• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-35 [Final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
IMG_20180922_111813.jpgIMG_20180922_111829.jpg

"அம்மா!!!!!!" என்ற அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அனைவரும் ராதாகிருஷ்ணன் தன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்து வீழ்ந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றனர்.


அவனுடைய மார்பில் இருந்து குருதி வடிந்தோட கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து உயிர் பிரிந்து கொண்டிருந்தது.


ராதாகிருஷ்ணனின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா சுவரில் பட்டு வீழ்ந்தது.


அதிர்ச்சியில் இருந்து மீண்டு கொண்ட ஆதித்யா மெய்யப்பனை திரும்பி பார்க்க
"கடைசியாக திருந்துறதுக்கு இவனுக்கு ஒரு வாய்ப்பாக தான் இந்த சந்தர்ப்பத்தை கொடுத்தேன். ஆனா இவனெல்லாம் திருந்ததாத ஜென்மம்னு நிரூபிச்சுட்டான்.
கொஞ்சம் விட்டு இருந்தா உங்கள்ள ஒருத்தர கொன்னு இருப்பான். அவன் ட்ரிக்கரை அழுத்த முதலே அவனை சுட்டுருப்பேன் டைமிங் மிஸ் ஆகிடுச்சு. பட் அவன்கிட்ட இருந்து உங்க எல்லாரையும் காப்பாத்திட்டேனே அது போதும்" என்று மெய்யப்பன் கூறவும்


"ஆனால் இது மீடியாவுக்கோ இல்லனா வேற யாருக்காவது தெரிஞ்சா உங்க வேலையே போய்டுமே அங்கிள்??" என்று கவலையுடன் ஆதித்யா கேட்டான்.


அவனைப் பார்த்து சிரித்த மெய்யப்பன்
"கவர்மெண்ட ஏமாத்துற இவனுங்களே இவ்வளவு ட்ரிக்ஸ் யூஸ் பண்ணும் போது நாங்க யூஸ் பண்ண மாட்டோமா??" என்று கூறியவாறே ராதாகிருஷ்ணனின் உடலின் அருகில் நின்ற போலீஸைப் பார்க்க


"யெஸ் ஸார்" என்று கூறிய அந்த போலீஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கையில் இருந்த துப்பாக்கியை அவனுடைய கையில் இருந்தவாறே வைத்து சுற்றி இருந்த பகுதிகளில் சுட்டு விட்டு இறுதியாக தன் கையிலும் சுட்டு கொண்டார்.


மெய்யப்பன் அருகில் நின்ற இன்ஸ்பெக்டர்
"இல்லீகல் பிஸ்னஸ் நடக்குதுனு எங்களுக்கு நியூஸ் வரவும் ரைட் வந்தோம். அப்போ எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் எங்க போலீஸை தாக்கிட்டு தப்பி ஓடப் பார்த்தாரு. வேற வழி இல்லாம கமிஷ்னர் அவரை சுட்டுட்டாரு" என்று கூற


"இது தான் வெளி உலகத்துக்கு போக போற நியூஸ். சோ யூ டோன்ட் வொர்ரி. நீங்க எல்லாரும் மீடியாக்கள் வர்றதுக்குள்ள முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க. நாங்க இதை பார்த்துக்குறோம்" என்று மெய்யப்பன் கூறவும் மயக்க நிலையில் இருந்த மித்ராவை சூர்யா தூக்கி கொள்ள ஏனையவர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறி சென்றனர்.


ஆதித்யாவின் காரில் வெண்பா ஏறிக் கொள்ள மித்ராவை அவள் மடி மீது படுக்க வைத்து விட்டு நிமிர்ந்த சூர்யா


"நீங்க முதல்ல மித்ராவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. நானும் மாதவும் மித்ராவோட வீட்டுக்கு போய் அவங்க அம்மாவை கூட்டிட்டு வரோம்" என்று விட்டு செல்ல போக


"சூர்யா அந்த சைட்ல வெண்பாவோட ஸ்கூட்டி நிற்குது. நீங்க அதையே எடுத்துட்டு போங்க" என்று ஆதித்யா கூறவும் சரியென்று விட்டு மாதவும், சூர்யாவும் கிளம்பினர்.


மித்ராவைப் பார்த்து கவலை கொண்ட வெண்பா ஆதித்யாவிடம்
"கொஞ்சம் பாஸ்ட்டா போங்க விக்ரம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று கூற கலக்கமாக இருந்த அவள் முகத்தைப் பார்க்க ஆதித்யாவிற்கும் வேதனையாகவே இருந்தது.


எதுவும் பேசாமல் காரை வேகமாக ஓட்டியவன் ஐந்து நிமிடங்களில் ஹாஸ்பிடலை வந்து அடைந்தான்.


ஹாஸ்பிடல் ஊழியர்கள்
அவசரமாக ஸ்ட்ரெச்சரை எடுத்து வந்து மித்ராவை உள்ளே அழைத்து சென்றனர்.


மித்ராவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வெண்பா அத்தனை நேரம் சேர்த்து வைத்திருந்த மொத்த சக்தியும் வடிந்து போக அப்படியே கால்கள் தொய்ந்து போக அமர்ந்தாள்.


அவளருகில் வந்த ஆதித்யா ஆறுதலாக அவளை தோளோடு அணைத்துக் கொள்ள அவளின் கவலை, பயம் எல்லாம் ஒன்று சேர கண்ணீராக அத்தனை உணர்வுகளையும் அவன் தோளில் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள்.


அவள் அழுது முடியும் வரை பொறுமையாக காத்திருந்தவன் அவள் முகம் நிமிர்த்தி


"இப்போ எதுக்கு அழுவுற?? அந்த ராதாகிருஷ்ணன் செத்துட்டான்னா?? ஏன் அவனைப் பிரிஞ்சு உன்னால இருக்க முடியலையா???" என்று சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க அவன் மார்பில் குத்தியவள்


"உங்களுக்கு எப்போவும் விளையாட்டு தான். நானே மித்ராவுக்கு என்ன ஆச்சோ?? ஏதாச்சோனு கவலையாக இருக்கேன். இந்த டைம்ல உங்களுக்கு காமெடியா??" என்று கேட்டு விட்டு முறைத்தவள்
பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக


"நீங்க..." என்று கேட்க தொடங்கும் போதே மித்ராவை சிகிச்சை பார்த்த வைத்தியர் வெளியே வர அவரருகில் விரைந்து சென்றாள்.


"டாக்டர் மித்ராவுக்கு என்ன ஆச்சு??? அவள் கண்ணு முழிச்சுட்டுளா?? அவளுக்கு ஒண்ணும் இல்லை தானே??" என்று பதட்டத்துடன் கேட்க


"நத்திங் டூ வொர்ரி. சீ இஸ் பேர்பக்ட்லி ஆல் ரைட். உடம்புல எனர்ஜி இல்லாமல் மயக்கமாகிட்டாங்க அவ்வளவு தான். ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. இன்னும் ஒரு வன் ஆர் டூ ஹவர்ல கான்சியஸ் ஆகிடுவாங்க. அதுக்கு அப்புறம் இன்னைக்கே நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்" என்று கூறி விட்டு செல்ல சந்தோஷம் கொண்ட வெண்பா ஆதித்யாவை கட்டி கொண்டாள்.


"இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு" என்று கூறியவள் எதிரில் பதட்டத்துடன் வந்த வித்யாவைப்
பார்த்ததும் ஆதித்யாவிடம் இருந்து விலகி அவரருகில் சென்றாள்.


வெண்பாவைப் பார்த்ததும் வித்யா
"மித்ரா எங்கமா?? அவளுக்கு ஒண்ணும் இல்லலே??" என்று உயிரை கண்ணில் தேக்கி கொண்டு கேட்க


"மித்ரா ரொம்ப நல்லா இருக்கா ஆன்டி. அவளுக்கு எதுவும் இல்லை. இப்போ மயக்கமா இருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்னு டாக்டரே சொல்லிட்டாரு. நீங்க கவலைபடாம இருந்தா போதும்" என்று கூறவும்
கையெடுத்து கும்பிட்டு கொண்டவர்


"நான் கும்பிடுற சாமி என்னை கை விடல. நான் இப்போவே என் பொண்ண பார்க்கணும்" என்று விட்டு மித்ரா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார்.


சூர்யாவும், மாதவும் சிறு சிறு காயங்களுடன் நின்று கொண்டு இருக்க அவர்களுக்கும் சிகிச்சை செய்து விடும் படி ஆதித்யா கூற அவர்களுக்கும் பெர்ஸ்ட் எய்ட் செய்து விடப்பட்டது.


எல்லாம் முடிந்து விட்டது என்ற திருப்தியில் ஆதித்யா அமர்ந்து கொண்டு கைகளை தலைக்கு வாகாக வைத்து கொண்டு சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள அவன் கைகளை யாரோ இழுத்து விடவும் கோபமாக எழுந்த ஆதித்யா


"எந்த எருமை இந்த வேலை பார்த்தது???" என்று நிமிர்ந்து பார்க்க கைகளை கட்டி கொண்டு அவனையே பார்த்து கொண்டு நின்ற வெண்பாவைப் பார்த்ததும் நெளிந்து கொண்டே சிரித்தான்.


"பல்லைக் காட்டுனது போதும். நான் கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் பதிலை சொல்லுங்க.நீங்க எப்படி பேக்டரிக்கு வந்தீங்க?? போலீஸ்க்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்??" என்று கேட்டவள்


ஆதித்யா ஏதோ கூற வரவும் அவனை கை காட்டி நிறுத்துமாறு கூறி விட்டு
"எல்லாத்துக்கும் முதல்ல மித்ரா மிஸ் ஆனது உங்களுக்கு எப்படி தெரியும்??" என்று கேட்க


"ஆமா அதானே!! உங்களுக்கு எப்படி தெரியும்??" என்று கேட்டுக் கொண்டே சூர்யாவும், மாதவும் வந்து நின்றனர்.


"ரவுண்டு கட்டிட்டாங்க. இனி விட மாட்டாங்க" என்று முணுமுணுத்துக் கொண்ட ஆதித்யா


"சரி எல்லாத்தையும் சொல்றேன். முதல்ல எல்லாரும் இப்படி உட்காருங்க" என்று அமர்ந்து கொள்ளும் படி கூறி விட்டு நடந்தவற்றை கூற தொடங்கினான்.


"இன்னைக்கு ஆபீஸ்ல டபுள் வேர்க். என் பாசமலர் அண்ணா கவி வெளியில் போனதால அவன் வேலையையும் சேர்த்து பார்த்துட்டு இருந்தேன். அப்போ ஒரு கால் வந்துச்சு. யாருனு பார்த்தா குமார்" என்று கூறி கொண்டிருக்க


"குமாரா???? யாரு அது??" என்று வெண்பா நடுவில் கேள்வி கேட்க அவளை முறைத்து பார்த்த ஆதித்யா


" அது தான் சொல்லிட்டு இருக்கேன்லே என்ன அவசரம்???" என்று விட்டு அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்தான்.


"ஆஹ்....." என்று வெண்பா கத்திக் கொண்டு ஏதோ கூற வர


"நம்ம டீலிங்கை அப்புறம் வைச்சுக்கலாம். இப்போ ஸ்டோரிக்கு வா" என்று மீண்டும் பழைய கதையை தொடர்ந்தான்.


"குமார் ஒரு சி.பி.ஐ ஆபீஸர். எனக்கு ஒரு மிரட்டல் லெட்டர் வந்துச்சே. அன்னைக்கு தானே ஆக்சிடெண்டும் ஆனுச்சு. அதுல வெண்பாக்கு எதுவும் ஆகலனாலும் என்னால அப்படியே அதை விட முடியல. அதனால தான் குமாரை வெண்பாவை வாட்ச் பண்ண சொன்னேன்..." என்று ஆதித்யா கூறவும்
நடுவில் வெண்பா கோபமாக ஏதோ கூற வர


அவள் கைகளை ஆதித்யா பிடித்து கொள்ள அவள் வாயை மூடிய மாதவ்
"ஸாரி ஆதி. உங்க வைப்போட வாய் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும். நீங்க மேலே சொல்லுங்க ஆதி" என்று கூறினான்.


அதைப் பார்த்து சிரித்துக் கொண்ட ஆதித்யா
"அவன் தான் மித்ரா மிஸ்ஸிங்னு சொல்லி வெண்பா மித்ரா வீட்டுக்கு போறானும், சூர்யாவும்,மாதவும் பேக்டரிக்கு போறாங்கனும் சொன்னான். உடனே நான் கமிஷ்னர் அங்கிள்க்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவரு தான் என்ன நிலைமை இப்போ இருக்குனு பார்த்து சொல்ல சொன்னாரு. உடனே நான் மித்ரா வீட்டுக்கு வந்தேன். அங்கே நிலைமையைப் பார்த்துட்டு பேக்டரிக்கு போகலாம்னு கிளம்பும் போது இதோ இந்த மதர் தெரசா என்ன இடிச்சு தள்ளிட்டு வண்டியை எடுத்துட்டு போய்ட்டாங்க"என்று கூறி விட்டு வெண்பாவின் கைகளை விடுவிக்க மாதவும் அவள் வாயில் இருந்து கையை எடுத்து கொண்டான்.


" அப்புறம் நான் வெண்பாவை பாலோ பண்ணிட்டு வரும் போதே கமிஷ்னர் அங்கிள்ட எல்லாம் சொல்லிட்டேன். அவரு உடனே கிளம்பி வரேனாரு. அவரு வார வரைக்கும் பேக்டரிக்கு வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஐந்து நிமிஷத்துல அவங்க வந்ததும் பேக்டரியை சுற்றி போலீஸ் நின்னாங்க. நானும் கமிஷ்னரும், இன்னும் கொஞ்ச பேரும் தான் உள்ளே வாரதுக்கு வந்தோம். அப்போ தான் வெண்பாவோட ஸ்கூட்டி நிற்குறத பார்த்துட்டு பாஸ்ட்டா உள்ள வந்தா பெரிய ஆக்ஷன் படமே போயிட்டு இருக்கு. என் பொண்டாட்டியா இதுனு கொஞ்சம் இல்ல இல்ல நிறைய ஷாக் ஆகிட்டேன். அவ அடி எப்படி இடி மாதிரி இருக்கும்னு தெரியும். பட் கட்டையால அடி எப்படினு இன்னும் வாங்கல" என்று கூறி சிரிக்க


அவனோடு இணைந்து மாதவும், சூர்யாவும் சிரித்தனர்.
வெண்பா அவர்களை முறைத்து பார்க்க உடனே சிரிப்பதை மூவரும் நிறுத்தி கொண்டனர்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"அப்போவே நீங்க ஏன் உள்ளே வரல???" என்று சூர்யா கேட்க


"நான் வரத்தான் போனேன். கமிஷ்னர் தான் விடாமல் பிடிச்சுட்டாரு. இப்போ நீ போனா உன்னையும் ஏதும் பண்ணிடுவாங்க போகாதனு. ஒரு இரண்டு நிமிஷத்துல எல்லா போலீஸும் உள்ள வந்துடுவாங்க. அப்போ போகலாம்னாரு. நானும் இரண்டு நிமிஷம் தானேனு இருந்தா அதற்கிடையில வெண்பா மேலயே கன்னை வைச்சிட்டான். இதற்கு மேல நிற்க முடியாதுனு தான் ஐயா என்ட்ரி கொடுத்தேன். அப்புறம் நடந்தது எல்லாம் தான் தெரியுமே!!!" என்று ஆதித்யா கூறவும் அவனை இமைக்காது மூவரும் பார்த்து கொண்டிருந்தனர்.


"என்னாச்சு கைஸ்??? இப்படி பார்க்குறீங்க??" என்று ஆதித்யா கேட்க


"நீங்க பண்ணுணது எவ்வளவு பெரிய ஹெல்ப் தெரியுமா ஆதி??? யூ ஆர் கிரேட்" என்று சூர்யா கூறவும்


"ஹச்...ஹச்...." என்று தும்மிய ஆதித்யா


" ஐஸ் கொஞ்சம் கூடிடுச்சு" என்று கூறி சிரிக்க அவனோடு இணைந்து அனைவரும் சிரித்துக் கொண்டனர்.


அப்போது அறையில் இருந்து வெளியே வந்த வித்யா
"மித்ரா கண்ணு முழிச்சுட்டா. உங்க எல்லாரையும் கூப்பிடுறா" என்று கூறவும் அனைவரும் எழுந்து உள்ளே சென்றனர்.


மித்ராவைப் பார்த்ததும் வெண்பா அவளருகில் சென்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.


"ஏன் டீ இப்படி பண்ண?? கொஞ்ச நேரத்துல எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டியேடி. உன்ன யாரு அந்த பேக்டரிக்கு அந்த ராத்திரி நேரத்துல போகச் சொன்னா??? எல்லோரும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா???" என்று வெண்பா வருத்தத்துடன் கேட்க


"உன்னால தான் நான் அங்கே போனேன்" என்று மித்ரா கூறவும் அவளைப் புரியாமல் பார்த்தாள் வெண்பா.


"என்னாலயா??" என்று வெண்பா கேட்க


"ஆமா நேற்று நைட் ஒரு கால் வந்துச்சு. உனக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. இந்த ஹாஸ்பிடல் பேரை சொல்லி இங்க உன்னை அட்மிட் பண்ணி இருக்காங்கனும் சொல்லிட்டு போனை வைச்சுட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. உடனே உனக்கு போன் பண்ணா நாட் ரீச்சபள்னு வந்துச்சு. ஆதி அண்ணாக்கும் ட்ரை பண்ணுணேன் லைன் கிடைக்கல. லாஸ்ட்டா ஒரு டைம் உனக்கு கால் பண்ணலாம்னு பண்ணேன். அப்போவும் நாட் ரீச்சபள். என்ன பண்ணுறதுனு புரியல. உடனே கிளம்பி வந்துட்டேன். வர்ற அவசரத்தில் போனை மறந்துட்டேன்.


பேக்டரியை தாண்டி வரும் போது சடன்னா ஒரு கார் வந்து இடிச்சுடுச்சு. அதற்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியல. கண்ணை முழிச்சு பார்த்தா பேக்டரிக்குள்ள இருந்தேன். எனக்கு முன்னாடி அந்த ராதாகிருஷ்ணனும், சேரனும் நின்னுட்டு இருந்தானுங்க. அப்போ தான் சுற்றி பார்த்தா அடுத்த நாள் விடிஞ்சுடுச்சுனும் தெரிஞ்சுச்சு. கூடவே இருந்துட்டு துரோகம் பண்ணுறியானு கேட்டு அந்த சேரன் என்னை அறைஞ்சுட்டான். எனக்கு கோபம் வந்து நானும் அவனை வாய்க்கு வந்தபடி திட்டிட்டேன். உடனே அந்த ராதாகிருஷ்ணன் ரிவால்வரை எடுத்து என்னை சுட வரவும் தான் நான் சொன்னேன். என்னை நீ கொன்னு போட்டாலும் பரவாயில்லை. என் பிரண்ட் கண்டிப்பாக உன்னை கம்பி எண்ண வைப்பானு. அப்போ தான் சூர்யாவும், மாதவும் அந்த ஏரியாவுக்கு வந்தாங்க போல. அவனோட ஆளுங்க அவங்களையும் பிடிச்சுட்டு வந்துட்டாங்க. எங்களால எதுவும் பண்ண முடியல.


கொஞ்ச நேரம் அவங்க இரண்டு பேரும் ஏதோ தீவிரமாக பேசிட்டு இருக்கும் போது தான் சூர்யாவுக்கு போன் வந்தது. சேரன் வந்து போனை ஸ்பீக்கர்ல போட்டான். அப்போதான் நீ பேசுன. உன்னையும் அவனுங்க கண்டு பிடிச்சு உள்ளே கொண்டு வந்துட்டானுங்க. இனி தப்பிக்கவே முடியாதுனு நினைக்கும் போது என்னென்னவோ நடந்துடுச்சு. அதற்கு அப்புறம் என்ன ஆச்சு?" என்று மித்ரா கேட்கவும்


மாதவ் ஏதோ ஆக்ஷன் திரைப்படத்தை விவரிப்பது போல மித்ராவும் அதைக் கேட்டு கொண்டிருந்தாள்.


அவ்வப்போது மாதவ் ஏதாவது நகைச்சுவையாக கூறும் போது மித்ரா சிரிக்க அதைப் பார்க்க சூர்யாவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.


எல்லாம் முடிந்தது என்று அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட கதவை தட்டி அனுமதி கேட்டு கொண்டு மெய்யப்பனும், வெங்கட்ராமனும் வந்தனர்.


மரியாதை நிமித்தம் அனைவரும் எழுந்து கொள்ள மித்ராவும் எழுந்து கொள்ள முயற்சிக்க
"வேண்டாம் வேண்டாம் மித்ரா. நீங்க படுத்துக்கங்க. சில இன்பார்மேஸன்ஸ் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்" என்று கூறிய வெங்கட்ராமன்
மாதவ், சூர்யா, வெண்பா மூவரையும் பார்த்து


"இனி ஏதும் பிரச்சினை வந்தா இந்த கேஸை விட்டுடுவேனு சொன்னன் இல்லையா???" என்று கேட்க மூவரும் தவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"அப்போ இந்த கேஸ்???" என்று சூர்யா தயக்கமாக கேட்க


"அது தான் எல்லாம் முடிஞ்சுடுச்சே" என்று மெய்யப்பன் கூற


"என்ன?????" என்று ஒரு சேர மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


"ராதாகிருஷ்ணன் செத்துட்டான். சேரனும் இந்த இல்லீகல் பிஸ்னஸ்ல பார்ட்னர் சோ இனி காலத்துக்கும் சேரன் ஜெயில்ல தான். அது மட்டுமில்லாம அந்த லேண்ட் ராதாகிருஷ்ணன் பேர்லயே இல்ல சோ அந்த லேண்ட் உரியவங்களுக்கு போய் சேர்ந்திடும். ஆர் யூ ஹேப்பி கைஸ்???" என்று வெங்கட்ராமன் கூற


அனைவரும் சந்தோஷத்தில் பேச மறந்து போய் நின்றனர்.


"ஹப்பாடா!!!!!!
ஒரு வழியாக எல்லாம் முடிஞ்சுடுச்சுடா சாமி!!! இனி கொஞ்ச நாளைக்காவது என் பொண்டாட்டியோட சந்தோஷமாக இருக்கலாம்" என்று கூறிய ஆதித்யா வெண்பாவை தோளோடு அணைத்துக் கொள்ள அவனை பார்த்து சிரித்தவள் வெட்கத்தோடு அவனிடமிருந்து விலகி கொண்டாள்.


"இந்த சந்தோஷமான டைம்ல இன்னொரு குட் நியூஸ். மித்ராவை நான் அசிஸ்டெண்டா சேர்த்துக்கலாம்னு இருக்கேன். நீங்க என்னை நினைக்குறீங்க???" என்று வெங்கட்ராமன் கேட்க


"ரொம்ப குட் நியூஸ் ஸார் இது. மித்ராவும் நம்ம கூட வேர்க் பண்ணுறானா சூப்பராக இருக்கும்" என்று மாதவ் கூறவும் அவனை முறைத்து பார்த்தான் சூர்யா.


"இவ வேலைக்கு நம்ம கூட வந்தா இவனுக்கு என்ன வந்துச்சு?? ரொம்ப தான் துள்ளுறான்" என்று மனதில் பொருமிக் கொண்டான் சூர்யா.


"எதுக்கு ஸார் இதெல்லாம்???" என்று மித்ரா தயக்கமாக கேட்க


"நீ சும்மா இரு. ஸார் மித்ரா கண்டிப்பாக உங்க கிட்ட ஜாயின் பண்ணிக்குவா" என்று வெண்பா கூறவும் மகிழ்வுடன் அவள் கையை பற்றி கொண்டாள் மித்ரா.


சிறிது நேரத்தில் மித்ராவையையும் டிஸ்சார்ஜ் செய்து விட அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கி புறப்பட்டனர்.


காரில் ஆதித்யா ஏறிக் கொண்டு வெண்பாவையும் அழைக்க
"நான் ஸ்கூட்டரில் வந்துடுறேன்" என்று கூறி விட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டாள் வெண்பா.


இருவரும் வீடு வந்து சேரும் போது வாயிலில் நின்று கொண்டிருந்த ஸ்வேதா வெண்பா அருகில் வந்து


"மித்ரா எப்படி இருக்கா?? ஒரு பிரச்சினையும் இல்லலே??" என்று கேட்கவும்


"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸ்வேதா. அவ ரொம்ப பேர்பெக்ட்டா இருக்கா. ஆமா உன் இண்டர்வியூ என்ன ஆச்சு???" என்று வெண்பா கேட்க


"அதெல்லாம் சூப்பராக பண்ணிட்டேன். அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் வீடு தேடி வரும்" என்று பேசி கொண்டே வெண்பாவும், ஸ்வேதாவும் வீட்டினுள் சென்றனர்.


நாள் முழுவதும் அலைந்து திரிந்த களைப்பு, பல வித போராட்டங்கள் என சோர்ந்து போய் இருந்த வெண்பாவும், ஆதித்யாவும் அவர்கள் இரவுணவை முடித்து விட்டு அறைக்குள் செல்லும் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் இல்லை, பேசிக் கொள்ளவும் இல்லை.


மற்றவர்களும் இதை பெரிதாக கண்டு கொள்ளாததால் இருவரும் அப்படியே இருந்து கொண்டனர்.


வெண்பா கோபமாக இருக்கிறாளோ என நினைத்து ஆதித்யாவும், ஆதித்யா கோபமாக இருக்கிறானோ என நினைத்து வெண்பாவும் அமைதியாக இருந்து கொண்டனர்.


அறைக்குள் பெருத்த அமைதி நிலவ அதை முதலில் கலைத்தது ஆதித்யாவின் குரல்.


"வெண்பா இப்போ என்ன ஆச்சுனு முகத்தை இப்படி தூக்கி வைச்சிட்டு இருக்க??" என்று ஆதித்யா கேட்க


"யாரு நானா??? நீங்க தான் பத்து முழத்துக்கு உங்க மூஞ்சை தூக்கி வைச்சிட்டு இருக்கிங்க" என்று வெண்பா கூறவும் அவள் தோளில் வந்து கைகளை போட்டு கொண்ட ஆதித்யா


"நான் நினைச்சேன் குமாரை உன்ன வாட்ச் பண்ண சொன்னது உனக்கு பிடிக்காம தான் என் கூட பேசலையோனு" எனக் கூறினான்.


"அதுக்கு ஏன் நான் உங்க கூட கோவிச்சுக்கப் போறேன். என் பாதுகாப்புக்காக தானே பண்ணுணிங்க?" என்று வெண்பா கூற அவளை குழப்பமாக பார்த்தவன்


"அப்போ ஹாஸ்பிடல்ல வைச்சு கோபமாக ஏதோ சொல்ல வந்தியே!" என்று ஆதித்யா கூறவும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டாள் வெண்பா.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"நீங்க என்னை பேச விட்டாத்தானே. நான் என்ன சொல்ல வந்தேன்னா
அவரு சி.பி.ஐ ஆபீஸர்னு தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன். காலையில வீட்டில் இருந்து கிளம்பி போகும் போது யாரோ பாலோ பண்ணிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு.


திரும்பி பார்த்தா ஒருத்தரு நின்னுட்டு இருந்தாரு. மறுபடியும் கொஞ்ச தூரம் போய்ட்டு திரும்பி பார்த்தா அதே ஆள் நிற்குறான். அந்த எம்.எல்.ஏ ஆளா இருக்குமோனு நினைச்சு கீழே கிடந்த கல்லை எடுத்து அவன் தலையை குறி வைச்சு எறிஞ்சுட்டு நிற்காம போயிட்டேன்" என்று வெண்பா கூறவும்


"அடப்பாவி!!! நான் நெற்றியில என்ன காயம்னு கேட்டதுக்கு வீட்ல பார்க்காம போய் சுவர்ல இடிச்சுட்டேனு என் கிட்ட கதை அளந்துருக்கான். பாவிப்பயல்" என்று ஆதித்யா கூற விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள் வெண்பா.


அவளோடு இணைந்து சிரித்த ஆதித்யா
"நான் ஒண்ணு கேட்பேன் நீ பண்ணணும்" என்று கூற


"என்ன அது???" என்று கேட்டாள் வெண்பா.


"நீ நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாட்டி கூட எனக்கு ஐ லவ் யூ சொல்லலயே. இப்போ ஒரு வாட்டி சொல்லேன்" என்று ஆதித்யா கேட்க


தலை குனிந்து கொண்டாள் வெண்பா.


"என்னாச்சு வெண்பா??" என்று கேட்ட ஆதித்யா அவள் முகம் நிமிர்த்தி பார்க்க வெண்பாவின் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்து பதறி போனான்.


"ஸாரி வெண்பா நான் உன்னை ஹேர்ட் பண்ணணும்னு கேட்கல. ஐ யம் ஸாரி" என்று ஆதித்யா கூற


அவன் மீது சாய்ந்து கொண்ட வெண்பா


"நான் தான் ஸாரி சொல்லனும். இவ்வளவு நாள்ல ஒரு வாட்டி கூட நான் உங்க கூட சரியா பேசலலே" என்று வருத்தத்துடன் கூற


அவளை அணைப்பில் வைத்து கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தவன் கட்டிலில் சாய்ந்து கொண்டு அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.


"நீ சரியாக
பேசலனு யாரு சொன்னா?? உன் கூட இருக்கும் போது எனக்கு நேரம் போறதே தெரியாது. இன்பாக்ட் நான் என்னையே மறந்து போயிடுறேன். ஒரே ஒரு குறை தான். அடிக்கடி கராத்தே மாஸ்டர் ஆகிடுற" என்று கூறி ஆதித்யா சிரிக்கவும் அவன் தோளில் தட்டியவள் வாகாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.


சிறிது நேரம் அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தவள்


"விக்ரம்...." என்று அழைக்க


"சொல்லுடா அலமு.." என்று ஆதித்யா கூறவும் திகைப்புடன் அவனை பார்த்தாள் வெண்பா.


"அலமு???..." என்று கேட்டு ஆதித்யாவைப் பார்க்க அவளைப் பார்த்து சிரித்த ஆதித்யா


"நிகில் எல்லாம் சொல்லிட்டான். உன் உண்மையான பேரு அலமேலுவாமே. நீ தான் ஸ்கூல் படிக்கும் போது வீட்ல கத்தி சண்டை போட்டு பேரை மாத்தி வைச்சுக்கிட்டியாம்" என்று கூற அவனை முறைத்து பார்த்தவள்


"அந்த நிகில் எருமை மட்டும் என் கையில கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு பூஜை" என்று வெண்பா கோபமாக கூறவும் அவள் கன்னத்தில் முத்தமிட்ட ஆதித்யா


"எதுக்கு அலமு சின்ன பையன் மேல கோபப்படுற?? எனக்கு வெண்பாவை விட அலமு தான் பிடிச்சிருக்கு" என்று கூறி சிரித்தான்.


ஆதித்யாவைத் தள்ளி விட்டு விட்டு அவன் மார்பில் மாற்றி மாற்றி வெண்பா அடிக்கவும் அவள் கைகளை சேர்த்து ஆதித்யா பிடித்து கொள்ள நிலை தடுமாறி அவன் மேல் வீழ்ந்தாள் வெண்பா.


அவன் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தாள் வெண்பா.


அவன் கைகள் அவள் இடையில் தவழ அவனிடம் தன்னை முழுவதுமாக தொலைத்தாள் வெண்பா.


ஆதித்யாவை நிமிர்ந்து பார்த்த வெண்பா அவன் கண்களை பார்த்தவாறே
"ஐ லவ் யூ விக்ரம்..." என்று காதலோடு கூற அவளை இறுக ஆதித்யா அணைத்துக் கொள்ள


" நானும் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன் அலமு...." என்று கூற

ஒரு அழகிய காதல் அங்கே இனிதே அரங்கேறியது.


ஆதித்யா மற்றும் வெண்பாவின் வாழ்வில் இனி என்றென்றும் காதலும், மகிழ்வுமே நிறைந்து இருக்கும்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Sooper end husna ka???
Alamu vaaa..enna ka last la comedy paniteenga???aadi adhaye dhan koopadran...ok appo nammalum maathira vendiyadhudhan ...vaazhga alamu and aadhi
Thank you so much dr:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top