• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unakkaga oru vaanam 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
அடுத்த பதிவு, பிழை இருந்தால் குணமா சொல்லுங்க கேட்டுகொள்கிறேன்...

அத்தியாயம் 3

கௌதம் வீட்டார் பெண் பார்த்து சென்று ஒரு வாரம் கழித்து பாரதி மதுரை சென்றுவிட்டாள்....
வீட்டினர் மனம் தெளிந்தனர்..பாரதி எப்போது தன் சுற்றமும் நட்பும் என அன்பாக பழகுபவள்..ட்யூசன் என்ற பெயரில் பொட்டு பொடுசுகளோடு அவள் உலகம் அது தனி ..ஞாயிறு கூட விடுமுறை தேவையா என யோசிக்கும் கூட்டம் அது...கலகலப்பிற்கு பஞ்சமில்லா கால் முளைத்த சிட்டுகள் அவர்கள்...குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தை சேட்டை பொறுக்காதோர்... அவர்களோடு அவள் படுத்தும் பாடு பாவம் கமலம் தான் திண்டாடிப்போவார் ...அவர்கள் வீடுகள் காம்பவுண்ட் குடியிருப்பில் மொத்தம் 12 வீடுகள் சேர்ந்தது...இன்னும் 2 பக்கத்து காம்பவுண்ட் என மொத்த கூட்டமும் பாரதி வீட்டில் தான் இருக்கும்...

பாரதி சென்னை சென்றுவர மொத்த கூட்டமும் அல்லோலப்பட்டது சொல்லவும் வேண்டுமா... பாரதி வருகை முன்னிட்டு அன்றும் படிப்பிற்கு மட்டம் போட்டு அரட்டையில் இறங்கிவிட்டதுகள் சில்வண்டுக்கள்...

வானரம் நம்பர் 1 கோகுல் பாரதியிடம் " என்னக்கா நீ அடிக்கடி லீவ் போட்டா நா எப்படி படிச்சு தனி ஒருவன் ஆகுறது " என கேட்டு நமுட்டு சிரிப்பாக கூற,

பாரதி" டேய் யு மீன் போலீஸ்கார், அட பக்கி நீ அந்த அளவா என்ன நம்பி இருந்த அக்கா அந்த அளவுலாம் வொர்த் இல்லடா..

"என்னக்கா இப்டி சொல்லிட்ட நானும் தான் இவனோட சேர்ந்து ஆடி பாடி நயன்தாரா மாறி IPS ஆகலாம்னு இருந்தேன்" என்றாள் ஐஸ்வர்யா எனும் வானர நம்பர் 2 ...

இதுவேரயா! அட பாவிங்களா நல்லா வருவீங்க டி ரெண்டு பேரும் .. ரொம்ப அழகா வளந்திருக்கிங்க போங்க...- பாரதி

சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கா படிங்க பெரிய ஆளா வரனும்ல.. நாங்கள்ளாம் இப்ப காதுக்குள்ள சொல்லி சொல்லி விளையாட போறோம் என பாரதி சொல்ல...

ஐயோ அக்கா அப்டிலாம் விட்றாதக்கா..நா சும்மா உலலாய்க்கு சொன்னேன்..
இவள்ளாம் நயன்தாரானா நா தனி ஒருவன் இல்ல கூட்டத்தில் ஒருவன் என பொங்கிவிட்டான் கோகுல்..

ரமேஸு சுரேஸு எங்கடா என் 5 ஸ்டாரு என அடுத்த ரவுண்ட் ரெண்டு பக்கிகள புடிஸ்டிட்டா பாரதி...

இப்படி வானரங்கள் சகிதம் அவள் பொழுதுகள் ஆனந்தமா கழிந்தது இரவு வரை...

இரவின் தனிமையோடு மீண்டும் அவள் கனவுகளில் கௌதம்.. யாருப்பா உன்ன இப்ப வர சொன்னது..நமக்கு இந்த 3 எழுத்து கவிதை பொழப்புலாம் செட்டே ஆகாதுனு இருக்கேன் , நீ வேர ஞாபகத்துல பொசுக்குனு வந்திடுற...

படுக்கை விட்டெழுந்து போய்விட்டாள் மாடிக்கு..அவளோடு வானும் நிலவு பிரியா நண்பர்கள் எப்பொழுதும்....

ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டி நட்சத்திரங்களோடு நிலவையும் அவள் அறையில் கண்டு ரசிக்கும் ரசனைக்காரி...

பிரிய எழுத்தாளர் நாவலை கொஞ்சம் புரட்டி கௌதமின் நினைவுகளை மனதின் அடி ஆழத்தில் புதைவித்து கண்ண மூடிட்டா ... தூக்கம் கம்மிங்க பா...

(அவள் நினைவின் நாயகன் on the way.. அது அந்த பக்கிக்கு தெரியாதில்ல .. நாமளும் சொல்ல வேணாம் சும்மா வேடிக்கை மட்டும் பார்ப்போம்..)

சூரியன் உதிக்கும் போது பாக்க கூடாதுனு யாரோ பாரதிட்ட தப்பா சொல்லி இருப்பாங்க போல , காலை 8 மணிக்கு தான் பாரதி கண் விழிப்பே...

கமலம் காலை சுப்ரபாதத்த ஸ்டாட் பண்ணிடாங்கோ... வயசுப்புள்ள இப்படியா தூங்குவ ..அது மட்டும் தான் கேட்டுச்சு மத்ததெல்லாம் muted.. சங்கீதமா நினைச்சு அப்பவும் தூக்கம் தான் மஹாராணிக்கு...

அதே நேரம் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டு ராஜன் கதவை திறக்க..
( யாராய் இருக்கும் மக்களே..நம்ம கௌபாய் வாசுவே தான்)

யார் என ராஜன் ஆராய்ச்சியோடு நோக்க , அவனே குடுத்திட்டான் கறிகுலம்விட்டே( CV )

நான் வாசு ரகுவோட ஃப்ரண்டு இங்க ஒரு வேலை விசயமா வந்தேன்..ரகுதான் மாடில அவங்க ரூம்ல தங்க சொன்னான்..உங்க கிட்ட ஏதும் சொல்ல வில்லையா என போனில் தொடர்பு கொண்டான் ரகுவை..

ராஜன் குடும்பம் குடியிருப்பது ரகுவின் மதுரை வீட்டில்தான்..அவர்கள் வீட்டை மேற்பார்வை பார்ப்பது வாடகை வசூலிப்பது சகுந்தலா தன் தங்கை வீட்டில் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் ...

மாடியில் அவர்கள் வந்தா தங்குவதற்கு என ஒரு அறை உண்டு,அதையே வாசுவிடம் சொல்லி ரகு அனுப்பி வைத்தான்...அதை ராஜனிடம் தெரிவிக்க மறந்துவிட்டான் ரகு...

வாசுவின் அண்ணனுக்கு தான் ரகு நண்பன் என்ற போதிலும் இவனிடம் நல்ல தோழமை உண்டு...

ரகுவிடம் மதுரை செல்வதாக வாசு சொல்ல ரகு யோசனைக்கு செல்ல...

அதோடு உங்க சித்தி வீடு அங்க எங்க என வாசு கேட்க..ரகு" பாரதி வீடுனு சொல்லு" என்றான் ரகு...

இப்போது ரகு நேரடியாகவே " நீ பாரதிய விரும்புகிறாயா.." என கேட்க.. வாசு " அது என்ன தெரியல அதான் உன் தங்கச்சி கிட்டயே கேட்க போறேன்" என்று விட ..பிறகு தான் ரகு அங்கே தன் அறையில் தங்குமாறு சொல்லி அனுப்பிவிட்டான்...

அதோடு எங்க சித்தப்புவ நீ தான் மகனே சமாளிக்கனும், அவர் கொஞ்சம் டெரர் பீஸ்தான் ஆனாலும் நல்ல மனிதர்...

வாசு" நான் என்ன அவரயா பாக்க போறேன் அவர் பொண்ணதான"... அடப்பாவி அவ அவர் பொண்ணுடா ரகு சொல்ல...

இருக்கட்டும் என்ன இப்போ, அவர எப்படி சமாளிக்கனும்னு நான் அறிவேன் நண்பா..

வாசு,"அதுக்கு எதுக்குடா ஒரு வாரம் தங்குற , உங்க அம்மாவ கொஞ்சம் நினச்சு பார்த்தியா மகனே..."

நான் இப்போ மதுரைல என் ஃப்ரண்டோட மேரேஜ் அட்டெண்ட் பண்ணிட்டு , அப்டியே மதுரை சுத்தி பாக்க போறோம் அப்படிதான் கத விட்டு போக போறேன்..நீயும் அத மெயின்டெயின் பண்ணு அது போதும்...

என்னமோ பண்ணு இந்தா அட்ரஸ் ஆள விடு எனக்கும் உங்கண்ணனுக்கும் நடுவுல ஓடுற ஷிப்ப( ஃப்ரண்ட்ஷிப்) மூழ்க வச்சிடாத..என்று துரத்தியே விட்டான் ரகு...

ரகு போனில் கௌதம் தங்க வைக்கும்படி சொல்லியே விட்டான் சித்தப்பாவிடம்..

கமலம் சவுண்ட் சர்வீஸ் நின்றது எழுந்து வந்தாள் பாரதி.. கௌதம் அவள் பார்வையில் பட திகைத்து நின்றுவிட்டாள்...

அவள் தந்தை அறியாமல் கண் சிமிட்டினான் கௌதம்...

கமலம் ராஜனிடம் யார் என்று கேட்டுவைக்க..exo போட்டு விளக்கிவிட்டார் ராஜன்..( எத்தன கதையில தான் விம் போட்டு விளக்குவது ) he he he ...

பாரதி ரியாக்ஸன் என்னனு அடுத்த எபில பார்ப்போம் மக்களே...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top