• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Paattu Potti Discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹாய்..ஹாய்..ஹாய் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க??? நம்மளோட இந்த புது SM Tamil Novels Website ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப் போகுது. அதுக்காக ஒரு சின்ன கொண்டாட்டம் தான் இப்ப நடக்க போறது.. வழக்கம் போல ஆரம்பிச்சு வைச்சது நம்ம தோழி பிரேமலதா தான் ??? சரி இப்ப மேட்டருக்கு வருவோம், இந்த த்ரெட் எதுக்குன்னா ஒரு பாட்டு போட்டி… நாம எல்லாரும் இங்க வந்து நமக்குப் புடிச்ச கதைகளை படிக்கிறோம்… ரசிக்கிறோம்.. கொண்டாடுறோம்... இப்படி நம்மளை எண்டர்டெயின் பண்ற ஆத்தர்ஸ்க்கு நாம எதாவது திருப்பி பண்ணா நல்லா இருக்கும் இல்லயா? அதுக்குதான் இந்த பாட்டு போட்டி. நீங்க எல்லாரும் என்ன பண்ணனும்னா, உங்களுக்கு புடிச்ச கதையில வர்ற கதை மாந்தர்கள் (ஹீரோ, ஹீரோயின், சைட் கேரக்டர் யாரா வேணும்னாலும் இருக்கலாம்) தேர்வு செஞ்சு, அந்த கேரக்டருக்கு பொருந்துற மாதிரி ஒரு பாட்டு பாடி வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி இங்க போடணும். சினிமா பாட்டு, உங்க சொந்த பாடல் எதுவா இருந்தாலும் சரிதான். ஒகே வா…. இப்ப விதிமுறைகள் என்ன என்று பார்க்கலாம்..

9057909ad34b996.jpg

1. ஒருத்தர் ஒரு கேரக்டர் – ஒரு பாட்டு தான். (அப்பதான் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்)
2. இந்த த்ரெட்டில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். உங்கள் அனைவருக்கும் யோசிக்கவும், பாடல் தேர்வு செய்யவும் இந்த நேரத்தை உபயோகப் படுத்திக் கொள்ளவும்.
3. ஜனவரி 18 அன்று exclusive த்ரெட் ஓபன் செய்யப்படும். அப்பொழுது முதலில் உங்கள் தேர்வைக் கமெண்ட் மூலம் சொல்லி, ரிசர்வ் செய்து விடுங்கள். இதனால் மற்றவர்கள் வேறு பாடல் தேர்வு செய்ய முடியும்.
4. ஜனவரி 18 ஒரு நாள் மட்டுமே த்ரெட் ஓபனில் இருக்கும். அன்றே கமெண்ட் மூலம் பாடலை பதிவு செய்து விடுங்கள்.
5. பின் ஜனவரி 20 - 22 தேதிக்கு முன் பாடல் ரெக்கார்ட் செய்து பதிவிடுங்கள்.
6. இதில் முக்கிய பங்கு வகிப்பது நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல் எந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வருகிறது என்பது தான். குரல், தாளம், ஸ்ருதி இதெல்லாம் இரெண்டாம் பட்சம்தான். அதனால எல்லாரும் கலந்துக்குங்க மக்களே..

அதுக்கப்புறம் போட்டின்னு வைச்சா பரிசை பத்தியும் சொல்லிடணும் இல்லயா… என்னால் முடியும் பட்சத்தில் அந்த கதாசிரியருடன் நீங்கள் தொலைபேசியில் உரையாட ஒரு வாய்ப்பு வழங்கப்படும். (ஹி..ஹி.. என்னால முடிஞ்சா அப்படின்னு முன்னாடியே சொல்லிட்டேன்)

ஜனவரி 18
என்ன பாடல் பாட போகிறீர்கள் என்று exclusive thread கமெண்டில் சொல்லிவிடுங்கள்…
ஜனவரி 24
கடைசி தேதி பாடலை ரெக்கார்ட் செய்து அனுப்புவதற்கு. இதற்கு பின் வரும் பாடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது மக்களே…

All The Best Dearies ???

வேறெதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கப்பா
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இது நல்ல இருக்கே.. சூப்பர் அக்கா..
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இது நல்ல இருக்கே.. சூப்பர் அக்கா..
சந்தியா பாட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருப்பேன் மா...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தியா பாட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருப்பேன் மா...
நான் கலந்துகொள்கிறேன் அக்கா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top