• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோர்க்குழம்பும் பீட்ரூட் பொரியலும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
மோர்க்குழம்பும் பீட்ரூட் பொரியலும்

என்னங்காணும், புதுசா என்னவோ எழுதப்போறான்னு இவளுக்கு ஒரு கார்னர் போட்டுக்குடுத்தா, இவ என்னடான்னா மோர்க்குழம்புங்கறா, பீட்ரூட் பொரியல் அப்படிங்கறா...இதெல்லாம் நமக்கு செய்யத் தெரியாதா இல்லைன்னா சாப்பிடத்தான் தெரியாதா?

இப்படியெல்லாம் நீங்க நெனைக்கிறது நேக்கும் புரியறது...ஆனாலும் அப்படி என்னதான் சொல்லிருக்கேன்னு ஒருக்கா படிச்சுத்தான் பாருங்கோளேன்...

அதாகப்பட்டது...பெரியவள்ளாம் அன்னமய கோசம்னு சொல்லிட்டா, அன்னமே ஜீவாதாரமாகவும் ஆயிடுத்து, அப்படின்னா வெறும் அன்னத்தை மட்டும் ஸேவிக்க முடியுமோ? முடியாதில்லையா, அதனாலதான் நம்ம பெரியவாளே அன்னத்துக்கு ஈடா, ஸாதகங்களையும், அமுதுகளையும், கறிகளையும்(பொரியல்) உருவாக்கிக் குடுத்துருக்கா.

அப்படியாகப்பட்ட அமுதுகள்ல ஒண்ணுதான் இந்த மோர்க்குழம்பு...

மோர்க்குழம்புன்னு சொன்னதுமே, லைட் மஞ்சள் கலர்ல, செம்பழுப்பு கலர்ல தாளிச்ச உளுத்தம்பருப்பும், கடுகும், கூடவே காண்ட்ராஸ்டா பச்சைக் கறிவேப்பிலையும் மொதக்கற, பெருங்காய வாசம் மணக்கற அந்த பதார்த்தம் மனசுல வர்றதா? வந்துட்டால் கதி மோக்ஷம்தான், அன்னமய கோசத்துல நாம ஊறிட்டோம்னு அர்த்தம்...

இந்த மோர்க்குழம்பு இருக்கு பாருங்கோ, அது ஒரு அஷ்டாவதானி, அதைப் பண்றது ஒரு கலை...வக்கணையா சாப்பிட ஆசை இருக்கறவாதான் வக்கணையா சமைப்பான்னு சொல்லுவா...மோர்க்குழம்பையும் அப்படித்தான் வக்கணையா ரசிச்சு பண்ணனும்...

எப்படி பண்றதுன்னு சொல்றேன் கேட்டுக்கொங்கோ...ஒரு சின்ன கிண்ணத்துல அரை பிடி கடலைப்பருப்பு, அரைபிடி தனியா, ஸ்பூனளவு ஜீரகம் எல்லாத்தையும் போட்டு மூழ்கறாப்புல ஜலத்த விட்டு ஒரு ஓரமா வெச்சுடணும், சித்த புளிப்பு தூக்கலா இருக்கிற தயிரை ஜலம் விடாம மத்தால கடைஞ்சு அதையும் ஒரு பக்கமா வெச்சுக்கோங்கோ, அரை மூடி தேங்காய பூவாட்டமா துருவி காத்துண்டு இருக்கிற வரிசையில சேத்துக்கோங்கோ, ஒரு விரக்கடை அளவு இஞ்சி, ஒரு பத்து பச்சைமிளகாய்(மிளகாயோட காரத்துக்கு தகுந்தாப்புல), வஞ்சனையில்லாம ஒரு தாராளமான பிடி கொத்தமல்லி எல்லாத்தையும் எடுத்து மொதல்ல ஊற வெச்சிருக்கோமே பருப்பு, தனியா ஜீரகம், துருவி வெச்ச தேங்கா, எல்லாத்தையும் சேத்து, கடைஞ்சு வெச்ச தயிர்ல ஒரு கரண்டிய இதுல விட்டு மையா அறைச்சு எடுத்துக்கோங்கோ, மோர்க்குழம்பு விழுது தயாராயிடுத்து...

அடுத்ததாக...மோர்க்குழம்புல போடற தானப்(காய்கறித் துண்டுகள்) பத்தி பேசுவோம்...

வகை வகையா நெறைய்ய தான்கள் இருக்கறதுனால, ஒண்ணோன்னா பாப்போமா?

முதல் தான், தான்கள்லயே ஸ்ரேஷ்ட ஸிரோமணி நம்மளோட வெள்ளைப் பூசணிக்காய்தான். வெள்ளைப் பூசணிக்காயோட விஸேஷம் என்னன்னா, அதை எந்த ஸாதகத்துல போடறோமோ அந்த ஸாதகத்தோட ரச விஸேஷத்தை தனக்குள்ளே உறிஞ்சுண்டு அந்த ஸாதகத்தோடேயே ஐக்கியமாயிடும். அப்படியாகப்பட்ட பூசணிக்காய கொஞ்சம் பெரிய துண்டுகளா வெட்டி, ஒரு பாத்திரத்துல ஜலம் விட்டு துளி மஞ்சள், தானுக்குத் தேவையான உப்பு சேத்து, பூசணித் துண்டுகளையும் போட்டு நன்னா கொதிக்கவிடணும், பூசணிக்கா கண்ணாடியாட்டமா மாறினாவுட்டு ஜலத்தை வடிச்சு எடுத்து வெச்சுக்கோங்கோ. மோர்க்குழம்போட போடற பக்குவத்தை பின்னால பாக்கலாம்.

இப்போ அடுத்த தான், வேற யாரு நம்மளோட versatile வெண்டைக்காய்தான். இந்த வெண்டைக்காயோட விஸேஷம் என்னன்னா, அது நம்ம இயற்கை பகவான் நமக்கு அருள் பண்ணின மாக்கரோனி, பென்னே பாஸ்தா, இந்த காலத்து பாஸ்தாவில ஒரு குழல்தான் இருக்கும், ஆனா நம்ப வெண்டைக்காய் பாஸ்தாவில ஆறு குழல், கூடவே முத்துமுத்தா பீஜமும்(விதை), இது என்ன பண்ணும்னா, போடற ஸாதகத்தை குழல்ல ரொப்பிண்டு, அதை எடுத்து வாயில வெச்சு கடிக்கறச்ச, வெண்டைக்காய் ருஜியோட ஸாதகத்தையும் நம்ம வாயில ரொப்பி ஒரு சுவை அதகளத்தையே நம்ம வாயிலே நடத்திடும்...என்ன வாயில லேசா ஜலம் ஊறறதா? நேக்கும் அப்படித்தான் இருக்கு! இந்த வெண்டைக்காயை ஒரு அங்குல துண்டுகளா நறுக்கிண்டு, வாணலியில சித்த தாராளமா எண்ணை விட்டு, அது சூடானதும் நறுக்கின வெண்டைக்காயை கொட்டி, கூடவே தானுக்கு தேவையான உப்பு, துளி மஞ்சள் சேத்து, வெண்டையோட பிஸுபிஸுப்பு போற மட்டும் வதக்கிக்கணும், வெண்டைக்காய் பச்சை கலர் மாறி லேசான கருப்பு கலருக்கு வரச்சே ஸ்டவ்வை அணைச்சு, தானை வேற கிண்ணத்துக்கு மாத்திக்கோங்கோ.

இப்போ அடுத்ததைப் பாக்கலாமா? அடுத்து வர்றவர் நம்ம சேப்பங்கிழங்கு மஹாஷ்ரயர், சேப்பங்கிழங்கு வறுவல் கேள்விப்பட்டிருக்கோம், ஆனால் மோர்க்குழம்புலயான்னு நீங்கள்ளாம் கேக்கறது புரியறது, நெனைச்சு பாருங்கோ, மஞ்சள் கலர் மோர்க்குழம்புல ரசகுல்லா மொதக்கறாப்புல சேப்பங்கிழங்கு மொதக்கும், அதை அப்படியே எடுத்து வாயில போட்டா, குழம்போட உப்பு காரத்தோட, அதுல ஊறின சேப்பங்கிழங்கும் சேந்து ஸ்வர்கத்துக்கே அழைச்சுண்டு போகும் போங்கோ!!

மோர்க்குழம்புல போடணும்னா சேப்பங்கிழங்கை சின்ன சின்னதா கோலி குண்டாட்டமா பாத்து வாங்கிக்கோங்கோ, அதுதான் ருஜிக்கு தோதுப்படும், இந்த கோலிக்குண்டு சேப்பங்கிழங்கை நன்னா அலம்பி, குக்கர் பாத்திரத்தில ஜலம் விடாம வெச்சு, மூணு விசில் விடுங்கோ, ஆறினாவுட்டு எடுத்து உரிச்சு வெச்சுக்கோங்கோ. இப்போ இதுமேல பூத்தூவலா துளியே துளி கடலமாவு(ஜாஸ்தி போட்டா மோர்க்குழம்பு கூழாயிடும்), தானுக்கேத்த உப்பு, துளி காரப்பொடி, சிட்டிகை மஞ்சள்பொடியப் போட்டு பெசரினாப்புல எடுத்து வெச்சுக்கொங்கோ...

அடுத்த தான் நம்மளோட எவர்க்ரீன் பருப்புருண்டை. இது மோர்க்குழம்போட அடுத்த elevated லெவல். ஒரு speciality தயாரிப்பு. பருப்புருண்டைக்கு ரெண்டு பிடி துவரம்பருப்பு, ஒரு பிடி கடலைப்பருப்பை ஜலம் விட்டு 2 மணிநேரம் ஊற வெச்சுக்கோங்கோ. அப்பறம் அதோட மொளகாவத்தல், பெருங்காயம், உப்பு சேத்து ஜலம் விடாம அரைச்சுக்கோங்கோ. அரைச்ச விழுதை, வாணலியில துளி எண்ணை விட்டு கடுகு கருவேப்பிலை தாளிச்சு லேசா வதக்கிக்கணும், அது ஆறினதுக்கப்பறம், சின்ன சின்ன உருண்டைகளா அழுத்தாம பிடிச்சு, ஆவியில வேகவெச்சு எடுத்துக்கணும். இதுல பாருங்கோ தைரியம் இருக்கறவா ஆவியில வைக்காமலேயே டைரக்டா உருண்டைகளை குழம்புல போட்டு கொதிக்க வாய்ப்பா, ஆனா உருண்டை கறைஞ்சு போயி குழம்பு கூழ் ஆகற சான்ஸ் ரொம்ப ஜாஸ்தி, அதனால ஆவியில வைக்கறதே சேஃப். இப்போ பருப்புருண்டை ரெடி.

அடுத்த, last but not least தான், பக்கோடா. இது வடை, பாயாசம் சமைக்கிற அன்னிக்கி கறிகாய் நறுக்கற வேலையை மிச்சம் பண்ண நம்பாத்து பொம்மானாட்டிகள் எல்லாம் கண்டுபிடிச்ச ஒரு வழி, குறுக்கு வழியா இருந்தாலும் ரொம்ப ருஜியான வழியா ஆயிடுத்து. ஒண்ணுமே இல்லை பருப்பு வடைக்கு பண்ற மாவையே வடையா தட்டாம, கிள்ளி கிள்ளி போட்டு முறுகலா பொரிச்சு எடுத்துக்கணும், மசாலா வடைக்கு செய்யற மாவையும் இப்படி செஞ்சுக்கலாம், அவாவாளோட விருப்பம்.

தானெல்லாம் தயார், ஆனா ஒவ்வொரு தானையும் வேற வேற சமயத்துல குழம்புல செக்கணும், அதை இப்போ பாக்கலாம்...ஒரு அடிகனமான பாத்திரத்துல, கொஞ்சம் தாராளமா தேங்காய் எண்ணையை விட்டு (எந்த எண்ணை வேணும்னாலும் பயன்படுத்தலாம், ஆனா தேங்காய் என்னைதான் மோர்க்குழம்புக்கு ஸ்ரேஷ்டம்) கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மொளகாவத்தல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிச்சு, சேப்பங்கிழங்கை இந்த எண்ணையில போட்டு லேசா வதக்கிக்கணும். வெண்டைக்காயைப் போடறதா இருந்தாலும், இந்த ஸ்டேஜ்ல போட்டு வதக்கிக்கலாம். தான் நன்னா வதங்கினதுக்கப்பறம், அறைச்சுவெச்ச மோர்க்குழம்பு விழுது, கடைஞ்சு வெச்சா தயிர் ரெண்டையும் சேத்து வேண்டிய உப்பை போட்டு, லேசா கொதி வர்ற வரைக்கும் சூடு பண்ணனும். பருப்புருண்டை, பூசணிக்காயை இந்த ஸ்டேஜ்ல சேக்கணும். மோர்க்குழம்பை மத்த குழம்புகளைப் போல தளதளன்னு கொதிக்கவிடப்படாது, லேசா ஓரத்துல கொதி தெரிஞ்சவுடனே அடுப்புல இருந்து இறக்கிடணும். பக்கோடாவை மட்டும், பரிமாரறதுக்கு முந்திதான் போடணும், இல்லையானா அது குழம்பையெல்லாம் உறிஞ்சுண்டு கெட்டியா கேக் மாதிரி ஆக்கிடும்.

இப்படியாக ரசிச்சு அனுபவிச்சு செஞ்ச மோர்க்குழம்புக்கு, லோகத்துல கொத்தவரங்கா பருப்புசிலி, சேப்பங்கிழங்கு வறுவல், உருளை வறுவல், வெண்டைக்காய் வதக்கல் அப்படின்னு நானாவிதமான காம்பினேஷன்ஸ் சொல்வா...இந்த ஒவ்வொரு கறியும்(பொரியல்) ஒரு மாஸ்டர்பீஸ்தான்...ஆனா இந்த பீட்ரூட் பொரியல் இருக்கே அதோட மஹத்வமே தனிதான்.

அதோட மொதல் மஹத்வம், அதோட கலர். மஞ்சள் கலர் மோர்க்குழம்பு ஸாதத்துக்கு பார்டர் வெச்சாப்புல வயலட் கலர் பீட்ரூட் கறி (இந்த காம்பினேஷன்ல பட்டுப்புடைவையுமே அமோகமா இருக்கும்!!!) கண்ணுக்கு விருந்துன்னா இது!!!

ரெண்டாவது மஹத்வம், அதோட ருஜி. புளிப்பு காரமா இருக்கற மோர்க்குழம்புக்கு, துளி இனிப்பா, துளி காரமா இருக்கற பீட்ரூட் பொரியல் சரியான ஜோடிதான். பீட்ரூட்டை பொடியா நறுக்கிண்டு, வாணலில எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மொளகாவத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிச்சு, நறுக்கின பீட்ரூட்டை போட்டு, அளவா உப்பு போட்டு, கைநெறைய்ய ஜலத்தை தெளிச்சு நன்னா மூடி வேகவிடணும், ஒரு பத்து நிமிஷத்துல பீட்ரூட் மிருதுவா வெந்து பளபளப்பா நம்மைப் பாத்து மின்னும், இப்போ அடிச்சு வெச்சிருக்கற பொரியல் பொடியை அதுமேல சித்த தாராளமா தூவி, அடியில இருந்து மேல் வரை ரெண்டு பெறட்டு பெறட்டி, அடுப்பை அணைச்சுடணும், பின்னால துருவின தேங்காயை இதுல போட்டு மூடி வெச்சுடணும். இதை இனி பரிமாறப்போ திறந்து கிளறி விட்டுண்டா போதும். பொரியல் பொடி ஆத்துல இல்லையா, இட்லி மொளகாப்பொடியையும் பொட்டுக்கலாம், ஆனா இட்லி மொளகாப்பொடில உப்பு இருக்கும் அதனால கறிக்கு உப்பு அதுக்கு தகுந்தாப்ல போட்டுக்கணும். பீட்ரூட் கறியும் ரெடி.

இப்போ சாப்பிட ஒக்காரலாம்...இவ்வளவு நாழி அளந்ததே போறும், இப்போ சாப்பிடவும் சொல்லி குடுக்கப்போறியான்னு அங்கலாய்ச்சுக்கறேளா...வேற வழி...புலி வாலை புடிச்சுட்டேள், இப்போ விட முடியாது... அதனால இதையும் படிச்சுடுங்கோ.

தட்டுல ஆவி பறக்கற ஸாதத்தை போட்டு, பருப்புருண்டை மோர்க்குழம்புன்னா, மொதல்ல பருப்பு உருண்டையை ஓடைச்சு போட்டு, துளி நெய் விட்டு பிசைஞ்சு, பீட்ரூட் கறியைத் தொட்டுண்டு சாப்பிடுங்கோ, அம்ருதமா இருக்கும். மறுபடியும் சுட சுட ஸாதம் போட்டு, கஞ்சத்தனம் பண்ணாம தாராளமா மோர்க்குழம்பை விட்டுக்கணும். அப்பறம், ஒரு இரும்புக்கரண்டியில ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை விட்டு, பொறுக்கறாப்புல சூடு பண்ணி, அதை அப்படியே ஸாதத்துமேல சூடா விடணும், எண்ணை ஸாதத்துல விழுந்ததும் ‘சொய்ங்’னு ஒரு சத்தம் வரும், கூடவே காய்ச்சினா தேங்காய் எண்ணையும் மோர்க்குழம்பும் கலந்த ஒரு திவ்யமான ஸுகந்தமும் வரும். சூடை பாக்காம, கைய ஊதிண்டு ஊதிண்டு ஸாதத்தை பிசைஞ்சு, ஒரு உருண்டையாகி, அதோட தலையில காண்ட்ராஸ்டா பீட்ரூட் பொரியலை வைச்சு, அதை எடுத்து வாயில போட்டா...ருஜியில மெய்மறந்து கண்ணு தானா மூடிக்கும்...அமுதுங்கற வார்த்தைக்கு நிதர்சனமா அர்த்தம் விளங்கும்.

இதுல டயட் பண்றவாளுக்கும் ஒரு தோது என்னன்னா, சப்பாத்திக்கும் மோர்க்குழம்பு தொட்டுண்டா அமோகமா இருக்கும். ஆனாலும் ஸாதத்த அடிச்சுக்க எந்த சப்பாத்தியாலும் முடியாதுன்னு வெச்சுக்கோங்கோ...மோர்க்குழம்போட பூர்த்தியான மஹத்வமும் ஸாதத்தோட சாப்பிடாறச்சே மட்டும்தான் தெரியும்...அதனால சித்தநாழி டயட்டெல்லாம் மறந்துட்டு...மோர்க்குழம்பையும் பீட்ரூட் பொரியலையும் தேங்காய் எண்ணை விட்டு ஒரு பிடி பிடியுங்கோ...

இதோட மோர்க்குழம்பு, பீட்ரூட் பொரியல் மஹாத்மியம் ஸமாப்தம்...நாள பின்ன வேற ஒரு காம்பினேஷனோட சந்திக்கலாம்.

இப்போதைக்கு சேவிச்சுக்கறேன்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இது ஒரு புது முயற்சி. உங்களுக்கெல்லாம் பிடிச்சுருக்கான்னு சொல்லுங்கோ. இது மாதிரி நெறைய்ய காம்பினேஷன்ஸ் பத்தி எழுதற விருப்பம் இருக்கு. உங்களோட விருப்பத்தைப் பொறுத்து எழுதறேன். படிக்கறவா உங்க காமெண்ட்ஸ்ல இது மாதிரி எழுதவா வேண்டாமான்னும் ஒரு வார்த்தை சொல்லுங்கோ...ப்ளீஸ்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அட, அட, படிக்கறச்சயே
நாக்கிலே ஜலம் வெள்ளமா
ஊறிண்டு கொட்டறதே,
சிவப்ரியா டியர்?
இன்னும் செஞ்சு
சாப்பிட்டா..........?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Sema super ponga...

neenga soliruka vithamey... cook pani sapdanumnu thonuthu... rasanaya solirikinga...

engala mathiri kathu kuttykulam... ethu super help sis...

plz continue sis... thangal seyvai.. eamakku theyvai...
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Super dear, urundai udaiyama erukanumna kadalai paruppu alavu kojam jasthiya eruntha pothum direct ah kolampula podalam. entha urundai ya pulikolampai kojam thanniya vachu athula potu kothikka vita,nalla erukkum
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
படிக்கும்போதே சாப்பிடத் தோணுதே... நீங்க இப்படியே continue பண்ணுங்க...
(அப்படியே அந்த பொரியல் பொடி எப்படி செய்யறதுன்ற ரகசியத்தை மட்டும் என் காதுல சொல்றேளா ?)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top