்கீங்க? உங்க கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிக், கலந்து பேசித் தானே முடிவுச் செய்றது தானே முறை? அதனால் நாள் குறிக்கும் போது நீங்களும் அங்கே இருந்தால் நல்லா இருக்கும்ன்னுத் தோணுது!”என்றவனிடம்,
“அதுவும் சரி தானுங்க. நானும் இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாத்திலேயும் முழு மனசாக கலந்துக்கனும்னு நினைக்கிறேன்”என்றான் தீர்க்கமாக.
அதில் தனக்கும் அவனைப் பற்றிய நல்லெண்ணம் ஒருபடி அதிகரித்து விடவே,
“சரிங்க. அப்போ ஜோசியரை வீட்டுக்கு வரச் சொல்லிட்டு உங்களுக்குச் சேதிச் சொல்லி அனுப்பி விட்றேன்”என்று அவனுக்கு உறுதி அளித்து விட்டிருந்தான் வைரமணி.
ஆனாலும் அவனிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசுவதற்காக அவனது முகத்தை தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்க்கவும்,
அதைப் புரிந்து கொண்டு,”நீங்க எங்கிட்ட வேற ஏதாவது சொல்லனுமா?”என்று தானே முன் வந்து அவனிடம் கேட்டிருந்தான் அமுதினியன்.
“உங்களுக்கு வேற யாரும் உறவுக்காரவங்க இருக்காங்களா இப்போ? அவங்க இந்தக் கல்யாணத்துக்கு வருவாங்களா?”என்று விசாரித்தான் வைரமணி.
“ம்ஹூம். இல்லைங்க. அப்படி எனக்கு எந்த உறவுக்காரவங்களும் எனக்குக் கிடையாது! இந்தக் கல்யாணத்தைப் பத்தின விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நீங்க எங்கிட்டேயே நேரடியாகப் பேசிக்கலாம்”என அவனுக்கு வாக்களித்து விடவும்,
“நான் இதைக் கேட்டதால் என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க! இது உங்க ரெண்டு பேருக்குமே இரண்டாவது கல்யாணம் தான்! அதனால் இதை நம்ம ஊரில் இருக்கிற நிறையப் பேர் இதுக்கு மறுப்புத் தெரிவிக்க வாய்ப்பு இருக்கு! ஏன்னா, தன்னோட முதல் துணையை இழந்ததுக்கு அப்பறமாக மறுமணம் செய்துக்கிறதைப் பத்தி யோசிக்கிறதே பாவம்ன்ற மாதிரியான மனநிலை இங்கே நிறையப் பேர் கிட்டே இருக்கு! அதனால் தான் இந்தக் கல்யாணம் நடந்து முடியிற வரைக்கும் நாம எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்துக், கவனமாகத் தான் ஒவ்வொரு செயலையும் செய்யனும்! அதான்”என்றதுமே,
“இதெல்லாம் எனக்கு நல்லாவே புரியுதுங்க! நீங்க இந்தளவுக்கு எனக்கு விவரமாகச் சொல்லிப் புரிய வைக்கனும்னு அவசியம் இல்லை! உண்மையைச் சொல்லப் போனால் நானுமே இதை தான் விரும்புறேன்”என்று அவனிடம் தெரிவித்தான் அமுதினியன்.
“அப்போ சரிங்க. இந்தக் கல்யாணம் சம்பந்தமாக நாங்க எது செஞ்சாலும் அதில் உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அதைக் கண்டிப்பாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்க!”என அவனுக்கு அறிவுறுத்தி விட்டான் வைரமணி.
– தொடரும்






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!