பிறவியிலேயே சிலருக்கு அதிர்ஷ்ட அமைப்புகள் அமைந்திருக்கும். சிலர் தங்கள் உழைப்பினாலும், தெய்வ வழிபாட்டினாலும், சாமர்த்தியத்தினாலும் அதிர்ஷ்டகரமான நல்வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். இந்த வகையில் ,ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தையும் மேன்மேலும் பெருகச் செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும். நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆற்றல் உண்டு. அவற்றில் தங்கள் பிறந்த எண்ணுக்கேற்ற அதிர்ஷ்டக்கல்லை வாங்கி, தங்கள் உடலில் படிம்படி அணிந்துகொண்டால்,அந்தக் கற்களின் ஆற்றல் உடலில் பாய்ந்து, உடல் நலக் குறைபாடுகளைப் போக்குவதோடன்றி, அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித் தருகிறது