• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Irandalla Ondru - Episode 35 Final Episode

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
அன்பான வாசகர்களே,

தாங்கள் கொடுத்த லைக்ஸ்... உங்கள் விமர்சனம்... நீங்கள் வாசுதேவனுக்குக் கொடுத்த அறிவுரைகள்... நீங்கள் அனுப்பிய மடல்... இவை அனைத்திற்கும் நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை... மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்த கதையோடு சந்திக்க வருகிறேன்... என்ற வார்த்தைகளைத் தவிர...

இன்று கடைசி பகுதியைப் பதிவிடுகிறேன்... உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்நோக்கி... கதை முடிவை நோக்கிப் பயணிக்கிறது.

நன்றி...

இரண்டல்ல ஒன்று – 35

வாசுதேவன், உத்தமியோடு வருவதாகத் தகவல் தெரிவித்து விட, செல்வி தன் அறிவுரைகளைத் தொடங்கி விட்டார்.

"பவித்ரா... பொறுமையா இரு... உங்க அத்தை என்ன பேசினாலும் அமைதியா இருந்திரு... நீ எதுவும் பேசிறாத... அப்புறம் அவங்க பேசினது மறைஞ்சி போய்டும்... நீ சொன்ன வார்த்தை தான் நிக்கும்..." என்று பலவாறாகச் செல்வியின் அறிவுரை தொடர்ந்து கொண்டிருந்தது.

பவித்ரா, 'தான் பேச நினைத்ததெல்லாம் பேசி விட வேண்டும்...' என்று எண்ணியபடி நந்தினியை அழைத்திருந்தாள்.

"பிரசாத்... இன்னக்கி அத்தானும், அவங்க வீட்ல எல்லாரும் வீட்டுக்கு வராங்க போல... அக்கா பயப்படுவா... நான் அவ கூட இருக்கனும்... என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்களேன்..." என்று நந்தினி கூற, ராம் பிரசாத் மறுப்பாகத் தலை அசைத்தான்... அவன் கண்களில் குறும்பு மின்னியது.

"ராம்ன்னு கூப்பிடனும்... அது தானே... எனக்கு நீங்க ஸ்பெஷல் இல்லியா? அது மட்டும் இல்லை பிரசாதம் மாதிரி சோ ஸ்வீட்... அதனால் எப்பவும் பிரசாத் தான்... எப்பாவது தான் ராம் ஒகே?" என்று நந்தினி சமரசம் பேச, "எப்படியாவது பேசி நீ நினைச்சதை முடிச்சிரு..." என்று பேசியபடி நந்தினியை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

பவித்ரா பதட்டமாக இருக்க, "அக்கா... டென்ஷன் ஆகாத... நீ நினைச்சதை பேசு... ஆனால், அத்தானை விட்டுக் கொடுத்திராத... கோபமா பேசிறாத... மரியாதை இல்லாம பேசிறாத... ஆனால், நீ நினைத்ததைப் பேசு அக்கா... ரொம்ப பயப்புடாத... அத்தான் இனி பிரச்சனையை வளர விட மாட்டாங்க... அப்படியே இல்லைனாலும், நான் இருக்கேன்.. பாத்துக்கிறேன்..." என்று நந்தினி தைரியம் கூற, "நந்தினி... நீ பக்கத்திலேயே இருப்ப தானே?" என்று பவித்ரா தயக்கத்தோடு கேட்டாள்.

"நான் எங்க அக்கா போக போறேன்... அம்மா, அப்பா காலத்துக்கு அப்புறமும் நான் உன் கூட தான் இருப்பேன்..." என்று நந்தினி தைரியம் கொடுக்க, பவித்ரா சம்மதமாகத் தலை அசைத்தாள்.

உத்தமி, வாசுதேவன், மகாதேவன் மூவரும் பட்டாளையில் அமர்ந்திருக்க... பவித்ரா குழந்தையோடு அங்குச் சென்றாள்.

மகாதேவன் கையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள, பவித்ரா அங்கு மௌனமாக நின்றாள்.

"இந்த பாரு பவித்ரா... நீ இப்படி பிடிவாதமா வீஞ்சிகிட்டு வந்து அம்மா வீட்டில் இருக்கிறது சரி இல்லை...ஒரு பொம்பளைக்கு இவ்வுளவு பிடிவாதம் ஆகாது..." என்று உத்தமி அழுத்தமாகக் கூற, 'அது சரி தான் அத்தை...' என்பது போல் தலை அசைத்தாள் பவித்ரா.

வாசுதேவன் பதட்டத்தோடு பவித்ராவை பார்த்துக் கொண்டிருந்தான்.

"அன்னைக்கி நான் மன்னிப்பு கேட்க சொன்னது தான் பிரச்சனைனா... எனக்கு எம் மகன் வாழ்க்கை தான் முக்கியம்... என் மகனுக்காக அது தப்புன்னு ஒத்துக்க நான் தயார்..." என்று சாமர்த்தியசாலித்தனமாக வாசுதேவனை தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, விட்டேறியாக கூறினார் உத்தமி.

ஆனால், அங்கு அமர்ந்திருப்பது பழைய பவித்ரா இல்லை என்று வாசுதேவனுக்கு மட்டுமே தெரியும்.

"நீங்க தப்பே பண்ணாலும்... பெரியவங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்டதால், நான் ஒன்னும் குறைஞ்சி போயிற மாட்டேன் அத்தை..." என்று மென்மையாக, ஆனால் அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.

'இவளுக்கு இவ்வுளவு தைரியம் எப்படி வந்தது?' என்ற எண்ணத்தோடு, "நான் தப்பு பண்ணினேனா?" என்று கோபமாக கேட்டார் உத்தமி.

"ஆமா அத்தை..." என்று உறுதியாகக் கூறினாள் பவித்ரா.

"பவித்ரா..." என்று செல்வியின் குரல் ஓங்கி ஒலிக்க... "பேசட்டும்... பவித்ரா என்ன நினைக்குறான்னு நாங்களும் தெரிஞ்சிக்கணும்ல..." என்றார் உத்தமி, 'இன்று பவித்ராவை பேச வைத்து... பிரச்சினையை இவள் பக்கம் திருப்பி விட வேண்டும்...' என்று முடிவோடு...

"கல்யாணம் ஆன நாளிலிருந்து... நீங்க என்ன பண்ணீங்கன்னு எனக்கும் தெரியும்... உங்களுக்கும் தெரியும்... நான் அதைப் பத்தி இப்ப பேச விரும்பலை அத்தை... ஆனால் எனக்குத் தெரியாத விஷயம் ஒண்ணே ஒன்னு தான்... மிருகங்கள்... பறவைகள் கூட, அவங்க குட்டிகளை ஒரு வயசுக்கு அப்புறம், அதுங்க வாழ்க்கையை அதுங்க வாழ விடும் போது... ஏன் பெரியவங்க நீங்க, ஒரு வயசுக்கு அப்புறம் எங்க வாழ்க்கையை நாங்க வாழ விட மாட்டேங்கிறீங்க?" என்று கேள்வியாக நிறுத்தினாள் பவித்ரா.

"அப்ப... எங்களை வெளிய போக சொல்றியா? இல்லை என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறியா?" என்று நேரடியாகக் கேட்டார் உத்தமி.

"இல்லை அத்தை... இரண்டுமே இல்லை... எப்பவும் போல பிரச்சனையைத் திசை திருப்பாதீங்க..." என்று உறுதியாகக் கூறி, மேலும் பேசினாள் பவித்ரா.

"உங்களை கடைசி வரைக்கும் பாத்துக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு... பொறுப்பும் எனக்கு இருக்கு... அதை தாண்டி... பாசமும் எனக்கு இருக்கு அத்தை... அது நீங்க என் கிட்ட நடத்துகிற முறையில் வந்ததில்லை அத்தை...அத்தான் என் மேல் வச்சிருக்கிற பாசமும் அக்கறையிலும் வந்தது... நான் கல்யாணமாகி வந்ததிலிருந்து அத்தான் எனக்கு எந்த குறையும் வச்சதிலியே..." என்று வாசுதேவனைப் பார்த்தபடி பவித்ரா கூறினாள்.

"பாத்தியாடா? உம் பொஞ்சாதி எப்படி பேசுறான்னு?" என்று உத்தமி வாசுதேவனிடம் குற்றப் பத்திரிக்கை படிக்க... 'போச்சு... அத்தான் கேட்க போறாங்க... அம்மாவை எதிர்த்து பேசிவியான்னு கேட்க போறாங்க..." என்று பவித்ராவின் கைகள் சில்லிட, நந்தினியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் பவித்ரா.

"அக்கா... அத்தான் ஒன்னும் சொல்ல மாட்டாங்க... சொன்னால் நான் பாத்துக்கிறேன்... நீ தைரியமா நில்லு..." என்று நந்தினி பவித்ராவுக்கு தைரியம் கொடுக்க... 'நினச்சேன்... எல்லாம் இந்த நந்தினி கொடுக்கிற தைரியம் தான்...' என்று செல்வி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

வாசுதேவன் எதுவும் பேசவில்லை. தன் தாயை எதிர்க்கவுமில்லை. மனைவியைக் கேள்வி கேட்கவும் இல்லை.



"அப்படி பாசமா இருக்கிற அத்தானை விட்டுட்டு... நீ ஏன் இங்க வந்து உட்காரனும்?" என்று சரியான இடத்தை குறி பார்த்து அடித்தார் உத்தமி.

'தப்பு... நான் செய்த தப்பு... நான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கக் கூடாது... நான் கேட்க வேண்டிய கேள்வியை உள்ளே இருந்தே கேட்டிருக்க வேண்டும்...' என்று காலம் தாழ்ந்து வருந்தினாள் பவித்ரா.

பவித்ராவின் மௌனம், பதட்டம் இவற்றை பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவன், "அம்மா... அவ என்ன சும்மாவா வந்து இங்க இருக்கா... பிரசவத்துக்கு ஓய்வு எடுக்கணும்னு வந்தா... அவளுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?" என்று பவித்ராவை பார்த்தபடி கேட்டான் வாசுதேவன்.


 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
"எட்டி... நமக்குள்ள என்ன பிரச்சனை?" என்று வாசுதேவன் பவித்ராவை பார்த்தபடி கேட்க, "ஒரு பிரச்சனையும் இல்லை அத்தான்..." என்று பவித்ரா வாசுதேவனின் முகம் பார்த்து கூறினாள் பவித்ரா.

நந்தினி அங்கிருந்து விலகி ராம் பிரசாத்திடம் செல்ல, "இதுக்கு தான் நான் சொல்றேன்... புருஷன் பொண்டாட்டி சண்டையில் நீ யார் சட்டையும் பிடிக்காதன்னு..." என்று ராம் பிரசாத் நந்தினியைச் சீண்ட, "இப்படி பேசிக்கிட்டே இருங்க... நான் உங்க சட்டையை பிடிப்பேன்..." என்று நந்தினி ராம் பிரசாத்தை மிரட்டினாள்.

"ஐ அம் வெயிட்டிங் ஹனி..." என்றான் ரசனையோடு.

'ஏற்கனவே வாசு என்னை மதிக்க மாட்டான்... இவ வேற, இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா...' என்று யோசித்துக் கொண்டே, "நல்ல நாள் பார்த்து... நாங்க பவித்ராவை கூட்டிட்டு போறோம்..." என்று உத்தமி சமரசமாகப் பேசி தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டார்.

"அம்மா... நாளைக்கே நல்ல நாள் தான்..." என்று கூறினான் வாசுதேவன் மீசையை முறுக்கிக் கொண்டு... செல்வி, ஆவுடையப்பன், மஹாதேவன் மெலிதாக சிரித்துக் கொண்டனர்.

உத்தமிகள் மாறுவதில்லை... காலமும், சூழலும் அவர்களை அடக்கி ஆளும். வாசுதேவன்களும் மாறுவதில்லை... ஆனால் அவர்களால் பவித்ராக்களை புரிந்து கொள்ள முடியும். பாசம் மிகுந்தவர்கள் அவர்கள்...

வாசுதேவன்களுக்கு புரிய வைக்கும் பொறுப்பு பவித்ராக்களிடமே இருக்கிறது.

எதிர்த்துக் கேட்பது தவறல்ல... எதிரியாய் நினைப்பது தான் தவறு...

நிமிர்ந்து வாழ்வது தவறல்ல... திமிராய் வாழ்வது தான் தவறு...

கோபம்... பிடிவாதம்... பொறுப்பை தட்டி கழித்தல் இவை அல்ல நாம் தேடும் நம் சுதந்திர வாழ்வு...

கடமை... பொறுப்பு... பொறுமை... பாசம்... நிதானம்... இத்தோடு ஒரு பெண் நிமிர்வு... தைரியம்... சுய மரியாதை இவற்றோடும் வாழ வேண்டும்.



சில மாதங்களுக்குப் பிறகு...

ராம் பிரசாத் நந்தினி செய்த ரோபோட் முயற்சி வெற்றிகரமாக அமைந்து அனைவரின் பார்வைக்காக வைக்கப் பட்டது.

வாசுதேவன், சந்துரு, கார்த்திகேயன் இவர்கள் மூவரின் முன்னிலையில் தான் அவர்கள் வேலை தொடங்கும் என்று ராம் பிரசாத் கூறிவிட்டான். ஆக, மூவரும் ராம் பிரசாத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர்.

பறக்கும் ரோபோட் விவசாய இடம் மேல் பறந்து, தேவையான இடத்தில் சென்சார் ஆன் செய்ய அங்கு மட்டும் நீர் பாய்ச்சப்பட்டது.

அதே போல் களை எடுப்பது... மருந்து அடிப்பது என அனைத்தும் ரோபோட் இயக்கிக் கொண்டிருக்க, பல இளைஞர்கள் ஆர்வமாக விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நந்தினி ராம் பிரசாத்தை பெருமையாகப் பார்க்க, 'அனைத்தும் உன்னால்...' என்பது போல் ராம் பிரசாத் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கோமதி, பவித்ரா, சுபா பேசிக் கொண்டிருக்க... வாசுதேவன் தன் இளைய மகளைத் தோளில் சுமந்தபடி பவித்ராவை பார்த்துக் கொண்டிருந்தான்.

உத்தமி அமைதியாக அங்கு நடப்பதை கண்காணித்து கொண்டிருந்தார். பார்வதி, செல்வி, ஆவுடையப்பன், மகாதேவன், சிவசைலம் அனைவரையும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருக்க... சந்தோஷ் அகல்யா அவர்களைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ராம் பிரசாத் நட்பு, உறவு, ஊர் , குடும்பம்... என அனைத்தும் சூழ, பலத்தோடு நிற்க, தான் எதை இழந்தோம் என்று புரிந்து கொண்டவளாய் வைஷ்ணவி அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

நட்பு - இவை இரண்டல்ல மனதால் ஒன்று தான்...

கணவன் மனைவி - இவர்கள் இரண்டல்ல மனதால் ஒன்று தான்...

உடன்பிறப்பு - வெவ்வேறு இடத்தில் வாழச் சென்றாலும் உயிர் உள்ள வரை துணையாய் நின்று இணையாய் பயணிக்கு இவர்கள் என்றும் இரண்டல்ல ஒன்று தான்....



இப்படிக்கு அகிலா கண்ணன்...

 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகா முடிச்சுட்டீங்க அகிலா ???
பிரசாதம் மாதிரி ஸ்வீட்டா இருப்பதால் பிரசாத் ??? நீ நடத்து நந்தினி....
உத்தமிக்களும் மாறுவதில்லை, வாசுதேவன்களும் மாறுவதில்லை... இதுதான் நடைமுறையோ??? பவித்ராக்கள் பாடுதான் திண்டாட்டமாகிப் போய்விடுகிறது.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ini vaasu paathupaan... Adei ipadi thaan nee irukanum.. summa amma amma nu pavi kitta vambu panna koodathu.. mudiyala yaa kammunu irukanum.. avanga paathupaanga.. pavi onnum vetta vittu veliya thorathura marumagal illai.. understand.. ???

Congratulations ram and nanthini.. nanthu maa appadiye antha kolam podura machine.. sorry sorry robot.. apuram veetu vela seiyura robot ellam inga konjam anupen.. ??????.. mukiyama honey innonu senji thaa d.. ???

Sooper story laa no two only one.. ????

Akkaa... Niraivaa iruku but baaramaavum iruku.. ini ivangala paaka mudiyaatho.. romba rasichiten polave kathaiyaa.. ???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top